காரியத்தில் கண்ணாக இருக்கும் மகர ராசி நண்பர்களே இந்த வருடம் தாங்கள் முயற்சிக்கும் அனைத்து விதமான சுப காரியங்களும் வெற்றி
கிடைக்கும்.
திருமணத்திற்கு முயற்சிக்கும் நண்பர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடக்கும் தூரதேசப் பயணங்கள் மற்றும் உயர் பதவிகள் தேடிவரும் அதன்மூலம் மிகச்சிறந்த லாபங்களை ஈட்டுவார்கள்.
உத்தியோகம் சார்ந்த விஷயங்களிலும் வெளிநாடு சார்ந்த விஷயங்களிலும் முயற்சிகளில் பலன் கிட்டும்.
வண்டி, வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் முக்கியம் சிலருக்கு வண்டி வாகனங்கள் பழுது வேலை வைக்கும், அதில் விரயமும் உண்டு, உத்தேச முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
முக்கியமான சில தருணங்களில் முடிவெடுப்பதில் மனக்குழப்பம் நீடிக்கும், கணவர் அல்லது மனைவி இடையே மனக்கசப்புகள் மற்றும் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும், இருந்தாலும் குருவின் பார்வையால் அனைத்தும் நல்ல விதமாக முடியும்.
தொழில்களில் சிறிது தேக்கம் வந்து, ஏப்ரலுக்கு பிறகு சரியாக வாய்ப்பு உண்டு, வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும், குழந்தை பிறப்பு ,திருமணம் மற்றும் சில ஆன்மீக காரியங்கள், பூஜை ,ஹோமங்கள் ஏற்று நடத்துவார்கள்.
இளைய சகோதர வகையில் சில மனக்கசப்புகள் வந்து அகலும், முயற்சிகளில் சிறிது தடை இருந்தாலும், குருவின் வருகையால் இறுதியில் வெற்றி கிட்டும்.
கவர்மெண்ட் சார்ந்த உத்தியோகத்தில் முயற்சி எடுப்பவர்களுக்கு வேலை உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக