செவ்வாய், 21 டிசம்பர், 2021

சிம்ம ராசி-2022 வருட பலன்

 

    சிம்ம ராசி

சிம்ம ராசிக்கு உண்டான ஆளுமை பண்பு அதிகரித்து அனைவரும் வியக்கும் வகையில் உத்தியோகத்தில் ஜொலிப்பார்.

தங்களின் பேச்சு சாதுர்யம் மேலோங்கும், அதன் மூலம் பெரிய பதவிகள் நிச்சயம் தேடி வரும், சிலருக்கு தூரதேச பயணம், சுற்றுலா வண்டி, மனை வாங்கும் சுப நிகழ்வுகள் நடக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி கிட்டும், வருமானம் அதிகரிக்கும், மேலும் வாடகை வருமானத்தை பெருக்கிக்கொள்ள திட்டம் தீட்ட முயற்சிப்பார்கள், தந்தையிடமிருந்து லாபம் உண்டு, அவரது சில சொத்துக்கள் மீ

சிலருக்கு வெளிநாடு சார்ந்த முயற்சிகள் சிறிது தடைபட்டாலும் இறுதியில் வெற்றி தேடி வரும். உடல் ஆரோக்கியம் சிறிது மேம்பட்டு நன்றாக உணர்வீர்கள், வெளி உணவகங்களில் சாப்பிடும் உணவின் மீது கவனம் ஃபுட் பாய்சன் ஆக வாய்ப்பு உண்டு.

திடீர் அதிர்ஷ்டங்கள் தேடிவரும் உத்தேச முதலீட்டில் லாபம் உண்டு

தாயாருக்கு உடல்நிலை நன்றாக இருக்கும் இதற்குமுன் இருந்துவந்த உடல்நிலை பிரச்சனைகள் இப்பொழுது குறைந்துவிடும்.

சிலருக்கு சகோதர வகையிலும் பூர்வீகம் சார்ந்த விஷயங்களிலும் சில பிரச்சினைகள் வந்து செல்ல நேரிடலாம், இது சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்பை குறைத்து கொண்டால் நல்லது.

மொத்தத்தில் சிம்ம ராசி நண்பர்களுக்கு இந்த வருடம் வாழ்க்கையின் சிறந்த சில விஷயங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள், சொத்து பதவி உயர்வு, அந்தஸ்து, குடும்ப ஆரோக்கியம் அமைதி நிலவும்.

தந்தையின் அருள் ஆசி நன்மை பயகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...