மூன்றாம் பாவகம்
இது உபஜெய ஸ்தானம். இரட்டை பிறவியை சொல்லும். இடது கை, எழுத்து, ஆறுவிரல் மூன்றாம் பாவகம் சொல்லும்.
கேந்திர பலம் குறைந்தாலும் உபஜெய ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் காப்பாற்றும்.
ஒரு கதவு அடைக்கப் பட்டார் இன்னொரு கதவு திறக்கும் என்பதைப்போல உபஜெய ஸ்தானத்தில் உள்ள கிரகம் ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் காப்பாற்றும். 40 வயதுக்கு மேல் கை தூக்கிவிடும் பாவம் இது.
3, 6, 10, 11 இந்த பாவங்களில் கிரகங்கள் இருப்பது ஜாதகருக்கு அதிக வளர்ச்சியைக் கொடுக்கும்.
திருமண பொருத்தத்திற்கு மூன்றாம் பாவம் ரொம்ப முக்கியம். தைரிய வீரிய ஸ்தானம் இது காம திரிகோணத்திற்கு முதல் பாவம் 3-ஆம் பாவம் ஆகும். உபஜெய ஸ்தானம் என்பது ஒரு கிரகத்திற்கு வலுவூட்டுகிறது
ஒரு பாவத்திற்கு 3 11-ஆம் பாவகங்களில் கிரகங்கள் இருப்பது நல்லது. நாலாம் பாவம் சொத்து நாலாம் பாவத்திற்கு மூணு பதினொன்றாம் பாவங்களில் கிரகங்கள் இருப்பது சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும் முயற்சியால்..
ஏழாம் பாவம் திருமணம். ஏழாம் பாவத்திற்கு மூணு 11ஆம் பாவங்களில் கிரகங்கள் இருப்பது தன் முயற்சியால், முயற்சி மூலம் திருமணம் வெற்றி கொடுக்கும்.
நாலாம் பாவத்திற்கு 3, 11 ம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் தாயாருக்கு சகோதரரும் உண்டு.
உபஜெய ஸ்தானம் திதி சூன்ய பாதிப்பை குறைக்கிறது
ஒரு உப ஜெய ஸ்தான அதிபதி இன்னொரு உபஜெய ஸ்தானத்தில் இருந்தால் நல்ல பொருளாதாரம் ஜாதகருக்கு கிடைக்கும்
3, 6, 10, 11 இந்த அதிபதிகள் உபஜெய ஸ்தானத்திற்கு உள்ளேயே மாறிமாறி அமர்ந்திருந்தாள் அவர்களின் திசாபுத்தி நன்மையான பலன்களை தரும் வலிமையான பலன்களையும் ஜாதகருக்கு கொடுக்கிறது
மூன்றாம் இடத்தில் சூரியன் :
மூன்றாம் இடத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்? சூரியன் மூன்றாம் பாவத்தில் இருந்தால் பிரயாணங்கள் சகோதரனுடன் பிரச்சனை சகோதரன் நட்புறவு ஏற்படாது. இந்த மாதிரி சொல்லலாம்.
மூன்று வயதுக்கு மேல் குடும்பம் வளர்ச்சி. சகோதரனுக்கு புகழான வாழ்க்கை கிடைக்கும். ஜாதகருக்கு 30 வயதுக்கு மேல் வளர்ச்சி உண்டு. கலைத்துறை நாட்டம் இருக்கும். விளையாட்டு ஆர்வம் இருக்கும். திருமணத்திற்கு முன் உறவு கொள்வது. மேலும் ஆசிரியர் பெரும் முயற்சி. கோதுமை பொருட்கள் மீது அதிக நாட்டம், மருத்துவகுணம் அறிவு இருக்கும். அரசாங்க, அரசியல் தொடர்பு இருக்கும். தலைமை தாங்குவது ஈடுபாடு இருக்கும். போகத்தில் அதிக நாட்டம் இருக்கும், ஆனால் போகத்தில் திருப்தி இருக்காது. ஆபரண சேர்க்கை இருக்கும், புத்திர தோஷம் இந்த ஜாதகருக்கு சொல்லும். தாய்மாமன் உறவை இந்த ஜாதகம் கெடுக்கும்.
மூன்றாம் இடத்தில் சந்திரன்
அதிக ஏமாற்றம். பல முறைகளில், பல வழிகளில் ஏமாற்றம். குறுகிய பணம் இருக்கும். உத்தியோகத்தில் மாற்றம் உண்டு. தாயன்பு குறைவு அல்லது தாய்ப்பால் கிடைக்காது. மூன்று வயதில் ஒரு இடமாற்றம் இருக்கும். மூன்று வயதில் ஏமாற்றம் இருக்கும். 30 வயதில் ஒரு ஏமாற்றம், ஒரு இடமாற்றம் இருக்கும். பணம் சார்ந்த தொழில், விவசாயம், உணவு, தொழில் செய்யலாம். மூக்கடைப்பு, ஜலதோஷம் இருக்கும். சுகபோகம் குறைவாக இருக்கும். கடல் பயணம், கடல் சார்ந்த தொழில், பெண்களால் ஏமாற்றம் அவசரத்தால் ஏமாற்றம். பயணம் செய்ய இவர்கள் பயப்பட மாட்டார்கள். சகோதரனுக்கு ஒரு தீய பழக்கம் இருக்கும். சகோதரன் பிறந்தவுடன் இவர்கள் இடத்தை மாற்றிக் கொள்வார்கள்.
மூன்றாம் இடத்தில் செவ்வாய் :
மூன்றாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் உரத்த குரல், தைரியம், கட்டுமஸ்தான உடம்பு, போலீஸ், ராணுவம், காரகோ பாவ நாஸ்தி செவ்வாய் எங்கு உள்ளது அங்கு ஜாதகருக்கு ஒரு வெட்டுக் காயம் இருக்கும். செவ்வாய் மிதுனத்தில் இருந்தால், கைகளில் வெட்டுக்காயம் இருக்கும். செவ்வாய் 12ல் இருந்தால் பாதங்களில் வெட்டுக்காயம் இருக்கும். 3-ல் செவ்வாய் கை மணிக்கட்டு, தோள்பட்டை பிரச்சினை இருக்கும். மூனு வயதில் சொத்து இருக்கும். 30 வயதில் உடற்பயிற்சி, நடைபயிற்சி போவார்கள். ஓவியம், விளையாட்டில் ஆர்வம், அதிகமாக இருக்கும். மின் சாதனங்களில் அதிகமாக கையாண்டு வேலை செய்வார்கள்.
