மஹாபாரத கதாபாத்திரங்களின் ஜென்ம நட்சத்திரங்கள்:
பீஷ்மர் - உத்திராடம்
ஶீகிருஷ்ணர் - ரோகிணி
துரியோதனன் - பரணி
யுதிஷ்டிரன் - கேட்டை
பீமன் - மகம்
அர்ஜுனன் - உத்திரம்
நகுல, சகா தேவர்கள் - அஸ்வினி
கர்ணன் - பூரட்டாதி
பரசுராமர் - ரோகிணி
பலராமர் - ஆயில்யம்
திரௌபதி - சுவாதி
அபிமன்யு - ரேவதி
இராமயண கதாபாத்திரங்களின் ஜென்ம நட்சத்திரங்கள்:
தசரதன் - அஸ்தம்
ராமன் - புனர்பூசம்
பரதன் - பூசம்
லட்சுமணன், சத்ருகனன் - ஆயில்யம்
ஜனகன் - ஆயில்யம்
சீதை - மகம்
ஜடாயு - உத்திரட்டாதி
வால்மீகி - அனுசம்
மூலம் - ராவணன்
மூலம் - ஆஞ்சனேயர்
விபீஷ்ணன் - திருவோணம்
உத்திராடம் - இந்திரஜித்
சரி இந்த இதிகாச நட்சத்திரங்களை இன்றைய காலத்தில் தாரைகளாக உபயோகப்படுத்துவது ஒரு உதாரணம் கீழே
கர்ணனின் நாகாஸ்திர ரகசியம் ( தாரை விளக்கம்)
நாகம் என்பது ஆயில்ய நட்சத்திரத்தின் வடிவமாகும். அர்ஜுனன் நட்சத்திரம் உத்திரபல்குனி. அதனால் அர்ஜுனனுக்கு பல்குனன் என்ற பெயரும் இருந்தது. அர்ஜுனன் இந்திரப்பிரஸ்தம் என்ற நகர் அமைக்க, காண்டீபவனம் என்ற வனத்தை எரித்தான், அங்கே வசித்து வந்த தட்சகன் என்ற நாகத்தின் குடும்பம் அதில் பாதிக்கப்பட்டது. அதில் தட்சகனின் மகன் அஸ்வசேனன் மட்டுமே உயிர்பிழைத்தான். தனது குடும்பத்தினரை அழித்த அர்ஜுனனை பழிவாங்க நேரம் பார்த்து காத்திருந்தான். அர்ஜுனனின் முதல் எதிரியாக கர்ணன் திகழ்வதை அறிந்த அஸ்வசேனன். அர்ஜுனனை கொல்வதற்கு, கர்ணனிடம் நாகாஸ்திரமாக சென்று சேர்ந்தான். குருஷேத்ரப்போரின் போது கர்ணன் அபிமன்யுவின் மரணத்திற்கு காரணமானதால், கர்ணனின் மகனை கொன்றான் அர்ஜுனன். அப்போது அர்ஜுனனை கொல்வதாக சூளுரைத்த கர்ணன் நாகாஸ்திரத்தை பயன்படுத்த எண்ணினான். கர்ணன் தன் தாய் குந்திக்கு செய்து கொடுத்த சாத்தியத்தின்படி, ஒருமுறையே நாகாஸ்திரம் பயன்படுத்த இயலும் என்று கிருஷ்ணன் மட்டுமே அறிந்திருந்தான். அந்த ஒருமுறை மட்டும் அர்ஜுனனை காப்பதற்கு கிருஷ்ணன் ஆயத்தமானார். அர்ஜுனின் உத்திர நட்சத்திரத்திற்கு, நாக வடிவம் கொண்ட ஆயில்யம் வதை தாரை ஆகும். ஆதாவது வதைக்கும் தாரையாகும். ஆகையால் அஸ்வசேனன் என்ற நாகம் அர்ஜுனனை வதைக்க கர்ணன் கையில் அஸ்திரமானது. கிருஷ்ணனின் நட்சத்திரம் ரோஹிணி. ரோஹிணிக்கு ஆயில்யம் என்பது சாதக தாரை ஆகும். ஏற்கனவே கிருஷ்ணர் காளிங்கன் என்ற பாம்பை தன் கால்களால் வதைத்து நிறுத்தியதை நினைவு கூறவேண்டும். குருஷேத்ர போரில் அர்ஜுனனை நோக்கி நாகாஸ்திரம் ஏவினான் கர்ணன், நாகாஸ்திரம் கிருஷ்ணனின் சாதக தாரை வடிவம் என்பதால், அந்த நாகாஸ்திரத்தில் இருந்து அர்ஜுனனை காப்பாற்றினார். அர்ஜுனனின் சம்பத்து தாரை தெய்வம் கிருஷ்ணர் ஆகும். அர்ஜுனன் தனது சம்பத்து நண்பரான கிருஷ்ணரின் ஆலோசனைகளை கேட்டதால், நாகாஸ்திரத்தில் இருந்து தப்பினான். ஆகையால் ஒருவர் தனது சம்பத்து நண்பர்களை உடன் வைத்திருக்கும் போது
எதிரிகளிடம் இருந்து காக்கப்படுவார்கள்.
தாரைகளின் பெயர்கள்
1) ஜென்ம தாரை ,
2) சம்பத்து தாரை
3) விபத்து தாரை
4) சேம தாரை
5) பிரத்தயக்கு தாரை
6)சாதக தாரை
7)வதைத்தாரை
8)மித்திர தாரை
9) பர மித்திர தாரை
மேற்கண்டவற்றில் 3,5, 7 தாரைகள் அசுப தாரைகள் ஆகும்.இது போன்ற நட்சத்திர தாரைகளில் சுப காரியங்கள் மற்றும் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.
மேலும் இவை மட்டுமல்லாமல் தனது சம்பத்து தாரை நட்சத்திரத்திற்குரிய ஆலயங்களுக்கு சென்று வந்தாலும் வெற்றிகளை எளிதாக பெறலாம்.
நீங்கள் அசுபதி நட்சத்திரமாக இருந்தால் உங்களது சம்பத்து தாரை பரணி, பூரம், பூராடம் ஆகும். ஆகும்.
பரணி நட்சத்திரம் என்றால் சம்பத்து தாரை
கார்த்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் ஆகும்.
கார்த்திகை நட்சத்திரம் எனில் சம்பத்து தாரை ரோகிணி, அஸ்தம்-மற்றும் திருவோணம்
ரோகிணி நட்சத்திரம் எனில் சம்பத்து தாரை மிருகசீரிடம், சித்திரை மற்றும் அவிட்டம் ஆகும்.
மிருகசீரிடம் நட்சத்திரம் எனில் சம்பத்து தாரை திருவாதிரை,
சுவாதி மற்றும் சதயம் ஆகும்.
திருவாதிரை நட்சத்திரம் எனில் சம்பத்து தாரை புனர்பூசம், பூசம் மற்றும் ஆயில்யம் ஆகும்.
புணர்பூசம் நட்சத்திரம் எனில் சம்பத்து தாரை பூசம், அனுஷம் மற்றும் உத்திரட்டாதி ஆகும்.
பூசம் நட்சத்திரம் எனில்
சம்பத்து தாரை ஆயில்யம் கேட்டை மற்றும் ரேவதி ஆகும்.
ஆயில்யம் எனில் சம்பத்து தாரை மகம், மூலம் மற்றும் அசுபதி
மகம் எனில் சம்பத்து தாரை பூரம் , பூராடம் மற்றும் பரணி ஆகும்.
பூரம் எனில் சம்பத்து தாரை உத்திரம், கார்த்திகை மற்றும் உத்திராடம் ஆகும்.
உத்திரம்-எனில் சம்பத்து தாரை அஸ்தம், ரோகிணி மற்றும் திருவோணம் ஆகும்.
அஸ்தம் எனில் சம்பத்து தாரை சித்திரை, அவிட்டம் மற்றும் மிருகசீரிடம் ஆகும்.
சித்திரை எனில் சம்பத்து தாரை சுவாதி, சதயம் மற்றும் திருவாதிரை ஆகும்.
சுவாதி எனில் சம்பத்து தாரை விசாகம், பூரட்டாதி மற்றும் புனர்பூசம் ஆகும்.
விசாகம் எனில் சம்பத்து தாரை அனுசம், உத்திரட்டாதி மற்றும் பூசம் ஆகும்.
அனுஷம் எனில் சம்பத்து தாரை கேட்டை, ரேவதி மற்றும் ஆயில்யம் ஆகும்.
கேட்டை எனில் சம்பத்து தாரை மூலம்,அசுபதி மற்றும் மகம் ஆகும்.
மூலம் எனில் சம்பத்து தாரை பூராடம்,பரணி மற்றும் பூரம் ஆகும்.
பூராடம் எனில் சம்பத்து தாரை உத்திராடம், உத்திரம்-மற்றும் கார்த்திகை ஆகும்.
உத்திராடம் எனில் சம்பத்து தாரை திருவோணம், ரோகிணி மற்றும் அஸ்தம் ஆகும்.
திருவோணம் எனில் சம்பத்து தாரை அவிட்டம், மிருகசீரிடம் மற்றும் சித்திரை ஆகும்.
அவிட்டம் எனில் சம்பத்து தாரை சதயம், திருவாதிரை மற்றும் சுவாதி ஆகும்.
சதயம் எனில் சம்பத்து தாரை பூரட்டாதி ,புணர்பூசம் மற்றும் விசாகம் ஆகும்.
பூரட்டாதி எனில் சம்பத்து தாரை உத்திரட்டாதி-, அனுஷம் மற்றும் பூசம் ஆகும்.
உத்திரட்டாதி எனில் சம்பத்து தாரை ரேவதி, ஆயில்யம் மற்றும் கேட்டை ஆகும்.
ரேவதி எனில் சம்பத்து தாரை அசுபதி,மகம் மற்றும் மூலம் ஆகும்.
சந்திரன் ஒரு ராசியில் இரண்டு கால் நாள் வீதம் வாசம் செய்வார்.ஒரு நாளைக்கு இருந்து நான்கு மணி நேரம் வீதம் மொத்தமாக மணி அடிப்படையில் மொத்தமாக 54 மணி நேரம் வாசம் செய்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக