தானத்தினால்_ஏற்படும்
பலன்கள் என்ன என்ன?
அன்னதானம் செய்வதன்
சிறப்பு என்ன?
1 : தானத்தினால் ஏற்படும்
பலன்கள் என்ன என்ன?
அன்னதானம்-
வறுமையும் கடன்களும் நீங்குகின்றன.
பூமிதானம்-
பிரம்ம லோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் அளிக்கும்.
கோதானம்-
ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன் ஆகியவற்றைப் போக்குவிக்கும்.
வஸ்திரதானம்-
ஆயுளை விருத்தி செய்யும்.
தீப தானம்-
கண்பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்.
https://chat.whatsapp.com/FgX3dRXRGO1A7GSEFQgWxi
தேன் தானம்-
புத்திர பாக்கியம் உண்டாக்கும்.
அரிசி தானம்-
பாவங்களைப் போக்கும்.
தயிர் தானம்-
இந்திரிய விருத்தி உண்டாக்கும்.
நெய் தானம்-
நோய்களை நிவர்த்தி செய்யும்.
நெல்லிக்கனி தானம்-
ஞானம் உண்டாக்கும்.
பால் தானம்-
துக்கம் நீக்கும்.
தேங்காய் தானம்-
பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.
தங்க தானம்-
குடும்ப தோஷம் நிவர்த்தி செய்யும்.
வெள்ளி தானம்-
மனக்கவலை நீக்கும்.
பழங்கள் தானம்-
புத்தியும் சித்தியும் தரும்.
இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் பலன்கள் உண்டு.
2 : அன்னதானம் செய்வதன்
சிறப்பு என்ன?
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். இந்த உலகத்தில் எத்தனை விலை உயர்ந்த பொருளை தானமாகக் கொடுத்தாலும், அதைப் பெறுபவனின் மனம் இன்னமும் இதனை சிறப்பாகக் கொடுத்திருக்கலாம் என்றும், இன்னமும் வேண்டும் என்றே ஆசை கொள்ளும். உதாரணத்திற்கு ஒரு வெள்ளி சொம்பு தானம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதைப் பெறுபவரின் மனம் இவனுக்கென்ன குறை, இன்னமும் விலைஉயர்ந்ததாக சற்று பெரிய அளவில் வாங்கிக் கொடுத்திருக்கலாம் என்று நினைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், வயிறு ஒன்றுதான் ‘போதும்’ என்று சொல்லக்கூடியது. ஒரு மனிதன் எவ்வளவு தான் சாப்பிடமுடியும்?
வயிறு நிறைந்துவிட்டால் மனமும் நிறைந்துவிடும், போதும் என்ற எண்ணமும் உண்டாகும், வயிறு நிறைந்தால் மனமும் குளிரும். அன்னதானம் செய்தவனை மனமார வாழ்த்திச் செல்வர். தானத்தைக் கொடுப்பவனும் சரி, பெறுபவனும் சரி மனம் நிறைவது அன்னதானத்தில் மட்டுமே. அதனால்தான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று பெரியோர்கள் சொல்லி வைத்தார்கள்.
வாழ்க வளமுடன்
தக்ஷா ஜோதிட மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழரசன் க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக