செவ்வாய், 21 டிசம்பர், 2021

துலாம் ராசி-2022 வருட பலன்

 

துலாம் ராசி

உழைப்பின் மீதான நம்பிக்கை கொண்ட துலாம் நண்பர்களே இந்த வருடம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் வாடகை வருமானம் வந்து சேரும் குழந்தைகள் நன்றாக படிப்பார்கள் சிறந்த பள்ளிகள் கிடைக்கப்பெறும்

வருடத்தின் ஆரம்பத்தில் குழந்தை உண்டாக வாய்ப்பு உண்டு அதில் கவனம் முக்கியம்

உத்தியோகம் அல்லது தொழிலில் நிறைய மாற்றங்கள் நிகழும் வேலைப்பளு அதிகரிக்கும் புதிய தொழில் தொடங்குவது அல்லது மேம்படுத்தல்கள் தொழில் அல்லது உத்தியோகத்தில் விரையம் உண்டு சிலர் வெளிநாடு சென்று வருவார்கள் (ட்ரெய்னிங், சிறிய பிராஜெக்ட்கள் ) போன்றவை கிடைக்கும் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வேலை மாற்றம் உண்டு.

வெளிநாட்டு முயற்சி பலன் அளிக்கும் முஸ்லிம் நண்பர்களின் ஆதாயம் உண்டு புதிய முயற்சியில் ஆர்வம் உண்டு அதில் வெற்றியும் உண்டு மனதிடம் அதிகரிக்கும்

 

உத்தியோகம் மற்றும் சைடு பிசினஸ் க்கான அடித்தளத்தை அமைத்துக் கொள்வார்கள் அதற்கான நாலேஜ் அதிகரிக்கும்

கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை வண்டி வாகன  போன்ற கடன் திட்டங்களில் பார்த்து கையெழுத்திடவும்

உடல்நிலையை பொருத்தமட்டில் வயிறு மலச்சிக்கல் முடி உதிர்வு தலை சார்ந்த சில பிரச்சினைகள் வந்து செல்ல நேரிடலாம் கணவன் அல்லது மனைவி உடல் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் வைரஸ் தாக்குதல்கள் , சிலரை Food poisoning போன்றவை தாக்க நேரிடலாம்

மொத்தத்தில் இந்த வருடம் துலாம் ராசி நண்பர்கள் உத்தியோகம் தொழில் மற்றும் குடும்பத்திலும் சமவிகிதத்தில் நடந்துகொள்வார்கள் சிறப்பாக இருப்பார்கள் குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா ஆன்மிகச் சுற்றுலா வெளிமாநிலங்களுக்கு சென்று வருவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...