பஞ்ச பாண்டவர்களில்,"கர்ணன்"சூரிய புத்திரர்!
கர்ணனை போல் ஒரு வள்ளல் யாருமே கிடையாது!
கர்ணனின் வள்ளல் தன்மைக்கு காரணம் அவர் சூரியனின் மகன் அல்லவா!
சூரிய பகவான் யாருக்கு பாகுபாடு இல்லாமல் வெளிச்சத்தை கொடுக்கிறார்!
பூமி பந்தில் அனைத்து உயிர்களூம் வாழ சூர்ய பகவான்தான் காரணம்!!
இன்னொரு ரகசியத்தை உங்களிடம் சொல்கிறேன்!
ஜோதிடத்தில் சனி பகவானை போல யாரும் அள்ளி கொடுக்க முடியாது!
சனி பகவானிடம் நாம் நம்முடைய அகங்காரத்தை விட்டுட்டு யாசகம் கேட்டால் அவரை போல ஜாதகரை யாரும் வாழ வைக்க முடியாது!
பக்கச்சார்ப்பற்ற மனம் இல்லாதவர் சனி பகவான்!
நீதி,நேர்மையில் அவரை மிஞ்ச யாருமே கிடையாது!!
ஏன் சனிபகவானை,கர்ணனை போல் அள்ளிக்கொடுப்பவர் சொல்கிறேன் என நினைக்கிறீர்களா!
ஆம் சனி பகவானும் சூர்ய புத்திரர்தான்!!!
ராஜ கிரகங்களான சூரியன் செவ்வாய் குரு சனியும் முக்கிய ஒன்று
ஒருவருக்கு அரசியல் அரசாங்க வேலைக்கு இவர்களின் அனுகிரகங்கள் மிகவும் இன்றியமையாத ஒன்று..
அதிலும் சனியின் பங்களிப்பு மிக மிக முக்கியம்..
சனி திசை சனி ,புத்தி ,அல்லது ஏலரை சனி காலங்களில் நீதி நேர்மையுடன் நாணயமான தொழில் செய்வோரை சனி என்றுமே கைவிடுவதில்லை.
தொழில் காரகனே சனி அந்த தொழில் காரகனுக்கு தொழில் செய்வதற்கு முக்கியமே நாணயம் நாணயத்தோடு நடந்தால் நாணயம் வந்து சேரும்.
நீதி நேர்மையோடு நாணயத்தோடு தொழில் செய்வாரோ அல்லது இருப்பவர்களுக்கோ சனியை பற்றிய பயம் தேவையில்லாதது…
ஆம் குரு கொடுப்பின் சனி தடுப்பார் !சனி கொடுப்பின் எவர் தடுப்பார்!அவரவர் கர்மா அறிந்து புரிந்து அவர்களின் பாவ கணக்குகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ற நல்ல விஷயங்களை தருகிறார் சனி !
நன்மை செய்யாவிடில் பரவாயில்லை தீமை செய்யாமல் இருப்போமாக !!முடிந்தவரை அடுத்தவர்களுக்கு நன்மையே நினைப்போம்!!
30 வருடம் வாழ்ந்தவர் எவரும் இல்லை கெட்டவரும் எவரும் இல்லை என்று கூறுவதன் ரகசியம் !!!
30 வருடங்களுக்கு ஒரு முறை சனி ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும்
7 1/2 சனியாக வந்து அவரவர் பாவங்களை கண்டறிந்து அதற்கேற்ற விஷயங்களை தருகிறார்..
மனிதனின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் 30X4 = 120
ஒவ்வொரு மனிதனும் நான்கு 7 1/2 சனிகளை சந்தித்தாக வேண்டும் நான்காவது சனியை மரணச் சனியாக இருக்கும்..
வாழ்க வளமுடன்
தக்ஷா ஜோதிடம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக