பத்தாம் பாவகம்
இது ஒரு முக்கியமான பாவமாகும். கேந்திர ஸ்தானம் ஜீவனஸ்தானம் மதிப்பு கௌரவம் குறிக்கும் பாவகம் தொழிலைக் குறிக்கும் பாவம் ஒருவரின் பொதுவாழ்வை குறைக்கும் பாவகமும் இதுதான் மதிப்பு மரியாதை உலகத்தில் உள்ள சுகங்கள் குறிக்கும் பாவம் பதவி உயர்வு. வியாபார விருத்தி சொல்லும்.
10 இல் சனி இருந்து அந்த சனியை சுபரால் பார்க்கப்பட்டால் வாழ்க்கை உயர்வாகவும் மெதுவாகவும் நிரந்தரமாகவும் இருக்கும்.
சனியை சுபர்களால் பார்க்கப்படாமல் இருந்தால் வலுவில்லாமல் சனி இருந்தால் மிக சாதாரணமான பதவி இருக்கும் உயர்ந்த நிலைக்கு வருவது மிகவும் கஷ்டம்.
நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பாவம் நாம் செய்யும் தொழிலை சொல்லித்தான் அறிமுகம் ஆகி கொள்கிறோம்
ஒவ்வொரு ராசிக்குமே ஒவ்வொரு தொழிலைச் சொல்கிறது
பத்தாம் பாவமாக மிதுன ராசி வந்தால் ஒரு டார்கெட் வைத்து தொழில் செய்வார்கள்
பத்தாம் பாவமாக சிம்மராசி வந்தால் குல தொழில் செய்வார்கள்
இவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் வேலை செய்ய மாட்டார்கள்
பெரிய மனிதர்களுக்கு இவர்கள் எடுபிடியாக செல்வார்கள்
இவர்கள் வேலையாட்களை கௌரவமாக நடத்துவார்கள்.
மகர ராசி பத்தாம் பாவமாக வந்தால் வேலையாட்களிடம் வேண்டாவெறுப்பாக பேசுவார்கள்.
துலாம் ராசி பத்தாம் பாவமாக வந்தால் பூக்கடை பழக்கடை மொத்தமாக கொள்முதல் போட்டு சில்லரையாக விற்பது.
மிதுனம் கன்னி மீனம் இவை பத்தாம் வீடாக வந்தால் டோர் டு டோர் தொழில் வரும்.
விருச்சிகம் பத்தாம் பாதகமாக வந்தால் இன்சூரன்ஸ் தொழில் செய்யலாம். மருந்து, ஸ்கேன் லேப், இசிஜி பண்ணலாம்.
விருச்சிகம் பத்தாம் வீடு அல்லது லக்னம் அல்லது ராசி அல்லது விருச்சிகத்தில் சனி அல்லது பத்தாம் அதிபதி இருந்தால் தொழில் செய்வதற்கு இந்த காரகத்துவ தொழில் செய்வது நல்லது
மகரம் ராசி சதய நட்சத்திரம், அரசு வேலை மருத்துவர் தொழில் செய்யலாம்
கும்ப ராசி ஒரு பயிற்சி தரும் ராசி கும்பம் அரசு தொடர்பு உடைய ராசி ஏனென்றால் இதற்கு நேர் ஏழாவது வீடு சிம்ம வீடு அது அரசாங்க வீடு.
அதனால் கும்பம் மத்திய அரசு பணி, ரயில்வே மருத்துவர் செய்யலாம்.
மீனம் என்றால் ஸ்கிராப் தொழில் செய்யலாம் பேங்கில் ஏலம் எடுப்பது ஏலம் எடுப்பது எதுவானாலும் செய்யலாம்.
விருச்சிகம் வில்லங்க சொத்து வாங்கினால் நன்று.
சர ராசி காரர்களுக்கு தொழில் உடனடியாக பிக்கப் ஆகும் டல்லாக இருந்தாலும் தொழிலை மூடிவிடுவார்கள்.
பயணம் சார்ந்த தொழில் அலைந்து திரிந்த தொழில் வேலை செய்யும் தொழில் அமையும்.
ஸ்திர ராசிக்காரர்களுக்கு ஒரு தொழில் செய்தால் அதன் பயன் பெறுவதற்கு கொஞ்சம் காலதாமதமாகும் ஆனால் நிலையாக இருக்கும் நீடித்து ஒரு இடத்தில் வேலை செய்வார்கள்.
உபய ராசிக்காரர்களுக்கு ஒரு தொழில் செய்து விட்டு அதை நிறுத்திவிட்டு மீண்டும் அதே தொழிலுக்கு செல்வார்கள்.
அலைந்தும் திரிந்தும் உட்கார்ந்தும் தொழில் செய்வார்கள்
தொழிலில் ஒரு அவசர குணம் இருக்கும்.
மேஷம் ஒரு பட்டறை ராசி. நெருப்பு ஊதுகுழல் குறிக்கும். சாணம் பிடிப்பது, தங்கத்தை காய்ச்சி உருக்குவது, புகைபோக்கி தொழில் செய்யலாம்.
மேஷராசிக்காரர்கள் ஒரு தொழிலை பிரம்மாண்டமாக செய்யக்கூடாது
பத்தாம் பாவகத்தின் காரகத்துவங்கள்
தொழில். ஜீவனம். நிர்வாகத்திறமை.
கர்மம்.தலைமை தாங்குதல். மாமியார். சமுதாய சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கி கூட்டுறவு வங்கியில் இரண்டு கை இணைந்த மாதிரி சின்னம் இருக்கும். கூட்டுறவு சின்னத்தை குறிப்பதால் பத்துவிரல் இணைந்துள்ளது.அதனால் இது கூட்டுறவு வங்கி பத்தாம் அதிபதி 2 10 11ம் பாவத்தில் இருந்தால் கூட்டுறவு வங்கியில் வங்கி கணக்கு இருக்கும். .பால் வளத்துறை பெரிய ஆதிக்கம். அரசுப் பணி மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் மகரம் இவையெல்லாம் அரசாங்க வீடுகள். மந்திர சக்தி, ஹோமங்கள் ஐந்து பத்து தொடர்பு 9 10 தொடர்பு இருந்தால் பெரிய அளவில் ஹோமங்கள் நடக்கும்.
அன்னதானம். சன்யாசம் வாங்குவது 5 7 9 10 12 இந்த பாவங்கள் சன்னியாச பாவகம் 10,12 பாவங்கள் 5 7 9 க்கு தொடர்பு ஏற்படக் கூடாது கேது சேர்ந்துவிட்டால் ஜாதகருக்கு திருமணமே நடக்காது. முன்னேற்றத்தை சொல்லும். முதலாளியை சொல்லும். தத்துப்பிள்ளை சொல்லும். தத்துப் பிள்ளை என்றால் ஐந்து எட்டு பத்து தொடர்பு இருந்தால்தான் தத்துப் பிள்ளை வரும். ஐந்து பிள்ளை 8 தத்து 10 தத்துப் பிள்ளை. சமூக அந்தஸ்து ஒருவரை அடையாளம் காட்டும் பாவம்.
பத்தில் சூரியன் தொடர்பு இருந்தால் மருத்துவர், தொழில் அதிபர் வருவது போல இருக்கும் 5 9 ம் பாவத்திற்கு கௌரவம் உண்டு பத்தாமிடம் வலுத்தால் 50%.கண்டிப்பாக கௌரவம் உண்டு. தர்மசிந்தனை. சன்னியாசத்தையும் வளர்ச்சி அடைய செய்யும். குதிரையில் பயணம். மருத்துவ குணம். திருமண சுகம். மூன்று, நான்கு, ஏழாமிடம் தாம்பத்திய சுகத்தை சொல்லும்.
வியாபாரம். செல்வந்தராக இருத்தல். யோசித்தல். குடை.
டிப்ஸ்
பத்தில் கிரகம் இருந்து பதினொன்றில் கிரகம் இருந்தால் தொழிலில் வருமானம் வந்துகொண்டே இருக்கும்.
10 11 இல்லாமல் பத்துக்கு இரண்டாம் பாவகம் 11 இல் மட்டுமே கிரகம் இருந்தால் 50% பலன் இருக்கும்.
பத்தாமிடம் பலம் குறைந்து பத்தாமிடம் காலியாக இருந்தது
11-ஆம் இடத்தில் சனியோ கேதுவோ இருந்தால் முதல் தொழில் விருத்தி இல்லை.
12 க்கு அடுத்து சுபர் இருந்தால் இரண்டாவது தொழில் வளர்ச்சி அடையும்
லக்னாதிபதி 1, 5, 7, 9, 10, 12 இந்த பாவகத்தில ஏதோ ஒரு பாவகத்தில் இருந்து இத்துடன் கேது இருந்தால் அவர்களுக்கு ஆன்மிகம் பலப்படும்.
இரண்டும் சேர்ந்து இருந்தால் சன்யாசி யோகம்.
இவர்களுக்கு குடும்பம் உறவு பந்தபாசம் இவையெல்லாம் இருக்காது, போய்விடும்.
பத்தாம் அதிபதி சுபக் கிரக வீட்டில் அல்லது சுப கிரகத்தின் பார்வையில் இருந்தால் ஜாதகருக்கு ஜீவனம் குறைவு இல்லை
ஏனென்றால் 3 6 10 11 இவையெல்லாம் உப ஜெய ஸ்தானம்.
அஷ்டமாதிபதியும் சனியும் மூத்த ஸ்தான அதிபதியும் பனிரெண்டாம் பாவகம் பத்தாம் அதிபதிக்கு தொடர்பு கொள்ளும்போது பத்தாம் பாவகம் கர்மமாக வேலை செய்யும்.
5 9-க்குடைய அவர்களோடு பத்துக் உடையவர் தொடர்பு பூஜை அன்னதானம் இந்த மாதிரி அவருடைய தர்மத்தை வலுவடைய வைக்கும்.
பத்தில் சூரியன்
சூரியன் ஒருவருக்கு நல்ல விதமாக அமைந்து விட்டால் மதிப்பு மரியாதை எல்லாமே அவர்களுக்கு கூடிவரும்.
அரசாங்க உத்தியோகம் கிடைக்கும்.
அரசாங்கத்தை குறிக்கும் கிரகம் சூரியன் 10 ல் சூரியன் சம்பந்தப்பட்டால் செய்யும் தொழிலில் மரியாதை கௌரவம் இருக்கும், கிடைக்கும்.
சூரியன் மேலதிகாரிகளுக்கு காரகர் வகிப்பவர்.
இவர் துணை இருந்தால் கண்டிப்பாக பதவி உயர்வு முன்னேற்றம் கிடைக்கும்.
சூரியன் தொழிலில் நிரந்தரத்தை கொடுப்பவர்.
அரசியலுக்கும் இவர் காரகம் வகிக்கிறார். அரசியலில்இவர்கள் முன்னேற முடியும்.
இவர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்துகொள்வார்கள்.
பத்தாம் பாவகம் சூரியனும் சம்பந்தப்படும்போது முதலாளித்துவத்தையும் கௌரவத்தையும் வலுப்படுத்துகிறது.
நிர்வாகிகள்.
அரசுக்கு நிகரான நிர்வாகம் இருக்கும்.
மருத்துவ குணம் இருக்கும்.
பத்தாம் அதிபதிக்கு சனி தொடர்பு இருந்தால் நீதித்துறை, நேர்மை சார்ந்த பணிகள் அமையும்.
பத்தில் சூரியன் சனி திக் பலம் ஸ்தான பலம் இந்த அமைப்பு இருந்தால் எல்லாவித அந்தஸ்தையும் கொடுக்கும்.
தந்தையின் தொழில், குல தொழில், நிர்வாகம் இவையெல்லாம் இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
இவர்கள் தொழிலில் வேலையில் தந்திரமாக செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.
இவர்களுக்கு தொழில் நோக்கம் இருக்கும்.
அரசு அரசியல் தொடர்பான ஈடுபாடு இருக்கும்.
பத்தில் சூரியன் இருந்து அரசு சம்பந்தமே இல்லையென்றால் என்றாவது ஒருநாள் இவர்களுக்கு டெண்டர் வரும்.
மருத்துவ குணம் இருக்கும்.
இவர்கள் வம்சாவழியில்
மருத்துவர் இருப்பார்கள். யாராவது இவர்களிடம் மருத்துவம் பார்த்தால் நல்ல கைராசி இருக்கும்.
தலைமை தாங்குவது.
பஞ்சு வாலாட்டி இவர்களுக்கு இருக்கும்.
இவர்களை புகழ்ந்து பேசினால் நன்றாக வேலை செய்வார்கள்.
பிரபலமான நிறுவனம் தொழிலில் வளர்ச்சி காண முடியும்.
இவர்கள் சின்ன தொழில் செய்தாலும் கூட வெளியில் நல்ல விளம்பரம் இருக்கும்.
தொழிலில் அதிக கற்பனை இருக்கும்.
ஆனால் தொழிலில் திருப்தி இருக்காது.
ஆபரணம் உண்டு.
ஆண் வாரிசு இருக்கும்.
பத்து வயதில் குடும்பம் வளர்ச்சி அடையும்.
ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும்.
திருப்தியற்ற தாம்பத்தியம் இருக்கும்.
தொழில் செய்யும் இடத்தில் ஆல் அரசு அதிக வருடமான பழைய மரம் இருக்கும்.
தொழில் செய்யும் இடத்தில் ஒரு தீபம் எரிந்து கொண்டே இருக்கும்.
ஆன்மீக குருமார்கள் சாமியார்கள் இருப்பார்கள்.
கோவில் அருகே இருப்பார்கள்.
ஒரு நாளாவது ஆன்மீக குருமார்கள் இவர்கள் வீட்டிற்கு வருவார்கள்.
தான தருமங்கள் உண்டு.
குழந்தை பிரிந்து வாழும் அல்லது குழந்தை பிறந்த பின் குடும்பம் தெரியும்.
பெரிய குடும்பத்துப் பிள்ளை.
புத்திர சோகம் இருக்கும்.
ஆண் கிரகம் கர்ம ஸ்தானத்தில் இருக்க ஆண் வாரிசு உண்டு.
ஆண் குழந்தை பற்றிய கவலையும் இருக்கும்.
புத்திர தோஷத்தை கொடுக்கும் கிரகங்கள் குரு, சூரியன், செவ்வாய் இவர்கள் புத்திர தோஷத்தை கொடுப்பதில் வல்லவர்கள்.
ஆன்மீக கிரகங்கள் சூரியன், கேது, புதன், சனி.
பத்தில் சந்திரன்
சந்திரன் நிலையில்லாத தன்மை கொண்டவர். .
சந்திரன் எங்கு இருந்தாலும் ஒரு மாற்றத்தை கொடுப்பவர்.
அதையும் தவிர மக்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பார்.
நல்ல கிரகங்களின் சேர்க்கை, பார்வை இருந்தால் மக்கள் தொடர்பு காரணமாக ரொம்ப பிரபலமாக இருப்பார்கள்.
பாபர் சேர்க்கை பெற்றிருந்தால் பொதுவாழ்க்கையில் கெட்ட பெயர் வந்து சேரும்.
இவர்கள் வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும்.
தொழிலில் இருந்தாலும், வருமானத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும்.
அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டி இருக்கும்.
சந்திரன் சர ராசியில் இருந்து பத்தாம் வீட்டோடு சம்பந்தப்பட்டால் வியாபார சம்பந்தமாக பிரயாணம் செய்ய வேண்டி வரும்.
சந்திரன் நீர் கிரகம். நீர் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பார்கள்.
சில பேர் கப்பல் சம்பந்தப்பட்ட தொழிலில் பணிபுரிவார்கள். தொழிலில் மாற்றம் வரும். தொழிலில் செய்யும் இடத்தை மாற்றுவார்கள். டிரான்ஸ்போர்ட் மூலம் வருமானம் வரும். பயணம் சார்ந்த வருமானம் உண்டு. வெளிநாட்டு வருமானம் உண்டு. இவர்கள் விவசாயம் செய்யலாம். இவர்கள் தொழில் செய்தால் பெண்களை அதிகமாக வேலைக்கு வைத்துக் கொள்வார்கள். கடல் சார்ந்த தொழில் இதில் முத்து குளித்தல், உப்பு எடுத்து வியாபாரம் செய்வது, இவர்கள் அம்மாவின் பெயரில் தொழில் இருக்கும். தொழில் செய்யும் இடத்தில் தண்ணீர் வரும். பதவி பறிபோவது Promotion மீடியா இவை சந்திரனைக் குறிக்கும். பத்தில் சந்திரனுடன் நான்காம் அதிபதி இருந்தால் அது மகர வீடாக இருந்தால் பக்கத்தில் சலவை செய்யும் இடம் இருக்கும். சாராயக்கடை, டாஸ்மார்க், கள்ளுக்கடை இவையெல்லாம் இருக்கும். இவர்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாம். தொழிலில் ஒரு விரையம் இருக்கும். ஒரு ஏமாற்றம் இருக்கும். பத்து வயதில் ஒரு இடமாற்றம் இருக்கும். இவர்கள் ஒரு ஏமாற்றத்தையும் சந்திப்பார்கள். பத்து வயதில் தாய்வழியில் ஒருகருமம் இருக்கும். ஜவுளி தொழில் பண்ணலாம். காய்கறிக் கடை வைக்கலாம், பழக்கடை வைக்கலாம்.
பத்தில் செவ்வாய்
செவ்வாய் தைரியத்தை குறிக்கும் கிரகம். போலீஸ் ராணுவம் இந்த மாதிரி தொழில் அமையும். தொழிற்சாலைகள், இயந்திரங்கள் இவையெல்லாம் செவ்வாய் குறிப்பதால் இவை சம்பந்தப்பட்ட வேலையை கொடுப்பார். நெருப்பும் இவர் அதிபதியாக இருப்பதால் நெருப்பு சம்பந்தமான வேலையும் இவர் கொடுப்பார். நிலம் வீடு போன்ற ஸ்திர சொத்துக்கும் இவர் அதிபதியாக வருவதால் இது சம்பந்தமான வேலைகளும் ஜாதகர் ஈடுபடுவார். செவ்வாய் நல்ல நிலைமையில் இருக்கப் பிறந்தவர்கள் வீடு வாங்கி விற்பது, ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் செய்வார்கள். செவ்வாய் வலு இல்லாமல் இருந்தால் வீட்டு வேலை செய்யும் தொழிலாளியாக இருப்பார்கள்.
சனியும் செவ்வாயும் சேர்க்கை இருந்தால் 10 வயதில் சொத்து இருக்கும். ஒரு ஆண் வாரிசு உண்டு. மருத்துவ குணம் இருக்கும். இவர்கள் வீட்டில் சீருடை பணிகள் உள்ளவர்கள் யாராவது இருப்பார்கள். இயந்திரம் தொடர்புடைய தொழில், சமையல், வாகன சம்பந்தப்பட்ட தொழில் இவையெல்லாம் பண்ணலாம். தொழிலில் சகோதரனை கூட வைத்துக்கொள்வார்கள். கடன் உண்டு. வழக்கு உண்டு. செவ்வாய் என்பது ஆன்மிக கிரகம், குடும்பத்தை பிரிந்து இருப்பது மனைவி, மக்களை பிரிப்பதில் வல்லமை உள்ள கிரகம் செவ்வாய்.
இவர்கள் இருப்பிடத்தை விட்டு வெளியில் போனால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கால் மூட்டுகளில் காயம் ஏற்படும். ஒரு வெட்டு காயம் தழும்பு இருக்கும். தொழிலுக்காக வாகனம் வைத்துக் கொள்வார்கள்.
மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் இவை பத்தாம் வீடாக வந்தால் அரசு வாகனம் பயன்படுத்துவார்கள்.
திதி சூன்யம் பாதகம் இருந்தால் குற்றவாளி, தண்டனை என்று போய் போலீஸ் வாகனம் இருக்கும். இவர்கள் தொழில் செய்யும் இடத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். தொழிலில் ஒரு டென்ஷன் இருக்கும். தொழில் சம்பந்தமாக போலீஸ் வருவார்கள். ஒரு ஆயுதம் இருக்கும். ஆயுதம் சார்ந்த தொழிலும் அமையும். தொழிலுக்கு இவர்கள் கரடுமுரடான பாதையை கடந்து செல்ல வேண்டி வரும். தொழிலில் ஒரு திருட்டும் நடக்கும்.
பத்தில் புதன் இருந்தால்
கமிஷன் வியாபாரம். ஏஜென்சி தொழில் இந்தத் தொழிலில் ஜாதகருக்கு நாட்டம் இருக்கும். புதன் அறிவுக்கூர்மையை குறிக்கும் கிரகம்அதனால் புத்திக் கூர்மையை கொண்டுள்ள தொழிலில் சிறந்து விளங்குவார்கள். ஆலோசனை தொழில். ஜோதிடம், மாந்திரீகம் ஈடுபாடுடன் வேலை செய்வார்கள்.புதன் இரட்டை கிரகம் ஒரு சிலர் இரண்டு விதமான தொழில் செய்வார்கள். இரண்டு தொழில் அமையும். பத்தாமிடத்தோடு புதன் சம்பந்தப்பட்டால் எஜமானனாக இருப்பதைவிட ஒருவருக்கு கீழ் இருப்பதை விரும்புவார்கள்.இரண்டு தொழில், இரண்டு வருமானம். ஜோதிடர் ஆசிரியர் இருப்பார்கள். பணம் பரிவர்த்தனை, translation ,கம்யூனிகேஷன், ரீசார்ஜ் ஜெராக்ஸ், கூட்டுத் தொழில் செய்யலாம். பத்து வயதில் ஒரு பாகப்பிரிவினை இருக்கும். ஏஜென்சி, பத்திரிக்கை, நியூஸ் பேப்பர் செய்திகள், டெண்டர் போடுவது இந்தமாதிரி தொழிலும் பண்ணலாம். தொழிலுக்காக வங்கிகள் கடன் வாங்குவார்கள். 40 வயதுக்கு மேலேயும் தொழில் செய்து கொண்டு படிப்பார்கள் MLM தொழில் பண்ணலாம் அதாவது செயின் லிங்க். தவணை முறையில் தொழில். சீட்டு தொழில். ஆடிட்டர். தாய்மாமன் உடைய தொழில் பண்ணலாம்.
பத்தில் குரு இருந்தால்
குரு ஒரு சுப கிரகம். புகழையும் பதவியும் கொடுப்பார். குரு தன காரகன். பணம் புழங்குகின்ற இடத்தில் இவர்களுக்கு வேலை அமையும். பேங்க், கருவூலங்கள் அந்த மாதிரி பணம் புழங்கும் இடத்தில் வேலை கிடைக்கும். நியாயமான முறையில் சம்பாதிப்பார்கள். குரு வேதாந்தம் மதங்களை குறிக்கும் இது சம்பந்தமான வேலையும் கிடைக்கும். குருவானவர் உயர்ந்த பதவியை கொடுப்பார். குருவுக்கு பாவரோட சேர்க்கையோ பார்வையோ இருந்தால் மிக மிக சாதாரணமான பதவியில் தான் இருப்பார்கள். ஆண் வாரிசு உண்டு. ஆண் குழந்தையை பற்றிய கவலை இருந்துகொண்டே இருக்கும். தொழிலில் ஒரு வளர்ச்சி இருக்கும். ஒரு பதவியில் இருப்பவர்களிடம் பொறுப்பில் உள்ளவர்களிடம் தொடர்பில் இருப்பார். குருவின் நட்சத்திரம் உடைந்த நட்சத்திரம் பயணம் கலந்த தொழில் இருக்கும். ஜோதிடத்தில் மிகத்தெளிவான நீட்டான வெளிப்பாடு இருக்கும்.இவர்கள் குடும்பத்தில் அன்ன தானம் செய்தவர்கள் யாராவது இருப்பார்கள்.
இவர்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி இருக்கும் இவர்கள் அன்னதானம் கொடுத்து மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். ஆடை தானம் பண்ணலாம். கோவில் திருப்பணி செய்யலாம்.
சூரியனும் குருவும் சேர்ந்தால் மதம் சார்ந்த தொழில் பண்ணுவார்கள். ஷேர் மார்க்கெட் செய்யலாம்குழந்தை பிறந்த போது ஒரு கர்மம் இருக்கும். பத்து வயது இருக்கும் போது ஒரு குழந்தை உறவில் பிறந்திருக்கும். கோவில் அருகே வீடு இருக்கும். குழந்தைகளுக்காக சேமித்து வைப்பது குரு.
பத்தில் குரு இருந்து ஏழாம் பார்வையாக நான்காம் இடத்தை பார்ப்பதால் சொத்தை இழக்க வைத்து பின் வாழ்க்கையில் சுகபோகமான வாழ்க்கையை கொடுக்கும். குருவின்ஏழாம் பார்வை கேந்திர பார்வை இது சிறப்பு இருக்காது. குரு புதன் சுக்கிரன் 7 கட்டத்திற்கு மேல்யாராவது ஒருவர் இருப்பது சிறப்பு.
பத்தில் சுக்கிரன் இருந்தால்
கலைக்கு அதிபதியான கிரகம் சுக்கிரன். இவர் பத்தாம் வீட்டோடு சம்பந்தப்பட்டால் கலைத் தொழிலில் பிரகாசிக்கலாம். வண்டி, வாகனம் குறிக்கும்கிரகம் சுக்கிரன்.வாகனம் சம்பந்தப்பட்ட துறையிலும் பணி புரியலாம். சுக்கிரன் பெண்களுக்கு காரகம் வகிப்பவர். சுக்கிரன் சுபர்களின் சேர்க்கையோ பார்வையோ இருந்தால் பெண்களால் அனுகூலம் அடைவார்கள். இரண்டாம் இரண்டாம் வீட்டுடன் சம்பந்தம் ஆனால் ரொம்ப இனிமையாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். அழகு சாதனத்தை குறிப்பவர் சுக்கிரன்தான் அழகு சாதனம் சம்பந்தப்பட்ட தொழிலும் செய்யலாம். வாகன தொழில், சுற்றுலா தொழில், சினிமா தொழில். அழகுக்கலை தொழில், வெள்ளி ஆடை ஆபரணம். பசு வளர்த்தல். உல்லாச விடுதி தொழில் செய்யலாம். மனைவியால் வருமானம் இருக்கும். மனைவி பெயரில் தொழிலில் இருக்கும். பட்டு தொழில், பட்டுப்பூச்சி வளர்த்தல். உயர்ரக மதுபானங்கள். ஆடம்பர பொருட்கள், அழகு பொருட்கள். வீட்டு உபயோக பொருட்கள். பசு பண்ணை, பால்பண்ணை. பழக்கடை. இனிப்பு தொழில் செய்யலாம். பத்து வயதில் உறவில் ஒரு திருமணம் நடந்திருக்கும்
பத்தில் சனி இருந்தால்
பத்து வயதில் ஒரு கர்மம் இருக்கும். சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் இருக்கும். 50 வயதுக்கு மேல் வளர்ச்சி உண்டு. உழைப்பின் மூலம் வருமானம் இருக்கும்.சனி நேர்மையான கிரகம் பொதுசேவை ஈடுபாடு இருக்கும். வர்மம். நரம்பு எண்ணெய். இயற்கை மருத்துவம் இது இவர்களுக்கு பிடித்தமான தொழில். தொழிலில் திருப்தி இல்லாமல் பணம் வாங்குவார்கள்.
இவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.
இவர்கள் நன்றாக வேலை செய்தால் தான் மனசு சாந்தியடையும். தொழிலில் தடை தாமதம் இருக்கும். குப்பை மேடு, கழிவுதொல்லைகள் இருக்கும். டெலிபோன், ஜெராக்ஸ் கடை வைக்கலாம். முடி வெட்டுதல். Scrap ஏலம் எடுத்தல்.மணல் குவாரி. கார் வண்டி .கிரானைட் தொழில் செய்யலாம். இவர்கள் தொழில் சுடுகாடு அருகே தான் இருக்கும். தோல் shop வைக்கலாம். இவர்கள் வாழ்க்கையில் கஷ்டபடுவார்கள். வாழ்க்கையின் பிற்பகுதி சிறப்பாக இருக்கும். 40 வயதுக்கு மேல் தான் முதலீடு போட்டு வேலை செய்வார்கள். உபஜெய ஸ்தானத்தில் பாவர்கள் இருந்தால் பெரும்பாலும் நல்ல பலன்களையே கொடுப்பார்கள்.
டிப்ஸ்
உபஜெய ஸ்தானத்தில் 3, 6, 10, 11 இல் பாவிகள் இருந்தால் நன்மையான யோகம் தான். ஆனால் ஆரோக்கியம் குறைவாக இருக்கும் உபஜெய ஸ்தானத்தில் சுபர்கள் இருந்தால் யோக பலன் குறைவு பாதுகாப்பு அதிகமாக இருக்கும்.
பத்தில் ராகு இருந்தால்
வெளிநாடு, வெளிமாநிலம், ஏற்றுமதி-இறக்குமதி. உதிரிபாகங்கள் தொழில் செய்யலாம். சர்வீஸ், ரிப்பேர். ஸ்பேர் பார்ட்ஸ் கடை. பிளாஸ்டிக், பாலித்தின். விஷ மருந்து. டாஸ்மார்க். ரகசிய தொழில். கொலைத் தொழில். ஸ்டூடியோ, கேமரா, பிலிம், பிம்பம் தொழில்கள் அமையும். எலக்ட்ரானிக்ஸ் பண்ணலாம்ஜோதிடம் மாந்திரீகம், வாஸ்து பண்ணலாம். ராகுவின் ஆதிக்கம் இருந்தாலே ஜோதிடத்தில் ஜெயிக்கலாம் அதிர்வலைகளை கண்டறிய ராகு பயன்படும் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்வார்கள். பத்து வயதில் ஜாதகருக்கு மூன்று கண்டம் வந்திருக்கும்.பத்தில் ராகு இருந்தால் மாமியார் இவர்கள் வீட்டில் தான் இருப்பார்
பத்தில் கேது இருந்தால்
மருத்துவம் நன்று. ஜோதிடம் நன்று. சந்துக்குள் தொழில் இருக்கும். பெரிய இடம் இவர்களுக்கு ஆகாது. தொழிலில் தடை தாமதம் இருக்கும். தொழிலில் வழக்கு இருக்கும். கடன் உண்டு. இவர்கள் தொழில் செய்யும் இடத்தில் விநாயகர் கோவில் ஆஞ்சநேயர் கோவில் இருக்கும். கர்மம் செய்வதற்கு தடை இருக்கும். கேது என்றாலே பின்ன கூடியது டிசைன் போடுவதுப்ளூ பிரிண்ட். சென்ட்ரிங் வேலை செய்யலாம். தொழிலில் ஒரு விரக்தி இருக்கும் சனி என்றால் தொழில் காரகன். சனியுடன் குரு, சுக்கிரன், புதன், சூரியன், ராகு இவர்கள் யாராவது ஒருவர் சேர்ந்தால் ஒரு வளர்ச்சி இருக்கும். சனியுடன் கேது சந்திரன் செவ்வாய் சேர்ந்தால் பலவீனமாகத்தான் இருக்கும்.
பத்தாம் அதிபதி லக்னத்தில்
ஜாதகருக்கு ஜீவன குறைவு கிடையாது, ஆனால் அதில் திருப்தி இருக்காது. தலைமை தாங்குதல் முதலாளி தோரணை இருக்கும். நிர்வாக திறமை இருக்கும். சொந்தத்தில் தொழில் செய்யும் எண்ணம் இருக்கும். பிறக்கும்போதே ஒருகர்மம் இருக்கும். ஒரு பதவியில் இருப்பார். இவர் புகழுக்காக ஏங்குவார். அன்னதானம், தானதர்மம், கர்மம் செய்யும் பாக்கியம் இருக்கும். பதவியில் இருக்கும்போதே மரணமடைவார்கள். சங்க கூட்டம், தலைமை தாங்குவது, சமுதாய கணக்கு வழக்கு பார்த்தல். ஆன்மீக நாட்டம் இவர்களுக்கு இருக்கும். மணவாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சுயமாக சமைத்து சாப்பிடுவார்கள். இந்த இடத்தை குரு பார்த்தால் அரசு வெகுமதி இருக்கும்.
சூரியன் பார்த்தால் ஆன்மீகத் தலைவர் அரசு பொறுப்புள்ள பதவி கிடைக்கும்.
சுக்கிரன் பார்த்தால் நல்ல பதவி இருக்கும் இவர் ஒரு கர்மத்திற்கு போனபின்பு கருத்தரித்தவராக இருப்பார்.
பத்தாம் அதிபதி லக்னத்தில் இருந்து அந்த பாவத்திற்கு 5 9 தொடர்பு இருந்தால், ஜாதகருக்கு குலத்தொழில் அமையும். வாரிசு தொழில் அமையும்.
ஒன்பதாம் அதிபதி பத்தில் இருந்தால் தர்ம கர்மாதி யோகம் செயல்படும்.
பத்தாம் அதிபதி 9 ல் இருந்தால் இவர் தர்மம் செய்தால் இவர் பெயர் நிலைக்காது.
பத்தாம் அதிபதி இரண்டில்
வாக்கால் தொழில். பணம் சார்ந்த தொழில் அமையும். தந்தையின் சொத்து பணம் கிடைக்கும். இவர்கள் உணவு தொழில் பார்த்தாலும் உணவுத் தொழிலில் இருந்தாலும் சிறப்பு. டிவியில் பேசும் தொழில் செய்யலாம். டப்பிங் வாய்ஸ் கொடுக்கலாம். சின்னத்திரையில் ஈடுபாடு இருக்கும். பல குரலில் பேசுவார்கள். அதிகமாக பேசுவார்கள் இவர்களை முதலில் பேசுவது நல்லது. இந்த ஸ்தானத்திற்கு திதி சூன்யம் தொடர்பு இருந்தால் எந்த ஒரு பிரச்சனைக்கும் சண்டைக்குப் போய் விடுவார்கள். இவர்கள் நிர்வாகத்தில் ஒரு அட்வைசர் ஆக இருப்பது நல்லது. தானியத்தை இருப்பு வைப்பது நல்லது. இவர்கள் வாழ்க்கையில் மாமியார் தலையீடு இருக்கும். இரண்டு வயதில் ஒரு கர்மம் இருக்கும். இவர் பேச்சால் பிறரை கவரும் தன்மை இருக்கும். 10, 5, 2 சம்மந்தம் இருந்தால் கோவில் திருப்பணி செய்யலாம். அன்னதானம் பண்ணலாம். குலதெய்வ கோவிலுக்கு திருப்பணி செய்யலாம். இவர்கள் வேலை செய்துகொண்டே படிப்பார்கள். படிக்கும்போதே வருமானம் இருக்கும். பார்ட் டைம் வேலைக்கு போவார்கள். பெரியம்மாவுக்கு ஆண் வாரிசு இருக்கும். இரண்டு வயதில் குடும்பத்தில் இரண்டு வருமானம் வந்திருக்கும். 20 26 வயதில் தொழில் செய்து இருப்பார்கள். தொழில் செய்யும் இடம் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும்
பத்தாம் அதிபதி மூன்றாம் பாவத்தில்
30 வயதுக்கு மேல் தொழில் அமையும். தொழிலில் இடமோ, தொழிலோ மாற்றுவார்கள். சிறு பயணம் சார்ந்த தொழிலாக இருக்கும். தொழிலுக்காக வெளியூர் போவார்கள். சகோதரனுடன் தொழில் பண்ணுவார்கள். 3 வயதில் ஒரு கர்மம் இருக்கும். சொந்த முயற்சியில் தொழில் செய்வார்கள். தொழிலில் புகழ்.
கமிஷன், எழுத்து, தகவல்தொடர்பு இவற்றில் வருவாய் சம்பாதிக்கலாம்.
இந்த பாவத்தில் குரு சுக்கிரன் தொடர்பு இருந்தால் ஆடை ஆபரணம் தொழில் செய்யலாம்.
செவ்வாய் சூரியன் தொடர்பு இருந்தால் அதிகாரமிக்க தொழில் பண்ணலாம்.
தொழிலில் அலைச்சல் இருக்கும், அவசரத் தன்மை இருக்கும். இந்த அவசர தன்மையால் ஒரு இழப்பும் இருக்கும்.
பத்தாம் அதிபதி மூன்றாம் இடத்தை பார்த்தால் அவசர புத்தியால் தொழில் இருக்கும்.
பத்தாம் அதிபதி மூன்றிலிருந்து மூன்றாம் அதிபதி பலம் குறைந்தால் மாமனார் இருக்கமாட்டார்.தொழிலுக்காக பயணம் இருக்கும். மார்க்கெட்டிங் தொழில் செய்யலாம். முதல் தொழில் மாற்றத்தை உண்டு பண்ணும். தொழில் செய்யும் இடத்தில் ஒரு தற்கொலை இருக்கும். கம்யூனிகேஷன் தொழில் அமையும். தொழிலுக்காக மலேசியா, சிங்கப்பூர் வெளிநாடு போவார்கள். இவர்கள் போலீஸ் ராணுவத்தில் வேலைக்கு முயற்சி பண்ணி இருப்பார்கள். ஒப்பந்த தொழில்கள் அமையும். மூன்று தொழில்கள் அமையும். இவர்கள் குடும்பத்தில் ஆசிரியர், ஜோதிடர் யாராவது இருப்பார்கள்.
செவ்வாய் கேது சம்மந்தம் இந்தப் பாவத்திற்கு இருந்தால் மருத்துவர் இருப்பார்கள். தொழிலில் ஒரு வழக்கு இருக்கும். சகோதர சகோதரிக்கு உத்தியோகம் இருக்கும். பத்தாம் அதிபதி எங்கு போனாலும் ஆண் வாரிசு கொடுப்பார். கம்ப்யூட்டர் டிசைன், ஓவியம் இவற்றில் நாட்டம் இருக்கும். 30 வயதில் சொந்த தொழில் அமையும். சகோதர வர்க்கத்தில் கர்மம் செய்ய ஒரு ஆண் வாரிசு இருப்பார்
பத்தாம் அதிபதி நான்காம் பாவத்தில்
பத்தாம் அதிபதி மட்டும் நான்காம் பாவத்தில் இருந்தால் உள்ளூரில் தொழில் இருக்கும். நான்கு வயதில் ஒரு கர்மம் இருக்கும். இந்த பாவத்திற்கு 7, 9, 12 தொடர்பு இருந்தால் வெளிநாட்டில் தொழில் இருக்கும். விரையாதிபதி தொடர்பு இருந்தால் உள்ளூரில் சொத்தை விற்றுவிட்டு வெளிநாடு போவார்கள். வீட்டில் இருந்து கொண்டு தொழில் செய்யலாம். 7, 9 தொடர்பு இருந்தால் வெளியூரில் தொழில் செய்த ஆசைப்படுவார்கள். பத்தாம் அதிபதி நான்கில் இருந்தால் உள்ளூரில் தொழில். 7, 9 தொடர்பு இருந்தால் உள்ளூரில் உற்பத்தி வெளியூரில் விற்பனை. வீட்டில் தொழில் செய்வது. பண்ணை தொழில். கால்நடை வண்டி. நீர் சார்ந்த தொழில். கட்டிடம் சார்ந்த தொழில் செய்யலாம். பத்தாம் அதிபதி சுபராக இருந்து அவர் நான்கில் இருந்தால் சொத்தை தொழிலுக்காக இழப்பார்கள். இவர்கள் வீடு கட்டி வாடகைக்கு விடலாம். புக் ஸ்டால் வைக்கலாம். பில்டிங் கட்டலாம். விவசாயம் மூலம்வருமானம் இருக்கும். பால் தயிர் மோர் விற்பனை செய்யலாம். போர்வெல் வாகனத்தை இயக்கலாம். இதில் மாந்தி நின்றால் கர்ம வாகனத்தை இயக்கலாம். கர்மம் சொந்த ஊரில் நடக்கும். வீடு கட்டும்போது ஒரு கர்மம் இருக்கும். நான்கு வயதில் ஒரு கர்மம் இருக்கும். தொழில் செய்யும் இடம் ஆற்றுக்கு பக்கத்தில் இருக்கும் அல்லது கிணற்றுக்கு பக்கத்தில் இருக்கும்.
பத்தாம் அதிபதி ஐந்தாம் பாவகத்தில்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். இவர்களுக்கு உழைக்காத வருமானம் இருக்கும். அறிவை பயன்படுத்தி செய்யும் தொழில் அமையும். தாய்மாமனுடன் தொழில் செய்யலாம். குலத் தொழில் செய்யலாம். இவர்கள் முதலீடு போட்டு தொழில் பண்ண கூடாது. அறிவைப் பயன்படுத்தி செய்யும் தொழிலைத்தான் இவர்கள் செய்ய வேண்டும். ஷேர் மார்க்கெட், ஜோதிடம், மந்திரம் ஜெபம், பஜனை கலைத் தொழில் பயிற்சி மையங்கள் அமைக்கலாம்.யோகா, மெடிடேஷன், சிட்பண்ட்ஸ் இவை எல்லாம் செய்யலாம், இவர்களுக்கு மனிதாபிமானம் இருக்கும். தான தர்மங்கள் பண்ணுவார்கள். பெரும்பாலும் ஆசிரியர் தொழில் அமையும். இவர்களுக்கு தொழில் தேடி வரும். தாய்மாமனுக்கு ஆண் வாரிசு இருக்கும். இவர்களுக்கு ஆன்மீகம் அதிகமாக இருக்கும் அதனால் சன்யாச நாட்டம் அதிகமாக இருக்கும். ஐந்து வயதில் ஒரு கர்மம் இருக்கும். இவர்கள் தொழில் பள்ளி கல்லூரி அருகே இருக்கும். குழந்தை தத்து போகும் அல்லது தத்து எடுப்பார்கள். இந்த மாதிரியான அமைப்புக்கு 5 8 10 சம்மந்தம் இருக்க வேண்டும்.
திதி சூனியம் பாதகாதிபதி சம்பந்தப்பட்டால் தாத்தா காணாமல் போவார். தாய்மாமனுக்கு ஒரு பதவி இருக்கும். புத்திர தோஷத்தை சொல்லும். தாய்மாமனுக்கு புத்திர தோஷம் இருக்கும். இவர்கள் மற்றவர் கல்விக்காக உதவுவார்கள். மருந்து தானம் பண்ணுவார்கள். தொழிலில் வழக்கு இருக்கும். தொழிலில் ஆர்வமும் பக்தியும் அதிகமாக இருக்கும். இவர்கள் செய்யும் தொழிலே தெய்வம் என்று இருப்பார்கள். இஷ்ட தெய்வத்தை இவர்கள் உபாசனை செய்வது ரொம்ப நல்லது.
ஜீவ சமாதி வழிபாடு நல்லது இவையெல்லாம் செய்தால் இவர்களுக்கு தொழில்ரீதியாக அந்தஸ்து இருக்கும்.
பத்தாம் அதிபதி ஐந்தில் நின்றால் குழந்தைக்கு கர்மம் செய்வார்கள்.
இவர்கள் சுகபோகத்தை விட்டு கொடுத்தால் முன்னேற்றம் அடையலாம்.
பத்தாம் அதிபதி ஆறாம் பாவத்தில்
இவர்கள் உணவு தொழில் செய்யலாம். இரவு வேலை செய்யலாம். ஏற்றுமதி இறக்குமதி செய்யலாம். குறைந்த முதலீட்டில் தொழில் செய்யலாம். இவர்களுக்கு வேலை தான் நல்லது. தொழில் என்று போனால் கடன், பகை, எதிரி இருக்கும். கடன் வாங்கி தொழில் செய்வார்கள். 50 வயதுக்கு மேல் சொந்த தொழிலில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு வேலை நன்று. ஆறு வயதில் ஒரு கர்மம் இருக்கும். இவர்கள் சுற்றுலா விடுதி, பைவ் ஸ்டார் ஹோட்டல் தொழில் செய்யலாம். போலீஸ், ராணுவம், போக்குவரத்து தொழில் செய்யலாம். மீன் பிடி தொழில், மீன் விற்பனை தொழில்கள் செய்யலாம். டிராவல்ஸ் ஏஜென்சி இந்த மாதிரி தொழில்கள் செய்யலாம். ஆறாம் இடம் என்பது சிறு தொழிலை குறிக்கும், சிறு தொழில் செய்யலாம். ஆறாம் இடம் கெட்டுப் போய் விட்டால் இவர்களுக்கு மாத சம்பளம் முழுமையாக கிடைக்காது. முழு சம்பளமாக வராது. புதன் நன்றாக இருந்தால் வார சம்பளம். புதன் கெட்டுப் போய்விட்டால் அது தினக்கூலியாக மாறிவிடும். சொந்த தொழிலும் ஆகாது, முதலீடும் ஆகாது. இவர்களுக்கு check சம்பந்தமான ஒரு பிரச்சனை இருக்கும். நான்கு ஆறு அதிபதிகள் எதை தொட்டாலும் பார்த்தாலும் நாய்கடி இருக்கும்.
அந்த காரக கிரகத்துக்கும் செவ்வாய் நட்சத்திரம் இருக்கும் வீட்டில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் நீசத்தில் இருந்தாலும் அவர்களுக்கு நாய் கடி இருக்கும்.
இவர்கள் விடாமுயற்சி செய்து 40 வயதிற்கு மேல் வெற்றி அடைவார்கள். முன்னேற்றம் உண்டு.
லக்னத்தில் இருந்து முதல் ஐந்து கட்டத்திற்குள் பத்தாம் அதிபதி இருந்தால் ஜாதகர் தொழில் செய்வார்.
ஐந்து கட்டத்திற்குள் ஆறாம் அதிபதி இருந்தால் உத்தியோகம் பார்ப்பார்.
ஆறாம் அதிபதி வலுத்து விட்டால் உத்தியோகம் மட்டும் பார்ப்பார்.
பத்தாம் அதிபதி வலுத்தால் தொழில் மட்டுமே செய்வார்
பத்தாம் அதிபதி ஏழாம் பாவத்தில்
மனைவி பெயரில் தொழில் அமையும். கூட்டுத் தொழில் அமையும். திருமணத்திற்கு பிறகு தொழில் இருக்கும். திருமணத்தின்போது ஒரு கர்மம் இருக்கும். ஏழு வயதில் ஒரு கர்மம் இருக்கும். தொழில் செய்யும் இடத்தில் இவர்களுக்கு மனைவி அமைவார்கள் தொழிலுக்காக இவர்கள் நீண்ட தூரம் செல்வார்கள். இதில் கேது தொடர்பு கொண்டால் தாமத திருமணம் திருமணத் தடையை செய்துவிடும் .
5 7 9 10 12 ஆம் பாவத்திற்கு கேது தொடர்பு இருக்கக்கூடாது.
இரண்டாவது குழந்தை பிறந்தபின் இவர்களுக்கு சொந்த தொழில் அமையும். நல்ல பதவியில் இருப்பார்கள். சூரியன் குரு தொடர்பு இருந்தால் அரசியலில் ஈடுபாடு இருக்கும். மனைவி பெரிய இடத்து பிள்ளையாக இருக்கும், மனைவி தத்து போனவராக இருப்பார். இவர்களுக்கு பெண்ணை பிடித்துள்ளதா என்று தெரிந்துகொண்டு உறுதியாக தெரிந்து திருமண ஏற்பாடுகள் திருமண முடிவு செய்ய வேண்டும்
பத்தாம் அதிபதி எட்டாம் பாவத்தில்
இவர்களுக்கு கர்மம் செய்ய தடை இருக்கும். 10, 8 சம்மந்தம் இருந்தால் எந்த கர்ம த்திலும் கலந்து கொள்ளாதவர்களாக இருப்பார்கள், தொழிலில் ஒரு வழக்கு இருக்கும். ஒரு அவ சொல் இருக்கும். திருட்டு இருக்கும். எல்ஐசி பிஎஃப் இவை நன்று. மாந்திரீகம், செய்வினை, பேய் ஓட்டுவது இதிலெல்லாம் ஈடுபாடு இருக்கும். இதனால் தொழிலில் பாதிப்பு இருக்கும். முதியோர் இல்லம் நடத்துவதில் ஈடுபாடு இருக்கும். பில் போடாத தொழில் இவர்களுக்கு அமையும். தவறான ஆவணம் பயன்படுத்தி தொழில் செய்வார்கள். இவர்கள் தொழிலை மற்றவர்கள் அபகரிப்பார்கள். டாஸ்மார்க், குப்பை, காண்ட்ராக்ட், Scrap contract இதையெல்லாம் செய்யலாம். எட்டு வயதில் ஒரு கர்மம் இருக்கும். மாமியாருக்கு ஒரு சர்ஜரி இருக்கும். ஆயில், டீசல், பெட்ரோல் பங்க் இதில் வேலை செய்யலாம். இவர்கள் அதிகமாக வட்டி கட்டுவார்கள். குவாரி மண் சம்பந்தப்பட்ட தொழில் செய்யலாம். மறைவிட தொழில் செய்யலாம். பத்தாம் அதிபதி எட்டில் இருப்பவர்களுக்கு லக்னத்தில் சந்திரன் மாந்தி இருந்தால் இவர்கள் யாருக்குமே உணவு சாப்பிட கொடுக்க கூடாது, மீறி கொடுத்தால் அது வம்பில் போய் முடியும்.
பத்தாம் அதிபதி ஒன்பதாம் பாவத்தில்
இது அவ தர்மகர்மாதிபதி யோகம். ஒரு விஷயத்துக்காக செலவு செய்து அவச்சொல் வரும். ஒன்பது வயதில் ஒரு கர்மம் இருக்கும். தந்தையின் தொழிலை செய்யலாம். ஆன்மீக யாத்திரை போகலாம். குருமார்களின் ஆசிர்வாதம் இருக்கும். ஆசிரியர் பெரியோர்களின் உபதேசம் இருக்கும். அரசு அரசாங்க தொடர்பு இருக்கும். இவர்கள் கௌரவமாக இருப்பார்கள். இவர்கள் மதம் சத்திரம் கோவில் இவையெல்லாம் பராமரிப்பு செய்யலாம். இவர்களின் தந்தையின் குடும்பம் பெரியதாக இருக்கும். தந்தைவழியில் பதவியில் உள்ளவர்கள் இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களிடம் பலனை எதிர்பாராமல் தர்மம் செய்வது நல்லது, எதிர்பார்த்து தர்மம் செய்தால் ஏமாற்றம் தான் வரும்.
ஜீவசமாதி, கல்லறை வழிபாடு நன்று. இவர்களுக்கு தொழில் தேடி வரும். மூன்றாவது குழந்தை இவர்களுக்கு அபார்ஷன் ஆகி இருக்கும். இந்த இடத்தில் கேது சம்பந்தப்பட்டால் தந்தைக்கு கல்லறை இருக்கும்.
பத்தாம் அதிபதி பத்தாம் பாவத்தில்
இவர்களுக்கு நல்ல கௌரவம் இருக்கும். ஜீவன யோகம் இருக்கும். தாமத திருமணம் உண்டு. நிர்வாகத்திறன் நன்றாக இருக்கும். எதிலும் தலைமை தாங்கும் அமைப்பு இருக்கும். தானாகவே சமைத்து சாப்பிடுவார்கள். பிற்கால வாழ்க்கை இவர்களுக்கு நன்றாக இருக்கும். ஓய்வு ஊதியம் வாங்கும் யோகம் இருக்கும். Trust, சமுதாயம் கணக்கு பார்த்தல், விவசாயம் செய்யலாம். கர்மம் செய்ய ஒரு குழந்தை இருக்கும். மாமியார் வசதியானவர். இவர்களுக்கு வம்சம் விருத்தியாகும். 5 9 10 இந்த அதிபதிகள் யாராவது ஒருவர் லக்னத்திற்கு தொடர்பு கொண்டால் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
பத்தாம் அதிபதி 11ல் இருந்தால்
தொழிலில் லாபம் இருக்கும். பேராசை இருக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். சிலருக்கு இருதார யோகம் இருக்கும். இவர்கள் வேலைக்கு வந்தவர்களை இரண்டாம் தாரமாக கட்டிக் கொள்வார்கள். மூத்தவருக்கு கர்மம் இருக்கும். 50 வயதுக்கு மேல் தொழிலில் ஒரு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். தொழில் நண்பர்கள் சேர்க்கை இருக்கும். இவர்கள் பேச்சு லாப நோக்குடன் தான் இருக்கும். ஜோதிட தொழில் செய்யலாம். குல தொழில் செய்யலாம். பத்தாம் அதிபதி பதினொன்றில் இருந்து பதினொன்றாம் அதிபதி இந்த ஸ்தானத்தை பார்த்தால் மாமியார் நான்காவது பிறப்பு. சனி 6 8 12 ஆம் பாவங்களுக்கு அதிபதியாக இருந்தால் பொதுமக்களால் ஜாதகருக்கு பாதிப்பு இருக்கும்.
சந்திரன் 6 8 12 ஆம் பாவங்களுக்கு அதிபதியாக இருந்தால் பெண்களுக்கு நீர் போன்ற பாதிப்பு இருக்கும். ஜாதகருக்கும் நீரினால் பாதிப்பு இருக்கும். பத்தாம் அதிபதிக்கு கேது சம்பந்தப்பட்டு 5, 7, 9 இல் இருந்தால் அந்த காரக உறவை தெய்வமாக நினைப்பார்கள்.
பத்தாம் அதிபதி 12 ஆம் பாவத்தில்
இவர் களுக்கு இரவு வேலை நல்லது. நிறுவனம் சார்ந்த வெளிநாடு போவார்கள் அல்லது இவர் வேலை செய்யும் நிறுவனம் வெளிநாட்டில் இருக்கும். .தொழிலில் வழக்கு விரையம் இருக்கும். இவர்கள் பயணம் செய்து செய்கின்ற தொழில் லாபத்தை கொடுக்கும். சர்வே, ஸ்கிராப் தொழில் லாபம் தரும். உயரமான இடத்தில் வேலை செய்வார்கள், கொஞ்சம் காலம் செய்யும் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் செய்வார்கள். தொழில் பற்றி ஒரு பயம் இருக்கும். இறுதி காலம் வரை இவர்கள் உழைத்துக்கொண்டே இருப்பார்கள். இரண்டாவது தொழில் இவர்களுக்கு நல்லது. மணவாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. கோவில் திருப்பணி செய்வது, ஆன்மீக சொற்பொழிவு செய்யலாம். தடையை மீறி தான் தொழிலில் வெற்றி காண முடியும். தொழில் செய்யும் இடத்தை காலி பண்ண சொல்லி உரிமையாளர்களால் பிரச்சனை வரும். தொழில் செய்யும் இடத்தில் அருகில் ஜெயில், சுடுகாடு இருக்கும். தொழில் துவங்கிய உடன் ஒரு கர்மம் இருக்கும். தொழிலுக்காக விளம்பரம் செய்வார்கள். தானதர்மம் செய்வார்கள். இவர்களுக்கு விரையம் இருந்துகொண்டே இருக்கும்
அடுத்து எந்த மாதிரியான தொழிலுக்கு தொழில் அமைப்புக்கு எந்த மாதிரியான கிரகச் சேர்க்கை இருக்கும் என்று பார்ப்போம்
துணி வியாபாரம்
இதற்கு சுக்கிரன் துணிகளுக்கு காரகன். புதன் வியாபாரத்துக்கு அதிபதி. புதனும் சுக்கிரனும் பத்தாம் வீட்டோடு சம்பந்தப்பட்டால் துணி வியாபாரம் அமையும்.
கட்டிடம் காண்ட்ராக்ட் தொழில்
செய்பவருக்கு அதற்கு கிரக நிலைகள் கட்டிடத்துக்கு அதிபதி செவ்வாய. புதன் காண்ட்ராக்ட் ஏஜென்சிக்கு அதிபதி. செவ்வாய் புதன் சேர்க்கை இருந்தால் இந்தத் தொழில் செய்யலாம்.
தையல் தொழில்
இதற்கு மூன்று வித கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்.
துணிகளுக்கு சுக்கிரன் காரகம் வகிக்கிறார். செவ்வாய் மெஷின் சம்பந்தப்பட்ட தொழில், சனி உடலை வருத்தி செய்யும் தொழில். செவ்வாய், சுக்கிரன், சனி இந்த மூன்றும் சம்மந்தம் இருந்தால் தையல் தொழில் வரும்.
டைப்பிங் சுருக்கெழுத்து
இந்த தொழிலுக்கு புதன் புத்தகத்தையும், கிளாரிக் தொழிலையும் சொல்கிறது. செவ்வாய் மிஷினை குறிக்கிறது. சனி எதையுமே சுருக்கமாக சொல்வது. புதன், செவ்வாய், சனி இந்த மூன்றும் சம்பந்தப்பட்டால் டைப்பிங் தொழில் வரும்.
போலீஸ் ராணுவம்
கிரக சேர்க்கை போலீஸ் ராணுவம் என்பது செவ்வாய், தைரியம் கொடுப்பவர், பத்தாமிடத்தோடு செவ்வாய் சம்பந்தப்பட்டால் தான் ஒருவர் போலீசாக முடியும்.
செவ்வாயுடன் சுக்கிரன் சம்மந்தம் வந்தால் தான் ஒருவர் போக்குவரத்து துறையில் இருக்க முடியும்.
சுக்கிரன் வாகன காரகன். குரு சம்மந்தம் சட்டம் ஒழுங்கு பராமரிப்பவர்.
விவசாய கருவிகள் விற்பனை செய்வதற்கு
விவசாயத்திற்கு காரகன் சுக்கிரன், மெஷினுக்கு காரகன் செவ்வாய், ஏஜென்சிக்கு காரகன் புதன், இந்த மூன்றும் சேர்க்கை இருக்க வேண்டும்.
எவர்சில்வர் பாத்திரம்
விற்பனை செய்வதற்கு துருப்பிடிக்காத இரும்பு தான் எவர்சில்வர். இரும்பை குறிப்பது சனி. பொலிவை குறிப்பது சுக்கிரன். சனி சுக்கிரன் இணைவு எவர்சில்வர் பாத்திரம்.
இனிப்பு பண்டம் வியாபாரம் செய்ய
இனிப்பு என்பது சுக்கிரன் சுக்கிரன் பத்தாமிடத்தோடு சம்மந்தப் பட்டால் தான் இந்தத் தொழில் செய்ய முடியும்.
பெட்ரோல் சம்மந்தமான தொழில் செய்வதற்கு
சனி பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருள், பெட்ரோல் என்பது நீர் சம்மந்தமானது, நீர் கிரகமான சந்திரனும் சம்மந்தப்பட வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தான் பெட்ரோல் அதனால் சுக்கிரனும் சேர்ந்து இருக்க வேண்டும். சனி சந்திரன் சுக்கிரன் சேர்ந்ததுதான் பெட்ரோல் தொழில் வரும்.
பத்திரிக்கை நடத்துவதற்கு அச்சகம் வைத்து பத்திரிக்கை தொழில் செய்வது உண்டு.
பத்திரிக்கைக்கு காரகன் புதன் அச்சடிக்கும் மெஷின் குறிப்பது செவ்வாய், செவ்வாய், புதன் சேர்க்கை அச்சகம் அச்சடிப்பது மெஷின் வைத்து பத்திரிக்கை நடத்துபவரை சொல்லும்.
எந்த மாதிரி பத்திரிக்கை நடத்துவார்கள் என்றால் செவ்வாய், புதனுடன், சுக்கிரனுடன் சம்மந்தப்பட்டால் பெண்கள் சம்மந்தமான அல்லது சினிமா சம்மந்தமான பத்திரிக்கை நடத்தலாம் அல்லது ஆபாச புத்தகம் கூட. நடத்தலாம்.
சூரியன் சம்மந்தப்பட்டால் அரசியல் அல்லது மருத்துவ பத்திரிகை நடத்தலாம்.
குரு சம்மந்தப்பட்டால் குழந்தைகள் அல்லது ஆன்மீக பத்திரிகைகள் நடத்தலாம் சட்டம் சம்மந்தமான பத்திரிக்கைகள் நடத்தலாம்.
பாடப் புத்தகங்கள் பத்திரிக்கைகள் நடத்துவதற்கு புதனுடன் சேர்க்கை இருக்க வேண்டும்.
சனி சேர்ந்தால் தொழிலாளர்கள் சம்மந்தப்பட்ட பத்திரிக்கை நடத்துவார்கள்
தோல் பதனிடும் வேலையை யார் செய்வார்கள் என்றால்
கால்நடையை குறிப்பது சுக்கிரன், தோலை குறிப்பது சனி .தோல் தோல் பதனிடும் இயந்திரம் செவ்வாய், இந்த மூன்று சேர்க்கை இருந்தால் தோல் பதனிடும் தொழில் செய்ய முடியும்.
இன்ஜினியரிங் காலேஜ் படிப்புக்கு
இன்ஜினியரிங் என்றால் புதன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் என்றால் புதன், செவ்வாய் சேர்க்கை. மெரின் இன்ஜினியரிங் புதன், செவ்வாய், சந்திரன் சேர்க்கை
பதவி உயர்வுக்கு 2, 6, 10 ,11 ஆம் வீடுகளை
முதலில் ஆராய்ச்சி பண்ண வேண்டும். ஏனென்றால் இந்த வீட்டை குறிக்கின்ற கிரகங்களால் தான் பதவி உயர்வை கொடுக்கமுடியும். இரண்டாமிடம் பணவரவு, பதவி உயர்வு என்றால் பணவரவும் இருக்கவேண்டும் இரண்டாம் இடத்தை உடைய கிரகத்தின் திசா புத்தி காலங்களில்தான் ஒருவருக்கு பதவி கிடைக்கும் ஆறாம் வீடு நாம் செய்யும் தொழிலை குறிக்கிறது.
நாம் தொழிலில் இருந்து பதவி உயர்வை எதிர்பார்க்கிறோம் அதனால் 6 ஆம் வீட்டையும் எடுக்க வேண்டும்.
பத்தாம் வீடு ஜீவனஸ்தானம் ஜீவனம் என்பது தொழிலாக இருக்கலாம் அல்லது உபயோகமாக இருக்கலாம். இந்த அமைப்புக்கு உயர்வு கிடைக்க வேண்டும் என்றால் இந்த வீட்டை குறிக்கக்கூடிய கிரகத்தின் திசாபுத்தி காலத்தில்தான் முடியும். அதனால் பத்தாம் வீட்டையும் எடுக்க வேண்டும், பதினொன்றாம் வீடு, லாபஸ்தானம் நமது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வீடு, அதனால் பதினொன்றாம் வீட்டையும் எடுத்துக்கொள்ள வேண்டும் இந்த நான்கு வீடுகளை குறிக்கின்ற திசா புக்தி காலத்தில் தான் ஒருவர் பதவி உயர்வை பெறமுடியும்.
ஆறாம் வீடு ருணரோக வியாதி கடன் என்று படித்துள்ளோம் அதைவிட ஒருவருக்கு வெற்றியை கொடுக்கும் பாவம் ஆரம்பமாகும் ஏழாம் வீடு நம்முடன் போடுபவர்களை குறிக்கும் தோல்வியை கொடுக்கும் வீடு பன்னிரண்டாம் வீடு 7 க்கு பன்னிரண்டாம் வீடு ஆறாம் வீடு ஆகும் ஒருவருக்கு ஆறாம் வீடு குறிக்கின்ற திசாபுத்தி காலத்தில்தான் ஒருவர் எடுத்த முயற்சியில் வெற்றி பெற முடியும்.
ஆறாம் வீடு மற்றவர்களுக்கு தோல்வியையும் ஜாதகருக்கு வெற்றியும் கொடுக்கும் 5 9 திரிகோண ஸ்தானம் அதனால் இந்த இடத்தை உயர்வாக நினைக்கிறோம் செய்யும் தொழிலை பொறுத்தவரையில் 5 9 வீடுகள் நன்மை செய்யாத வீடுகள்.
ஐந்தாம் வீடு என்பது ஆறாம் வீட்டுக்கு 12 ஆம் வீடு 9 ஆம் வீடு என்பது பத்தாம் வீட்டிற்கு பன்னிரெண்டாம் வீடு எந்த ஒரு வீட்டிற்கும் அந்த வீட்டின் பன்னிரண்டாம் வீடு நன்மை தராத வீடு ஆகும் 5 9 வீடுகள் செய்யும் தொழிலுக்கு எதிர்மறையான வீடுகளாகும் பதவி இழப்புகளை கொடுத்துவிடும்.
இரட்டை வருமானம் வருவதற்கு புதன் இரட்டை கிரகம் புதன் உபய ராசியான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இந்நான்கும் இரட்டை ராசி முதன் வருமானத்தை கொடுக்கக்கூடிய இரண்டாம் வீடு 10 ஆம் வீட்டோடு சம்மந்தப்பட்டு இருந்தால் ஜாதகருக்கு இரண்டு வருமானம் யோகம் இருக்கும்
பத்தாம் வீடு ஜீவனஸ்தானம்.
இரண்டாம் வீடு தனஸ்தானம்.
ஆறாம் வீடு நாம் செய்யும் தொழில் குறிக்கும்.
இந்த மூன்று வீட்டுடன் சனி தொடர்பு கொண்டு இருந்தால் சனி எதையுமே ரகசியமாக செய்வார்.
மேஜைக்கு அடியில் பணம் வாங்க வேண்டும் என்றால் ரகசியமாகத்தான் வாங்க வேண்டும் சனி 10 2 6 இந்த வீட்டோடு சம்மந்தப்பட்டு இரட்டை ராசியான புதன், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற ராசியும் சம்மந்தப்பட்டு இருக்க வேண்டும் இருந்தால் மேஜைக்கு அடியில் பணம் வாங்குவார்கள்.
ஆறாம் வீடு ருண ரோகம், வியாதி, கடன், செய்யும் வேலை, மனைவியை பிரிந்து இருப்பது, போட்டியில் வெற்றி காண்பது இவையெல்லாம் குறிக்கும்.
ஒருவருக்கு ஆறாம் இட திசையோ புத்தியோ நடக்கிறது என்றால் இதில் ஜாதகருக்கு என்ன பலன் எது நடக்கும்?
ஆறாம் இட திசாபுத்தி அல்லது ஆறில் உள்ள கிரகத்தின் திசா புத்தி நடந்தால் அந்த திசை முழுவதும் ஒருவருக்கு உடல்நிலை பாதிக்காது.
லக்னத்தை குறிக்கும் புத்தியோ லக்னத்தில் உள்ள கிரகத்தின் புத்தியோ நடக்க வேண்டும் அப்போது தான் ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கும்.
ஏனென்றால் லக்னம் என்பது ஒருவருடைய உடல்நிலை குறிக்கும் அப்போது ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கும்.
புதன் லக்னாதிபதியாக இருந்து 12 ல் இருந்தால் 1 ,12 ஐ குறிக்கும். பன்னிரண்டாம் வீடு மருத்துவமனை குறிக்கும். திசா நாதன் நோய் உபாதையை குறிக்கும், புத்திநாதன் மருத்துவமனையில் இருப்பதை குறிப்பார். சனி திசை புதன் புத்தியில் ஜாதகர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருப்பார் என்று சொல்லலாம்.
புதன் எட்டில் இருந்தால் எட்டாமிடம் தண்ட செலவு குறிக்கும் சனி திசை புதன் புத்தியில் ஜாதகர் உடல் உபாதை காரணமாக தண்ட செலவு செய்வார்.
சுக்கிர புத்தி நடந்தால் கன்னி லக்னத்திற்கு சுக்கிரன் இரண்டாம் அதிபதி அதனால் ஜாதகர் வங்கியில் பணம் கடன் வாங்க வேண்டும் என்று இருப்பார்
ஏழாம் வீடு மனு கொடுக்கும் பேங்க் சொல்லும் நமக்கு பணம் கொடுப்பது வங்கியில் பணம் குறைகிறது பணம் கொடுப்பது பணம் குறைவது 7 க்கு பனிரெண்டாம் வீடான ஆறாம் வீடு ஆறாம் வீடு குறிக்கின்ற திசா புத்தியில் தான் ஒருவருக்கு பணம் கிடைக்கும்
அச்சு தொழில் என்றால்செவ்வாய் புதன்
பத்திரிக்கை செவ்வாய் புதன்
சேர்க்கை அச்சடிப்பது.
11 ம் வீட்டை குறிக்கின்ற புத்தியில் பணம் வரும் மேலும் ஏழாம் வீடு மனைவி ஒன்பதாம் வீடு வெளிநாடு பயணம் ஆறாம் வீடு கணவன் மனைவி பிரிவு எனவே மனைவி வெளிநாடு பயணம் செய்வார்.
10 ஆமிடத்தை கர்மஸ்தானம் என்று சொல்லலாம்
தாய் தகப்பனாருக்கு கர்மம் செய்யும் வீடு ஒன்பதாமிடம். தந்தையைக் குறிக்கும் 10ஆம் வீடு ஒன்பதாம் வீட்டிற்கு இரண்டாவது வீடு, இரண்டாம் வீடும் மாரகத்தை கொடுக்கும் எனவே பத்தாம் வீடு தந்தைக்கு மாரகம் கொடுக்கும் வீடாக அமைந்து விடுகிறது. நாலாம் வீடு தாயாரைக் குறிக்கிறது பத்தாம் வீடு என்பது நாலாம் வீட்டிற்கு ஏழாம் வீடு ஏழாம் வீடும் மாரக ஸ்தானம் எனவே பத்தாம் வீடு மாரக வீடாக அமைந்து விடுகிறது.
ஒருவருக்கு பத்தாம் வீட்டோட கிரகத்தின் திசையோ புக்தியோ அல்லது பத்தாம் வீட்டின் திசையோ புக்தியோ நடக்கும்போது ஜாதகரின் தாயோ தந்தையோ மரணம் அடையலாம். அப்போதுதான் ஜாதகருக்கு கர்மம் செய்ய நேரம் வந்துவிட்டது என்று சொல்லலாம் பத்தாமிடம் ஜீவனத்தை மட்டும் குறிக்கவில்லை தாய் தந்தையின் மார்க்கத்தையும் குறிக்கிறது.
ஒருவருக்கு பதவி உயர்வு கிடைக்குமா என்றால் அதற்கு பத்தாம் இடத்தை மட்டும் வைத்து பலன் சொல்ல முடியாது 2-ஆம் இடமான தன ஸ்தானத்தையும் ஆறாம் இடமான தொழில் ஸ்தானத்தையும் பத்தாமிடமான ஜீவனஸ்தானத்தையும் பதினொன்றாம் இடமான லாபஸ்தானத்தையும் வைத்து தான் சொல்ல முடியும் இந்த நான்கு இடங்களை குறிக்கின்ற தசா காலத்தில் தான் பதவி உயர்வு அல்லது வேலை கிடைக்கும்.
பத்தாம் வீடு ஒன்பதாம் போய்ட்டு இருக்கு இரண்டாம் வீடு என்று பார்த்தோம் இரண்டாம் வீடு தனஸ்தானம் தந்தையுடைய பொருளாதாரம் பணவசதி குடும்ப வாழ்க்கை இதையெல்லாம் பத்தாம் இடத்தை வைத்து சொல்லலாம் பத்தாம் வீட்டில் உள்ள கிரகம் பத்தாம் வீட்டை பார்க்கும் கிரகம் பத்தாம் வீட்டின் அதிபதி பத்தாம் அதிபதி இருக்கும் நவாம்சம் அதிபதி இதையெல்லாம் வைத்து தான் ஒருவரின் தொழிலை நிர்ணயம் செய்ய முடியும்
சூரியன் தன்வந்திரி மருத்துவத்தை குறிக்கும் சூரியன் தங்கம் தாமிரம் வியாபாரத்தை குறிக்கும்
மனைவியின் வாகனம் கல்வி சொத்துக்கள் இவையெல்லாம் குறிப்பது பத்தாம் இடம் ஏழுக்கு நான்காமிடம் பத்தாமிடம் சொல்லும்
ஏழாம் வீடு வியாபாரம் வங்கி காலர்ஷிப் கல்லூரி பெண்ணின் திருமணம் ஆண் பெண் தொடர்பு
ஏழில் புதன் விற்பனை அமோகமாக இருக்கும் வியாபாரத்திற்கு அனுகூலம் இல்லாத கிரகம் சனி ஏழில் சனி வியாபாரம் மந்தம் வியாபாரத்திற்கு ஆகாது 7-இல் சுப கிரகம் இருப்பது வியாபாரம் நன்றாக இருக்கும்
5 12-க்குடைய திசா புத்தியில் வியாபாரம் நஷ்டம் வரும் லாபம் இருக்காது. ஐந்து என்பது ஏழுக்கு 12 ஏழாம் வீடு பொருள் வாங்குபவர்கள் பன்னிரண்டாம் வீடு ஜாதகரின் நஷ்டம் 6 11 குறிக்கக் கூடிய திசா புத்தியில் ஒருவருக்கு லாபம் கிடைக்கும் 6 என்பது 7 க்கு 12. 11 லாபம்.
ராசியில் நில ராசி என்று சொல்லக்கூடிய ரிஷபம், கன்னி, மகரம் இந்த மூன்று ராசிகளும் வியாபாரத்திற்கு உதவாத ராசி.
அங்கு இருக்கும் கிரகங்களும் வியாபாரத்திற்கு அனுகூலமாக இருக்காது.
வியாபாரம் செய்ய ஒருவருக்கு தைரியம் இருக்கவேண்டும் தைரியம் இருந்தால் தான் வியாபாரம் செய்யமுடியும் அதற்கு செவ்வாய் திசாநாதன் உடன் தொடர்பு இருக்க வேண்டும் அப்போதுதான் ஒருவர் வியாபாரம் செய்ய முடியும்.
நன்றி
வாழ்க வளமுடன்
தமிழரசன் க
தக்ஷா ஜோதிட நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்
https://www.dakshaastrology.com
whatsapp: +919787969698
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக