ஞாயிறு, 7 ஜனவரி, 2024

ஒன்பதாம் பாவம்

ஒன்பதாம் பாவம்

லக்கினத்திற்கு 9.ஆம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் பலன்கள் என்ன ?

9 ல் சூரியன் இருந்தால்

ஜாதகர் தரும சிந்தனை. தந்தை பெரிய குடும்பத்தை சேர்ந்தவர், தந்தை மூத்தவாராக இருக்கலாம். ஜாதகரின் 9 வயதிற்கு மேல் குடும்பம் வளர்ச்சி. 9 ல் சூரியன் இருந்தால் ஜாதகர் பிறந்த உடன் வளர்ச்சி இருக்கும் குடும்பத்தில்.

9 ல் சந்திரன்

ஜாதகர் பயணத்தை விரும்புவார்கள். 9 வயதில் இடம் மாற்றம் இருக்கும் அன்னதானம் செய்வார் காதல் உண்டு பெண் உபாசனை பெண் தெய்வ வழிபாடு உண்டு தந்தைக்கு கடன் உண்டு பிறந்த உடன் ஒவ்வொரு விஷயத்தை சொல்லும்.ஐந்தாம் அதிபதிக்கு அடுத்து நான்காம் அதிபதி இருந்தால் குழந்தை பிறந்த உடன் வீடு கட்டுவார்கள்.

9 ல் செவ்வாய்

கட்டுமஸ்தான உடல்.மீசை வைத்து இருப்பார்கள்.தந்தைக்கு சொத்து உண்டு. வழக்கு உண்டு. இதை ராகு பார்த்தால் அறுவை சிகிச்சை உண்டு. கோச்சரத்தில் செவ்வாய் மேல் ராகு வரும் போது சர்ஜரி.. தந்தை சீருடை பணியாளர். தொடையில் தழும்பு இருக்கும். திருமணம் ஆன பிறகு வெளி மாநிலம் வெளி நாடு வாய்ப்பு உண்டு. 9 ல் செவ்வாய் கணவர் பெரிய குடும்பம்.

9 ல் புதன்

தந்தை அல்லது தந்தை வழியில் இரண்டு திருமணம்.9 வயதில் இடம் வாங்கி இருப்பார் அல்லது பெயர் மாற்றம் செய்து இருப்பார். தந்தை மென்மையான குணம். தந்தை கணக்காளர். ஜாதகரின் அறிவு சிறப்பாக இருக்கும் 40 வயதிற்கு மேல் மீண்டும் படிப்பார்.

9 ல் குரு

ஜாதகர் ஒரு குறிக்கோளோடு வாழ்வார். தர்மம் செய்வார். 9 வயதிற்கு மேல் குடும்பம் வளர்ச்சி, குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கும். குரு புதனின் சாரம் இரண்டு குழந்தை பிறக்கும். தந்தை ஒரு பதவியில் இருப்பர். வசதியான நபர். ஜாதகருக்கு பிற்பாதியில் வளர்ச்சி இருக்கும். 5.9.ல் குரு திருமண தாமதம் தரும், Late marriage நல்லது.9.ல் சனி ஒன்பது வயதில் கஷ்டம், கர்மா, தந்தை வழியில் குறைந்த ஆயுள் உள்ளவர்கள். ஜாதகருக்கு தாமதமான முன்னேற்றம் வரும். தந்தைக்கு வயதான தோற்றம் இளமையிலே வந்துவிடும். நேர்மை, நேர்மை என்று கஷ்டத்தை இவர்களை வரவழைத்துக் கொள்வார்கள். யாரிடமும் லஞ்சம் வாங்க மாட்டார்கள். சனி பலமிழந்து இருந்தாலும் நீசமாக இருந்தால் தொழிலாளர் அவர்களுடைய சப்போர்ட் இருக்காது.

9 ல் சுக்கிரன்

ஜாதகர் தர்மவான். தந்தை வழியில் பெண்கள் அதிகம் இருப்பார்கள். அத்தைகள்.கல்வி உண்டு. தந்தை சுகவாசி.சொத்து பூர்வீகம் உண்டு.ஜாதகர் பூரண சுகம் பெறுவார்.இன்ப சுற்றுலா ஆர்வம் உள்ளவர்கள்.40 வயதிற்கு மேல் காதல் வரும். பின்னாளில் சுக போகம் தேடும் அமைப்பு

9 ல்ராகு

தந்தைக்கு 9.21.33.வயதில் கண்டம் வரும். பூர்விகம் சொத்து வழக்கு இருக்கும். வேறு மொழி ஆர்வம் அதிகம் இருக்கும். வெளிநாட்டு தொடர்புகள் நல்லது. பூர்விகம் சொத்து அனுபவிக்க தடை. தந்தை பிறந்த இடம் வேறு ஊர் ஆக இருக்கும்.தந்தை அவரின் தாய் தந்தையை பிரிந்து வாழ்ந்து இருப்பார்..ஜாதகர் அல்லது தந்தைக்கு விஷ கடி இருக்கும். ராகு அடுத்து மாந்தியை தொட்டால் விஷ கடி மூலம் மரணம். 9.ல் ராகு மாந்தி இருந்தால் தாத்தா பாம்பு கடித்து மரணம்.

9 ல் கேது

தந்தை ஆன்மீகவாதி. ஜோதிடம், சமயம் ஆர்வம் இருக்கும். ஒன்பது வயதில் ஒரு உறவில் விரிசல் பிரிவு வந்திருக்கும். ஆன்மீகம், ஜோதிடம் இவருக்கு சிறப்பான முறையில் வரும். பாக்கியங்கள் அனைத்தும் அனுபவிக்க தடை இருக்கும். எதிலும்ஒரு பிடிப்பு என்பது இல்லாமல் இருக்கும். தந்தைவழி சொத்து அனைத்தும் சுருங்கச் செய்யும். ஒரு சந்துக்குள் வீடு இருக்கும், கோவில் அருகே வீடு இருக்கும். ருத்ராட்சம் இவரைத் தேடி வரும். ஒன்பதில் கேது அல்லது ஒன்பதாம் அதிபதி கேது தொடும் பொழுது குரு போன்ற பெரிய மனிதர்களின் ஆசிர்வாதம் இவருக்கு உண்டு.

குரு சூரியனை தொட்டால் பலன்கள் என்ன:

ஜாதகர் மூத்தவர். பெரிய குடும்பம். தந்தை உருவம் ஜாதகருக்கு இருக்கும். கோவில் அருகே வீடு இருக்கும். பாரம்பரியம் காப்பவர். சுதந்திர மாக செயல் படுவார்கள். தந்தையின் ஆலோசனை கேட்பார். ஆளுமை அதிகாரம் கொண்ட நபர். மரியாதை எதிர்ப்பாளர்கள். அரசு அரசியல் ஈடுபாடு கொண்டவர். ஆண் குழந்தை உண்டு. தந்தையின் தொழில் சிறப்பாக செய்வார்கள். குழந்தை பிறந்த பிறகு குடும்பத்தில் வளர்ச்சி இருக்கும். மருத்துவ தொழில் ஆர்வம் இருக்கும். தொழில் நேர்மையானவர். நோய் கிருமி தாக்குதல் இருக்கும்

ஒன்பதாம் பாவகம் ஒருவருடைய குருவை பற்றி இந்த வீட்டை வைத்து சொல்லலாம். போன ஜென்ம அதிர்ஷ்டத்தையும் இந்த வீட்டை வைத்து சொல்லலாம். தந்தை ஸ்தானம் தகப்பனாரை இந்த வீட்டை வைத்து சொல்லலாம். கிரகங்களில் சூரியனை வைத்து தந்தையை சொல்கிறோம் அதுபோல ஒன்பதாம் இடத்தை வைத்தும் தந்தையைப் பற்றி சொல்ல வேண்டும்.

ஒருவருடைய நீண்டதூர பயணத்தை குறிப்பதும் இந்த இடம்தான். ஒருவர் தர்மத்தையும் இந்த வீடு சொல்லும். ஒன்பதாம் இடத்தில் சுபகிரகம் {சுப கிரகங்களான சந்திரன், புதன், சுக்கிரன், குரு } இருந்தால் அவர் செய்கின்ற தர்மம் எல்லோராலும் போற்றப்படும்.

பாவ கிரகங்கள் {செவ்வாய் சனி ராகு கேது} இருந்தால் அவர் செய்கின்ற தர்மம் எடுபடாமல் போகும்,

இதை எப்படி சொல்வது என்றால் பாவகிரகங்கள் செவ்வாய் சனி ராகு கேது போன்ற பாவ கிரகங்கள் இங்கு இருந்தால் அவர் செய்யும் தர்மம் எடுபடாமல் போய்விடும்.

அதேபோல் ஐந்தாமிடம் பூர்வ புண்ணியஸ்தானம், ஒன்பதாம் இடம் போன ஜென்ம அதிர்ஷ்டத்தை சொல்வது.

திரிகோண ஸ்தானமான ஐந்தாம் இடம் 9 ஆம் இடம் கெட்டுப் போகாமல் இருந்தாலே ஒருவர் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர் என்று எடுத்துக்கொள்ளலாம்.

சுப கிரகங்களான சந்திரன், புதன், சுக்கிரன், குரு போன்ற கிரகங்கள் ஒன்பதிலிருந்து அல்லது 9-ஆம் வீட்டைப் பார்த்தாலும் ஜாதகர் போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர் என்று எடுக்கலாம் .

போன ஜென்மத்தில் புண்ணியம் செய்து அதன் விளைவாக இந்த ஜென்மத்தில் நல்ல பலன்களை அனுபவிக்க போகிறார் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஒன்பதாம் வீடு ஒருவருடைய மத நம்பிக்கையை சொல்லும், வேதாந்தங்களை சொல்கிறது குரு என்றாலே வேதாந்தத்தை குறிக்கும் ஒன்பதாம் இடத்தில் குரு இருந்தால் ஒருவர் மதம் வேதங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை உள்ளவராக இருப்பார்.

ஒன்பதில் சனி இருந்தால் மதம் சம்பந்தமான விஷயங்களில் நம்பிக்கை உள்ளவராக இருப்பார், கோவில்கள், தெய்வ தரிசனம், குறிப்பதும் இந்த வீடுதான்.

கல்லூரியில் மேற்படிப்பு படிப்பதற்கும் இந்த வீடுதான்.

ஒன்பதில் சுபக்கிரகம் இருந்து நடப்பு திசா புத்திகளும் ஒன்பதாம் வீட்டைகுறித்தால் ஜாதகர் கல்லூரி படிப்புக்கு மேற்படிப்பு பட்டப்படிப்பு படிப்பார் என்று சொல்லலாம். சட்டப்படிப்புக்கு குறிக்கும் வீடு இதுதான்.

கிரகங்களில் குரு சட்டப்படிப்பு ஆன்மீகம், ஆன்மீக சிந்தனை, புரோகிதம் இவற்றை குறிக்கும். தேவதைகளை வசியம் செய்வது இந்த வீடுதான். வெளிநாடு செல்வதற்கு ஒன்பதாமிடம் தொடர்பு இல்லாமல் ஒருவர் வெளிநாடு செல்ல முடியாது.

நீண்ட தூர பயணம் ஒன்பதாம் இடம் ஒன்பதாமிட திசா புத்தியில் ஒன்பதாம் இடத்தில் உள்ள கிரகத்தின் திசா புத்தியில் தான் ஒருவர் வெளிநாடு செல்ல முடியும்.

வெளிநாடு போக முடியுமா என்ற கேள்விக்கு நாம் இருக்கும் இடத்தில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும். நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும், முன்ன பின்ன தெரியாத இடத்தில் இருக்கவேண்டும், முன்ன பின்ன தெரியாத மனிதர்களிடம் பழக வேண்டும், இதுதான் வெளிநாடு சொல்கிறது.

நாம் இருக்கும் வீட்டையும், நாட்டையும் குறிப்பது நாலாம் இடம். அந்த வீட்டிற்கு பன்னிரண்டாம் வீடான மூன்றாம் வீடு தான் இடப்பெயர்ச்சியை குறிக்கிறது. நீண்ட தூரப்பயணம் ஒன்பதாமிடம் குறிக்கும். முன்ன பின்ன தெரியாத இடம் போவது பனிரெண்டாம் இடம் சொல்லும். 3, 9 ,12 ஆம் இடத்தை குறிக்கின்ற கிரகங்களின் திசா புத்தி காலத்தில் தான் ஒருவர் வெளிநாடு போக முடியும்.

ஒன்பதாம் அதிபதி லக்னத்தில் இருந்தால்

பெரியவர்களிடம், ஆசிரியர்களிடம், தெய்வங்களிடம் மிகவும் நம்பிக்கை உள்ளவராக இருப்பார்கள். அதிகமாக தர்மம் செய்பவராக இருப்பார். தெய்வ வழிபாடு அதிகமாக இருக்கும். ஆண் வாரிசு உண்டு. ஜாதகருக்கு அடுத்த சகோதரம் இருக்கும். நீண்ட ஆயுள் உண்டு. தந்தை மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள், ஆனால் அதை அனுபவிக்க முடியாது. மனிதநேயம் அதிகமாக இருக்கும். இவர்கள் ஜீவனத்திற்கு பஞ்சம் இருக்காது. எப்படியும் இவர்களிடம் பணம் இருக்கும்.