மூன்றாம் இடத்தில் புதன் :
மூன்றாம் இடத்தில் புதன் இருந்தால் இரட்டைத் தன்மை. விண்ணப்பங்களை இரண்டு முறை அனுப்புவார்கள். எதையுமே இரண்டு முறை முயற்சி செய்வார்கள். முதல் முயற்சியை விட இரண்டாவது முயற்சி தான் வெற்றி கொடுக்கும். இவருக்கு அடுத்த சகோதரர் இரண்டு பேர் இருப்பார்கள். கவிதை, கட்டுரை, கமிஷன் இதில் வேலை பார்க்கலாம். அழகான எழுத்து வரும். வழக்கு, சீட்டு தொழிலில் விருப்பம் இருக்கும். சனி புதனுக்கு மூன்றாமிடம் நல்லது கிடையாது. அப்படி இருந்தால் வீரிய பாதிப்பு இருக்கும். பத்திரம் இரண்டு முறை பதிவு செய்வார்கள். இரண்டு போகத்தை அனுபவிப்பார்கள். ஜோதிடம் நன்று நகைச்சுவையான பேச்சு இருக்கும் .மூன்றாம் இடத்தில் புதன் விரல்களில் சேதம் இருக்கும். ஜெராக்ஸ் கடை சிறப்பு.
மூன்றாம் இடத்தில் குரு:
மூன்றாம் இடத்தில் குரு இருந்தால் என்ன பலன் படிப்புக்காக பயணம் போவார்கள். ent பிரச்சினை இருக்கும். தந்தைக்கு உடல் நலக் குறைவு இருக்கும். சகோதர, சகோதரி உண்டு. உடன்பிறப்புகள் ஜாதகரை விட வசதியானவர்கள். தந்தைக்கு ஒரு பதவி இருக்கும். எழுத்து, குரல் அழகாக இருக்கும். மூன்று வயதுக்கு மேல் குடும்பம் வளர்ச்சி அடையும். மூன்று வயதில் சகோதர, சகோதரி இருப்பவர்கள். ஒரு குழந்தை பிறக்கும். மூணு வயதில் 9ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தந்தை தொலைதூரத்தில் இருக்கலாம். அல்லது ஜாதகர் ஹாஸ்டலில் தங்கி படிப்பார்.. 30 வயதுக்கு மேல் படிப்பது,
வீட்டில் ஆன்மீக நூல்கள் இருக்கும். ஒரு லைபரரி இருக்கும்.
வீட்டில் வங்கித்தொழில், ஆசிரியர், ஜோதிடர் இப்படி யாராவது இருப்பார்கள்.
மூன்றாம் இடத்தில் சுக்கிரன்:
மூன்றாம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன், இவர்களுக்கு கலைத்துறை ஈடுபாடு இருக்கும். நல்ல எழுதுவார்கள். அழகான குரல் இருக்கும். அத்தை இருப்பார். கம்ப்யூட்டர் வாகனத் தொழில் செய்யலாம். அடிக்கடி வாகனத்தை மாற்றுவார். குடும்பத்தில் அரசு உத்தியோகம் கண்டிப்பாக யாருக்காவது இருக்கும். கைராசிக்காரர். சாஸ்திரத்தில் ஞானம் அதிகமாக இருக்கும். மென்மையான குரல் இருக்கும். அறிவு நல்லா இருக்கும்.
மூன்றாம் இடத்தில் சனி:
மூன்றாம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன் சனி எங்கு இருந்தாலும் அந்த உயிர் பாவத்திற்கு சர்ஜரி இருக்கும். உடைசல், அமைப்பு இருக்கும், ப்ரோக்கிங் கைகால், தொண்டை, புஜம் கம் கட்டில் அழுக்கு சேர்வது, காதில் அழுக்கு சேர்ந்து எடுக்க முடியாமல் போவது. சகோதர வகையில் பீடை, மூன்று வயதில் ஒருகருமம் இருக்கும். எந்த முயற்சி எடுத்தாலும் தடை இருக்கும். இவர்களை முயற்சி செய்ய சொல்லி ஊக்கப்படுத்தினார் ஜெயிப்பார்கள். 3 வயதில் ஒரு கஷ்டம் இருக்கும். தந்தைக்கு வியாதி உண்டு. சகோதரனுக்கு கஷ்டம் இருக்கும். தோல், தோள்பட்டை விரல்களில் சேதம் இருக்கும். இவர்கள் மெதுவாகத்தான் எழுதுவார்கள். தந்தையின் தொழில் மெட்டல், இரும்பு சார்ந்த தொழில் இவர்கள் செய்யலாம். மூக்கடைப்பு இருக்கும்.
மூன்றாம் இடத்தில் ராகு:
மூன்றாம் இடத்தில் ராகு இருந்தால் என்ன பலன் ஜாதகனுக்கு நீண்ட விரல்கள் இருக்கும். வெளிநாட்டு வருமானம் உண்டு. ஜாதகருடைய சகோதரனுக்கு கண்டம் இருக்கும். சகோதரர் வெளிநாட்டில் இருப்பார். ஜோதிடம் என்று தாயத்து கட்டினால் நல்லது. சுற்றுலாத்தொழில், வீண் வதந்தி, பெட்டிசன், ட்ரான்ஸ்போர்ட் திடீர் உயர்வு இதெல்லாம் இருக்கும். 30 வயதுக்கு மேல் வளர்ச்சி உண்டு. எந்த வழக்கு என்றாலும் ஜெயிப்பார்கள். இழந்த அந்தஸ்தை மீட்பார்கள். சகோதரனுக்கு உடல்நிலை பாதிப்பு இருக்கும். health நன்றாக இருக்காது. ரெக்கார்டிங், கம்ப்யூட்டர் டைப் செய்வது இவர்களுக்கு நல்லது.
மூன்றாம் இடத்தில் கேது:
மூன்றாம் இடத்தில் கேது இருந்தால் என்ன பலன் ஜோதிடம் சிறப்பு. கயிறு மந்திரித்து தருவது, கட்டுவது, தாயத்து மந்திரிச்சு கொடுப்பது இவர்கள் செய்யலாம். மருத்துவத்தில் ஈடுபாடு இருக்கும். மூன்று வயதில் உறவில் விரிசல் வரும். 30 வயதில் உறவுகளில் பாதிப்பு கஷ்டம் வரும். திருமணத்திற்கு முன் உறவு இருக்கும். போகத் தடை இருக்கும். மூன்றாமிட கேது அதிகமாக சன்யாசி வாழ்க்கையை ஏற்படுத்தும். சகோதர உறவில் விரிசல் இருக்கும். விரல்களில் சேதம் கொடுக்கும். காது, மூக்கு, தொண்டை பிரச்சனையை கொடுக்கும். மூன்றாம் இடத்திற்கு உண்டான காரகர் செவ்வாய். செவ்வாய் ஊசி, கேது பஞ்சு, ராகு, கேது பூச்சி, வண்டு, பூரான் மூன்றாம் இடத்தில் ராகு, கேது இருந்தால் இவர்களுக்கு வண்டு பூரான் தொல்லை இருக்கும் பஞ்சு வைத்து காதில் குடைந்து கொண்டே இருப்பார்கள்இது நல்லது இல்லை. குரு கேது 3-ஆம் இடத்தில் இருந்தால் காதுகுறுகுறுப்பாக இருக்கும் அப்போது இவர்கள் காதை குடைவார்கள். இவர்களுக்கு பிரபஞ்ச வசியம் இயற்கையிலேயே இருக்கும். தேவதை வசியம் உண்டு. இழந்ததை மீட்டு விடுவார்கள்.
பாவங்கள் குறிப்பிடும் நிகழ்வுகள்:-
3, 9 (புதன்) தகவல் பெறுதல்.
3, 9 (சுக்கிரன்) பிரயாணம் செய்தல்.
3, 4 உடைமைகள் வெளியேற்றம்.
3, 12 உடைமைகளை விற்றல்
3,9,11 தகவல் தொடர்புகள் நிறைவேற.
3, 6, 9 ஒப்பந்தம் வெற்றி பெற.
3, 4, 8 கடித தொடர்புக்கு சிரமம்
3, 4, 11 எழுத்து ஒப்பந்தத்தில் வெற்றி
3, 4, 9, 11 உயில் மூலம் லாபம் பெறுதல்
3, 4, 2, 11 உதவி பணம் பெறுதல.
3, 4, 9 ஆசிரியர்
3, 5, 9 கவிதை வரும். கதாசிரியர்
3, 8 நல்லஆயுள்
3,5,12 இன்டர்யூவில் தோல்வி
3, 5, 11 இன்டர்யூவில் வெற்றி
3, 2, 8 கருத்தரங்கம், தோல்வி
3, 2, 8, 12 பேச்சு வார்த்தையில் தோல்வி
3, 3, 9, 11 பேச்சு வார்த்தையில் வெற்றி
3,9,11 தகவல் தொடர்பு
3, 7, 12 பத்திரம் தொலைந்து போதல்.
மூன்றாம் அதிபதி லக்னத்தில்:
மூன்றாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன் உடற்பயிற்சி, சைக்கிளிங், நின்றபடி ஓட்டுவது. வெளிமாநிலம், வெளிநாடு, போலீஸ், ராணுவம் சைக்கிள் கடை, தொலை தூரகல்வி, குறுகிய கால கல்வி, ஆன்லைனில் புத்தகம் வாங்குவது, எதையும் ஆன்லைனில் புக் செய்வது. புத்தக அலமாரி வீட்டில் இருக்கும். இடம்மாறிய பிழைப்பு.காணாமல் போய் திரும்புவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டு. சமூக சேவை, பொது சேவை செய்வார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள். கராத்தே, பாக்சிங், தற்பாதுகாப்பு கலை தெரிந்தவர்.. மூன்றாம் அதிபதி லக்னத்தில் இருந்து குரு, சூரியன் பார்த்தால் மாடு முட்டும்.
இவர்கள் செயல்கள் அவசர அவசரமாக செயல்பாடுகள் இருக்கும். இளமையில் சோதனை இருக்கும். பயணம் அதிகமாக செய்வார்கள். சகோதர பாசம் அதிகமாக இருக்கும். மூன்றாம் அதிபதி லக்னத்திலிருந்து சனி பார்த்தால் வேறு சகோதரம் கிடையாது. இவர்களுடன் ரகசியம் தங்காது. கவிதை, கட்டுரை, சுயமுயற்சியால் முன்னேறுவார்கள். பொதுப்பணிகள் அதிக ஈடுபாடு இருக்கும்,
மூன்றாம் அதிபதி லக்னத்தில் இருந்து சூரியன், குரு தொடர்பு இருந்தால் கொம்புள்ள மிருகத்தால் கண்டம் இருக்கும். கம்பி, குச்சியால் காயம் இருக்கும்.
மூன்றாம் அதிபதி லக்னத்தில் இருந்து 3 6 9 12 அதிபதிகள் தொடர்பு வந்தால் வெளிநாட்டுப் பயணம் இருக்கும்.
கமிஷன், மார்க்கெட்டிங், காப்பீடு, ஏலச் சீட்டில் ஈடுபாடு இருக்கும். விடாமுயற்சியாக எந்த செயலிலும் செய்வார்கள். எந்த ஒரு செயலையும் கூர்ந்து உள்நோக்கி செய்வார்கள்.
மூன்றாம் இட அதிபதி இரண்டில்:
மூன்றாம் இட அதிபதி இரண்டில் இருந்தால் என்ன பலன் தன் முயற்சியால் பணம் சம்பாதிப்பார்கள். சகோதரர் ஜாதகர் உடன் இருப்பார். கமிஷன், வட்டித் தொழில் மூலம் வருமானம் உண்டு. டிரான்ஸ்போர்ட் வருமானம் உண்டு. இவர்கள் உறவினர்களை நன்கு கவனிப்பார்கள். இவர்களுடைய வீட்டிற்கு நிறைய உறவினர்கள் அடிக்கடி வருவார்கள். பைனான்ஸ், ஜெராக்ஸ், சீட்டு இந்த மாதிரி தொழிலில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். மூன்றாம் இட அதிபதியோ அல்லது செவ்வாய் கும்பத்தில் இருந்தால் மணம் இல்லை. மணவாழ்க்கை சரி இருக்காது. சகோதரனுக்கு பணம் கொடுப்பார். கை சூப்பும் பழக்கம் இருக்கும். மூன்றாமிடம் விரல், இரண்டாமிடம் வாய். மூன்றாம் பாவக காரக கிரகங்கள் மூலம் வருமானம் இருக்கும். கண்ணில் குச்சி இடிப்பது இருக்கும். யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்றால் இவர்களே முன் வந்து உதவி செய்வார்கள. எழுத்தின் மூலம் வருமானம், பயணத்தின் மூலம் வருமானம் உண்டு. தரகர் வேலை பார்க்கலாம். புத்தகக் கடை வைக்கலாம். பிரிண்டிங் பிரஸ் வைக்கலாம். தையல் கடை வைக்கலாம். ஆட்டோ ஓட்டுவது, தியேட்டரில் டிக்கெட் கிழிக்கலாம். செல்போன் கடை வைக்கலாம். ரீசார்ஜ் டவர் வைக்கலாம். இவர்கள் முள் உள்ள உணவு சாப்பிடக் கூடாது. காசு குண்டு ஊசி வாயில் போடக்கூடாது.
மூன்றாம் இட அதிபதி மூன்றில்:
மூன்றாம் இட அதிபதி மூன்றில் இருந்தால் என்ன பலன்
ஜாதகருக்கு தைரியம், வீரியம் அதிகமாக இருக்கும். புதியதாக ஏதாவது உருவாக்குவார்கள். சகோதரன் நல்ல வளர்ச்சி அடைவார். முயற்சி செய்தாலும் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் வெற்றி உண்டு. அடிக்கடி பயணம் செய்வார்கள். நடை பயிற்சி செய்வார். உடற்பயிற்சி ஜிம் வைத்து நடத்துவார். ஜிம்னாஸ்டிக், இசைத்துறை ஈடுபாடு இருக்கும். ஆயுள் பலம் அதிகம் இருந்தாலும் சில காலம் வறுமை இருக்கும். மூன்றாம் அதிபதிக்கு செவ்வாயுடைய ராசி நல்லது இல்லை. அதேபோல் ஏழாம் அதிபதிக்கு சுக்கிரன் ராசி நல்லது இல்லை. ஏனென்றால் காரகோ பாவ நாஸ்தி. எட்டாம் அதிபதி சனியாக இருந்தால் தாழ்வு மனப்பான்மை இருக்கும்.குரு சுக்கிரன் சேர்க்கை இருந்தால் வீட்டில் அரச மரம் இருக்கும். செவ்வாய்க்கு அடுத்து சுக்கிரன் இருந்து, அது பாதக ராசியாக இருந்தால், அண்ணனுக்கு முன்னாடி தம்பிக்கு திருமணம் நடக்கும்.
மூன்றாம் இட அதிபதி நாளில்:
மூன்றாம் இட அதிபதி நாளில் இருந்தால் என்ன பலன் படிக்கும் பள்ளியில் சிலை வைத்திருப்பார்கள். படிப்புக்காக இடம் மாறுவார்கள். தொலைதூரக் கல்வி பயில்வார்கள். தொலைதூரம் சென்று கல்வி பயில்வார்கள். இவருடைய தாயாருக்கு கட்டுமஸ்தான உடல் வாகு இருக்கும். அடிக்கடி வீடு, வாகனம் மாற்றுவார்கள். வீட்டின் மேல் டவர் இருக்கும். போஸ்ட்ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷன் அருகில் வீடு இருக்கும். அல்லது போலீஸ்காரர் இவர்கள் வீட்டில் குடியிருப்பார் அல்லது போலீஸ்காரர் இவர் வீட்டில் குடியிருப்பார். இவருடைய பிறந்த ஊரில் உள்ள சொத்து. சகோதரன் அனுபவிப்பார். சகோதரனுக்கு வாகனம் உண்டு. சகோதரன் சுகவாசி. சகோதரனுக்கு தண்ணீரில் கண்டம் அல்லது சகோதரனுக்கு குடிப்பழக்கம் இருக்கும். 3-க்கு உடையவன் நாளில் இருந்தால் டிஷ் ஆண்டனா. புதன் சம்பந்தப்பட்டால் டாட்டா ஸ்கை, சூரியன் சம்பந்தப்பட்டால் சன் டைரக்ட். மூன்றாமிடம் காற்று ராசியாக இருந்தால ஏர்டெல் இருக்கும். வீடு மாற்றம், பத்திரம் மாற்றம், இடமாற்றம் இருக்கும். இன்சியல் மாற்றம், பெயர் மாற்றம் இருக்கும். வாட்டர் பில்டர், நீர் சுத்திகரிப்பு, பழுதான எலெக்ட்ரிக் மிஷின், சைக்கிள் இவையெல்லாம் இவர்கள் வீட்டில் இருக்கும். இவர்கள் இடத்தை சைக்கிள் கடைக்கு வாடகைக்கு விடுவார்கள்
ராகு கேது சம்மதம் என்றாள் சைக்கிள் டியூப் கட் பண்ணி போடுவது நல்ல பரிகாரம். சைக்கிளில் பம்ப் வைப்பது போல இருந்தால் நல்லது.
இவருடைய சகோதரன் பிறந்தபோது மழை பெய்யும். சகோதரன் பிறந்த ஊரில் இருப்பார். சகோதரர்களுக்கும் தாய் மீது பாசம் அதிகமாக இருக்கும். ரியல் எஸ்டேட் நல்லா இருக்கும். அடிக்கடி வண்டி, பெயர், போன் மாற்றுவார்கள். இவர்கள் வீடு வாடகைக்கு போவது தவிர்த்து லீசுக்கு போவது நல்லது. மூன்று கால், மூன்று நிலவு, கதவு வைத்த வீட்டில் இருப்பார்கள். தாயார் குலவை சத்தம் ஒப்பாரி பாடுவார்கள். சகோதரனுக்கு சொத்து இருக்கும். இவர்கள் சகோதரனை படிக்க வைப்பார்கள்
மூன்றாம் இட அதிபதி 5ல்:
மூன்றாம் இட அதிபதி 5ல் இருந்தால் என்ன பலன் மூன்று என்பது உயிர், அஞ்சு என்பது பூர்வ புண்ணியம், இவர்கள் பிடி மண் எடுத்து வந்து குலதெய்வம் அமைத்து வணங்குவது நல்லது. பிடி மண் எடுத்து வந்து தான் குலதெய்வம் வணங்குவார்கள். மூன்று குல தெய்வம் இருக்கும். குழந்தை இடம் மாறி வாழும். பூர்வீக சொத்தில் இளைய சகோதரம் இருப்பார். இவர்கள் முயற்சி காதல், கலை, சகோதரம், லாட்டரி இதைப் பற்றியே இருக்கும். ஜோதிடம், சீட்டு கலை முயற்சியில் வெற்றி கிடைக்கும். சகோதரனுக்கு காதல் உண்டு. படிப்புக்காக இடம்மாறி படிப்பார்கள். அல்லது தாய்மாமன் வீட்டில் படிப்பார்கள். மூன்று மாமா இருப்பார்கள். இன்டர்வியூ இவர்களைத் தேடி வரும். சகோதரன் பிறந்த பின் வளர்ச்சி இருக்கும். மூன்றாம் இட அதிபதி ஐந்தில் இருந்தால் ஜாதகருக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தம்பி ஆசிரியராக இருப்பார்.
மூன்றாம் அதிபதி 5 இல்:
மூன்றாம் அதிபதி 5 இல் அல்லது 5 ஆம் அதிபதி மூன்றில் இருந்து அந்த வீடு மேஷம் சிம்மம் ஆக இருந்தால், மேஷம் சிம்ம ராசியை மூன்றாம் இட அதிபதி பார்த்தால், தந்தை அரசு ஊழியராக இருப்பார். தாமதம் உத்திரம் கொடுக்கும். குழந்தைகளுக்கு சுப காரியத்தில் தடை இருக்கும். அஞ்சல் வழிக்கல்வி படிப்பார்கள். கூட்டுத் தொழில் செய்வார்கள். பூர்வீகத்தை விட்டு வெளியேறுபவர்கள். கலைத்துறை இசை ஈடுபாடு அதிகமாக இருக்கும். தாய் மாமன் வீட்டில் இருந்து படிப்பார்கள். பல பேருக்கு காதல் திருமணம் உண்டு. ஐந்து வயது வித்தியாசத்தில் சகோதரன் இருப்பான் சகோதரன் வலிமையானவர். இவர்களுக்கு ஜீவசமாதி வழிபாடு நல்லது.
மூன்றாம் இட அதிபதி ஆறில்:
மூன்றாம் இட அதிபதி ஆறில் இருந்தால் என்ன பலன் ஒரு உப ஜெய ஸ்தானாதிபதி , இன்னொரு உப ஜெய ஸ்தானத்தில் இருப்பது பொருளாதார ரீதியில் ஜாதகருக்கு நல்லது.பாதுகாப்புத் துறை அல்லது யூனிஃபார்ம் தொழில் அமையும். முதல் வேலையை இழப்பார்கள். சகோதரனுக்காக கடன் வாங்குவார்கள்.சகோதரனால் கடன் ஏற்படும். சகோதரர்களுக்கு இவர்கள் கடன் வாங்கி கொடுக்க கூடாது. சகோதரனுடன் பயணம் செய்யக்கூடாது. சகோதரனுக்கு ராணுவம், போலீசில் வேலை உண்டு பாகப்பிரிவினை செய்வதில் தடை இருக்கும். பத்திரப்பதிவில் தாமதம் இருக்கும். ent பிரச்சினை இருக்கும். பயணம் சார்ந்த தொழில் செய்வார்கள். வெளிமாநிலம், வெளிநாடு போவார்கள். வழக்கு நிச்சயம் உண்டு. இவர்கள் அடுத்தவர்களின் பிரச்சனையில் தலையிட கூடாது. விரலில் சேதம் வரும். மூன்றாம் அதிபதி ஆறில் எட்டில் இருந்தாள் விரலில் காயம் தழும்பு இருக்கும். ஆறுக்குடையவன் இரண்டில் அல்லது ஆறுக்குடையவன் பத்தில் இருந்தால் உணவுத் தொழிலில் ஆர்வம் அதிகமாக இருக்கும்
மூன்றாம் அதிபதி ஏழில்:
மூன்றாம் அதிபதி ஏழில் இருந்தால் என்ன பலன் சகோதரன் வெளியூர் வெளிநாட்டில். 3+ 7, 3 +9, 3+ 11, இந்த இணைவு செவ்வாய், சுக்கிரன் தொடர்பு இருந்தால் அல்லது செவ்வாய்க்கு அடுத்து சுக்கிரன் இருந்தால், அண்ணனுக்கு முன்பாக தம்பிக்கு திருமணம் நடக்கும். ஜாதகர் சுயமுயற்சியில் திருமணம் செய்வார். ஜாதகரின் திருமண தேதியில் மாற்றம் வரும். திதி சூன்யம், பாதகாதிபதி சம்பந்தப்பட்டால் முதல் தேதி முடிவு செய்து பத்திரிக்கை அடித்து, அழைப்பு கொடுத்து, மீண்டும் தேதி மாற்றம் செய்து, பத்திரிக்கை அடிப்பார்கள். இவர்கள் திருமண மண்டபத்தை மாற்றுவார்கள். முதல் நண்பரை மாற்றுவார்கள். முதல் இரவை மற்றவர்கள். இவர்கள் திருமண தகவல் மையம் வைக்கலாம். சகோதரனுடன் அல்லது மனைவியுடன் கூட்டு பத்திரம் வாங்குவார். மனைவி கட்டுமஸ்தான உடல்வாகு இருக்கும். வாக்கிங் உடற்பயிற்சி செய்யும் மனைவி அமைவாள். மூன்று சம்பந்தம் வந்தால் தற்கொலை எண்ணத்தை கொடுக்கும். மனைவி அல்லது சகோதரனுக்கு தற்கொலை எண்ணம் ஏற்பட்டு இருக்கும்.நண்பர் தற்கொலை செய்திருப்பார். ஒரு பயணத்தில் விருப்பம் இருக்கும். திடீர் பயணம் உண்டு. சகோதரனுக்கு பொதுசேவை ஈடுபாடு இருக்கும். இவர்களுக்கு சந்நியாசி எண்ணம் வரும். 7, 10 தொடர்பு இருந்தாலும் சந்நியாசி எண்ணம் வரும். அஞ்சு 7 ஒன்பது பத்து 12 இதற்கு கேது சம்பந்தம் இருந்தால் குழந்தை இடம் மாறி இருக்கும். மூன்றாம் அதிபதி திதி சூன்யம் ஆனால் குழந்தை மருத்துவ மனையில் மாறி வந்து விடும். 3, 5 தொடர்பு, திதி சூன்யம் ஆகி இருந்தால், குழந்தைக்கு ஐந்து வயதில் வரை புத்தி சுவாதீனம் இல்லாமல் இருக்கலாம். ஐந்தாமிடம் புத்தி ஐந்து வயதுக்கு மேல் புத்தி வரும் ஐந்து வயதில் குழந்தை தன்னுடைய இயல்பு நிலைக்கு வந்துவிடும். அதுவரை குழந்தை தாய் அல்லது தாய்மாமன் வீட்டில் வைத்து பாதுகாப்பு செய்வது நல்லது. 3 ஆம் அதிபதி 7, 9, 11 இல் இருந்து செவ்வாய், சுக்கிரன் தொடர்பு இருந்தால், இவருடைய தம்பிக்கு முதலில் மணமாகும். செவ்வாய் அடுத்து சுக்கிரன் இருந்தாலும் இளைய சகோதரர்களுக்கு முதலில் மணமாகும். செவ்வாய், சுக்கிரன் 4ம் இடத்தில் இருந்தால் தாய் வீட்டில் அண்ணனுக்கு முன்பு தம்பிக்கு திருமணம் நடந்திருக்கும்.
அதேபோல் ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் சுக்கிரன் இருந்தால் தந்தை வழியில் இருக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
மூன்றாம் அதிபதி எட்டில்:
மூன்றாம் அதிபதி எட்டில் இருந்தால் என்ன பலன் தம்பிக்கு விபத்து வழக்கு உண்டு. ஜாதகர் கிரிமினல் லாயராக இருப்பார். வாக்கு, சாதுர்யம் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு சகோதரன் இல்லை என்ற அமைப்பு வரும். ஆனால் சகோதரி உண்டு. அமானுஷ்ய அறிவு இருக்கும். கை கால்களில் நெருப்புக் காயம் இருக்கும். ராகு கேது தொடர்பு இருந்தால் தற்கொலை எண்ணம் இருக்கும். இந்த அமைப்பில் ராகு-கேது பார்த்தாலும் சேர்ந்தாலும் தம்பிக்கு திருட்டுப் பட்டம் இருக்கும். தம்பிக்கு காப்பீடு, குவாரி, மணல், தொழில் செய்யலாம். மூன்றாம் அதிபதி எட்டில் இருந்து சனி ராகு தொடர்பு இருந்தால் தம்பிக்கு ஊனம் அல்லது ஏதாவது குறை இருக்கும். ஜாதகருக்கு Ent பிராப்ளம் இருக்கும். சனி செவ்வாய் விபத்து. செவ்வாய் ராகு சர்ஜரி. சுக்கிரன் steel plate.2 ஆம் அதிபதி ஊமை ராசியில் இருந்தால் பேச்சுக் குறைபாடு.3-ஆம் இடம் என்பது டூ வீலர், நாலாம் இடம் 11-ஆம் இடம் நான்கு சக்கர வாகனம். மூணு பத்து வண்டி நிறுத்தும் இடம். மூணு 12 வண்டி நிறுத்துவது தொழில். நீர் ராசிகள் அதிக கிரகங்கள் இருப்பது நல்லது இல்லை ராசி அம்சம் இரண்டிலும் செவ்வாய் சனி லக்னத்தை பார்த்தால் தலையில் காயம் இருக்கும். செவ்வாய் சனி சமசப்தமமாக இருந்தால் தம்பிக்கு இரண்டு திருமணம் அல்லது தம்பியே கிடையாது என்று சொல்ல வேண்டும். மூன்றாம் இட அதிபதி எட்டில் இருந்தால் ஜாதகருக்கு கையெழுத்து கைரேகை பதிவுகளில் பிரச்சனை இருக்கும். சகோதரனுக்கு விபத்து, வழக்கு உண்டு. சதை பிடிப்பு ஏற்படும். ஜிம் சதை பிய்ந்துபோவது ஜாதகர் நடைப்பயிற்சியின் போது கீழே விழுவார் அல்லது மரணம் சம்பவிக்கும் இவர்கள் அதிக பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது. வீட்டில் சாக்கடை அடைப்பு இருக்கும். முதல் கட்டிய பாத்ரூமை இடித்து கட்டுவார்கள். ராகு வெஸ்டர்ன் டாய்லெட் சூரியன் சந்திரன் இந்தியன் டாய்லெட். ஜாதகர் பயணத்தில் திரும்பும்போது கீழே விழுவார்கள். சாலையில் வளைவுகளில் இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குச்சி இடிக்கும். தற்கொலை எண்ணம் அதிகமாக இருக்கும். மாடு முட்டும். கிரிமினல் எண்ணம் இருக்கும். தற்கொலை எண்ணத்தில் அடிக்கடி முடிவை மாற்றிக் கொள்வார்கள். ஒருகண்டத்திலிருந்து தப்பித்து இருப்பார்கள். உயில் சொத்தை மாற்றி எழுதுவது, இறப்பு சான்றிதழில் ஒரு வதந்தி இருக்கும், தவறான செய்திகள் வரும் பெட்டிஷன் போடுவார்கள். இவர் மீது மற்றவர்கள் பெட்டிஷன் போடுவார்கள். எந்த வேலை செய்தாலும் கமிஷன் வராது. ஒரு ரகசிய குடும்பம் இருக்கும்.
மூன்றாம் அதிபதி ஒன்பதில்:
மூன்றாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் என்ன பலன் சகோதர விருத்தி இருக்கும். ஜாதகருக்கு முயற்சிகள் நன்றாக இருக்கும். சாஸ்திரம், ஆன்மீகம், ஆசிரியர், பாரம்பரிய கலைகள் மீது நாட்டம் இருக்கும் அதற்காக பயணம் மேற்கொள்பவர்கள். ஆன்மீகப் பாடல் படிப்பார். கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். தந்தை இளையவர். சகோதரர் மூன்றாவது நபராக இருப்பார். சகோதரனுக்கு வெளிநாட்டு வாய்ப்பு உண்டு. செவ்வாய் சுக்கிரன் திதி சூனியம் ஆகி ஒரு ராசியில் இருந்து அந்த ராசி திதி சூன்யம் ஆகி இருந்தால் ஜாதகருக்கு 2 திருமணம். தந்தை இடம் மாறி வந்திருப்பார். சகோதரன் தந்தையுடன் இருப்பார். தந்தைக்கு கட்டுமஸ்தான உடல்வாகு இருக்கும். இவர்களுக்கு 40 வயதுக்கு மேல் படிக்கும் ஆர்வம் இருக்கும்/ ஆன்மீக புத்தகம் எழுதுபவர்கள். தந்தை வழியில் நாட்டாமை, கணக்குப்பிள்ளை, தலையாரி, யாராவது இருந்திருப்பார்கள். வெளிநாடு, வெளிமாநிலம் மூன்று முறை போய் வந்திருப்பார். அறநிலையத்துறை, ஆசிரியர், டியூஷன் இவையெல்லாம் ஜாதகருக்கு நல்ல யோகம் தரும். குருமார்களின் ஆசி உண்டு நட்பு கிடைக்கும். கோவிலுக்கு ஆபரணம், மணி வாங்கி கொடுத்து இருப்பார்கள்.
மூன்றாம் அதிபதி 10 ல்:
மூன்றாம் அதிபதி 10 ல் இருந்தால் என்ன பலன் சேர், செல்போன், நகைக்கடை குறிப்பாக கம்மல், மூக்குத்தி. பிரின்டிங் பிரஸ் மருந்து விற்பனை ஏஜென்சிஸ் ஜெராக்ஸ் போலீஸ் தையல் கடை உடற்பயிற்சிக்கான மெஷின் ஸ்கேன் ஜோதிடம் இவையெல்லாம் சிறப்பாக இருக்கும். சகோதரன் இவருக்கு கருமம் செய்வார். சகோதரன் பிறந்தபோது குடும்பத்தில் ஒரு கர்மம் நிகழ்ந்திருக்கும். சகோதரன் பிறந்தபின் தொழில் வளர்ச்சி இருக்கும். முதல் தொழில் அல்லது தொழில் செய்யும் இடத்தை மாற்றியிருப்பார். மூன்று தொழில்கள் செய்வார்கள். மூன்றாவது தொழில் வளரும். வீட்டிலிருந்து தொழில் செய்வார். சகோதரனுக்கு தொழில் நல்லபடி அமையும். டெண்டர் ஒப்பந்தம் சார்ந்த தொழில் இருக்கும். குறுகிய பயணம், வாகன கடை உண்டு. ஓவியத்தில் ஆர்வம் இருக்கும்
மூன்றாம் அதிபதி பதினொன்றில்:
மூன்றாம் அதிபதி பதினொன்றில் இருந்தால் என்ன பலன் ஒரு உப ஜெய ஸ்தானதிபதி தன் ஆதிபத்திய வீட்டிற்கு 9ஆம் பாவமான பாக்கியஸ்தானம் ஆகிய 11ம் பாவத்தில் நிற்பது நல்லது. சகோதரன் நாலாவதாக பிறந்திருப்பார். மூத்தவன் போல நடந்து கொள்வார். முயற்சி வெற்றி தரும். வழக்கில் வெற்றி கொடுக்கும். ஒரு இன்டர்வியூவில் பதவி கிடைக்கும். இவர்களுக்கு நண்பர்கள் அதிகம். போலீஸ், ராணுவம் நண்பர்கள் இருப்பார்கள். போலீஸ் சார்ந்த சம்பந்தப்பட்ட வேலையில் வெற்றி கிடைக்கும். எழுத்தால் புகழ் கிடைக்கும். பத்திரிக்கை, கமிஷன், கம்யூனிகேஷன் நல்லா இருக்கும். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி இருக்கும். ஆயுள் பலம் உண்டு. இவர்களின் எண்ணம் தம்பியை பற்றியே இருக்கும். 11-ஆம் இடம் அதிக ஆசை அதீத கற்பனை. இவர்களுக்கு நண்பர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். சகோதரன் பிறந்தவுடன் குடும்பம் வளர்ச்சி அடையும். மணமான பின்பு கள்ளத் தொடர்பு இருக்கும். தம்பியும் முன்னேறுவார். மூணு 11 சம்பந்தம், மூணாம் அதிபதிக்கு அடுத்து, சுபர் எனில் ஊர் மாறினால் வளர்ச்சி இருக்கும்.
1, 4, 5, 9, 12 இவர்களுடன் கேது சம்பந்தம் இருந்தால் கல்லறை யோகம்.
பனிரெண்டாம் பாவம் பலம் ஆனால் சிறை அதிகாரி. பனிரெண்டாம் பாவம் பலம் இழந்தால் சிறைவாசி. மூன்றாம் அதிபதி புதன் வீட்டில் மூன்றாம் அதிபதி புதன் மூன்றாம் பாவத்தை புதன் பார்த்தால் இரண்டாவது தேர்வில் வெற்றி கிடைக்கும்.
மூன்றாம் அதிபதி காற்று ராசியில் இருந்தால் நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வரும்.
மூன்றாம் அதிபதி பெண் ராசியாகி பெண் கிரகம் இருந்தால் இன்டர்வியூ செய்வது பெண் அதிகாரியாக இருப்பார்.
இன்டர்வியூ மூன்றாம் அதிபதிக்கு அடுத்து இருக்கும் கிரக கிழமையும் இன்டர்வியூ வைப்பது நல்லது’
மூன்றாம் அதிபதி பன்னிரெண்டில்:
மூன்றாம் அதிபதி பன்னிரெண்டில் இருந்தால் என்ன பலன் ஜாதகருக்கு சவ அடக்க தேதி 3 12 தொடர்பு. ஈமக்கிரியை சொல்லும். ஜாதகருக்கு Ent பிராப்ளம் இருக்கும். விரலில் சேதம் இருக்கும். ஆறு எட்டு பன்னிரெண்டில் புதன் இருந்தால் இது உறுதி என்று சொல்லலாம். குரு சனி சமசப்தம பார்வையில் இருந்தால் லிப்டில் போகும்போது லிப்ட் பழுதாகி பாதியில் நின்றுவிடும், எச்சரிக்கை தேவை. பயணத்தின்போது குரு, சனி, கேது சம்பந்தம் இருட்டு அறை. குரு சனி தொடர்பு குகைக்குள் போவது எச்சரிக்கையுடன் தான் போக வேண்டும். குரு காற்று ராசியில் இருந்து சனி பார்க்க குகைக்குள் போகக்கூடாது. சகோதரனை வெளிநாட்டிற்கு அனுப்புவார்கள், அதில் விரையம் இருக்கும். தர்ம காரியத்திற்கு ஜாதகர் தம்பியை தான் போகச் சொல்வார்.ஆறாம் அதிபதி நான்கில் இருந்து மூன்றாம் அதிபதி சனியாக இருந்தால் வண்டி அடிக்கடி ரிப்பேர் ஆகும். இதற்கும் தம்பியை அனுப்பிய தான் ரிப்பேர் சரி செய்வார்கள்.
நான்கில் சனி நின்று வண்டி ரிப்பேர் ஆனால் வண்டியின் பெயிண்டை கொஞ்சம் அழித்துவிட்டு வண்டி ரிப்பேர் சரி செய்வது தான் பரிகாரம். ஜாதகருக்கு ஜோதிட ஆராய்ச்சி அதிகமாக இருக்கும்.ஒரு வழக்கால் விரையம் ஏற்படும். இவர்கள் பெயர் அபிஷேக் தனுஷ்கோடி என்று வைத்திருப்பார்கள் 3-க்குடையவர் ஒன்பது பாவங்களை தாண்டி அமர்ந்தால் தன் இன்ஷியலை தன் பெயருக்கு பின்னாடி போடுவார். சிறு விபத்து இருக்கும் புத்தகம், செக் தொலைப்பார்கள். 3, 6 மூணு 8 மூணு பனிரெண்டு இந்தத் தொடர்பு இவர்கள் கணக்கு முடிந்தவுடன் நில் கிளியரிங் அத்தாட்சி வாங்க மாட்டார்கள். தன் பொருட்களை ஜெராக்ஸ் கடையில் பயணம் காலத்திலோ தொலைப்பார்கள். 3, 12 கொலுசு வீட்டில் பெண்கள் அடிக்கடி கொலுசு மாற்றிக் கொண்டே இருப்பார்கள். மூணு எட்டு சம்பந்தம் இருந்தால் இரவு நேரங்களில் ஆபரணம் வாங்குவார்கள். அது தொலைந்து விடும். கம்மல் மூக்குத்தி அடிக்கடி தொலையும். 3, 12 குழந்தை விழுங்கும் பொருட்கள் கழிவாக வெளியே வந்துவிடும். இவர்களுக்கு ஆபரேஷன் தேவைப்படாதுடென்டர்கள் எடுத்தால் எந்தெந்த மாதிரி டென்டர்கள் எடுக்கலாம். மூன்றாம் அதிபதி ஒன்றில் இருந்தால் தலைமுடி டென்டர் எடுக்கலாம்.
மூன்றாம் அதிபதி மூன்றில் இருந்தால் பிஎஸ்என்எல், சைக்கிள் ஸ்டாண்ட் ,ஸ்கூட்டர் ஸ்டாண்ட், புத்தக டெண்டர், ரசீது, பில் புக் அடிக்கும் டெண்டர். ராணுவத்திற்கு சப்ளை செய்யும் டெண்டர், மருத்துவமனை டெண்டர் எடுக்கலாம். போலீஸ் டென்டர், மூன்றாம் அதிபதி நான்கில் இருந்தால் வாகன டெண்டர், பழைய கட்டிடங்கள் டென்டர், கார் பார்க்கிங், டெண்டர் குடிநீர் சப்ளை செய்யும் டெண்டர், ஏரி தூர்வாரும் டெண்டர் ஓட்டுநர், சூப்பர்வைசர்கள் இவை எல்லாம் செய்யலாம்.
மூன்றாம் அதிபதி அஞ்சு 9ல் இருந்தால் 5 9 பார்வை மனிதநேயம் இருக்கும். கோவில். மடம். அர்ச்சனை சீட்டு. பிரசாத ஸ்டால். கலைத்துறை செட். விளையாட்டு ஏலம். பள்ளிக்கூடம் காண்ட்ராக்ட் எடுக்கலாம். மூன்றாம் அதிபதி ஆறில் இருந்தால் கேண்டீன் எடுக்கலாம். செக்யூரிட்டி சப்பலை வேலை செய்யலாம். மருந்துப் பொருட்கள் மருந்துகளை சப்ளை செய்யலாம். மூன்றாம் அதிபதி ஏழில் இருந்தால் பூக்கடை, பொதுப்பணித்துறை, இந்த மாறி டென்டர் எடுக்கலாம்.
திருமண பொருத்தத்திற்கு மூன்றாம் பாவம் ரொம்ப முக்கியம். தைரிய வீரிய ஸ்தானம். இது காம திரிகோணத்திற்கு முதல் பாவம் 3-ஆம் பாவம் ஆகும உப ஜெய ஸ்தானம் என்பது ஒரு கிரகத்திற்கு வலுவூட்டுகிறது. ஒரு பாவத்திற்கு 3 11-ஆம் பாவகங்களில் கிரகங்கள் இருப்பது நல்லது. நாலாம் பாவம் சொத்து நாலாம் பாவத்திற்கு மூணு பதினொன்றாம் பாவங்களில் கிரகங்கள் இருப்பது சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். முயற்சியால் ஏழாம் பாவம் திருமணம் ஏழாம் பாவத்திற்கு மூணு 11 ஆம் பாவங்களில் கிரகங்கள் இருப்பது தன் முயற்சியால் முயற்சி மூலம் திருமணம் வெற்றி கொடுக்கும் நாலாம் பாவத்திற்கு 3, 11ம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் தாயாருக்கு சகோதரரும் உண்டு, ஒரு உப ஜெய ஸ்தான அதிபதி இன்னொரு உபஜெய ஸ்தானத்தில் இருந்தால் நல்ல பொருளாதாரம் ஜாதகருக்கு கிடைக்கும்,
3, 6 ,10 ,11 இந்த அதிபதிகள் உபஜெய ஸ்தானத்திற்கு உள்ளேயே மாறிமாறி அமர்ந்திருந்தாள் அவர்களின் திசாபுத்தி நன்மையான பலன்களை தரும் வலிமையான பலன்களையும் ஜாதகருக்கு கொடுக்கிறது.
நன்றி
வாழ்க வளமுடன்
தமிழரசன் க
தக்ஷா ஜோதிட நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்
https://www.dakshaastrology.com
whatsapp: +919787969698
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக