செவ்வாய், 21 டிசம்பர், 2021

மிதுன ராசி-2022 வருட பலன்

மிதுன ராசி

மிதுன ராசி அன்பர்களே சென்ற வருடத்தில் சனியால் பாதிக்கப்பட்டு குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து இருப்பீர்கள்.

ஏப்ரலுக்கு மேல் சனியின் தாக்கம் குறைந்து, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தில் குழந்தை பிறப்பு, சுப நிகழ்ச்சிகள், திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். குழந்தை இல்லாதவருக்கு அல்லது இரண்டாம் குழந்தையாக ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புகள் உண்டு.

உத்தியோகம் இல்லாதோருக்கு உத்தியோகம் கிட்டும். உத்தியோகத்திலிருப்பவர்கள் சிறிது வெளிநாட்டு முயற்சி செய்தால் வெளிநாடு செல்வார், ப்ரமோஷன் உண்டு, முன்னேற்றம் உண்டு.

இரண்டாவது சொத்து வாங்குவதற்கான நல்ல நேரம். தொழிலில் உள்ளவர்கள் முன்னேற்றம் சிறிது தாமதப்பட்டாலும், வருட இறுதியில் வெற்றி வந்து முதலுக்கு மோசம் இல்லாமல், உழைப்புக்கு ஊதியமும் வந்துசேரும் மொத்தத்தில் தேவையான வளர்ச்சி உண்டு சிலருக்கு வண்டி வாகனம் மனை போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவர் அதில் வெற்றியும் உண்டு.

பூர்வீகத்தில் சண்டை, சச்சரவு, தடை உண்டு, ஒரு கர்மமும் உண்டு.

சிலருக்கு காதல் வேட்கை அதிகரித்து, அதில் ஒரு அவ சொல்லும் வர வாய்ப்பு உண்டு. பிரிவும் வர வாய்ப்புண்டு, சிலரோ திடீர் அறிமுகமாகி திடீர் கல்யாணத்துக்கும் வித்திடும் கவனம் திருமண வயது பெண்  பிள்ளைகள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஃபேஸ்புக், வாட்ஸ்அப்போன்றஇவற்றில் இருந்து தள்ளி இருப்பது நல்லது

தாயாருக்கு மகிழ்ச்சி கிட்டும், சிலர் மழலை குழந்தைகளை எடுத்து கொஞ்சும் நாள்....

தாய் ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு உள்ளூர் பதவிகள் ஆன பிரசிடெண்ட், கவுன்சில, நம்பர், சங்கத் தலைவி, போன்ற பதவிகள் கிட்டும்.

மாணவர்கள் நன்றாகப் படிப்பார்கள், அரியர் வைத்துள்ளோர் கிளியர் செய்வார்கள்.

தந்தையிடமும்/சகோதரர்களும் வாக்குவாதம் அதிகரிக்கலாம். விட்டுக் கொடுத்துச் செல்ல பழகிக் கொள்ளுங்கள். மேலும் அரசாங்கம், அரசியல்வாதிகள், மேனேஜர் போன்ற அதிகாரிகளிடம் நிதானமாகப் பேசவும்.

ஷேர் மார்க்கெட் திடீர் லாபம் போன்ற லாட்டரி சீட்டு பிடித்தல் போன்றவற்றில் திடீர் லாபம் உண்டு. ஆனால் முன்னரே இந்த முதலீட்டை செய்திருக்க வேண்டும். புதிதாக இப்பொழுது செய்ய வேண்டாம். மொத்தத்தில் முன்னர் செய்த முதலீடுகளில் திடீர் லாபம் உண்டு.

உடல்நலனைப் பொறுத்த மட்டில் வயிற்று உபாதைகள், அல்சர், முதுகு வலி போன்ற பிரச்சனைகள் வரும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...