செவ்வாய், 21 டிசம்பர், 2021

தனுசு ராசி- 2022 வருட ராசி பலன்,

 

தனுசு ராசி

முன்னேற்றத்திற்கான தொலைநோக்கு சிந்தனையில் கவனத்துடன் இருக்கும் தனுசு ராசி அன்பர்களே,

இந்த வருடம் தங்களுக்கு தொழில் வளர்ச்சி உண்டாகும், திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும், வண்டி, வாகனம் ,மனை,வீடு, ஆல்ட்ரேஷன் போன்ற சுப நிகழ்வுகள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். உத்தியோகத்தில் மாற்றங்கள் இருக்கும், கம்பெனி மாறுவார்கள் ஏப்ரல் மாதத்திற்கு மேல் வேலை இல்லாதவருக்கு வேலை கிட்டும்.

ஐந்திற்கு வரும் ராகுவால் குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்பு உண்டு. மேலும் கரு கலைதல் போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வண்டி, மனை மீதான முதலீடுகளில் வாய்ப்பு உண்டு, சிலர் புதிய Branch தொடங்குவார்கள் அல்லது புதிய தொழில்களை தொடங்குவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி மாற்றங்கள் நிகழும்.

பழைய நீண்ட கால முதலீடு மீது திடீர் லாபம் தேடிவரும்

குடும்பத்திலும் மூத்த சகோதர வகையிலும் சில மனக்கசப்பு வந்து அகலும்.

குலதெய்வ வழிபாடு நன்மை பயக்கும் குலதெய்வ வழிபாட்டு முறையில் சில மாற்றங்கள் நடக்கும்.

பயணம் சார்ந்த தொழில்களில் முன்னேற்றம் உண்டு.

சிலருக்கு தொழில் பற்றிய திட்டங்கள் மாரி அனுபவ பாடத்தை கற்றுக் கொள்வார்கள்.

சிலருக்கு புதிய தொழில் அத்தியாயத்தை தொடங்குவார்கள் அதில் மாற்றம் செய்வார்கள்.

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் கிறிஸ்டியன் நண்பர்களால் ஆதாயம் உண்டு

வருமானவரி பிரச்சினைகளை பார்த்துக்கொள்ள வேண்டும்

இன்ஷூரன்ஸ், பென்ஷன் போன்ற விஷயங்கள் மாற்றி அமைப்பார்.

2 கருத்துகள்:

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...