வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்


மஹா சிவராத்திரி அறிவியல் விளக்கம்:

நிலவின் சுழற்சிக் கணக்கில் ஒவ்வொரு மாதத்தின் 14வது நாள் அமாவாசைக்கு முந்தைய நாள் சிவராதியாக வழிபடுகிறோம். அப்படி எனில் ஒரு வருடத்திற்கு 12 சிவராத்திரிகள் வருகிறது. அதில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியைத் தான் மகா சிவராத்ரி என்று கொண்டாடுகிறோம். அன்றைய இரவு பூமியின் வடக்கு அரைக்கோளம் ஏற்கும் நிலையில் இருப்பதால் இயற்கையாகவே நம்முடைய உயிர் சக்தியை மேல் நோக்கி எழும்பச் செய்கிறது. இயற்கையாகவே மேலெழும்பு சக்தியை எந்த தடையும் இன்றி மேல் நோக்கி செல்வதற்கு உதவும் வகையில் அன்று இரவு தூங்காமல் கண் விழுது, முதுகு தண்டை நேராக வைத்திருப்பது அவசியம் என்று கூறுகின்றனர்.

இன்றைய தினம் நமது உள்ளத்தின் எண்ணங்களை சீர்தூக்கி பார்க்க வேண்டும். மன அழுக்குகளை சுயபரிசோதனை செய்யவேண்டும். சைவ மதத்தின்படி, சிவபெருமான் இந்த இரவில் தான் ஆக்கம், அழித்தல், பாதுகாத்தல் ஆகியவையும் பரவசமான அவரது பரலோக நடனத்தையும் நிகழ்த்தினார். புராண நம்பிக்கைகளின் படி, இந்த இரவில் சிவனுக்கும் சக்திக்கும் திருமணம் கூட நடந்தது. தென்னிந்திய நாட்காட்டியின்படி மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பக்ஷத்தின் போது சதுர்த்தசி திதி மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது

ஆன்மாவை குறிக்கும் சூரியனும், மனதை குறிக்கும் சந்திரனும் இன்று மட்டும் தான் தங்களின் சுயராசிகளை நேரடியாக பார்ப்பார்கள். யோக சாஸ்திர ரீதியாக சூரியன் மற்றும் சந்திரன் இடா, பிங்கள நாடிகளை குறிப்பதால் நாடிகளின் சலனமும் அன்றைய தினம் ஏற்படும்.

சூரியனும் சந்திரனும் இன்று இரவு தங்களில் நிலையை படிப்படியாக மாற்றி சூரியனை சந்திரன் தழுவிய வண்ணம் இடமாற்றம் அடையும். 

சூரிய மண்டலத்தின் ஆன்மாவும் , மனதும் தங்களின் நிலையில் மாற்றம் அடைவதால் மனிதனின் ஆன்மாவும் - மனமும் மாற்றம் அடையும். அன்றைய தினம் உடலுக்கு (பூமிக்கு) வேலை கொடுக்காமல், உடலை இயற்கையாக விட்டு உள்நிலையை கவனித்தால் ஆன்மீக மேன்மை ஏற்படும்.

(சிம்பிளாக சொன்னால் 'தசாவதாரம்' படத்தில் வரும் 'பட்டாம்பூச்சி' தத்துவம்)

ஒரு சாதாரண என்னால், இவ்வளவு கல்வியறிவு இருந்தும் ஒரு விஷயத்தை நம்பவைக்கும் போது, 

பெரிய பெரிய பிரிவினைகள் அந்த காலத்தில் எப்படி புகுந்திருக்கும் என யூகிக்க முடிகிறதா???

ஏற்றத்தாழ்வுகள் இப்படித்தான் உருவாகியிருக்கக்கூடும்!

அனைவரும் சமமே! 

அறிவியல் பூர்வமாக விளக்கம் என்று சொல்லிவிட்டு புராணக்கதை பேசுகிறானே என எண்ண வேண்டாம்! 

அடுத்து அதுதான்!

இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு கிரகங்கள் மற்றும் கோடான கோடி அண்ட நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்கள் நம்மை கடந்து சென்றுக் கொண்டிருகின்றன.

இத்தகைய கதிர்வீச்சுக்களை ஆய்வு செய்த அன்றைய வேதாந்திகள் தம் யோக வலிமையினால் இந்த ரகசியங்களை அறிந்து வெளிப்படுத்தினார்கள்.

அவர்களின் அன்றைய வானவியல் கோட்பாடுகளை ஆய்வு செய்தால் இன்றைய விஞ்ஞானத்தின் ஆணிவேராகத்திகழ்கிறது.


இன்றைய விஞ்ஞானம் பெரிதும் நம்மியிருக்கும் அனைத்து சாதனங்களும் இந்த பிரஞ்சத்திலிருந்து எடுக்கப்பட்டவையே தவிர அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல.

அவர்கள் சிந்தனை உட்பட அனத்தும் அவர்களால் இயக்கப்பட்டதல்ல.

மார்க்கண்டேயன் முக்தியடைதல்

சிவன் –இதில் மறைந்துள்ள ஒவ்வொரு எழுத்தின் ஒலி ஓசைக்கான உண்மை விளக்கம் வேறு. 

ஆனால் இவற்றை ஒரு சமயம் சார்ந்த விளக்கமாக மாற்றி மதங்களுக்கிடையே விவாதம் செய்து உழன்றுக்கொண்டிருக்கிறார்கள்.

எல்லாம் வல்ல இறைசக்தி ஒவ்வொரு அனுவிலும் இருக்கும் போது பிற மதங்களின் கோட்பாடுகளில் மட்டும் ஏன் இருக்கமுடியாது?

இது நம் சிற்றறிவைதான் குறிக்கிறது.

மனிதன் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளிமுகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள்முகமாகவும் செயல்படுகிறான். 

சூரிய மண்டலத்தில் ஏற்படும் சில கிரக நிகழ்வுகள் மனிதனை தன்னிச்சையாக உள்முகமாக்குகின்றன.

அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பூமி-சந்திரன்- சூரியன் ஆகியவை ஒருவிதமான கிரக நிகழ்வுகளில் அமைகிறது. 

இதனால் மனிதன் எந்த விதமான சுயமுயற்சியிம் இன்றி உள்முகமாகிறான். 

இத்தகைய நாட்களில் மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுகிறது.

மனிதன் சமநிலை தவறாதவண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க ஆன்மீக செயலில் ஈடுபடுத்த நமது முன்னோர்கள் ஏற்படுத்தியது தான் இந்த விரதங்கள்.

சிவ தாண்டவம்:

எந்த ஒரு அறிவியல் விஷயமும் எதேனும் தத்துவத்தை சார்ந்தே இருக்கும்! 

அதுபோலவே ஒவ்வொரு அமைப்பும்! சமயங்கள் உட்பட!

விஞ்ஞான ரீதியாக மகா சிவராத்திரி நாள் மனிதனின் ஆன்ம வளர்ச்சிக்கு மிகப் பெரும் உறுதுணையாக இருக்கிறது. 

அந்த நாளில் கோள்களின் அமைப்பானது மனிதர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு உகந்தவாறு ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கிறது. 

விஞ்ஞான பூர்வமாக எல்லா கோள்களும் ஒரே நேர் கோட்டில் வரும் நாளை தான் மஹா சிவராத்ரியாக வழிபடுகிறார்கள். 

இரவெல்லாம் உறங்காமல் இருக்கிறார்கள். 

அப்போதுதான் முதுகு தண்டு நேர் கோட்டில் இருக்கும் போது 'குண்டலினி சக்தி' மேல் நோக்கி நகரும். 

தியானம் பண்ணாமலே இருந்தால் கூட இது நடக்குமாம்!

இந்த இடத்தில் 'குண்டலினி சக்தி' என்றால் என்னவென்று ஒரு கேள்வி எழுகிறதல்லவா?

குண்டலினி = குண்டம்(நெருப்பு) + அலி(பாலின வேறுபாடுக்கு உட்படாத) 

+ னி(உயிர்). 

சனாதன தர்மத்தில் (இந்து சமயத்தில்) அடிப் படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். 

குண்டலினி என்பது சரீரம் சார்ந்த சக்தி!

வேதாந்திகளில் (இந்துக்கள்) சிலர் பாம்பினை வழிபடுகிறார்கள். கடவுளர்களும் பாம்புடன் இருப்பதைப் பல இடங்களில் “சிலை”ப்படுத்தியிருக்கிறார்கள். 

இது தவறா? சரியா? என்பது இந்த இடத்தில் தேவையில்லாதது!

உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன் படுத்தப்படுகிறது. 


ஏன் பாம்பு? என்ற கேள்வி எழலாம். 

ஒரு பாம்பு அசையாமல் இருக்கும் போது அது இருப்பதே தெரியாது. 

ஆனால் அது சரசர வென்று ஓடும் போது தான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். 

குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றதுதான். 

மனிதனின் முதுகுத் தண்டின் அடிப் பகுதியில் அமைதியாய் இருக்கும். 

அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. 

யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போதுதான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்து வமும் நமக்குப் புரியும். 

குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும்? என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.

சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. 

அது என்ன உணவாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. 

இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 

(விரிவாக இதை எழுதினால் மனித உடலியல் பற்றிய கட்டுரையாகிவிடும் என்பதனால் சுருக்கமாக முடித்து விட்டேன்.)

இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. 

இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக்கிய மைய நாடிகளில் இணைகிறது. 

இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. 

இவையே ஆற்றல் மையங்கள்.

(கட்டுரையில் ஆற்றல் மையம் என்றாலும் சக்கரம் என்றாலும் ஒரே பொருளாகக் கருத வேண்டுகிறேன்.) 

இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ் வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாகசங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. 

மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்க ளையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம்.

முதலில் மூலாதாரம்: 

 • இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள் ளது. 

 • இந்தச்சக்கரத்தின் முக்கிய செயல் பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். 

 • இச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவனாக இருப்பான். 

 • இந்த மூலா தாரச் சக்கரம்தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப் படியான முக்கிய தூண்டு சக்தி ஆகும். 

 • இந்தச் சக்கரம் பஞ்ச பூதங் களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.

இரண்டாவது சுவாதிஷ்டானம்: 

 • இது பிறப்புறுப்புக்கு சற்று மேலாக அமைந்துள்ளது. 

 • இச்சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். 

 • இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான். 

 • இந்தச் சக்கரம் நீர்த்தத்துவத்துக்கு உதாரணமாகச் சொல் லப்படுகிறது.

மூன்றாவது மணிப்பூரகம்: 

 • இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது. 

 • இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். 

 • மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். 

 • இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதி பலிக்கிறது.

நான்காவது அனாகதம்: 

 • இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. 

 • இந்தச் சக்கரத்தின் முக்கிய குணம் 'அன்பு' ஆகும். 

 • (அன்பு என்றால் எல்லோரும் ஏன் நெஞ்சைத் தொடுகிறார்கள்? காதலைக் குறிக்க இதயம் ஏன் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது? சிந்தியுங்கள்!)

ஐந்தாவது விசுக்தி: 

 • இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. 

 • ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்துவது ஆகும்.

 • (ஆலகால விஷம் அருந்திய சிவன் தொண்டையில் விஷம் தடுத்து நிறுத்தப்பட்டது ஞாபகம் வருகிறதா?)

சிவனின் தொண்டையில் ஆலகால விஷம்

ஆறாவது ஆக்ஞை (அல்லது ஆக்கினை): 

 • இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்து ள்ளது. 

 • ஞானம், பேரறிவு ஆகிய வை வெளிப் படக் காரணமாக அமைவது இந்தச் சக்கரம்தான்.

இறுதியாக சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்): 

 •  உச்சந் தலை யில் அமைந்துள்ளது. 

 • தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தருவது இந்தச் சக்கரம்தான். 

 • இந்தச் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர் வதைப் போல் சொல்லப்படுகிறது. 

 • (சிவபெருமானின் தலையில் பாம்பு இருப்பது தலையில் உள்ள சஹஸ்ரஹாரம் தூண்டப்பட்ட நிலையைக் குறிக்கவே.)

சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத்  தூண்டப்படுவது இல்லை. 

பெரும் பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப் பட்டிருப்பதிலே யே வாழ்க்கையை முடி த்துக்கொள்கிறார்கள். 

வெகுசிலர்தான் நான்கு வரை வருகிறார்கள். 

ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்.

இந்தக் குண்டலினியின் முக்கிய செயல்பாடே இந்தச் சக்கரங்களை முழு அளவில் எழுச்சியூட்டுவதுதான். 

அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நீர், மதகுகளைத் திறந்தவுடன் முழு வீச்சில் பாய்ந்தோடுவதைப் போல 

குண்டலி னியை எழுப்பி சக்கரங்க ளைத் தூண்டும் போது மனிதனின் அளப் பறியா ஆற்றல் வெளிப்படுகிறது!

பார்வதி சிவவிரதமிருந்து அருள் பெறுதல்:

மஹா சிவராத்திரி விரதத்தின் தோற்றம் குறித்து கூறப்படும் புராண கதைகளை பாருங்கள்!

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை கந்தபுராணம் குறிப்பிடுகிறது. 

 1. சோம வார விரதம் 

 2. திருவாதிரை

 3. உமா மகேசுவர விரதம்

 4. மகா சிவராத்திரி விரதம்

 5. கேதார விரதம்

 6. கல்யாண விரதம்

 7. சூல விரதம் 

 8. ரிசப விரதம் 

என்பன அவையாகும்! 

இத் திருநாட்களில் தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திந்ருது இறைவனை வழிபட்டால் இறையருள் கிட்டும்!

அதென்ன தனித்திரு, விழித்திரு, பசித்திரு?

தனித்திரு: 

 • ஆசாபாசங்களில் மனதை அழுந்த விடாமல் பற்றற்ற மன நிலையை பற்றிக் கொண்டிருத்தல்.

 •  எவ்வித கூட்டுறவுகளில் கலந்திருந்த போதிலும் இறைவனை பற்றி இருத்தலே தனித்திருத்தல்.

 •  மனம் தனித்து அமைதி நிலையில் இறையுணர்வோடு இருத்தல் ஆகும்.

விழித்திரு: 

 • மனம், புத்தி, சித்தம், அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன் முயற்சியில் ஈடுபடுத்தி 

 • பொய், பொறாமை, காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல்.

 • விழிப்புடன் இருத்தல் ஆகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...