சுக்ரன்
கிழமை - வெள்ளி
தேதிகள் - 6, 15, 24
நட்சத்திரம் -பரணி, பூரம், பூராடம்
ஆட்சி வீடு -ரிஷபம், துலாம்
உச்சம் -மீனம்
நீச்சம் - கன்னி
ரத்தினம் -வைரம்
உலோகம் - வெள்ளி
தானியம் -மொச்சை
நிறம் -வெண்மை
ஆடை - வெண்பட்டு
தசா காலம் - 20 ஆண்டுகள்
கிரக அமைப்பு - பெண்
வாகனம் - கருடன்
புஷ்பம் -வெள்ளை தாமரை
சுவை -இனிப்பு.
சுக்ரன் வரலாறு
நவகிரகங்களில் முக்கிய சுப கிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார். பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார். அதனால் மனம் மகிழ்ந்த ஈசன் பார்க்கவன் விரும்பியவாறே இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். அசுரர்கள் இதனையறிந்து சுக்கிரனை தங்களது குலகுருவாக கொண்டனர். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட போர்களில் இறந்த அசுரர்கள், சுக்கிராச்சாரியாரின் அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் உயிர்பெற்று எழுந்தனர்.
இந்நிலையில் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. தேவர்கள் அனைவரும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர். தான் கொடுத்த வரபலத்தை தவறான வழியில் பயன்படுத்தும் அசுர குருவாகிய சுக்கிரனை சிவபெருமான் விழுங்கிவிட்டார். பலகாலம் சிவனின் வயிற்றில் இருந்து, பின்பு அமரர்களின் வேண்டுகோளின்படி சுக்கில வழியாக வெளியே வரச் செய்ததனால் 'சுக்கிரன்' என்றும் தூய வெண்மையாக வந்ததனால் 'வெள்ளி' என்றும் பெயர் ஏற்பட்டது. அதனால் யாவராலும் வணங்கப்படும் கிரக பதவி கிட்டியது.
மகாபலியிடம் திருமால் வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்டபொழுது கமண்டலத்திலுள்ள நீர் வெளியே வராமல் வண்டு உருவம் எடுத்து துவாரத்தை சுக்கிராச்சாரியார் அடைக்க, திருமால் தர்ப்பையால் குத்த, அசுர குருவின் கண் குருடாகியது. இதனால்தான் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்தால் கண் பார்வை பிரச்னைகள் ஏற்படுகிறது.
ஒவ்வொருவர் வாழ்க் கையிலும் இன்ப-துன்பங்கள், ஏற்ற-இறக்கங்கள், லாப- நஷ்டங்கள் மாறி மாறி வருகின்றன. இது இயற்கையின் நியதிதான் என்றாலும் கிரக அம்ச யோகங்களால் திடீர் பதவி, பங்களா, செல்வம், செல்வாக்கு என்று சிலர் அனுபவிக்கிறார்கள். இந்த அமைப்புகள் கிடைக்க பூர்வ புண்ணியமே காரண மாகும். இந்த பூர்வ யோகத்தை நாம் பிறக்கும்போதே நம் ஜாதக கட்டத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் இறைவன் எழுதிவிடுகிறான். அந்த யோக தசைகளுக்கு ஏற்ப நம் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக