புதன், 22 பிப்ரவரி, 2023

தனிஷ்டா பஞ்சமி (அடைப்பு)

 



https://wa.me/message/IRJNBKN72XYKE1

தனிஷ்டா பஞ்சமி (அடைப்பு):

தனிஷ்டா என்றால் அவிட்டம் என்று பொருள்.

தனிஷ்டா பஞ்ஜமி என்றால் அவிட்டம் முதல் வரிசையாக வரும் ஐந்து நக்ஷத்திரங்களையே(அவிட்டம், சதயம், பூரட்டாதி,உத்திரட்டாதி, ரேவதி) " தனிஷ்டா பஞ்ஜமி" என்று சொல்லப்படுகிறது.

27 நட்சத்திரங்களில் தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். 

13 நட்சத்திரங்கள்:

அதாவது சூரியன் செவ்வாய் குரு நட்சத்திரங்கள் மற்றும் ரேவதி ரோகிணி உத்திரட்டாதி சதயம் ஆகிய நட்சத்திரங்கள் அடைப்பு என்கிறது சாஸ்திரம் 

1)அவிட்டம்

2)சதயம்

3)பூரட்டாதி

4) உத்திரட்டாதி

5)ரேவதி 

6)ரோகிணி

7)கார்த்திகை,

8)உத்திரம்

9)மிருகசீருஷம்

10)சித்திரை

11)புணர்பூசம்

12)விசாகம்

13)உத்திராடம் 

ஆகிய தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிபடுத்துகின்றது.

தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களை செய்யாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்சத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி ஆறு மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள். 

இறந்த திதி, நட்சத்திரங்களின்படி அந்த உயிர்கள் எமலோகத்தை அடைகின்றன. ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்திரம், இறக்கும் போது திதி போன்றவை நாம் நினைவில் வைத்துக்கொள்வது அவசியம். நம் ராசி பார்த்து கோவில்களில் அர்ச்சனை செய்வோம். ஆனால் இறக்கும் போது திதி மட்டுமே பார்த்தால் போதாது. நட்சத்திரமும் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் வாக்கு. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் மரணமடைந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

முக்தியடைந்த உயிர்கள் வைகுண்டம் செல்பவர்கள் மரணத்திற்குப் பிறகு முக்தி பெற்றவர்கள் கபாலம் மூலம் உயிர் பிரிந்து சூரியன் வழியாக இறைவனின் பாதங்களை அடைகின்றன. இதனைத்தான் கயிலாய பிராப்தி, வைகுண்ட பிராப்தி என்பார்கள். முக்தி நிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.

வசு பஞ்ஜக தோஷம்:

அவிட்டம், சதயம், பூரட்டாதி,உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நட்சத்திரம் நடப்பில் உள்ள நாளில் குடும்பத்தில் மரணம் ஏற்பட்டால் அது தனிஷ்டா பஞ்ஜமி எனப்படும் அடைப்பு ஆகும். இதை வசு பஞ்ஜக தோஷம் என்று வடமாநிலங்களில் கூறுகிறார்கள்.

இந்த ஐந்து நட்சத்திர நாட்களில் இறந்தால் 6 மாத காலத்திற்கு பூட்டி வைக்க வேண்டும்.

இறந்த ஆத்மாக்கள் மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையே அடைப்பு எனப்படுகிறது. மேற்கண்ட 5 நக்ஷத்திரங்கள் நடப்பில் உள்ள நாளில் ஒரு குடும்பத்தில் மரணம் ஏற்பட்டால் ஒரு வருடத்திற்கு அதே குடும்பத்தில் தொடர் மரணங்கள் ஏற்படும் அல்லது மரணத்திற்கு சமமான கண்டங்கள் ஏற்படலாம்.

குறிப்பாக கொள்ளி வைத்தவருக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் இறந்தவரை சூரியன் 🌞 மறைவதற்கு முன்பு தகனம் செய்து விட வேண்டும்.

எந்த காரணத்தை கொண்டும் இரவில் பிணத்தை வீட்டில் வைத்திருக்க கூடாது.

அந்த பிணத்தை தகனம் செய்யும் போது தர்ப்பை,அருகம்புல் ஆகியவற்றால் 5 பொம்மைகள் செய்து கொள்ளி வைத்தவர் கைகளால் எரித்து விட வேண்டும்.

(சில ஊர்களில் கோழி குஞ்சுகளை உயிருடன் பிணத்துடன் சேர்த்து புதைப்பது உண்டு)

மரணம் ஏற்பட்ட 16 ஆம் நாள் கழித்து வீட்டில் "மிருத்யுஞ்ஜய ஹோமம்" செய்ய வேண்டும்.கொள்ளி வைத்தவர் அந்த வருடம் முடிவதற்குள் தனது நக்ஷத்திரம் வரும் நாளில் கடல், நதி, அல்லது குளக்கரை சென்று சிவ பூஜை செய்ய வேண்டும்..

மேலே உள்ளவையே தனிஷ்டா பஞ்ஜமி எனப்படும்.

இது மட்டும் இல்லாமல் மேலும் சில நக்ஷத்திரங்களும் தோஷத்தை தருகின்றன...

இது மட்டும் இல்லாமல் ரோகிணி நக்ஷத்திரத்தில் இறந்தால் 4 மாதம் வரை தோஷம் என்றும்..

பிண்ட நூல் தோஷம் :

கார்த்திகை, உத்திரம் நக்ஷத்திரம் நடப்பில் உள்ள நாளில் இறந்தால் அது பிண்ட நூல் தோஷம் எனப்படும்.

இது 3 மாதம் தோஷம் ஆகும்.

பலி நக்ஷத்திர தோஷம்:

மிருகசீரிடம், சித்திரை,புனர்பூசம், விசாகம், உட்திராடம்,

அஷ்டமி, நவமி, சதுர்த்தி,சதுர்த்தசி திதி ஆகிய நாளில் மரணம் ஏற்பட்டால் அது பலி நக்ஷத்திர தோஷம் எனப்படும்.இது 2 மாதம் தோஷம் ஆகும்.

இதற்கு பரிகாரமாக இந்த நட்சத்திரத்தில் இறந்தால் இறந்தவர் இருந்த வீடு மூடப்பட வேண்டும் அல்லது இறந்தவர் உபயோகித்த பொருள்களை ஒரு ரூமிலோ,ஒரு பெட்டியிலோ போட்டு பூட்டி வைத்து மேலே குறிப்பிட்ட காலம் வரை இறந்த இடத்தில் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட்டு வரவும்.

வெண்கல கிண்ணத்தில் நல்லெண்ணெய் விட்டு தீபம் ஏற்றி வரவும்... பின்பு வெண்கல கிண்ணத்தை தானஞ் செய்து விடவும்.இறந்தவரை எடுக்கும் போது குளிகை காலம் இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

தீட்டு:

இறந்தவர்களுக்கு தீட்டு அனுசரிக்கும் விஷயத்தில்.

தாய், தந்தை இறந்தால் 1 வருஷம் முடியும் வரையிலும்,

மனைவி இறந்தால் 3 மாதம் வரையிலும்,

சகோதரன் இறந்தால் 45 நாட்களும்,

பங்காளிகள் இறந்தால், இறந்த 30 ஆம் நாள் முப்பது கும்பிடுவது என்று இறந்தவருக்கு படையல் வைத்து வணங்குவார்கள் அது வரை

எங்களது வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்து கொள்ள

கிளிக் செய்யவும் https://chat.whatsapp.com/E0YGmifgOB82SAq0Sb8W8N


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...