மற்றவர்களுக்கு உபதேசம் செய்வார்கள். சட்டப்படி அணுகுவார்கள். ஒன்பதாமிடம் சட்டம்-ஒழுங்கு ஒழுக்கம். காதலில் வெற்றி உண்டு. இருதார யோகம் உண்டு. திருமணத்திற்கு முன்பே அறிமுகமான கணவனோ மனைவியோ அமையும். இவர்கள் விரும்பியபடியே மணவாழ்க்கை அமையும். எல்லாமே தேடி வரும் பாவம். ஜாதகர் கைராசிக்காரர், வாக்கு பலிதம் இருக்கும். லக்னத்திற்கு 5, 9, 11 தொடர்பு இருந்தால் வாழ்க்கையில் எதற்குமே குறை இருக்காது. ஆன்மீக நாட்டம் உண்டு. இவர்கள் அறிவு புத்திசாலித்தனமாக இருக்கும்.

வெளிநாடு, வெளிமாநிலம் போகலாம, வெளிநாட்டு வருமானம் இருக்கும் இவர்கள் பூர்வீகத்தை விட்டு வெளியே போவது நல்லது.

ஒன்பதாம் பாவம் பலமானால் நான்காம் பாவம் பலமிழக்கும். ஒன்பதாம் அதிபதி பாதகாதிபதியாக இருந்தால், இவர்களுக்கு மத்திய வயதுக்கு மேல் நல்ல பலன் உண்டு, நல்ல பதவி உண்டு.

ஒரு மடத்தை நிர்வாகம் பண்ணும் திறமை இருக்கும், நிர்வாகம் செய்வார்கள். இவர்கள் மரத்தின் அருகில், மாடு வீதி, தேரடி வீதி இந்த மாதிரி இடத்தில் குடியிருப்பார்கள்.

எந்த ஒரு பாதகாதிபதியுமே 40 வயது வரை தான் அதிக சிரமத்தை கொடுக்கும். அனுபவிக்க தடை இருக்கும். 40 வயதுக்கு மேல் யோகத்தை தரும். கோவில் திருப்பணி செய்வார்கள், சத்திரம் சாவடி கட்டுவார்கள். ஒன்பதாம் அதிபதி லக்னத்தில் இருந்து மூன்றாம் அதிபதி தொடர்பு வந்தால் இவர்களுக்கு எழுதுவது, புத்தகம் எழுதுவது, கணக்கு எழுதுவது ,கணக்காளர், கணக்குப்பிள்ளை வேலைகள் அமையும்.

லக்னமும் ஒன்பதாம் அதிபதியும் கெட்டுவிட்டால் சிறைவாசம், ஏனென்றால் ஒன்பதாம் பாவம் ஒழுக்கம், ஒன்பதாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் சிறிய குடும்பத்தில் பிறந்தாலும் 30 வயதுக்கு மேல் நல்ல உயர்வு நிலை கிடைக்கும். ஒன்பதாம் அதிபதி 9 ஐ பார்த்தாலும், பத்தாம் அதிபதி பத்தை பார்த்தாலும், தொழில் முறையில் நல்ல யோகம் உண்டு. ஒன்பதாம் அதிபதிக்கு 5, 9, 11-ல் லக்னாதிபதி இருந்தால் பெயர் மங்காத புகழ் பல இடங்களில் சொத்து சேர்வது, பெரியோர்களின் நட்பு கிடைக்கும்.

ஒன்பதாம் அதிபதி இரண்டில்இருந்தால்:

ஜாதகருக்கு அயல்நாட்டு தொடர்பு மூலம் வருமானம் இருக்கும், பணவரவு உண்டு. தந்தை மூலம் வருமானம் உண்டு. தந்தையின் தொழில் செய்யலாம். வாக்கு பலிதம் உண்டு. நல்ல பொருளாதாரம் இருக்கும். ஜாதகர் பிறந்த உடன் குடும்பம் வளர்ச்சி. ஆன்மீக சொற்பொழிவு செய்வார்கள். மற்றவர்களை வசீகரம் செய்யும் பேச்சு இருக்கும். சட்டம், ஜோதிடம் தொழில் நன்று. ஒன்பதாம் அதிபதி பாதகாதிபதி ஆனால் தந்தையின் சொத்து அனுபவிக்க முடியாது. குடும்பத்தில் இருந்து பிரிந்து செல்ல வாய்ப்புள்ளது. 9-க்குடையவர் இரண்டில் இருந்து இதை பாவிகள் பார்த்தால் தந்தைக்கு கண்நோய். தந்தைக்கு சொத்தில் வழக்கு வரும். ஏழாம் அதிபதி தொடர்பு வந்தால் ஜாதகருக்கு 2 திருமணம். வீட்டில் உயர் தரமான பொருட்கள் இருக்கும். தானியங்கள் அதிகமாக வீட்டில் இருக்கும்.

ஒன்பதாம் அதிபதி மூன்றில்இருந்தால்

ஜாதகருக்கு இளைய சகோதரர், சகோதரி ஆதரவு இருக்கும். மார்க்கெட்டிங் வேலை செய்யலாம். வெளிநாடு, வெளிமாநிலம் போகலாம். Ent பிரச்சனை இருக்கும். ஏஜென்சி தொழில் செய்யலாம். ஒரு பொருளை எடுத்து மற்றவர்களுக்கு டிஸ்ட்ரிபியூட்டர் பண்ணலாம். 9, 3 க்கு சுக்கிரன் தொடர்பு இருந்தால் டிராவல்ஸ் ஏஜென்சி வைக்கலாம். 9 3-க்கு பாதகாதிபதி தொடர்பு வந்தால் ஜாதகர் இடது கை பழக்கம் உடையவராக இருப்பார். ஜாதகருக்கு சகோதரன் உண்டு. 9 வயது வித்தியாசத்தில் கூட சகோதரன் உண்டு. சகோதரன் வெளிநாடு போவார். தந்தை இடம்மாறி வந்தவர். தந்தை போலீஸ், தகவல் தொடர்பு, யூனிபார்ம் போட்டு வேலை செய்வது, அதில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். தந்தை தன்னுடைய சுய முயற்சியில் முன்னேறியவர் ஆக இருப்பார். தந்தை சிறு தூரப் பயணம் செய்பவராக இருப்பார்.

ஒன்பதாம் அதிபதி நான்கில்இருந்தால்

தாய் உடைய ஆதரவு இருக்கும். நல்ல செல்வாக்கு நிறைந்து இருப்பார். ஜாதகருக்கு பூர்வீக சொத்து இருக்கும். ஜாதகர் மூன்றாவது குழந்தையாக இருப்பார். தம்பி உடைய சொத்தை அனுபவிப்பர். தாய்வழியில் ஆசிரியர் உண்டு. தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டு. இவர்கள் பட்டப்படிப்பு படித்தால் உள்ளூரில்தான் படிப்பார்கள். திதி சூன்யம் பாதகம் வந்தால், தந்தை வழியில் தண்ணீரில் கண்டம் ஆனவர்கள் இருப்பார்கள். இங்கு கேது தொடர்பு வந்தால் தந்தை வழியில் கல்லறை இருக்கும். ஒன்பதாம் அதிபதிக்கு கேது தொடர்பு இருந்தால் இவர்கள் ஜீவசமாதி வழிபாடு செய்யலாம். ஜீவசமாதி வழிபாடு செய்பவர்களுக்கு முஸ்லீம் நண்பர்கள் நெருக்கமாகஇருப்பார்கள். பண்ணை தொழில் செய்யலாம்.

ஒன்பதாம் அதிபதி ஐந்தில் இருந்தால்

குழந்தைகள் சகல வசதிகளோடு இருப்பார்கள். தெய்வ வழிபாட்டால் இவர்கள் வீடு நல்ல பிரகாசமாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. ஆன்மீக நாட்டம், பதவி உண்டு. காதலில் வெற்றி உண்டு. கலைத்துறையில் வெற்றி உண்டு. இவர்கள் புகழ் ஒழுக்கத்தை கடைபிடித்தால் நல்ல மேன்மை அடைவார்கள். ஜீவசமாதிக்கு தொடர்பு இருக்கும், இதில் கேது திதி சூன்ய அதிபதி பாதகாதிபதி தொடர்பு இருந்தால் ஆவியுடன் பேசுபவராக இருப்பார்கள். ஜோதிடம் நன்று.

TIPS

குழந்தை இல்லாதவர்கள் இந்த ஒன்பது ஐந்து தொடர்பு உள்ளவர்களிடம் போய் குழந்தை கிடைக்குமா என்று கேட்டு அவர் கிடைக்கும் என்று வாயால் சொன்னால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

மூதாதையர்களை பார்ப்பார்கள், ஐந்து ஒன்பது சாமியாடுவது முறையாக இருக்கும், சில நிமிடமே சாமியாடுவார்கள்.

5, 8 தொடர்பு 5, 12 தொடர்பு இருப்பவர்கள் மணிக்கணக்கில் சாமியாடுவார்கள்.

ஒன்பதாம் அதிபதி ஆறில் இருந்தால்

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு வருவதற்கு யோகம் உள்ளது. உத்தியோகம் சம்பந்தமாக வெளியூர் போக வேண்டிய நிலை வரும். தந்தை உடல் நிலை பாதிக்கும். பகை இருக்கும் கடன் இருக்கும். நோய், விபத்து வரும். தந்தைக்கு வேலை தேடி வரும். வெளிநாட்டு வேலை எளிதில் கிடைக்கும், வெளிநாட்டு கம்பெனியில் வேலை வரும். மார்க்கெட்டிங் செய்யலாம். தந்தையால் கடன் அல்லது தந்தைக்கு கடன் இருக்கும். அடுத்தவருடைய கடனை இவர் சுமப்பார். ஒன்பது ஆறு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் போடக்கூடாது. கடன் கேட்டால் உடனே கிடைக்கும். பாதகாதிபதி தொடர்பு வந்தால் தகுதிக்கு மீறிய வேலை, ஆனால் வேலை நிலைக்காது, வேலையில் தொல்லை இருக்கும் அல்லது வேலையே கிடைக்காது. தந்தைக்கு குடல் இறக்கம் வாயுத் தொல்லை உண்டு.

ஒன்பதாம் அதிபதியே பாதகாதிபதி ஆனால் வெளிநாட்டு வேலைக்கு பணம் கொடுக்கக் கூடாது மீறி பணம் கொடுத்தால் கொடுத்த பணம் கிடைக்காது

ஒன்பதில் குரு . ஒரு குறிக்கோளுடன் இந்த ஜாதகர் வாழ்வார். தர்மம் செய்வார.் தந்தை ஒரு பதவியில் இருப்பார் .தந்தை வசதியானவர் .தந்தை ஒரு ஆன்மீகவாதி. இந்த ஜாதகருக்கு வாழ்வில் வளர்ச்சி இருக்கும்.

சொந்தத்தில் திருமணம் ஆகுமா அல்லது அன்னியத்தில் திருமணம் ஆகுமா என்ற கேள்விக்கு 7-ம் இடம் திருமணத்தை குறிக்கும் ஏழாம் வீடும், சந்திரனும் சம்பந்தப்பட்டால் தன் தாய் வழி உறவில் திருமணம்..

சூரியன் சம்பந்தப்பட்டால் தந்தை வழியில் அமையும்.

புதன் சம்பந்தப்பட்டால் தாய் மாமன் வழியில் அமையும். ஒன்பதாம் இடத்தோடு சம்பந்தம் ஏற்பட்டால் அன்னியத்தில் திருமணம் ஆகும், அன்னிய நாட்டில் கூட நடக்கும்.

இயற்கை சுப கிரகம் ஒன்பதில் இருந்தால் குலதெய்வ ஆதரவு இருக்கும்.

ஒன்பதாம் அதிபதி நல்ல நிலையில் இருந்தால் குல தெய்வ ஆதரவு இருக்கும்.

ஒன்பதாம் அதிபதி கேந்திரத்தில் திரிகோணத்தில், லாபஸ்தானத்தில் இருந்தால், குலதெய்வம் கைகொடுக்கும் என்று சொல்லலாம்.

மூன்றாம் இடம் புத்தகம், பத்திரிக்கை வெளியிடுவதை குறிக்கும். பொழுது போக்கு அம்சம் உள்ள புத்தகம் பத்திரிகை.

ஒன்பதாம் இடம் மதம் சம்பந்தமான புத்தகங்கள், ஆன்மீக புத்தகங்கள், வெளிநாட்டு சம்பந்தம் உள்ள புத்தகங்கள் குறிக்கும்.

ஒன்பதாம் இட அதிபதி லக்னத்தையோ அல்லது சந்திரனையோ பார்த்தால் ஜாதகர் செய்யும் பரிகாரங்களுக்கு பலன் உண்டு ஒன்பதாமிடம் குல தெய்வத்தை குறிக்கும் குலதெய்வத்தின் அருள் பக்கபலம் கிடைக்கும்.

ஒன்பதில் செவ்வாய். தந்தைக்கு சொத்து உண்டு. தந்தைக்கு வழக்கு உண்டு. தந்தை சீருடை பணியாளர். பெண் ஏனில் திருமணம் ஆனதும் வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் செல்வார். கணவர் பெரிய குடும்பம் அல்லது கூட்டு குடும்பம்.

ஒன்பதில் சுக்கிரன. இவர் தர்மவான். தந்தை வழியில் பெண்கள் அதிகம்.. ஜாதகருக்கு கல்வி உண்டு.. இவருடைய தந்தை சுகவாசி. .பூர்வீகம் உண்டு. ஜாதகர் பூரண சுகம் பெறுவார்.

ஒன்பதில் சனி .தந்தை கடின உழைப்பாளி..

ஜாதகருக்கு தாமதமான முன்னேற்றம் ஏற்படும. தந்தைக்கு முதிர்ந்த தோற்றம் இருக்கும. நேர்மை நேர்மை என்று கஷ்டத்தை வாங்குவார் .ஆனல் உழைப்பார். இங்கு சனி நீசம் அடைந்தால் சப்போர்ட் கிடைக்காது.

ஒன்பதில் சூரியன் இருந்தால் ஒரு கிரகம் எதற்கு காரகம்

வகிக்கிறதோ அந்த காரகத்தை குறிக்கின்ற வீட்டில் அந்த கிரகம் இருப்பது நல்லதல்ல. தாயாரைக் குறிக்கும் கிரகம் சந்திரன். நாலாம் வீட்டையும் சந்திரன்தான் குறிக்கிறது. தாயாரை குறிக்கின்ற சந்திரன். தாயாரை குறிக்கின்ற வீட்டில் சந்திரன் இருப்பது நல்லது இல்லை. காரக பாவ நாஸ்தி சகோதரரை குறிக்கின்ற செவ்வாய் மூன்றில் இருப்பது நல்லது இல்லை. களத்திரத்தை குறிக்கின்ற சுக்கிரன் களத்திரத்தைகுறிக்கின்ற ஏழாமிடத்தில் சுக்கிரன் இருப்பது நல்லது இல்லை.

ஒன்பதாம் அதிபதி ஏழில் இருந்தால்

நல்ல தெய்வபக்தி உள்ள பெண் கிடைக்கும். ஆணாக இருந்தால் பெண், பெண்ணாக இருந்தால் ஆண் கிடைக்கும். அன்னியத்தில் பெண் கிடைக்கும். வெளிநாட்டு பயணம் இருக்கும். மனைவி தேடி வரும், தாமத மணம் இருக்கும் .கேது சம்பந்தம் இரண்டாம் அதிபதி பாதகாதிபதி சம்பந்தம் ஏற்பட்டால் மணவாழ்வு தாமதம் ஆகும்.

ஆன்மீகம் சிறப்பு 9, 7 க்கு பாதகம் தொடர்பு ஏற்பட்டால் மதம் மாற்றம் தரும். கூட்டுத்தொழில் நன்று. வெளிநாட்டு தொழில் நன்று. தாம்பத்திய சுகம் நன்று. ஒன்பது ஏழுக்கு பாதகாதிபதி தொடர்பு, திதி சூனியம் ஆகக்கூடாது.

ஒன்பது ஏழு சம்பந்தம் இருந்து அதில் பெண் கிரகங்கள் இருந்தால் பெண் நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள்

ஒன்பதாம் அதிபதி எட்டில் இருந்தால்

தந்தைக்கு கண்டம். தந்தை உடல் நிலை பாதிப்படையும். தந்தைக்கு ஒரு விபத்து உண்டு. பூர்வீக சொத்தில் ஒரு வழக்கு உண்டு, அதை அனுபவிக்க தடை இருக்கும்.தந்தை ஒரு கண்டத்திலிருந்து தப்பியவர் ஆக இருப்பார். ஒன்பதாம் இடத்தில் எட்டாம் அதிபதி இருக்கக்கூடாது. தந்தை வழியில் முதியோர் இல்லம் போனவர்கள் இருப்பார்கள். தந்தை வழியில் யாராவது கவனிப்பாரின்றி தவறி கையைவிட்டு போனவர்கள் இருப்பார்கள். ஜாதகருக்கு ஆயுள் விருத்தி இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் இருக்கும். உயில் சொத்து உண்டு இதற்கு எட்டாம் பாவகம், காரகத்துவம் எல்லாத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.தந்தை வழியில் ஒரு அமானுஷ்ய சக்தி உள்ளவர்கள் யாராவது இருப்பார்கள். தந்தை வழியில் செய்வினை பாதிப்பு இருக்கும். தந்தை உறவில் ஒரு விரிசல் இருக்கும் அல்லது குழந்தையை விட்டு பிரிவார்கள். தந்தைவழியில் சாமியாடி அருள்வாக்கு சொன்னவர் இருப்பார்கள். ஜாதகருக்கு தந்தையால் ஒரு அவச்சொல் இருக்கும்.தந்தை அவமானப்பட்ட வராக இருப்பார். தந்தை வாழ்க்கையில் ஒருரகசியம் இருக்கும்

ஒன்பதாம் அதிபதி ஒன்பதில் இருந்தால்

தந்தை நீண்ட ஆயுள் உடன் இருப்பார். தான தர்மங்களும், தெய்வ வழிபாடு நிறைந்திருக்கும். தந்தையின் சொத்துக்கள் நிலையானதாக இருக்கும். நல்ல வளர்ச்சி. ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம் உண்டு.தந்தை வசதியானவர், பெரிய குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பார்.

டிப்ஸ்

சந்திரன் சனி சாரம் வாங்கினாலோ, கேது சாரம் வாங்கினாலோ சனி சந்திரன் இணைவு இருந்தாலும், சந்திரன் கேது இணைவு இருந்தாலோ தாயார் மணவாழ்க்கை சிறப்பு இல்லை.

ஒன்பதாம் அதிபதி பத்தில் இருந்தால்

அரசாங்கத்தில் உயர் பதவியில் ஜாதகர் இருப்பார்.

தந்தையின் சொத்துக்கள் சிறந்த முறையில் விருத்தியாகும்.

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தர்ம கர்மாதிபதி யோகம்.

தொழிலில் ஒரு நேர்மை இருக்கும், தொழிலில் வீழ்ச்சியில்லை.

தந்தையின் தொழில் செய்யலாம், குலத் தொழில் செய்யலாம்.

ஆன்மீகம் சார்ந்த தொழில் செய்யலாம்.

கடலில் கிடைக்கும் சங்கு, முத்து, சோழி, சிப்பி, பவளம் இதையெல்லாம் எடுத்து வணிகத் தொழில் செய்யலாம்.

தானதர்மம் இருக்கும்.

கேந்திராதிபதி மற்றும் கோணாதிபதி 5-க்குடையவர் நான்காம் இடத்தில் இருப்பதைவிட ஒன்பதாம் அதிபதி பத்தில் இருப்பது சிறப்பு

ஒன்பதாம் அதிபதி பதினொன்றில் இருந்தால்

தந்தைக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சகல செல்வங்களும் நிறைந்திருக்கும். தெய்வ காரியங்கள் அடிக்கடி வீட்டில் செய்துகொண்டே இருப்பார்கள். அயல்நாட்டுத் தொடர்பு மூலம் நல்ல லாபம் கிடைக்கும். தந்தைக்கு நீண்ட ஆயுள். ஜாதகர் பிஎச்டி பண்ணுவார். தந்தை அவர்கள் குடும்பத்தில் மூத்தவராக இருப்பார். உழைப்பைவிட வருமானம் அதிகமாக கிடைக்கும். 9 ,11 தொடர்பு இருந்து ஏழாமிடமும் தொடர்பு பெற்றால் தந்தைக்கு இரண்டு மணம் அல்லது ஜாதகருக்கு இரண்டு மணம். 2, 11 மற்றும் 7, 11 மற்றும் 5, 11 மற்றும் 9, 1 மற்றும் 11, 1 மற்றும் 2, 9 மற்றும் 2, 10 இந்த அமைப்பு ஜாதகர் என்றாவது ஒருநாள் உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவார்கள்.

இதே வீட்டில் பாதகாதிபதி தொடர்பு வந்தால் உயர்ந்த நிலைக்கு வர முடியாது. நட்பு கூடாத நட்பு ஆபத்தில் முடியும்.

ஒன்பதாம் அதிபதி 12 ல் இருந்தால்.

தந்தைக்கு கெடுதி உண்டு. தந்தையின் சொத்து நிலைக்காது.

வெளிநாட்டுப்பயணம் உருவாகும், இவர்கள் வெளிநாடு வெளிநாட்டு பயணம் செய்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தந்தைக்கு ஒரு அவச்சொல், ஒரு வழக்கு இருக்கும்.

தந்தை செலவாளி. தந்தைக்கு ஒரு நாலாவது சிறைவாசம் இருக்கும். பன்னிரண்டில் ஒரு கிரகம் இருந்தாலே காலாட்டிக்கொண்டு சாப்பிடுவார்கள்.

அதேபோல் ஒன்பதாம் அதிபதி 12 ல் இருந்தால் ஜாதகர் காலாட்டிக்கொண்டுதான் சாப்பிடுவார்.

தந்தைக்கு ஆன்மீக சிந்தனை, விவசாயம், தர்மசிந்தனை இருக்கும்.

தந்தை இரவு வேலை பார்ப்பார். இந்த அமைப்பு 9, 12 தந்தைக்கு சரி இருக்காது.

ஜாதகருக்கு அயன சயன போகம் குறை இருக்காது.

ஜாதகர் வெளியூர், வெளிதேசம், மலை சார்ந்த கோவிலுக்கு அடிக்கடி போவார். 9 கோவில், 12 மலை.

தந்தையை விட்டு பிரிந்து வாழ்வார். ஜாதகர் தந்தையின் அன்பு கிடைக்காது.

இவர்கள் பயணத்தை அதிகமாக விரும்புவார், பயணம் செய்வார். இயற்கையாகவே வாக்குபலிதம் இருக்கும். பெரியோர்களின் நட்பு இருக்கும். பெரிய தொழில் அதிபரின் நட்பு கிடைக்கும். கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வார்கள் ஆன்மீகவாதிகளின் தீட்சை கிடைக்கும். இவர்கள் குழந்தைகள் வெளிநாடு செல்வார்கள். தந்தை வழியில் மணமாகாதவர்கள் அல்லது மணமாகி பிரிந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்கள் யாராவது இருப்பார்கள.

மேஷம், துலா ராசிக்கு 9 க்கும் 12க்கும் ஒரே கிரகம் வருவதால் இந்த இரண்டு ராசிக்கு 9-க்குடையவர் பனிரெண்டில் இருப்பது நன்மைதான்.

பன்னிரண்டாம் அதிபதி கெட்டுப்போனால் ஜாதகர் ஒருவரை சார்ந்துதான் இருக்க வேண்டும்.

ஒன்பதில் சூரியன் இருந்தால்

அதேபோல் தந்தைக்குக் காரகன் வகிக்கின்ற சூரியன் 9ல் இருப்பதும் நல்லது இல்லை.

தந்தைக்கு தோஷம் இந்த விதிக்கு ஒரு விதிவிலக்கும் உண்டு.

ஆயுள் காரகன் சனி ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டில் இருந்தால் தீர்க்காயுள் உண்டு.

ஒரு பணத்திற்கு அதிபதி இரண்டாம் வீடு, தன ஸ்தானத்தை சொல்லுகிறது.

இது காரக பாவ நாஸ்தி விதிப்படி குரு இரண்டாம் வீட்டில் இருக்கக்கூடாது.

ஆனால் அனுபவ பூர்வமாக பார்த்தால் குரு ரெண்டில் இருக்க பிறந்தவர்கள் நல்ல பண வசதியுடன் தான் உள்ளார்கள்.

ஒன்பதில் சூரியன் இருப்பது தந்தைக்கு நன்மை இல்லை.

பிதுர் தோஷம் ஒன்பதாம் வீடு. உயர்கல்வியை குறிக்கும் ஒன்பதில் சூரியன், புதன் சேர்ந்து இருக்க பிறந்தவர்கள் ரொம்ப புத்திக்கூர்மையுடன் இருப்பார்கள். படிப்பு புரபஷனல் கோர்ஸ் நல்ல அறிவாளியாக இருப்பார்கள். படிப்பில் சிறந்தவர், தர்ம சிந்தனை உள்ளவர்.தந்தை பெரிய குடும்பத்தை சேர்ந்தவர், தந்தை மூத்தவர். ஜாதகரின் 9 வயதுக்கு மேல் குடும்பம் வளர்ச்சி அடையும். ஒன்பதில் சூரியன் இருந்து அதுவே லக்னமாக இருந்தால் ஜாதகர் பிறந்தவுடன் வளர்ச்சி.

ஒன்பதில் சந்திரன்

தாயாருக்கு மிக மிக நல்லது. நல்ல மனசு படைத்தவர். ஒன்பதில் சந்திரன், செவ்வாய் இருந்தால் தாயாருக்கு அடிக்கடி காயம் ஏற்படும். தாயார் அதிகமாக கடுமையான வார்த்தைகள் பேசுபவராக இருப்பார். தாயார் பயணத்தை விரும்புவார். ஒன்பது வயதில் ஒரு இடமாற்றம் இருக்கும். தந்தைக்கு விரயம் இருக்கும். தாயாருக்கு காதலுண்டு. பெண்தெய்வ வழிபாடு யோசனை இருக்கும். தந்தைக்கு கடன் விரயம் இருக்கும். ஜாதகரின் ஒரு வயதில் இடமாற்றம் இருக்கும் 12 வயதில் ஜாதகருக்கு இருக்கும். 24 வயதில் ஜாதகருக்கு காதல் இருக்கும். 36 வயது ஜாதகருக்கு ஒரு ஏமாற்றம் இருக்கும்.

ஒன்பதில் செவ்வாய்

தந்தை உடல் உபாதைகளை கொடுக்கும். இங்கு குருவோ அல்லது புதனோ இருக்க பிறந்தவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். மத ஈடுபாட்டில் நம்பிக்கையுள்ளவர்கள். தந்தைக்கு சொத்து, வழக்கு, விபத்து உண்டு. ஒன்பதில் செவ்வாய் இருந்து ராகு சாரமோ அல்லது ராகு இணைவு இருந்தால் தந்தைக்கு சொத்து வழக்கு, விபத்து உண்டு. என்று எடுக்கலாம். தந்தை மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவராக இருப்பார். செவ்வாய் இருக்கும் உறுப்பில் அல்லது செவ்வாய் சேர்ந்த உறுப்பில் தழும்பு இருக்கும்.

இதுவே பெண் ஜாதகம் ஆக இருந்தால் கணவர் வெளியூரில் இருப்பார்.

