பன்னிரன்டாம் வீடு
விரையம். வைத்தியசாலை. நஷ்டம். மனைவியின் நோய். ஜெயில். தலைமறைவு வாழ்க்கை. மறுபிறவி தாக்கம். நிம்மதி. அடக்குமுறை. போதைப் பொருட்கள். தூக்கம். தாழ்வு மனப்பான்மை. உறுப்பு இழத்தல். கொலை வெறி. போன ஜென்மம். ரகசிய நோய்கள். தஞ்சம் புகுதல். மனநோய். பழிவாங்குதல்,ஏமாற்றங்கள், துரோகங்கள், நஷ்டங்கள், கவலைகள், வெளியில் சொல்ல முடியாத பய உணர்வுகள், விரையங்கள், செலவுகள், தண்டனைகள். படுக்கை சுகங்கள்,தூக்கம், தீய பழக்கங்கள், ரகசிய எதிரிகள், பிறந்த இடத்தில் இருந்து தொலைதூரத்தில், வேறு இடங்களில் வசிப்பது , இடது கண், கால்கள், பாதங்கள், அடுத்த பிறவி போன்ற பல விஷயங்களைச் சுட்டிக் காட்டுவது பன்னிரெண்டாம் வீடு
பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:
12ஆம் வீடு: பாதம், ஆண்களுக்கு இடது கண், பெண்களூக்கு வலது கண்
பன்னிரெண்டில் வந்தமரும் கிரகங்களுக்கான பலன்கள்
சூரியன்.
இளமையில் அல்லது முதுமமயில் ஏழ்மை நிலவும். ஜாதகன் பாவங்களைச் செய்யக்கூடியவன், திருட்டு எண்ணம் மிக்கவன்.. தோல்விகளை அதிகமாகச் சந்திப்பவன், ஒதுக்கப்பெற்றவன். தன் குழந்தைகளால் மகிழ்ச்சி இல்லாதவன். ஜாதகன் ஒழுக்கமற்ற, கெட்ட, பாவகரமான வாழ்க்கை வாழ நேரிடும். இழிவான செயல்கள் அல்லது வேலைகளில் ஈடுபவான். அவனுடைய வாழ்க்கை மொத்தத்தில் வெற்றிகரமாக இருக்காது. மற்றவர்களால் தான் ஒதுக்கப்பட்டுள்ளதாக உணர்ந்து நடப்பான். உடல் உறுப்புக்களில் ஒன்று ஊனமாக அல்லது சேதமாக இருக்கும் அது தெரியும்படியும் இருக்கும் அல்லது தெரியாதவிதமாக உடல் உள்ளேயும் இருக்கலாம்.. கண்பார்வைக் குறைபாடுகள் உண்டாகும் ஆனாலும் ஜாதகன் சுறுசுறுப்பானவனாக இருப்பான்
சந்திரன்
துயரங்களை அதிகமாகச் சந்திப்பவன். சிலர் கொடுர சிந்தைகளை உடையவர்களாக இருப்பார்கள். மகிழ்ச்சியில்லாதவன். அதிகாரமில்லாதவன், தடைகளை அதிகமாகப் பெறுபவன். விகாரமான தோற்றம், கோரம், அல்லது அதைப்போன்ற ஏதோ ஒரு குறைபாட்டினால் மனக்கஷ்டங்களை அனுபவிப்பவனாக இருப்பான். குறுகிய மனப்பான்மை உடையவனாக இருப்பான். கடின மனம் கொண்டவனாக இருப்பான். குறும்புத்தனம், நக்கல் மிகுந்தவனாக இருப்பான். மொத்தத்தில் மற்றவர்களுக்குப் புரியாத, மற்றவர்களால் தெரிந்து கொள்ள முடியாத வாழ்க்கை வாழ்வான். இங்கே சந்திரன் பலமின்றி இருந்து, சனியின் பார்வை பெற்றாலும் அல்லது சேர்க்கை பெற்றாலும் ஜாதகன் சோம்பேறித்தனமான அல்லது மந்தமான வாழ்க்கை வாழ நேரிடும்.
செவ்வாய்
வெற்றிகளை அடையாதவன். சிறு வயதில் அல்லது வயதான காலத்தில் ஏழ்மை தாண்டவமாடும். சுறுசுறுப்பானவன். காரியசித்தியற்றவன். நேர்மை தவறக்கூடியவன். பிரபலம் ஆகமுடியாதவன். ஜாதகன் சுயநலமிக்கவனாக இருப்பான், சிலர் மனைவியைப் பறிகொடுக்க நேரிடும். அதீத உடல் உஷ்ணத்தினால் உடல் உபாதைகள் ஏற்படும். அடிக்கடி வஞ்சிக்கப்படுபவனாக இருப்பான். அதன் காரணமாக அவன் தன்னுடைய செல்வம் அல்லது கைப்பணம் அல்லது பொருளை முழுமமயாக இழக்க நேரிடும். செவ்வாய் 12ல், சந்திரன் 1ல், சனி 2ல், சூரியன் 7ஆம் இடத்தில் அமையப்பெற்ற ஜாதகனுக்கு மேகநோய் (உடலின் நிறம் அங்கங்கே மாறித் தோற்றமளிக்கும் நோய் - உண்டாகும் இங்கே இருக்கும் செவ்வாய், சூரியனின் பார்வை பெற்றால், ஜாதகன் தீ விபத்துக்களில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உண்டு. அல்லது தீய சக்திகளிடம் சிக்கிக் கொள்ளும் அபாயம் உண்டு. 12ல் செவ்வாய் இருக்க, 7 & 8 ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருந்தால், ஜாதகனுக்கு இரண்டு தாரங்கள் உண்டு அதுவும் முதல் மனைவி இருக்கும்போதே, மற்றொரு பெண்ணையும் மணப்பான்.
புதன்
ஜாதகன் சலன புத்தியுள்ளவன். அடங்காதாவன், ஸ்திரபுத்தி இல்லாதவன் நிலையற்ற தன்மையுடையவன். பிறர்சொல் கேளாதவன் முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருப்பான். பெண்களின் மேல் தீராத மோகமுடையவனாக இருப்பான். அதன் காரணமாக தரம், வயதுவித்தியாசமின்றி பல பெண்களிடம் தொடர்பு அல்லது ஈடுபாடு கொள்வான். அவர்களுடன் சுற்றித்திரிவான். சிலர் பொருள் விரையமாகி வறுமையில் சிக்க நேரிடும். நெறிதவறிய சிந்தனைகளள உடையவனாக இருப்பான். அதனால் மனதில் மிகிழ்ச்சி இல்லாதவனாக இருப்பான்.
குரு
இறை நம்பிக்கை குறைந்தவனாக இருப்பான். இறைவனையும், மத நம்பிக்கையாளர்கலையும் பார்த்து எள்ளி நகையாடுபவனாக இருப்பான். மற்றவர்களை ஏளனம் செய்பவனாக இருப்பான். மற்றவர்கள் பயப்படக்கூடிய அல்லது யோசிக்கக்கூடிய செயல்களைச் செய்பவனாக இருப்பான் சிலர் முறையற்ற சிந்தனை மற்றும் செயல்பாடுகள் உடைய வாழ்க்கை வாழ்வார்கள். சிலர் ஆடி அடங்கும் வயதில் தங்களுடைய தவறுகளை உணர்ந்து திருந்தி நல்ல வாழ்க்கை வாழ்வார்கள். சிலர் கடைசிவரை திருந்தாமல் மண்ணோடு மண்ணாகிப்போவார்கள். சிலர் வாகனங்களின் மீது ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். பெண்களாக இருந்தால், நகைகள், உடைகள் மீது அதீதப் பிரியம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
சுக்கிரன்
உறவினர்களைக் கை கழுவும் சூழ்நிலைகள் உண்டாகும், சிலருக்கு உறவுகளை விட்டு ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்படும். வசதிகளைத் தேடி ஏங்கும் மனப்பான்மை உண்டாகும். அந்தத் தேடிலிலேயே சிலருக்கு வாழ்க்கை முடிந்துவிடும். வெற்றிகள் எளிதில் கிடைக்காது. சிலர் வறுமையின் காரணமாக அல்லது அதீத பணச்செலவின் காரணமாக துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் சிலர் தரமற்ற அல்லது குணமற்ற பெண்களின் பிடியில் சிக்க நேரிடும் பெண்களாக இருந்தால், அன்பு, அக்கறையற்ற கணவன் அல்லது ஒருவனின் பிடியில் சிக்க நேரிடும். சிலருக்கு கண்பார்வை மங்கும் அபாயம் உண்டு. இந்த இடத்துச் சுக்கிரன் உச்சமாக இருந்தால் (அதாவது மேஷம் லக்கினமாக இருந்து சுக்கிரன் இங்கே மீனத்தில் இருந்தால்) மேலே சொல்லிய எந்த பாதிப்புமின்றி, ஜாதகன் பல நன்மைகளுடன் வாழ்வான்.
