சனி, 16 டிசம்பர், 2023

லக்ன பாவம்

 


லக்ன பாவம்

உருவம், நிறம், குணம், உயரம், ஆரோக்கியம், பிறப்பின் நோக்கம், சிந்தனை, பதவி, புகழ், கீர்த்தி.

லக்கினத்திற்கு முன்னும் பின்னும் அல்லது லக்னத்தில் ஒரு கிரகம் இருப்பது நல்லது. லக்னம் குரு, சுக்கிரன், புதன், சந்திரன், சூரியன் வீடுகளில் லக்னம் அல்லது ராசி அமைவது முதல் தரம். லக்கினாதிபதியே லக்னத்தில் ஆயுள் பலம் தன்னை பற்றி உயர்வாய் நினைப்பது, சுய நலம் சுய முயற்சி, புகழுக்கு மயங்குதல், நட்புக்கு மரியாதை. கூட்டு தொழில் செய்ய ஆசை. நல்ல பேச்சாற்றல்,

லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன்:

உதாரணமாக மேஷ லக்னம் அதிபதி செவ்வாய் கன்னி ராசியில் அமர்ந்திருக்கிறார் எடுத்துக்கலாம்.

கன்னி ராசியில் செவ்வாய் தனுசு மீனம் மேஷம் இந்த வீடுகளை பார்ப்பார் மற்றும் லக்னத்தையும் செவ்வாய் வந்து எட்டாம் பார்வையாக பார்க்கிறார்.

இந்த ஜாதகருக்கு 6, 9, 12 மற்றும் லக்னம் ஆகிய ஸ்தானங்களை செவ்வாய் பார்வை செய்வார். அப்ப அந்த ஜாதகருக்கு காலம் முழுவதும் 6, 9, 12 இந்த பாவக ரீதியாக ஜாதகருக்கு அதிகமா இருக்கும்.

இப்ப மேஷ இலக்கின அதிபதி கன்னி ராசியில் அமர்ந்திருக்க, கன்னி ராசி என்பது ஆறாம் இடம், இந்த ஜாதகருக்கு கடன், நோய், எதிரி, வேலை இந்த மாதிரியான சிந்தனைகள் தான் இருக்கும்.

கன்னி ராசியில் அமர்ந்த மேச லக்னாதிபதி செவ்வாய் நாலாம் பார்வையாக ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதால் தந்தையைப் பற்றிய சிந்தனை இருக்கும்.

ஆன்மீக பற்று கோவில் இந்த மாதிரி சிந்தனை இருக்கும் மற்றும் படிப்பு பற்றிய சிந்தனை இருக்கும்.

மேலும் செவ்வாய் கன்னி ராசியில் அமர்ந்து ஏழாம் பார்வையாக பன்னிரெண்டாம் இடத்தை பார்ப்பதால், ஜாதகருக்கு வெளிநாடு பயணம் போகலாமா? என்ற சிந்தனை இருக்கும்.

அதிக தூரம் பயணம் செய்யலாமா அல்லது அயன சயன போக ஸ்தானத்தில் ஒரு பிரச்சனை தரும்.

மற்றும் செவ்வாய் ஆறாம் இடத்தில் அமர்ந்து தன் வீட்டை தானே பார்ப்பதால் அது லக்னத்தை பார்வை செய்வதால் அவரைப் பற்றிய ஒரு உயர்வான சிந்தனைகள்.

என்ன செய்யலாம்? வேலைக்கு போகலாமா? வேண்டாமா என்ற சிந்தனை இருக்கும்.

காலம் முழுவதும் இந்த மாதிரியான சிந்தனைதான் அதிகமாக ஜாதகருக்கு இருக்கும்

ஆயுள் பலம் இருக்கும். சுயநலம் இருக்கும். தன்னைப்பற்றிய உயர்வான கற்பனை இருக்கும்.

பொது சேவை ஈடுபாடு.

ஜாதகருக்கு காம உணர்வு கூடுதலாக இருக்கும்.

தொழில் செய்யலாம் அதற்கு எண்ணம் இருக்கும். மனைவியின் அனுமதி, பெற்று மனைவியை தகவல் தொடர்பு பயணங்கள், மனைவியோடு போக விரும்புவார்கள்.

பொதுவாக லக்னாதிபதி லக்னத்தில் அமரும் போது நேர்மையே இருப்பாங்க.

மரியாதை கொடுப்பாங்க.

எதிர்காலம் பற்றிய கவலை இருந்து கொண்டே இருக்கும்.

நல்ல பேச்சாளர் நல்லா பேசுவாங்க.

ஒரு நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. புகழ்ச்சிக்கு மயங்குவார்கள்.

நல்ல புகழ்ந்து பேசினால் இவர்களுக்கு பிடிக்கும்.

லக்னாதிபதி தான் இருக்கும் வீட்டிற்கு அடுத்த வீட்டை தொடுவதால் ஜாதகருக்கு பேச்சு வன்மை நல்லா இருக்கும்.

லக்னாதிபதி சுக்கிரனாக இருந்து 1, 6, 7 சம்பந்தம் பெற்றால் ஜாதகர் கடன் வாங்காமல் வாழவே மாட்டார்.

ஜலதோஷம் பிடிக்கும்.

புட் பாய்சன் ஆகும்.

மின் தாக்குதல் இருக்கும்.

மஞ்சகாமாலை வந்தால் மரணம் நேரிடும்.

ஊனம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்/

துலா லக்னத்திற்கு சனி, சுக்கிரன், சூரியன் இந்த கிரகங்கள் நீசமாக ஆகக்கூடாது.

மூன்று பேருமே நீசமாகி ஒரு ஜாதகம் அமைந்துவிட்டால் அவர்களுக்கு மண்டையில் தான் அடி விழும், அடிபடும்.

சனியுடைய நீச்ச பார்வை லக்னத்திற்கு லக்னாதிபதிக்கு இருக்கக் கூடாது

லக்னம் 30% பலனை சொல்லும் லக்னாதிபதி அமர்ந்த இடம் 50% பலன் சொல்லும்.

லக்னாதிபதி பார்த்த இடம் 20% பலனை சொல்லும்.

இது ஒற்றை ராசிகள் அமர்ந்திருந்தால் அதாவது ஒற்றைப் பார்வை உள்ள கிரகத்திற்கு இந்த அமைப்பு வரும்.

முப் பார்வையுள்ள உள்ள கிரகமாக இருந்தால் லக்னம் 20% பலன் சொல்லும், லக்னாதிபதி பார்வை செய்யும் இடம் 10% பலனை சொல்லும், இரண்டாம் பார்வை செய்யும் இடத்தை 10% பலன் சொல்லும்.

மூன்றாம் பார்வை செய்யும் இடத்தை 10% பலனை சொல்லும் லக்னாதிபதி அமர்ந்த இடம் 50% பலனை சொல்லும்.

பொதுவாகவே லக்னத்தில் சூரியன் அப்படின்னா இது காரகோ பாவ நாஸ்தி.

எனவே லக்னத்துக்கு காரக கிரகம் சூரியன் அந்த சூரியனே வந்து லக்னத்தில் அமைந்தால் காரக பாவ நாஸ்தி.

அப்படி லக்னத்துல சூரியன் இருந்தால் உயரமான உருவம், உயர்ந்த குணம், நல்ல நிறம், புகழ், அறிவு, இருப்பிடம், ஜாதகனை பற்றிய எல்லாம் லக்னம் சொல்லும்.

லக்னத்தில் லக்னாதிபதி நின்றால் ஜாதகம், ஜாதகர், புகழ் உடையவர், சொந்தக்காலில் நிற்பவர், சுயமுயற்சியில் வெற்றி பெறுபவர்.

லக்னத்தில் சூரியன்:

லக்னத்தில் சூரியன் .உஷ்ண தேகம் உடையவர். முன் கோபம் உண்டு. அரசியல் ஆர்வம் உள்ளவர். பெரிய பதவிகளை வகிப்பவர்.

இவர்களுக்கு ஒரு health தொல்லை இல்லாமல் இருக்காது.

உருவம் பிரகாசமாக நல்ல தோற்றமாக இருக்கும். பெரிய குடும்பத்துப் பிள்ளை. கோவில் அருகே குடியிருப்பார்கள். கவுரவமான குடும்பம். ஆளுமை திறன் எடுக்கும், அதிகாரம் இருக்கும். இவர் பிறந்த பின்பு குடும்பம் நல்ல வளர்ச்சி காணும். கண் நோய் உண்டு. பெரியவர்களின் நட்பு உண்டு. ஆன்மீக குருமார்கள் ஆசி கிடைக்கும். சிவ வழிபாடு செய்வார்கள். மலை சார்ந்த பகுதியை விரும்புவார்கள். ஆன்மிக நாட்டம் இருக்கும். சுகமான வாழ்வு அமையும். புகழான வாழ்க்கையும் அமையும். இயற்கை வழிபாடு செய்வார்கள். தீப வழிபாடு செய்வார்கள். குறிப்பிட்டு சொல்லும்படி இவர்கள் ஒரு பெயர் சொல்லி அழைப்பார்கள்.

வீட்டில் வள்ளலார் படம் இருக்கும். தலை முடி அதிகமாக உதிரும். ஏறு நெற்றியாக இருக்கும். நகைக்கடைக்காரர்கள், மருத்துவருடைய நட்பு இருக்கும் குரு, செவ்வாய் பார்த்தால், சேர்ந்தாலும் அரசியல்வாதி நட்பு கிடைக்கும். சொத்து சேரும். ஜோதிடத்தில் சிறப்பு உண்டு. மருத்துவ குணம் இருக்கும்.

இவர்கள் கூரை வீடு, செட் போன்ற அமைப்புடைய இடத்தில் பிறந்திருப்பார்கள்.

லக்னத்தில் சந்திரன்:

லக்னத்தில் சந்திரன் இருந்தாலும் பார்த்தாலும் சந்திரனுக்கு ஏழாம் பார்வை உண்டு. லக்னத்தில் சந்திரன் அழகான கவர்ச்சியான தோற்றம் உள்ளவர். குளிர்ச்சியான தேகம் உள்ளவர். நிலையற்ற மனம் உடையவர். இவர்களுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருக்கும். அதேபோல் ஞாபக மறதியும் இருக்கும்.

ஜாதகர் பிறந்த உடன் அல்லது வயிற்றில் உள்ள போது தாயாருக்கு ஒரு இடமாற்றம் உண்டு. பழகிய முகமாக இருக்கும். இவர் பிறந்தவுடன் வீட்டில் கஷ்டம் இருக்கும். குரு பார்த்தால் மழை அடை மழை பெய்தபோது ஜாதகர் பிறந்திருப்பார். வட்ட வடிவமான முகம். ஏமாற்றம் இல்லாதவராக இருப்பார். தனிமையை வெறுப்பார்கள். கூட்டமாக இருக்க ஆசைப்படுவார்கள். இவர்களுக்கு உறவினர்கள் மீது அதிக பாசம் இருக்கும். தாய்மாமன் வீட்டில் பிறந்தவராக இருப்பார்

லக்னத்தில் செவ்வாய்:

லக்னத்தில் செவ்வாய் இருந்தால் பார்த்தால் லக்னத்தில் செவ்வாய் முரடான தோற்றம் உள்ளவர். உடலில் காயங்கள தழும்புகள் இருக்கும். பிடிவாத குணம் உள்ளவர். எதையும் அவசரமாக செய்பவர் லக்னத்தில் அமர்ந்து செவ்வாய்க்கு 4, 7, 8 பார்வைகள். ஜாதகர் கோபக்காரர். ஒரு சொத்து உண்டு. ஒரு சர்ஜரி உண்டு. வெட்டுக் காயம், தழும்பு இருக்கும். மருத்துவ குணம் தெரிந்தவர். வாகனம் உண்டு, வாகனம் ஓட்டுபவர். முறுக்கான மீசை இருக்கும். குரு, சூரியன் தொடர்பு இருந்தால் தங்கப்பல் கட்டுவார்கள். வீட்டின் அருகே கடை இருக்கும். EB கம்பம் இருக்கும். அடுத்த சகோதரன் இருக்கும்.

லக்னத்தில் புதன்:

லக்னத்தில் புதன் இருந்தாலும் பார்த்தாலோ

இது திக்பலம். லக்னத்தில் புதன் இளமையான தோற்றம் உள்ளவர். சாஸ்த்திர ஞானம், கணிதத் திறமை உள்ளவர். பிறரை சார்ந்து இருப்பவர். 7 ஆம் பார்வை உண்டு. இவர் பிறக்கும் போது ஒரு பாகப்பிரிவினை உண்டு. இடம் வாங்கி பத்திரம் செய்திருப்பார்கள். பள்ளிக்கூடம் அருகே இருப்பார்கள். மென்மையாக பேசுபவர்கள். சமாதான பிரியர். வெளிநாட்டு தொடர்பு இருக்கும். கவிதை, கட்டுரைகள் ஒரு நாட்டம் இருக்கும். புதன் நீச்சம் ஆனாலும் சூனியம் ஆனாலும் இவர்கள் காட்டுக்குள் சென்று ஒரு நரியை பார்ப்பது நல்லது. சனி கேது இணைப்பு தொடர்பு பரிகாரம் காட்டுக்குள் சென்று கரடியை பார்ப்பது நல்லது. சுக்கிரன், கேது இணைவு அல்லது சார பரிவர்த்தனை இருந்தாலும் இதற்கு பரிகாரம் பூம்பூம் மாடு பார்க்கலாம் அல்லது அடுத்தவர்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம்.

லக்னத்தில் குரு :

லக்னத்தில் குரு இருந்தாலும் பார்த்தாலும் 5, 7, 9 பார்வை உள்ளது. லக்னத்தில் குரு கவுரமான தோற்றம் உண்டு. சுகமான வாழ்க்கை உண்டு. செல்வம் தேடி வரும். மற்றவர்களுக்கு குரு இவர் அட்வைசர். ஜாதகர் பிறந்த உடன் குடும்பம் வளர்ச்சி. உறவில் குழந்தைகள் உண்டு. வீட்டின் அருகே மரம் இருக்கும். ஒரு கோவில் இருக்கும். ஜாதகருக்கு ஒரு பதவி உண்டு. ஜாதகர் கௌரவமானவர். அரசாங்க அரசியல், தொடர்பு உண்டு. சிறுவயதிலேயே வருமானம் உண்டு. படிப்பதற்கு தூண்டும். இவர்கள் எப்போதும் ஒரு மரத்தின் கீழ் உட்கார ஆசைப்படுவார். லக்னத்தில் சூரியன் அல்லது குரு அல்லது சுக்கிரன் அல்லது செவ்வாய் அல்லது புதன் இந்த மாதிரியெல்லாம் கிரகங்கள் லக்னத்தில் இருந்தால் ஜாதகருக்கு சிறப்பான அமைப்பு.

லக்னத்தில் சுக்கிரன்:

லக்னத்தில் சுக்கிரன் இருந்தாலும் பார்த்தாலும்

ஏழாம் பார்வை உண்டு. லக்னத்தில் சுக்கிரன் மெலிந்த அழகிய தோற்றம் உண்டு. பொன் பொருள், வாகன வசதி ஏற்படும். சிற்றின்ப நாட்டம் மிகுந்தவர் உயர்தரமான அறிவை பெற்றிருப்பார். ஜாதகர் ஹை டெக் பவர். நல்ல நாலேஜ் இருக்கும். இவர்கள் எதை படித்தாலும் ஒரு ஆர்வத்துடன் படிப்பார்கள். மிகச் சிறந்த அறிவாளி, சுகவாசி. இவர்கள் உணவு விஷயத்தில் நன்கு ருசியாக சாப்பிட விரும்புவார்கள். பெண்கள் நட்பு உண்டு. சிறுவயதில் வருமானம் இருக்கும். இவர் பிறந்த உடன் குடும்பம் நல்ல வளர்ச்சி அடையும். கண் பார்வை குறைபாடு இருக்கும். சிறுநீரக பிரச்சனை இருக்கும். ரத்தத்தில் சர்க்கரை நோய் இருக்கும்.

லக்னத்தில் சனி:

லக்னத்தில் சனி இருந்தாலும் பார்த்தாலும்

3, 7, 10 பார்வைகள் உண்டு. லக்னத்தில் சனி சோம்பேறித்தனம் மந்தத் தனம் உண்டு இரவுப் பணி நன்று

ஜாதகர் பிறந்த உடன் குடும்பத்தில் ஒரு கர்மம் நடந்திருக்கும். ஜாதகர் சோம்பல் குணம். சோம்பேறி. ஆயுள் பலம் உண்டு. மாதாமாதம் மருத்துவத்திற்கு செலவு செய்பவர்கள். சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இளம் வயதில் நரை முடி இருக்கும். திருமணம் தாமதமாகும். மணமேடையில் நரைமுடியுடன் திருமணம் நடந்திருக்கும். பேரன் பேத்தி பார்க்கும் யோகம் இருக்கும். சிறு வயதிலேயே வந்து இவர் தாத்தா பட்டம் பெற்றவர். ஜாதகர் தனிமை விரும்பி. சிவ பக்தர். வீட்டுத் திருமணம் நடந்த பொழுது சம்மந்தி வகைகள் ஒருவருக்கு விருப்பம் இருந்து ஒருவருக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்திருக்கும். வயது வித்தியாசம் இல்லாமல் பொருந்தாத ஜோடியாக இருக்கும்

லக்னத்தில் ராகு:

லக்னத்தில் ராகு இருந்தால் பார்த்தாலோ

மூன்று, ஏழு, பதினொன்று 3,7,11 பார்வை இருக்கும்.

வெளிநாட்டு தொடர்பு ஏற்படும். லக்னத்தில் ராகு. உயரமானவர்.. மெலிந்த தேகம் மற்றும் இளமையான தோற்றம் உள்ளவர். உண்மையை மறைப்பவர். பிறரை அடக்கி ஆளும் எண்ணம் உண்டு. சிற்றின்பப் பிரியர் ஜாதகருக்கு இவர் பிறக்கும்போதே ஒரு கண்டம் ஏற்படும். சுவாசப் பிரச்சனை இருக்கும். ஒரு இடமாற்றம் இருக்கும். ஒரு நீண்ட தூர பயணம் உண்டு. கோபம் அதிகமாக வரும். ஒரு சர்ஜரி இருக்கும். மூத்த சகோதர வகையுள் மூணு வயதில் அல்லது ஜாதகரின் 3 வயதில் ஒரு சகோதரரும் இருக்கும். ஜாதகர் கோடு போட்ட சட்டை ரொம்ப பிடிக்கும். இவர்களுக்கு ஒரு நோட்டில் எழுதச் சொன்னால் கிறுக்கிக் கிறுக்கி தான் எழுதுவார்கள். நீண்ட ஆயுள் உண்டு ஒரு தீய பழக்கம் உண்டு. மருத்துவ குணம் தெரிந்தவர். உயர்வான வாழ்க்கை வாழ்வார். மெயின் ரோட்டில் அருகில் வசிப்பவர்கள். இவர்களுக்கு பாலத்தின் அருகில் அமரும் பழக்கம் இருக்கும். மூணு வயதில் சகோதரன் இல்லையென்றால் தாய் தந்தையை பிரிந்து வாழ்வார்கள். மூணு வயது 11 வயதில் ஏதேனும் ஒரு சம்பவம் இருந்து கொண்டே இருக்கும்.

லக்னத்தில் கேது:

லக்னத்தில் கேது இருந்தாலும் பார்த்தாலும் லக்னத்தில் கேது ..செய்நன்றி மறப்பவன். அழகற்ற சரீரமுடையவன். லக்னத்தில் கேது இருந்தாலும் பார்த்தாலும் 3, 7, 11-ஆம் பார்வையாக பார்வை செய்வார். இவர்கள் வீடு சந்துக்குள் இருக்கும். நெரிசலான குறுகலான இடத்தில் வீடு அமையும். தாடி வளர்ப்பார்கள். இடியாப்பம் சாப்பிட ஆசைப்படுவார்கள். சுருள் முடி இருக்கும். பிறந்தபோது ஒரு பிரிவினை இருக்கும். ஆன்மிக நாட்டம் இருக்கும். அதிகமாக இருக்கும். குரு, கேது இருந்தாலும் பார்த்தாலும் அல்லது லக்னத்தில் குரு, கேது சாரத்தில் இருந்தாலும் ஜாதகர் ஒரு குட்டி கதை சொல்லிக்கொண்டு இருப்பார்கள். லக்னத்தில் கேது இருந்தால் காது நன்றாக கேட்கும். பாம்பு காது போல. சனி கேது சேர்க்கை தொடர்பு இருந்தால் காக்கைக்கு இடியாப்பம் வைப்பது பரிகாரம். சூரியன், சனி சேர்க்கை தொடர்பு இருந்தால் தோசைக்கல், அம்மிக்கல் கொத்தி வைப்பது பரிகாரம். லக்னத்தை எந்த கிரகமும் பார்க்கவில்லை, எந்த கிரகம் இல்லை என்றால் ஜாதகர் ஒரு தனிமை விரும்பி

 

லக்னாதிபதி இரண்டாம் இடத்தில்:

லக்னாதிபதி லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் அமர்ந்தால் அல்லது பார்த்தாலோ என்ன பலன் அதிபதி 2ல் இருந்தால் ஜாதகர் வாக்கு வன்மை உடையவர் ஜாதகருடைய வார்த்தைக்கு ஒரு மதிப்பு இருக்கும் பொருளாதாரம் பற்றிய சிந்தனை பேச்சில் வெளிப்படும் இயற்கை சுபர் மற்றும் லக்ன சுபர் எனில் குடும்பத்தின் மீது பற்று பாசம் இருக்கும்

பேச்சில் தெளிவு அழகிய முகம் மற்றும் குரல்வளம் கவர்ச்சி இருக்கும் ஒன்னு ரெண்டு சம்பந்தம் பேச்சில் ஆர்வம் அதிகம் இருக்கும். பேசினால் தொழில் அமையும்.

லாபகரமான பேச்சு பேசிய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் அவர்களுக்கு திருப்தி இல்லை.

வீட்டில் வக்கீல், ஆசிரியர், பிராமணர் யாராவது ஒருவர் இருப்பார். கண்ணில் அடிக்கடி தூசி விழும். பல் வலி ஏற்படும். ஜோதிடம் நல்லா வரும். நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். சரியான நேரத்திற்கு சாப்பிடுவார்கள். செலவு செய்த பணத்தை அளந்துதான் செலவு செய்வார்கள்.

லக்னாதிபதி 3 ஆம் இடத்தில்:

லக்னாதிபதி லக்னத்திற்கு 3 ஆம் இடத்தில் இருந்தாலும் பார்த்தாலும்

ஜாதகருக்கு சகோதரன் மேல் அதிக பற்று இருக்கும். ஆனால் சகோதர உறவில் திருப்தி இருக்காது. சுய முன்னேற்றம் இருக்கும். எழுத்து, கவிதை, பாடல் இதில் அதிக நாட்டம் இருக்கும். நிறைய பாடல்கள் எழுதுவார்கள். மார்க்கெட்டிங். இசை குரல் வளம் இருக்கும். மிமிக்ரி பண்ணுவார்கள். எந்த முயற்சி செய்தாலும் விடா முயற்சி செய்து அதில் ஜெயிப்பார்கள். வீட்டில் ஹோம் தியேட்டர் இருக்கும். இசைக்கருவி வைத்திருப்பார்கள், டைப் பண்ணுவது. தையல் ஆர்வம் இருக்கும். கமிஷன் தொழில் செய்பவர்கள். பத்திரிக்கை பிரின்டிங் இதில்ஆர்வம் இருக்கும். சின்னத்திரை தொடர்பு. பெரியோர்களின் நட்பு சுலபமாக கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகமாக இருக்கும். பிறந்த இடத்தைவிட்டு வெளியூரில் புகழ் சேர்ப்பார்கள். ENT problem இருக்கும். இவர்களுக்கு காது அடிக்கடி குடையக் கூடாது என்று அட்வைஸ் செய்ய வேண்டும். ஆபரண சேர்க்கை உண்டு. 3 வயதில் ஒரு இடமாற்றம் இருக்கும். இவர்கள் சகோதரனை விட்டு தள்ளியே இருக்க வேண்டும். சகோதரனுக்கும் ஒரு இடமாற்றம் இருக்கும். கும்ப ராசியில் இருந்து இந்த தொடர்பு கொண்டால் சாமியாடுவார்கள். அதிர்ஷ்டத்தில் ஈடுபாடு இருக்கும். ஆரம்பகால வாழ்க்கை கஷ்டத்தைக் கொடுக்கும். எட்டு வயதில் ஒரு கருமம் நடந்திருக்கும். ஒரு விபத்து இருக்கும். பூர்வீகத்தில் ஒரு வில்லங்கம் இருக்கும், இருந்தாலும் அதை சாதித்துக் காட்டுவார்கள். முன்னேற்றம் உண்டு. அனாதை இல்லம், காப்பகம் இவற்றுக்கு உதவி செய்வார்கள். வெளிநாட்டு வருமானம் உண்டு. அனாமத்து சொத்து ஏதாவது கிடைக்கும் அல்லது வேறு யாராவது பவர் பட்டா கொடுப்பார்கள். பினாமி சொத்து இவர்கள் வாரிசாக வருவார்கள்.

எட்டாம் இடத்தில் ஒரு கிரகம் வக்ரமாக இருப்பது நல்லது கிடையாது

மேலும் இவர்கள் மரணம் விமர்சிக்கப்படும்.

புதைத்தால் தோண்டி எடுப்பார்கள்.

இறப்பில் ஒரு சந்தேகம் இருக்கும்.

கடகம் மற்றும் விருச்சிக ராசியில் சனிபகவான் மட்டும் அமர்ந்திருந்தால், இவர்கள் மரணம் இயற்கைக்கு மாறாக இருக்கும்.

அதே இடத்தில் சனிபகவான் வக்ரமாக இருந்தால் சந்தேகம் வலுப்பெறும். பெட்டிசன் போட்டு பிணம் தோண்டி எடுக்கப்படும், திதி சூன்யம், பாதகாதிபதி தொடர்பு மரணத்தை உறுதிப்படுத்தும்.

கும்பராசி எட்டாம் இடமாக வந்ததோ, லக்னாதிபதி கும்ப ராசியில் இருந்தாலும் இவர்கள் சாமியாடுவார்கள் அல்லது குடும்பத்தில் இருப்பார்கள்.

வர்மக்கலை,

மசாஜ்.

எண்ணெய் விற்பனை.

எல்ஐசி.

மணல் குவாரி.

கிரானைட்.

டிரை கிளீனிங்.

மருத்துவமனை.

ரகசிய உளவு பிரிவு.

தொல்பொருள் ஆராய்ச்சி செய்வது,

இராணுவம் ஆகிய தொழிலில் இருப்பவர்கள்.

ஜோதிடம் சிறப்பாக வரும்.

லக்னாதிபதி ஒன்பதாமிடத்தில் இருந்தாலும் பார்த்தாலும்

ஜாதகர் தாய் தந்தையை பிரிந்து வாழ்வார்கள். பிறந்த இடத்தைவிட்டு வேறு ஊரில் வாழ்வார்கள்.

ஒரு நீண்ட தூர பயணம் செய்வதில் அதிக விருப்பம் இருக்கும். வெளிநாடு வெளி மாநிலம் செல்ல கூடிய அமைப்பு வரும் ஆசிரியர் ஜோதிடர் குடும்பத்தில் இருப்பார்கள் வீட்டில் ஹோமம் பூஜை செய்வார்கள் Phd,M Phil.உயர்கல்வி படிப்பார்கள் மற்றவர்களுக்கு உபதேசம் செய்பவர்கள் ஒரு மதத்தில் ஈடுபாடு இருக்கும். நிறைய பாக்கியங்கள் இவர்களைத் தேடி வரும்

வீட்டில் நிறைய ஆன்மீக புத்தகங்கள் இருக்கும். ஜோதிட அறிவு இருக்கும். குருமார்கள் ஆசி கிடைக்கும். .படகு சவாரி செய்வார்கள். அஞ்சாம் பாவம் அல்லது ஒன்பதாம் பாவத்தில் குரு இருந்து கெட்டுப் போயிருந்தால் ஜாதகர் வேறு மதத்தில் சேரக் கூடிய அமைப்பு.

தந்தை மீது பாசம் அதிகம் அந்த பாசத்தை அனுபவிக்க தடையாக இருக்கும்.

புதன் திதி சூனியம் ஆனால் இவர்களால் ஒருமுடிவு எடுக்க முடியாது.

லக்னாதிபதி பத்தாம் இடத்தில் இருந்தாலோ பார்த்தாலோ

ஜாதகர் சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் அதிகமாக இருக்கும்ஆண் வாரிசு இருக்கும். நல்ல பதவி இருக்கும். தாமத திருமணம் உண்டு. அன்னதானம் செய்வதில் விருப்பம் இருக்கும். இவர்கள் எங்கு போனாலும் சாப்பிடாமல் இவர்களை அனுப்ப மாட்டார்கள். வீட்டில் எப்போதும் சாப்பாடு இருக்கும்.

லக்னாதிபதி நான்காம் இடத்தில் :

லக்னாதிபதி நான்காம் இடத்தில் இருந்தாலும் பார்த்தாலும் ஜாதகருக்கு வீடு,வண்டி, வாகனம் மீது பற்று இருக்கும். தாய் அதிகமாக பாசமாக இருப்பார், இருந்தாலும் ஜாதகருக்கு தாய்ப்பாசம் கிடைக்காது. அதை அனுபவிக்க தடையாக இருக்கும். தாயுடைய பாசத்தில் திருப்தி இருக்காது.

லக்னாதிபதி 5 ஆம் இடத்தில்:

லக்னாதிபதி லக்னத்திற்கு 5 ஆம் இடத்தில் இருந்தாலும் பார்த்தாலும் சென்ற பிறவியில் செய்த புண்ணிய விஷயத்தை நல்ல கர்மாவை அனுபவிக்க பிறந்தவர்கள். இவர்கள் பிறந்த ஐந்து வயதுக்கு மேல் குடும்பம் வளர்ச்சி அடையும். வீட்டின் அருகில் மடம், கோவில், பள்ளிக்கூடம் இருக்கும்.

தாத்தாவுடைய குணாதசியங்கள் கொஞ்சம் ஜாதகருக்கு இருக்கும். ஜோதிடத்தில் ஆர்வம் இருக்கும். நமஸ்காரம், பூஜை, ஹோமம் இதில் விருப்பம் இருக்கும். ஆன்மீக நாட்டம் இருக்கும். குலத்தொழில், புதிய தொழில் இதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். காதல் கலைகளில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். 40 வயதுக்கு மேல் படித்துக்கொண்டே இருப்பார். இவர்களுக்கு உழைக்காத வருமானம் உண்டு. வீட்டில் புராணகால புத்தகங்கள் இருக்கும். குலதெய்வ அருள் இருக்கும். காடு மலை இந்த மாதிரியான இடங்களுக்கு செல்வார்கள். இவர்கள் வீட்டின் முன்பு கல் வைத்து சாமி கும்பிடுவது வழக்கமாக இருக்கும். இயற்கை வழிபாடு எல்லாம் பிடிக்கும். குழந்தைகள் மேல் அதிக பற்று இருக்கும். உறவில் திருப்தி இருக்காது. ஐந்து, ஒன்பது, பதினொன்று இந்த பாவங்களில் லக்னாதிபதி அமர்ந்தால் வாழ்க்கை எப்போதுமே சிறப்பாக இருக்கும்.

லக்னாதிபதி ஆறாம் இடத்தில்:

லக்னாதிபதி ஆறாம் இடத்தில் இருந்தாலும் பார்த்தாலும் லக்னாதிபதி ஆறில் மறைவது நல்லதல்ல எதிரிகள் உண்டு உடல் நோய் கடன் களத்ரத்தால் பிரச்னைகள் உண்டு

லக்னாதிபதி ஆறாம் இடத்தில் இருந்தாலும் பார்த்தாலும் ஜாதகருக்கு உத்தியோகம் நன்று சூரியன் செவ்வாய் ஆறாம் இடத்திற்கு தொடர்பு கொண்டார் போலீஸ் ராணுவம் மருத்துவம் இந்த வேலைகள் அமையும் அரசு உத்தியோகம் அமையும் உணவுத் தொழில் செய்யலாம் வெளிநாட்டு வருமானம் உண்டு குறைந்த முதலீட்டில் தொழில் செய்வார்கள் சிறுசிறு விபத்துகள் ஏற்படும் வாயு தொல்லை இடுப்பு வலி இருக்கும் எதிரிகள் உண்டு இரவு வேளை நல்லது வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் இவர்கள் சாப்பிட்டவுடன் தூங்குவார்கள் சூரியன் புதன் கேது இணைவு தொடர்பு ஏஜெண்சி வேலை லக்னாதிபதிஆறில் நின்றால் அடிமைத் தொழில் அவ்வப்போது சங்கடங்கள் உண்டு

லக்னாதிபதி ஏழாம் இடத்தில்:

லக்னாதிபதி லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் இருந்தாலும் பார்த்தாலும்

ஜாதகருக்கு ஆயுள் பலம் உண்டு. இவர்களைத் தேடி போவாங்க. திருமணம் தாமதமாகும். பொது சேவையில் ஈடுபாடு இருக்கும். சமூக சிந்தனை இருக்கும். உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை ஜாதகருக்கு இருக்கும். சந்நியாசியாக போகலாம் என்ற எண்ணம் இருக்கும். ஆன்மீக நாட்டம் இருக்கும். நீண்ட தூர பயணத்தில் தான் செல்ல விரும்புவார்கள். படிப்புக்காக செலவு செய்பவர்கள். தாய்வழி பாட்டி மீது அதிக பாசம் இருக்கும். அந்த உறவு சரியாக இருக்காது. கூட்டுத் தொழில் செய்பவர்கள். கணவன் மனைவி இருவரும் பாசமாக இருப்பார்கள். கணவன் மனைவி மீது பாசம் அல்லது மனைவி கணவன் மீதும் இப்படி இருப்பார்கள். தாய் தந்தையை பிரிந்து வாழ்வார்கள். சொத்து வாங்குபவர்கள். இரண்டாவது குழந்தை மீது அதிக பாசம் இருக்கும். நெய் ஊற்றி அதிகமாக சாப்பிடுவது இவர்களுக்கு பிடிக்கும். அறிவில் புத்திசாலியாக இருப்பார்கள்.

டிப்ஸ்:

சூரியனுக்கு மூன்றாம் இடம் பாலாகும் சந்திரனுக்கு இரண்டாம் இடம் பால் படும் ஒரு பிரச்சனை கொடுக்கும்.

சனி செவ்வாய் கேது அல்லது சந்திரன் செவ்வாய் கேது இணைவு தொடர்பு இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் தொடர்பு வரும் அல்லது திருமணம் இரண்டு கொடுத்துவிடும்.

லக்னாதிபதி எட்டாம் இடத்தில்:

லக்னாதிபதி எட்டாம் இடத்தில் இருந்தாலும் பார்த்தாலும்

லக்னாதிபதி எட்டில் இருந்தாலும் பார்த்தாலும் ஆயுள் பலம் உண்டு.

ஆரோக்கியக் குறைவு.

விபத்து, வழக்கு உண்டு.

அமானுஷ்ய சக்தியின் ஈடுபாடு இருக்கும்.

இவர்கள் மருந்து வாங்கி சாப்பிட்டால் நோய் குணமாகும்.

இவர்கள் எப்போதும் கையில் ஏதாவது ஒரு மருந்துப்பொருள் வைத்திருப்பார்கள்.

மருந்து விஷயங்களில் இவர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்கும்.

உயில் சொத்து உண்டு.

பூர்வீகத்தை விட்டு கொடுப்பார்கள்.

ஆன்மீக நாட்டம், என்று தாழ்வு மனப்பான்மை இருக்கும்.

தன்னை அழகுபடுத்திக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு வழக்கு போட்டால் ஜெயிப்பார்கள்.

இங்கு ராகு தொடர்பு வந்தால் ஒரு திருட்டுப்பழி வரும்.

இவர்கள் பொது காரியங்களில் பொறுப்பு எடுக்கக் கூடாது.

இங்கு ராகு, மாந்தி, திதி சூன்யம் தொடர்பு வந்தால் சாமி ஆடுவார்கள். லக்னாதிபதி எட்டில் இருந்தால் அவர் லக்னத்துக்கு இரண்டைப் பார்ப்பார் வாயால் பேச்சால் கெடுவார் கடன் வாங்குவார் ஜாமீன் கையைழுத்திட்டு மாட்டுவார்

கும்ப ராசி எட்டாம் இடமாக வந்தாலும் லக்னாதிபதி

கும்ப ராசியில் இருந்து இந்த தொடர்பு கொண்டால் சாமியாடுவார்கள்.

அதிர்ஷ்டத்தில் ஈடுபாடு இருக்கும்.

ஆரம்பகால வாழ்க்கை கஷ்டத்தைக் கொடுக்கும்.

எட்டு வயதில் ஒரு கருமம் நடந்திருக்கும்.

ஒரு விபத்து இருக்கும்.

பூர்வீகத்தில் ஒரு வில்லங்கம் இருக்கும், இருந்தாலும் அதை சாதித்துக் காட்டுவார்கள்.

முன்னேற்றம் உண்டு.

அனாதை இல்லம், காப்பகம் இவற்றுக்கு உதவி செய்வார்கள்.

வெளிநாட்டு வருமானம் உண்டு.

அனாமத்து சொத்து ஏதாவது கிடைக்கும் அல்லது வேறு யாராவது பவர் பட்டா கொடுப்பார்கள்.

பினாமி சொத்து இவர்கள் வாரிசாக வருவார்கள்.

எட்டாம் இடத்தில் ஒரு கிரகம் வக்ரமாக இருப்பது நல்லது கிடையாது

மேலும் இவர்கள் மரணம் விமர்சிக்கப்படும்.

புதைத்தால் தோண்டி எடுப்பார்கள்.

இறப்பில் ஒரு சந்தேகம் இருக்கும்.

கடகம் மற்றும் விருச்சிக ராசியில் சனிபகவான் மட்டும் அமர்ந்திருந்தால், இவர்கள் மரணம் இயற்கைக்கு மாறாக இருக்கும்.

அதே இடத்தில் சனிபகவான் வக்ரமாக இருந்தால் சந்தேகம் வலுப்பெறும். பெட்டிசன் போட்டு பிணம் தோண்டி எடுக்கப்படும், திதி சூன்யம், பாதகாதிபதி தொடர்பு மரணத்தை உறுதிப்படுத்தும்.

கும்பராசி எட்டாம் இடமாக வந்ததோ, லக்னாதிபதி கும்ப ராசியில் இருந்தாலும் இவர்கள் சாமியாடுவார்கள் அல்லது குடும்பத்தில் இருப்பார்கள்.

வர்மக்கலை,மசாஜ்.

எண்ணெய் விற்பனை.

எல்ஐசி.

மணல் குவாரி.

கிரானைட்.

டிரை கிளீனிங்.

மருத்துவமனை.

ரகசிய உளவு பிரிவு.

தொல்பொருள் ஆராய்ச்சி செய்வது,

இராணுவம் ஆகிய தொழிலில் இருப்பவர்கள்.

ஜோதிடம் சிறப்பாக வரும்.

லக்னாதிபதி ஒன்பதாமிடத்தில்:

லக்னாதிபதி ஒன்பதாமிடத்தில் இருந்தாலும் பார்த்தாலும்

ஜாதகர் தாய் தந்தையை பிரிந்து வாழ்வார்கள். பிறந்த இடத்தைவிட்டு வேறு ஊரில் வாழ்வார்கள்.

ஒரு நீண்ட தூர பயணம் செய்வதில் அதிக விருப்பம் இருக்கும். வெளிநாடு வெளி மாநிலம் செல்ல கூடிய அமைப்பு வரும் ஆசிரியர் ஜோதிடர் குடும்பத்தில் இருப்பார்கள் வீட்டில் ஹோமம் பூஜை செய்வார்கள் Phd,M Phil.உயர்கல்வி படிப்பார்கள் மற்றவர்களுக்கு உபதேசம் செய்பவர்கள் ஒரு மதத்தில் ஈடுபாடு இருக்கும். நிறைய பாக்கியங்கள் இவர்களைத் தேடி வரும்

வீட்டில் நிறைய ஆன்மீக புத்தகங்கள் இருக்கும். ஜோதிட அறிவு இருக்கும். குருமார்கள் ஆசி கிடைக்கும். .படகு சவாரி செய்வார்கள். அஞ்சாம் பாவம் அல்லது ஒன்பதாம் பாவத்தில் குரு இருந்து கெட்டுப் போயிருந்தால் ஜாதகர் வேறு மதத்தில் சேரக் கூடிய அமைப்பு.

தந்தை மீது பாசம் அதிகம் அந்த பாசத்தை அனுபவிக்க தடையாக இருக்கும்.

புதன் திதி சூனியம் ஆனால் இவர்களால் ஒருமுடிவு எடுக்க முடியாது.

லக்னாதிபதி பத்தாம் இடத்தில்:

லக்னாதிபதி பத்தாம் இடத்தில் இருந்தாலோ பார்த்தாலோ

ஜாதகர் சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் அதிகமாக இருக்கும்ஆண் வாரிசு இருக்கும். நல்ல பதவி இருக்கும். தாமத திருமணம் உண்டு. அன்னதானம் செய்வதில் விருப்பம் இருக்கும். இவர்கள் எங்கு போனாலும் சாப்பிடாமல் இவர்களை அனுப்ப மாட்டார்கள். வீட்டில் எப்போதும் சாப்பாடு இருக்கும். பத்தாம் பாவம் பலமானால் சிறப்பு. பத்தாம் இடத்தில் கேது இருந்தாலும் பார்த்தாலும் பலமானதாக இருக்கும்

லக்னாதிபதி பதினொன்றில்:

லக்னாதிபதி பதினொன்றில் இருந்தாலும் பார்த்தாலும் நீண்ட ஆயுள். நண்பர்கள் அதிகம். ஜாதகர் மூத்தவர். அதிக அளவில் ஆசைப்படுவார்.கூட்டு தொழிலில் வெற்றி. இருதார யோகம் உண்டு. ஜோதிட ஞானம் இருக்கும். அரசியலில் ஈடுபட்டு தலைமை தாங்குவார்கள். கல்வி அறிவு இருக்கும். ராகு கேது தொடர்பு கொண்டால் வேறு மதத்தினர் நண்பர்களாக இருப்பார்கள். மாற்று மதத்தின் மூலம் ஒரு வழக்கு இருக்கும்.

லக்னாதிபதி 8ல் இருந்து சுக்ரன் 11ல் இருந்தால் வேற்று மதத்திற்கு மாற சொன்னவருக்கு ஒருஅவச்சொல் வரும். ஜாதகர் மதம் மாறமாட்டார்.

லக்னாதிபதி 5ல் இருந்து சுக்ரன்11ல் இருந்தால் ஜாதகருக்கு வேற்று மதத்திற்கு மாறுவார். வேற்று மதத்திற்கு வாங்க என்று அழைப்பு வரும். லக்னாதிபதிக்குத் திரிகோணத்தில் ராகு கேது இருந்தால் தடைகள்

லக்னாதிபதி 12ல்:

லக்னாதிபதி 12ல் இருந்தாலும் பார்த்தாலும்

ஐம்புலன்கள். ஜாதகர் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் சனிபகவான் தான் தன் உடலை தாங்கும். சிறுவயதில் ஜாதகர் காணாமல் போனவர். அலைச்சல் பயணம். அதிகம் காலில் சக்கரம் கட்டின மாதிரி எங்க போனாலும் போய் வருவார்கள். தர்ம சிந்தனை இருக்கும். கூட்டு குடும்பம். பர்வத யோகம். துணைத் தொழில் உண்டு நிர்வாகம் ஒரு சங்கம் இயக்குவார்கள். உயரமான இடம் இவர்களுக்கு எப்போதும் ஆகாது 3 மிடம் போகம் வீரியம் 12 மிடம் படுக்கை சுகம் தாம்பத்தியம்.

நன்றி 

வாழ்க வளமுடன்

தமிழரசன் க

தக்‌ஷா ஜோதிட நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்

https://www.dakshaastrology.com

whatsapp: +919787969698

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...