செவ்வாய், 21 டிசம்பர், 2021

கன்னி ராசி- 2022 வருட ராசி பலன்

 

கன்னி 

புத்திசாலியான கன்னி ராசி நண்பர்களே, இந்த வருடத்தில் தங்களுக்கான மனத்தெளிவு அதிகரிக்கும். அதன் மூலம் லாபம் மற்றும் வாடகை வருமானம் போன்றவை தேடிவரும். சகோதர வகையிலும் லாபம் உண்டு, நினைத்த காரியங்களில் வெற்றி வந்து சேரும். சிலர் வெளியூர் சென்று முன்னேறலாம், வாழ்க்கைக்கு தேவையான சிறந்த திட்டங்களை உருவாக்குவார்கள் தலைமைப் பொறுப்பை ஏற்று சுபகாரியங்களை நடத்துவர். வீட்டிலும் சுப காரியம் உண்டு, சுப விரயங்களும் உண்டு, தங்க ஆபரணங்களும் வந்து சேரும், பேங்க் டாக்குமெண்டேஷன் டெபாசிட் தங்க பத்திரம் முதலீடுகள் செய்வீர்கள். சிறிய தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும்.

வருட ஆரம்பத்தில் உத்தியோக இடம் மாறுவார்கள் அல்லது புது கம்பெனிகள் கிடைக்கப்பெறும்.

புதிய நண்பர்கள் நண்பர்கள் உறவினர்கள் வந்து சேருவர்

குடும்பத்தில் கணவர்/மனைவி சில பிரச்சினைகள் வந்து சுமூகமாக முடிய வாய்ப்பு உண்டு அனுசரித்துச் செல்ல நன்று.

சிலருக்கு கண், பல், போன்ற ஏன்டி பிரச்சனைகள் வரலாம் அதற்கு விரையும் செய்ய நேரிடலாம் பழக்க வழக்கங்களில் மாற்றம் தென்படும் பேச்சுக்களில் கவனம் மிக முக்கியம்.

சிலருக்கு பொருளாதார சிக்கல்கள் வந்து கடைசி நகரத்தில் அகலும். சுப விரயங்களை தடுக்க முடியாது, சிலருக்கு திடீர் திருமண அமைப்பு வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

சகோதர வகையில் லாபம் உண்டு, அவருக்கும் சிறந்த காலம்,

தாயாருக்கு உடல் நலம் பாதிக்க நேரிடலாம், மருத்துவ செலவு செய்ய நேரிடலாம்.

மொத்தத்தில் கணவருக்கு நல்ல நேரம், நிறைய நண்பர்கள் வந்து சேருவார், ஆடை,, ஆபரணங்கள், அணிகலன்கள், தங்க

முதலீடுகள் செய்வர், சுபநிகழ்ச்சிகள் ஏற்று நடத்துவர். சுப விரயங்கள் வந்து சேரும் மொத்தத்தில் இவர்களுக்கு லாபம் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...