இந்த ராசிக்காரர்கள் எதில் முழு முயற்சியில் ஈடுபடுகிறார்களோ அதில் வெற்றி உண்டு உத்யோகத்தில் முயற்சி செய்தால் பதவி உயர்வு கிடைக்கும் வெளியூர் வெளிநாட்டில் உத்யோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது திருமணம் ஆகாதோற்கு திருமணம் ஆகும் குழந்தை வேண்டுவோருக்கு குழந்தை கிட்டும் தம்பதிகளுக்கிடையே கடந்த ஓராண்டாக நிலவிவந்த பிரச்சனை ஏப்ரலுக்கு பிறகு நீங்கும் அதுமட்டுமல்ல அவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமையை தக்க சமயத்தில் நீங்கள் செய்துவர மகிழ்ச்சி அதிகரிக்கும்
உத்தியோகத்தில் மேலதிகாரியோடு அனுசரணையாக நடந்து கொண்டாள் அவர்களால் ஆதாயம் உண்டு அதன்மூலம் வெளிநாட்டு வாய்ப்பு தேடி வர வாய்ப்பு உண்டு உத்தியோக சிக்கல்களை கவனமுடன் அணுகவும்
சிலருக்கு வேலைப்பழு காரணமாக மனக்குழப்பம் தூக்கமின்மை உடல் வலி ,பிபி போன்றவை வரும்.
வாகனம் ஓட்டுவதில் கவனம் முக்கியம் இன்சூரன்ஸ் கவர்ன்மென்ட் ஐடி அனைத்தும் பிராப்பர் ஆக வைத்துக் கொள்ளவும்
ஜாதகருக்கு கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம் எனவே தாங்களாக முன்வந்து சுப நிகழ்வுகளை ஏற்று நடத்துவது நல்லது இதன் மூலம் வீன் விரயத்தை குறைத்துக் கொள்ளலாம்
ஜாதகரின் சகோதரருக்கு சுப நிகழ்வு உண்டு அவரால் மகிழ்ச்சி உண்டு அவரால் ஆதாயமும் உண்டு
பூர்வீக சொத்து மூலம் பலனுண்டு
சூதாட்டம் போன்ற சீட்டு லாட்டரி சேர்மார்கெட் திடீர் இலாபங்களின் மீது ஆசைப்பட்டு பணத்தை விரையம் செய்ய நேரிடலாம் கவனம் முக்கியம்.
மொத்தத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு அனைத்தும் முயற்சி
செய்தால் வெற்றி உண்டு. குழந்தை பிறப்பு
திருமணம் வளைகாப்பு பதவி உயர்வு போன்ற
சுப நிகழ்ச்சியும் உண்டு அதன்மூலம் விரயமும்
உண்டு வெற்றி நிச்சயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக