சூரியன் பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யக்கூடிய அந்த நாட்களுக்கு பெயர் தான் அக்னி நட்சத்திரம்.
இந்த காலம் வடகிழக்கு பருவமழை காலத்திற்கும் தென்மேற்கு பருவமழை காலத்திற்கும் இடைப்பட்ட காலமாகும்.*தக்ஷா*
பஞ்சாங்கத்தின் படி 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கத்தை விட இந்த நாட்களில் சூரிய பகவான் அதிக உஷ்ணத்தை கொடுக்க கூடிய நாட்களாக இருக்கும்.
இந்த காலப்பகுதியை கத்திரி வெயில் என்றும் அழைப்பார்கள்.
இந்த காலத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் நேரம். அப்போது சூரியனுக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுக்கப்படுகிறது. சூரியன் என்பது விண்மீன் தான். மற்ற காலங்களில் நாம் அதனை சூரியன் என்கிறோம். அக்னி நட்சத்திரம் ஆண்டுதோறும் 21 நாட்கள் வருகின்றன.*தக்ஷா*
அக்னி நட்சத்திர நாளில் சந்திரன் மட்டுமல்லது. பூமி கூட சூரியனுக்கு சற்று அருகே இருக்கும். அக்னி நட்சத்திரம் என்பது சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக அமையும் காலப்பகுதியாகும். பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த பகுதியாகும்.
இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பத்தை தரும். இந்த காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும். அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும். அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும். அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும்.
அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும். இதனை “கர்ப்ப ஓட்டம்’ என்பார்கள். இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது. அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது.பொதுவாக, சூரியன் ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கும் பாதையில், முதல் நான்கு மாதங்கள் பூமிக்கு அருகில் இருந்தவாறு பயணப்படும்.இதற்கு ஐராவத வீதி என்ற பெயரும் உண்டு.( இந்திரன் வாகனம்)
Purana Story – *தக்ஷா* அக்னி நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டது கார்த்திகை நட்சத்திரம். கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதை அக்னி தேவன். நெருப்பைத் தாங்கும் சக்தி படைத்தது கார்த்திகை நட்சத்திரம் என்று வானியல் நூல்கள் கூறுகின்றன. இந்த அக்னி நட்சத்திரம் குறித்து புராணம் கூறும் தகவலைப் பார்ப்போமா? யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம். இந்தக் காட்டிற்குள் அரிய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். இந்திரனின் காவலில் உள்ள அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்துவளர, அவ்வப்போது மழைபெய்யச் செய்தான் மழையின் அதிபதியான இந்திரன். (இந்திரனுக்கு காண்டவவனன்’ என்ற பெயரும் உண்டு.) இயற்கையின் எழிலுடன் மூலிகையின் மணமும் வீசிக்கொண்டிருந்த இதமான சூழ்நிலையில், யமுனை நதியில் கண்ணனும் அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் நீராடி மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் கரையேறும்போது ஓர் அந்தணர் வந்தார். அவர், கண்ணனையும் அர்ச்சுனனையும் பார்த்து, “”உங்களைப் பார்த்தால் கருணை மிக்கவர்களாக தெரிகிறீர்கள். எனக்கு அதிக பசி. என் பசிக்கு உங்களால்தான் உதவமுடியும். இந்த வனத்தில் என் பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டினார். அந்த அந்தணரின் பேச்சு வித்தியாசமாக இருக்கவே, கண்ணன் அந்த அந்தணரை உற்றுப் பார்த்தார். வந்திருப்பது அக்னி தேவன் என கண்டு கொண்டார் “”அக்னிதேவனே! ஏன் இந்த வேடம்? நேரிடையாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே” என்று கண்ணன் சொன்னதும் தன் வேடத்தைக் கலைத்தார் அக்னிதேவன். ”*தக்ஷா*
உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு நான் ஆளானேன். அதனால் மந்த நோய் என்னைத் தாக்கிவிட்டது. அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் இந்த வனத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள அரிய மூலிகைகளை நான் கபளீகரம் செய்தால் என் பிணி தீரும்” என்றான். “”அதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்கள்?” என்றான் அர்ச்சுனன். “நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும்பொழுதெல்லாம், இந்திரன் மழை பெய்ய மேகங்களுக்கு உத்திரவிட்டு, என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியைத் தடுத்துவிடுகிறான்” என்றான்.
கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்து சிரித்தார். (காண்டவ வனத்தை அழித்தே அங்கே இந்திரப் பிரஸ்தம் கட்ட வேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தனர் பாண்டவர்கள்.
ஆனால் காண்டவ வனத்தை அழிப்பது எவ்வாறு என்று திகைத்த வேளையில் இது நடந்தது) கண்ணன் சிரிப்பின் பொருளைப் புரிந்துகொண்ட அர்ச்சுனன் “அக்னி தேவனே, நாங்கள் உனக்கு உதவுகிறோம் ஆனால் ஒரு நிபந்தனை. இந்த உதவிக்கு உபகாரமாக வில்லும் அம்பாறாத் தூணியும் அம்புகளும் வேண்டும். ஏனென்றால் நாங்கள் இங்கு நீராடத்தான் வந்தோம். எனவே இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு வில்லும் அம்புகளும் தேவை” என்றான். உடனே, அர்ச்சுனனுக்காக சக்திமிக்க காண்டீப வில், அம்புகள், அம்பறாத்தூணி என எல்லாவற்றையும் தந்தான் அக்னி பகவான்.
அப்பொழுது கண்ணன் “அக்னிதேவனே, உன் பிணியைத் தீர்த்துக்கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இந்தக் காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அந்தச் சமயத்தில் இந்திரன் மழைபொழியாமல் பார்த்துக்கொள்கிறோம்” என்றார். அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான். மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சுனன் அந்த வனத்தில் மழை பொழியாமலிருக்க “சரக்கூடு’ ஒன்றை தன்னிடம் உள்ள அம்புகளால் கட்டித் தடுத்தான். அக்னியும் முதல் ஏழு நாட்கள் வேகமாக தன் பசிக்கு வனத்தில் உள்ள மூலிகைப் பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தான். அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாகக் கொண்டான். அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் கண்ணனிடமும் அர்ச்சுனனிடமும் விடைபெற்று வெளியேறினான். இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.
இந்நிலையில் இந்த அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யகூடாது என நமது தமிழர்களை பொறுத்தவரை பழங்காலத்திலிருந்தே மாதங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். தமிழ் மாதங்கள் மொத்தம் 12 ஆகும். பண்டைய தமிழர்கள் இரண்டு வகையாக மாதங்களை குறித்து வந்துள்ளார்கள். பூமிக்கு சார்பாக சூரியனின் இயக்கத்தை வைத்தும், பூமிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் மாதங்களை கணக்கிட்டார்கள்.*தக்ஷா*
அவையாவன : சூரிய மாதம் என்றும் சந்திர மாதம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் முதலாமானவள் என்ற சிறப்பை பெற்றவள் சித்திரைத் தாய். *அக்னி நட்சத்திரம் ஆரம்பம் 😘 சூரியனின் ஒளிதான் நம் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் படி சூரியனின் அதிஉச்ச காலமான அக்னி நட்சத்திரத்தில் சில சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பார்கள். அர்ஜுனன் காண்டவ வனம் எனும் இந்திரனின் வனத்தை எரித்த காலம் அக்னி நட்சத்திரக் காலம் என்றும் சொல்லப்படுகிறது.
அர்ஜுனனுக்கு காண்டீபன் அர்ஜுனன் என்ற பெயரும் சேர்ந்து விட்டது இந்த நிகழ்வுக்கு பிறகு *தக்ஷா*
https://spiritual2astro.blogspot.com/2021/12/2022_21.html?m=1
Religious & Rituals – அக்னி நட்சத்திர காலத்தில் சிவாலயங்களில் இறைவனுக்கு தாராபிஷேகம் செய்விப்பார்கள்.
அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடியவை:
▪ பூணுல் போடுவது செய்யலாம்
▪ திருமண பொருத்தம் பார்க்கலாம்
▪ மாப்பிளை பெண் வீட்டுக்கு செல்லலாம்
▪ திருமண நிச்சயம் செய்யலாம்
▪ ஒப்புதல் தாம்பூலம் செய்யலாம்
▪ திருமணம் செய்யலாம்
▪ மஞ்சள் நீராட்டு விழா செய்யலாம்
▪ யாகங்கள் செய்யலாம்
▪ சத்திரங்கள் கட்டலாம்
▪ வாடகை வீடு குடி போகலாம்
அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடாதவை:
▪ செடிகள், மரங்கள் வெட்டுவது அக்கினி நட்சத்திரத்தில் செய்யக்கூடாது.
▪ நிலம், வீடு வகைகள் ஆரம்பிக்க கூடாது. (வீடு கட்டுவது)
▪ விதை விதைத்தல் செய்யக்கூடாது
▪ கிணறு வெட்டக்கூடாது
▪ புதுமனை புகுதல் கூடாது
▪ தீட்சை எடுத்தல் செய்யக்கூடாது
▪ மொட்டை அடித்தல், காது குத்துதல் செய்யக்கூடாது
▪ வாகனம் ஏறுதல் அதாவது வாகனம் வாங்குவது போன்றன செய்யக்கூடாது
▪ கோவில் கும்பாவிஷேகம் செய்வது சிறப்பானது அல்ல
▪ கூரை மேயக்கூடாது
https://chat.whatsapp.com/FgX3dRXRGO1A7GSEFQgWxi
Conclusion from the Concept From my Research:
பொதுவாக அக்னி நட்சத்திரத்திற்கு முன்பும் பின்பும் கிராமப்புறங்களில் அதிக அதிக எண்ணிக்கையில் ஆடு பலி கொடுப்பது சூட்சுமம் என்னவென்று தெரிந்து கொள்க..*தக்ஷா*
அக்னி தேவனின் வாகனம் கருப்பு ஆடு எனவே கருப்பு ஆட்டினை மாரியம்மனுக்கு பலி கொடுப்பதன் மூலம் அக்னிதேவன் வரவை தடுக்க இயலும் ..இதனால் வருணபகவான் மாரியம்மன் மூலம் மனம் குளிர்ந்து மழையை கொண்டுவருவார் ஒவ்வொரு ஊர்களிலும் திருவிழாவிற்கு தேர் நிற்கும் முன்பாக மழை பெய்வது சூட்சமும் இதுவே *தக்ஷா*
குழந்தைகளுக்கு ஒரு அளவுக்கு மேல் நெய்யை அதிகமாக கொடுக்கக்கூடாது மந்த நோய் தாக்கும் என்பது இந்து புராணத்தில் இருந்து தெளிவடைகிறது
தமிழரசன் மு க
நன்றி
வாழ்க வளமுடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக