புதன், 22 டிசம்பர், 2021

மீன ராசி-2022 வருட ராசி பலன்

 

மீன ராசி

அமைதியின் இலக்கணமாக செயல்படும் மீன ராசி அன்பர்களே இந்த வருடம் குருவானவர் விரைய குருவாக இருந்து ஜென்ம குருவாக வருகிறார்.சனிபகவான் விரயச் சனியாக பயணத்தைத் தொடங்குவார்.

வேலையில்லாதவர்களுக்கு வேலை உண்டு உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு அதிகரிக்கும் ஆனாலும் உரிய நேரத்தில் வருமானம்.

அதிகரிக்கும் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் சிறு தடைக்கு பின் சுபகாரியம் ஆகமுடியும் குழந்தைக்காக முயற்சிப்பவர்களுக்கு குழந்தை வாய்ப்பு உண்டு.

சாஃப்ட்வேர் துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரம் வெளிநாட்டு முயற்சி நன்மை அளிக்கும் சிலருக்கு வெளிநாட்டில் இருந்து வேலை கிடைக்கும்

ஏழரை சனி விரயசனியாக ஆரம்பிக்கின்றார் செலவினங்களை பார்த்து செய்ய நேரிடும்.

குடும்பத்திலும் சில மனக்கசப்புகள் வந்து அகலும் தடைகளை தாண்டி முன்னேறுவார்கள்

சிலருக்கு உத்தியோகத்திலும் தொழிலும் சில மாறுதல்கள் வந்து அகலும் குழந்தைகளுக்கு சில ஆரோக்கிய குறைகள் வந்து அகலும்

மீனராசி ஜாதகர்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் இவர்களுக்கு சளி, வீசிங், வைரஸ், தொந்தரவுகள் வந்து அகலும் வெளியில் உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது நலம் பயக்கும். சிலருக்குமறதி அதிகரிக்கும்.

குடும்பத்தில் சில பிரச்சினைகள் வந்து அகலும் ,உத்தியோகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...