புதன், 27 ஜூலை, 2022

சூரியன் சனி இணைவால் அப்பா மகனுக்கு ஆகாதா

 சூரியன் சனி இணைவால் அப்பா மகனுக்கு ஆகாதா...???


 வருகிற தை 1-ஆம் தேதி 14.01.2022 திருக்கணிதப்படி பகல்  02:27 மணிக்கு சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மகரத்தில் சூரியன் ஒரு மாதம் முழுவதும் தங்குவார். அப்பொழுது சூரியனுடன் சனி பகவான் ஆட்சி பெற்று இணைந்தே இருப்பார்.


எனது தனிப்பட்ட ஜாதகத்தில் கூட சூரியன் சனி இணைவு எனது லக்னத்தில் உள்ளது ஆனாலும் தந்தை மீது அதிக பாசம் உண்டு மேலும் சிம்ம வீட்டில் சுப சுக்கிரன் பார்ப்பதால் இது மிக நன்று எனவே ஆண் குழந்தைகளுக்கு  அல்லது இரண்டாவது குழந்தைகளுக்கு முயற்ர்ச்சி எடுப்பவர்கள் வருகின்ற 14 1 2022 பிரம்மமுகூர்த்தத்தில் இனைவது மிக சிறப்பு..


நெல்லிக்கனி ஒரு வாரம் 2 அல்லது நெல்லிக்கனி ஜூஸ் பருகி வயிறை சுத்தம் செய்து பின் இணைவது உத்தமம்

ஆண்கள் வெற்றிலை பாக்கு அல்லது கொட்டைப் பாக்கை வாயில் உமிழ் நீரில் வைத்து சாப்பிட ஒரு வாரம் எடுத்துக் கொள்வது மிக உத்தமம்


 இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும் குழந்தையின் தந்தைக்கும் ஆகாதா என்றால் நிச்சயம் ஆகாது தான்.


 சூரியன் சனி பரஸ்பர பகை கிரகங்கள் மட்டுமல்ல. எப்பொழுதுமே எதிரியாகவே ஒருவருக்கொருவர் பார்க்கக்கூடிய கண்ணோட்டத்தில் இருப்பார்கள் இந்த அமைப்பு குழந்தை பிறந்தவுடன் ஜாதகரின் தந்தைக்கு சில பொருளாதர  வீழ்ச்சிகள் ஏற்படும் . உடனே நாம் என்ன சொல்வோம் குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என்று சொல்லுவோம்


 இன்னும் சில ஜோதிடர்கள் தத்து கொடுத்து பரிகாரம் செய்யுங்கள் என்று கூறுவார்.தை மாதத்தில் பிறக்கும் குழந்தைக்கு நிச்சயமாக அவர்கள் பெற்றோர்களுக்கு வைகாசி ஆனி மாதத்தில் திருமணம் நடந்து இருக்க அதிகபட்ச வாய்ப்புகள் உண்டு. திருமணத்திற்கு தேதியும் சாந்தி முகூர்த்தத்துக்கு தேதியும் ஜோதிடர்கள் தான் குறித்துக் கொடுத்து இருப்பார்கள் என்பது உண்மை.


 ஆனால் இப்போ இந்த காலகட்டத்தில் தம்பதியினருக்கு இணைந்தால் வருகிற தை மாதத்தில் சூரியன் சனி இணைவில் குழந்தை பிறக்கும் என்பதை ஏன் ஜோதிடர்கள் மறந்தார்கள்...


குழந்தை பிறந்த ஜாதகம் எழுத அறிய ஜோதிடரிடம் சென்றாள் சூரியன் சனி இணைவு அப்பனுக்கு ஆகாது பரிகாரம் செய்யவேண்டும் என்று கூறுவார்கள். இது போன்ற நிகழ்ச்சிகளை ஜோதிடர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே எனது கருத்து


 சரி தைமாதம் பிறக்கும் குழந்தைகள் என்ன செய்யலாம்.


சந்திரன் பலமாக இருந்து கும்பம் அல்லது மீன லக்னமாக இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் தந்தைக்கும் எந்தவித தோசங்களும் எந்தவித பாதிப்புகளும் இருக்காது.


குழந்தை சுகப்பிரசவமாக பிறப்பதும் ஆபரேஷன் செய்து கிடைப்பதும் இறைவன் வகுத்த விதி. எல்லாம் இறைவன் வகுத்த விதியின் படிதான் நடக்கும் அதனை தான் நாம் கர்மா என்று கூறுகிறோம்.


சூரியன் சனியின் இணைவை வேறு எந்த ஒரு சுப கிரகமும் பார்க்கப்போவது இல்லை. சுகப் பிரசவமே இறைவன் வகுத்த நல்ல விதியாக இருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.


 சூரியன் சனி இணைவு நல்லதல்ல என்பது ஒரு விதியை மட்டுமே தவிர பல விதிவிலக்குகளும் உள்ளன.


தமிழரசன் க

தக்‌ஷா ஜோதிட ஆய்வு மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...