திருமணத்திற்கு பின்பு வெளிமாநிலம், வெளிநாடு பயணம் இருக்கும். கணவர் குடும்பத்தில் சொத்து இருக்கும்.

டிப்ஸ்

ஒன்பதாம் அதிபதி செவ்வாய் அல்லது சுக்கிரன் ஒரு ஏதாவது ஒரு கிரகம் செவ்வாயுடன் இணைந்து மிதுனத்தில் இருந்தால் தந்தைக்கு இரண்டு திருமணம்.

மிதுனம் இரு களத்திரம் உள்ள வீடு.

மிதுனத்தை ஒன்பதாம் அதிபதி செவ்வாயுடன் சேர்ந்த கிரகங்கள் பார்த்தாலும் தந்தை சின்ன வீட்டுக்கு போய் வந்து கொண்டிருப்பார்.

ஒன்பதில் செவ்வாய் தந்தைக்கு நீரில் கண்டம் அல்லது தண்ணி போடுவார்.

குடிகாரராக இருப்பார் 3, 8 கால் தடுமாறி விழும் பாவம் நீரில் விழுவார்.

ஒன்பதில் செவ்வாய் இருந்து மூன்று நான்காம் இடத்தை பார்த்தாள் கிணற்றில் விழுவார்கள் அல்லது தந்தை குடிகாரர்.

ஒன்பதில் புதன்

தந்தை வழியில் இரண்டு திருமணம் உண்டு. தந்தையுடன் பிறந்தவர்கள் சகோதர சகோதரி உண்டு. தந்தை புதன்கிழமை புதன் நட்சத்திரத்தில் பிறந்தவராக இருக்கலாம். திருமணத்திற்கு பின்பு காதல் வரும். ஜாதகருக்கு 9 வயதில் இடம் வாங்கி இருப்பார். 7 கட்டத்துக்கு மேல் புதன், கேது, ஐந்தாம் அதிபதி இருந்தால் மறு காதல் உண்டு. இரண்டு பெயர் உடைய தந்தையாக இருப்பார் அல்லது தந்தைக்கு பட்டப்பெயர் இருக்கும்.

தந்தை நகைச்சுவை உணர்வு உள்ளவர். தந்தை மென்மையாக பேசுவார் முதலில் சிரிப்பு பின்புதான் பேச்சு. தந்தை ஜோதிடர் ஆசிரியர் இரண்டு தொழில் செய்பவராக இருப்பார். ஜாதகருக்கு ஆன்மீக நாட்டம், ஆன்மீக புத்தகம் வீட்டில் இருக்கும் படிப்பு இருக்கும். பெருமாள் வழிபாடு உண்டு. முதல் சம்பந்தி ஏழாமிடம் இரண்டாவது சம்பந்தி ஒன்பதாம் இடம்

ஒன்பதில் குரு

ஒன்பதில் சுபர் இருப்பது நல்லது. உயர்கல்வி உண்டு. ஒன்பதில் யாவரும் சுபர்தான் எவரும் தீயவர் இல்லை. ஒன்பதில் குரு இருப்பது இடம்மாறி முன்னேற வேண்டும். வெளியூரில் தான் வருமானம் வரும்.வாடிக்கையாளர்களை பார்க்க வெளியூர் தான் போக வேண்டும். பணம் வெளியூரில் தான் கிடைக்கும். 40 45 வயதுக்கு மேல் வருமானம் உண்டு. தர்மம் செய்வார். தந்தை ஒரு டிரஸ்டில் இருப்பார். தந்தை ஆன்மீகவாதி ஒரு பதவியில் இருப்பார். வசதியானவர். தந்தை 9 வயதுக்கு மேல் குடும்பம் வளர்ச்சி. 45 வயதுக்கு மேல் பொருளாதாரம் நன்றாக இருக்கும். பின் வாழ்க்கை சிறப்பு. ஜாதகர் திருமணம், குழந்தை வந்தபின் வளர்ச்சி. ஆன்மீக நாட்டம் உண்டு. இது நல்ல அமைப்பு ஜாதகருக்கு மனிதநேயம், தர்மசிந்தனை கோவில் வேலை, பராமரிப்பு இருக்கும். கல்வி அறிவு கொண்டு சாஸ்திர ஈடுபாடு இருக்கும். திருமணம் தாமதமாக செய்வது நல்லது. சன்யாசி ஆகிவிடும் 9 ஐந்தில் குரு இருப்பது சிலருக்கு சன்யாசி ஆகிவிடும் வாய்ப்பு உள்ளது.

டிப்ஸ்

சித்தர் ஜீவ சமாதி ஆவதற்கு, மக்கள் மத்தியில் கடவுளின் அவதாரம், என்ற பெயர் பெறுவதற்கும், ஒன்பதாம் அதிபதியும் குருவும், கேதுவும், லக்னத்திற்கு தொடர்புகொண்டால் ஜாதகர் சித்தர் ஜீவசமாதி அடைவார் அல்லது மக்கள் மத்தியில் கடவுளின் அவதாரம் என்ற பெயர் பெறுவார்.

சித்தர் ஜீவ சமாதிக்கு நான்காமிடம் தொடர்பு என்றால் தாயாருக்கு வரும். 5-ஆம் இடம் என்றால் தாத்தாவுக்கு வரும்.

9-ஆம் இடம் என்றால் தந்தை கிடைக்கும்.

ஐந்து ஏழு ஒன்பது தொடர்பு வெளிநாடு வெளி மாநிலத்தில் பட்டம் படிப்புக்காக வெளியூர் மாநிலத்தில் பட்டம் பெறுவார்.

குரு பார்வை ஒன்பதாம் இடத்திற்கு ஒன்பதாம் அதிபதிக்கு ஏற்பட்டால் அரசால் கௌரவிக்கபடுவார்.

நான்கு ஒன்பது உடையவர்கள் லக்னத்தில் இருந்து குரு பார்வை இருந்தால் அரசால் கவுரவிக்கப்படுவர்.

1 4 9 குரு சம்பந்தம் அரசு பட்டம் உண்டு.

சதுர் கேந்திர யோகம் இருந்தால் அரசு பட்டம் உண்டு.

9 11 சம்பந்தம் நீண்ட ஆயுள் உண்டு.

ஒன்பதில் சுக்கிரன்

தர்மவான். தந்தை வழியில் பெண்கள் உண்டு, அத்தை உண்டு, கல்வி உண்டு. தந்தை சுகவாசி. பூர்வீக சொத்து உண்டு. ஜாதகர் பூரண சுகம் பெறுவார். இன்ப சுற்றுலா வெளியூரில் சுற்றுலா டிராவல்ஸ் நன்று. 40 வயதுக்கு மேல் கல்வி, காதல் வரும். பின் வாழ்க்கை சுகபோகம் உண்டு நாலு கட்டத்துக்கு மேல் குருவும் சுக்கிரனும் இருந்தால் பின் வாழ்க்கையில் கல்வி.

வெறும் ஐந்தாமிடம் கரூர் ஒன்பதாம் இட அதிபதி ஐந்தில் இருந்தால் கரூரில் ஜீவசமாதி இருக்கும் தந்தை அறிவாளி.

பெண் தெய்வம் உபாசனை செய்பவர்கள். பெண் குழந்தை உண்டு.

குரு, சுக்கிரன் இணைவு தொடர்பு இருந்தால் வீட்டில் கஜலட்சுமி படம் வைத்து வழிபடுவது சிறப்பு.

வெளியூர் வெளிநாடு செல்வார்கள் இவர்கள் travel செய்யும் போது ஏசி வண்டி சொகுசு வண்டில்தான் பயணம் செய்வார்கள். கண் நோய் உண்டு, தந்தை ஜாதகருக்கு இருவருக்கும கண் நோய். கண்ணாடி போடுவார்கள்.

ஒன்பதில் சுக்கிரன் இருப்பவர்களுக்கு இவர்கள் படிக்கும் ஆசிரியர் ஜாதகத்தில் கும்பத்தில் சுக்கிரன் இருக்கும்.

சுக்கிராச்சாரியாருக்கு உகந்த வீடு கும்பம் கும்ப சுக்கிரன் ஊன சுக்கிரன்.ஒன்பது வயதில் வீட்டில் சுப காரியம் நடக்கும். 21 வயதில் சுபகாரியம் இருக்கும். இப்படி 12 கூட்டி வர வேண்டும்.

இரண்டு பெண் கிரகங்கள் ஒன்பதாம் பாவத்திற்கு தொடர்பு கொண்டால் தந்தைக்கு பெண் சகவாசம் இருக்கும்.

ஒன்பதில் சுக்கிரன் இருந்தாலும் பெண் சகவாசம் தந்தைக்கு இருக்கும் அல்லது இரண்டு திருமணம் இருக்கும்.

ஏழாம் அதிபதி செவ்வாய் அல்லது சுக்கிரன் சேர்ந்து ஒன்பதில் இருந்தால் தந்தைக்கு இரண்டு திருமணம் அல்லது தந்தை வழியில் இருக்கும்.

ஒன்பதில் சனி

9 வயதில் கஷ்டம், ஒருகருமம் இருக்கும். தந்தை வழியில் குறைந்த ஆயுள் உள்ளவர்கள் 35 வயதில் இறந்தவர்கள் இருப்பார்கள். தந்தை கடின உழைப்பாளி. ஜாதகருக்கு தாமதத்திருமணம். முன்னேற்றம் குறைவு. தந்தை முதிர்ந்த தோற்றம் உடையவர். சனி பார்த்த இடத்தை கேது பார்க்கக்கூடாது சனியும் கேதுவும் சேர்ந்து ஒரு இடத்தை பார்க்க கூடாது. சனி செவ்வாய் சேர்ந்து ஒரு இடத்தை பார்க்க கூடாது அப்படி பார்க்கும் இடத்திற்கு உயிர் சேதம், நோய், வழக்கு, விபத்து, இட பிரச்சனை இப்படி ஏதாவது இருக்கும்.

இவ்வாறு பார்க்கும் இடத்தை ஒரு சுபர் அல்லது ஐந்து ஒன்பது அதிபதிகள் குரு சேர்க்கை இருந்தால் அதற்கு ஒரு பரிகாரம் ஒரு விமோச்சனம் உண்டு.

எந்த கிரகமும் பார்க்கவில்லை என்றால் அந்த இடத்திற்கு ஒரு பிரச்சனை் இருக்கும். கீழே விழுவது, காலில் அடிபடுவது, மூட்டுவலி ஏதாவது வரும். தந்தை உறவில் ஒட்டாமல் தனியாக வாழ்வார். தந்தை தனிமையாக இருப்பார். தந்தை ஏமாந்தவர் நேர்மையானவர். தந்தைக்கு விவசாய நிலங்கள் உண்டு. தொழிலில் பின் வாழ்க்கை தான் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும். ஜாதகரும் பின் வாழ்க்கையில் தான் சொந்த தொழில் செய்ய வேண்டும் தந்தைக்கு சொந்த தொழில் செய்யும் எண்ணம் இருக்கும்.

ஒன்பதில் ராகு

9 வயதில் தந்தைக்கு ஒரு கண்டம், ஒரு சர்ஜரி உண்டு. தீய பழக்கம் இருக்கும். கடன் உண்டு. பூர்வீக சொத்தில் தடை, வழக்கு உண்டு. தந்தைக்கு வெளிநாட்டு வருமானம் இருக்கும். தந்தை ஜாதகர் ஜாதகம் இருமொழி பேசக்கூடியவராக இருப்பார்கள். வெளிநாடு, வெளிமாநிலம் நன்று. ஜாதகருக்கு வெளிநாடு வெளிமாநிலம் தொடர்பு ஏற்படு்ம். தந்தை வழியில் ஒரு விஷக்கடி இருக்கும். ஆடு மாடு பிராணிகள் வளர்த்தவர் தந்தை.

ஒன்பதில் கேது

ஜோதிடம், சட்டம், மருத்துவம் சிறப்பு ஒரு சங்கம், ஒரு இயக்கத்தில் தந்தை இருப்பார். ஒன்பது வயதில் உறவில் ஒரு விரிசல் இருக்கும். எல்லாவித பாக்கியங்களையும் அனுபவிக்க தடை இருக்கும். தடையை மீறி அனுபவிக்க வேண்டும். ஆன்மீக நாட்டம் அல்லது எதிலும் பிடிப்பில்லாமல் இருப்பார். ஒரு விரக்தி, வெறுப்பு வாழ்க்கையின் மீது இருக்கும். தந்தை- ஜாதகர் இருவருக்கும் கோவில் பிரசாதம் வீடு தேடி வரும். கோவிலில் மணி எடுத்து வைப்பார்கள், கோயில் மணி அடிப்பார்கள், கேது மணி. ஆன்மீக குருமார்களின் ஆசி உண்டு. ருத்ராட்சம் இருக்கும், ருத்ராட்சம் தேடிவரும். கோவில் அருகே வீடு இருக்கும்.

சந்துக்குள் வீடு. சித்தர் வழிபாடு நல்லது ஜீவசமாதி வழிபாடு நல்லது. தந்தைக்கு ஜாதகர் பிறந்த உடன் வளர்ச்சி குறைவு. தந்தை ஒரு பதவியில் இருப்பார். பெரும்பதவி கிடைக்காது.

தந்தை வழியில்கூட பிறந்தவர்கள் பெண், வாழாத பெண் இருப்பார்கள். ஜாதகர் அல்லது தந்தை குருசாமியாக இருப்பார்கள். இவர்கள் அடுத்தவர்களுக்கு மாலை போடுவது நல்லது. குரு சனி மீனாட்சி, குரு கேது குருசாமி.

நன்றி 

வாழ்க வளமுடன்

தமிழரசன் க

தக்‌ஷா ஜோதிட நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்

https://www.dakshaastrology.com

whatsapp: +919787969698

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...