செவ்வாய், 28 மார்ச், 2023

தர்ப்பை புல் மகத்துவம்




https://wa.me/message/IRJNBKN72XYKE1

 

தர்ப்பையினால்  செய்யப்படும் மோதிரம் போன்ற அமைப்பு பவித்ரம்  

என்று அழைக்கிறோம்.


பவித்ரம் என்றால் பரம சுத்தமானது என்று அர்த்தம்.


இந்த பவித்ரம்  செய்யப்படும் கர்மாவுக்கு ஏற்ப தர்ப்பை புல்லின் 

எண்ணிக்கை மாறுபடுகிறது.


அவை :-


1) ப்ரேத கார்யங்களில் ஒரு தர்ப்பை


2) சுப கர்மாவில் 2 தர்ப்பை


3) பித்ரு கர்மாவில் 3 தர்ப்பை


4) தேவ கர்மாவில் 5 தர்ப்பை


5) சஷ்டியப்த பூர்த்தி போன்ற சாந்தி கர்மாவில் 6 தர்ப்பை


தேவ கார்யங்களுக்கு கிழக்கு நுனியாகவும் பித்ரு கார்யங்களில் தெற்கு நுனியாகவும் உபயோகப்படுகிறது.


ஹோமங்களில் பரிஸ்தரணம்ஆயாமிதம்ப்ரணீதா போன்றவைகளிலும்தர்ப்பங்கள் இடம் பெற்றுள்ளன.ச்ராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் 

ஸ்தல சுத்திஆஸனம்கூர்ச்சம் போன்றவைகள் தர்ப்பங்களினால்தான்செய்யப்படுகின்றன.


குறிப்பாக தர்ப்பங்களில் தர்ப்ப கூர்ச்சத்தினால்தான் (அல்லது தர்ப்ப 

ஸ்தம்பம்ப்த்ருக்களை ஆவாஹணம்செய்யச் சொல்லியுள்ளது.


கலச ஸ்தாபனம் போது மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பது இன்றியமையாததுஏனென்றால் தர்ப்பை வழியாக ப்ராண 

சக்தி கும்பத்துக்குள் வருகிறது.


கல்யாணத்தில்கல்யாண பெண்ணிற்கும்சீமந்தத்திற்கும்அதே மாதிரி உபநயனத்தில் வடுவிற்கும் இடுப்பில்தர்ப்பங்களினாலான கயிற்றை 

மந்த்ர பூர்வமாக கட்டும் ப்ரயோகமும் இருந்து வருகின்றது.


உபயோகப்படுத்தும் தர்ப்பங்களின் நுனி உடையாமல் இருக்க வேண்டும்.ப்ரயோகங்களில் நுனி இல்லாததர்ப்பங்கள் ஆஸனத்தைத்  தவிர 

மற்றதுக்கு  உபயோகப் படுவதில்லை.


தர்ப்பத்தினாலான ஜப ஆஸனம் (பாய்மிகவும் விசேஷம்தர்பாஸனத்தில் அமர்ந்து செய்யும் பூஜை மற்றும்ஜெபங்களுக்கு பலமடங்கு சக்தி 

உண்டு.


க்ரஹண காலங்களில் ( சூர்ய மற்றும் சந்திர ) இல்லத்தில் ஏற்கனவே 

பக்குவமாகி இருக்கும் பதார்த்தங்களிலும்குடிநீரிலும் தர்பங்களை

 போட்டுவைத்தால் எந்த வித தோஷமும் அவற்றுக்கு ஏற்படாது.


பிராமணனுக்கு தர்பை புல் ஓர் ஆயுதம்முனிவர்களும்ரிஷிகளும் 

தர்ப்பைப்புல்தண்ணீர்மந்திரசத்திமூன்றையும் இணைத்து 

செயற்கரியா செயல்களை செய்தனர்.


வரம் கொடுத்தனர்சாபம் கொடுத்தனர்அஸ்திரங்களை பிரயோகிதனர்


திருமால் வாமன அவதாரத்தில் தர்ப்பை புல்லோடு தோன்றுவார். மகாபலி அசுர மாமன்னனை காப்பாற்ற சுக்கிர பகவான் கமண்டலத்தில் உள்ள நீரை எடுக்க முடியாதவாறு  துளையில் சென்று வண்டுரூபமாக மாறி அடைத்துக் கொண்டார்... 

இதை கவனித்த பெருமாள் தர்பை புல் கொண்டு அந்த வண்டினை குத்தினார் .இதில் சுக்கிர பகவானின் ஒற்றைக் கண்ணே பறிபோனது என்றால் தர்ப்பை புல்லின் சக்தியை உணர்வீர்கள் ஆக…!! 

என்னை பொருத்தமட்டில் வாமன அவதாரம் ஒரு பிராமண அவதாரமாகவே என்ன முடிகிறது.


பிரபஞ்சத்தில் பிராணசக்தியை கடத்தும் சக்தி தர்ப்பைக்கு உண்டு.

அதனாலேயே சங்கல்பத்தில் "தர்பான்தாரயமான:" என்று விரலில் 

இடுக்கிக் கொண்டு பிராணயாமம் செய்கிறார்கள்.


குசபாணி சதா திஷ்டேத் பிராம்மணோ டம்பவர்ஜித


நித்யம் ஹிந்தி பாபானி தூல ராசிமிவாநல


கையில் தர்ப்பைப் புல்லுடன் உள்ள பிராமணன் அகங்காரம் இல்லாமல்

 இருப்பானாகில்அக்னியைக் கண்டபனி ஒழிவது போல அவன் 

பாவங்களை அழிக்கவல்லான்.


தர்பை ஒரு சிறந்த மின் கடத்தி.!

அது ஆற்றலையும் கடந்த வல்லது.!


தர்ப்பையை உபயோகப்படுத்திய பின்அதை நான்காக பிரித்து வடக்கு

 பக்கமாக போடவேண்டும்பின்புகண்டிப்பாக ஆசமனம் செய்தால்தான்நாம் தர்பையை உபயோகித்து செய்த கர்ம பலன் அளிக்கும்.!

தர்ப்பை புல்இந்த பெயரைக்கேட்டாலேஅநேகம் பேருக்கு இது என்ன புல்என்றே கேட்பர்இன்றையநாகரிக உலகில் தர்ப்பை என்பதுவெகு சிலர் மட்டுமேஅதுவும் சமயச்சடங்குகளில் மட்டுமேபயன்படுத்தும் ஒரு விசயமாக ஆகிவிட்டது.


விஷயம் அப்படியல்லநம் முன்னோர் நமக்கு அளித்த பல நடைமுறைகள் எல்லாம்நம் வாழ்வின் நலனுக்காகஅமைந்தவையேநாம் அவற்றின் 

காரணம் உணராமல்அவற்றை நவீன கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட்டு

 அதன்எளிமையான பயன்பாட்டை புறக்கணிக்கிறோம்

அவமதிக்கிறோம்அப்படி முன்னோர் வகுத்த வாழ்வியல்நெறியில்ஒரு சூட்சுமமாக செயலாற்றுவதுதான்தர்ப்பை புல்.

உலகம் தோன்றியபோதே தோன்றிய தொன்மையான புல்என தர்ப்பை 

புல்லை முன்னோர்போற்றுவர்.சித்தர்கள் முதல்சாமானியர் வரை  

மலைகளுக்கு சென்றேதவம் செய்ய விரும்பினர்ஏன் எனத்தெரியுமா?

கோவில்களில் தரிசனம் செய்யச் செல்லும்போதுவிநாயகர்மூலவர், அம்பாள் என பல சன்னதிகள்இருந்தாலும்நாம் கோவிலின் கொடி மரம் முன் மட்டுமே தரையில் விழுந்து வணங்க வேண்டும் என்று 

அறிவுறுத்தியுள்ளனரேஏன் எனத் தெரியுமா?

தர்ப்பை புல்லில் தாமிர சத்து அதிக அளவில் நிரம்பி இருப்பதால்அது  

சிறந்த ஆற்றலை கடத்தும் சாதனமாகஅறியப்படுகிறதுநவீன கால 

விஞ்ஞான வளர்ச்சிகளில் அகலக்கற்றை அலைவரிசைகளை  

இணைக்கும் தொடர்புகளில் நுண்ணிய ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களைவிடதாமிர கேபிள்களேசிறந்த இணையவேகத்திற்கு துணைபுரிகின்றன என்பதிலிருந்துதாமிரத்தின் ஆற்றலை நாம் அறிய முடியும்.

இதைவிடஅனுபவரீதியில் தர்ப்பை புல்லின் மகத்துவம் அறிய வேண்டுமென்றால்கோவில்களில் நாம் தரிசனம்செய்துவிட்டுகொடிமரம்  

அருகே விழுந்து வணங்குகிறோம் அல்லவா?

அங்கு கொடிமரங்களில் கட்டப்பட்டிருக்கும் தர்ப்பை புல் மேலும் கொடிமரத்தின் அருகே வளர்ந்திருக்கும்தர்ப்பை புற்கள்அண்டத்தின் காந்த சக்தியை அவ்விடத்தில் ஒருமித்து வெளியிட்டுதரையில் 

விழுந்துவணங்குபவர்களின் உடல் வழியேஅந்த ஆற்றலை  

அவர்களுக்குள் செலுத்துவதனாலேஉடல் மற்றும் மனதில் இனம்புரியாத நிம்மதி உணர்வை அடைவதை அவர்கள் உணரமுடியும்.

இது போலவேதர்ப்பை புல்லில் ஊறிய நீரும்தூய்மையையும் உடலுக்கு நலத்தையும் தருவதாகும்கோவில்கும்பாபிஷேகங்களில்கோபுர  

கலசங்களுக்கு புனித நீர் ஊற்றியபின்அந்த நீரைகூடியுள்ள மக்களின் மீதுதெளிப்பதன் விளக்கமும் இதுதான்


தர்ப்பை புல்லின் பலன்கள்


நாணல் மற்றும் குசப்புல் என்று அழைக்கப்படும் தர்ப்பை புல்வடமொழியில் அம்ருத வீரியம் எனப்படுகிறதுதர்ப்பை புல் இட்ட நீரை வீடுகளில் தெளித்துவரஅங்கு எந்த தொற்று வியாதியும் அணுகாதுதர்ப்பை 

புல்வளரும் இடங்களில் உள்ள காற்றில் நடந்து செல்லும்போதுஅவை நம்மீது பட்டுஉடல் நலம் சீராகும்தேவையற்ற தீமை பயக்கும் அண்டவெளிஅலைகளைதன் இருப்பிடத்திலிருந்து நீக்கும் ஆற்றல் மிக்கதுதர்ப்பை புல்காய்ந்தாலும்அதன் தன்மை மாறாதுஉயிர்ப்புடன் இருக்கும் 

என்பதேதர்ப்பை புல்லின்சிறப்பாகும்.

இந்து சமய சடங்குகளில்பிறப்பிலிருந்து இறப்பு வரை முக்கிய இடம் 

தர்ப்பை புல்லுக்கு உண்டுதர்ப்பை புல்மனிதனுக்கும் இறைவனுக்கும் தொடர்பு தரும் சாதனமாகவேதங்களின் மூலம் அறியப்படுகிறது. 

மனிதர்க்குசுபத்தைபுனிதத்தை தரவல்லதுவலது கை மோதிர விரல் 

மூளையுடன் தொடர்புடையது.

இந்த விரலில் தர்ப்பை புல்லைபவித்ரம் எனும் மோதிரம் போல அணிந்துகொண்டுஹோம ஜப வேள்விகளில்சடங்குகளில் ஈடுபடஅண்டவெளியில் உள்ள ஆற்றலை மூளைக்கு கொண்டு சேர்க்கும் வல்லமை மிக்கதுஇதை அணிவதன் மூலம் அனைத்துவகை பாவங்களும் விலகுவதாக, 

வேதங்கள் கூறுகின்றன.

மேலும்பவித்ரம் எனும் தர்ப்பை புல்லைகை விரலில் அணியாமல் 

மேற்கொள்ளும் எந்த ஆன்மீக சடங்குகளும்மின்சாரம் இல்லாத கணினி போலஅவற்றால் எந்த பலன்களும் இல்லை என்றுஇந்து மத 

சாத்திரங்கள்கூறுகின்றன.


நீர்த் தொட்டிகளில் தர்ப்பை


தர்ப்பை புல்லை வீடுகளில் பயன்படுத்தும் நீர்த்தொட்டிகளில் இட்டுவைக்கமழைக்கால பாதிப்புகள் நம்மைஅணுகாதுநலமுடன் இருக்கலாம்உணவு பாத்திரங்களிலும் இட்டு வைக்கலாம்வீடுகளில்உயரமான 

இடங்களில்வாசல்களில் கொத்தாக தர்ப்பை புல்லை கட்டிவைக்கஎந்தவித தொற்று பாதிப்புகளும்அணுகாமல் இருக்கும்வியாதி உள்ளவர்கள் தங்குமிடங்களில் தர்ப்பை புல்லை வைக்கவியாதிகள் பரவாதுநலம் 

பெறுவர்தர்ப்பை புல்லின் சாம்பலில் ஐம்பொன் சிலைகளை துடைத்துபளபளப்பாக்கபயன்படுத்துகின்றனர்இதனால்சிலைகளில் உள்ள  

உலோகங்கள் தன்மை இழக்காமல்நீண்ட நாட்கள் ஒலிஅலைகளை 

கடத்தும் தன்மையும்அவற்றின் மெருகும் குறையாமல் இருக்கும்.


தர்பாசனம்


தர்பாசனம் இது என்ன புதுவகை ஆசனம் என்று யோசிக்கிறீர்களா? 

 தியானம் செய்ய வெறும் தரையில்அமரக்கூடாதுஅப்படி அமர்ந்தால், 

 அவை நம் தியானத்தில் சேமிக்கும் ஆற்றலைஉடலிலிருந்து தரைக்கு  

கடத்திவிடும்அந்த வகை தியானத்தில் யாதொரு பலனும் இல்லை,எனவேதான்பண்டைக்காலத்தில்தவம்செய்ய பெரியோர்கள்மான் தோல்புலித்தோல் மற்றும் தர்ப்பை புல்லை கொண்டு செய்த தர்பாசனம் 

பயன்படுத்தினர்விலங்குகளின் தோல்கள் சுற்றுச்சூழல் பாதிப்புகளை  

ஏற்படுத்துமாதலால்தர்பாசனம் எனும்தர்ப்பை புல்லைகொண்டு செய்த பாயையேதியானம் செய்ய அமரும் பலகையாகபயன்படுத்தினர் 

தர்ப்பைபுல்லில் ஏராளம் உள்ள தாமிரத்தாதுவின் வளத்தால் 

தியானங்கள் எளிதில் கைகூடிஎண்ணிய எண்ணங்களைஅபூர்வ  

திறமைகளை வளர்த்துக் கொள்ளதர்ப்பையை ஒரு அதிமுக்கிய கருவியாகப் பயன்படுத்திவளம்பெற்றனர்.


தர்ப்பை பாய்.


தர்ப்பை பாய்தர்ப்பை புல்லில் உள்ள தாமிர சக்தியின் ஆற்றலை உடலில் பரவச் செய்யஇந்த தர்ப்பை பாயைநாமும் வாங்கிதியானம் செய்யலாம்தியானம் செய்யத் தெரியாவிட்டால்அமைதியாக அமர்ந்து எதிர்காலசிந்தனைகளைஇலட்சியங்களை மனதில் எண்ண அலைகளாக  

ஓடவிட்டுஅதே சிந்தனையில் வேறு எந்தஎண்ணங்களுக்கும்  

இடந்தராமல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தர்ப்பை பாயில்  

அமர்ந்து சிந்தித்து வரஎண்ணிய எண்ணமெல்லாம்நலமுடன் விரைவில் நடந்தேறவாய்ப்புகள் உண்டாகும்மேலும்தர்ப்பை பாயில்படுத்து  

உறங்கிவரஉடல் சூடு குறைந்துமன உளைச்சல் போன்ற மன  

வியாதிகள் விலகிநல்ல நிம்மதியான உறக்கம் உண்டாகும்.


நீங்கள் விரும்பினால் கீழ்க்கண்ட வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து கொள்ளலாம் வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்கள் உபாசன முறைகள் வேதங்கள் குறித்து பதிவுகள் இடப்படும்


https://chat.whatsapp.com/JYeeWntfDtsDh7SU4V5I94


கீழுள்ள ஜோதிட நிலையத்தின் Website ல் சென்று ராசி பலன் களையும் அறிந்து கொள்ளுங்கள் https://www.dakshaastrology.com


நன்றி 

வாழ்க வளமுடன்

தக்‌ஷா ஜோதிட நிலையம் ஆராய்ச்சி நிலையம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...