இந்து லக்கனம் ஒரு பார்வை
ஜாதகத்தில் உள்ள பன்னிரெண்டு ராசி கட்டத்தில் இடம்பெறக்கூடிய நவகிரகங்களது நிலைமையைக் கொண்டு பல்வேறு வழிமுறையை பயன்படுத்தி
விதிகள் மற்றும் விதிவிலக்குகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் மானிட வாழ்வின் எதிர்கால பலனை துல்லியமாக அறிய முற்படுகிறோம்.
துல்லியமான பலனை அறிய பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் அதன் துணை அமைப்புகளாக
திதி சூனியம், புஷ்கர நவாம்சம், தாரா பலன் ... போன்றவையை போலவே இந்து லக்னம்
பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
இந்து லக்னம் பற்றி அறிவதற்கு முன்பாக கிரகங்களில் ஒளி அளவை முதலில் தெரிந்து கொள்வோம் இந்த ஒளி அளவைக் கொண்டுதான்
இந்து இலக்கனத்தை கணக்கிட பேருதவியாக அமைகிறது.
ஒளி அளவைக் கொண்டு தான் கிரகங்களை இயற்கை சுபர் மற்றும் இயற்கை பாவர் என்று வகுத்து இருக்கிறோம். இந்த கருத்து ஒளி அளவை கொண்டே உறுதி செய்யப்படுகிறது.
கிரகங்களில் சூரியனே முதன்மையானது ஆகும். சூரியனுடைய ஒளியை வாங்கி பிரதிபலிக்கக் கூடிய கிரகம் சந்திரன் ஆகும். அதாவது சூரியனுடைய ஒளியை வாங்கி அதிகமாக பிரதிபலிக்கக் கூடிய கிரகம் இயற்கை சுப கிரகம் என்று அழைக்கப்படுகிறது.
கிரகங்களில் சூரியனையும், சந்திரனையும் ஒளி கிரகங்களாக கருதப்படுகிறது. இருள் கிரகமாக சனியையும் மற்றும் சாய கிரகங்களாக ராகு மற்றும் கேதுவும் அழைக்கப்படுகிறது.
சூரியனனால் பூமிக்கு கிடைக்கும் ஒளி அளவு 30 ஆகும்.
சந்திரனால் பூமிக்கு கிடைக்கக்கூடிய உடைய ஒளி அளவு 16 ஆகும்.
சுக்கிரனால் புவிக்கு கிடைக்கும் ஒளி அளவு 12 ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக குருபகவானால் கிடைக்கும் ஒளி அளவு 10 ஆகும்.
புதன் பகவானால் பூமிக்கு கிடைக்கும் ஒளி அளவு 8 ஆகும்.
செவ்வாய் பகவானால் பூமிக்கு கிடைக்கும் ஒளி அளவு 6 ஆகும்.
நிறைவாக சனிபகவானால் புவிக்கு கிடைக்கும் ஒளியளவு 1 ஆகும்.
இந்து லக்கனம் கணக்கிடும் முறை
லக்னத்திற்கு ஒன்பதுக்குடைய அதிபதியின் ஒளி அளவு மற்றும் ராசிக்கு ஒன்பதாம் இடம் அதிபதி ஆகியவற்றின் ஒளி அளவை கூட்டி 12 ஆல் வகுக்க வேண்டும். அவ்வாறு வகுத்து கிடைக்கும் மீதியை ஒருவரது ராசியில் இருந்து எண்ணி வரவேண்டும்.
மீதி 0 எனில் அந்த ராசிக்கு முன்னுள்ள ராசியை இந்து லக்கினமாக கருதப்பட வேண்டும்.
உதாரணமாக தனுசு லக்னம் மற்றும் கடக ராசி என்று வைத்துக்கொண்டால் லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி சூரியன் ஆகும் அதன் ஒளி அளவு 30 ஆகும். கடக ராசிக்கு 9-ஆம் இடம் அதிபதி சனி பகவானாவார் அதன் ஒளி அளவு ஒன்று ஆகும். ஆக இரண்டில் மொத்தம் 30+1 முப்பத்தி ஒன்று ஆகும்.
இந்த முப்பத்தி ஒன்றை 12 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி 7 ஆகும். சாதகரது ராசி கடக ராசி என்பதால் கடகத்தில் இருந்து எண்ணி வர வேண்டும். இவ்வாறு எண்ணி வர 7-ஆவது ராசியாக மகர ராசி வருகிறது. ஆகவே மகர ராசியை
இந்து இலக்கனமாக கருதப்படவேண்டும்.
ஒரு சமயம் மீதியானது பூஜ்ஜியம் என்று வந்தால் என்ன சார் செய்வதது ? என நீங்கள் கேட்கும் கேள்வி என் காதில் விழுகிறது.
இதற்கு ஒரு உதாரணம் மூலமாக விளக்குவோம்..
சாதகர் தனுசு இலக்கனம் மற்றும் மீன ராசி என வைத்துக் கொண்டால், லக்னத்திற்கு 9ம் இட அதிபதியான சூரியனின் ஒளி அளவு எண் 30 ஆகும்.
மீன ராசிக்கு 9-ஆம் இடம் அதிபதியான செவ்வாயின் ஒளி அளவு 6 ஆகும்.
ஆக 30+6 ஆகிய இரண்டையும் கூட்டினால் கிடைப்பது முப்பத்தி ஆறு ஆகும்.
இவ்வாறு கிடைக்கும் 36 ஐ 12 ஆல் வகுக்க மீதி 0 வருகிறது.
இப்பொழுது என்ன செய்வது என்றால் மீதி 0 என வந்தால் ஜாதகருடைய ராசிக்கு முந்தைய ராசியை இந்து லக்கினமாக எழுதப்படவேண்டும். இந்த விதிப்படி மீன ராசிக்கு முந்தைய ராசியான கும்ப ராசியை. இந்து லக்கினமாக கருதப்படுகிறது.
இந்து லக்னம் காண்பதற்கு இத்துடன் இந்த பிரச்சனை தீர்ந்து விடவில்லை .
ஒரு சில ராசி மற்றும் இலக்கனங்களுக்கு
இந்து லக்னம் காணும்போது ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் ராசிக்கு ஒன்பதாம் அதிபதியின் ஒளி அளவை கூட்டி வரும் எண்ணானது பன்னிரன்டை விட குறைவாக வந்து பன்னிரண்டால் வகுக்க இயலவில்லை எனில்
அப்போ
என மனதிற்குள் நீங்கள் கேட்கும் கேள்வி மைண்ட் வாய்ஸ் ஆக என் காதில் விழுகிறது.
பன்னிரண்டால் வகுக்க முடியாத அளவிற்கு 12 விட குறைவாக இருந்தால் ஜாதகருடைய ராசியிலிருந்து அந்த குறைவான எண் எதுவோ அதுவரை எண்ண வேண்டும் .எண்ணி வரும் ராசி எதுவோ,
அதுவே இந்து இலக்கனமாகக் கொள்ளப்படுகிறது.
உதாரணமாக மிதுன லக்கனம் மற்றும் மீன ராசியாக இருந்தால்,
மிதுன லக்னத்திற்கு ஒன்பதாம் இட அதிபதி சனி பகவான் ஆகும். அதன் ஒளி அளவு ஒன்று ஆகும். அதேபோல மீன ராசிக்கு 9-ஆம் இடம் அதிபதி செவ்வாய் ஆகும். அதன் ஒளி அளவு ஆறு ஆகும்.
இரண்டையும் கூட்ட 1+6=7 ஆகும்.
எண் ஏழு ஆனது பன்னிரெண்டை விட குறைவாக இருப்பதால் , இதனைப் பன்னிரண்டால் வகுக்க தசம எண் வரும் என்பதால் ஜாதகருடைய மீன ராசியிலிருந்து எண்ணி வர ஏழாவது ராசியான கன்னி ராசியை இந்து லக்கினமாக கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக