சனி, 16 டிசம்பர், 2023

ஐந்தாம் பாவகம்

 

ஐந்தாம் பாவகம்

1.இந்த பாவகத்தில் எந்த கிரகம் நிற்கிறதோ அதன் காரகம் சம்பந்தபட்ட அறிவு ஜாதகனுக்கு கிடைக்கும்.

2. இந்த பாவக அதிபதி கெட்டுவிட்டால் பூர்வீக சொத்து கிடைக்காது.

3. இந்த பாவகதில் ராகு, கேது நின்றாலும் புத்திர ஸ்தானம் பாதிக்கும்.

4. சாதகனின் காதல் ஸ்தானாதிபதி இவர் தான் இந்த அதிபதி ஆறில் போனால் காதல் பிரச்சனை ஆகும். எட்டில் போனால் காதலால் அவமானபடுவான்.

5. வளர்ச்சி ஸ்தானமான பத்து, பதினொன்றில் போனால் காதல் வெற்றி அடையும்.

6. ஐந்தாம் அதிபதி ஆறுக்கு போனால் பூர்வீக சொத்தினில், சண்டை, சச்சரவு வரலாம்,

7. ஐந்தாம் பாவ அதிபதி நாலுக்கு போனாலும் ஜாதகனுக்கு பூர்வீக சொத்து கிடைக்காது.

8. ஐந்தாம் பாவ அதிபதி ஆறாமிடம் போனாலோ அல்லது எட்டாம்மிடம் போனாலோ நாலாமிடம் போனாலோ குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும்.

9. தனித்த குரு ஐந்தில் நின்றாலும் புத்திர பாக்கியம் தடைபடும்.

ஐந்தாமிடத்தில் நின்ற கிரக பலன்கள்

 ஐந்தாமிடத்தில் சூரியன் நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சூரியனாக இருந்தாலோ ஜாதகனுக்கு அரசியல் ஞானம் உடையவனாக இருப்பான், சிறந்த அறிவு படைத்தவனாக இருப்பான்.

ஐந்தாமிடத்தில் சந்திரன் நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சந்திரனாக இருந்தாலோ, ஜாதகனுக்கு நல்ல கற்பனை வளம், கலை இலக்கியத்தில் ஆர்வம், சிறந்த ஓவிய திறமை, காதல் ஆர்வம் இருக்கும்,

ஐந்தாமிடத்தில் செவ்வாய் நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் செவ்வாயாக இருந்தாலோ, ஜாதகனுக்கு மந்திர வித்தை, விளையாட்டு தந்திரங்கள், மல்யுத்த ஆர்வம், சிலம்பாட்ட ஆர்வம், அணைத்து விளையாட்டில் யுக்தியுடன் செயல்படுவார் . குழந்தைகள் கொஞ்சம் முரட்டுத்தனமாக வளரலாம்,

ஐந்தாமிடத்தில் புதன் நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் புதனாக இருந்தாலோ ஜாதகன் மிகுந்த அறிவுடன் செயல்படுவார், கவி பாடும் திறமை இருக்கும், இளமைகலந்த காதல் இருக்கும், தத்துபுத்திர யோகம் ஜாதகனுக்கு உண்டு. (புதன் அலி கிரகம் என்பதால் )

ஐந்தாமிடத்தில் சுக்கிரன் நின்றாலோ அல்லது ஐந்துக்குடையவன் சுக்கிரனாக இருந்தாலோ ஜாதகனுக்கு பணம் சம்பாதிக்கும் திறமை இருக்கும், நிதி நிர்வாகம் சிறப்புடன் இருக்கும் ,காதல் எண்ணம் அதிகம் இருக்கும் , ஆடல், பாடல், பொழுதுபோக்கு விசயங்களில் ஜாதகனுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும் , கவர்ச்சியின் வழிகளில் ஜாதகன் செயல்படுவார்.

ஐந்தாமிடத்தில் குரு நின்றாலோ அல்லது ஐந்துக்குடையவன் குருவாக இருந்தாலோ ஜாதகனுக்கு ஒழுக்கம் அதிகம் இருக்கும், வேத சாஸ்திரத்தில் ஈடுபாடு இருக்கும் ,ஆன்மீக விசயங்களில் கவனம் இருக்கும், ஆனால் குழந்தை தாமதமாக பிறக்கும் ( குரு புத்திரகாரகன், காரகனே புத்திர ஸ்தானத்தில் இடம் பெறகூடாது )

ஐந்தாமிடத்தில் சனி நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சனியாக இருந்தாலோ ஜாதகனுக்கு சிறந்த தொழில் நுணுக்கம் ஏற்படும், அறிவு மந்தமாக செயல்படும், விளையாட்டு விசயத்தில் ஆர்வம் இருக்காது,

ஐந்தாமிடத்தை ராகு பார்த்தாலோ அல்லது இருந்தாலோ ஜாதகனுக்கு சூதாட்டத்தில் கவனம் ஏற்படும், பூர்வீக சொத்தில் பிரச்சனை வரலாம், குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படலாம்

ஐந்தாமிடத்தை கேது பார்த்தாலோ அல்லது இருந்தாலோ ஜாதகனுக்கு ஆழ்ந்த சிந்தனை, ஆன்மீக நாட்டம் வரலாம், தெளிவான வார்த்தைகளுடன் பேசுவார், சித்தர்களை போல இருக்க ஆசைபடுவார். குழந்தை பிறப்பதில் தாமதம் உருவாகும்.

ஐந்தாம் பாவகம் முதல் திரிகோணம் பூர்வ புண்ணிய ஸ்தானம். வளரும் புண்ணியத்தை பற்றி சொல்லும் பாவம். பூர்வ பட்சம் வளர்ந்து கொண்டே இருக்கும் வளர்பிறை பூர்விக வளர்ச்சி உண்டு.

எல்லா நன்மைகளையும் இந்த பாவம் தரும். இந்த பாவம் முழுமையான பாவகம்.

புத்திர ஸ்தானத்தை பற்றி சொல்லும் பாவம்.

மாமா மனசு ஆள் மனசு பற்றிச் சொல்லும்,

ஒரு ஜாதகருடைய எண்ணங்களை சொல்லும்,

மன அமைதி பற்றி சொல்லும்.

நாலாம் இடம், ஐந்தாமிடம் கெட்டுபோனால் மன அமைதி இருக்காது.

இந்த பாவம் மகிழ்ச்சி, புத்தி சாதுர்யம், சாந்தி, புத்தி ஸ்தானம் 5 9 பாவம் கெட்டுப் போனால் அதை நாம் இயக்க வேண்டும்.

ஐந்து, ஒன்பதுக்கு உடையவரும், காரகர் குருவும், கும்பத்தில் இருந்தாலும், 5 9-க்குடையவர் அல்லது குருவோ, கும்ப வீட்டை பார்த்தாலும், தொடர்பு இருந்தாலும், ஜாதகர் புகழ் அடைவர்.

இந்த அமைப்பு நவாம்சத்தில் இருந்தால், திருமணத்திற்கு பிறகு புகழ் உண்டு.

ஒரு திரிகோணத்தில் ஒரு கிரகம் இருப்பது நல்லது. சுபராக இருப்பது மிக மிக நல்லது.

கேந்திரம் செய்யாததை கோணம் செய்யும். கோணம் செய்யாததை உபஜெய ஸ்தானம் செய்யும். 40 வயதுக்கு மேல் செய்யும்.

ஐந்தாம் அதிபதி எங்கெல்லாம் இருக்கிறாரோ அந்த பாவத்திற்கு கிரகத்திற்கு குழந்தைத்தனம் இருக்கும்.

ஐந்தாம்பாவ அதிபதி, புதன் பன்னிரெண்டில் இருந்தால் ஜாதகர் புத்தி, சாதுர்யம் எப்போதும் விரையம் செய்வார். இந்த மாதிரி எண்ணங்கள் இருக்கும்.

சூரியன் 5ம் அதிபதியாக இருந்தால் தந்தை குழந்தைத்தனமாக இருப்பார்.

ஐந்தாம் அதிபதி சந்திரன் இருந்தால் தாய்க்கு குழந்தைத்தனம் இருக்கும்

ஐந்தாம் பாவம் மனசு, சாந்தி, காயத்திரி மந்திரம், ஐந்தாம் அதிபதி ஏழில் இருந்தால் 5 என்பது சாந்தி மனைவி பெயர் சாந்தி காயத்ரி மந்த்ரா மணி இந்த மாதிரியான பெயர்கள் அமையும்.

ஐந்தாம் அதிபதி வலுத்தால் வட்டி, கடன், தொழில் கூடாது.

மனிதநேயம் உண்டு. ஐந்தில் சுப கிரகம் இருந்தால் ஈவு இரக்கம் இருக்கும். ஆழ்ந்த புலமை இருக்கும். கர்ப்பம் இருக்கும்.

இயல்பான வாக்கு பலிதம் உள்ள ராசிகள் கன்னி மீனம், 2, 5 வாக்கு பலிதம் இருக்கும்.

ஐந்தாமிடம் வாக்கு பலிதம் ஐந்தாம் அதிபதி லக்னத்தில் இருந்தால், பார்த்தால் வாக்குப்பலிதம் இருக்கும்.

ஐந்தாம் அதிபதி நீர் ராசியில் இருந்தால் ஜாதகர் வீட்டில் ஏதாவது தீர்த்தம் இருக்கும்.

ஐந்தாம் அதிபதி 1 இல் :

ஐந்தாம் அதிபதி 1 இல் ஜாதகருக்கு தெய்வஅருள் உண்டு.

நிறைய வேலை ஆட்கள் உண்டு.

ஜாதகர் நீதிமான், பிறரை மகிழ்விப்பர்,

எதிரி உண்டு.

ஐந்தாம் அதிபதி 10ல் இருந்தால் முதலீடு செய்யாமல் ஆலோசனை சொல்லி சம்பாதிக்க வேண்டும்.

7 கட்டம் தாண்டி செவ்வாய், சுக்கிரன், ஐந்தாம் அதிபதி தொடர்ந்து இருந்தால், மணம் ஆன பின்பும் காதல் இருக்கும்.

நாலாம் அதிபதி செவ்வாய் சுக்கிரன் 6 கட்டம் தாண்டி இருந்தால், வயதான பின்பும் சொத்து அமையும்.

ஒருவன் கடன் வாங்கலாமா என்று கேட்டால்? அவனுக்கு குரு, சுக்கிரன் 5 6 கட்டம் தாண்டி இருந்தால் கடன் வாங்கலாம். இப்படி இல்லை என்றால் கடன் என்றால் பிரச்சனையை தரும்.

ஐந்து, ஒன்பதாம் அதிபதி, கெட்டு குருவும் கெட்டால் மதமாற்றம் உண்டு.

ஐந்தாம் இடத்தை யாரும் பார்க்கவில்லை, ஐந்தாம் இடத்தில் எந்த கிரகமும் இல்லையென்றால், குலதெய்வம் வனாந்திர காட்டில் தனித்து இருக்கும்.

ஐந்தாம் இடம் என்பது திருமணத் தடை செய்யும்.

5, 9 சிம்மம், தனுசு ஆக வந்தால் பிறரால் தூக்கி விடப்படும் பாவகம், தேடிவரும் பாவகம்.

ஐந்தாமிடம் குறும்படம், உல்லாசம், நாடகம், கோழைத்தனம்,

ஷேர் மார்க்கெட்,

குலதெய்வம் என்று சொல்லலாம்.

ஐந்தாம் அதிபதி 10 ல் இருந்தால் தொழில் செய்யும் இடத்தில் பஞ்சபூத தொடர்பான படங்கள் வைத்து கொள்ளலாம. சின்னம் வைத்துக் கொள்ளலாம்.

ஐந்தாம் அதிபதி 10ல் இருந்தால் முதலீடு செய்யாமல் ஆலோசனை சொல்லி சம்பாதிக்க வேண்டும்.

லக்னாதிபதி, பன்னிரெண்டாம் அதிபதியும், நான்கில் இருந்தால் இவரது மரணம் யாரும் பார்க்காமலேயே இறந்துவிடுவார்.

எட்டில் குரு இருந்தால் பிளாக் மணி ஆகாது. ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதிக்கு, புதன் தொடர்பு இருந்தால், ஜாதகர் புத்தி சாதுர்யம் மிக்கவராக இருப்பார்.

ஐந்தாம் அதிபதி நின்ற ராசிக்கு ஐந்தில் குரு, சுக்கிரன், புதன் இருந்தால் ஜாதகருக்கு வாக்கு பலிதம் இருக்கும். ஞானியாக இருப்பார். குரு, சுக்கிரன், புதன் ராசியாக வந்தாலும் சொல்லலாம்.

எட்டில் குரு குருவின்றி தானாக கற்பான். தானே தனக்கு குருவாக நினைத்து அந்த அளவுக்கு டேலண்ட் ஆக இருப்பார்.

5, 11, ஐந்தாம் அதிபதி வர்கோத்தமம் ஆனால் குழந்தைகளால் லாபம் உண்டு.

புதன் உச்சமாகி, சந்திரன் நீசம் ஆனால், மனநிலை பாதிப்பு இருக்கும். ஐந்தாம் அதிபதி உச்சமாகி, சந்திரன் நீசம் ஆனால் மனநிலை பாதிப்பு இருக்கும்.

ஐந்தாம் பாவம் ஆன்மீக சிந்தனை பாவம். ஜோதிடம் ஐந்தாம் இடம். 12-ஆம் இடம் ஜோதிடத்தின் தரத்தைக் குறிக்கும்.

5, 9, குரு கெட்டால் மத மாற்றம் உண்டு. ஐந்தாம் இடம் கெட்டு ஒன்பதாமிடத்திற்கு இரண்டு பாவிகள் தொடர்பு கொண்டால் மத மாற்றம் உண்டு.

ஐந்தாம் பாவத்திற்கு சுக்கிரன், சந்திரன் தொடர்பு இருந்தால், எதிர்பாராத செல்வம் கிடைக்கும். உழைக்காத சம்பாதித்யம் உண்டு.

ஐந்துக்கு 12 தொடர்பு, சந்திரன் தொடர்பு, இசை கேட்டுக்கொண்டு காலில் தாளம் போடுவார்கள்.

புகழ் என்றால் ஐந்தாம் பாவகம், காரகர் குரு, குரு பார்க்க கோடி நன்மை.

புகழ் கிடைக்க வேண்டும் என்றால் சூரியன், சுக்கிரன் சந்திரன் ஒளி கிரகங்கள் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும்.

சூரியனுக்கு 3, 11 இல் சந்திரன் இருப்பது தொடர்பு புகழ் கிடைக்கும்.

சூரியனுக்கு 2, 12 ல் அல்லது முன்னும், பின்னும் சந்திரன் இருந்தால் புகழ் கிடைக்கும்.

சூரியனுக்கு ஏழில் சந்திரன் இருந்தாலும் புகழ் கிடைக்கும்.

சூரியன் சந்திரன் சேர்ந்து இருப்பது எந்த துறையாக இருந்தாலும் களத்தில் தொடர்ந்து இருப்பார்கள்.

மந்திரம், ஜபம், பூஜை, முறையாக பூஜை 5, 9 பல அந்தணர்கள் கூடி ஹோமம் செய்வது, வளர்ப்பது.

5 +10, 9 + 10 கர்ம பூஜை, தெவசம், சிராத்தம் செய்வது.

ஐந்தாம் பாவம் நன்றாக இருந்தால் எல்லாமே நன்றாக இருக்கும். ஐந்தாமிடம் பாதிக்கப்பட்டால் எல்லா விதத்திலும் பாதிப்பு உண்டு.

ஐந்தாம் பாவத்தை ஒட்டியுள்ள பெயர்கள் காயத்ரி, கல்பனா, மீரா, ஆராதனா, பூவிழி பெயர்கள் மந்திரங்கள் சார்ந்து பூஜை சார்ந்து இருக்கும்.

முதல் திரிகோணம் பூர்வ புண்ணியம் சாதுர்யம் புத்தி ஸ்தானம் 5 அறிவு 9 பணிவு 5 ஆம் அதிபதி நின்ற ராசிக்கு 5 ல் குரு, சுக்கிரன், புதன் இருந்தால் வாக்கு பலிதம் ஞானமுள்ளவன். குரு, சுக்கிரன், புதன் ராசி என்னிலும் சிறப்பாக இருக்கும்.

தந்தை வழி தாத்தா பாவம் இது முன்னோர் பாவம்

5.9. தானாக அதிர்ஷ்டம் வரும் பாவம் குழந்தைகள் பற்றி அறியும் பாவம்.

5.ஆம் அதிபதிக்கு 5.ல் சுப கிரகங்கள் இருந்தால் குழந்தை உண்டு.

5 ஆம் அதிபதி 1.2.5.9.11.ல் இருந்தால் குழந்தை உண்டு

புத்தி ஸ்தானம் இஃது புதன் உச்சமாகி சந்திரன் நீசம் என்றால் மன நிலை பாதிக்கும் 5 ஆம் அதிபதி உச்சமாகி சந்திரன் நீசம் என்றால் மன நிலை பாதிப்பு ஏற்படும்.

5 ஆம் பாவம் ஆன்மீக சிந்தனைகள் ஜோதிடம் மந்திரம் ஜெபம் யாகம் பங்கு சந்தை எதிர்பாராத அதிஷ்டம் சார்ந்த பாவம்

ஒருவர் ஆத்திகனா நாத்திகனா இந்த பாவம் மூலம் பார்க்கலாம் 5.9.ஆம் அதிபதிகள் பலம் இழந்தால் மற்றும் குரு பலம் இழந்தால் ஜாதகர் மதமாற்றம் செய்வார்

5ம் அதிபதி 7ம் அதிபதி தொடர்பு இரண்டு தெய்வங்ளை குலதெய்வமாக வணங்குவார்.

5 க்குடையவன் 7ல் மனைவி ஊருக்கு அருகாமையீல் குலதெய்வம்

5 க்குடையன் 1 ல் குல தெய்வ அனுகிரகம் உண்டூ.

5க்குடையவன் 10 ல் பணிபுரியும் இடத்திற்கு அருகாமையிலோ அல்லது மனைவியின் வீட்டிற்கு அருகாமையிலோ குலதெய்வம் அமையும்.

5குடையவன் ராகுவுடன் இணைந்து நீர் ராசியில் அமையுமாயின் அவரதுகுல தெய்வம் இருக்கும் இடத்தில்ஒரு புற்றும் அருகில் ஒரு நீரோடை இருக்கும்.

ஆன்மீகத் துறை ஐந்தாம் இடத்தின் பரிணாம வளர்ச்சி ஆன்மீகத் துறை ஒன்பதாம் பாவம் ஆன்மீகம்.

குரு காரகர் 5 ஆம் அதிபதியும் பாவகமும் குருவும் கெட்டால் பலம் குறைந்தாலும் ஜாதகர் எந்த மதத்தை சேர்ந்தவர் ஆனாலும் வேறு மதத்திற்கு மாறுவார். வக்ரம், வக்கிர பார்வை ஏற்பட்டால் தாய் மதம் மாறி திரும்பி வருவார்.

ஐந்தாமிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலையில் அடிபட கூடாது. அப்படி நடந்தால் அம்னீசியா என்ற நோய் வரும். கடந்த காலத்தைப் பற்றி மறந்து போவது.

பாவிகளின் சாரம் பெற்ற கிரகம் பாவிகளை தொடக்கூடாது தொட்டால் ரோகம் இருக்கும்.

அன்னதானம், ஆழ்ந்த புலமை, ஆசி, அமைச்சர், ஒழுக்கம், மனிதநேயம், சிந்தனை, உள்ளுணர்வு ஐந்தாமிடம் குறிக்கும்

ராகு வக்ர கிரகம் பிலிம் புரொஜெக்டரில்படம்

தலைகீழாக அனுப்புகிறது.

அதனால் தலைகீழாக படம் ஓடினால் தான் திரையில் படம் நேராக விழுகிறது.

ராகு உள் உணர்வை தூண்டும் கிரகம்

5, 9 சந்திரன் மனோதத்துவம் தூண்டப்படுகிறது.

ராகு திதி சூன்யம் பாதகத்தில்இருந்தாலும் 5, 9 தொடர்பு இருந்தாலும் துஷ்ட தேவதைகள் மந்திரங்களை உச்சரிப்பது ,சாமி ஆடுபவர்கள் ஆக இருப்பார்கள்.

அறிவாற்றல், புண்ணிய தீர்த்தம், பஜனை, வாக்கு பலிதம் ஐந்தாமிடம் சொல்லும்.

அறிவாற்றலுக்கு காரகர் புதன் ஐந்தில் பாவி இருந்து அதன் திரிகோணத்தில் பாவி இருந்தால் ஜாதகருக்கு அறிவாற்றல் இருக்காது.

இரண்டாம் அதிபதி 5, 9 அல்லது குருவின் தொடர்பு இருந்தால் வாக்கு பலிதம் இருக்கும்.

எந்த வீட்டுக்கும் இரண்டாம் ஆதிபத்தியம் பெற்ற கிரகத்திற்கு வாக்கு பலிதம் இருக்கும்.

இரண்டாம் அதிபதிக்கு 5, 9 அல்லது குருவின் தொடர்பு இருந்தால் உழைக்காத வருமானம் இருக்கும்.

ஐந்தாம் பாவகம் குறிப்பிடும் திரைப்படங்கள் 7ஆம் என்னும் திரைப்படத்தில் அதிகமாக பங்குவகிக்கிறது வருஷம் பதினாறு, பதினாறு வயதினிலே, 7ஜி ரெயின்போ காலனி, அந்த ஏழு நாட்கள்,

அஞ்சல் பெட்டி 520, ரகசிய போலீஸ் 115, ஏழாம் அறிவு ஏழாவது மனிதன், james bond not not 7, உருவங்கள் 16, சொந்தம் 16, ஏழு மலை, ஏழு ஜென்மங்கள் இவை அனைத்தும் கேது சம்பந்தப்பட்டது வெற்றிப் படங்கள் ப்ளாஷ்பேக் அதிகமாக உள்ள திரைப்படங்கள் தாடி வைத்து நடித்த திரைப்படங்கள் வெற்றிப் படங்கள்

கோச்சாரத்தில் சந்திரன் செவ்வாய் சுக்கிரன் மூவரில் இருவர் பலம் பெறும் காலம் திரைப்படங்கள் சாதகமாக சூழ்நிலையை கொடுக்கும்

நட்சத்திர கிழமையும் நடப்பிலுள்ள கிழமையும் சமமாக இருக்கும் போது அஷ்டமி நவமி இதுக்கு பலம் குறைவாக இருக்கும்.

ஐந்தாம் அதிபதி யாரை பார்க்கிறாரோ அந்த காரகன் மூலம் புத்தியை பயன்படுத்தி வருமானம் கிடைக்கும்

ஐந்தாம் பாவம்

மாமன்மார்களின் உறவு, தந்தை வழி உறவுகள், குழந்தை செல்வம். பூர்வ புண்ணியம், சென்ற பிறவியில் பெற்ற நன்மை தீமைகளை அதன் அளவை தெரிவிக்கும் பாவம், தமிழ் மொழியில் தேர்ச்சி, மந்திரங்களை அறியும் திறமை, உயர் கல்வி பெரும் தகுதி, அறிவாற்றல், அனுபவ அறிவு, சொற்பொழிவு செய்யும் திறமை, கதாகாலட்சேபம் செய்யும் திறமை, பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் தகுதி, தாத்தாவின் நிலை, மந்திர உபதேசம், இவற்றை குறிக்கும். குறிப்பாக புத்திர பாவம், பூர்வ புண்ணிய பாவம் எனப்படும்.குருவையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து குழந்தை செல்வத்தை அறியலாம்.புதனையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து கல்வி பெறும் தகுதி, ஆன்மீக சிந்தனை மந்திரங்கள் கற்பது, உபதேசிப்பது, பிரார்த்தனை செய்வது இவைகளை அறியலாம். சொற்பொலிவாற்றும் தகுதி, கதாகலாட்சேபம் செய்யும் வாய்ப்பு இவைகளை அறியலாம்.

ஐந்தாம் அதிபதிக்கு ஐந்தில் ஒரு சுப கிரகம் பலமாக இருக்க குரு இல்லாமல் கலைகள் கற்றவன்

ஐந்தாம் அதிபதி மூன்றாம் இடத்தில் இருந்தால் படிக்கும் போது இன்டர்வியூ மூலம் வேலை கிடைக்கும் விளையாட்டு துறை மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும்

ஐந்தாம் அதிபதி நான்காம் பாவத்தில் இருந்தால் பலன்கள்ஐந்தாம் அதிபதி குரு வீட்டில் அமர்வது அல்லது குரு நட்சத்திரத்தில் அமர்வது புகழ் தரும்ஐந்தாம் பாவம் உழைக்காத வருமானம்.ஆசிரியர், ஜோதிடர். ஷேர் மார்க்கெட். சீட்டுசிட்பண்ட்ஸ். குலதெய்வம். மேற்கல்வி. தாத்தா. காதல் கலைகள். கலைத்துறை. இயல் இசை நாடகம். குறும்படம். திரைப்படத்துறை, இவற்றையெல்லாம் குறிக்கும்

ஐந்தாம் அதிபதி லக்ன பாவத்தில் :

1. ஷேர் மார்க்கெட் மூலம் வருமானம் 2.புத்தியை பயன்படுத்தி வருமானம்

3.உழைக்காத வருமானம்

4.குழந்தை தனம் இருக்கும்

5.ஜாதகர் வெகுளி

6.குல தெய்வ அருள் உண்டு

7.காதல் திருமணம்.

8.கலை துறை ஆர்வம் இருக்கும்

9.உல்லாச வாழ்க்கை

10.புண்ணிய நதிகளில் வழிபாடு

11.ஆன்மீக குரு மார்கள் ஆசி கிடைக்கும்

12. 5 ,8 , 5 ,12 தொடர்பு இருந்து சந்திரன் அல்லது நாலாம் அதிபதி தொடர்பு இருந்தால் தாய் வழியில் பிரசவம் பார்த்த நபர்கள் இருப்பார்கள்

13. உபதேசம் செய்வார் குட்டிக்கதை சொல்லுவார்

14. கலைத் துறையின் மூலம் வருமானம்

15. நாடகத் தொடர் வருமானம்

16. உல்லாச விடுதி மூலம் லாபம்

17.குலத்தொழில் மூலம் வருமானம் 18.பெரியம்மாவுக்கு ஆண் குழந்தை உண்டு 19.இரண்டு வயதில் தாத்தா மரணம்

ஐந்தாம் அதிபதி மூன்றாம் பாவத்தில்

1. மூன்று வயதில் பூர்வீகத்தை விட்டு வெளியேறும் நிலை

2. தாத்தா வழியில் ஒரு அரசு உத்தியோகம் உண்டு

3. ஜோதிடர் ஆசிரியர் இவர்கள் பரம்பரையில் உண்டு

4. குலதெய்வம் இடம் மாறும் அமைப்பு

5. அஞ்சல் வழி கல்வி

6. தொலைத்தொடர்புத் துறையில் ஆர்வம் இருக்கும்

7. குழந்தை இடம் மாறி படிக்கும்

8. பூர்வீகச் சொத்தில் சகோதரன் இருப்பான்

9. கல்விக்காக வெளிநாடு வெளிமாநிலம் செல்லக்கூடிய அமைப்பு இருக்கும்

10. தாய்மாமனுக்கு இடமாற்றம் இருக்கும்

11. படிக்கும் கல்லூரியில் நினைவுச்சின்னம் இருக்கும்

12. தாமத திருமணம் நடக்கும்

13. தந்தை வழியில் ஆன்மீகவாதிகள் இருப்பார்கள்

14. தாய்மாமன் வீட்டில் தங்கி படிப்பது இருக்கும்

15. குழந்தைக்கு ent problem இருக்கும்

16. குழந்தைக்கு இசை கலை ஆர்வம் இருக்கும்

17. குழந்தை தாமதம் அல்லது ஒரே குழந்தையாக இருக்கும்

ஐந்தாம் அதிபதி நான்காம் பாவத்தில் இருந்தால் பலன்கள்

1.பூர்வீக சொத்து கிடைக்கும்

2.தாய் மாமன் மூலம் சொத்து கிடைக்கும்

3. தாய் மாமனுக்கு சொத்து இருக்கும்

4.குழந்தைக்கு சொத்து இருக்கும்

5.குழந்தை பிறந்தவுடன் ஜாதகருக்கு சொத்து உண்டு 4 வயதில் கிடைக்கும்.

6.சொத்து வாங்கும் போது குழந்தை பிறக்கும்

7. குழந்தை பிறந்ததும் வாகன யோகமுண்டு

8. உயர்கல்வி உள்ளூரில் படிப்பது

9. பிறந்த ஊரில் கல்லூரி இருக்கும்

10. தாய்மாமன் ஒரு பதவியில் இருப்பார்

11. தாய்மாமனுக்கு மது பழக்கம் இருக்கும்

12. குழந்தைக்கு தண்ணீரில் கண்டம் இருக்கும் நான்கு வயது வரை

ஐந்தாம் அதிபதி அவர் நின்ற இடத்திற்கு பத்தில் இருக்கும் கிரகம் கிரகம் இல்லாத நிலையில் அந்த பத்தாமிட அதிபதியின் திசா புத்திகள் யோகம் தரும்

ஒரு திரிகோணம் கேந்திரத்தில் பத்தாம் இடம் என்பது உபஜெய ஸ்தானம் கூட இது தர்ம கர்ம பாவகம் நற்பலன்களையே கொடுக்கிறது

ஐந்தாம் அதிபதி அல்லது குரு பாவி சாரம் பெற்று பாவியை தொடக்கூடாது அவர் நின்ற இடத்தில் திரிகோணத்தில் சுபர் இருந்தால் தடையை மீறி நற்பலன்களை தருகிறார்கள்

நாலாம் அதிபதி மற்றும் செவ்வாய்க்கு திரிகோணத்தில் கிரகம் இருந்தால் சொத்து உண்டு

தெருவின் பெயர் பள்ளி கூடம் பெயரில் இருக்கும் கோவில் பெயரில் தெரு பெயர் இருக்கும் பஜனை கோவில் தெரு தெப்ப குலம் தெரு இது போல் இருக்கும்

ஐந்தாம் அதிபதி ஐந்தில்:

1.புத்திர பாக்கியம் கிடைக்கும்

2.குல தெய்வம் அருள் கிடைக்கும்

3.கோவில் திருப்பனி செய்வார்கள்

4.தாத்தா பெரிய குடும்ப நபர்

5.கல்வி அறிவு இருக்கும்

6.குழந்தைகள் மூலம் வளர்ச்சி இருக்கும்

7.தொழில் மூலம் திருப்பி இருக்காது

8.படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லை என்று சொல்லுவார்கள் 9.ஜாதகர் அறிவாளி

ராகு கேது தொடர்பு 5 ஆம் அதிபதிக்கு இருந்தால் ஆவிகள் உடன் தொடர்பு இருக்கும்

ஐந்தாம் அதிபதி 6ல் இருந்தால்

கலைத்துறை ,படிக்கும்போது உத்தியோகம். படித்துக் கொண்டே வேலை செய்வது . பூர்வீக சொத்தில் வழக்கு. ஜாதகர் தாய்மாமன் போலீஸ் ராணுவத்தில் இருப்பார. குழந்தை தாமதம். குழந்தைக்காக மருத்துவச் செலவு. குழந்தை கோபக்காரன். பூர்வீக சொத்தில் வழக்கு.

பூர்வீக வழிபாட்டில் தடை .குலதெய்வம் கோயிலுக்கு போனதால் கஷ்டம் . தாய்மாமனுக்கு கடன் .மேற்கல்வி தடை தாய்மாமனுக்கு வழக்கு உண்டு

இயற்கையிலேயே அஷ்டமாதிபதி ஆதிக்கம் பெற்றவர்கள் ரிசபம் 8 11 மூத்த சகோதரர் சிம்மம் 8 5 புத்திரம் விருச்சிகம் 8 11 மூத்த சகோதரம் கும்பம் 8 5 புத்திரம் ரிஷபம் விருச்சிகம் 11ஆம் அதிபதி 10 பனிரெண்டாம் ஆம் அதிபதி சனி தொடர்பு மூத்த சகோதரரை பாதிக்கும்.

சிம்மம் கும்பம் கும்பம் ஐந்தாம் அதிபதி குருவும் பலம் குறைந்தால் 10 11 அதிபதிகள் தொடர்பு கொள்ள புத்திர தோஷம் கடுமையாகும் இயற்கையில் ஊனம் தோஷம் இருக்கிற ராசி 1 எட்டு செவ்வாய் ஆயுள் கொடுக்கும். மிதுனம் ஐந்து 12 சுக்கிரன் பத்திரத்தை சொல்லும். துலாம் 9 12 புதன் யோகத்தை சொல்லும். தனுசு 5 பனிரெண்டு செவ்வாய் புத்திரத்தை சொல்லும் ரிஷபம் 7 12 செவ்வாய் களத்திரத்தை சொல்லும் மிதுனம் 8 9 சனி தந்தையை சொல்லும். இந்த ஆதி பத்தியத்திற்கு சனி சேர்க்கை நல்லது இல்லை.ஐந்தாமிடத்தில் பாதகாதிபதி அமர ஜாதகர் மற்றவர் குழந்தையை கொஞ்சி பாராட்டுவார்.

ஐந்தாம் இடத்திற்கு உள்ள ஆதிபத்தியம் கோழைத்தனம், திருமணம், தடை, தாமதம் செய்யும் மதம் மரபு ஆகும்

சன்னியாசி பாவகம் 5, 9, 10, 12 இவர்களில் பலர் லக்னத்திற்கு தொடர்பு கொண்டால் ஜாதகர் சன்யாசி எண்ணம் மேலோங்கும் பற்றற்ற நிலை அதிகமாகும் 1, 5 ஐந்து, 2 ஐந்து, ஐந்து 5, 11 ஐந்து, ஒன்பது இவர்களுக்கு குலதெய்வ அருள் கண்டிப்பாக இருக்கும்.

ஐந்தாம் அதிபதி ஏழில் .குழந்தை பிறந்தவுடன் உறவில் ஒரு திருமணம் உண்டு. .கல்யாண வீட்டில் காதல் வரும். மேற்படிப்புக்கு வெளிநாடு சென்று படிக்கும் போது காதல். குலதெய்வம் வழிபட்டால் திருமணம் .

ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம். பொதுச்சேவை ஈடுபாடும் உண்டு.

ஐந்தாம் பாவத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்

எந்த மாதிரியான குலதெய்வங்கள். தீப ரூப வழிபாடு அய்யா வழிபாடு, வள்ளலார், சிவ வழிபாடு, மலை, மலை சார்ந்த பகுதிகள், கூரை மேய்ந்த அனைத்து தெய்வங்கள். இதில் கேது தொடர்பு இருந்தால் பனையோலை கூரை. பழங்காலத்து மரங்களும் உண்டு, மதிய பூஜை உண்டு, சைவ சமையல், ஆன்மீகத் தலைவர்கள் வழிபாடு, சூரியன் கேது மரத்திற்கு கீழ் வைத்து வழிபாடு செய்வார்கள். சூரியன் குரு மரத்திற்கு துணிகட்டி மஞ்சள் தடவி வணங்குவார்கள். நாலாமிடம் தொடர்பு இதை உறுதி செய்யும்.

நான்காம் இடத்திற்கு அடுத்து ஐந்தாமிடம் என்பது குளம், கண்மாய், பிராணிகள், ஆறு, வாகனம் என குலதெய்வ கோவிலில் நான்காமிட தொடர்பு வைத்து சொல்ல வேண்டும்.

நான்கு ஐந்து பனிரெண்டை பார்த்தால் மழைவெள்ளத்தில் அடித்து வந்த சாமியை வைத்து வணங்குவார்கள். ஆண் வாரிசு உண்டு. அன்னதானம் செய்தால் சிறப்பு. ஜாதகர் பெரிய குடும்பம், கூட்டுக் குடும்பத்தின் சேர்ந்தவர். ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் உண்டு. காதல் திருமணம் உண்டு. ஐந்தாம் காரக துறையில் ஜாதகர் பிரகாசிப்பார். தானம், தர்மம் உண்டு. ஜாதகர் மருந்து தானம் செய்வார். வயிறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கும் யூரியன் பிரச்சனை இருக்கும். அறிவாற்றல் அதிகமாக இருக்கும். குழந்தைகளுக்கு மருத்துவ குணம் உண்டு. ஜாதகருக்கு ஐந்து வயதுக்கு மேல் நன்றாக இருக்கும். வளர்ச்சி இருக்கும். தாத்தாவுக்கு அரசு பதிவு உண்டு. பெரும்பாலும் இவர்கள் கலப்புத் திருமணம் செய்வது சிறப்பு

ஐந்தாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் எந்த மாதிரியான குலதெய்வங்கள் அமையும் பெண் தெய்வங்கள் அலங்காரமில்லாத தெய்வங்கள். நீர்நிலை அருகில் உள்ள தெய்வங்கள். இடம் மாறும்தெய்வங்கள். வயல்வெளியில் உள்ள தெய்வங்கள் வயல்வெளி அருகிலுள்ள தெய்வம். அம்பாள் அபிஷேகம் செய்யும் தெய்வம். அன்னதானம் இவர்களுக்கு சிறப்பு. காரகம் மறதி குழப்பம் ஐந்து வயதில் குடும்பம் இடமாற்றம், ஏமாற்றும். பூர்வீகத்தை விட்டு வெளியேறுதல்

தாத்தாவையும் விவசாயம் இருக்கும், வளர்ச்சி குறைவு தாத்தா வழியில் பெண்கள் அதிகமாக இருப்பார்கள். வயிற்றில் நோய் உண்டு.நிலையில்லாத உத்தியோகம் பார்ப்பார்கள். சித்திக்கு மனநிலை சரி இல்லாமல் இருப்பார். ஜாதகருக்கு மன வருத்தம் இருக்கும், ஃபுட் பாய்சன் ஆகும்.

ஐந்தாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் எந்த மாதிரியான குலதெய்வங்கள்

முருகன். ஆயுதமேந்திய காவல் தெய்வங்கள். சிவப்பு துணி உடுத்திய தெய்வம். மீசை வைத்த தெய்வம். பற்கள் உள்ள தெய்வம். பலி பூஜை உண்டு. உடுக்கு கோடாங்கி என்னுடைய தெய்வம். கேது தொடர்பு உடைய தெய்வம் ஆஞ்சநேயர். மேலும் துர்க்கை. சூரியன், புதன், செவ்வாய் நரசிம்மர், அகோர பற்கள் உள்ள தெய்வங்கள் குறிக்கும். தாத்தா வகையில் உள்ளவர்கள் பதவியில் இருப்பார்கள் ஐந்து வயதில் ஒரு சொத்து இருக்கும். ஐந்து வயதில் ஒரு சகோதரர் இருப்பார் அல்லது பிறப்பான். ஒரு விபத்து உண்டு. வயிற்றில் வியாதி உண்டு. குழந்தைகளுக்கு பதவி உண்டு, பூர்வீக சொத்து உண்டு. பாதுகாப்புத் துறையில் இருப்பார். ஒரு சொத்து விரையம் இருக்கும். வாகனத்தால் விபத்து இருக்கும். தாத்தா வகையில் குறி சொல்பவர்கள் இருப்பார்கள். கண் பிரச்சனை உண்டு.

ஐந்தாம் பாவத்தில் புதன் இருந்தால் எந்த மாதிரியான குலதெய்வங்கள்

விஷ்ணு அம்சம் உள்ள தெய்வம். கன்னிமார். பச்சையம்மன். இரண்டு குல தெய்வங்கள். இரண்டு இடங்களில்குலதெய்வங்கள்.

எல்லையம்மன் கிணறு இருக்கும் பள்ளத்தில் உள்ள கோவில். பாஞ்சாலி அம்மன். கைகள் உள்ள தெய்வங்கள். பள்ளிக்கூடம் அருகில் உள்ள தெய்வம். உங்க அருகிலுள்ள தெய்வங்கள். ஜாதகருக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. இரண்டு தாய்மாமன் உண்டு. இரண்டு பள்ளியில் படிப்பார். இரண்டு புத்தகங்கள் வாங்குவார். இவர்கள் வீட்டு வழியில் ஜோதிடர், ஆசிரியர் உண்டு.

ஐந்து வயதில் குடும்பத்தில் பத்திர பதிவு, பாகப்பிரிவினையோ இருக்கும்.ஐந்து வயதுக்கு மேல் மாமாவுக்கு வளர்ச்சி உண்டு. காதல் உண்டு. கலைத்துறையில் ஈடுபாடு உண்டு. கவிதை கட்டுரையும் விருப்பம் உண்டு. குழந்தைகள் அறிவாளியாக இருப்பார்கள். ஆடிட்டர், பேங்க் வேலை செய்பவராக இருப்பார். குடும்பத்திலும் இருப்பார்கள். இவர்கள் படிக்கலாம். 29 வயதில் ஜாதகர் பத்திரம் பதிவு செய்வார். 40 வயதுக்கு மேல் காதல் வரும் படிக்கத் தூண்டும்.

ஐந்தாம் பாவத்தில் குரு இருந்தால் என்ன குலதெய்வம்

குழந்தை வடிவ தெய்வங்கள். குருவாயூர், குருவம்மா, பால தெய்வங்கள். ஆச்சாரம் உள்ள தெய்வங்கள். மரத்தடியில் சாமி கும்பிடுவது. இனிப்பு வைத்து சாமி கும்பிடுவது, சர்க்கரை பொங்கல் வைத்து சாமி கும்பிடுவது. வேஷ்டி, சேலை படைத்து சாமி கும்பிடுவது. ஆபரணம் வைத்து சாமி கும்பிடுவது. பாலா, பாலாம்பிகை, சைவ படையல், பாலமுருகன் குலதெய்வம் அமையும். ஐந்தில் குரு காரகோ பாவ நாஸ்தி.

முதல் குழந்தை ஐந்தாம் பாவம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் நல்லது. குழந்தை தாமதம் ஆகும்.

ஆண் குழந்தை முதலில் பிறந்தால் ஐந்து வயது வரை கவனமாக இருக்க வேண்டும். ஐந்து வயதில் குடும்பம் வளர்ச்சி அடையும்.40 வயதுக்கு மேல் ஜாதகருக்கு வளர்ச்சி உண்டு. ஐந்து வயதில் இவர் குடும்பத்தில் ஒரு உடன்பிறப்பு இருக்கும். குடும்பத்தில் வாரிசு வரும். தாத்தா ஒரு பதவியில் இருப்பார். ஆன்மீக குடும்பம் சட்டம் தெரிந்தவராக இருப்பார்கள். ஆச்சாரமாக இருப்பார்கள். மனிதநேயம் இருக்கும். வெளிநாட்டு வருமானம் உண்டு. ஜவுளி வியாபாரம் செய்யலாம். ஜாதகருக்கு அறிவான குழந்தை இருக்கும். சீட்டு தொழில் செய்யலாம். ஆசிரியர் வேலை செய்யலாம். ஜோதிடம் பார்த்தார்கள் என்றால் அதில் வெற்றி கிடைக்கும். தாய்மாமனுக்கு வளர்ச்சி உண்டு. தாய்மாமனுக்கு ஆண் குழந்தை உண்டு. இவர்களைத் தேடி குருமார்கள் வருவார்கள். 40 வயதுக்கு மேல் நல்ல வளர்ச்சி உண்டு. இவர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் வளர்ச்சி இருக்கும். இவர்கள் குழந்தை பேற்றை தள்ளிப் போடக் கூடாது. 40 வயதுக்கு மேல் படிக்கத்தோன்றும்

ஐந்தாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன குலதெய்வம்

பெண் தெய்வங்கள், அலங்காரமான தெய்வங்கள், லட்சுமி,ஆடை வைத்து வணங்குவது, இளமையான தெய்வம், சலங்கை கட்டி பூஜை செய்வார்கள், சைவ இனிப்பு, சக்கரை பொங்கல் படைத்து வழிபடுவார்கள். பட்டம்மாள், பட்டுசாமி, பட்டத்து அரசி, பட்டாளத்தம்மன், பட்டுப்புடவை வைத்து கும்பிடுவார்கள். கன்னி தெய்வங்கள். ஜாதகருக்கு ஐந்து வயதில் குடும்பம் வளர்ச்சி. ஐந்து வயதில் அத்தைக்கு ஒரு சுப நிகழ்ச்சி உண்டு. பெண் குழந்தைகள் உண்டு. கல்வி அறிவு உண்டு. ஜாதகர் டபுள் டிகிரி வாங்கி இருப்பார். ஜாதகருக்கு அறிவாற்றல் உண்டு. 40 வயதிற்கு மேல் படிப்பார்கள். 40 வயதுக்கு மேல் பொருளாதார வளர்ச்சி உண்டு. கலைத்துறையில் நாட்டம் இருக்கும். தாத்தா வகையில் ஆடு மாடு வளர்த்தவர்கள் இருப்பார்கள். புதன் 11-ஆமிடம் தொடர்பு தாத்தா வழியில் இரண்டு திருமணம் உண்டு. அத்தை வழியில் ஆசிரியர் உண்டு, அறிவு திறமை சிறப்பாக இருக்கும். சாஸ்திரத்தில் நாட்டம் இருக்கும்.

ஆண் கிரகங்கள் சூரியன், செவ்வாய், குரு வக்கிர கிரகங்களுக்கு தொடர்பு கொள்ளும்போது ஆணை பெண்ணாக மாற்றுகிறது திதி சூன்யம் பாதகம் இதை உறுதிப்படுத்தும்.

ஐந்தாம் பாவத்தில் சனி இருந்தால் எந்த மாதிரியான பலன்

குலதெய்வங்கள். கருப்புசாமி. அய்யனார் சாமி. காவல் தெய்வம். கூரை அற்ற கோவில்கள். இடிந்த தெய்வம். கோவில் பராமரிப்பு இல்லாத கோவில். சேதம் அடைந்த கோவில். நடந்து சென்று கும்பிடுவது, செவ்வாய் சாரம் வாங்கி இருந்தால் பாதை கரடுமுரடாக இருக்கும். மண்ணில் செய்யப்பட்ட தெய்வங்கள். ஐந்து வயதில் குடும்பத்தில் ஒருகருமம் இருக்கும். ஐந்து வயதில் குடும்பத்தில் ஒரு மருத்துவச் செலவு இருக்கும். குழந்தை தாமதமாக இருக்கும். குழந்தைக்கு மருத்துவச் செலவு. குழந்தைக்கு ஒரு ஊனம் இருக்கும். பொதுவாகவே பெண்கள் கரு உண்டாக பெண்கள் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் காய்கறிகள் உண்பது நல்லது. பலாப்பழம் சித்திரை மாதம் கிடைக்கும். மாம்பழம் வைகாசி மாதம் கிடைக்கும். நாவல் பழம் ஆனி மாதம் கிடைக்கும். தர்பூசணி, நொங்கு ஆடி மாதம் கிடைக்கும். இந்த நான்கு மாதத்தில் சீசனில் அதிகமாக கிடைக்கும் பழங்கள் இவை கரு உண்டான பெண்கள் மேஷம் முதல் கடகம் வரை திதி சூன்யம் வரும் காலம் மேற்படி சொன்ன பழங்கள் சாப்பிடக்கூடாது. திதி சூன்யம் பாதகம் கருவை கலைக்கும். எந்தெந்த பழங்கள் கரு உண்டாக காரணமோ அதே பழங்கள் சூனியம் பாதக கால மாதங்கள் சாப்பிடக்கூடாது,

கரு உண்டாவதற்கு ஒரு ஜாதகருக்கு குழந்தை உண்டாவதற்கு எப்படி சொல்லலாம் என்றால் சனி ஐந்தில் இருந்தால் தரையில் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள வேண்டும். செருப்பு ஆணி போடக்கூடாது. சித்தப்பா என்றால் சனி, சித்தப்பா வீட்டில் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளலாம். சனிக்கிழமை சனி நட்சத்திரம் அன்று தாம்பத்தியம் வைத்துக் கொள்ளலாம். தை மாதம் மாசி மாதம் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளலாம். கரும காரியம் நடந்த அன்று தாம்பத்தியம் வைத்துக் கொள்ளலாம். உறவில் இறந்த ஒருவர் குழந்தையாக பிறப்பார். பிறக்கும் குழந்தைக்கு லக்னத்தில் சூரியன் இருக்கும் கோவில் கும்பாபிஷேகம் அன்று என்றால் 5 9 லக்னத்தை பார்க்கும்.

ஐந்தாம் பாவத்தில் ராகு இருந்தால் என்ன பலன் என்ன குலதெய்வம் உருவமில்லாத தெய்வங்கள். புற்று உள்ள தெய்வங்கள். அகோரத் தோற்றம் உள்ள தெய்வங்கள். மது வகைகள் வைத்து வழிபடுதல். சாட்டை வைத்து வழிபடுதல். குதிரை வைத்து வழிபடுதல். வாகனங்கள் உள்ள தெய்வம். உடைந்த தெய்வம். அரிவாள் மீது முள்மீது நின்றதெய்வம். காளி, துர்க்கை, பெரிய மூக்கு, கண் வயிறு உள்ள தெய்வம். மெயின் ரோட்டில் உள்ள தெய்வம். பாலம் அருகில், ரயில்வே ட்ராக் அருகில் உள்ள ஆலயங்களில் இருக்கின்ற தெய்வங்களை வழிபடலாம். ஐந்து வயதில் ஒரு கண்டம். ஒரு சர்ஜரி உண்டு. வயிற்றில் வியாதி உண்டு. குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும். வயிற்றில் தழும்பு இருக்கும். காக்காவலிப்பு, விஷக்கடி, தற்கொலை மரணம் இருக்கும். உடலில் படர்ந்த மச்சம் இருக்கும். சாமி ஆடும் குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பார்கள். குழந்தைகள் வெளிநாடு செல்லும். ஜாதகர் மேற்படிப்புக்காக இடமாற்றம் செய்வார். மருத்துவ குணம் உண்டு. தாத்தா வழியில் நாட்டு வைத்தியர் இருப்பார். தேள் கடி, பாம்புக்கடி, மஞ்சக்காமாலை இருக்கும். ராகு கேது ஐந்து ஒன்பது கிரக நட்சத்திரங்களில் உள்ள காரக நட்சத்திரங்கள் குழந்தைக்கு வரும். இரட்டை குழந்தைகள் உண்டு. இவர்களுக்கு உடல் நிலை சரி இருக்காது. கலைத்துறை ஈடுபாடு இருக்கும் கலைப்படைப்புகள் உண்டு.

ஐந்தாம் பாவத்தில் கேது இருந்தால் என்ன பலன் என்ன குலதெய்வம்

மனித முகம் இல்லாத தெய்வங்கள். உருவமில்லாத தெய்வங்கள். மரத்தடி கோவில்களில வால் உள்ள தெய்வங்கள். முற்கள் கம்பி வேலி கட்டிய தெய்வங்கள். ஆட்டு குடிலில் உள்ள தெய்வங்கள். ஒத்தையடி பாதை வழியே செல்லும் தெய்வங்கள். குகை போன்ற கோவில்கள். வலை அடித்துள்ள கோவில். ஜீவசமாதி சுமைதாங்கிக் கல் உள்ள தெய்வம்.ஊனமான தெய்வம். ஐந்தில் கேது இருந்தால், ஜாதகருக்கு குழந்தை தாமதம் ஏற்படும். தாத்தா வழியில் திருமணம் ஆகாதவர்கள் இருப்பார்கள். குழந்தைகளுக்கு மருத்துவ குணம் இருக்கும். குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும். இரட்டை குழந்தை. 5 வயதில் குடும்பத்தில் ஒரு விரிசல் இருக்கும். கேது நட்சத்திரம் கேது அமர்ந்த பார்த்த மாத கனிகள் இதற்கு மருந்தாக அமையும். கேது பார்த்தாலும் எட்டாம் பாவக 8 மாத விளையும் கனிகள் சாப்பிடக்கூடாதுகுடிசை பனை ஓலை வீடுகளில் தாம்பத்தியம் நல்லது. குழந்தைகளுக்கு காதல் திருமணம் உண்டு. மாமன் காதல் திருமணம் செய்தவர். மாமன் உறவு தடைபடும். 50 வயதுக்கு மேல் ஜாதகருக்கு வளர்ச்சி உண்டு. பரிகாரம் சிவப்புக் கயிறு வாங்கி கட் பண்ணி போடுவது நல்லது காதல் ராசிகள் புதன் வீடு சுக்கிரன் வீடு விருச்சிக வீடு 5 வீடுகள் காதல் ராசிகள்

ஐந்தாம் பாவத்திற்கு புதன் கேது தொடர்பு இருந்தால் சந்திர திசா புத்தியில் காதல் வரும்

மிதுனம், கன்னி, ரிஷபம், துலாம், விருச்சிகம் இது ஒரு ஜாதகத்தில் 5ஆம் பாவக மாகவருபவர்களுக்கு காதல் இருக்கும்

புதன் நட்சத்திரங்கள் ராகு கேது நட்சத்திரங்கள் சனி நட்சத்திரங்கள் காதல் திருமணத்திற்கு வழிவகுக்கும்

பாதகாதிபதி 2, 7 க்கு தொடர்பு கொண்டால் வேறு ஜாதி வேறு மதத்தில் களத்திரம் அமையும்]

5-க்குடையவர் 6, 8 இருந்தால் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தர மாட்டார்கள் அங்கு காதலின் தரம் குறைகிறது.

நான்காம் அதிபதி 12ல் இருந்தால் சாதகர் தூக்கத்தில் விருப்பமுடையவர். .

12-வெளிநாட்டு வாழ்வை குறிக்கும் படிப்புக்காக வெளிநாடு செல்லுதல் ,வசித்தல் போன்று..

வலுகுன்றிய நான்காமிடம் மன அமைதியின்மையும்,அதன் காரத்துவங்களில் மகிழ்ச்சியை பாதிக்கும்.

விருச்சிக ராசியில் ஏற்படும் காதல் முறை தவறிய சமுதாய மரபுக்கு மாறுபட்டதாக இருக்கும்.

காதல் திருமணம் ஜாதகங்களில் 5, 9 தொடர்பு அதிகமாக இருக்கும்.

2, 7 இடங்கள் திதி சூன்யம் ஆனாலும் ஐந்தாமிடத்திற்கு திதி சூன்யம் சம்பந்தப்பட்டால் காதல் வருகிறது.

டிப்ஸ்

ஐந்தாம் இடத்தை அல்லது ஐந்தாம் அதிபதியை குரு அல்லது சூரியன் பார்த்தால் குழந்தை உண்டு. ஐந்தாம் அதிபதி 2 இருந்தால் குழந்தை உண்டு. ஐந்து ஒன்பது பதினொன்றில் இருந்தால் குழந்தை உண்டு.

9-க்குடையவர் லக்னம், லக்னாதிபதிக்கு தொடர்பு வந்தால் ஆண் வாரிசு வாய்ப்பு அதிகமுண்டு, ஐந்தாம் அதிபதி ஐந்தில் அல்லது லக்னத்தில் குழந்தை இருக்கும்.

ஐந்தாம் அதிபதி நெருப்பு ராசியில் இருந்தால் தீபம் போடுதல் விளக்கு வசதி குத்துவிளக்கு எடுத்து வைப்பது.

ஹோமம் செய்வது தீச்சட்டி எடுப்பது உற்சவ காலத்தில் தீப்பந்தம் பிடித்து செல்லுதல், தீ மிதித்தல், விளக்குகம்பம் தூக்குதல்,

ஐந்தாம் அதிபதி நில ராசி ராசியில் இருந்தால் யாத்திரை செல்லுதல், அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்வது, கோவிலுக்கு நிலம் தானம் கொடுப்பது,கிரிவலம் வருவது.

ஐந்தாம் அதிபதி காற்று ராசியில் இருந்தால் ஜெபம் மந்திரம். ஒலிபெருக்கி, சொற்பொழிவு, காற்றாடி, ஏசி மாட்டி கொடுப்பது. ஊதுபத்தி, சூடம், பூக்கள், மணி ,பூஜை பொருட்கள் வாங்கி கொடுப்பது

ஐந்தாம் அதிபதி நீர் ராசியில் இருந்தால் அபிஷேகம், அன்னதானம், நீர்மோர், தண்ணீர் பந்தல், போர்வெல் அமைப்பது, எடைக்கு எடை வாழைப்பழம் கொடுப்பது.

ஐந்தாம் பாவத்திற்கு ஏழில் கிரகங்கள் இருந்தால் குலதெய்வத்திற்கு நேர் எதிர்புறம் சிறிது தூரம் தாண்டி ஒரு உப தெய்வம்.

ஐந்தாம் இடத்தை பல கிரகங்கள் பார்த்தால் உப தெய்வங்கள் அதிகமாக இருக்கும்.

ஐந்தாம் அதிபதி எட்டில் மாந்தியுடன் இருந்தால் குலதெய்வம் சுடுகாட்டுக்கு அருகில் இருக்கும்

ஐந்தாம் அதிபதி 12ல் இருந்து நாலாம் அதிபதி தொடர்பு இருந்தால் ஆற்றில் அடித்து வந்த குலதெய்வமாக இருக்கும்

எட்டு பன்னிரெண்டு சம்பந்தம் ஏற்பட்டால் மழை வெள்ளத்தில் குலதெய்வம் சேதப்படும்.

புத்திர தோசம், புத்திர யோகம்.

புத்திர தோஷம் இயற்கையில் புத்திர தோஷம் உள்ள வீடுகள் மிதுனம், சிம்மம்,,கும்பம், தனுசு.

அடுத்து வறண்ட ராசிகள் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி விருச்சகம் இவையெல்லாம் இயற்கையில் புத்திர தோஷம் உள்ள ராசிகள்.

புத்திரகாரகனும் புத்திர ஸ்தான அதிபதியும் பாவிகள் சாரம் பெற்று பாவி யோடு இருக்க அந்த இடம் வரண்ட ராசியானால் புத்திர தடை ஜாதகருக்கு அதிகமாக இருக்கும்.

5, 8, 12 இந்த அதிபதிகள் திதி சூனியத்தில் இருந்து லக்னத்தை பார்த்தால் குழந்தை தலை திரும்பி கால் முதலில் வரும்.

மேஷத்தில் அஸ்வினி நட்சத்திரம் உள்ளது கன்னியில் அஸ்தம் நட்சத்திரம் உள்ளது இது புத்திர தோஷம் உள்ள நட்சத்திரம்.

கருக்கலைப்பை சொல்லும் கன்னியிலும் விருச்சிகத்தில் பல கிரகங்கள் இருந்தால் புத்திர தோஷம் உள்ள குடும்பம்.

சிம்மத்தில் ஒரு கிரகம் இருந்து அதன் திரிகோணத்தில் சுபர் இல்லாமல் இருந்து ஒரு பாவி இருந்தால் புத்திரதோஷம் கண்டிப்பாக இருக்கும்.

நான்கு ஐந்து, 8, 11 இந்தத் தொடர்பு உள்ள ஜாதகருக்கு குழந்தை இல்லாதவர்களின் சொத்து கிடைக்கும்.

குரு 12 ல் இருந்து சனி பார்த்தால், கூடினாலும் குழந்தையின் கருவை கலைக்க முயற்சி செய்திருப்பார்கள். கண்டம் தப்பிய குழந்தை என்று எடுக்கலாம்.

ஐந்தாம் அதிபதி 12 ல் இருந்து சனி பார்த்தாலும் கூடினாலும் இதே பலன்தான் வரும்.

வறண்ட ராசிகளான மேஷம், சிம்மம், மிதுனம், கன்னி, விருச்சிகம் இவை ஐந்தாம் பாவக மாக வந்து புத்திர காரகன் குரு அதில் அமர்வது அல்லது ஐந்தாம் அதிபதி அமர்வது குழந்தை பேரு தடை தாமதம் வரும்.

கன்னி வீடு இங்கு குரு சனி சேர்க்கை ஆகாது, இது குழந்தை தாமதமாகும் அல்லது ஒரு குழந்தைக்கு மறு குழந்தைக்கு இடைவெளி வயது அதிகமாக இருக்கும்.

குழந்தை பிறந்தவுடன் குடும்பம் பிரியும்.

குழந்தைக்கு ஆறு வயது வரை மருத்துவச் செலவு இருக்கும்.

விருச்சக வீடு இது புத்திர தோஷத்தை கூறுவதில் வல்லமை மிக்கது. இதில் உள்ள கிரகங்களும் புத்திர தோஷத்தை சொல்லும்.

கன்னி ராசியிலும் விருச்சக ராசியில் பல கிரகங்கள் தொடர்பு கொள்ள புத்திர தோஷம் உள்ள கிரகம் வயிற்றில் இறந்து பிறந்து அல்லது பிறந்து இழந்ததை சொல்லும் ராசி.

ஐந்தாம் அதிபதி 12 ல் இருக்க சனி சேர்ந்தாலும், பார்த்தாலும் முதல் குழந்தை அபார்ஷன் அல்லது ஆயுள் குறைவு, வளர்ச்சி சரியில்லை என்று அழித்து விடுவது.

குழந்தை இல்லை என்பதையும் விருச்சிக ராசி சொல்லும் புத்திரகாரகன் குரு 12 ல் இருக்க சனி அல்லது பன்னிரெண்டாம் அதிபதி பார்த்தாலோ சேர்ந்தாலோ முதல் குழந்தை கண்டம்.

புத்திர தோஷம் உள்ள நட்சத்திரங்கள் மிருகசீரிடம், அஸ்தம் உத்திராடம், பூரட்டாதி, கேட்டை கருக்கலைப்பு நட்சத்திரம்.

அஸ்வினி பாவிகள் சனி, ராகு, கேது, செவ்வாய், சந்திரன்,ஐந்தாம் அதிபதி குரு பாவிகள் சாரம் பெற்று பாவிகளை தொடுவது நல்லது இல்லை.

ஐந்தாம் அதிபதி திரிகோணத்தில் சுபர் இருப்பது நல்லது. புத்திர காரகன் குருவிற்கும் திரிகோணத்தில் சுபர் இருப்பது நல்லது.

பாவிகள் சாரம் பெற்ற குருவிற்கு திரிகோணத்தில் பாவிகள் இருக்கக் கூடாது. பாவிகள் சாரம் பெற்ற ஐந்தாம் அதிபதி க்கும் திரிகோணத்தில் பாவிகள் இருக்கக் கூடாது.

ஐந்தாம் அதிபதி திரிகோணத்தில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும், புத்திர காரகன் குருவிற்கு திரிகோணத்தில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும், இரண்டும் இல்லாதபட்சத்தில் குழந்தை இல்லை இருந்தாலும் குடும்பம் பிரிகிறது.

புத்திரயோகம்

2-ம் வீட்டில் இருந்தால் லாட்டரி, ரேஸ் போன்றவற்றிலிருந்து பணம் கிடைக்கும்.

சரி புத்திரபாக்கியம் எப்போது கிடைக்கும்? 5-ம் வீட்டையும், 2-ம் வீட்டையும் குறிக்கும் தசா, புக்தி காலங்களில் கிடைக்கும்.

அரசாங்கத்திடமிருந்து பணவரவு கிட்டும்.

ஏனெனில் 5-ம் வீடு அரசாங்கத்தையும் குறிக்கிறது.

ஒருவருக்கு 5-ம் வீட்டையும் 2-ம் வீட்டையும் குறிக்கும் கிரகங்களின் தசா, புக்தி காலங்களில் புத்திரபாக்கியம் உண்டாகும்.

5-ம் வீடு புத்திரத்தையும், 2-ம் வீடு குடும்பத்தையும் குறிப்பதனால் அப்போது புத்திர பாக்கியம் உண்டாகும்..

5-ம் வீட்டதிபதியுடன் பாபகிரகங்களின் சேர்க்கை இருந்து 2-ல் இருந்தால். அப்போது பணவிரயம் ஏற்படும்.

ரேஸ், ஸ்பெகுலேஷன் துறையில் பணத்தைக் கோட்டை விடுவர். அரசாங்கத்திற்கு தண்டமாகப் பணம் செலுத்துவர்.

3-ம் வீடு சிறு பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? 5-ம் வீடு மதம் கோவில்களைக் குறிக்கிறது. ஆக இவர் தெய்வதரிசனத்திற்காக வெளியூர்ப்பயணம் மேற்கொள்ளுவர்.

3-ம் வீடு என்பது 5-ம் வீட்டிற்குப் 11-வது வீடு அல்லவா? புத்திர பாக்கியம் உண்டென்று கூறலாம்.

5-ம் வீட்டின் காரகத்துவங்கள் நன்றாக இருக்கும் எனக்கொள்ளலாம். இதுதான் 5-ம் வீட்டதிபர் 3-ல் இருந்தால் பலன்.

5-ம் வீட்டதிபர் 4-ல் இருந்தால் 5-ம் வீட்டின் காரகத்துவங்கள் பாதிக்கப்படும். ஏனெனில் 5-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 4-ம் வீடல்லவா!

5-ல் சுபக்கிரகங்கள் இருந்தால்தான் அந்த வீட்டின் காரகத்துவம் ஓரளவிற்கு நன்றாக இருக்கும்.

இவரின் புத்திரர் விவசாயம் அல்லது கட்டிடத்தொழில் சம்மந்தமான தொழிலில் இருப்பார் எனக் கொள்ளலாம்.

இவரின் தாயார் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்.

5-ம் வீட்டதிபர் 5-ல் இருந்தால் தன் தொழிலில் திறமையுடன் இருப்பார்.

மந்திர சாஸ்த்திரங்களில் திறமைமிகுந்தவராக இருப்பார்.

இவரின் குழந்தைகள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர்.

அரசாங்கத்தின் உதவி இவர்களுக்குக் கிட்டும்.

புத்திரர்களால் இவருக்கு உதவி கிட்டும்.

5-ம் வீட்டதிபர் 6-ல் இருந்தால்:

புத்திர பாக்கியம் குறைவு எனக் கொள்ளலாம்.

ஏனெனில் 6-ம் இடம் மறைவு ஸ்தானம் அல்லவா!

தாய்மாமன் நன்றாக புகழுடன் இருப்பார்.

6-ம் இடம் தாய்மாமனைக் குறிக்கிறது அல்லவா! சிலர் தாய்மாமனின் குழந்தையை தத்து எடுத்துக் கொள்வர். புத்திரர்களால் நன்மைகளையோ அல்லது லாபத்தையோ எதிர்பார்க்க முடியாது.

7-ல் இருந்தால் காதல் திருமணம்செய்து கொள்வர். 5-ம் இடம் காதலையும், 7-ம் இடம் திருமணத்தையும் குறிக்கிறது அல்லவா? இந்த சேர்க்கை காதல் திருமணத்தைக் கொடுக்கும்.

8-ம் இடத்தில் இருந்தால் புத்திர சந்தான தோஷம் உண்டு. அதிர்ஷ்டக்குறைவானவர் என்று கூறலாம்.

9-ம் வீட்டில் இருந்தால் இவருடைய புத்திரர்களில் ஒருவர் நற்பெயருடன் நன்றாக இருப்பார்.

கல்வியில் திறமையுடன் இருப்பர். பிதுர் பாக்கிய சொத்துக்கள் கிடைக்கும்.

பெரியவர்களிடம் பக்தி விசுவாசத்துடன் இருப்பர். சாஸ்த்திரங்களில் தேர்ச்சியும், பாண்டித்தியமும் பெற்று தெய்வீக வழிபடுகளில் பற்றுதலுடனும், தீவீர நம்பிக்கையுடனும் இருப்பார்கள்.

தருமம், நீதி ஆகியவற்றைக் கடைப் பிடித்து வாழ்க்கை நடத்துவார்கள்.

10-ம் வீட்டில் இருந்தால் புத்திர சந்தான விருத்தி ஏற்படும்.

சத்காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்.

தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்.

அரசின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.

11-ம் வீடு லாபஸ்தானம் அல்லவா?

அங்கு 5-ம் வீட்டு அதிபதி இருப்பின் இவரின் புத்திரர் நற்பெயரெடுத்து நல்ல நிலைக்கு வருவர்.

இவருக்குப் புத்திரர்களால் உதவி கிடைக்கும்.

மேலே கூறியதுபோல் லாட்டரி, ரேஸ்போன்றவற்றிலிருந்து பணவரவு உண்டாகும்.

பொதுவாக 5-ம் இடத்தின் காரகத்துவங்கள் சிறந்து விளங்கும்.

12-ம் வீட்டில் இருந்தால் இதுவும் புத்திர தோஷம்தான்.

மனைவிக்கு அடிக்கடி கர்பச்சிதைவு ஏற்படும். உடல் நிலை பாதிக்கக்கூடும். எதிலும் பற்றில்லாத வாழ்க்கை வாழ்வர். தெய்வீக வாழ்க்கை வேண்டி ஊர் ஊராகச் சுற்றுவர். புத்திரயோகம் புத்திரருக்குக் காரகர் குரு இவர் சுப கிரகத்தை தொடுவது சுப கிரகம் சாரம் பெறுவது நல்லது புத்திர யோகத்தை தரும் குருவிற்கு திரிகோணத்தில் சுபர் இருப்பது அல்லது பலம் பெற்ற கிரகம் இருந்தாலும் புத்திர யோகம். குரு குரு வீட்டை பார்ப்பது புத்திர யோகம் ஐந்தாம் பாவகம் ஐந்தாம் அதிபதி தொடர்பு கொள்வதும் புத்திர யோகம்.

குருவின் ஐந்தாம் பார்வையில் உள்ள கிரகங்களுக்கு கண்டிப்பாக குழந்தை உண்டு. குரு சூரியன் சம்பந்தம் குழந்தை உண்டு

குரு பார்த்த இடங்களுக்கு செவ்வாய் பார்வை இருந்தால் விரைவில் குழந்தை உண்டு

குரு பார்வை உள்ள இடங்களுக்கு செவ்வாய் பார்வை வரும் பொழுது செவ்வாய் என்றால் ரத்தம் குழந்தை உண்டு

செவ்வாய் பார்த்த இடங்களுக்கு கோச்சார குரு வரும் காலம் குழந்தை உண்டு

செவ்வாய் சுக்கிரன் குரு இருக்கும் இடம் அல்லது திரிகோணத்தில் ஆத்ம காரகன் சூரியன் வரும்போது ரத்த விந்தணுக்கள் அதிகரிக்கின்றன குரு தொடர்பு வரும்பொழுது பலன் தருகிறது

புதனுக்கு குரு சுக்கிரன் சூரியன் வரும் காலம் பரிட்சை அரியர்ஸ் தேர்வில் வெற்றி பெறலாம்

ஐந்து ஒன்பதில் எந்த கிரகங்கள் இருந்தாலும் புத்திரம் கண்டிப்பாக இருக்கும் ஐந்தாம் இடத்தை பல கிரகங்கள் பார்த்தாலும் புத்திரம் உண்டு

ஐந்து 2 5 9 ஐந்து 11.55 5 4 5 7 இந்த பாவ தொடர்பு கொள்ளும்பொழுது குழந்தை நிச்சயம் உண்டு

குருவின் பார்வையில் வளர்ச்சி கிரகங்கள் இருப்பது யோக பலனைக் கொடுக்கிறது ஐந்தாம் அதிபதியின்

பார்வையில் கிரகங்கள் இருப்பது யோக பலனை தருகிறது

ஐந்து ஒன்பது பதினொன்று அதிபதிகள் ஐந்து ஒன்பது பதினொன்றில் குரு இவர்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் லக்னத்திற்கு நல்லது லக்னாதிபதிக்கு தொடர்பு கொண்டால் ஜாதகர் உயர் நிலையை பெறுவார் பல தோஷங்கள் இருந்தாலும் இவர்களை பாதிக்காது

குரு ஜாதகத்தில் நீண்டகால வருமானம் உள்ளவர்கள் வருமானம் என்பதை இரண்டாம் அதிபதியும் குரு

காலச்சக்கர வருடங்கள் 20 வருடம் சூரியன் 6 வருடம் ஏழு ஏழு வருடம் சந்திரன் 10 வருடம் செவ்வாய் 7 வருடம் ராகு 18 வருடம் குரு 16 வருடம் சனி 19 வருடம் புதன் 17 வருடம் இந்த திசாபுத்திகள் கூடிய கிரகங்கள் யாருடைய சாரம் பெற்றுள்ளது

இரண்டாம் பாவ தொடர்பு ஏற்பட்டாலும் சாரம் தந்த disha வருடம் முழுவதும் வருமானத்துக்கு உண்டான பலனை முழுமையாக கொடுக்கிறது

ஆறு எட்டு பன்னிரெண்டில் குரு மறைவதில்லை மறைந்து நின்று வருமானம் வரும் வழியை சொல்கிறார்

புதன் வீடுகள் திதி சூன்யம் ஆக வரும் காலங்களில் புத்திர தோஷத்தையும் பிரிந்து வாழும் குடும்பத்தையும் சொல்லும்

தத்து புத்திர யோகம் தத்து புத்திர பாவகம் பத்து ஐந்தாம் பாவம் இதற்கு சனியோ அஷ்டமாதி அதிபதியோ தொடர்ந்து இருந்தால் அது தத்து புத்திர யோகம்

சனி புதன் அலி கிரகங்கள் சனி புதன் இவர்களில் ஒருவர் சூனியமா இருந்தாள் தத்து புத்திரம்

இயற்கையில் தத்து புத்திர யோகம் கும்பம் சிம்மம் இவர்கள் அடுத்தவர் குழந்தைகளை பராமரிப்பதில் அதிக விருப்பம் உள்ளவர்கள்

பத்தாம் அதிபதி எட்டாம் அதிபதியுடன் சேர்ந்து லக்னம் லக்னாதிபதிக்கு தொடர்பு கொண்டாள் ஜாதகர தத்து ் போவார் இதில் ஒருவர் திதி சூன்யம் பாதகமாக இருக்க வேண்டும்

குரு மாந்தி குரு பாதகர் மாந்தி குழந்தை அழிவு

ஐந்தாமிடம் ஐந்தாம் அதிபதிக்கு புதன் தொடர்பு இருந்தால் ஜாதகர் அதிகமான அறிவாற்றல் உள்ளவராக இருப்பார்

ஐந்தாம் அதிபதிக்கு ஐந்தில் குரு சுக்கிரன் புதன் யாரேனும் பலம் பெற வேண்டும் அப்படி இருந்தால் ஜாதகர் அறிவாளி இவர் ஒரு இல்லாமலேயே கலைகளை கற்பார்

ஐந்தாம் இடத்திற்கு பத்தாம் பாவக தொடர்பு ஆசிரியர், ஜோதிடர்.

ஐந்தாம் அதிபதி லக்னத்தில்:

இவர்கள் வீடு கோவில் அருகே இருக்கும். தாத்தாவின் உருவம் அங்கங்களில் இருக்கும். மனித நேயம் உள்ளவர். ஐந்து வயதில் குடும்பத்தில் ஒரு குழந்தை பேரு இருக்கும். இவருக்கு ஒரு சகோதரன் ஏற்படும். ஆன்மீக நாட்டம் உண்டு. பூஜை, பஜனை உண்டு. கலைத்துறை தியானம் இவற்றில் ஜாதகருக்கு அதிக ஆர்வம் இருக்கும். ஜாதகர் மாமன் வீட்டில் பிறந்திருப்பார். பள்ளியில் அருகில் கூட வீடு இருக்கும். ஜாதகருக்கு காதல் ஈடுபாடு இருக்கும். புத்திர பாக்கியம் உண்டு. அன்னதானம் செய்வார் ஷேர் மார்க்கெட் சீட்டு அறிவைக் கொண்டு உழைக்காத வருமானம் செய்வார். அறிவாளி ஜாதகருக்கு உள்ளுணர்வு அதிகமாக இருக்கும். இயற்கை வழிபாட்டில் அதிக ஈடுபாடு இருக்கும்.

11-ஆம் இடம் தொடர்பு சூரியன் தொடர்பு வந்தால் முதல் குழந்தை என்று எடுக்க வேண்டும். புண்ணிய தீர்த்தங்களில் ஜாதகர் நீராடுவார்.

அந்த குழந்தைக்கு காயத்திரி, அர்ச்சனா இந்த மாதிரியான பெயர்கள் அமையும். ஜாதகர் உல்லாசத்தை விரும்புவார். குலதெய்வ அருள் இருக்கும்.

ஆசிரியர் ஜோதிடம் தெரிந்தவர்கள் இவர்கள் வீட்டில் இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்வில் கட்டாயம் உயர்வு உண்டு.

ஐந்தாம் அதிபதி லக்னத்தில் இருக்கும் போது தந்தை குடும்பம் அல்லது தாத்தா வழி பெயர்கள் இவர்களுக்கு இருக்கும், அல்லது குலதெய்வ பெயர் வைத்திருப்பார்கள்.

குலதெய்வ பூர்வ புண்ணிய தாத்தா அருள் இருக்கும்.

புதன் அல்லது சுக்கிரன் சம்பந்தம் இருந்தால் கலை சார்ந்த குடும்பமாக இருக்கும்.

குரு தொடர்பு கொண்டால் வாத்தியார் வீடு வாத்தியார் குடும்பம். ஆச்சார அனுஷ்டானம் உள்ளவர்கள் குடும்பத்தில் இருப்பார்கள்.

ஐந்தில் சுக்கிரன் இருந்தால் தபலோ, டோலாக், ஆர்மோனிய இசைக்கருவிகள் இருக்கும்.

கல்வியுல் அதிக ஆர்வம் இருக்கும் ஆனால் திருப்தி இருக்காது.

அறிவாளி இவர்கள் குழந்தைத்தனம் ஒரு கோழை மாதிரி எடுப்பார்கள்.

ஐந்தாம் பாவக அதிபதி இரண்டில்:

பூர்வீகத்தில் வரவு இருக்கும். ஆசிரியர் ஜோதிடர்.ஜோதிடத்தால் வருமானம். குழந்தைகளால் வருமானம் உண்டு. இயற்கை மூலம் வருமானம் உண்டு. குல தெய்வ அருள் உண்டு. ஷேர் மார்க்கெட், புத்திசாதுரியத்தால் வருமானம். கலைதுறை மூலம் வருமானம். குலத்தொழில் மூலம் வருமானம். சிக்கனவாதி. படித்தவுடன் வேலை இருக்கும். தாய்மாமன் மூலம் வருமானம்.

பேச்சு தாத்தாவுடைய பேச்சு, மூதாதையர் பேச்சு, மனிதாபிமானம் உள்ள பேச்சு, கவர்ச்சியான பேச்சு, மற்றவர்களுக்கு உபதேசம் செய்வார். அதிகமாக ஆன்மீக சொற்பொழிவு செய்வார். நீதி போதனை செய்வார். ஹோம மந்திரம் மூலம் வருமானம் வரும். செய்தி வாசிக்கலாம் குழந்தை குடும்பத்தோடு இருக்கும். காதல் பேச்சு, காம பேச்சு, பேஸ்புக் மூலம் காதல் வரும். 3 4 காற்று ராசியில் இருக்க லக்னத்தை பார்த்தாலும் ஒரு நாளாவது இண்டர்வியூவில் பாஸ் ஆகி விடுவார். திருமண வாய்ப்பு பெரியம்மா மூலம் அமையும். பெரியம்மா வீட்டிற்கு போனால் குழந்தை பிறக்கும். பெரியம்மா வீட்டில் குழந்தை வளரும். வீட்டின் அருகில் டிவி கடை கோவில் இருக்கும். படிப்பில் ஆர்வம் இருக்கும். காதல் செய்தால் காதலியை வீட்டிற்கு அழைத்து வருவார்கள். இரண்டு மாதத்தில் கரு குழந்தை உருவாகும் அல்லது இரண்டு வருடத்தில் குழந்தை உண்டாகும். பேஸ்புக் மூலம் காதல் திருமணம் செய்வார்.

திதி சூன்யம் பாதகம் தொடர்பு இருந்தால் இவர்களுக்கு பேஸ்புக் ஆகாது. நாடக தொழில் செய்யலாம். இரண்டு வயதில் தாத்தாவுக்கு கண்டம் உண்டு

ஐந்தாம் அதிபதி மூன்றில்:

சகோதரனுக்கு குழந்தை உண்டு. இளைய சகோதரர் நிர்வாகம் செய்வார். குலதெய்வம் இடம் மாறி இருக்கும் பிடி மண் எடுத்து வைத்து வழிபாடு செய்வார்கள். மூன்றுக்கு மேற்பட்ட தெய்வம் அதற்கு மேற்பட்ட தெய்வங்கள் கோவிலில் இருக்கும். கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் மேற்கல்வி படிப்பார். ஹாஸ்டலில் தங்கி படிப்பார் அல்லது பயணம் செய்து படிப்பார். கல்லூரியில் நினைவுச் சின்னமாக சிலை இருக்கும். தாய் மாமன் இடம் மாறி இருப்பார் இருந்தால் முன்னேற்றம் உண்டு. காதல் பதிவு திருமணம் செய்வார். இரண்டு வயதில் உறவில் ஒரு குழந்தை பிறந்திருக்கும். பெரியம்மாவுக்கு ஒரு வருடத்தில் குழந்தை பிறந்திருக்கும். மூன்று வயதில் பூர்வீகத்தை விட்டு வெளியேறுவார்கள். தாய் மாமன் வீட்டில் படிப்பார் அங்கு படிப்பது ஜாதகருக்கு பிடிக்கும். சகோதரர் காதல் திருமணம் செய்வார். தரகர் வேலை செய்வார். ஐந்து மூன்று தொடர்பு இருந்தால் குடும்பத்தில் அரசு பணி இருக்கும். ஜாதகருக்கு திருமணம் தாமதமாகும், புத்திர தாமதம் அல்லது ஒரே குழந்தை. குழந்தை இடம் மாறி படிக்கும் இருக்கும். இதில் திதி சூனியம் பாதகம் ஆனால் செவ்வாய் திதி சூனியத்தில் இருந்தால் ரத்த பரிசோதனை உள்ளூரில் செய்யமாட்டார். தந்தை சொத்து சகோதரன் அனுபவிப்பார். கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுப்பார். தாய்மாமனுக்கு கட்டுமஸ்தான உடம்பு. போலீஸ் ராணுவம் இவர்களுக்கு ஈடுபாடு இருக்கும். போலீஸ், நிர்வாகம் படிப்பது இவர்களுக்கு பிடிக்கும். மூன்றாம் இடத்தில் கேது சம்பந்தம் இசை ஆர்வம் இருக்கும். மியூசிக் டைரக்டர் மூன்று விரல் கேது இசைக்கக் கூடிய கருவி ஐந்து மூன்று தொடர்பு. கம்யூனிகேஷன், ஆன்லைனில் புக் செய்வது, புத்தகம் வாங்குவது, மெசேஜ் அனுப்பி காதல் செய்வது, கதாசிரியர்கள், கவிஞர். மாமன் வகையில் தாத்தா இருப்பார், காமராஜர், காமு என்ற பெயர் இவர்களுக்கு இருக்கும். குலதெய்வம் பெயரில் வீரம் இருக்கும். மூன்று ஐந்து தொடர்பு காமாட்சியம்மன் என்றும் கோவில் இருக்கும். டெண்டர் எடுக்கலாம். பிரசாத ஸ்டால். சைக்கிள் கடை வைக்கலாம். இவர்கள் பர்ஸில் குலதெய்வ படம் இருக்கும். செவ்வாய் சுயசாரத்தில் இருந்து அல்லது கேது சாரத்தில் இருந்து திசை நடத்தினால் பல்லுடன் குழந்தை பிறக்கும். இவர்களுக்கு மாந்தி, சனி இணைவு தாத்தா வகையில் ஒரு கல்லறை இருக்கும் Ent பிரச்சனை இருக்கும். காற்று ராசியில் இருந்தால் காது பிரச்சனை இருக்கும். படிக்கும்போது கேம்பஸ் இண்டர்வியூ வரும். வெளிநாடு சிங்கப்பூர், மலேசியா, தைவான், மாலத்தீவு, சைனா இங்கு எல்லாம் போய் படிக்கலாம். விளையாட்டில் ஆர்வம் இருக்கும். டென்னிஸ், மல்யுத்தம் பிடிக்கும். இவர்கள் ஐடியா போன் யூஸ் பண்ணுவார்கள். மூன்று வயதில் குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கும். 3 வயதில் பூர்வீகத்தை விட்டு இடம் மாறுவார்.

ஐந்தாம் அதிபதி நான்கில்:

குழந்தைக்கு சொத்து உண்டு. தாய்மாமனுக்கு சொத்து உண்டு. தாய்மாமன் உள்ளூரில் பக்கத்தில் இருப்பார். தாய் மாமன் ஒரு பதவியில் இருப்பார். குரு, சனி, செவ்வாய் பார்வை இதை உறுதி செய்யும். குழந்தையின் தாய்க்கு ஒரு பதவி உண்டு. நான்கு வயதில் குடும்பத்தில் ஒரு குழந்தை உண்டு அல்லது உறவில் பிறக்கும். தாய்மாமனுக்கு குடிப்பழக்கம் இருக்கும். சந்திரன் ராகு இதை பார்த்தால் உறுதி. ஜூஸ் கடை டிரைனேஜ் சம்பந்தப்பட்ட வேலை உண்டு. கால்நடை வளர்ப்பார்கள். சனி, மாந்தி இணைவு தாத்தா வகையில் கல்லறை உண்டு. பத்து பன்னிரெண்டு 2 தொடர்பு, சனி ,மாந்தி தொடர்பு இறந்த தவ குழந்தை வீட்டில் பின்னாடி புதைத்து இருப்பார்கள். தாய்மாமனுக்கு புத்திர தோஷம் உண்டு. குழந்தைக்கு தண்ணீரில் கண்டம். சனி சம்பந்தம் குழந்தை சாக்கடையில் விழும். குழந்தை மழை பெய்யும்போது மழைக்காலத்தில் கரு உருவாகி இருக்கும் அல்லது பிறக்கும். குடும்பத்தில் குழந்தை விருத்தி. குடும்ப ஒற்றுமைக்காக கோழி வளர்ப்பார்கள். நான்கு குளம், 5, 9 கோவில் தெப்பக்குளம், இதில் நீராடி சாமி கும்பிட்டு விட்டு வந்தார்கள் என்றால் குடும்பம் விருத்தி அடையும். குலதெய்வ கோவிலில் மரங்கள் தோப்பு இருக்கும். உள்ளூரில் படிப்பார், படித்த ஊரில் காலேஜ் இருக்கும். குலதெய்வ கோவில் ஆறு ஏரி கண்மாய் அருகில் இருக்கும். சமுதாய பள்ளியில் படித்தேன் பள்ளி நடத்த இயலாமல் விடுமுறை உண்டு. தாயார் வழியில் ஆசிரியர் உண்டு. 50 வயதுக்கு மேல் படிக்கத் தூண்டும். ஜோதிடம் சாஸ்திரம் இதில் ஈடுபாடு இருக்கும். வீட்டில் இருந்து ஜோதிடம் பார்ப்பார்கள். ஜீவ சமாதி வழிபாடு வெற்றியைத் தரும். தாயார் ஆன்மீகவாதி. ராகு சம்பந்தம் ஏற்பட்டால் தாயார் சாமி ஆடுவார். தாயாருக்கு மனிதநேயம் இருக்கும். தாயார் வழியில் புத்திர தோஷம் இருக்கும். சமுதாயத்தில் பொறுப்பு தலைமை தாங்குவார்கள். இவர்கள் வீதி தேரடி வீதி, தலைவர் பெயரில் வீதி, ரத வீதி, பள்ளி பெயரில் உள்ள வீதி இருக்கும். இவர்கள் தேர் இழுப்பது நல்லது, தேரோட்டம் பார்க்கலாம். தேர் விழா பார்த்துவிட்டு பழம் சாப்பிட்டால் பெண்ணுக்கு கரு உருவாகும். தாத்தா வழியில் ஆடு மாடு வளர்த்த குடும்பம். ஜாதகருக்கு அறிவாற்றல் அதிகமாக இருக்கும். ஒரு திரிகோண அதிபதி கேந்திரத்தில் இருந்தால் 40 வயதிற்கு மேல் அபார வளர்ச்சி இருக்கும். திரிகோண அதிபதி கேந்திரம் ஏறினால் ஜீவ ஸ்தானம் உயர்வடையும்.

ஐந்தாம் அதிபதி ஐந்தில்:

ஆன்மிக நாட்டம் இருக்கும். பெரிய குடும்பத்து நபராக இருப்பார். மனிதநேயம் உண்டு. அறிவாளி, புத்திரபாக்கியம் இருக்கும். குழந்தைகள் மீது அதிகப் பற்று இருக்கும். தாய்மாமனுக்கு வளர்ச்சி உண்டு. குழந்தையின் ஐந்தாவது வயதில் தாய்மாமனுக்கு வளர்ச்சி உண்டு. குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். குழந்தைக்கு கலைத்துறையில் நாட்டம் இருக்கும். வெற்றியும் இருக்கும். மந்திர, தந்திரத்தில் ஈடுபாடு இருக்கும். கேது சேர்ந்தாலும் பார்த்தாலும் திதி சூன்யம் பாதகர் தொடர்பு உள்ளதா என்று பார்த்து மாந்தி தொடர்பு உள்ளதா என்று பார்த்து பின்பு பில்லி சூனியம் ஆவிகளுடன் பேசுதல் என்று தெரிந்து கொள்ளலாம். திடீர் அதிர்ஷ்டம் உண்டு. நிர்வாகத்திறமை இருக்கும்

ஐந்தாம் அதிபதி 6ல்:

கலைத்துறையில் நாட்டம் இருக்கும்.படிக்கும்போதே உத்தியோகம் கிடைக்கும். மறதி அதிகமாக இருக்கும். பூர்வீக சொத்தில் வழக்கு இருக்கும். ஜாதகர் அல்லது தாய் மாமன் போலீஸ் ராணுவத்தில் வேலை செய்வார்கள். படித்துக் கொண்டே வேலை செய்வார். குழந்தை தாமதம். செவ்வாய், சனி போலீஸ், ராணுவம். குழந்தைகளுக்காக மருத்துவ செலவு செய்வார். குழந்தைகளுக்கு 6 வயது வரை மருத்துவ செலவு இருக்கும். குழந்தையால் கடன் இருக்கும். ட்ரீட்மென்ட் பன்னி எடுத்த பிறந்த குழந்தையாக இருக்கும். குழந்தை கோபம் உடைய குழந்தை. காதல் கலகம் உண்டு. பூர்வீக சொத்தில் வழக்கு இருக்கும். பூர்வீக வழிபாட்டில் ஒரு தடை இருக்கும்.

ஐந்தில் 6 8 12ம் அதிபதிகள் சேர்ந்திருந்தாலும், பார்த்தாலும் இவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றதால்தான் கஷ்டம் என்று சொல்வார்கள், ஜாதகருடைய எண்ணம் மனது குலதெய்வ கோவிலுக்கு போனதால்தான் கஷ்டம் வந்தது என்று சொல்வார்கள், பிரச்சனையும் வந்தது என்று சொல்வார்கள். தாய்மாமனுக்கு கடன் உண்டு. மேற்கல்வி தடை இருக்கும், ஒரு டிகிரி படித்து முடித்து ஒரு வருடம் பிரேக் ஆனபின்பு படிப்பார்கள். வயிற்றில் வியாதி இருக்கும். கல்விக் கடன் வாங்குவார்கள். தாய்மாமனுக்கு வழக்கிலிருக்கும். தாய்மாமனுக்கு வேலை தேடி வரும். உணவு தேடிவந்து விரும்பி சாப்பிடுபவர்கள். இவர்களுக்கு இரணியா வருவதற்கு வாய்ப்புள்ளது. மன நிம்மதி குறைவு அல்லது மரபுவழி வியாதி வரும் ஐந்து ஆறு ஒன்பது ஆறு சம்பந்தம் அடிக்கடி சிறு விபத்து வரும். ஐந்து ஆறு 5, 8 5. 12 சம்மந்தம் தலையில் அடிபட்டால் புத்தி பேதலிக்கும்.

ஹோமம் பூஜை இதில் இவர்களுக்கு ஈடுபாடு இருக்கிறது. குழந்தை வெளிநாடு செல்லும். குழந்தை பிறந்தவுடன் ஜாதகருக்கு வேலை உறுதி. மாமாவிற்கு வாய்வுத்தொல்லை அதிகமாக இருக்கும்.

டிப்ஸ்

ஐந்தில் கிரகங்கள் இருப்பது வாடகை வருமானம் உண்டு. நாலுக்கு இரண்டு முதல் குழந்தை படித்து முடித்தவுடன் உத்தியோகம் உண்டு. ஐந்தாம் அதிபதி ஆறாம் அதிபதி இணைந்து ஆறில் இருந்தால் ஜாதகனுக்கு சிரமம். அதே நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைக்கும் சிரமம். குரு பலம் இழந்து, ஒன்பதாம் இடம் கெட்டால், ஜாதகருக்கு மத மாற்றம் உண்டு, மதம் மாறியவர்.

ஐந்தாம் அதிபதி ஏழில்:

குழந்தை பிறந்தவுடன் உறவில் ஒரு திருமணம் இருக்கும் அல்லது மனைவி சார்ந்து ஒரு திருமணம் இருக்கும்.

திருமண நிகழ்ச்சியின்போது கருத்தரித்த குழந்தை யாக இருக்கும். கல்யாண வீட்டில் காதல் வரும். மேற்படிப்புக்கு வெளிநாடு போவார்கள். படிக்கும்போது காதல் வரும் 4 7, 5 7 சம்பந்தம் உள்ளவர்களுக்கு படிக்கும்போதே திருமண சம்பந்தம் உருவாகும். மாமன் வீட்டில் தங்கி படிப்பார் 7 வயதில் மாமா வெளியூர் செல்வார். மனைவி வழியில் ஆசிரியர் இருப்பார். கேது சாரம் கேது பார்வை இருந்தாள் தாய் மாமன் சன்யாசி. திருமணத்திற்கு பின்பும் படிப்பார்கள். குழந்தை பிரிந்து வாழும் குலதெய்வத்தை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும். குலதெய்வம் இருக்கும் திசை இருக்கும் ஊருக்கு அருகில் மனைவி இருப்பார். மாமன் வீட்டில் மனைவி அமையும். மாமனுக்கு காதல் திருமணம்

நன்றி 

வாழ்க வளமுடன்

தமிழரசன் க

தக்‌ஷா ஜோதிட நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்

https://www.dakshaastrology.com

whatsapp: +919787969698 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...