செவ்வாய், 21 டிசம்பர், 2021

விருச்சக ராசி -2022 வருட ராசி பலன்

 விருச்சக ராசி

விடாமுயற்சியையும் தன்னம்பிக்கையும் கொண்ட விருச்சக ராசி நண்பர்களே, இந்த வருடம் தங்களுக்கான வருடம்.

குழந்தைகளால் மகிழ்ச்சி பெருகும், அரசியல், அரசாங்க தொடர்பு

அதிகரிக்கும், அரசியலில் ஆளுமை கொண்ட பதவி கிடைக்கும்.

மத்திய சர்க்கார் வேலை முயற்சிப்பவர்களுக்கு வேலை கிட்டும்.

வேலைக்காக முயற்சிக்கும் உத்தியோகஸ்தர்களுக்கு, வெளிநாட்டில் மிகப்பெரிய பதவியுடன் நல்ல உத்தியோக அதிர்ஷ்டம் தேடி வரும். பல கிளைகள், பல நாடுகளில் உள்ள பெரிய நிறுவனங்கள் கிடைக்கும்.

சாப்ட்வேர் துறையில் இருப்பவர்கள், அமெரிக்கா போன்ற நாடுகள் கிடைக்கப்பெறும், நிரந்தர குடியுரிமை அப்ளை செய்தவர்களுக்கு கிட்டும்.

குழந்தைக்காக புண்ணியத் திருத்தலம் சென்று திரும்புவார்கள்.

தந்தை மூலம் ஆதாயம் உண்டு ,வாக்குவாதமும் உண்டு, தந்தையின் ஆசீர்வாதத்தின் மூலம் மிகச்சிறந்த லாபம் உண்டு

மொத்தத்தில் இந்த வருடம் விருச்சக ராசி அன்பர்களுக்கு மிகச்சிறந்த வருடம், தூரதேச பயணங்கள், வெளிநாடு, வெளிநாட்டு முயற்சி, மிகப் பெரிய பதவிகள், அரசாங்க உத்தியோகங்கள்  போன்ற துறையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அதேபோன்று செலவுகளும் அதிகரிக்கும்.

இதில் இவர்கள் செய்யும் முயற்சிக்கு சிறிய தடை இருக்கும். ஆனால் அதையும் மீறி விடா முயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிட்டும். எடுக்கும் முயற்சிகளை ரகசியமாக வைத்துக்கொண்டு செல்லுங்கள்.

தொழில் மட்டும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சில தடைகள் வந்து சேரும் ஆனால் வெளிநாடு சார்ந்த சில விஷயங்களை

தேர்ந்தெடுத்துக் கொண்டால் வெற்றி உண்டு .

2 கருத்துகள்:

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...