சனி, 16 டிசம்பர், 2023

நான்காம் பாவகம்

நான்காம் பாவகம்

நாலாம் வீட்டை வைத்து என்னவெல்லாம் கூறலாம்?

ஒருவர் நிரந்தரமாகக் குடியிருக்கும் வீட்டைக் குறிக்கிறது.

ஒருவருக்கு சொந்த வீடு இருக்குமா? அல்லது இருக்காதா? என்பதும் இந்த வீட்டை வைத்துக் கூறிவிடலாம்.

வீடுமட்டுமல்ல; ஸ்திர சொத்துக்களான நில, புலன்கள் ஒருவருக்குக் கிட்டுமா? அல்லது கிட்டாதா? என்பதையும் இந்த வீட்டை வைத்துக் கூறி விடலாம்.

சரி! எப்படி கூறுவது? செவ்வாயானவர் ஸ்த்ர சொத்துக்களுக்கு அதிபதி அல்லவா?

அவர் 4-ம் வீட்டில் இருந்தாலோ அல்லது 4-ம் வீட்டைப் பார்த்தாலோ அல்லது 4-ம் வீட்டின் அதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்த்தாலோ ஒருவருக்கு ஸ்திர சொத்துக்கள் வாங்க யோகம் உண்டு என்று கூறலாம்.

4-ம் வீட்டுடன் சுக்கிரன் சம்மந்தப் பட்டால் என்ன கிடைக்கும்? சுக்கிரன் வாகனகாரகன் அல்லவா? அவர்களுக்கு வாகனம் கிட்டும்..

வாகனம் என்றால் அது நான்கு சக்கரங்களுள்ளகாராக இருக்கலாம்; அல்லது மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரண்டு சக்கர வாகனங்களாகவும் இருக்கலாம், எப்படி இருப்பினும் அவர்களுக்கு வாகன யோகம் உண்டு.

படிப்பை பற்றிக் கூற வேண்டுமானால் 4-ம் வீட்டுடன் புதன் சம்மந்தப்பட்டுள்ளாரா? எனப்பார்ப்பது அவசியம். புதன் சம்மந்தப்பட்டு இருப்பாரேயாகில் அவர் ஒரு பட்டப்படிப்பு முடியப் படிப்பார் எனக் கொள்ளலாம்.

4-ம் வீடென்பது பட்டப் படிப்பு வரையிலான படிப்பைக் குறிக்கிறது.

அதற்கு மேலுள்ள படிப்பை 9-ம் வீடு குறிக்கிறது. சூரியனும், புதனும் ஒரு வீட்டில் சேர்ந்து இருப்பார்களேயாகில் அவர் படிப்பில் கெட்டிக்காரராக இருப்பார் எனக்கொள்ளலாம்.

சூரியனுடன் எந்த கிரகம் சேர்ந்து இருந்தாலும் அந்த கிரகத்தின் காரகத்துவம் மிகச்சிறந்து விளங்கும். உதாரணமாக புதன் கல்விக்குக் காரகம் வகிப்பவர். அவர் சூரியனுடன் சேர்ந்து இருந்தால் அவர் கல்வியில் சிறந்து விளங்குவார்.

சுக்கிரன் கலைகளுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? சுக்கிரனும், சூரியனும் சேர்ந்து இருந்தால் அவர் கலைகளில் திறமை உள்ளவராக இருப்பார்.

சிலர் சூரியனுடன் ஏதாவது கிரகம் சேர்ந்து இருந்தால் அந்த கிரகம் சூரியனால் எரிக்கப் பட்டுவிடும் எனக் கூறுவர். அது தவறான கருத்து. அந்தக் கிரகத்தின் காரகத்துவம் சூரியனால் அதிகரிக்கப்படும் என்பதுதான் உண்மை.

4-ம் வீடு மறைத்து வைக்கப் பட்டு இருக்கும் சொத்துக்களைக் குறிக்கிறது.

ஒருவருக்குப் புதையல் கிடக்குமா? அல்லது கிடைக்காதா? என்பதை இந்த வீட்டை வைத்துக் கூறலாம்.

சனியானவர் எதையும் ஒளித்து வைக்கும், மறைத்து வைக்கும் குணம் கொண்டவர். அவர் தனஸ்தானத்தையோ அல்லது ஜீவனஸ்தானத்தையோ குறிப்பவராகி 4-ம் வீட்டுடன் சம்மந்தப் பட்டால் அந்த ஜாதகர் கறுப்புப் பணம் வைத்து இருப்பர் எனக் கொள்ளலாம்.

உதாரணமாக மேஷ லக்கினக் காரரான ஒருவருக்கு சனியானவர் 10-ம் வீட்டிற்கும், 11-ம் வீட்டிற்கும் அதிபதி. அவர் கடகத்தில் இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் கறுப்புப் பணம் வைத்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்.

4-ம் வீட்டில் இல்லாமல் பார்த்தாலும் அதே பலன்தான்.

காளிதாசன் "உத்திர காலாம்ருதத்தில்" கால்நடை கல், நிலங்களிலிருந்து கிடைக்கும் அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், எண்ணை வித்துக்கள் ஆகியவற்றையும் 4-ம் வீட்டை வைத்துத்தான் கூறவேண்டுமெனக் கூறுகிறார்.

4-ம் வீடு தாயாரையும் குறிக்கிறது. சந்திரனும் தாயாருக்குக் காரகம் வகிப்பவர்தான். 4-ம் வீடு தாயாரையும் குறிக்கிறது. சந்திரனும் தாயாருக்குக் காரகம் வகிப்பவாதான.

4-ம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்து, சந்திரனும் சுபர்களின் சம்மந்தம் பெற்றால் அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய தாயார் அமைவார் எனக் கூறலாம்.

4-ம் வீட்டில் இருக்கும் கிரகங்களுக்கு என்ன பலன் என்று பார்ப்போம்.

4-ம் வீட்டில் சூரியன்:

பிதுராஜித சொத்துக்கள் கிடைக்க வழியுண்டு. வேதாந்தத்திலும், மற்றும் புதிய விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

சந்திரன்: சுற்றத்தாரால் மகிழ்ச்சியுண்டு. சிற்றின்பங்களில் பிரியம் அதிகம். சந்திரன் ஓர் நீர்க் கிரகமாதலால் வீட்டிலே நீர் வசதியுண்டு.

செவ்வாய் : வீடு கட்டும் யோகமுண்டு. தாயார் மூலமாக அனுகூலமில்லை. அரசியலில் முன்னேற்றமுண்டு. தாயாருடன் சண்டை போடக் கூடிய நிலை இருக்கும். ராகுவோ அல்லது கேதுவோ கூட இருக்குமேயாகில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருக்கும்.

புதன் : படிப்பில் தேர்ச்சி இருக்கும். பாட்டு மற்றும் கலைகளில் ஆர்வம் இருக்கும்.

குரு : படிப்பில் தேர்ச்சி, வேதாந்தத்தில் ஆர்வம், அரசாங்கத்தின் உதவி, நல்ல சுமுகமான குடும்பச் சூழ்நிலை, தன் சொந்த மதத்தில் தீவீர நம்பிக்கை.

சுக்கிரன் : வாகன யோகம், தாயின் மீது தீவீரபக்தி, அமைதியான குடும்ப வாழ்க்கை, நினைத்த காரியம், ஆசைகள் நிறைவேறுதல்

சனி : சிறிய வயதில் தாயாரிடமிருந்து பிரிவு, வாயு உபத்திரவம், வீட்டாலும் வாகனத்தாலும் தொந்தரவு, சோம்பேரித்தனமான குணம், சொந்தக் காரர்கள் நடுவில் மரியாதை குறைவு, தனிமையை விரும்பும் குணம், பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்காமை ஆகியவை.

ராகு : முட்டாள்தனமான காரியங்கள் செய்வர், நம்பகத்தன்மை இல்லாது நடந்து கொள்வர்.

கேது: தாயாரால் அனுகூலமில்லை, வெளி நாட்டில் வாழக் கூடிய சூழ்நிலை; வாழ்க்கையில் பலதரப் பட்ட அனுபவங்கள்

நாலாம் பாவம் சுகத்தை குறிக்கும்

நாலாம் பாவம் என்பது முதல் கேந்திரம் ஜோதிடத்தில் உள்ள 4 கேந்திரங்களில் முதல் கேந்திரம் இந்த நாலாம் பாவமாகும்.

தன்னை சார்ந்த மேலும் தான் சார்ந்த அனைத்து பாவங்களையும் கிரகங்களையும் அனைத்துமே வசதியாக வைத்துக் கொள்ளும் பாவமே

நாலாம் பாவத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன் தாயார் பெரிய கூட்டு குடும்பத்தில் பிறந்திருப்பார்.

இதை ஐந்தாம் அதிபதி பார்த்து உறுதிசெய்ய வேண்டும்.

தாயார் நல்ல நிர்வாகி.

குரு பார்த்தாலும் சேர்ந்தாலும் தாயார் ஒரு பதவியில் இருப்பார்.

ஜாதகர் வீடு கோவில் அருகே இருக்கும்.

தாயாருக்கு கண் நோய் உண்டு.

தாயாருக்கு அரசியல் அரசாங்க ஈடுபாடு இருக்கும்.

தாயாருக்கு மருத்துவ குணம் இருக்கும்.

ஞானம் இருக்கும்.

தாயார் கவுன்சிலருக்கு நிற்கலாம்.

வள்ளல் குணம் அதிகமாக இருக்கும்.

தாயாருக்கு பசுமை திட்டம் மோடி திட்டம் இந்தத் திட்டத்தில் வீடு கட்டுதல்,

அரசு குடியிருப்பில் குடியிருப்பது அரசு சலுகைகள் இருக்கும்.

வீட்டு மாடியில் நின்று பார்த்தால் கோவில் கோபுரம் தெரியும்.

மாடி வீடு மலை சார்ந்த பகுதிகளில் சொத்து வாங்குவது, அரசியல்வாதி அல்லது கவுன்சிலர் வீட்டு அருகே குடியிருப்பார்.

தேர்தல் லேமினேஷன் திதி சூன்ய காலத்தில் வைக்கக்கூடாது.

அடுத்தவர்களுக்கு வேலை செய்யும்போது 4ல் சனி இருப்பவர்கள் வீடு கட்டுவதற்கு பாலக்கால் போடக்கூடாது.

இவர்கள் வீட்டில் கண்ணாடி பொருட்கள் அதிகமாக இருக்கும்.

சூரிய ஒளி வீட்டிற்குள் வரும்.

வெளிச்சமான வீட்டில் குடி இருப்பார்.

சோலார் மின் தொடர்பு வீட்டில் இருக்கும்.

வள்ளலார் படம் வீட்டில் வைப்பது நல்லது.

இவர்கள் வீட்டில் தீபம் எரிந்து கொண்டிருக்கும்.

மாடி வீட்டில் இருப்பார்கள்.

கிழக்கு வாசலில் இருப்பார்கள்.

வீட்டிற்கு உள்ளேயோ வீட்டிற்கு அருகிலோ கிணறு இருக்கும்.

நாலு வயதுக்கு மேல் குடும்பம் வளர்ச்சியாக இருக்கும்.

40 வயதுக்கு மேல் ஜாதகர் நல்ல வளர்ச்சி அடைவார்.

தந்தை பெயரில் வீடு இருக்கும்.

வீடு உள்ள வீதி கோவில் பெயரிலோ தலைவர் பெயரிலோ இருக்கும்.

வீடு மரத்தடியில் இருக்கும்.

பெரிய நகரம் பிரசித்தி பெற்ற கோவில் தெருவில் இவர் வீடு இருக்கும்.

வீட்டின் மீது கூரை செட் போட்டிருப்பார்கள்.

தாயாரிடம் ஜாதகர் ஆசிபெற வேண்டும்.

அதிக கற்பனை இருக்கக்கூடாது.

நாலாமிடம் மனசு அங்கு கடவுள் இருப்பதால் சுய கற்பனை, அதீத கற்பனை இருக்கக் கூடாது.

கொம்புள்ள மிருகங்கள் இவர்களுக்கு நல்லது.

சொத்து சேர்ந்த பின் தான் இவர்களுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும்.

நாலாம் பாவம் வாகனம் அதனால் வாகனம் உண்டு.

நல்ல வாகனமாக வைத்திருப்பார்.

நாலாம் இடம் சுத்தம், சுகம் மனதில் இவர்கள் திருப்தி அடைய வேண்டும் திருப்தியான மனநிலை இவர்களுக்கு சுகத்தை கொடுக்கும்.

நாலில் ஒரு கிரகம் இருப்பது நல்லது.

சித்திக்கு நல்ல பலன் தரும், அவருக்கு உத்தியோக பிரச்சனை தரும்.

இரண்யா இருக்கும்.

ஆறாம் அதிபதி அஸ்தங்கம் பெற்றால் இது கண்டிப்பாக இருக்கும்.

லக்னாதிபதி அமர்ந்த வீட்டிற்கு ஆறாம் வீடு கண்டிப்பாக ஒரு பாதிப்பை கொடுக்காமல் போகாது. நாலுக்கு ஆறாமிடத்தில் அல்லது நாலாம் அதிபதி ஆறில், இவர்களுக்கு நான்கு, எட்டு தொடர்பு நாலு 11 தொடர்பு, நாலு 12 தொடர்பு, உள்ள ஜாதகங்களில் தந்தை அல்லது தாத்தா இரண்டு திருமணம்.

ஐந்தில் புதன் அல்லது கேது இருந்தால் தந்தைக்கு இரண்டு திருமணம்.

ஒன்பதில் கேது அல்லது புதன் இருந்தால் தாத்தாவுக்கு இரண்டு திருமணம்.

நாலுக்கு 6:8:12 ல் தொடர்பு மூடப்பட்டுள்ள கிணறு இருக்கும்.

பராமரிக்க முடியாத கிணறு உண்டு.

பழைய பயனற்ற போர்வெல் இருக்கும்.

மரத்தை வெட்டி விடுவார்கள்.

4 ல் சூரியன் இருந்தால் இடிதாங்கி வைக்க வேண்டும்.

வீடு கட்டிய பின் ஆண் வாரிசு உண்டு.

நான்காம் பாவத்தில் சந்திரன் :

நான்காம் பாவத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்

திக்பலம்.

முதல் சொத்து கைமாறும்.

அழகுசுத்தத்தை விரும்புவார்கள்.

வீடு வாகனம், அழகாக வைத்திருப்பார்கள்.

சுத்தமாக வைத்திருப்பார்கள்.

பிறந்த இடத்தைவிட்டு இடமாற்றம் செய்திருப்பார்கள்.

அன்பு பாசம் அதிகமாக இருக்கும்.

பயணத்தை விரும்புவார்.

நல்ல குணம் இருக்கும்.

மற்றவர்களுக்கு உபதேசம் செய்வார்.

மழைக்காலத்தில் பிறந்திருப்பார்.

ஒரு ஏமாற்றம் இருக்கும்.

கண் நோய் இருக்கும்.

தாய் அல்லது தாய்வழி உறவினர்களுக்கு தண்ணீரில் கண்டம் இருக்கும்.

நல்ல நீர் நிலைகள், விவசாய நிலங்கள் உள்ள இடத்தில் இருப்பார்கள்.

தாய் அழகாக இருப்பார்.

வீட்டில் அரிசி மாவு எப்போதும் வைத்திருப்பார்கள்.

மழைநீர் வீட்டிற்குள் வரும். வீடு கட்டும்போது மழை வரும்.

போர் நன்றாக நீர் வளத்துடன் அமையும்.

வீடு வடமேற்கு திசையாக இருக்கும்.

வீட்டில் சுவாமி படங்கள் அதிகமாக இருக்கும்.

வாகன செலவு இருக்கும்.

அம்மாவின் அன்பு பாசம் ஜாதகருக்கு உண்டு

நாலாம் பாவத்தில் சந்திரன் இருந்தால்

விருந்தினர் வருகை அடிக்கடி உண்டு.

யாரையும் சாப்பிடாமல் அனுப்ப மாட்டார்.

இவர்களுக்கு சொத்து உண்டு.

சொத்து பெண்களிடம் வாங்கி இருப்பார் அல்லது விற்று இருப்பார்.

வாடகை பணம் பெண்களிடம் தருவார்கள்.

வீட்டின் அருகே அரிசி கடை, எண்ணெய் கடை, ரேஷன் கடை இருக்கும்.

டாஸ்மார்க் கடை இருக்கும்.

ஆடு மாடு வளர்த்த குடும்பம்.

பால் தயிர் மோர் எப்போதும் இவர்கள் வீட்டில் இருக்கும்.

பழங்களும் இருக்கும்.

வீட்டில் பழம் சார்ந்த செடிகள் இருக்கும்.

வீட்டின் மீது கடன் இருக்கும்.

இவர்கள் தான் முதலில் வீடு வாங்குவார்கள்.

ஐந்தாம் பாவம் அல்லது ஆறாம் பாவத்தில் கிரகம் இருந்தால் உடனே வீடு வரும்.

எத்தனை கட்டங்களில் கிரகங்கள் இல்லையோ அத்தனை வருடங்கள் கழித்துத்தான் வீடு வரும்.

40 வயதில் ஒரு ஏமாற்றம் தரும்.

நாலு 16, 28, 40 வயதுகளில் ஒரு ஏமாற்றம் வரும்.

ஒரு அவச்சொல் ஒரு அவமானத்திற்கு இடம் கொடுக்கும்.

அந்த வயதுகளில் சொத்தும் வாங்குவார்கள்.

இந்த மாதிரி கிரக அமைப்புகள் புத்திர தோஷத்தை கொடுக்கிறது

நாலாம் பாவத்தில் செவ்வாய் :

நாலாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்

இது செவ்வாய் தோஷம்.

ஜாதகனுக்கு சொத்து உண்டு, வழக்கும்உண்டு.

சகோதரன் மழைக்காலத்தில் பிறந்தவராக இருப்பார்.

நாலு வயதில் சொத்து இருக்கும், சொத்து சேரும்.

சொத்து சம்பந்தமான டென்ஷன் இருக்கும், இருந்து கொண்டே இருக்கும்.

வாகனம் இருக்கும் சிறு, சிறு விபத்து இருக்கும். மார்பில் தழும்பு இருக்கும்.

செங்கல், செம்மண், சிவப்பு பெயிண்ட், கத்திரி செடி இவையெல்லாம் வீட்டில் இருப்பது நல்லது.

அருகே மின் கம்பம் இபி இருக்கும்.

சமையல்காரர் இருப்பார். ஜாதகரே சமைப்பார்.

ஒர்க் ஷாப், மெக்கானிக் ஷெட் இருக்கும்.

மருத்துவர் வீட்டின் அருகே இருப்பார்.

குடும்பத்திலும் மருத்துவர் இருப்பார்.

இவர் வீட்டு முன்பு வேறு நபர்கள் தங்களின் வாகனத்தை நிறுத்திவிட்டு தொல்லை கொடுப்பார்கள்.

தன் இடத்தை டூவிலர் நிறுத்துவதற்கு வாடகைக்கு விடுவார்கள்.

தெற்கு வாசல் வீடு அமையும்.

வீட்டின் அருகே காவல் நிலையம் இருக்கும்.

இடம் சம்பந்தமான போலீஸ் விசாரணை, காவல் நிலையம் செல்வது, ஒரு நாளாவது இவர்களுக்கு வரும்.

செவ்வாய் பார்வை சம்பந்தப்பட்ட காரக பதவியில் இருப்பார்.

தாய்வழியில் பதவியில் இருப்பார்கள், தாயே பதவியில் இருப்பார்.

தாயாருக்கு சர்ஜரி உண்டு.

தாயார் வாகனம் ஓட்டுவார்.

வீட்டில் நாய் இருக்கும், நாய் கடையும் இருக்கும்.

தாயாருக்கு வெட்டுக்காயம் இருக்கும்.

திடகாத்திரமாக இருப்பார்.

வாக்குவாதம் செய்வார்.

வீட்டின் அருகே சிலிண்டர் கம்பெனி இருக்க வாய்ப்பு உள்ளது.

நாலாம் பாவத்தில் புதன் :

நாலாம் பாவத்தில் புதன் இருந்தால் என்ன பலன்

2 இடங்கள் ஜாதகருக்கு இருக்கும்.

காலி மனை வாங்கி வீடு கட்டுவார்.

காலி மனை இருக்கும் 2 இடங்கள் இருக்கும்.

இரண்டு பத்திரம் இருக்கும்.

பூங்கா, பள்ளி அருகே வீடு இருக்கும்.

வீட்டுப் பத்திரம் இருக்கும் உரையுடன் வாங்கியபின் வீடு வாங்குவார்கள்.

தவணை முறையில் சீட்டு போட்டு இடம் வாங்குவார்கள்.

தையல் மெஷின், தையல் கடை, ஜெராக்ஸ் கடை வைக்கலாம்.

குடும்பத்தில் ஆசிரியர், ஜோதிடர், வக்கீல் யாராவது இருப்பார்கள்.

ஜாதகர் ஜோதிடம் தெரிந்தவர் அல்லது ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவராக இருப்பார் அல்லது ஜோதிட ஆசிரியராக இருப்பார்.

இவர்கள் வீட்டில் கிணறு இருக்கும்.

பேஸ்மன்ட் என்னும் நிலவறை இருக்கும்.

படிக்கட்டுக்கு கீழ்பகுதியில் அறை அல்லது கடை இருக்கும்.

நிலத்தடி தண்ணீர் தொட்டி இருக்கும்.

விஷ்ணு ஆலயம், சீட்டு நடத்துபவர், கொரியர் ஆபீஸ், வக்கீல் இருப்பார்..

இவர் வீட்டின் தெரு இரண்டு பெயர் கொண்டதாக இருக்கும்.

வீட்டில் இரண்டு வாசல் இருக்கும்.

நாலு வயதில் குடும்பத்தில் சொத்து இருக்கும்.

40 வயதில் ஜாதகர் சொத்து வாங்குவர்.

தாய்வழியில் ஆசிரியர், வங்கியில் பணிபுரியும் நபர்கள் இருப்பார்கள்.

தாய் மாமன் உள்ளூர் அருகில் இருப்பார்.

பிறந்த வீட்டு சொத்து, தாய்மாமன் கைளில் இருக்கும்.

இரண்டு இடம் வாங்குவார்கள்.

இரண்டு இடங்களில் தொழில் செய்வார்கள்.

40 வயதுக்கு மேல் படிப்பதற்கு தூண்டும்.

40 வயதுக்கு மேல் காதல் வரும்.

ஜன்னலுக்கு ஸ்கிரீன் போடுவார்கள்.

இவரது குடும்பம் பாகப்பிரிவினை 40 வயதில் முடியும்.

நாலாம் பாவத்தில் குரு:

நாலாம் பாவத்தில் குரு இருந்தால் என்ன பலன்

தாயார் கௌரவமானவர்.

கௌரவமான குடும்பத்தில் பிறந்தவர்.

தாய்வழியில் ஆசிரியர் உண்டு.

இவர் வீட்டின் அருகே பெரியமரம், கோவில் இருக்கும்.

தாய் வழியில் ஜோதிடர். வங்கியில் பணி புரிந்தவர் இருப்பார்கள்.

டிப்ஸ்

ஐந்தாம் பாவகம் புத்திரம் காரகர் குரு.

இவர் ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் ஆண் குழந்தையை பற்றிய கவலை இருந்து கொண்டே இருக்கும்.

4, 5க்கு 12 ம் இடம் தொடர்பு இருந்தால் தாயாருக்கு ஆண் குழந்தையை பற்றிய எண்ணம் அதிகமாக இருக்கும், அவர்களைப் பற்றி கவலை ஆர்வம் இருக்கும்.

நாலாம் பாவத்தில் குரு பெரிய அளவில் தொழில் செய்பவர்கள்.

இவர்களுக்குக ஜீவன குறைவு கிடையாது.

பணம் புத்தகத்தில் மறைத்து வைப்பார்கள்.

நீர் ராசி சம்பந்தப்பட்டால் சட்டைப் பையில் பணம் வைத்து அதை அப்படியே துவைத்து காய போட்டு விடுவார்கள்.

ஆற்றில் பணத்தை போடுவார்கள். ரைடு வரும்போது இப்படி செய்வார்கள்.

செல்போன். செக்புக் தண்ணீரில் நனைய விட்டு விடுவார்கள்.

நாலில் செவ்வாய் சம்பந்தப்பட்டு குரு இருந்தால் பணம் மறைத்தல், மறைத்து மறந்து போவார்கள். அது புதையலாக மாறிவிடும்.

நான்காம் இடத்தில் குரு இருந்து நீர் ராசியை பார்த்தால் நீரில் கண்டம். நாலு வயது வரை இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒரு குழந்தை இரண்டு முறை தண்ணீர் தொட்டியில் விழுந்து காப்பாற்றப்பட்ட நிகழ்வில் குழந்தையின் ஜாதகத்தில் நீர் ராசியான நான்கில் குரு இருந்தது. நாலு 16, 28, 30 இந்த வயதுகளில் நீரில் கண்டம் என்று குழந்தை ஜாதகத்தில் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

4 ல் குரு குழந்தை பிறந்தபோது மழை வந்து இருக்கும்.

மழைக்காலத்தில் கருத்தரிப்பு நடந்திருக்கும்.

விவசாயம் நன்று, பருத்தி செடி நல்லது.

வீட்டை சுற்றி சுவர் உட்பட அரச மரம் முளைக்கும்.

ஆற்றங்கரை குளக்கரை, அம்மன் கோவில் அருகில் இவர்கள் வீடு இருக்கும்.

மஞ்சள் வர்ணத்தில் வீடு இருக்கும்.

தொழில் சங்க தலைவர், நல்ல அறிவு உண்டு.

4 வயதுக்குமேல் குடும்பத்தில் நல்ல வளர்ச்சி உண்டு.

நாலு வயதில் குடும்பத்தில் யாருக்கேனும் குழந்தை பிறக்கும்.

வட கிழக்கு வாசல்.

அரசு வருமானம்.

சூரியன், குரு, செவ்வாய் வீட்டில் மர சாமான்கள் அதிகமாக இருக்கும்.

மர சாமான்கள் இவர்களுக்கு நல்லது.

சூரியன் இருந்தால் கண்ணாடி சாமான்கள் அதிகமாக இருக்கும்.

சனி இருந்தால் ஸ்டீல் சாமான்கள் அதிகமாக இருக்கும்.

செவ்வாய் ராகு இருந்தால் பிளாஸ்டிக் சாமான்கள் அதிகமாக இருக்கும்.

இவர்களுக்கு வாடகை வரும்.

40 வயதுக்கு மேல் வளர்ச்சி உண்டு.

இவர்களின் வளர்ச்சி காலம் 40 ,52, 64 இந்த வயதுகளில் வளர்ச்சி வரும் காலம், வீட்டில் தேன் கூடு கட்டும்.

தலைவர்கள் பெயரில் வீதி அமையும்.

சொத்து சேர்த்த பின் வளர்ச்சி உண்டு.

வீடு கட்டும் போது குழந்தை பிறக்கும் அல்லது குழந்தை பிறக்கும்போது வீடு கட்டுவார்கள்.

நான்காம் இடத்தில் சுக்கிரன்:

நான்காம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்

திக் பலம். ஸ்தான பலம்.

அத்தை உள்ளூரில் இருப்பார்.

மனைவியும் உள்ளூரில் இருப்பார்.

நாலு வயதில் உறவில் ஒரு திருமணம் இருக்கும்.

நாலு வயதில் பொருளாதார வளர்ச்சி இருக்கும்.

பெண் பெயர் உள்ள பள்ளியில் படிப்பார்கள். படிக்கும்போதே திருமணம் நல்லது.

திருமணப் பேச்சு நடக்கும்.

ஸ்ரீ என்ற பெயரில் வீதி இருக்கும்.

அழகான ஆபரணம், ஆடை, வாகனம் சொத்து உண்டு.

ஆர்ச் தெருமுனையில் அல்லது வீட்டின் முன்பு இருக்கும்.

தாயார் சுகவாசி நன்கு சமைப்பார்.

தாயாரின் உடன்பிறப்புகள் இருப்பார்கள்.

தாய்க்கு கண் நோய் உண்டு.

வீட்டில் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் இருக்கும்.

சாஸ்திர ஞானம் அதிகமாக இருக்கும்.

தாய்வழியில் பெண்கள் அதிகமாக இருப்பார்கள்.

தாய் அறிவாளி 40 வயதுக்கு மேல் படிப்பார்கள்.

வீடு கட்டும்போது திருமணம் நடக்கும்.

40 வயதுக்கு மேல் குடும்பம் வளர்ச்சி அடையும்.

நான்கு வயதில் உறவில் ஒரு திருமணம் நடக்கும்.

நாலில் செவ்வாய் வயரிங், மோட்டார் வேலை வரும் அதனைச் சரிபார்த்து முடிக்க திருமணம் நடக்கும்.

நல்ல நீர் வளம் இருக்கும்.

பழங்கள், பூச்செடிகள் வீட்டில் இருக்கும்.

தக்காளிச் செடி உண்டு.

தெருப் பெயர் ஸ்ரீ லக்ஷ்மி என்று வரும்.

மெயின் ரோடு அருகில்.

பெண் நண்பர்கள் அதிகம் உண்டு.

திருமணத்திற்கு சென்று வந்த பின்பு கரு உருவாகி இருக்கும்.

குரு, செவ்வாய், சுக்கிரன் ஐந்தில் இருந்து ஏழாம் அதிபதியுடனோ அல்லது தொடர்பில் இருந்தாலோ குழந்தை பிறந்த ஜாதகத்தில் குரு, செவ்வாய், சுக்கிரன் லக்னத்தில் அமைந்திருக்கும்.

பத்தாம் அதிபதி இருந்தால் ஒரு கர்மத்திற்கு போய் வந்த பின் கரு உருவாகும்.

பிறக்கும் குழந்தைக்கு ஜாதகத்தில் லக்னத்தில் இந்த பத்தாம் அதிபதி இருப்பார் அல்லது குழந்தையும் லக்னம் தந்தை அல்லது தாய் பத்தாம் அதிபதியும் சாரம் பெற்று இருக்கும்.

ஐந்தாம் இடத்திற்கும் ஐந்தாம் அதிபதிக்கும் தொடர்புடைய கிரகங்கள் அவரது குழந்தை ஜாதகம் லக்னத்திற்கும் தொடர்பில் இருக்கும்.

சுக்கிரன் சுக்கிலத்தை சொல்வார் நாலு என்றால் தண்ணீர் எனவே நீர்த்த விந்து.

40 வயதுக்கு மேல் காதல் இருக்கும்.

தாயாருக்கு நல்ல பலன், ஆடைகள் நிறைய உண்டு.

பெண்கள் மறந்து பணத்தை தண்ணீரில் நினைத்து விடுவார்கள்.

கலைத்துறையில் நாட்டம் இருக்கும்.

ஜாதகருக்கு ஒளிக்கிரகங்கள் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஒளி கிரகங்கள் கேந்திரத்தில் இருந்தால் நல்லது.

4, 9 உடையவர்கள் லக்னத்தில் இருந்து லக்னம் திதி சூன்யம் ஆனாலும் பாதகாதிபதியால் பார்க்கப்பட்டாலும் சேர்ந்திருந்தாலும் இந்த ஜாதகர் தந்தை முகம் காணாத குழந்தை.

டிப்ஸ்

வக்ர கிரகங்கள் நாலில், சனி வக்ரம் அல்லது வக்கிர கிரகங்களுடன் சனி இருந்தாலும், பார்த்தாலும் நடைபாதை படிக்கட்டு கட்டுவதற்கு இடம் போதாமல் பக்கத்தில் இடம் வாங்குவார்கள் அல்லது பற்றாக்குறைக்காக இடம் தருவார்கள்.

செவ்வாய் வக்கிரமாக இருந்து பார்த்தால் வாகனம் நிறுத்துவதற்கு இடம் கேட்பார்கள் அல்லது இடம் கொடுப்பார்கள்.

வக்ரம் என்பது பிய்த்து,பிய்த்து கொடுப்பது, வாங்குவது.

ஒப்பந்தங்களுக்கு வக்கிர கிரகங்களே காரணம்.

இந்த நிகழ்வுகள் கோச்சாரத்தில் வக்ர கிரகம் இல்லை என்றால் வக்ரமாகும் போது நடத்தப்பட வேண்டும் அல்லது நடக்கும்.

நான்காம் இடத்தில் சனி:

நான்காம் இடத்தில் சனி இருந்தால் என்ன பலன்

நாலு வயதில் கஷ்டம் அல்லது ஒரு கர்மம் இருக்கும்.

சூரியன், சனி, ராகு இணைவு தந்தை முகம் காணாத குழந்தை.

ஜாதகருக்கு உடல் நிலை குறைவு ஏற்படும்.

தந்தையை விட தாயாருக்கு வயதுஅதிகமாக இருக்கும்.

வீடு, வாகனம் அமைய தடை, தாமதம் இருக்கும்.

வீடு வாகனத்தை இவர்கள் அழகுபடுத்த முடியாது.

வீட்டருகே குப்பை drainage பிரச்சனை இருக்கும்.

வீடு கட்டுவதில் தாமதம் இருக்கும்.

பொது சேவையில் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.

வீடு கட்டியவுடன் ஒருகருமம் இருக்கும்.

சனி இருந்தாலும் பார்த்தாலும் கருமம் உண்டு.

வீடு கட்டும்போது மரணம் இருக்கும்.

வீட்டில் இரும்பு பொருட்கள் அதிகமாக இருக்கும்.

வண்டி, வீடு வாங்குவதில் ஒரு கசப்பு இருக்கும்.

மன உளைச்சல் கொடுக்காமல் போகாது.

40 வயதுக்கு மேல் சொத்து அமைவது நல்லது. இல்லையென்றால் வெறுப்பு உண்டாகும்.

நிலம் விற்பனையாகிவிடும்.

கல்வித் தடை, தாமதம் ஏற்படும்.

தொழிற்கல்வி, விவசாய கல்வி இவர்களுக்கு நல்லது.

படிக்கும்போதே வேலைக்கு போவார்கள்.

சனி 3ஆம் பார்வையாக ஆறாம் இடத்தை பார்ப்பதால் வேலை, மெடிக்கல் ஷாப், கணக்கு எழுதுவது, மாலை நேரம் மட்டும் பகுதி நேர வேலை செய்யலாம்.

பொது சேவை செய்வார்கள்.

வீட்டில் படிக்கட்டு பிரச்சனை, நடைபாதை பிரச்சனை இருக்கும்.

ஆரோக்கியக் குறைவு.

தாய்ப்பால் இருக்காது.

தாய்வழியில் ஆயுள் குறைபாடு உள்ளவர்கள் இருப்பார்கள்.

வீட்டில் வெளிச்சம் குறைவாக இருக்கும்.

இருதயம் சம்பந்தமான பயம் இருக்கும்.

பயன்படாத கிணறு, போர்வெல் இருக்கும் மண் குப்பை வீட்டு அருகே இருக்கும்.

பள்ளிக்கு நடந்தே போய் படித்திருப்பார்கள்.

இறந்தவர் பெயரில் சொத்து இருக்கும்.

தலைவர் பேரில் வீடு இருக்கும்.

ரோடு குண்டும் குழியுமாக இருக்கும்.

வாகனம் நிறுத்த இடம் இருக்காது.

வாகனம் பராமரிக்க முடியாது.

ஆடைகளை நன்றாக வைத்திருக்க முடியாது

மேல்கூரை இல்லாத கோவிலில் வழிபாடு செய்வது நல்லது.

ஊனமான தெய்வத்தை வணங்குவது நல்லது.

தரையில் படுத்திருக்கும் தெய்வத்தையும் வணங்கலாம்.

நான்காம் இடத்தில் ராகு:

நான்காம் இடத்தில் ராகு இருந்தால் என்ன பலன்

நாலு வயதில் ஒரு கண்டம் இருக்கும்.

ராகு என்றாலே கண்டத்தை ஏற்படுத்துவார்.

நான்கில் சனி, ராகு நின்று லக்னாதிபதி பலம் இழந்தால் ஜாதகருக்கு பாலாரிஷ்ட தோஷம் உண்டாகும்.

8, 10 ,12 ஆம் அதிபதிகள் எந்த கிரகத்தில் உள்ளார் அந்த ஆண்டு வரை ஜாதகர் உயிருடன் இருப்பார்.

12 வயது வரை ஜாதகர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்.

செவ்வாய், சுக்கிரன், சனி யோகியாக வந்தால் எப்படியும் வாழ்க்கையில் பிழைத்துக் கொள்வார்கள்.

ஜாதகருக்கு நான்கு வயதில் ஒரு இடமாற்றம் இருக்கும். தாயாருக்கு சர்ஜரி இருக்கும்.

ஜாதகரின் நான்கு வயதில் தாயாருக்கு கண்டம் இருக்கும்.

குழந்தையின் நான்கு வயதில் தாயாருக்கு கண்டம் இருக்கும்.

ஜாதகர் பிறந்த இடத்தைவிட்டு விட்டு

வெளிமாநிலம், வெளிநாடு போவார்கள்.

மது அருந்தும் பழக்கம் ஜாதகருக்கு இருக்கும்.

ஜாதகரின் வீட்டிற்கு பாம்பு வரும்.

வீட்டின் முன்னால் கருங்கல் கொட்டி இருப்பார்கள்.

மலை சார்ந்த பகுதியில் சொத்து அமையும்.

மூங்கில் தட்டி, மூங்கில் மரம் வீட்டில் முன்னால் இருக்கும்.

மேம்பாலம் அருகே சொத்து இருக்கும்.

இவர் இடத்தின் மீது பாலம் இருக்கும்.

தாய்வழியில் சாமி ஆடுபவர்கள் இருப்பார்கள்.

ஆடு, மாடு பிராணிகள் வீட்டில் இருக்கும்.

பெரும்பாலும் வாஸ்து குறைபாடு உள்ள வீடு அமையும்.

தாய் வேற்று மொழி, கலாச்சாரம் உடையவராக இருப்பார்.

ஜாதகருக்கு மார்பில் மச்சம் இருக்கும்.

ராகு கருப்பு மச்சம், சுக்கிரன் அழகான மச்சம்.

பாம்பு புற்று உள்ள கோவிலில் வழிபாடு செய்வது நல்லது.

தாயார் சாமி ஆடுவார் அல்லது செய்வினை செய்துவைப்பவராக இருப்பார்.

இவர்கள் வீடு கட்டி வாடகைக்கு விடக்கூடாது. அப்படி வாடகைக்கு விட்டால் வாடகை வராது.

இவர்கள் வாடகைக்கு குடி போனால் அந்த வீட்டில் ஒரு மரணம் சம்பவிக்கும்.

ஆண் குழந்தை உண்டு.

சுக்கிரன் வந்தால் திருமணம் நடக்கும்.

நான்கில் கேது :

நான்கில் கேது இருந்தால் என்ன பலன்

இவர்கள் வீடு ஒரு சந்துக்குள் இருக்கும்.

வீட்டிற்கு போகும் வழி இடைஞ்சலான பகுதியாக இருக்கும்.

சின்ன வீதியாக இருக்கும்.

ஜாதகனுக்கு சொத்து உண்டு, வழக்கும் உண்டு.

வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்கும்.

தையல் மெஷின் வீட்டில் இருக்கும்.

பிறமத கோவில்கள் மற்றும் கோவில் வீட்டருகே இருக்கும்.

பொம்மைகள் நிறைய இருக்கும்.

இவர்கள் கொலு வைத்து கும்பிடுவார்கள்.

ஆன்மீகம், தத்துவம் பேசுபவர்களாக இருப்பார்கள்.

ஒரு ஆன்மீக இயக்கத்தில் பதவியில் இருப்பார். போர்வெல் கிணற்றில் compressor போட்டு வைப்பது நல்லது.

மோட்டார் சரியாக இயங்காது.

இவர்கள் பிராய்லர் கோழி வளர்க்கலாம், ஆனால் லாபம் பெரிதாக இருக்காது.

மெத்தை தலையணை தயாரிக்கலாம்.

பருத்திச் செடி துளசி செடி வளர்க்கலாம்.

கொத்துமல்லி கொத்தவரங்காய் வளர்க்கலாம்.

இவையெல்லாம் பரிகாரம் சொல்வதற்கு இந்த மாதிரி செடிகள் சொல்வது உபயோகமாக இருக்கும்

சொட்டு நீர் பாசனம் நல்லது. வீடு, வாகனம் வாங்குவதற்கு ஜாதகருக்கு தடையாக இருக்கும்.

கோவில் கடைகளை இவர்கள் ஏற்று, அடுத்தவர்களுக்கு வாடகைக்கு விட்டு இருப்பார்.

குழந்தை பிறந்தால் வளர்ச்சி கிடையாது. மன அமைதி குறைவு,

ஜாதகருக்கு சுகபோக தடை இருக்கும். ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாக இருக்கும். இவர்கள் வீட்டில் வாழாத வாழாவெட்டி பெண்கள் இருப்பார்கள். காம்பவுண்டு சுவர் சிறியதாக இருக்கும். நான்கில் கேது மாடி கட்ட தடை இருக்கும் மீறி கட்டினால் வளர்ச்சி குறைவு ஏற்படும். நான்கில் சனி அல்லது கேது இருந்தால் அந்த வீட்டு அதிபதி விடக்கூடாது. நான்கில் சனி கேது இருந்தால் இறந்தவர்கள் பெயரில் சொத்து இருக்கும். திருத்த பத்திரம் போட செய்யும். நான்கில் ராகு, கேது இருந்தால் தாயார் கொடி சுற்றி பிறந்தவர். நான்கில் புதன், கேது இருந்தால் புதன் கை, கேது வளையல் லக்னத்தில் புதன் கேது இருந்தால் வளைகாப்பில் பிரச்சனைகள் வரும். பேச்சுவார்த்தை நடக்கும் வளையல் போடும் போது பிரச்சனை வரும். திருமண தாமதம்.

பெண்ணிற்கு திருமண தாமதம் என்றால் இதற்கு பரிகாரம் வேறு கல்யாணத்தில், திருமணத்தன்று மணப்பெண்ணிற்கு மணமேடையில் மாங்கல்யம் கட்டுவதை பார்த்து வாழ்த்தி பூ அட்சதை போட்டு வர சொன்னால் அந்த திருமணமாகாத பெண்ணிற்கு சீக்கிரம் திருமணம் நடக்கும்.

எந்த ஒரு கேள்விக்கும் கேள்விக்குரிய பாவத்தின் அடுத்த பாவத்தில்ஒருகிரகம் இருக்க வேண்டும்

நான்காம் பாவ அதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன்

லக்னத்துல உள்ள கிரகங்கள் குழந்தை பிறக்கும்போது, கரு உருவாகும் போது உள்ள சூழ்நிலைகளையும், சம்பவங்களையும், கிரக காரகத்துவம் மூலமாகவும் ஆதிபத்தியம் மூலமாகவும் உணர்த்துகின்றன.

நாலாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் ஜாதகர் வீடு கட்டும்போது பிறந்திருப்பார் அல்லது வீடு கட்டும்போது கருத்தரித்து இருப்பார். பிறந்தவுடன் சொத்து உண்டு.

நீர் கிரகங்கள் இதைப் பார்த்தால் சேர்ந்தாலும் ஜாதகர் அடைமழையில் பிறந்திருப்பார்.

குரு, சந்திரன், சுக்கிரன் பார்த்தாலும் கூடினாலும் மழை பெய்யும் போது பிறந்தவர். நாலு வயதில் தண்ணீரில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவர் பிறந்த ஊரில் ஆறு இருக்கும், ஆற்றின் பெயரில் ஊர் இருக்கும், கரவை மாடுகள் உள்ள வீடு. பதவி பெயரில் ஊர் இருக்கும் பெருந்துறை இது போல. பதவி பெயரில் மனைவி பிறந்த ஊரில் ஆறு இருக்கும். ஆடு மாடு மேய்த்த குடும்பம். பால் தயிர் வீட்டில் எப்போதும் இருக்கும். அலி நட்சத்திரங்களான மிருகசீரிடம், மூலம், சதயம் இவர்கள் தண்ணீரில் விழுந்தால் விழுந்ததை கவனிக்க முடியாது, கண்டுபிடிக்கவே முடியாது. ஐந்தில் சூரியன் இருந்தால் மேல்கூரை போடுவார்கள்.

நாலாம் அதிபதி லக்னத்தில்:

லக்னத்தில் சூரியன் அல்லது நாலாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் நல்லபடியாக குழந்தை பிறக்கும். ஐந்தாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் மழைக்காலத்தில் கருத்தரிப்பு. நான்காம் அதிபதி இரண்டாம் பாவத்தில் இருந்தால் என்ன பலன் இரண்டாம் இடம் வருமானம். இவருடைய வருமானம் நாலாம் பாவ காரகத்துவம் மூலம் இருக்கும்.

ஜாதகருக்கு தாய் பற்றிய பேசிக் கொண்டிருப்பார் அல்லது உள்ளுரை பற்றிய பேசிக்கொண்டு இருப்பார்..

பிறந்த ஊரை பற்றி தாய் உடன் இருப்பார். மாத்ரு மூலதன யோகம் நாலு ரெண்டு 2 4 இந்த யோகம். கல்லாப்பெட்டி சாவி, பணம், செக், மஞ்சப்பை எல்லாம் அம்மாவிடம் கொடுப்பார்கள். அம்மாவிடம் தான் பணம் வாங்குவார்கள். வாகனம் மூலம் வருமானம் இருக்கும். விவசாயம், கால்நடை மூலம் ஆதாயம் அதிகமாக இருக்கும். டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தலாம். வீடு கட்டி வாடகைக்கு விடுவார்கள். உறவுகள் அதிகமாக இருக்கும். அம்மாவிடம் பணம் எப்போதும் இருக்கும்.

நாலாம் அதிபதி 2ல்:

நாலாம் அதிபதி 2ல் இருந்தால் இவர்களின் பேச்சு அழகான பேச்சு மற்றவர்களை கவரும் விதம் இருக்கும். இவர்கள் பேசியே மற்றவர்களை அசத்தி விடுவார்கள். நான்கு 2 திதி சூன்யம் ஆக இருந்தால் ஜாதகர் திக்கி திக்கி பேசுவார் பேச்சு சரியாக வராது. ஜாதகருக்கு இரண்டு வயதில் சொத்து வரும். இந்த நிலையில் பெரியம்மாவும் சொத்து வாங்குவார். வீட்டில் ஜோதிடர், ஆசிரியர் யாராவது இருப்பார்கள். அம்மாவும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பார். அம்மா தொழில் செய்பவராக இருப்பார். அம்மாவுக்கு கண் நோய் உண்டு. இவர்களுக்கு கண்ணில் நீர் வடியும் பஸ் பயணத்தின் போது கண்ணில் நீர் வடியும் ஏதாவது படித்தாலும் கண்ணில் நீர் வரும்தாய் வழியில் விவசாயம் இருக்கும். இவர்களுக்கு பழைய சோறு சாப்பிட ஆர்வம் இருக்கும். சாப்பாடு நீர் நாலாம் பாவம். தண்ணீர் கேன் வியாபாரம் செய்யலாம். வீட்டின் அருகே பள்ளி, தண்ணீர் தொட்டி இருக்கும். தாயார் ஜாதகர் உடன் தான் இருப்பார். நாலு தாய் இரண்டாம் இடம் குடும்பம். ஜாதகருக்கு மதுப்பழக்கம் ஏற்படலாம். கூல் ட்ரிங்க்ஸ் நீர் உணவு எப்போதும் இவர்கள் வீட்டில் இருக்கும். பெரியம்மாவுக்கு சொத்து இருக்கும், ஒரு பதவி இருக்கும். பதவி வகித்தவர்கள் பெரியம்மா வழியில் இருப்பார்கள். பெரியம்மா வீட்டில் கிணறு இருக்கும் அல்லது கல்லறை ஜீவசமாதி இருக்கலாம். நாலாம் அதிபதிக்கு கேது தொடர்பு வந்தால் ஒன்றுவிட்ட பெரியம்மா என்று எடுக்க வேண்டும். ராகு தொடர்பு வந்தால் தாயாரின் உயிர்த்தோழி.

ஜாதகருடைய பேச்சு எப்படி இருக்கும் என்றால் அடேய் அம்மா, அம்மாடியோ, யாரை பார்த்தாலும் ஏம்மா, எப்படி அம்மா, இருக்கிறீங்க? இப்படித்தான் ஜாதகருக்கு பேச்சு இருக்கும். உணவு பெயரை சேர்த்து வரும் இவர்கள் பெயர். பக்கோடா காதர், போண்டா மணி, லட்டு முருகன், வட்டி கடை முருகன் இப்படி பெயரை வைத்துக் கொள்வார்கள். பாதகாதிபதி, திதி சூன்யம் தொடர்பாக இருந்தால் டாக் ரவி. நாய் சேகர் என்று வைத்துக் கொள்வார்கள்.

டிப்ஸ்

பதினொன்றாம் அதிபதி நாலாம் பாவத்திற்கு தொடர்பு கொண்டால், வாடகைக்கு போன வீட்டை ஜாதகர் விலை கொடுத்து வாங்கிவிடுவார்.

இதற்கு நாலு 2 11 சம்பந்தம் இருக்க வேண்டும் 12, 2, 11 இது நாலுக்கு சம்பந்தப்பட்டால் இவர் கால் வைத்த இடம் இவர்களுக்கு சொந்தமாகிவிடும்.

நான்கு எட்டு பன்னிரண்டு 2 இந்த சம்பந்தமாக இருந்தால் ஏலம் ஆகும் சொத்தை இவர்கள் ஏலத்திற்கு எடுப்பார்கள்.

நான்கு 2 தொடர்பு இருந்தால் கிரகப்பிரவேசத்தின் போது கோ பூஜை செய்வது மிக முக்கியம்.

நாலாம் அதிபதி மூன்றில் :

நாலாம் அதிபதி மூன்றில் இருந்தால் என்ன பலன் நாலாம் பாவத்திற்கு மூணு 12 ஆம் இடம் தன் பெயரில் உள்ள சொத்தை இடம் மாற்றி எழுதிக் கொடுப்பார். தான செட்டில்மெண்ட் செய்வது, திருத்த பத்திரம் போடுவது, செய்வார. தாய் இளையவர் அல்லது மூன்றாவது நபராக இருப்பார். ஒன்பதாம் அதிபதி தொடர்பு மூன்றாவது பிறப்பை உறுதி செய்யும். ஐந்தாம் பாவம் முதல் குழந்தை, ஏழாம் பாவம் இரண்டாவது குழந்தை, ஒன்பதாம் பாவம் மூன்றாவது குழந்தை, பதினொன்றாம் பாவம் நாலாவது குழந்தை. தாயாருக்கு கட்டுமஸ்தான உடல் இருக்கும். தாயாருக்கு சகோதரம் இருக்கும். நடைப்பயிற்சி அதிகமாக செய்வார், நடைபயணமும் போவார். வாகனம் ஓட்டுவார். வீட்டின் அருகில் சைக்கிள் கடை, டூவீலர் கடை இருக்கும். தாயார் பணத்தை விரும்புவார். ஜாதகம் பெரும்பாலும் பயணம் செய்துகொண்டே படிப்பார். இடமாற்றம் இருக்கும். தொலைதூர கல்வி கோர்ஸ் படிப்பார். சகோதரனுக்கு மது பழக்கம் இருக்கும். சகோதரனுக்கு நீரில் கண்டம் இருக்கும். ஜாதகர் சுயமுயற்சியால் முன்னேறுவார். கமிஷன் தொழில் செய்வார். காவல் ராணுவம் தொடர்பு இருக்கும். தாயாரே காவல்துறையில் பணியில் இருப்பார். குரல் இசை நாட்டம் இருக்கும். தாயாருக்கும் இருக்கும். ENT பிரச்சனை இருக்கும். தற்கொலை எண்ணம் இருக்கும். தாயார் நன்கு குலவை போடுவார். ஜாதகருக்கு முதல் சொத்து விரையம். சகோதரன் வீட்டில் தாயார் இருப்பார். சகோதரன் மூன்றாம் இடம் நாலாம் இடம் தாய். சொத்து பிறந்த இடம் சொத்து சகோதரன் அனுபவிப்பார். ஜாதகர் விட்டுக் கொடுப்பார். சகோதரன் மழைக்காலத்தில் பிறந்திருப்பார். இவர் மீது ஒரு வழக்கு இருக்கும். ஜாதகன் வெளியூர் அடிக்கடி போவார். சகோதரன் மூன்றாமிடம், வாகன சொத்து நாலாம் இடம், சகோதரனுக்கு வாகனம், சொத்து இருக்கும். சகோதரனுக்கு மூக்கில் சதை வளரும். மூன்றில் குரு இருந்தால் மூக்கில் சதை வளரும்.

தைராய்டு இருக்கும். படிக்கும் பள்ளியில் நினைவுச் சின்னம் இருக்கும். ஜாதகர் இடத்தில் டவர், போஸ்ட் ஆபீஸ், கொரியர் ஆபீஸ், சைக்கிள் கடை இவற்றிற்கு வாடகைக்கு விடுவார். நான்காம் அதிபதி மூன்றில் இருந்தால் வாடகைக்கு போகாமல் போகியத்திற்கு போனால் விரைவில் சொந்த வீடு அமையும்.

மகர ராசி லக்னமாக இருப்பவர்கள் வாடகைக்கு போக மாட்டார்கள். போகியத்திற்குதான் போவார்கள் அதுதான் நல்லது.

நாலு மூணு தொடர்பு அடிக்கடி வீடு மாற்றுவார்கள். வீட்டில் வாட்டர் பில்டர் இருக்கும். சொட்டுநீர் பாசனம் செய்வார். வீட்டில் வாகனம் காணாமல் போகும். வீட்டை பூட்டி சாவியை தொலைப்பார்கள், வீட்டின் பூட்டை உடைப்பார். வீட்டை சுற்றி வலை அடித்து வைத்திருப்பார், வாகனம் மாற்றுவது, ஒரு வண்டியில் சென்று வேறு வண்டியில் பயணம் செய்வது, தன் வண்டி நிற்கும் அருகிலுள்ள வேறு வண்டியில் சாவியைப் போட்டு திறப்பார்கள், தான் உட்கார்ந்த சீட்டை மாற்றி மாற்றி உட்காருவார்கள், சட்டையை மாற்றி போடுவார்கள். சந்திரன் தொடர்பு இருந்தால் கையெழுத்து வேறு நபரால் போடப்பட்டு இவர்கள் சொத்து கைமாறும்.படிக்கும்போது பதிவு திருமணம் நடக்கும். ஹாஸ்டலில் தங்கி படிப்பார்கள். வக்ர கிரகம் தொடர்பு கொண்டால் தாயாருக்கு இடதுகை பழக்கம் வரும். படிக்கும்போது போலீஸ் ராணுவ தேர்வு எழுதி இருப்பார். வீட்டில் கேபிள் connections இருக்காது, டிஸ் ஆன்டனா தான் இருக்கும். வீட்டு அருகே டூவீலர் ஸ்டாண்ட், மெக்கானிக்கல் கடை, இருக்கும். இவர்கள் இடத்தை போலீஸ்காரர் வாடகைக்கு எடுப்பார் அல்லது போலீஸ் வீட்டை ஜாதகர் வாங்குவார். சூரியன், குரு இருந்தால் மாடு முட்டும்.இவர்கள் முரட்டுக்காளை அடக்க போகக்கூடாது. blank cheque கையெழுத்து ஆகாது. இவர்களுக்கு பெயர் மாற்றம் எச்சரிக்கையுடன் பதிவு செய்ய வேண்டும் இல்லையென்றால் திருத்த பத்திரம் தேவையுள்ளது என்று மறுபடியும் பதிவு செய்ய வரும்.பள்ளி மாறுவது, புத்தகம் மாற்றுவது வழக்கமாக இருக்கும்.

டிப்ஸ்

ஏழாம் அதிபதியோ, செவ்வாயோ, நாலாம் பாவத்திற்கு தொடர்பு கொண்டால் படிக்கும்போதே பதிவுத் திருமணம் நடக்கும்.

எட்டாம் பாவம் மூன்றாம் இடத்திற்கு தொடர்பு கொண்டால் ஒரு ரகசியத்தை சொல்லும். தன் சொத்து யாருக்கேனும் பவர் கொடுப்பது பின்னால் அது வராமல் போகும். எச்சரிக்கை தேவை. நான்கில் மூன்றாம் அதிபதி நின்று 5, 9 அதிபதிகள் தொடர்பு கொண்டால் வீட்டில் கோவில் ஆபரணம் இருக்கும். மூன்றாம் இடம் திதி சூன்யம் தொடர்பு கொண்டால் கம்மல் மூக்குத்தி தொலைந்து போகும். புதன் கம்மல் இரண்டு முறை காது குத்துவார்கள். இசைக்கருவிகள், ஜிம் உடற்பயிற்சி கருவிகள் இருக்கும். சகோதரனுக்கு 6, 8, 12 தொடர்பு இருந்தால் ஆரோக்கிய குறைபாடு இருக்கும். 6 நோய் 8 பெரிய மருத்துவம் 12 சுகபோக தடை மரணம்.

நான்காம் அதிபதி நான்கில்:

நான்காம் அதிபதி நான்கில் இருந்தாள் என்ன பலன் இது பஞ்சமகா புருஷ யோகத்திற்கு சமம். புதன், குரு, செவ்வாய், சனி, சுக்கிரன் இந்த 5 பேருக்கும் கேந்திரங்களில் ஆட்சி, உச்சம் பலம் பெறும் போது யோகங்களை தருகிறார்கள். சுக யோகம் வண்டி, வீடு, வாகனம் யோகம். தாயார் அழகு, நீண்ட ஆயுள் உள்ளவர். சுகபோகம் மிக்கவர். பதவி உண்டு. உறவினர்களால் ஆதாயம் உண்டு. இறந்த இடத்திலேயே இருக்கும் இருக்கும் ஜாதகருக்கு நாலு வயது 40 வயதில் சொத்து சேரும்.சமுதாயத்தில் மதிப்பு மரியாதை இருக்கும். பெரிய பதவி உண்டு. இவர்கள் உரிய காலத்தில் திருமணம் செய்தால் நல்ல பலன்கள் உருவாகும். செவ்வாய் நான்காம் அதிபதி ஆகி நான்கில் இருந்தால் ருஷ யோகம். சுக்கிரன் நான்காம் அதிபதியாகி நான்கில் இருந்தால் மாளவிகா யோகம். புதன் நான்காம் அதிபதி ஆகி நான்கில் இருந்தால் பத்திர யோகம். குரு நான்காம் அதிபதியாகி நான்கில் இருந்தால் ஹம்ச யோகம். இவை கேந்திரங்களில் பலம் பெறும் போது யோகங்கள் வலுப்பெறுகின்றன. ருஷ யோகம் என்றால் ஜாதகருக்கு வாகனம், சொத்து பெரும் பதவி, அதிகாரம் இவையெல்லாம் கிடைக்கும். ஹம்ச யோகம் என்றால் பதவி, செல்வம், கௌரவம் கிடைக்கும். பத்திரயோகம் என்றால் ஜாதகன் தீர்க்கதரிசி, அறிவாளி. மாளவிகா யோகம் என்றால் அறிவாளி, சுய முயற்சியில் சொத்து சேர்ப்பது, சச யோகம் என்றால் பெரிய தொழிலதிபர், தொழிலாளர்களை அரவணைப்பது, அவர்களுக்கு லாபம் சேர்ப்பது. புதன் சமாதானம் எதையும் உள்வாங்குவது. சுக்கிரன் எதையும் சுத்தமாக வைத்திருப்பது, சரியாக எதையும் செய்வது, ஆர்வத்துடன் துவங்கி அழகாக முடிப்பது. குரு வழிகாட்டி, ஞானம் கொடுப்பது, சூரிய ஒளியுடன் கூடிய வளர்ச்சி. நாம் நமது எண்ணங்களை செயல்பாடுகளை இயற்கையோடு இணைந்து செயல்பட்டால், வெளிப்படுத்தியும், நடந்து கொண்டால் நமது ஜாதகப்படி உள்ள நற்பலன்கள் வேலை செய்யும் நல்லதே நடக்கும். இந்தத் தன்மை வந்தால் ஜோதிடம் வந்து வாக்குபலிதம் இயலும். ஜோதிடரின் ஆற்றல் மேம்பட்டு ஜோதிடமும் வளரும். குரு, சுக்கிரன், புதன் கேந்திராதிபத்திய தோஷம் நற்பலனை தருவதில்லை, ஆயினும் ஒரு வீட்டின் பலனை தவிர்த்து மறு வீட்டின் பலனை தரும். திரிகோணத்தில் எவரும் சுபரே கேந்திரத்தில் பாபர் சுபரே ராகு-கேது திருப்பிப் போடும் கிரகம் ஆகும். இவற்றின் லாப பார்வை திருப்பி போட்டு நல்ல பலன்கள் தரும். லாபத்தில் எவரும் சுபரே. நாலாம் அதிபதி கடகத்தில் அமர்வது காரக பாவ நாஸ்தி ஆகும் இது நல்ல இடம் கிடையாது

நான்காம் அதிபதி ஐந்தில்:

நான்காம் அதிபதி ஐந்தில் இருந்தால் என்ன பலன் குழந்தை என்றால் ஐந்து, மழை என்றால் நான்கு குழந்தை மழைகாலத்தில் உருவாகும். சொத்து, வாகனம், வீடு அமையும்போது கரு உருவாகும். குழந்தை 5 அல்லது 4 குழந்தை அழகாக இருக்கும். பூர்வ புண்ணிய சொத்து இருக்கும், தாத்தா வழி சொத்து இருக்கும். தாய்மாமனுக்கு சொத்து உண்டு, ஒரு பதவி உண்டு. இதை சூரியன், குரு பார்த்தால் தாய் மாமன் உள்ளூரில் ஒரு பதவியில் இருப்பார். தாத்தா என்றால் ஐந்து, ஆடு மாடு என்றால் 4, தாத்தா ஆடு மாடு வளர்த்த குடும்பம். தாயார் அறிவாளி. தாயாருக்கு ஜோதிட ஆர்வம் அதிகமாக இருக்கும். குழந்தைக்கு நீரில் ஐந்து வயது வரை கண்டம் இருக்கும், ஜலதோஷம் சளி ஐந்து வயது வரை இருக்கும். தாயார் மூத்தவர் சூரியன் தொடர்பு இருந்தால் தாயார் மூத்தவர். தாயார் வழியில் ஆசிரியர் உண்டு. நாலு தாயார் 5 ஆசிரியர். சொத்து தேடி வரும் ஐந்தாம் பாவம் தேடிவரும் பாவம். ஐந்தாம் அதிபதியும், சூரியனும் முதல் குழந்தையை பற்றி சொல்லும். தாயாருக்கு குழந்தையைப் பற்றிய ஆர்வம் அதிகமாக இருக்கும். குலதெய்வம் கோவிலில் மரங்கள் இருக்கும். ஆற்றின் ஓரத்தில் குலதெய்வக் கோயில் இருக்கும். நாலு என்றால் ஆறு அஞ்சு என்றால் குலதெய்வம், தெப்பக்குளம், கண்மாய், இதற்கு அருகில் பிள்ளையார் கோவில் இருக்கும். குதிரை நாய் உண்டு. குழந்தை பிறந்த ஐந்து வருடத்தில் சொத்து சேரும். 50 வயது ஆனபின்பும் படிப்பார்கள். தாயாருக்கு ஆன்மீக நாட்டம் அதிகம்.

மனிதநேயம் உண்டு. இடம் வாங்கி ஐந்து வருடம் கழித்து தான் வீடு கட்டுவார். விவசாய நிலத்தில் குல தெய்வம் இருக்கும். குலதெய்வம் கோயிலுக்கு போய் வந்து வீடு கட்டுவார். வாடகை வருமானம் உண்டு. ஜாதகர் உள்ளூரில் படிப்பார். மேற்கல்வி உண்டு. குலதெய்வ ஊரில் கல்லூரி இருக்கும். தாய்மாமனுக்கு குடிப்பழக்கம் உண்டு. வீடு தாத்தா பெயரில் இருக்கும். தாத்தா கோவிலுக்கு இடத்தை தானம் செய்தவராக இருப்பார். இவர்கள் தேர் இழுப்பது நல்லது. தேரடி வீதி, மாட வீதி, சமுதாய கூடம், பள்ளி அருகே இருப்பார், வீடு இருக்கும். படிக்கும்போது காதல் வரும். ஷேர் மார்க்கெட் பற்றி தெரிந்து வைத்திருப்பார். நாலு என்றால் பசு அஞ்சு என்றால் தானம், கோபூஜை இவர்களுக்கு மிக நல்லது. தாய்வழியில் கோமதி சோமு சிந்து இந்த மாதிரி யாராவது இருப்பார்கள். குடும்பத்தில் தாத்தா மற்றும் குலதெய்வ பெயர்களை வைத்திருப்பார்கள். ஜாதகர் தலைகீழாக கரணம் போட்டு குதித்து ஆற்றில் தண்ணீரில் குளிப்பது ஆகாது. இதனால் புத்தி மறதி ஏற்பட வாய்ப்புள்ளது. துலாத்தில் நாலு அஞ்சு க்குடையவர் சனி உச்சம் துலா ராசி மண்டையோடு ராசி அதனால் இவர்கள் தலைகீழாக குதித்து குளிக்கக்கூடாது கேந்திராதிபதிகள் திரிகோணத்தில் இருந்தால் நன்மையான பலன்கள் நடக்கும். இதில் திதி சூன்யம் பாதகாதிபதி தொடர்பு இந்த பலனை அனுபவிக்க விடாது. ஆற்றில் அடித்து வந்த தெய்வ வழிபாடு. குலதெய்வ வழிபாடு ரொம்ப நல்லது. மரத்தில் தெய்வ வழிபாடு செய்வார்கள். 4 க்கு உடையவனும் அஞ்சுக்கு உடையவனும் செய்ய தவறியதை ஒன்பதுக்குடையவன் பத்தாம் அதிபதியும் 100% செய்வார்கள். ஸ்திர ராசிக்கு கோணாதிபதியே பாதகாதிபதி இவர் ஆறு ஏழு எட்டு மற்றும் திதி சூன்யம் ஏறாத வகையில் இவர் சுபரே. இவர்கள் வீட்டில் பஜனை வைத்து வழிபடுவார்கள்

நான்காம் அதிபதி ஆறில்:

நான்காம் அதிபதி ஆறில் இருந்தால், ஜாதகனுக்கு எந்த சுகமும் இருக்காது. மாறாக அவஸ்தை நிரம்பி இருக்கும். தாயுடன் நல்ல பரிவு இருக்காது. தாய்வழி உறவுகளுடன் சண்டை, சச்சரவுகள் விரோதங்கள் இருக்கும். தாய் வழிச் சொத்துக்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். அவ்வப்போது நோய், நொடிகள் வேறு வந்து நின்று வாட்டியெடுக்கும்.

நான்காம் அதிபதி வந்து நிற்கும் ஆறாம் வீட்டை சுபக்கிரகங்கள் பார்த்தால் மேற்சொன்ன பலன்கள் நீங்கும் அல்லது குறையும்

நான்காம் அதிபதி ஆறாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்

ஜாதகருக்கு நீரில் கண்டம் நாலு என்றால் நீர் 6 வயது வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆறு வயதில் ஜாதகருக்கு உடல்நிலை குறைபாடு இருக்கும். சிறு விபத்து இருக்கும். தந்தை மற்றும் தாத்தாவுக்கு இரண்டு திருமணம், ஐந்தாம் இடத்தில் புதன், கேது சம்பந்தம் இருந்தால் தாத்தாவுக்கு இரண்டு திருமணம்.ஒன்பதாம் இடத்தில் புதன், கேது சம்பந்தம் இருந்தால் தந்தைக்கு இரண்டு திருமணம். இவற்றுடன் பெண் கிரகங்கள் இணைந்தால் இது உறுதி. இந்த அமைப்பு பதினொன்றாம் பாவத்திற்கு சம்பந்தம் வந்தால் சித்தப்பா மற்றும் மூத்த சகோதரனுக்கு இரண்டு திருமணம். நாலு வீடு, ஆறு தாமதம், வீடு கட்ட தடை, தாமதம் ஆகும். வீட்டின் மீது கடன் இருக்கும். குறிப்பிட்ட காலத்தில் வீடு கட்ட முடியாது. வீட்டில் திருட்டுப் போகும் நாலு ஆறு 3-ஆம் இடம் தொடர்பு இருந்தால் ஆபரணம் திருட்டுப் போகும். பன்னிரெண்டாம் அதிபதி தொடர்பு இருந்தால் வாகனம் திருட்டுப்போகும்.நாலு, ஆறு தொடர்பு இருந்தால் பிராணிகள் வளர்ச்சி இருக்காது. வளராது. வாகனம் பழுதாகி நிற்கும். ஆரோக்கிய குறைவு. வீட்டு வருமானம், வாடகை வருவது தடையாக இருக்கும். கல்வியில் ஒரு தடை உண்டு. படிக்கும்போது அரியர்ஸ் வைத்துக் கொள்வார்.படித்துக்கொண்டே உத்தியோகம் பார்த்து கொண்டு படிப்பார்கள். படிக்கும்போது விபத்து உண்டு. கல்விக்காக கடன் வாங்குவார். இவர் தாயார் கடின உழைப்பாளி, வேலைக்கு செல்பவராக இருப்பார். தாயாருக்கு சுகம் கிடையாது. ஜாதகருக்கு தாய்பால் இல்லை.மழை வெள்ளத்தில் வீடு, வாகனம் சேதமாகும். தண்ணீரில் கண்டம் உண்டு. வாயுத் தொல்லை உண்டு. தாயார் கோபக்காரராக இருப்பார், அதிகம் வாக்குவாதம் செய்யக்கூடியவராக இருப்பார். வீட்டின் அருகே உணவு கடை, இருக்கும் வீட்டில்மெஸ் வைத்து நடத்தலாம். லோன் மூலம் வாகனம் வாங்கலாம். மழை நீர், ஓடை நீரில் வாகனம் பழுதாகி இருக்கும். தாயாருக்கும் வாயுத் தொல்லை உண்டு. மார்புவலி உண்டு. ஆரோக்கியம் குறைவு உண்டு. சுகபோக தடை இருக்கும்.சாப்பிட்டவுடன் தூங்குவார்கள். நாய் கடிக்கும். பக்கத்து வீட்டாருடன் பிரச்சனை இருக்கும். தாயார் உறுதியாக இருப்பார்.

தாயார் பிரிந்து வாழ்வார் அல்லது பிறந்த இடத்தை விட்டு வெளியூரில் வசிப்பார்.தாயாருக்கு இருதய பயம் இருக்கும். வீட்டருகே மளிகைக் கடை இருக்கும். பயன்படாத போர்வெல், மூடப்பட்ட கிணறு இருக்கும். மழைநீர் தேங்கும், வீட்டுக்குள் மழை நீர் வரும். மழைக்காலத்தில் வாகனத்தில் செல்வது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனத்தின் பின்னாடி நாய் துரத்தும், எட்டில் சனி இருந்தால் இது உறுதி. நாலு + ஆறு, நாலு + எட்டு, 4 + 12 சுபபோகத்தடை.

நான்காம் அதிபதி ஏழாமிடத்தில்:

நான்காம் அதிபதி ஏழாமிடத்தில் இருந்தால் என்ன பலன் மழை பெய்யும்போது அல்லது மழைக்காலத்தில் இவருக்கு திருமணம் நடந்திருக்கும்.வீடு கட்டியபோது திருமணம் நடக்கும்.

குரு சந்திரன் சுக்கிரன் தொடர்பு திருமணத்தன்று மழை வந்திருக்கும். வேலைக்கு போவது, வண்டி ஓட்டி பழகுவது, வண்டி ஓட்டி பழகிய பின் வேலைக்கு போனால் உடனே திருமணம் நடக்கும். ஜாதகரின் நாலு வயதில் உறவில் ஒரு திருமணம் நடக்கும். தாய் உறவில் ஜாதகருக்கு திருமணம் அமையும்.படித்த மனைவி வருவார். மனைவி அழகாக இருப்பார். மனைவிக்கு சொத்து உண்டு. மனைவியுடன் வண்டி, வாகனம் வரதட்சணையாக கேட்பார். இதனால் திருமணம் தடை தாமதம் ஆகும். நண்பர்களுக்கு ஆடை தானம் வழங்குவார். மனைவிக்கு நீரில் கண்டம். 4 நீர், கண்டம் 6. மனைவி பெயரில் ஊரில் சொத்து உண்டு. மனைவிக்கு சூரியன், குரு பார்க்க பதவி இருக்கும். மாட்டுத் தொழுவம் அருகே மனைவியின் வீடு இருக்கும். அவர் பிறந்த வீடு ஆடு, மாடு மேய்த்த குடும்பமாக இருக்கும். மனைவி வழியில் சொத்து கிடைக்கும். மனைவி வீடு மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட் அருகே இருக்கும். மனைவி பெயரில் ஆறு என்ற பெயர் வரும்படி இருக்கும். படிக்கும்போதே திருமணம் இருக்கும். உள்ளூரில் அறிமுகமான மனைவி கிடைக்கும்.திருமணம் முடிந்து பரிட்சை எழுதுவார்கள். தாய்வழி உறவு இருக்கும், திருமணத்தடை. பெரும்பாலும் தாய்க்கு பெண் பிடிக்கவில்லை, வண்டி வாங்கி தரவில்லை, பெண் அதிகமாக படிக்கவில்லை பெண் அழகு இல்லை, இப்படி நாலாம் பாவம் சார்ந்த காரணமாகவே இருக்கும். திருமணத்திற்குப் பின் நல்ல தாம்பத்தியம் சுகபோகம் இருக்கும்.தாயாருக்கு பொது சேவையில் ஈடுபாடு இருக்கும், உதவும் மனப்பான்மை இருக்கும். தாயார் இரண்டாவதாக பிறப்பு இருக்கும். திருமணத்திற்கு பின் மனைவிக்கு பதவி உயர்வு உண்டு. உள்ளூரில் முதலிரவு நடக்கும். நாலாம் அதிபதி நீர் ராசிகள் இருந்து, ஏழாம் அதிபதி தொடர்பு இருந்தால், திருமணம் நடக்கும்போது திருமண நிகழ்வில் மது வழங்குவது, மது அருந்துவது கூடாது. நிச்சயம் ஒரு பிரச்சனையை உண்டு பண்ணும, அது மதுவால் மது வழங்கியதால் மது வழங்காததால் ஏற்படும் பிரச்சனை வரும். மனைவி கவுன்சிலருக்கு நிற்கலாம். கணவன் மது அருந்துவார் மனைவியின் சம்மதத்துடன் மது அருந்துவார் மனைவியே ஊற்றி தருவார், சில வீடுகளில் மனைவியும் குடிப்பார், வெளியில் தெரியாத கௌரவமான குடிப்பழக்கம் இருக்கும். மனைவிக்கு அன்பு பாசம் கருணை இருக்கும். மனைவி ஊரில் ஆறு குளம் கண்மாய் உண்டு. ஜாதகர் இடம் வாங்கினால் கூட்டு முயற்சி, நண்பர்கள் பெயரில் இடம் வாங்குவார். மனைவி பெயரில் இடம் வாங்குவார். நாலாம் அதிபதி ஏழில் இருந்தால் தாய் இரண்டாவது பிறப்பு என்று பார்த்தோம், இதில் நாலாம் அதிபதி வாங்கிய சாரநாதன் பதினொன்றில் இருந்தால் தாய் நான்காவது பிறப்பு என்று எடுக்க வேண்டும்.

நான்காம் அதிபதி எட்டாம் இடத்தில் :

நான்காம் அதிபதி எட்டாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்

கல்விக்காக கடன் வாங்குவார்கள். வெளியூர், வெளிதேசம், வெளிநாடு சென்று இடம் மாறி படிப்பார்கள். வீட்டில் புதையல் இருக்கும், நாலு வீடு, எட்டு புதையல் வீட்டில் புதையல் இருக்கும் என்று ஆசைப்பட்டு கொண்டிருப்பார். வாடகைக்கு குடி வந்தவர். வீட்டில் திருட்டு உண்டு, வாகன திருட்டு உண்டு. சூரியன் செவ்வாய் சம்பந்தம் வாகன திருட்டு. வீட்டு அருகே சமாதி இருக்கும். இருதய பயம் இருக்கும். தடைப்பட்டு தடைப்பட்டு படிப்பார்கள். வாகன விபத்து இருக்கும் 8 ஆம்புலன்ஸ் நாலு பயணம் ஆம்புலன்ஸில் போகிற அமைப்பு இருக்கும்.

படிக்கும்போது ஒரு அவச்சொல் இருக்கும். நாலு படிப்பு, 8 அவச்சொல். வாஸ்து குறை உள்ள வீடு தான் இவர்களுக்கு கிடைக்கும். வீடு சந்துக்குள் இருக்கும், சேரியில் இருக்கும் அல்லது மறைவான பகுதியில் இருக்கும். மருத்துவமனை அருகே வீடு இருக்கும். தாயாருக்கு எல் ஐ சி போட்டு வைப்பது நல்லது. தாய்பால் இருக்காது. தாய்வழியில் ஆயுள் குறைபாடு உள்ளவர்கள் இருப்பார்கள். தாய்க்கு ஒரு சொத்து உண்டு. தாய்க்கு உயில் சொத்து உண்டு. தாய்வழியில் மார்ச்சுரி போனவர்கள் இருப்பார்கள். தாயாருக்கு கருத்து வேறுபாடு உண்டு. படிப்பு இல்லாத பதவி கிடைக்கும், ஆனால் பதவி நிலைக்காது. ஜாதகர் எல்ஐசி ஏஜென்டாக இருப்பார், அம்மாவும் எல்ஐசி ஏஜென்ட் அல்லது எல்ஐசி போடுவார். வாகன இன்சூரன்ஸ் முறையாக கட்டாமல் பைன் கட்டுவார்கள். தாயன்பு ஜாதகருக்கு குறைவு, பினாமி சொத்து வரும், பினாமி சொத்து பெட்ரோல் பங்க் அருகே இருக்கும். 8 bunk, நாலு வாகனம் வாகனத்தில் போகும்போது செயின் அடிக்கடி கட்டாகும் அல்லது இன்ஜின்சீஸ் ஆகி நிற்கும். செயின் கட்டாகி வாகனம் நிற்கும்.

இவர்களுக்கு மெயின் ரோடு அருகில் சொத்து இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பொது பணிக்காக அரசு அதை அபகரிக்கும். எரி மலை, இயற்கை சீற்றத்தால் சேதாரம் இருக்கும்.கிணற்றை மூடிவிட்டு வீடு கட்டி இருப்பார். தந்தை, தாத்தாவுக்கு இருதாரம் இருக்கும்.மழைக்காலத்தில் நீர் தேங்கும், நீர் தேங்கிய இடத்தில் வாகனத்தை இறக்கி மேலே போனால் விபத்து உண்டாகும். 4, 8, 1, சம்பந்தம் இருந்தால் வீட்டிற்கு கொள்ளைக்காரர்கள் வருவார்கள். திதி சூன்யம் பாதகம் சம்பந்தம் இருந்தால் ஜாதக ரையே கொன்றுவிட வருவார்கள். நாலு எட்டு இரண்டு சம்பந்தம் ஜாதகருக்கு பினாமி சொத்து இருக்கும். திதி சூன்யம் பாதகம் ஆனால் அந்த பினாமி சொத்தை வாங்கக்கூடாது. நாலாம் அதிபதி திதி சூன்யம் ஆனால் ஜாதகருக்கும், வீட்டு ஓனருக்கும் பிரச்சனையாக இருக்கும். வாடகை வீட்டில் நாலாம் அதிபதி, 8, 12 இந்த மூன்றும் சம்பந்தம் தொலைந்து போன பொருள் உடனே கிடைக்கும். அதேபோல் இடி, மின்னல் காலம் இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 4, 8, 11 சம்பந்தம் வில்லங்க சொத்து trust சொத்து கிடைக்கும். நாலு 8 என்றால் ஆய்வுக் கல்வி. இவர்கள் மெடிக்கல் இன்சூரன்ஸ் போட்டால் நல்லது. தாயாருக்கு சர்ஜரி உண்டாகும்.

முதல் கேந்திரம்.

அனைவரையும் கட்டி அணைத்தல் பாசம் காட்டுதல் அதீத உணர்வுகளின் வெளிப்பாடு அதாவது நிற்பது, நடப்பது, நுகர்வது, உண்பது, கழிக்கபடுவது என எதனை எடுத்துக் கொண்டாலும் அனைத்தும் சுகமே ஆக சுகத்தை சம்மதிக்கப்படும் பாவமே இந்த நாலாம் பாவம்.

4 7 10 கேந்திரிய அஞ்சு 7 ஒன்பது திரிகோணம் கேந்திராதிபதிகள் திரிகோணத்தில் இருந்தாலும் அல்லது திரிகோணாதிபதிகள் கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் பரிவர்த்தனை பெற்று கொண்டாலும் நன்மையே செய்வார்.

பாவரும்சுபரே சூரியன் சுக்கிரன் குரு புதன் சுபர்கள் சனி செவ்வாய் ராகு கேது பாவர்கள் சூரியன் பாபி சாரம் பெற்றால் பாவியாகிறார் பாவிகள் சுய சாரம் பெற்று சார பரிவர்த்தனை பெற்றாலும் கூட நற் பலன்களை தருவதில்லை.

முதல் கேந்திரம் சுகஸ்தானம் உயிர் காரகத்துவத்தில் தாயைக் குறிக்கும்.

அன்பு பாசம் கருணை இரக்கம் பாலூட்டிகளை குறிக்கும்.

தாயின் அனைத்து குண நலன்களை உள்ளடக்கிய பாவம்.

கறவை மாடுகளை குறிக்கும் பேச்சுவழக்கில் எப்படி என்றால் நாலு பேர் நம்மை மதிக்க வேண்டும், எதுக்கும் நாலு பேராவது வேண்டாமா? அந்த நாலு பேருக்கு நன்றி, நாலு பேருக்கு தெரிய கூடாது நாலு பக்கம் சுவர் நாலு பக்கம் பார்த்துப் போ நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க நாளையும் பார்த்து செய்யணும்.

இந்த மாதிரியான பேச்சு தான் இருக்கும்

நான்காம் இடத்தில் இரண்டாம் அதிபதி இருந்தால் இந்த மாதிரியான பேச்சுக்கள் வரும்.

நாலாம் அதிபதி எட்டாம் வீட்டில் அல்லது பன்னிரெண்டாம் பாவத்தில் இருந்தால் ஜாதகருக்கு சுகம் கிடையாது.

நாலு பன்னிரண்டாம் பாவத்தின் சுகத்தை சொல்வது நாலாம் பாவம்.

லக்னத்தில் நாலாம் அதிபதி இருந்தால் தாயுடைய அன்பும் கருணையும் நிறைந்த சுகமும் இருக்கும்

நான்காம் அதிபதி 3ல் இருந்தால் ஜாதகரின் சகோதரருக்கு தாயின் அன்பும் நிறைந்த சுகமும் கிடைக்கும்.

அழகு சுத்தம் பிராணிகள் மலை பாலூட்டிகள் நாலாம் இடம் குறிக்கும்.

குரு, சுக்கிரன், சந்திரன், நீர் கிரகங்கள் நாலாம் அதிபதி லக்னத்தில் இருந்தாலோ நாலாம் அதிபதி நாலில் இருந்தாலும் குரு, சுக்கிரன், சந்திரன் அதிபதிகள் பார்க்கப்பட்டாலும் சேர்ந்தாலும் ஜாதகர் அடை மழை பெய்யும் போது பிறந்தவர்.

லக்கினத்தில் நீர் கிரகங்கள் இருந்து நாலாம் அதிபதி பார்த்தாலும் மழை பெய்யும் போது பிறந்தவர்.

இந்த கிரக சேர்க்கை அமைப்புடன் சூரியன், செவ்வாய் சுய சாரம் பெற்று அல்லது சார பரிவர்த்தனை பெற்று பார்த்தாலும் இடி மின்னல் மழையில் பிறந்திருப்பார்.

நாலாம் அதிபதி ஆறு எட்டு பனிரெண்டில் இருந்து எந்த கிரகத்தைப் பார்க்கிறாரோ அல்லது எந்த கிரகத்தை கூடுகிறதோ அந்த கிரக காரக ஆதி பத்தியத்தின் உயிருக்கு நீரில் கண்டம் ஏற்படும்.

அஷ்டமாதிபதியும் சனி அல்லது பத்தாம் அதிபதி இணையும்போது ஆயுளைமட்டுமே சொல்கிறார். நாலாம் இடம் குறிக்கும் இடங்கள் குளம், கண்மாய், ஏரி, ஆறு, வாய்க்கால், வீடு, வண்டி, அழகு.

நாலாம் அதிபதி 3 ல் இருந்தால்

மனைவி அழகு. வாகனம், மரங்கள், தோப்பு, ஆலமரம், புளியமரம், இரட்டைப் பிள்ளையார், கோழிப்பண்ணை, கல்லறை, மார்பு, பிறப்பிடம், பிறந்த ஊர், பிறந்த வீடு, வீதி முதலியன குறிக்கும். இவர்கள் பிறந்த ஊர் பெயர் எப்படி அமையும் என்றால் ஊர் என்று அமையும் ஆத்தூர் குளத்தூர் இதுபோல. கல்வி, கற்பு, கற்பகம் என்ற பெயர் வரும்.

நாளில் கேது இருந்தால் கற்பக விநாயகர் என்ற பெயரும், தெப்பம், தெப்பக்குளம், தெப்பக்குளம், விநாயகர் என்றும் சமுதாயத்தில் மதிப்பு மரியாதை இருக்கும்.

பந்துக்கள், உறவினர்கள், ஒழுக்கம் என்றும் நாலாம் இடம். தெரு ஐந்தாமிடம் பிள்ளையார் ஜாதகர் பிள்ளையார் தெருவில் இருப்பார்.

பஜனை கோவில் தெரு, மாடவீதி, முஸ்லிம் தெரு, இந்த மாதிரி வரும் மற்றும் பதவி அமர்தல், இருக்கை, பள்ளி கல்லூரி, மனசு, ஆடைகள், எழுதுபொருட்கள் நாடாளுமன்றம், உள்ளாட்சித் தேர்தல், ஏதம் புற்று உள்ள இடங்கள்.

கிணறு இவையெல்லாம் நாலாம் இடத்தை குறிக்கும்

நாலாம் இடம் நாலாம் அதிபதி கெட்டு விட்டால் ஜாதகர் தலைமறைவாக வாழ்க்கை வாழ்வார்.

உறவினர்களை விட்டுவிலகி பிறந்த இடம் விட்டு வெளியில் சென்று முன்னேறுவார்கள்.

இவர்களுக்கு அன்னையர் உதவி கிடைக்கும்.

ஒளிந்து மறைந்து வாழ்க்கை வாழ்வார்கள்.

சூரியன் புதன், சூரியன் நாலாமிடம் சம்பந்தப்பட்டால் ஜாதகர் வீட்டில் கிணறு இருக்கும்.

நான்காம் இடம் திதி சூனியத்தால் அல்லது பாதகாதிபதி யால் கெட்டுப்போனால் ஜாதகர் மாற்றான் தாய் பால் குடித்தவர். பெயர் என்று பார்த்தால் நதிகள் கங்கா யமுனா, காவேரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, நதியா இது போல வரும்.

மழை என்றால் மாரி மற்றும் செல்வம் ஊர் ஆத்தூர் மணலூர் குளத்தூர் அன்பு என்றால் அன்பரசு மேகலா கார்மேகம் anbalagan நீலமேகம் மேகநாதன் இன்பசேகரன் அழகுராஜ் இருதயராஜ் சோமு.

பசு என்பது கோமதி கோபாலன் கோபி என்றும் இந்தியில் சார் என்றால் நாலு என்று அர்த்தம்

இதன்படி பெயர்கள் சாரு சாருலதா மற்றும் பாணி என்றால் நீர் பெயர் தண்டபாணி சக்கரபாணி.

பாவ கிரகங்கள் சந்திரன் செவ்வாய் சனி ராகு கேது இப்படி தொடர்ந்து வரிசையாக பாவ கிரகங்கள் ஜாதகத்தில் அமரக்கூடாது சாரம் பெற்று அமரக்கூடாது தொடக்கூடாது சந்திரன் சனி சாரம் பெற்றோ அல்லது சந்திரன் சனி இணைவு இருந்தாலோ சந்திரன் கேது சாரம் பெற்றாலோ சந்திரன் கேது இணைவு இருந்தாலும் ஜாதகரின் தாயாரின் மண வாழ்கை சரி இல்லை என்று சொல்ல வேண்டும்.

சந்திரன், செவ்வாய், கேது அல்லது சனி செவ்வாய் கேது இந்த இணைவு அல்லது தாய் வர்க்கத்தில் இரண்டாம் தாரமாக வாழ்க்கை பட்டவர்கள் இருப்பார்கள்.

நான்காம் பாவத்தில் கிரகங்கள் இல்லாமல் இருந்து அதற்கு அடுத்தும் கிரகம் இல்லாமல் இருப்பது தாயாரின் மணவாழ்க்கை சரியில்லை

நான்காம் பாவம் நான்காம் அதிபதி சந்திரன் இவை மூன்றும் தாயைப் பற்றி சொல்லும்.

அதே போல் பண்ணை விவசாயம் பற்றி சொல்லும்.

மேலும் நாலாம் பாவம் நாலாம் அதிபதி செவ்வாய் சொத்து பற்றி சொல்லும்.

மேலும் நாலாம் பாவம் நாலாம் அதிபதி சுக்கிரன் அழகு பற்றி சொல்லும்.

நாலாம் பாவம் நாலாம் அதிபதி குரு சூரியன் செவ்வாய் பதவி பற்றி சொல்லும்.

நாலாம் பாவம் நாலாம் அதிபதி குரு தோப்புகளை பற்றி சொல்லும்.

நாலாம் பாவம் நாலாம் அதிபதி ராகு அல்லது சுக்கிரன் பிராணிகளைப் பற்றி சொல்லும்.

நாலாம் பாவம் நாலாம் அதிபதி சுக்கிரன் பட்டு ஜவுளி பற்றி சொல்லும்.

நாலாம் பாவம் நாலாம் அதிபதி புதன் எழுது பொருட்கள் மனசு பற்றி சொல்லும்.

நாலாம் பாவம் நாலாம் அதிபதி புதன் கல்வியைப் பற்றி சொல்லும்.

மேலும் செவ்வாய் என்றால் சொத்து குரு சுக்கிரன் சூரியன் புதன் சொத்துக்கான வளர்ச்சி கிரகங்கள் மற்றும் செவ்வாய் சனி சொத்து வாங்குவதற்கு சொத்து உருவாக்குவதற்கு தடை.

செவ்வாய் கேது அனுபவிக்க தடை செவ்வாய் சந்திரன் முதல் சொத்து விற்றுவிட்டு இரண்டாவது சொத்து அமையும் நிலைக்கும் இதற்கு பரிகாரம் இளநீர் தென்னை மரம் வைப்பது

டிப்ஸ்

நாலாம் அதிபதி மேஷத்தில் இருந்தால் வாகனத்தை கொடுக்கவோ வாங்கவோ கூடாது.

செவ்வாய் + குரு செவ்வாய் + சூரியன் இந்த கிரக சேர்க்கை வீட்டின் அருகே மரம், அருகே கோவில் இருக்கும்.

செவ்வாய், குரு, கேது மரத்தினால் கோவில்.

மேலும் செவ்வாய், சூரியன், கேது கல் வைத்து சாமி கும்பிடுவது.

மேலும் குரு சூரியன் மரத்தை சாமி கும்பிடுவது.

நாலாம் அதிபதி 5 ல்:

நாலாம் அதிபதி ஒன்பதில் இருந்தாலோ நாலாம் அதிபதி 5 ல் இருந்தாலோ வீட்டிற்கு நேராக கோவில் இருக்கும்.

செவ்வாய் சனி கேது செங்கல்லில் விபூதி பட்டை போட்டு சாமியாக வணங்குவார்கள்.

நான்காம் அதிபதி 6, 8 ,12 ல் இருந்து செவ்வாய், சூரியன் பார்த்தால் நாலாம் அதிபதி கூடினாலும் மெயின் ரோட்டில் இடம் வாங்க கூடாது.

அப்படி வாங்கினால் அரசு அபகரிக்கும். மற்றும் சூரியன், செவ்வாய் சேர்ந்தோ பார்த்தோ ஆறு, எட்டு, பன்னிரெண்டில் விருந்து அல்லது நான்காம் பாவத்தையோ அல்லது நான்காம் அதிபதியை தொடர்பு கொண்டால், அரசு வழக்கு ,அல்லது அதன்மூலம் அரசால் நிலம் அபகரிக்கப்படும்.

நாலாம் இட அதிபதியோ நாலாம் இடத்தையோ குரு செவ்வாயோ பார்த்தால் ஜாதகனுக்கு சொத்து உண்டு.

நாலாம் அதிபதி செவ்வாய், புதன் இவர்கள் எட்டு கட்டங்களுக்கு மேல் போய் உட்கார்ந்துவிட்டாள் 50 வயதுக்கு மேல் தான் சொத்து.

நாலாம் இடத்தில் மாந்தி இருந்தாலோ

எட்டு, 12 க்கு உடையவர்களுடன் மாந்தி இருந்தாலும் சனி, மாந்தி நாலில் இருந்தாலும் மனை நிலத்தில் வீட்டின் அருகே பிணம் புதைக்கப்பட்டிருக்கும்.

செய்வினை பயம் அதிகமாக இருக்கும்.

நாலாம் பாவத்தின் விதிகள் நாலாம் இடம் பாதிக்கப்பட்டால் உறவுகளை வெறுப்பார்கள்.

பிறந்த இடத்தைவிட்டு வெளியே போய் முன்னேறுவார்கள். என்று நினைப்பார்கள்.

இவர்களின் நாலாம் பாவகம் என்ற உறவு சுகம் கெட்டுவிட்டபடியால் உறவுகளின் முகம் பார்க்காத, வராத வெளியூரில் வாழ வேண்டி வரும்.

அக்காலம் இவர் நல்ல முன்னேற்றம் காண்பார். வளர்ச்சி உண்டாகும்.

எதிரிகளை இவர்கள் நேசிக்க வேண்டும் பகைத்துக் கொள்ளக்கூடாது.

நட்பை உறவாக சம்பாதிக்கவேண்டும்.

நான்காம் இடத்தில் மாந்தி இருந்தால் வீட்டில் கொலுசு சத்தம் கேட்கும்.

வீட்டில் மல்லிகை பூ வாசம் வீசும்.

இதற்கு பரிகாரம் யானையின் கோமியத்தை வீட்டில் தெளிக்க வேண்டும்

 

நன்றி

வாழ்க வளமுடன்

தமிழரசன் க

தக்‌ஷா ஜோதிட நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்

https://www.dakshaastrology.com

whatsapp: +919787969698


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...