வெள்ளி, 15 டிசம்பர், 2023

நீசபங்கம் vs நீசபங்க ராஜயோகம்

 ஒரு கிரகம் எப்போது நீச்ச பங்கமடையும்

1. நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம் பெறுதல். (நீச்ச பங்க ராஜ யோகம்)

2. நீச்ச கிரகத்துடன் அந்த வீட்டில் ஒரு கிரகம் உச்சம் பெறுதல் ((நீச்ச பங்க ராஜ யோகம்)

3. நீச்ச கிரகத்துடன் ஒரு நட்பு கிரகம் சேருதல்.

4. ஒரு நீச்ச கிரகத்தை இன்னொரு நீச்ச கிரகம் பார்த்தால் நீச்ச பங்கம். (நீச்ச பங்க ராஜ யோகம்)

5. நீச்ச கிரகம் பரிவர்த்தனை பெறுதல்.

6. நீச்ச கிரகம் வர்கோதமம் பெறுதல். (நீச்ச பங்க ராஜ யோகம்)

7. நீச்ச கிரகம் வக்கிரம் பெறுதல். (நீச்ச பங்க ராஜ யோகம்)

8. சந்திர கேந்திரத்தில் நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் இருத்தல்.

9. லக்ன கேந்திரத்தில் நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் இருத்தல்.

10. நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் சுய நட்சத்திர சாரம் பெறுதல்

நீச்ச பங்கமடையும் கிரகம், தன் திசையில் முதலில் குறைவான பலன்களை கொடுத்து பின் நற்பலன்களை கொடுக்கும். இதில் நீச்ச பங்க ராஜயோகம் அடையும் கிரகம், மிக பெரிய ராஜயோகத்தை கொடுக்கும்.

 

ஒருவரின் ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும், லக்னமும் லக்னாதிபதியும் வலுவாக இருந்தால்தான், அவர் பிறந்த இலக்கை அடைய முடியும் என்பதை அடிக்கடி எழுதுகிறேன்.

ஜாதகத்தில் எல்லா வகை நிலையிலும் முதலில் பார்க்க வேண்டியது லக்னாதிபதியின் வலுவை மட்டும்தான். மற்றவை எல்லாம் இரண்டாம், மூன்றாம் பட்சம்தான். லக்னம் வலுவில்லை என்றால் அது உச்சத்தை எட்ட முடியாத ஒரு ஜாதகம்.

ஜோதிடம் என்பது மிக நுண்ணிய சமன்பாடுகளைக் கொண்ட ஒரு மகா சமுத்திரம். இதில் எல்லோராலும் மூழ்கி முத்தெடுக்க முடியாது. ஒரு விதிக்கு ஏராளமான விதிவிலக்குகள் இந்த மாபெரும் கலையில் உண்டு. எனவே மேலோட்டமாக லக்னாதிபதி வலுவின்றி தெரிந்தாலும், அவரது வலுவாக இருக்கிறாரா இல்லையா என்பதை மிக நுண்ணிய வழிகளில் மட்டுமே கணிக்க முடியும்.

உதாரண ஜாதகத்தில் லக்னாதிபதி நீசமாகி வலுவின்றி இருப்பதாகத் தெரிந்தாலும், சந்திரனுக்கு கேந்திரத்தில் அவர் இருப்பதாலும், லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த குருவோடு பரிவர்த்தனையாக இருப்பதாலும், அம்சத்தில் தனக்கு மிகவும் பிடித்த சூரியனின் நட்பு வீடான சிம்மத்தில் இருப்பதாலும், குருவின் பார்வையில் இருப்பதாலும், எல்லாவற்றையும் விட உச்ச சுக்கிரனின் இணைவோடு இருப்பதாலும் இங்கே நீசபங்க ராஜயோக அமைப்பில் இருக்கிறார்.

நீசபங்கம் என்பது வேறு, நீசபங்க ராஜயோகம் என்பது வேறு இந்த இரண்டு வேறு நிலைகளையும் ஒரு மெல்லிய கோடு மட்டுமே பிரிக்கிறது. வேத ஜோதிடத்தின் மிக முக்கிய நுணுக்கங்களில் இதுவும் ஒன்று.

ஒரு கிரகம் நீசபங்கம் அடைவதற்கு பலவிதமான நிலைகள் இருக்கன்றன. நீசத்தில் இருக்கும் கிரகம் ஒருவிதமான ஒளி இழந்த நிலையை அடைகிறது. இழந்த ஒளியை அது வேறுவிதமான அமைப்பில் திரும்பப் பெறும்போது மீண்டும் தன் சுய வலுவை அடைகிறது என்பதே நீசபங்க தத்துவம்.

இதில் இழந்த ஒளியை விட அதிகமான சுப ஒளி அமைப்பை அந்தக் கிரகம் பெறும்போது, அது ராஜ யோகத்தை தரக் கூடிய அளவிற்கு அதி உச்ச நிலையை அடைகிறது என்பதே நீசபங்க ராஜ யோகத் தத்துவம்.

ஒரு கிரகம் நீச பங்கத்தை அடைவதற்கு ஏறத்தாழ பதினைந்துக்கும் மேற்பட்ட விதிகள் இருக்கின்றன. ஆனால் நீசபங்க ராஜயோகம் எனும் மிக உயரிய நிலையை அந்த கிரகம் அடைய வேண்டுமெனில் ஒரு உச்சனின் இணைவையோ, உச்சனுக்கு நிகரான ஒளி அளவைக் கொண்ட வலுப் பெற்ற குருவின் பார்வை அல்லது தொடர்புகளையோ, பவுர்ணமிக்கு அருகில் இருக்கும் ஒளி மிகுந்த சந்திரனின் 6,7,8 மிடத் தொடர்புகளையோ கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பாக பவுர்ணமிச் சந்திரனின் நேர் எதிரில் இருக்கும் ஒரு நீச கிரகத்தை நீசன் என்ற நிலையில் பார்க்கவே கூடாது. அது நீசன் என்ற நிலையில் இருந்து மாறி சந்திரனின் ஒளியைப் பெற்று உச்ச நிலையில் இருக்கும்.

ஜோதிடத்தில் பலன்களை மாற்ற வைக்கும் சமன்பாடுகள், இதுபோன்ற நுண்ணிய நிலைகளில் தான் ஒளிந்து கிடக்கின்றன. ஒரு கிரகத்தின் சுபத்துவ, சூட்சும நிலைகளைப் புரிந்து கொள்வதே வேத ஜோதிடத்தின் மிக உயர்நிலைப் புரிதலாக இருக்கும். இதைத் தெரிந்து கொள்ளாமல் ஜோதிடத்தின் இறுதி நிலையான ஒரு மனிதனின் எதிர்காலத்தை உணரவே முடியாது.

ஒரு உதாரணமாக நீசம் என்பது பாத்திரம் ஓட்டையாக இருப்பதற்கு அர்த்தம் நீச பங்க ராஜ யோகம் எனில் அந்த ஓட்டை பாத்திரத்தில் பொருட்கள் விழுந்து கொண்டே இருக்கும் அதுவே நீச பங்க ராஜ யோகம்.நீச்ச பங்கம் என்பது நீச்சமாகவே இருக்கும் 

நீச்சபங்க ராஜயோகம் என்பது அந்த காரகத்தை வலு விளக்கச் செய்து மீண்டும் வெற்றி நடை போட்டு முன்னேறும்

நீசபங்கம் என்பது சாதாரண ஒரு நிலை, நீசபங்க ராஜயோகம் என்பது உச்சத்தை விட மேலான ஒரு அமைப்பு.

கிரகங்கள் உச்சம், நீசம் பெறும் அளவுகளாகள்

1.   சூரியன் மேஷத்தில் 30 உச்சமும், துலாத்தில் 30 நீசமும் பெற்றிருக்கிறது

2.   சந்திரன் ரிஷபத்தில் 3 உச்சமும், விருச்சகத்தில் 3 நீசமும் பெற்றிருக்கிறது

3.   செவ்வாய் மகரத்தில் 28 உச்சமும் கடகத்தில் 28 நீசமும் பெற்றிருக்கிறது

4.   புதன் கன்னியில் 15 உச்சமும், மீனத்தில் 15 நீசமும் பெற்றிருக்கிறது

5.   குரு கடகத்தில் 5 உச்சமும், மகரத்தில் 5 நீசமும் பெற்றிருக்கிறது

6.   சுக்கிரன் மீனத்தில் 27 உச்சமும், கன்னியில் 27 நீசமும் பெற்றிருக்கிறது

7.   சனி துலாத்தில் 20 உச்சமும், மேஷத்தில் 20 நீசமும் பெற்றிருக்கிறது

கிரக நீசங்கள் : கிரகங்கள் நீசம் பெற்றால் நீசபலன்கள் இது பொதுவான பலன்களே!!

சூரியன் நீசம்

சூரியன் நீசம் பெற்றிருந்தால் உஷ்ண சம்பந்த வியாதியால் வருந்த நேரும். தந்தையின் ஆரோக்கியம் மற்றும் உறவு முறை சரிப்படாது. அறிவு ஆராய்ச்சி உள்ளவராக இருப்பர். தீயகுணம் நடத்தையுள்ளவராகவும் இருப்பர்.

சந்திரன் நீசம்

சந்திரன் நீசம் பெற்றிருந்தால் பெற்றோர் சுகம் இழந்தவராக இருப்பர். பயந்த சுபாவமுள்ளவர். ஆரோக்கியமும் குறைந்திருக்கும் சுய நலவாதியாக இருப்பர், சீதள சம்பந்தமான வியாதிகள் ஏற்படும். நீரில் கண்டமும் இருக்கும். பெண்களால் பல வகையிலும் தொல்லை அனுபவிப்பவராக இருப்பர்.

செவ்வாய் நீசம்

செவ்வாய் நீசம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவது கடினம். குடும்பத்தில் கலகம், பல வித பிரச்சினைகள் நிறைந்திருக்கும். மூளை பாதிப்பும் அது சம்பந்தமான நோய்க்கும் ஆளாக நேரும். வீடு, நிலம் போன்றவை இருந்தாலும் அதனால் தொல்லைகளே இருக்கும். நன்மை இருக்காது. வசதி குறைந்திருக்கும்.

புதன் நீசம்

புதன் நீசம் பெற்றிருந்தால் கல்வியில் தடை இருக்கும். வாழ்க்கையில் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களுக்கு விரோதியாக இருப்பர். காம இச்சை மிகுந்தவராக இருப்பர். புத்திரர்களால் எந்த நன்மையும் பெற முடியாது. பழி பாவத்திற்கு ஆளாக நேரும்.

குரு நீசம்

குரு நீசம் பெற்றிருந்தால் தீயவராக பழி பாவத்திற்கு அஞ்சாதவராக இருப்பர். கல்வி கற்றாலும் அதனால் பயன் பெறாதவராவர். ஆசாரம் இல்லாதவர். கரு உற்பத்தியில் சிதைவு காட்டும். புத்திரர்கள் இருப்பின் அவர்களால் தொல்லை மிகுந்திருக்கும்.

சுக்கிரன் நீசம்

சுக்கிரன் நீசம் பெற்றிருந்தால் களத்திர சுகங்கள் குறைவு, பெண்கள் வகை ஆதாய அனுகூலங்கள் குறைவு, சுகத்தானம் பலம் இழத்தல், ஆடை, ஆபரண வசதிகள், வண்டி வாகன வசதிகள் குறைவு, பால் பசு, தாயினால் கிடைக்கக் கூடிய சுகங்கள் இன்மை, செல்வவளம் குறைதல், கால்நடைகள் நன்மை தராது இருத்தல் ஆகியன ஏற்படும்.

சனி நீசம்

சனி நீசம் பெற்றிருந்தால் தீயகுணம் முரட்டுத்தனம் மிக்கவராக இருப்பர். பிறர் வெறுக்கும் காரியங்களைச் செய்வர். ஆரோக்கியம் குன்றி இருக்கும். கீழான பெண்களுடன் அல்லது ஊனமுற்ற பெண்களிடம் தொடர்பு கொண்டு இருப்பார். சோம்பல் மிகுந்து இருக்கும். வறுமை இருக்கும். மனைவிக்கு தோஷம் உண்டு அல்லது மனைவியை விட்டுப் பிரிந்தவராக இருப்பர்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...