சனி
வாழ்க்கை மங்கி இருக்கும். பிரகாசமாக இருக்காது. பணம் மொத்தத்தையும் ஏதாவது ஒரு வழியில் இழப்பான். அனேக எதிரிகள் இருப்பார்கள் அல்லது உண்டாவார்கள் அல்லது ஏற்படுத்திக்கொள்வான் வியாபாரம் செய்பவனாக இருந்தால் அதன் மூலம் பொருளை இழப்பான். மறைமுகமாக பல பாவங்களைச் செய்பவனாக இருப்பான் அவநம்பிக்கை உடையவராக இருப்பான். ஒருவனையும் நம்பமாட்டான். சிலர் அங்ககீனம் அல்லது உடற் குறைபாடு உடையவராக இருப்பார்கள்
ராகு
ஜாதகன் வாழ்க்கையில் வளம் காண்பவனாக இருப்பான். ஒழுக்கமற்றவனாக இருப்பான். ஆனாலும் பலருக்கும் உதவும் மனப்பன்மை கொண்டவனாக இருப்பான். கண் பார்வைக் குறைபாடுகள் இருக்கும் ராகு 12ல், 7ல் சூரியன், செவ்வாய் 10ல் இருக்கும் அமைப்புடன் பிறந்த ஜாதகன் தன்னுடைய இளம் வயதிலேயே தந்தையைப் பறிகொடுக்க நேரிடும்
கேது
ஜாதகன் அலைபாயும் மனதை உடையவன். மன அமைதியின்றி இருப்பவன் சிலர் பிறந்த நாட்டில் இருந்து தூர தேசங்களில் வசிக்க நேரிடும். அடித்தட்டு மக்களோடு சினேகமாக இருப்பவன். பரம்பரைச் சொத்துக்களை இழக்க நேரிடும் அல்லது அவைகள் கிடைக்காமல் போய்விடும்
12ஆம் வீட்டு அதிபதி லக்கினத்தில்
ஜாதகன் மெலிந்த தேகத்துடன் இருப்பான். மனதில் துணிவின்றி இருப்பான். ஆனாலும் அழகான தோற்றமுடையவனாக இருப்பான். 12ஆம் அதிபதியுடன் ஆறாம் வீட்டு அதிபதியும் சேர்ந்து லக்கினத்தில் இருந்தால் ஜாதகன் நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான். (உதாரணத்திற்கு சிம்ம லக்கின ஜாதகத்திற்குப் பன்னிரெண்டாம் அதிபதி சந்திரன். ஆறாம் வீட்டு அதிபதி சனி. சந்திரனும் சனியும் கூட்டாக சிம்ம லக்கினத்திலேயே வந்து அமர்ந்திருந்தால் என்பது போல இதற்குப் பொருள் கொள்ளவும்) இதே அமைப்பில் எட்டாம் வீடு பாதிப்படைந்திருந்தால், ஜாதகன் அல்ப ஆயுளில் போய்விடுவான். பன்னிரெண்டாம் அதிபதியும், லக்கினாதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால் ஜாதகன் புத்திசாலித்தனமில்லாதவனாக இருப்பான். கருமியாக இருப்பான். பலராலும் வெறுக்கப் படுபவனாக இருப்பான்,
12ஆம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில்
ஜாதகன் பலமுறை பல இடங்களில் பண விரையம் ஏற்பட்டு அல்லல் படுவான். கடன் தொல்லைகள் ஏற்பட்டு அவதிப்படுவான். தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக் கொள்வான். வேளா வேளைக்குச் சரியாகச் சாப்பிட முடியாது. கண் பார்வை மங்கிவிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது. பன்னிரெண்டாம் அதிபதி சுபக் கிரகமாக இருந்து வலுவாகவும் இருந்து இதே இடத்தில் வந்து அமர்ந்திருந்தால் மேற்கூறிய குறைகள் குறைந்து, பணம் கையில் தங்கும் அமைப்புடன் இருப்பான். அதோடு எதையும் சமாளிக்கும் பேச்சுத் திறமை உள்ளவனாக இருப்பான். பன்னிரெண்டாம் அதிபதி இங்கே தீய பார்வைகளுடன் அமர்ந்திருந்தால் ஜாதகன் வாயைத் திறந்ததலே அது சண்டை, சச்சரவுகளில் போய் முடிவதாக இருக்கும்
12ஆம் வீட்டு அதிபதி மூன்றாம் வீட்டில்
ஜாதகன் கோழையாகவும், அதிகம் பயப்படுபவனாகவும் இருப்பான். அவன் தன்னுடைய சகோதரனை இழக்க நேரிடலாம். எப்பவும் அழுக்கான தோற்றத்துடன் திரிபவனாக இருப்பான்.தீயகிரகங்களின் பார்வை இங்கே வந்து அமரும் கிரகத்தின் மீது விழுந்தால் ஜாதகனுக்குக் காது சமபந்தப்பட்ட நோய்கள் உண்டாகும் (பார்க்கும் தீய கிரகத்தின் தசா புத்திகளில் உண்டாகும்) ஜாதகன் தன் உடன்பிறப்புக்களுக்காக பணத்தை அதிகமாக செலவிட நேரிடும் ஜாதகன் எழுத்தாளனனால், வெற்றி பெற்ற எழுத்தாளனாக முடியாது. கூட்டத்தோடு கூட்டமாக வேலை செய்ய நேரிடும். அதிக வருமானமும் இருக்காது. பன்னிரெண்டாம் அதிபதியும், இரண்டாம அதிபதியும் கூட்டாக மூன்றாம் இடத்தில் இருந்தால், ஜாதகனுக்கு இரண்டு தாரங்கள் அமையும்.
12ஆம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டில்:
சிறுவயதிலெயே தாயை இழக்க நேரிடும். மனப் போராட்டங்கள் நிறைந்திருக்கும் தேவையில்லாத கவலைகள் வாட்டும். உறவினர்களில் சிலர் விரோதமாக இருப்பார்கள்.குடியிருக்கும் இடங்களில் வீட்டுக்காரனின் தொல்லை இருக்கும். நிம்மதி இருக்காது.சாதாரண பேட்டைகளில் குடியிருக்க நேரிடும். பன்னிரெண்டாம் இடத்து அதிபதி இங்கே வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு மேலே குறிப்பிட்டுள்ள பலன்கள் அதிகமாகி அனுதினமும் தொல்லை கொடுப்பதாக இருக்கும். ஜாதகனுக்கு ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், சொந்த வண்டி வாகனங்கள் இருக்கும் ஆனாலும் இந்த அமைப்பால் அதுவும் பிரச்சினை தருவதாகவே இருக்கும்.
12ஆம் வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் :
ஜாதகனுக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும் அல்லது குழந்தைகளால் பிரச்சினை இருக்கும். மகிழ்ச்சி இருக்காது.மிகுந்த இறைபக்தி உடையவனாக இருப்பான். நினைத்தால் கோவில், குளம் என்று கிளம்பிவிடுவான். துணிவில்லாத வனாக இருப்பான்.மனப்போராட்டங்கள் உடையவனாக இருப்பான். தான்தான் உலகத்திலேயே அதிகமாகத் துன்பப்படுபவனாக நினைத்துக் கொண்டு சதா சர்வ காலமும் வருத்தத்திலேயே மூழ்கி விடுவான். இந்த அமைப்புள்ளவன் விவசாயம் செய்தால், அவன் தோட்டத்துப் பயிர்களுக்கு அடிக்கடி, பூச்சிகளாலும், செடி நோய்களாலும் அழிவு வந்து, அதனால் அவதிப் படுவான்
12ஆம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில்:
ஜாதகன் எப்போதும் மிகுந்த மகிழ்ச்சி உடையவனாக இருப்பான்.செழிப்புள்ள வனாக இருப்பான். எல்லா வசதிகளும் நிறைந்தவனாக இருப்பான்.ஆரோக்கி யமாகவும், அழகான தோற்றமுடையவனனகவும் இருப்பான், எதிரிகள் இருக்காது. இருந்தாலும் அவர்களை எதிர்கொண்டு ஒன்றும் இல்லாத வர்களாக ஆக்கிவிடுவான். சிலசமயம் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேரிடும்.ஆனாலும் முடிவு அவனுக்குச் சாதகமாகவே அமையும். இதே அமைப்பில், இந்த இடம் தீய கிரகத்தின் பார்வை பெற்றால் (அதாவது வந்து அமரும் பன்னிரெண்டாம் அதிபதி, தீய கிரகத்தின் பார்வை பெற்றால்) பாவச் செயல்களைச் செய்வான்.சட்டென்று கோபப்படுபவனாகவும், சட்டென்று உணர்ச்சி வசப்படுபவனாகவும் இருப்பான். சிலருக்குத் தன் தாயையே வெறுக்கும் சூழ்நிலை உண்டாகும். பெண் பித்தனாக இருப்பான். அதனால் பல பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.
12ஆம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டில்:
ஜாதகனுக்கு மிகவும் வறுமையில் வளர்ந்தவள் மனைவியாகக் கிடைப்பாள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாகிவிடும்.சிலருக்கு பிரிவில் முடிந்துவிடும் அப்படி மனைவியைப் பிரிந்த ஜாதகன் சன்நியாசியாக மாறிவிடுவான். சிலர் சிலர் உடல் உபாதைகளாலும், உணர்வுப் போராட்டங்களாளும்ச் சீக்காளியாகி பிரச்சினைக்குரியவர்கள் ஆகிவிடுவார்கள். எதையும் கற்கும் ஆர்வம் இல்லாமல் போய்விடும்.அதே போல சொத்து சுகங்களும் இல்லாமல் போய்விடும்.
12ஆம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில்:
ஜாதகன் செல்வந்தனாக இருப்பான்.மக்களால் அறியப் பட்டவனாக இருப்பான். சொகுசான் வாழ்க்கை அமையும். பல வேலையாட்கள் வேலை செய்ய செள்கரியமான வாழ்க்கை வாழ்வான். பிறர் மரணத்தால், இவனுக்கு சொத்துக்கள் கிடைக்கும் அமைப்பு உண்டு. சித்தாந்தங்கள் வேதாந்தங்களில் ஆர்வமுடைய வனாக இருப்பான்.தர்ம சிந்தனைகள் உடையவன்.புகழுடையவன். அன்புடையவனாக நட்புடையவனாக இருப்பான்.நல்ல பண்புகளை உடையவனாக இருப்பான். அதன் மூலம் பலரையும் கவரக்கூடியவனாக இருப்பான்.
12ஆம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டில்
வெளிநாட்டில் வாழ்கின்ற, அங்கே சொத்துக்கள் வாங்குகின்ற அமைப்புடையவான ஜாத்கன் இருப்பான். அதிகமான சொத்துக்கள் சேரும். நேர்மையானவனாக இருப்பான்,பெருந்தன்மை உடையவனாக இருப்பான். தந்தையை இளம் வயதிலே பறிகொடுக்க நேரிடும்.
12ஆம் வீட்டு அதிபதி பத்தாம் வீட்டில்
கடின உழைப்பாளி. வேலையின் பொருட்டு கடினமான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். சிலருக்குச் சிறைக் காவலர் வேலை கிடைக்கும். சிலருக்கு மருத்துவத் துறையில் வேலை கிடைக்கும். சிலர் மாயானங்களில் பணி செய்ய நேரிடும். ஜாதகனுக்கு தன் குழந்தைகளால் எந்த செளகரியமும், மகிழ்ச்சியும் கிடைக்காது
12ஆம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டில்
ஜாதகன் வேலைக்குச் செல்ல மனமில்லாமல், வணிகத்தில் ஈடுபடுவான். அதன் மூலம் அவனுக்குப் பெருத்த வருமானமும் இருக்காது. குறைந்த நண்பர்களே இருப்பார்கள். எதிரிகள் அதிகமாக இருப்பார்கள் சகோதரர்களால் தொல்லைகள் உண்டாகும். அதன் காரணமாகக் கைப் பொருளை இழக்க நேரிடும்.
12ஆம் வீட்டு அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில்
பன்னிரெண்டாம் அதிபதி தன் சொந்த வீட்டிலேயே இருந்தால் ஜாதகன் தர்மச் செலவுகளை அதிகமாகச் செய்பவனாக இருப்பான். நல்ல கண் பார்வை இருக்கும். அதீதமான படுக்கை சுகம் கிடைக்கும். சிலர் விவசாயடததில் ஈடுபடுவார்கள் இந்த அமைப்பை ஒரு தீய கிரகம் பார்த்தால், ஜாதகன் ஓய்வு ஒழிச்சல் இல்லாதவனாகவும், எப்போதும் எங்கேயாவது சுற்றித் திரிந்து கொண்டி ருப்பவனாகவும் இருப்பான்.
12ஆம் இடம் ஒருவரின் மறைமுக இன்பங்களைக் காட்டக் கூடியதாக ஜோதிடத்தில் கருதப்படுகிறன.
நன்றி
வாழ்க வளமுடன்
தமிழரசன் க
தக்ஷா ஜோதிட நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்
https://www.dakshaastrology.com
whatsapp: +919787969698
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக