செவ்வாய், 21 டிசம்பர், 2021

கடக ராசி- 2022 வருட ராசி பலன்

 

கடக ராசி

இதுவரை சனி ஏழில் இருந்து கணவன் மனைவியரிடையே சில பல பிரச்சனைகளை கொடுத்து வந்தாலும், தீர்வையும் கொடுத்தார். அதேபோன்று அந்த தீர்வின் விளைவாக குழந்தை பிறப்பு கொடுத்து அருள் புரிவார்.

குழந்தை பிறப்பின் மூலம்  லாபங்களை சம்பாதிப்பர், பூர்வீகத்தில் இருந்து லாபம் உண்டு, அது சார்ந்த முயற்சிகள் சிறப்பாக உண்டு, சிலருக்கு பதவி உயர்வு சில முயற்சிகளுக்குப் பின் வந்து சேரும். சிலர் இடமாற்றத்தை அல்லது வீடு மாறி செல்வர குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் இருந்தாலும் தங்களது மன நிலை சிறப்பாகவே இருக்கும். பிடிவாத குணத்தை தளர்த்தி கொண்டால் நலம் கணவர்/ மனைவி வகையில் இருந்து வந்த மன தொந்தரவுகள் இருந்தாலும், தாங்கள் தெளிவான மன திடத்துடன் இருப்பீர்கள் .கணவர்/மனைவி வாக்குவாதம் வேண்டாம்.

சகோதர வகையில் லாபம் உண்டு, அவர்களுக்கு வேலை சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிட்டும் அவர் வாழ்க்கையில் ஒரு சிறப்பான தருணத்தை நோக்கி முன்னேறுவார்.

வண்டி வாகனம் ஓட்டுவதில் கவனம் மிக முக்கியம். இரவு நேர பயணம் தவிர்ப்பது நலம். வீடு நிலம் சார்ந்த முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும், சில தடைகளுக்குப்பின் கிடைக்க வாய்ப்பு உண்டு, இடம்மாற்றம் உண்டு.

தந்தைக்கு சில ஆரோக்கிய குறை வந்து போகலாம், தொழில் மாற்றம் உண்டு, மேலும் தூரதேச பயணம் செல்ல நேரிடலாம், தந்தையாருடன் மனக்கசப்பு வந்து செல்லும்.

மொத்தத்தில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வாக்குவாதம், இருந்தாலும் குழந்தை பிறப்பு, பூர்வீகச் சொத்தின் மூலம் லாபம், போன்றவை ஆறுதல் தரும். குடும்பத்தோடு இடம் மாறி சென்று அதன் மூலம் ஆதாயத்தை பெறுவர், சிலர் வெளிநாடு செல்வர்.வெளி மாநிலத்திற்கு செல்ல நேரிடலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...