செவ்வாய், 21 டிசம்பர், 2021

மேஷ ராசி- 2022 வருட பலன்

 

மேஷ ராசி


மேஷ ராசி நண்பர்களுக்கு இந்த வருடம் உத்தியோகத்தில் கவனம் செலுத்தக்கூடிய வருடம்உத்தியோகம் இல்லாதவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புரோமோஷன் இங்கிரிமெண்ட் உண்டு

இன்பச் சுற்றுலா மற்றும் ஆன்மிக சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருவர்அம்மாவால் ஆதாயம் உண்டு அவரது ஆசி வெற்றியை கொடுக்கும்

வண்டி வாகனம் மனை வாங்க குறித்த நேரத்தில் லோன் கிடைக்கும் சுப நிகழ்வுகளுக்காக லோன் வாங்க நேரிடலாம் அதில் வெற்றியும் உண்டு ஜாதகர் வண்டி வாகனம் ஓட்டும் பொழுது கவனம் முக்கியம் குறிப்பாக மழை அல்லது இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நல்லது வண்டி வாகனம் வாங்க சிறு தடைகளுக்குப் பின் வெற்றி உண்டு வாகனம் தொலைந்து கிடைக்க கூட வாய்ப்புகள் உண்டு சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் இல்லையேல் போலீசாருக்கு பணம் கட்ட நேரிடலாம்

ஜாதகர் தண்ணீர் சம்பந்தப்பட்ட வேலைகள் வீட்டில் ஏதேனும் வரும் போர்வெல் பிளம்பிங் வாட்டர் டேங்க் இது சார்ந்த சில ஆல்ட்ரேஷன் செய்வர்

வெளிநாடு சார்ந்த சிந்தனை மேலோங்கும் வெளிநாடு செல்வதற்கு அல்லது வெளிநாட்டில் இருப்போர் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டுவார் விவசாயத்தின் மீது உணவு சார்ந்த தொழில் மீது ஆசை அதிகரிக்கும்

ஆன்மிகத்தில் அதிக கவனம் செலுத்துவார் அல்லது விட்டு விலகுவர் சிலர்

புதிய தொழிலை செய்வதற்காக திட்டம் இடுவர்

சிலருக்கு கொழுப்பு ஸ்கின் இஸ்யூஸ் தலை சார்ந்த பிராப்ளம் ஹேர்பல்ஸ் இதனால் வாக்கிங் எக்சைஸ் செய்வர்

கணவன் அல்லது மனைவிக்கு

இந்தக் காலங்களில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு வீண் பிடிவாதம் வாக்குவாதம் தவிர்ப்பதுநல்லது விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும் மேலும் குடல் கருப்பை பைல்ஸ் வைரஸ் தொற்று யூரின் இன்பெக்சன் இவை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சரி செய்து கொள்ளவும் மொத்தத்தில் ஏப்ரலுக்கு பிறகு கணவன் / மனைவிக்கோ டிப்ரஷன் அதிகரிக்கும்

 தாயாருக்கு

தாயாருக்கு உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும் கால் மூட்டு எலும்பு இதயம் ஃபுட் பாய்சன் சளி வீசிங் ப்ராப்ளம் தலை சார்ந்த சில தொல்லைகள் வந்து செல்லலாம்

 தந்தை

தந்தை ஆன்மீக பயணங்களுக்காக தூரதேச பயணம் செல்ல நேரிடலாம் அல்லது பூர்வீகம் சென்று ஆலய

வழிபாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வர் சிலர் தன்னை குடும்ப பற்றிலிருந்து  விடுவித்துக் கொள்வார்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...