சனி, 16 டிசம்பர், 2023

இரண்டாம் பாவம்

இரண்டாம் பாவம்:

இரண்டாம் பாவம் தானம் குடும்பம் வாக்கு

பேச்சு. பல். குடும்பம் இந்த நிறைய காரகத்துவங்கள் இருக்குது. இந்த இரண்டாம் இடத்தில் என்ன சிறப்பு அம்சம் என்று பார்க்கலாம். இதில் பணம் வரும் வழியை சொல்கிறது 2-ஆம் இடம் தன ஸ்தானம். இரண்டாம் அதிபதி எந்த பாவத்தில் அமர்கிறார் என்ன சாரம் வாங்கியுள்ளார் இவர்களின் பார்வை தொடர்பு மூலம் பணம் வரும் வழியை சொல்லலாம். இந்த இரண்டாம் இடம் வலதுகண். குடும்ப உறுப்பினர்கள்.

பற்கள். தானியங்கள். பழக்கவழக்கங்கள். அடிப்படைக்கல்வி.

பணம் என்றால் இரண்டாம் பாவம் இதில் இரண்டாம் அதிபதி சுக்கிரன், குரு பணம் வரும் அமைப்புக்கு இதைத்தான் எடுக்க வேண்டும். சுக்கிரன் சிறிய அளவில் பணம். குரு பெரிய அளவில் பணம் வரவு. இரண்டாம் பாவத்தில் சுபர்கள் இருந்தால் சமுதாயத்தில் ஒரு மதிப்பு இருக்கும். ஜாதகர் மனிதநேயம் மிக்கவர். இரண்டாம் பாவத்தில் ஏதேனும் ஒரு கிரகம் இருப்பது நல்லது, காலியாக இருக்க கூடாது.

சனிபகவான் இரண்டாம் இடத்தில் இருந்தாலும், பார்த்தாலும சனிபகவானுக்கு அடுத்து சுக்கிரன் இருந்தாலும், சனிபகவானுக்கு அடுத்து குரு இருந்தாலும், இரண்டாம் இடத்தை தொடர்பு கொண்டாலோ, தொழில்ரீதியாக உயர்வு ஏற்படும் பொருளாதார இழப்பு ஜாதகருக்கு இருக்காது.

சனி பகவான் சுக்கிரன் சாரத்தில் அல்லது குரு சாரத்தில் இருப்பது பொருளாதாரத்திற்கு நல்லது.

குருவுக்கு அடுத்து சனி பகவானும், சுக்கிரனுக்கு அடுத்து சனி பகவான் ,இந்த வரிசை கிரகம் ஜாதகருக்கு பணம் சேமிப்பது ரொம்ப கஷ்டம்.

இரண்டாம் அதிபதி எந்த பாவத்தில் உள்ளாரோ அல்லது எந்த பாவத்தை தொடுகிறதோ அந்த பாவ ஆதிபத்தியம் வருமானம் ஜாதகருக்கு வரும்.

இரண்டாம் அதிபதி, குரு, சுக்கிரன் இந்த மூவரும் யாராவது ஒருவர் ராசி கட்டத்தில் லக்னத்திற்கு நான்கு கட்டத்திற்குள் இருக்க வேண்டும்.

நான்கு கட்டத்திற்குள் செல்வ கிரகங்கள் இருப்பது அது பால கிரகங்களாக இருக்கும், இது கொஞ்சமாக பணத்தை கொடுக்கும் ஆனால் சேமிப்பை கொடுக்காது.

எந்த கேள்வி கேட்டாலும் இரண்டாம் பாவத்தை கணித்து தான் சொல்ல வேண்டும். இரண்டாம் அதிபதி வருமானம் வரும் வழியை சொல்லும். இரண்டில் உள்ள கிரகம் தன் ஆதிபத்தியம் மூலம் வரும் வருமானத்தை சொல்லும். ஜாதகரின் பணத்தை குரு பார்க்கின்ற உறவுகள் பணத்தைத் தின்பார்கள். குரு எட்டாம் இடத்தைப் பார்த்தால் வழக்கு நோய் இவற்றிற்கு பணம் போகும்.குரு லக்னம், லக்னாதிபதி பார்த்தால் ஜாதகரே வரும் வருமானத்தை அனுபவிப்பார். குரு, சுக்கிரன் தொடர்பு லக்னத்திற்கு இருக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் சிறந்த ஜாதகம். அதேபோல் ஐந்து ஒன்பதாம் பாவம் தொடர்பு லக்னத்திற்கு இருக்க வேண்டும் அப்படி இருந்தால் இவர் சம்பாதித்த பணத்தை இவரே அனுபவிப்பார் இரண்டாம் பாவத்தில் சுப கிரகம் இருந்தால் சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். மனித நேயம் இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்க இரண்டாம் பாவத்தில் ஒரு கிரகமாவது இருக்க வேண்டும். சனிபகவான் இரண்டில் இருந்தாலும் இரண்டாம் அதிபதியை பார்த்தாலும் என்றாவாது ஒரு நாள் வளர்ச்சி இருக்கும். மற்றும் சனிக்கு அடுத்து சுக்கிரன் இருந்தால் தொழில் முன்னேற்றம் இருக்கும் மற்றும் சனிபகவான் சுக்கிரன் அல்லது குரு சாரத்தில் இருந்தாலும் பொருளாதாரம் தொழில் சிறப்பாக இருக்கும்.

இரண்டாம் இடத்தில் சூரியன் :

இரண்டாம் இடத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன் சூடான காரமான உணவு சாப்பிடக் கூடிய அமைப்பு இருக்கும் அரசியல் பேசக் கூடியதாக இருக்கும். அரசியல்வாதிகளில் பின்னால் இருக்கக்கூடிய அமைப்பு இரண்டு வயதில் குடும்பம் வளர்ச்சி. பிரகாசமான முகம் ,பெரிய கண் அல்லது முன் பல் பெரியது. அரச வருமானம் உண்டு. தந்தையின் வருமானம், தந்தையின் சொத்து கிடைக்கும். தந்தையின் வாரிசு வேலை கிடைக்கும். கண் நோய் உண்டு. அதிகாரமான பேச்சு, ஆளுமைத்தன்மை, வாக்கு தவறாமை, தற்பெருமை, நிர்வாகத் திறமை உண்டு. மருத்துவ செலவினங்கள் உண்டு. மருத்துவத்தின் மூலம் வருமானம் உண்டு. ஆவணத்தின் மூலம் வருமானம் உண்டு. குடும்பத்தில் சிறு பிரிவினையை உண்டு. குலத்தொழில் உண்டு. இயற்கை மூலம் வருமானம். காத்தாடி, சோலார். தங்கப் பல் கட்டுவது. வீட்டின் அருகே கோவில் இருக்கும். மருத்துவர் அருகில் இருப்பார் அல்லது மருத்துவமனை இருக்கும். பெரிய மரம் இருக்கும், ஆலமரம், அரசமரம் பழமையான மரம் இருக்கும். ஜாதகர் சிவபக்தர். இவர்கள் பேச்சு அடேங்கப்பா அப்பாடி இந்த மாதிரி பேசுவார்கள். மலை கோவில்களை விரும்புவார்கள். மார்பக, இருதய பயம் இருக்கும். தாய் வழியில் புத்திரதோஷம் உள்ளவர்கள் இருப்பார்கள்] நாலாம் இடம் கெட்டுவிட்டால் தாய் பிரிந்த வாழ்க்கை, தாயைப் பிரிந்த வாழ்க்கை. மாற்று தாய் இந்த மாதிரி இருக்கலாம். அரசு வழக்கு அரசு தண்டத்தொகை உண்டு. பழைய மாத்திரைகள் மருந்துகள் வீட்டில் இருக்கும்

இரண்டாம் இடத்தில் சந்திரன்:

இரண்டாம் இடத்தில் சந்திரன் இருந்தால் பணம் சார்ந்த வருமானம். ட்ரான்ஸ்போர்ட். இரவு வேலை. வெளிநாட்டு வருமானம். செய்தி வாசிப்பாளர். மார்கட்டிங் தொழில். தினக்கூலி. உணவுத்தொழில். உணவு சம்பந்தமான தொழில். கடன் உண்டு, வட்டி கட்ட வைக்கும். இரண்டு வயதில் ஒரு இடமாற்றம் உண்டு. ஒரு தீய பழக்கம் உண்டு. இரண்டாம் இடம் கெட்டுப்போனால் தீய பழக்கம் வரும். அரசு வருமானம் உண்டு. அன்றாடம் அழியக்கூடிய பொருட்கள் பால், தயிர், மோர், நீர்.இரண்டில் சந்திரன் ஜாதகருக்கு சிறுவயதில் தாமதம் பேச்சிருக்கும், மூன்றாம் இடத்தில் கேது இருந்தாலும் தாமத பேச்சு. முதல் மனைவி இறப்பு, தற்கொலை. ஏழாம் இடம் பாதகமாக இருக்கும் போது இவருடைய மூன்றாவது குழந்தைக்கு புத்திரம் இருக்காது. சூரியன் சனி ராகு தொடர்பு வரும் போது தந்தை முகம் பார்க்காத பிள்ளை. இரண்டரை வயதில் தந்தையை கொடுப்பார், தந்தைக்கு மனநோய் பாதிப்பு இருக்கும், இதில் சுபகிரகம் தொடர்பு இருந்தால் சில காலம் கழித்து தந்தை இறந்து விடுவார் இரண்டில் சந்திரன் அரசாங்க வீடு. நாலுக்கு உடையவன் ஒன்பதில் அரசு வீடு. கண் பாதித்து கண்ணாடி அணிவார். கொழுந்தியாவை இரண்டாவது திருமணம் செய்வார்.

இரண்டில் செவ்வாய்:

இரண்டில் செவ்வாய் இரண்டு வயதில் குடும்பத்தில் ஒரு சொத்து உண்டு அல்லது வீடு கட்டுவார். இவர் பிறந்த உடன் வீடு கட்டும் யோகம் வரும். 14 வயதில் சொத்து வரும். விடாமுயற்சி இருக்கும். வாக்குவாதம் இருக்கும். வெட்டிப்பேச்சு இருக்கும். ஒருசிலர் இரண்டாவது குழந்தையாக இருப்பார்கள். இரண்டு வயதில் குடும்பத்தில் ஒரு விபத்து உண்டு. மருத்துவ செலவு இருக்கும். பற்களில் பிரச்சனை வரும். முகத்தில் தழும்பு இருக்கும், வெட்டுக்காயம் இருக்கும். இரண்டு வயது வித்தியாசத்தில் சகோதரன் உண்டு. சகோதரன் குடும்பத்தோடு இருப்பார், அருகில் இருப்பார் மைத்துனர் உண்டு. ட்ரான்ஸ்பரம், இபி அருகில் இருக்கும். ஆசிரியர், ஜோதிடர் இருப்பார்கள். பல குரலில் பேசுவார்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர். அரசு வருமானம் உண்டு. தச்சுவேலை, கார்பெண்டர், பெயிண்டர், கெமிக்கல் போன்ற தொழில்கள் அமையலாம். பெரியம்மாவுக்கு சொத்து உண்டு. இரண்டு வயதில் தாய்மாமனுக்கு சொத்து உண்டு. திருமணம் உத்தியோகம் உண்டு. தந்தைக்கு ஒரு கண்டம் உண்டு. ஒன்பதாம் இடத்தைப் பார்த்து சொல்ல வேண்டும். பூர்வீக சொத்து உண்டு தாத்தாவுக்கு சொத்து உண்டு. குழந்தைகளுக்கு மருத்துவச் செலவு உண்டு அல்லது பிரிந்து இருப்பார்கள் அல்லது தாய் தந்தை பிரிந்திருப்பார்கள். காம உணர்வு அதிகம். கலைத்துறை ஈடுபாடு இருக்கும். மர்ம உறுப்புகளில் நோய். குழந்தை பிறந்தவுடன் சொத்து உண்டு, குழந்தைக்கும் சொத்து உண்டு. வாகனத்தின் மூலம் வருமானம் அதிலும் ஆட்டோ மூலம் வருமானம் செவ்வாய் சனி சேர்க்கை பார்வை இருந்தால் டென்ஷன். செவ்வாய் புதன் சாரம் வாங்கி சனியை தொட்டாலும் செவ்வாய்க் கிழமை, புதன் கிழமை, சனிக்கிழமை, செவ்வாய் நட்சத்திரம், சனி நட்சத்திரம் வரும் போது பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். இதற்கு பரிகாரம் இந்த கிழமைகளில் சலூன் கடையில் பேப்பர் படித்து விட்டு வர வேண்டும் செவ்வாய் சனி முடி வெட்டு புதன் பேப்பர்

செவ்வாய் சனி இதற்கு பரிகாரம் ஒரு கத்திரி எடுத்து ஏதோ ஒன்றை வெட்டி விட்டு வெளியே செல்ல வேண்டும். இரண்டில் செவ்வாய் புதன் டீக்கடையில் பேப்பர் படிக்க வேண்டும்

இரண்டாம் இடத்தில் புதன் :

இரண்டாம் இடத்தில் புதன் இருந்தாலும் பார்த்தாலும் இரண்டு வயதில் பத்திரப்பதிவு அல்லது பாகப்பிரிவினை. சிறுவயதில் ஸ்கின் அல்லது நரம்பு நோய். இரு பொருள் பட பேசுதல், இரட்டைப் பேச்சு, காதல் காமம் கலந்த பேச்சு, நகைச்சுவை பேச்சு. மாமன் அருகில் இருப்பார், வசதியானவர். மாமன் மகனுக்கு கண் நோய் உண்டு பொருளாதாரம் உண்டு. ஜாதகருக்கு 2 வருமானம் இருக்கும். ஜாதகர் முதலில் சிரிப்பு பின்பு பேச்சு நுணுக்கமான பேச்சு, சமாதான பேச்சு, அனைவரும் புதனாக வாழ்ந்தால் நல்லது. கூட்டுறவு ,அறிவாளி, ஜோதிடர், ஆசிரியர். இரண்டு தொழில் இரண்டு வருமானம். புத்தகத்தில் பணம் வைப்பார். பேஸ்புக்கில் அதிகம் பயன்படுத்துவார். ஜெராக்ஸ் கடை, வக்கீல், வட்டித்தொழிலில், பிரின்டிங் பிரஸ் சீட்டு, சிட்பண்ட்ஸ், கம்யூனிகேஷன், தொலைத்தொடர்பு இந்த இந்த மாதிரியான தொழில்கள். இரண்டு குடும்பம். பள்ளிக்கூடம் அல்லது பூங்கா, Library வீட்டின் அருகில் இருக்கும். பாட்டு பாடுவார். அரிப்பு உண்டு. கண் நோய் உண்டு வழக்குக்காக பணம் விரையம் செய்வார். நல்ல பேச்சாளர். கூட்டுத் தொழில் செய்வார். நண்பர்கள் பலம் உண்டு.

இரண்டாமிடத்தில் குரு:

இரண்டாமிடத்தில் குரு இருந்தாலும் பார்த்தாலும் இரண்டு வயதில் குடும்பம் வளர்ச்சி. இரண்டு வயதில் குடும்பத்தில் அல்லது உறவில் ஒரு குழந்தை பிறக்கும். அரசு வருமானம் உண்டு. சிறு வயதிலேயே வருமானம் உண்டு. ஆசிரியர், ஜோதிடர், சட்டம், வங்கி, குழந்தைகளால் வருமானம். குழந்தை பிறந்தவுடன் வருமானம். அழகான முகம். அஞ்சு 9-ல் குரு இருந்தால் அவர்கள் வீட்டில் சுந்தரகாண்டம் புத்தகம் இருக்கும், இருப்பது நல்லது. அஞ்சு ஒன்பது ஆன்மீகம். குரு சுந்தரம், திருவாசகம். மூன்றாம் இடத்தில் புதன், சுக்கிரன், குரு ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் திருக்குறள் புத்தகம் வீட்டில் இருக்கும், இல்லையென்றால் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். மூணு பத்து சம்பந்தம் இருந்தால் ஆபீஸில் திருக்குறள் புத்தகம் வைக்கலாம். நாலு பத்து சம்பந்தம் ராகு சம்பந்தம் இருந்தால் புலிப்பாணி புத்தகம் வைக்கலாம். இரண்டில் புதன் மந்திரம் ஜெபம், உபதேசம். அந்தனர் அருகில் இருப்பார் இவர்கள் பேச்சை எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பேசும் போது குட்டிக் கதைகளை சொல்லி பேசுவார்கள். கண் நோய் உண்டு. குடும்பத்தைப் பிரிந்தவர்கள் உண்டு. கேந்திரம் பாதகம் பெற்ற குருவாக இருந்தால் பாதிப்பு. இனிப்பு விரும்பி சாப்பிடுவார்கள். மரம் அருகில் இருக்கும். வாக்கு பலிதம் உண்டு. உயில் சொத்து உண்டு, பினாமியாக இருப்பார். எல்ஐசி வருமானம் இருக்கும். அன்னதானம் ட்ரஸ்ட் ஈடுபாடு இருக்கும். தொழில் வழக்கு, தடை இருக்கும். சித்தி மாமியார் வசதி இருக்கும். வழக்குகளுக்காக பணம் விரையம் செய்வார். தொழிலில் அவச்சொல். பணம்கையாடல்இருக்கும். பேச்சால்கெடுவது, பணமோசடிவீண்பழிவரும்.

இரண்டில் சுக்கிரன் :

இரண்டில் சுக்கிரன் இருந்தாலும் பார்த்தாலும் இவர்கள் பேச்சு ஆடம்பரமாக இருக்கும் கலை ரசனையுடன் பேசுவார்கள், இனிக்க இனிக்க பேசுவார்கள் ,இசை ஆர்வம் அதிகமாக இருக்கும். பாடல் பாடக்கூடிய நபராக இருப்பார்கள்.

இரண்டு வயதில் ஒரு சகோதரி உண்டு. குடும்பத்தில் ஒரு சுப நிகழ்ச்சியும் உண்டு. வாகனயோகம் இருக்கும். உழைக்காத வருமானம். சாஸ்திர ஈடுபாடு இருக்கும். அழகான முகம், அழகான பற்கள். ஆபரணம் வெள்ளி இதன் மூலம் வருமானம். கலைதுறை மூலம் வருமானம். பட்டு, ஜவுளி, பழம், காய்கறிகள் மூலம் வருமானம். பொருளாதார தட்டுப்பாடு இல்லை. கண் நோய் உண்டு. அத்தை அருகில் இருப்பார். பெரியப்பா வசதியானவர். வயிற்றுப் பிரச்சனை இருக்கும். கவர்ச்சியான பேச்சு, ஆன்மீக பேச்சு. உயர்ரக மது பானம் விரும்புதல். வாசனை திரவியம் விரும்புதல். மறைமுகத் தொடர்பு திருமணத்திற்குப் பின்பு. வருமானம். ஒரு சிலருக்கு காதல் திருமணம். மனைவியால் வருமானம். வரனுக்கு உறவில் திருமணம்.

இரண்டில் சனி :

இரண்டில் சனி இருந்தாலும் பார்த்தாலும் தாமதமாக பேசுவார்கள். வில்லத்தனமாக பேசுவார்கள். நேர்மையும் இருக்கும் சனி பலம் பெற்றால். இரண்டு வயதில் குடும்பத்தில் ஒரு கர்மா நடந்திருக்கும். கண் பார்வை குறைபாடு, பார்வை மந்தப்படுத்தும். பொருளாதாரம் வளர்ச்சி. லக்னத்திற்கு குரு சம்பந்தம் பட்டாலும அல்லது சுக்கிரன் சம்பந்தம் பட்டாலும் லக்னாதிபதியை குரு அல்லது சுக்கிரன் பார்த்தாலும் கட்டாயம் ஒரு நாள் பெரிய அளவில் வருவார்கள். இரண்டில் சனி முதிர்ந்த தோற்றம். பற்களில் பிரச்சனை. சிறு வயதில் நரை. பெரியம்மாவுக்கு ஆயுளோடு தாமதத்திருமணம். விருப்ப திருமணம்.திடீர் கல்யாணம். ஆரம்பக் கல்வி தடைபடும். தாயாருக்கு ஆயுள் குறைவு, தாயார் வழியில் ஆரோக்கியம் குறைபாடு. தாயார் மணவாழ்க்கை சரி இருக்காது. தாய் வழியில் இரண்டு திருமணம். சொந்தத் தொழில் செய்பவர்கள்.

எண்ணெய், இரும்பு, OIL, ஸ்க்ராப்பு, வீட்டு வேலைகள், மசாஜ் சென்டர், டாஸ்மாக், பார், கருப்பட்டி, எள்ளு தொழில் இருக்கும்வருமானத்தில் திருப்தி இருக்காது. ஒரு சொத்தில் பணத்தை முடக்குவார். மூத்த சகோதரனுக்கு கண்டம் விபத்து உண்டு, இல்லையென்றால் ஜாதகனுக்கு. தாய்பால் இல்லை. வீடு கட்ட தடை, தாமதம். வழக்கில் வெற்றி. குடும்பத்தில் ஆசிரியர்கள் உண்டு. வாக்கால் தொழில் செய்த குடும்பம். கன்னி ராசியில் எந்த கிரகம் உள்ளதோ அந்த கிரக காரக உறவிற்கு கண்டம் இருக்கும். பூர்வீகத்தில் ஒரு வழக்கு உண்டு. இன்சூரன்ஸ் வருமானம் உண்டு. தயார் மூலம் கருத்து வேறுபாடு உண்டு. குடிப்பழக்கத்தினால் ஆரோக்கிய குறைபாடு. தாயாருக்கு பென்ஷன் உதவித்தொகை வரும்.

இரண்டாம் இடத்தில் ராகு:

இரண்டாம் இடத்தில் ராகு இருந்தாலும் பார்த்தாலும்

வேகமான பேச்சு. இரண்டு வயதில் ஒரு கண்டம், சர்ஜரி உண்டு. தாயாருக்கு ஒரு கண்டம். தாய் வழியில் காதல் திருமணம் அல்லது ஜாதகருக்கு காதல் திருமணம். சுயமுயற்சியில் திருமணம் நடக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வருமானம் உண்டு. வெளி நாட்டு வருமானம் உண்டு. மருத்துவம், அமானுசிய மாந்திரீகம் உண்டு. சர்வீஸ், ரிப்பேர், உதிரி பாகங்கள் கடை. பிளாஸ்டிக், தோல் வியாபாரம், எக்ஸ்ரே, கேமரா, ஜோதிடம் இவற்றுடன் தொடர்பு வரும். பெரியம்மாவிற்கு கண்டம். விஷக்கடி உண்டு. உறவுகளை பிரிந்து வாழுதல், குடும்பத்தைப் பிரிந்து வாழ்தல். ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்கள். ஜவுளிக் கடையில் வருமானம் ரோடு அருகே இருக்கும். சித்த வைத்தியம் செய்த குடும்பம். தாத்தா வகையில் புத்திர தாமதம் உண்டு. பாலம் அருகே வீடு இருக்கும், சொத்து இருக்கும். ராகு பாஷை பல மொழிகள் பேசுவோர், அந்நியபாஷை. சுகபோக தடை. கண்ணில் புரை. பல்வரிசை ஒழுங்காக இருக்காது மறைமுக வருமானம். இரண்டாம் இடத்தில் பாவிகள் இருப்பது, பொருளாதாரம் நன்று. குடும்ப வாழ்க்கைக்கு நல்லதல்ல. கண், பல், முகம் அழகை கெடுக்கும்.

இரண்டாம் இடத்திற்குத் கேது:

இரண்டாம் இடத்திற்குத் கேது இருந்தாலும் பார்த்தாலோ

தாமத பேச்சு. ஆன்மீக பேச்சு. இரண்டு வயதில் உறவில் விரிசல். ஆரம்ப கல்வியில் பள்ளிக்கூடம் மாற்றம். பத்து வயதிற்குள் நாலஞ்சு பள்ளிக்கூடம் மாற்றப்படும். வேறு மத பள்ளியில் படித்தல். தடைபட்ட கல்வி. பெரியம்மா மண வாழ்க்கை சரியாக இருக்காது. பஞ்சு, பருத்தி நூல் அது சம்மந்தப்பட்ட வருமானம்.

தையல், மருந்து, ஜோதிடம், உளவுத்துறை, ரகசியம் துறை, யூனிஃபார்ம் போடாத போலீஸ், பல்பொடி வியாபாரம், தலை மருத்துவம், சொற்பொழிவு, சொத்தைப்பல், மூத்த சகோதரனுக்கு கண்டம். கண் பிரச்சனை. பார்ட்டிக்கு புத்திரதோஷம. தாய்வழி பாட்டி வழியில் மதம் மாறியவர் உண்டு. மத நம்பிக்கை இல்லாதவர். சாப்ட்வேர், பில்டிங் பிளானிங் போடுவது, மருத்துவர், ஆசிரியர் தாய்வழியில் உண்டு. இரண்டில் உள்ள கிரகம் நாலு எட்டு பதினொன்றாம் பார்வை செய்யும் இரண்டாம் அதிபதி 3ல் இருந்தாலும் பார்த்தாலும் ஜாதகனுடைய பணத்தை சகோதரன் அனுபவிப்பார். கமிஷன் ஏஜென்ஸ, திஷ்டி பூஸ்டர் எடுப்பது, போலீஸ், ராணுவம், சைக்கிள் கடை, டூவீலர், செல்போன் கடை மைக் செட், stamp vendor, பத்திரம் எழுதுவது, ஜிம் வைத்து நடத்துவது. பணம் பரிவர்த்தனை செய்வது, சிறு மார்கெட்டிங் தொழில், கதை, கட்டுரை, பாட்டு எழுதுவதின் மூலம் வருமானம். காது, மூக்கு, தொண்டை பிரச்சனை ஜாதகருக்கு இருக்கும். சுய முயற்சி பற்றிய அல்லது சகோதரனைப் பற்றி பேச்சிருக்கும். செலவு செய்வதை எழுதி வைப்பார்கள். இதில் சூனியம் சம்பந்தப்பட்டால் புரூப் இல்லாமல் இருக்கும்.அடையாள உத்திரவாதங்கள் எடுபடாது. எஸ் எம் எஸ் மூலம், போன் மூலம் தொடர்புகள் அதிகம் இருக்கும். மாமனாரிடம் கொடுக்கல்-வாங்கல் இருக்கும். விளையாட்டு, உடற்பயிற்சி இருக்கும். மூன்றாம் இடத்திற்கு குரு தொடர்பு இருந்தால் இதில் வருமானம் அதிகமாக இருக்கும். ராகு தொடர்பு வந்தால் ஒரு வளர்ச்சியைக் கொடுக்கும் கேது தடையைதரும் சனிபகவானுக்கு அடுத்து கேது எப்போதும் ஆகாது. இரண்டாம் இட அதிபதி மூன்றில் இவர்களுக்கு பெட்டிசன் போடும் பழக்கம் இருக்கும். தேவையில்லாமல் இவர்களுடன் பேசக்கூடாது. அடுத்தவர்களுக்கு இவர் சிபாரிசு செய்வார்கள். ராகு கேது தொடர்பு எப்போதும் நல்லது கிடையாது. தற்கொலை எண்ணம் ஜாதகருக்கு அதிகமாக இருக்கும். ராகு பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது ஆனால் உயிர் பயம் உண்டு. ராகு மிரட்டும் இறந்து விடுவேன் என்று அந்த பயம் இருக்கும். கேது சொல்லாமல் விஷத்தை குடிக்கும். ஜீவன் இல்லாத நாளில் விஷம் குடித்தால் கண்டிப்பாக மரணம் தான்.

இரண்டாம் அதிபதி லக்னத்தில்:

வாக்கால் தொழில், ஜோதிடர், ஆசிரியர் மற்றும் வக்கீல் பண தொடர்பு உள்ள தொழில்கள் கண் நோய் உண்டு எப்போதும் பணம் கை இருப்பு முதலீட்டு தொழில் கூடாது. திருமணத்திற்கு பிறகு பொருளாதார வளர்ச்சி வெளிநாட்டு வருமானம், உபதேச பிரியர், பெரியம்மா மீது அதிக பாசம், சுவாச பிரச்சனை இருக்கும், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள், மனைவிக்கு பல், கண் சார்ந்த வைத்தியம், தவற்றை வெளிப்படையாக ஒப்பு கொள்தல், தற்பெருமை அதிகம், வயதுக்கு மீறிய பேச்சு, சிறு வயதில் வருமானம்.

இரண்டாம் அதிபதி எந்த பாவத்தில் உள்ளாரோ அந்த பாவகருக்கு வருமானம் உண்டு,

ஒரு ஜாதகத்தில் இரண்டாம் அதிபதி, குரு, சுக்கிரன், யாராவது ஒருவர் ஐந்து கட்டத்திற்கு மேல் இருந்தால் பின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்,

முதலில் சுக்கிரன் அடுத்து குரு இருந்தால் முதலில் வருமானம் குறைவு, ஆனால் பின்னால் வருமானம் அதிகரிக்கும்,

முதலில் குரு அதன் பிறகு சுக்கிரன் முதலில் நிறைய பண வரவு, பிற்காலத்தில் வருமானம் குறையும்,

முதல் நான்கு கட்டத்திற்குள் குரு இருப்பவர்கள் ஆரம்ப கால பண வரவை முறையாக பயன் படுத்துவதில்லை

இரண்டாம் அதிபதி 2 ல் இருந்தால் :

இரண்டாம் அதிபதி 2 ல் இருந்தால் என்ன பலன் இரண்டாம் பாவத்தில் சூரியன் அல்லது ஒன்பதாம் அதிபதி இருந்தால் அப்பாவை பற்றி அதிகம் பேசுவார்கள். இரண்டாம் பாவத்தில் சந்திரன் அல்லது நான்காம் அதிபதி இருந்தால் தாயைப் பற்றி அதிகம் பேசுவார்கள்.

ஜாதகருக்கு வாக்கால் தொழில் அமையும். பணம் தொடர்பான தொழில் அமையும். பைனான்ஸ் கடை வட்டி கடை வைக்கலாம். ஆசிரியர், வக்கீல். மார்க்கெட்டிங் பேசி செய்யும் கன்சல்டிங். வெளிநாடு மூலம் வருமானம். நண்பர்கள் மூலம் வருமானம். செய்திவாசிப்பாளர். குலத் தொழில் மூலம் வருமானம். கூட்டுத் தொழில் முதலீடு செய்வார்கள். மேட்ரிமோனி, திருமண தகவல் மையம் அதன்மூலம் வருமானம். மற்றவர்களுக்கு உபதேசம் செய்பவர்கள். சிறு தீனி சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் திருமணத்திற்குப்பின் வளர்ச்சியுண்டு. மனைவியால் வருமானம். வயதுக்கு மீறிய பேச்சு இருக்கும். நாணயம் நம்பிக்கையோடு நடந்துகொள்வார்கள். சமுதாயத்தில் பெரிய மதிப்பு இருக்கும். பெரிய பொருளாதாரம் பற்றி குறிக்கோள் இருக்கும். கண் பல் நோய் உண்டு. இதனால் பயம் இருக்கும். பெரியம்மா மீது அதிக பற்று இருக்கும். இவர்கள் யாரிடமும் பணம் கொடுத்தால் திரும்பி வந்துவிடும். தவறை ஒப்புக்கொள்ளும் குணம் இருக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் நிலை ஏற்படும். பொருள் தேடி வரும். எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்கும். இல்லையென்றால் மனசு சரியில்லை என்று சொல்வார்கள், வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வார். தற்பெருமை அதிகமாக இருக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டு. பணத்தை அடிக்கடி என்னை பார்க்கும் பழக்கம் இருக்கும். இவர்கள் அடுத்தவர்களுக்கு திருமணம் நடக்கும் என்று இவர்கள் சொன்னால் அது நடந்துவிடும். வாக்கு பலிதம் இருக்கும் இரண்டாம் அதிபதி 5 இல் தொடர்பு கொண்டு இருந்தால் கண்டிப்பாக குழந்தை இருக்கும்.

இரண்டாம் அதிபதி மூன்றாம் பாவத்தில்:

இரண்டாம் அதிபதி மூன்றாம் பாவத்தில் இருந்தால் இவர்கள் பேச்சு விளையாட்டுத்துறை பற்றியும், தகவல் தொடர்பு பற்றியும், எழுத்தாளர்கள் பற்றியும் ,கதை, கவிதை இசை சார்ந்த ஆர்வம், பற்றியும் பேசுவார்கள். போலீஸ் ராணுவம் சைக்கிள் கடை டூவீலர் செல்போன் கடை மைக் செட் stamp vendor பத்திரம் எழுதுவது ஜிம் வைத்து நடத்தி வரும் பணம் பரிவர்த்தனை செய்வது சிறு மார்கெட்டிங் தொழில் கதை கட்டுரை பாட்டு எழுதுவதின் மூலம் வருமானம் காது மூக்கு தொண்டை பிரச்சனை ஜாதகருக்கு இருக்கும் சுய முயற்சி பற்றிய அல்லது சகோதரனைப் பற்றி பேச்சிருக்கும் செலவு செய்வதை எழுதி வைப்பார்கள் இதில் சூனியம் சம்பந்தப்பட்டால் புரூப் இல்லாமல் இருக்கும்

அடையாள உத்திரவாதங்கள் எடுபடாது எஸ் எம் எஸ் போன் மூலம் போன் மூலம் தொடர்புகள் அதிகம் இருக்கும் மாமனாரிடம் கொடுக்கல்-வாங்கல் இருக்கும் விளையாட்டு உடற்பயிற்சி இருக்கும் மூன்றாம் இடத்திற்கு குரு தொடர்பு இருந்தால் இதில் வருமானம் அதிகமாக இருக்கும் ராகு தொடர்பு வந்தால் ஒரு வளர்ச்சியைக் கொடுக்கும் கேடு தடையைதரும்

சனிபகவானுக்கு அடுத்து கேது எப்போதும் ஆகாது இரண்டாம் இட அதிபதி மூன்றில் இவர்களுக்கு பெட்டிசன் போடும் பழக்கம் இருக்கும்

தேவையில்லாமல் இவர்களுடன் பேசக்கூடாது அடுத்தவர்களுக்கு இவர் சிபாரிசு செய்வார்கள் ராகு கேது தொடர்பு எப்போதும் நல்லது கிடையாது தற்கொலை எண்ணம் ஜாதகருக்கு அதிகமாக இருக்கும் ராகு பொருளாதார வளர்ச்சிக்கு நல்லது ஆனால் உயிர் பயம் உண்டு ராகு மிரட்டும் இறந்து விடுவேன் என்று அந்த பயம் இருக்கும் கேது சொல்லாமல் விஷத்தை குடிக்கும் ஜீவன் இல்லாத நாளில் விஷம் குடித்தால் கண்டிப்பாக மரணம் தான்

இரண்டாம் அதிபதி 3 இளைய சகோதரர் இவருடைய பணத்தை சொத்தை அனுபவிப்பார் இரண்டாம் அதிபதி மூன்றில் இவர் சகோதரர் மூலம் ஆதாயம் பெறுவார். சகோரர் மூலம் வருமானம் பெறுவர் இரண்டாம் இடம்,இதுவும் நிதி நிலைக்கு நல்ல இடம்.மூன்றாமிடம் எழுத்து,கம்யூனிகேஷன் துறை மூலம் வருவாய் உண்டு,பிரசங்கம் , கவுன்ஸிலிங் மூலம் வருமானம் சுக்கிரன் சம்பந்தம் அழகாக பாடுவார்.சாதகர் அடிக்கடி பிரயாணம் செய்வார்

இரண்டாம் அதிபதி நான்காம் பாவத்தில்:

இரண்டாம் அதிபதி நான்காம் பாவத்தில் இருந்தால் இவர்கள் பேச்சில் எப்போதும் தாயை பற்றி பேசுவார்கள். சுக வாழ்க்கை பற்றி பேசுவார்கள். வீடு, வண்டி, வாகனம், சொத்து சுகம் சார்ந்த விஷயங்களைப் பற்றி அதிகம் பேசுவார்கள். அதிலேயே அவர்களுடைய பேச்சு என்பது அதிகமாக இருக்கும். சுகத்தை பற்றி அதிகம் பேசுவார்கள். சுகமாக இருக்க வேண்டும் என்று அதிகம் நினைப்பார்கள். உயர் கல்வியைப் பற்றி பேசுவார்கள். ஜோதிடத்தைப் பற்றி பேசுவார்கள். இரண்டாம் இட அதிபதி நாலில் இருந்தாலும் பார்த்தாலும் மாத்ரு மூலதன யோகம்..தாயும் ஆசியுடன் வளர்வார். அம்மா போட்டோவை அலுவலகத்தில் வைத்திருப்பார். நாலாம் பாவம் பத்தாம் பாவத்தை பார்ப்பதால் என் தாய் என் அம்மா என்னை பாலூட்டி வளர்த்தவர் என்று தான் இவருடைய பேச்சு இருக்கும், எப்போதும் அம்மா அம்மா என்றுதான் பேசுவார்கள். அம்மாவிடம் தான் பணத்தை கொடுப்பார்கள். தாய் காலத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு போகாது. சொந்த பந்தங்களுக்கு வாரி வழங்குவார். இடம் வாங்குவார். ஆடம்பர செலவு அதிகமாக செய்வார்கள். வாகனம் ஓட்டுநர் பணி, வீடு நில புரோக்கர், கல்வி மூலம் வருமானம், விவசாயம், பிராணிகள் மூலம் வருமானம் வருவது, பால்பண்ணை, தண்ணீர் வியாபாரம் செய்யலாம். இவை நல்லது. கல்லறை இவர்கள் கட்டுவார்கள். ரெண்டு நாலாம் பாவம் தாய்ப்பால் குறிக்கும் பாவம் ஆகும் இந்த பாவத்திற்கு திதி சூன்ய பாதிப்பு இருந்தால் தாய்ப்பால் வற்றிவிடும். நிலம், வீடு போன்ற முதலீடு செய்யலாம். வாகனத்தில் முதலீடு செய்யலாம். வீடு அடிக்கடி ரிப்பேர் பண்ணுவார்கள். வாகனத்தை அடிக்கடி மாற்றுவார்கள். மூணு, நாலுக்கு உடையவர்கள் இரண்டாம் அதிபதி சாரம் வாங்கினால் தகவல் தொடர்பில் வருமானம் வரும். மாமனார் வீடு கட்ட பணம் கொடுப்பார். போஸ்ட் ஆபிசுக்கு வீடு வாடகைக்கு விடலாம். டவர் வைக்க இடம் கொடுக்கலாம்

இரண்டாம் அதிபதி ஐந்தாம் பாவத்தில்:

இரண்டாம் அதிபதி ஐந்தாம் பாவத்தில் இருந்தால் புத்திசாலித்தனமாக பேசுவார்கள். யோசித்து யோசித்து பேசுவார்கள். அறிவுடன் பேசுவார்கள். இவர்கள் பேச்சில் புத்திசாலித்தனம் இருக்கும். குலதெய்வத்தை பற்றி அதிகம் பேசுவார்கள். குழந்தையை பற்றி அதிகம் பேசுவார்கள். பூர்வீகத்தைப் பற்றி அதிகம் பேசுவார்கள். இவர்கள் பேச்சில் நுட்ப அறிவு இருக்கும். இவர்கள் பேச்சில் இவரின் வளர்ச்சி என்பது இருக்கும். தாய் மாமனை பற்றி அதிகம் பேசுவார்கள். சமுதாயத்தில் தான் உயர வேண்டும் என்று அதிகம் பேசுவார்கள். குழந்தைகள் மூலம் வருமானம். பூர்வீகத்தில் வருமானம் அறிவு மூலம் வருமானம் புத்தி மூலம் வருமானம்ரெண்டு நாலு தொடர்பு நிறைய புத்தகம் வாங்குவார்கள். நாளில் ஒரு கிரகம் இருந்து அது நீர் ராசியாக இருந்து இன்னொரு நீர் ராசி கிரகத்தை பார்த்தால் ஜாதகருக்கு தண்ணீரில் கண்டம். இவர்கள் சாப்பிட்டுக்கொண்டே படிப்பார்கள். புத்தகத்திற்கு நிறைய செலவு செய்வார்கள் பணத்தை நோட்டில் புத்தகத்தில் மறைவான இடத்தில் பணம் வைப்பார்கள். மறைவான பாக்கெட்டில். 2ஆம் அதிபதி 5ல் இருந்தால் நல்ல பொருளாதாரம் உண்டு. ஜாதகருக்கு அஞ்சு ஒன்பதில் எவரும் சுகமே எல்லாம் சுகமே. 6, 8, 12 உடைய கிரகங்கள் 9 ல் இருந்தால் தீய பலன்கள் குறைவாக தான் கொடுக்கும். 5-க்குடையவர் எட்டில் இருந்தால் தத்து வாங்குவது தத்துப் போவது நல்லது. முதல் குழந்தை பிறந்தால் கஷ்டப்படும். அதனால் முதலில் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது. அதன் பின் பிறக்கும் குழந்தை இரண்டாவது குழந்தை ஆகிவிடும். இதுவே இவர்களுக்கு பரிகாரமாகும். 2-க்குடையவர் அஞ்சில் ஜோதிடர், ஆசிரியர், மந்திரம் ஜெபம், ஹோமம், வாக்குப் பலிதம் உண்டு. பூஜை கலைத்துறையில் ஈடுபாடு. ஷேர் மார்க்கெட் விற்பனை செய்யலாம். லாட்டரி, trust ,பைவ் ஸ்டார், 3 ஸ்டார் ஹோட்டலில் வேலை பார்க்கலாம். கோவிலில் கடை வைப்பது, அர்ச்சனை சீட்டு கொடுப்பது. தாய்மாமன் உதவி உண்டு. சூதாட்டம் உண்டு. கேது சம்பந்தம் இருந்தால் சூதாட்டம் வரும். ஜோதிடம், தாத்தா தொழில், காதலி மூலம் வரவு செலவும் உண்டு. இயற்கை மூலம் வருமானம் உண்டு. என்னைக்குமே வயிறு குறையாமல் இருப்பார்கள். 2 க்குடையவன் அஞ்சில் ராகுவுடன் இருந்தால் தாய்மாமனுக்கு கண் பாதிப்பு இருக்கும். குலதெய்வத்திற்கு இவர்கள் ஈட்டி வாங்கி கொடுக்கலாம். கேது இணைவு இருந்தால் மணி வாங்கி கொடுக்கலாம். இதற்கு பரிகாரம் மந்திரம் சொல்வது தினமும் சிறப்பு. ஐந்தாம் அதிபதி கெட்டுப்போனால் பில்லி சூனியம் படிப்பார்கள். துஷ்ட தேவதையை வணங்குவார்கள், புத்தி ஸ்தானம் கெடும். இரண்டாம் அதிபதி அஞ்சில் அதிக வருமானம். அறநிலையத்துறை வருமானம். உழவாரப்பணி பஜனை பாடுவார். குலதெய்வத்திற்கு பணம் தருவார். கோவில், மடம், சமுதாயப் பொறுப்பு வந்தே தீரும்.

இரண்டாம் அதிபதி ஆறில்:

இரண்டாம் அதிபதி ஆறில் இருந்தாலோ பார்த்தாலோ ஜாதகருக்கு தாமதமான பேச்சு. கண்ணில் குறைபாடு இருக்கும். பல் வியாதி இருக்கும். வெளிநாட்டு வருமானம் உண்டு. சிறுவயதில் படிக்கும் போது வேலைக்கு செல்வார்கள். கல்வித்தடை அல்லது பள்ளியை மாற்றி மாற்றி படிப்பார்கள். பொருளாதார தடை இருக்கும். வட்டிகட்டுதல், பணம் கொடுத்து வாங்குதல். வருமானம் நேர்மையற்ற முறையில் சேர்த்த பணம்,சொத்து .குடும்பத்தில் பிரச்சனை வழக்குகள் உண்டு. தாய் மாமன் வசதியானவர்.தாய்மாமன் மூலம் வருமானம். நோய் குறிக்கும் இடம் என்பதால் வருமானம் அதிலே செலவாகும். கண் நோய் உண்டு. கடன் இருக்கும் கடன் மூலம் வருவாய் இருக்கும் பிள்ளைகளுக்கு சுகவீனம் இருக்கும். ஐந்துக்கு இரண்டாமிடம், இரண்டாம் அதிபதி நாலில் இருந்தால் ஏடிஎம், பேங்க் ஆகிய தொழிலுக்கு இடம் வாடகைக்கு கொடுக்கலாம். செவ்வாய் சனி நாளில் இருந்தால் சலூன் கடைக்கு வாடகைக்கு விடலாம். சனி கேது துணிவெளுக்கும் டோபிக்கு வாடகைக்கு விடலாம். கிணறு எடுப்பது, போர் போடுவது வீட்டில் இருந்து கொண்டு வருமானம் தரும். போர் வண்டி வாங்குவது. டியூஷன் எடுப்பது, தையல். தாய்வழியில் ஆசிரியர். மனைவி ஆசிரியர் இதற்கு இரண்டு நாலு 11 சம்பந்தம் இருக்க வேண்டும். 2:4:11 சம்மந்தம்வாடகைக்குபோன வீட்டை சொந்தமாக வாங்குவார்கள்.

இரண்டாம் இட அதிபதி ஏழில் :

இரண்டாம் இட அதிபதி ஏழில் இருந்தால் திருமணம் சம்பந்தமான வருவாய் இருக்கும். திருமண மண்டபம் கட்டுவது, மேட்ரிமேன் நடத்துவது, திருமண தகவல் மையம் நடத்துவது, பூக்கடை வைப்பது, திருமண சீசனில் வருமானம் பார்ப்பது. பொதுப்பணித்துறை மனைவியால் வருமானம். .திருமணத்திற்குப் பின் வருமானம். கூட்டுத் தொழில் கூட்டு முயற்சியால் வருமானம் இருக்கும். வெளிநாட்டில் மூலம் வருமானம். பரிசுப் பொருட்கள் விற்பது. நெய் பலகாரம் விற்கலாம். டோர் டெலிவரி மூலம் தொழில் வருமானம் செய்யலாம். வருமானம் வரும் ஜோதிடராக இருந்தால் வீடு தேடிப் போய் ஜாதகம் பார்த்து வருமானம் கூடும். தாய்வழி பாட்டி மூலம் திருமணம் நடக்கும். 50 வயதுக்கு மேல் வருமானம் உண்டு. கறாராக காசு கேட்க மாட்டார்கள். வாக்குப் பலிதம் உண்டு. திருட்டுப்பழி உண்டு. ஏழாம் பாவம் எட்டாம் பாவத்திற்கு விரய பாவம் திருட்டு நகை செல்லாத நோட்டு போன்றவற்றில் இருக்கும். இவர்களுக்கு விளம்பரமே வாடிக்கையாளர்கள் தான். இவர்கள் சந்நியாசி போல இருப்பார்கள். அதே சன்னியாசி க்கு தானம் தருவது நல்லது கல்யாண சீர் இவர்கள் செய்யலாம். இரண்டாம் அதிபதி ஏழில் இருந்து இதற்கு திரிகோணத்தில் கேது இருந்தால் பார்ட்னர் கூட்டாளியுடன் பணம் மாட்டிக்கொள்ளும்.

இரண்டாம் இட அதிபதி எட்டில்:

இரண்டாம் இட அதிபதி எட்டில் இருந்தால் என்ன பலன் ஜாதகருக்கு ரகசிய குடும்பம். அமானுஷ்ய சக்தி இருக்கும். வாக்கு பலிதம் இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வருமானம் இருக்கும். இரண்டாம் அதிபதி எட்டாம் பாவத்தில் இருந்து தன் வீட்டை பார்ப்பது இரண்டாம் பார்வை. இது ஆட்சி பெற்ற நிலைக்கு சமம்.

பொதுவாகவே ஒரு கிரகம் தன் வீட்டைப் பார்ப்பது ஆட்சிக்கு சமம். எதிர்பாராத அதிர்ஷ்டம் ஜாதகருக்கு இருக்கும். மருத்துவ உதவி இருக்கும். புதையல் வாக்கு இதெல்லாம் எதிர்மறையாக இருக்கும். இவர்களுக்கு ரெண்டு 7 கெடக் கூடாது, கெட்டுவிட்டால் திருமண முறிவு ஏற்படும். கண் நோய் பல் நோய் உண்டு உதடு நோய் இருக்கும். ரெண்டு எட்டு தன்னை அறியாமல் தெரியாமல் சொல்வது நன்று. சாமியாடுதல், பில்லி சூனியம், மாந்திரீகம், ஆவி பிடித்தல் ஆவியுடன் பேசுவது குறிசொல்வது. ஜீவ சமாதி வழிபாடு இவர்களுக்கு சிறப்பு. ஐந்தாம் அதிபதி இரண்டாம் அதிபதி எட்டிற்கு சம்பந்தப்பட்டால் இறந்தவர்களிடம் இவர்கள் பேசுவார்கள். மருத்துவத்தின் மூலம் சட்டவிரோதமான பணம் வரும். டைல்ஸ் உயில் சொத்து பெட்ரோல் பங்க் பினாமி இன்சூரன்ஸ் வர்மம் இதன் மூலம் ஜாதகர் வருமானத்தை சம்பாதிக்கலாம்.

இரண்டாம் இட அதிபதி 9 ல் :

இரண்டாம் இட அதிபதி 9 ல் இருந்தால் என்ன பலன் ஜாதகருக்கு வாக்கு பலிதம் இருக்கும் ஆசிரியர், தந்தையின் தொழில், சாஸ்திரம் சம்பந்தப்பட்ட வேலை, கோவில் பராமரிப்பு, உபதேசம், ஆன்மீக சொற்பொழிவு, கோவிலுக்கு செலவு செய்தல், கட்டளைதாரர்கள் இந்த மாதிரி வேலை செய்யலாம். வேலை தேடி வரும் பணம் தேடி வரும் 50 வயதுக்கு மேல் ஜாதகருக்கு வளர்ச்சி உண்டு. தந்தைவழியில் ஆசிரியர் இருப்பார். வெளிநாட்டு பாவம் என்றால் 3, 9, 12 ஜாதகருக்கு வெளிநாட்டு வருமானம் இருக்கும். கோவில் மடங்கள், மூலம் வருமானம் இருக்கும். அறநிலையத் துறையின் வருமானம் இருக்கும்.

5, 9 சம்பந்தம் குட்டிக்கதை நீதிக்கதை விரும்புவார்கள். இரண்டாம் அதிபதி சூரியன் சாரம் பெற்று அஞ்சு ஒன்பதில் இருந்தால் கிராமிய பழமொழிகள் இவர்களுக்கு நல்லா வரும்.

5, 9 மூன்றாமிடம் சம்பந்தம் இருந்தால் ஆன்மீக புத்தகம் எழுதுவார். library வேலை பிடிக்கும். குருமாரின் ஆசி கிடைக்கும்.நிர்வாகம் ஒரு சங்கம் இயக்குவார்கள் உயரமான இடம் இவர்களுக்கு எப்போதும் ஆகாது பெரியோர் இடத்தில் தீட்சை கிடைக்கும் கைரேகை எண்கணிதம் M.Phil P.hd செய்வார். ஒரு சிலருக்கு இருதார யோகம் வங்கி தொழில் செய்யலாம் ரெண்டு நாலு 9 தந்தையின் சொத்தில் மூலம் வருமானம் இரண்டாம் இட அதிபதி அஞ்சு ஒன்பதில் இருப்பவரிடம் மனிதநேயம் இருக்கும் பலன் பாராமல் சேவை செய்வார் இவர்கள் கையால் பணம் வாங்குவது நல்லது

இரண்டாம் அதிபதி 10ல் இருந்தால்:

இரண்டாம் அதிபதி 10ல் இருந்தால் தனயோகம், வாக்கால் தொழில் அமையும். பணம் சார்ந்த தொழில். கோவில் திருப்பணிகள் செய்தார். மனைவிக்கு வருமானம் உண்டு. கண் பிரச்சனை உண்டு. வாஸ்து சாஸ்திரம் சம்பந்தப்பட்ட பொருட்கள் இவர்கள் விற்கலாம், பயிற்சி அளிக்கும் வேலை செய்யலாம். புரோகிதம் தர்ப்பணம் செய்யலாம். மாமியார் தலையீடு இவர்களுக்கு அதிகமாக இருக்கும். Cash பொறுப்பு மற்றவர்கள் பணம் இவர்களிடம் பொறுப்பாக இருக்கும். நாலாம் இடத்தில் ஒரு கிரகம் இருந்து செவ்வாய் நாலாம் பார்வையாக இருந்து பார்த்தால் இவர்கள் வீட்டில் இருந்து தொழில் செய்வார்கள். இவர்கள் பேச்சு மற்றவர்களை கவரும் விதம் இருக்கும் இரண்டாம் அதிபதி 10 இல நிதி கர்மயோகம். இரண்டாம் இடம் நிதி, பத்தாமிடம் கருமம். சமுதாயத்தில் பதவி ஏற்பவர். சொத்து உண்டு. கோவில் அல்லது மரம் அருகே இருப்பார். கோவில் திருப்பணிகள் செய்தார். கும்பாபிஷேகம் இது போல. நீரோட்டம் பார்க்கலாம், அதன் போர் போடுவது இந்த மாதிரி ட்ரைனிங் கொடுத்தல், தொழில் செய்யலாம். தவச தொழில், திதி, பிண்டம் வைப்பது, தந்தையின் தொழில், கரும காரியத்துக்கு உதவி செய்வது நல்லது. இவர்கள் சுடுகாட்டுக்கு கம்பி வேலி போட்டு தருவது நல்லது. இது ஒரு பரிகாரம. தத்து போனவர், தத்தெடுத்து குடும்பம். குழந்தைகள் இல்லாதவர்கள் குடும்பத்தில் உண்டு அல்லது நெருங்கிய நண்பருக்கு குழந்தை இல்லாமல் இருக்கும். பின் வாழ்வின் சிறப்பு ,ஜீவனும் குறையில்லை, ஜோதிடம் சிறப்பு.

இரண்டாம் அதிபதி பதினொன்றில்:

இரண்டாம் அதிபதி பதினொன்றில் இருந்தால் என்ன பலன்

இது லக்ஷ்மியோகம், தனயோகம். இதன் காரகர் குரு. வாக்கு வெற்றி உண்டு. பொருளாதாரம் வெற்றி உண்டு. வங்கி பைனான்ஸ் செய்யலாம். இவர்கள் அண்ணனிடம் அல்லது நண்பரிடம் பணத்தை கொடுப்பார்கள். நண்பர்கள் அதிகம் நண்பர்கள் இவருடைய தகுதியை மிஞ்சிய களாக இருப்பார்கள். வயதுக்கு மீறிய நட்பு தொடர்பு இருக்கும். சேமிப்பு அதிகமாக இருக்கும். பிற்பகுதி வளமாக இருக்கும். முன்கூட்டியே யூகித்து வாழ்வார்கள். கண் பார்வை கண் நோய் உண்டு. தூரப்பார்வை பிரச்சினைகள் இருக்கும். இரண்டாம் இட அதிபதி ஒன்னு ரெண்டு 5, 9, 10, 11 நாலு இந்த பாவத்தில் இருந்தால் பணவரவிற்கு அருமையாக இருக்கும் இரண்டாம் அதிபதி பதினொன்றில்

ஜோதிடம் சிறப்பு. கோ யோகம். மேடைப்பேச்சு. வட்டித் தொழில். சம்பாதித்த பணத்தை அடகு வைப்பார்கள், வட்டிக்கு விடுவார்கள். மடம், சத்திரம், சாவடி, பொறுப்பு. ஆசிரியர், கலைத் தொழில்மூலம் வருமானம். சித்தப்பா வசதியானவர். வாக்கு தவறாமை, அதிகம் பேச விரும்புவார்கள். ரெண்டு க்குடையவன் காற்று ராசியில் இருந்தால் அதிகம் பேசக் கூடியவர்கள், பேச விரும்புவார்கள். ரெண்டுக்கு உடையவன் நீசமாகி பதினொன்றில் அமர்ந்தால் மூத்த சகோதரருக்கு பாதிப்பு. 2 ,11 இல் நீச்ச கிரகங்கள் இருந்தால் பொருளாதார வளர்ச்சி. அதேபோல பத்தாம் இடம் சன்யாசி போல் வாழ்பவருக்கு எந்த தோஷமும் இல்லை

இரண்டாம் அதிபதி 12 இல்:

இரண்டாம் அதிபதி 12 இல்

இவர்கள் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்க கூடாது. ஜோதிடம் அற்புதமாக வரும். தூக்கத்தில் புலம்புவார்கள். இந்த அதிபதியுடன் செவ்வாய் தொடர்பு கொண்டால் பற்களை நறநறவென்று கடிப்பார்கள். காற்று ராசி சம்பந்தப்பட்டால் குறட்டை விடுவார்கள்.இதில் புதன் சம்பந்தம் ஆனால் இரண்டு வகையான குறட்டை விடுவார்கள். இவர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்தால் நல்லா சம்பாதிப்பார்கள். முதல் தொழிலில் வருமானம் கிடையாது. கேது சம்பந்தப்பட்டால் சுத்தமாக முதலீடு செய்யக்கூடாது. சீட்டு போடக்கூடாது. சீட்டு நடத்தக்கூடாது அப்படி சீட்டு போட்டால் முதல் சீட்டு எடுத்துவிடவேண்டும். தீராத வியாதி மூலம் மருத்துவ செலவு இருக்கும்.

பன்னிரெண்டாம் அதிபதி இரண்டாம் பாவத்தில் இருந்தால் மரணம் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் அதிகம் வரும் கோலப் பண்ணிடுவேன் கொன்னுடுவேன் இப்படி பேசுவார்கள்

 

நன்றி

வாழ்க வளமுடன்

தமிழரசன் க

தக்‌ஷா ஜோதிட நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்

https://www.dakshaastrology.com

whatsapp: +919787969698


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...