ஏழாம் பாவகம்
ஏழாம் பாவகம் இதன் காரகன் சுக்கிரன். திருமண பாவம், கூட்டுத்தொழில் இவர்கள் யாருடனும் ஒட்டாமல் இருந்தாலோ மற்றவர்கள் இவருடன் ஒட்டாமல் இருந்தாலோ ஏழாம் அதிபதி 6 8 12 ல் இருந்தால் இந்த மாதிரியான அமைப்பு வரும்.
தாம்பத்திய பாவம் சமூகத்தில் இவரின் மதிப்பு உள்ள பாவம்.
பொதுப்பணி மற்றவர்களுக்கு உதவும் பாவம். மனப்பான்மை வாடிக்கையாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை காட்டும் பாவம். வெளிநாடு, நீண்ட தூர பயணம், இரண்டாவது குழந்தை.
ஏழாம் இடத்தில் சூரியன்:
அதிகாரமிக்க களத்திரம் அமையும். தாமதத்திருமணம் நன்று. பெரிய இடத்து சம்பந்தம். தலச்சான் பிள்ளை,
பெரிய தலை, பெரிய கண்கள், அழகான முகம், தலைமுடி குறைவாக இருக்கும். முதல் இரவு மணநாளன்று இருக்காது
தாம்பத்திய சுகம் அன்று இரவு கிடைக்காது. இவர்களை புகழ்ந்து தான் காரியத்தை சாதிக்க வேண்டும். கிழக்கு திசையில் வரன் அமையும். மணம் ஆனபின்பு புகழ் இருக்கும். ஜாதகத்தில் ஏழு கட்டத்துக்கு மேல் சூரியன் இருந்தால் ஏழாண்டு கழித்துதான் குடும்பம் வளர்ச்சி அடையும்.குழந்தை வளர வளர வளர்ச்சி கிடைக்கும்.
லக்னத்தில் சூரியன் இருந்தால் 12 ஆண்டுக்கு ஒருமுறை வளர்ச்சி இருக்கும். இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் வளர்ச்சி இருக்கும். ஏழில் சூரியன் இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் பதவி கிடைக்கும். பதவி உயர்வு, அரசியல், வெற்றி கிடைக்கும்.
1, 5, 7 இல் சூரியன் இருந்தால் இவர்களுக்கு ஒற்றை குழந்தை. மேலும் ஒரு குழந்தை பெற்றுக்கொண்டால் யோகம்.
ஏழில் சூரியன் இருந்தால் கோவிலில் திருமணம் நல்லது.
ஒன்று ஏழில் சூரியன் இருந்தால் பிறர் மனைவியை பார்ப்பது 4, 7, 12 இல் பாவிகள் இருக்க இந்த மூன்றிலும் கிரகம் இருப்பது பெண்ணுக்கு சக்களத்தி ஆகும் யோகம் இருக்கும்.
ஏழாம் அதிபதி ராகு சாரம் ராகு சேர்க்கை இருந்தால் நண்பர்கள் தோழிகளை வீட்டிற்குள் வரக்கூடாது. ராகு தோழன் தோழி.
எட்டு பத்தில் செவ்வாய் இருந்தால் விபத்தில் உடனடி மரணம். சூரியன் நட்சத்திரத்தில் சாந்தி முகூர்த்தம் வைக்கக்கூடாது.
ஏழில் சந்திரன்:
பெண் என்றால் மாப்பிள்ளையை பக்கத்தில் தேடுவார்கள். மணமான பின் ஒரு இடமாற்றம் இருக்கும். விரைவில் மணமாகும். தேன்நிலவு அவர்கள் முகூர்த்த நேரத்தில் சரியாக தாலி கட்டுவார்கள். இரவு வேலை செய்யும் வாழ்க்கை துணை அமையும். திருமணத்தில் குழப்பம் இருக்கும்.
நிச்சயம் செய்யும் வரை இவர்கள்குழப்பவாதியாக இருப்பார்கள்.
அதிகாலை முகூர்த்தம் நல்லது சூரிய உதயம் ஆவதற்கு முன் தாலி கட்டுவது நல்லது. சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீடு சம்பந்தமான முடிவு எடுப்பதில் ஜாதகருக்கு குழப்பம் இருக்கும். இரண்டாவது குழந்தைக்கு பின் இடமாற்றம். கஷ்டம். தாய்வழியில் மனைவி அமைவார். ஏழில் சுக்கிரன் இருந்து சந்திரன் குரு தொடர்பு எனில் சந்திரன் ஏழில் இருந்து அந்த இடத்தை குரு பார்த்தாலும் திருமணநாளில் மழை பெய்யும். ஏழில் சந்திரன் திருமணத்திற்கு பின் மது அருந்தும் பழக்கம் இருக்கும். திங்கட்கிழமை பிறந்தவர் சந்திரன் நட்சத்திரத்தில் பிறந்தவர் வாழ்க்கைத் துணை அமையும்.
ஏழில் செவ்வாய்:
களத்திரத்திற்க்கு சொத்து இருக்கும். களத்திரகாரகர் கோபக்காரராக இருப்பார். கட்டுமஸ்தான உடல் அமைப்பு இருக்கும். முறுக்கிய மீசை இருக்கும். சீருடை பணி இருக்கும்.
குடும்பத்தில் எப்போதும் வாக்கு வாதம் செய்துகொண்டே இருப்பார். ஒரு கலகம் செய்வார். மணமான பின் களத்திரத்திற்க்கு விபத்து இருக்கும். மணமான பின் சொத்து வாங்குவார். ஏழு வயதில் பெற்றோர் சொத்து வாங்கியிருப்பார்.
ஏழில் செவ்வாய் இருந்து செவ்வாயின் பார்வை பெற்ற காரக உறவு பாதிப்பு இருக்கும். வீடு, சொத்து வாங்கி இருப்பார்கள்.
செவ்வாய் பார்க்கும் இடத்திற்கு பலன் சொல்லும்போது செவ்வாயின்ஆதிக்கத்தையும் சேர்த்துத்தான் பலன் சொல்ல வேண்டும்.
செவ்வாய் 6 ,11 அதிபதி என்று வைத்துக் கொண்டால் ஒரு விபத்தும் உண்டு. ஒரு யோகமும் உண்டு என்று சொல்லவேண்டும்.
ஏழில் செவ்வாய் இருந்து திதி சூன்யம் பாதகம் ஆனால் இரண்டு திருமணம். திதி சூன்ய அதிபதி, பாதகாதிபதியும் சேர்ந்திருந்தால் இல்லை.
அடுத்து தொடுவது போல இருந்தாலும் சாரம் வாங்கி இருந்தாலும் இந்த தொடர்பு இரண்டு மணம்.
ஏழில் செவ்வாய் இருந்து இரண்டாமிடத்தில் சனி கேது தொடர்பு எனில் ஜாதகருக்கு 2 திருமணம் அல்லது பெரியம்மாவுக்கு இரண்டு திருமணம்.
சந்திரன் எந்த கிரகத்துடன் பரிவர்த்தனை ஆனாலும் பரிவர்த்தனை ஆன கிரகம் என்ன சாரமோ அந்த நட்சத்திர குணாதிசயம் இருக்கும். ஜாதகருக்கு வரும்.
திருமணமாகாதவர்கள் ஏழில் செவ்வாய் இருப்பவருடன் நட்பு பழக்கம் வைத்துக் கொண்டால் விரைவில் ஜாதகருக்கு திருமணம் நடக்கும். செவ்வாய் நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை பிறந்த கணவர் அமைவார்.
கணவர் பெயர் முருகன் பாண்டி என்று வரும்.
கிரக சேர்க்கையில் செவ்வாய் சுக்கிரன், செவ்வாய் புதன், புதன் சுக்கிரன் வீட்டில் இந்த அமைப்பு இருந்தால் ஜாதகருக்கு 2 திருமணம்.
இந்த சேர்க்கை பெற்று ஏழில் இருந்தால் ஜாதகனுக்கு இரண்டு திருமணம்.
நான்காம் இடம் என்றால் தாய்க்கு இரண்டு திருமணம்.
ஒன்பதாம் இடம் என்றால் தந்தைக்கு இரண்டு திருமணம்.
பதினொன்றாம் இடம் என்றால் மூத்த சகோதரனுக்கு இரண்டு திருமணம்.
மூன்றாமிடம் என்றால் இளைய சகோதரருக்குஇரண்டு திருமணம்.
ஏழில் புதன்:
வயது குறைந்த களத்திரம் அமையும். எந்த காரக உறவுக்கும் ஏழில் சந்திரன், கேது என்றாள் மூத்த களத்திரம் அமையும்.
ஏழில் புதன் இருந்தாலே புத்திசாலி மனைவி கிடைப்பார். கண்டிஷன் போடும் மனைவி கணக்கில் புலியாக இருப்பார்இரண்டு முறை போகத்தை அனுபவிப்பார். இரண்டு முகூர்த்த தேதி குறிப்பார்கள், ஏழில் உள்ள புதனுக்கு சுக்கிரன் செவ்வாய் இருக்க கூடாது, அப்படி இருந்தால் இரண்டு திருமணம் நடக்கும்.
இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் காலி மனை வாங்குவது, பத்திரப்பதிவு செய்வார்கள். மணமான ஆன பின்பும் படிப்பார்கள்.
ஜாதகர் ஏழு வயதில் ஜாதகரின் ஏழு வயது சமயம் தாய்மாமனுக்கு திருமணம் நடந்திருக்கும். இளமையான களத்திரம் அமையும். பெண் ஜாதகம் என்றால் கணவர் அவர் வீட்டில் கடைசி நபர் கடைக்குட்டியாக இருப்பர். வயது குறைந்த கணவரை மணந்தால் நல்லது.
ஏழில் குரு:
பிராமண களத்திரம்,,உபதேச களத்திரம். ஏழு வயதுக்கு மேல் குடும்பம் வளர்ச்சி. சொத்து சேர்க்கை உண்டு. ஏழில் குரு இருந்து நீர் கிரக தொடர்பு இருந்தால் திருமணத்தன்று மழை பெய்யும். இரண்டாவது குழந்தைக்கு பின் குடும்பம் வளர்ச்சி 40 முதல் 50 வயதுக்கு பின் பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
ஏழில் சுக்கிரன்:
அழகான களத்திரம் அமையும். மணமான பின் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இரண்டாவது குழந்தைக்கு பின் வளர்ச்சி அதிகம். மணமான பின் பணம் வரவு உண்டு. பெண் நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். பெண்ணுக்கு ஏழில் சுக்கிரன் இருந்தால், சுக்கிரன் செவ்வாய் இருந்தால், ஆண் நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள். இந்த சேர்க்கை நல்லது இல்லை. ஏழாம் அதிபதிக்கு செவ்வாய் பார்வை இருக்கக்கூடாது மணநாளில் கலகம் இருக்கும். ஏழாம் அதிபதி பாதகத்தில் இருந்தாலும் மணநாளில் கலகம் வரும்.
ஏழில் சனி:
பெண்ணுக்கு 27 வயதுக்கு மேல் திருமணம் செய்வது நல்லது. ஆணாக இருந்தால் 30 வயதுக்கு மேல் திருமணம் செய்வது நல்லது. ஏழாமிடத்திற்கு சனி தொடர்பு இருந்தால் விருப்ப திருமணம், பொருந்தாத ஜோடியாக இருக்கும். அப்படி செய்தால் தான் நல்லது. பொருத்தமான ஜோடியாக சேர்த்து வைத்தால் அவர்கள் பிரிந்துவிடுவார்கள். மணமான பின்பு வறுமைஇருக்கும். சனி எந்த பாவத்தில் இருக்கிறாரோ அந்த பாவத்துக்கு வறுமை இருக்கும். ஏழில் சனி இருந்து செவ்வாய் தொடர்பு இருந்தால் மணநாளில் மின்வெட்டு சடோன்இருக்கும்.திருமணத்திற்கு பின் ஒரு கர்மம் இருக்கும். சூரிய உதயத்திற்கு முன்பு தாலி கட்டுவது நல்லது அல்ல. ஏழில் சனி மண நாளின் போது வீட்டில் அல்லது மண்டபம் அருகே ஒரு பிணம் விழும். ஆறு, எட்டு, பன்னிரெண்டில் சனி இருந்தாலும் பிணம் விழும். பத்தாம் அதிபதி பன்னிரண்டாம் அதிபதி ஏழில் இருந்தால் மணநாள் அன்றோ அல்லது அடுத்த நாளோ பிணம்விழும்..
ஏழில் சனி மனைவிக்கு
நோய், தொழில், அல்லது வேலை பார்க்கும் களத்திரம் அமையும். இரண்டாவது குழந்தைக்கு பின்பு வறுமை, மரணம் உண்டாகும்.
ஏழு வயதில் வறுமை/ ஜாதகருக்கு சொந்த தொழில் அல்லது கூட்டுத் தொழில் செய்யும் எண்ணம் இருக்கும். நிச்சயதார்த்தம் செய்வதற்கு தடையாக இருக்கும். குழப்பம் அல்லது தாமதம் இருக்கும். இரு தரப்பில் யாராவது ஒருவருக்கு சம்மந்திகளுக்கு சம்மதம் இருக்காது. தாம்பத்திய சுகம் குறைவு தாமதமாக தாலி கட்டுவார்கள்.
ஏழில் ராகு:
தாமத மணம், காதல் மணம், மெயின் ரோட்டில் களத்திரம் அமையும், மாற்று கலாச்சார மணம் அமையும். ஏழு வயதில் கண்டம். மணமான பின்பு வெளிமாநிலம், வெளிநாடு இடமாற்றம் உண்டு, மணமான பின்பு ஒரு விபத்து இருக்கும். தாம்பத்தியம் சுகம் அதிகமாக தூண்டப்படும். இல்லையென்றால் நிறைவேறாமல் கெட்டுவிடும்.
ஏழில் சனி நின்றாலோ
ஏழாம், வீட்டை அல்லது அதன் அதிபதியை் சனி பார்த்தாலோ, ஏழாம் அதிபதி சனியுடன் சேர்க்கை பெற்றாலோ, , ஏழாம் அதிபதி சனி சாரம் வாங்கி நின்றாலும், தாமதமாக திருமணம் செய்வது சிறப்பு லக்னம் மற்றும் ராசி இரண்டிற்கும் இது பொருந்தும்...
அவ்வாறு இல்லாமல் உரிய காலத்தில் திருமணம் செய்ய விரும்பினால், தன்னை விட கீழ் நிலையில் உள்ளவர்களை மணக்க வேண்டும்...
உடல், வயது, அறிவு, அழகு, அந்தஸ்து ... இது போன்ற எதேனும் ஒரு விசயத்தில் குறை இருக்கும் துணையை சேர்க்கலாம்..
ஏழில் கேது:
சந்துக்குள், கோவில் அருகே, களத்திரம் அமையும். செக்ஸ்சுகம் இவர்களுக்கு குறைவாக இருக்கும். திருப்தி இருக்காது. களத்திரம் ஒரு ஆன்மீகவாதியாக இருப்பார். இரண்டாவது குழந்தை தாமதமாகும். அல்லது ட்வின்ஸ் இரட்டை குழந்தைகள். நண்பர்கள் இவர்களுக்கு நல்லபடியாக அமையாது, அமைந்தால் ஆன்மீகவாதியாக இருப்பார்கள். மணமான பின்பு ஒரு வழக்கு வரும்.
ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது மாப்பிள்ளையை பற்றி விசாரிக்கணும் என்றால் கிரக சேர்க்கை வைத்து பார்க்கலாம்.
ஏழாம் அதிபதி சூரியனை தொட்டால் கணவனுடைய பதவியோ, ஊதியத்தை, அவர் குலம், கோத்திரம் அவர் பதவி வகிப்பது உண்மைதானா, உட்பிரிவு, இதெல்லாம் விசாரித்து பெண் கொடுக்கலாம்.
ஏழாம் அதிபதி சந்திரனை தொட்டால் அவர்கள் குடும்பத்தில் கடன் உள்ளதா? மாப்பிள்ளைக்கு தீய பழக்கம் உள்ளதா? இப்படி விசாரிக்காமல் பெண் கொடுத்தால் பணம் கேட்டு தொல்லை செய்வார்கள்.
ஏழாம் அதிபதி செவ்வாயை தொட்டால் சொந்த வீடு, சொத்து உள்ளதா, வழக்கு உள்ளதா? என்று விசாரித்து பெண் தர வேண்டும்.
ஏழாம் அதிபதி புதனை தொட்டால் மாப்பிள்ளையின் முகவரியை கேட்க வேண்டும். சீட்டு நடத்தி ஏமாற்றிய குடும்பமா என்று பார்க்க வேண்டும். பூர்விகம் பற்றி நன்றாக விசாரிக்க வேண்டும். இவர்கள் படித்த படிப்பின் ஏதாவது பொய் உள்ளதா இல்லை எதற்காவது ib கொடுத்தார்களா? முன்பு காதல் இருந்ததா என்று பார்த்துதான் பெண் கொடுக்க வேண்டும்.
ஏழாம் அதிபதி குருவை தொட்டால் வசதி மாப்பிள்ளையோட பதவி சமுதாயம் மதம் இவற்றையெல்லாம் விசாரிக்கவும். புத்திர தோஷம் உள்ள குடும்பமா? என்று பார்க்க வேண்டும்.
ஏழாம் அதிபதி சுக்கிரன் தொட்டால் காதல் பற்றி விசாரிக்க வேண்டும். ஏற்கனவே திருமணம் நடந்ததா என்று விசாரிக்கணும். ஏழாம் அதிபதி சனியை தொட்டால் கடன் நோய் உள்ளதா உடம்பில் ஏதாவது குறை உள்ளதா என்று விசாரிக்கணும்.
ஏழாம் அதிபதி ராகுவை தொட்டால் சம்மந்தி உறவு இணக்கமாக இருக்காது. உறவு நீடிக்காது. கடன் தீய பழக்கம் இருக்கும். விபத்து உண்டு. தம்பதியர்கள் சேர்ந்து வெளியே போனால் விபத்து கட்டாயம் இருக்கும்.
ஏழாம் அதிபதி கேதுவை தொட்டால் வழக்கு உள்ள குடும்பமா? குடும்பத்தில் வாழாவெட்டி பெண்கள் வீட்டில் உள்ளார்களா? என்று விசாரிக்கணும் கேது திருமணம் இல்லாமல் வாழாவெட்டி பெண்களை குறிக்கும் அப்படி இருந்து பெண் கொடுத்தால் கேது பிரித்து விடுவார் தம்பதியர்களை.
டிப்ஸ்
நாலில் கேது இருந்தால்
முள்ளுள்ள பூச்செடி அல்லது தையல் மெஷின், தலையணையில் இலவம்பஞ்சு பிதுங்கி வெளியே பஞ்சு வரும்படி, வீட்டில் ஒரு தலையணை இருக்கும்.
இதற்குப் பரிகாரமாக கம்பளி கயிறு வீட்டில் கட்டி தொங்கவிட வேண்டும். இல்லையென்றால் அந்த வீட்டு பெண் வாழாவெட்டி ஆவார்.
வாழாவெட்டி வீட்டில் பெண் கொடுப்பதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும்.
குருவுக்கு 5 வீட்டிற்குள் ஐந்தாம் அதிபதி இருந்தால் மணமான ஒரு வருடத்திற்குள் குழந்தை பிறக்கும்.
அடுத்து தொடுப்பது போல இல்லாமல் இரண்டு மூன்று கட்டம் தாண்டி இருந்தால் ஒரு கட்டத்துக்கு தகுந்த காலம் மூன்று வருடம் கழித்துதான் குழந்தை பிறக்கும்
ஏழாம் அதிபதி லக்னத்தில்
இருந்தால் ஜாதகர் பிறந்த போதோ அல்லது வயிற்றில் இருந்தபோது நெருங்கிய உறவில் குடும்பத்திலோ ஒரு திருமணம் நடந்திருக்கும்.
பெற்றோர்கள் ஒரு திருமணத்திற்கு சென்று வந்த பின்புதான் ஜாதகர் கருவாகி இருப்பார். ஒரு அபார்ஷன் உண்டு. இவருக்கு மூத்தவர் இருப்பார். பொது சேவையில் ஈடுபாடு இருக்கும். வெளிநாடு, வெளிமாநிலம் செல்வது இருக்கும். பூர்வீகத்தை விட்டு இவர் வெளியே வந்து இருப்பார். நெய்யில் செய்த பண்டம் இவர்களுக்கு பிடிக்கும். அதிக பயணம் போக விரும்புவார்கள்.
இது பெண்ணுக்கு கணவனை தன் வீட்டிற்குகே வெறுத்துப் போய் விடுவார்கள். ஒரு திருமண நிகழ்ச்சியில் களத்திரம் அமைந்திருக்கும் நண்பர்கள் இவர்களுக்கு தேடிவரும். கூட்டுத்தொழில் மனைவி பெயரில் தொழில். தொழில் செய்யும் இடத்தில் மனைவி இருப்பது பிறர் மனை நோக்குவது, இவர்களுக்கு வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள் ஏழாம் அதிபதி சூரியனாக இருந்தால் அடுத்தவர் மனைவியைசுட்டிக்காட்டும் ஏழாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் வீட்டின் பக்கத்தில் அல்லது சொந்தத்தில் களத்திரம் அமையும். பத்தில் நிறைய கிரகம் இருந்தால் கண்டிப்பாக சாமியார் எட்டாம் அதிபதி, பத்தாம் அதிபதி, பன்னிரெண்டாம் அதிபதி இவர்களுடன் ஏழாம்அதிபதி இணைந்திருந்தால் மாரகம் கண்டிப்பாக உண்டு. ஏழாம் அதிபதி தனித்து இருந்தால் மாரகம் இல்லை
1, 3, 12 இதற்கு புதன், ராகு தொடர்பு, திதி சூன்ய பாதக தொடர்பு வந்தால், காணவில்லை என்று ஜாதகரை ஒருநாளாவது தேடுவார்கள்.
8, 10, 12 சனி தொடர்பு இருந்து இந்த தொடர்பு 3 கட்டத்துக்குள் இருந்தால் 30 வயதுக்குள் மரணம்.
10 வயதிற்குள் மரணம். ஒன்பதாம் இடத்தில் இருந்தால் தந்தைக்கு மரணம். நாலாம் இடத்தில் இருந்தால் தாய்க்கு மரணம்.ஏழாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் இசை பாடலில் ஆர்வம் அதிகம் இருக்கும். ஹெட் போன் போட்டு பாடல் கேட்பார்கள். பிரியம் இருக்கும். இவர்களுக்கு அன்பளிப்பு நிறைய கிடைக்கும் அல்லது இவர்கள் மற்றவர்களுக்கு நிறைய அன்பளிப்பு கொடுப்பார்கள். ஏழாம் அதிபதி லக்னத்தில் இருந்து சனி சூரியன் தொடர்பு இருந்தால் ஜாதகர் அரசாங்கம் அல்லது அரசியலில் இருப்பார்.
ஏழாம் அதிபதி இரண்டில்:
இவர்கள் களத்திரத்தை புகழ்ந்து பேச வேண்டும். களத்திரம் அழகு, பணத்தை எதிர் பார்ப்பவராக இருப்பார். விருந்து, உணவு இந்த பொறுப்பு ஜாதகர் ஏற்றுக்கொள்ளவேண்டும். பெண்பார்க்கும் போது பலவகை தீனியுடன் விருந்து கொடுக்க வேண்டும். களத்திரத்தினால் மணமான பின்பு வருமானம் உண்டு. களத்திரம் தான் வரவு-செலவு பார்ப்பார். களத்திரம் டபுள் மீனிங் பேசுவார். வெளிநாட்டு வருமானம் உண்டு. இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் தனிக்குடித்தனம் போவார்கள். வரன் பார்க்கும் போது களத்திரத்துடன் கொஞ்ச நேரம் பேச விரும்புவார். இரண்டாவது குழந்தை பிறந்த பின்பு வளர்ச்சி உண்டு இங்கு ஒன்பதாம் விடம் தொடர்பு வரக்கூடாது. 2, 7, 9 தொடர்பு இரண்டு திருமணம் தரும். பெரியம்மா ஊரில் களத்திரம் அமையும். இரண்டு அல்லது 20 கிலோமீட்டர் தூரத்தில் களத்திரம் அமையும்.
ஏழாம் அதிபதி மூன்றில்:
சுயமுயற்சியால் திருமணம். பதிவு திருமணம் செய்வார்கள். களத்திரம் இளையவர். இரண்டாவது குழந்தை பிறந்த பின் இடமாற்றம் இருக்கும். போலீஸ் வீட்டில் களத்திரம் அமையும். தரகர் மூலம் வரன் அமையலாம். பேப்பர் மூலம் வரன் தேடுவது. விடுதிகள் தங்கி படிப்பார்கள். அஞ்சல் வழி படிப்பு. களத்திரம் கட்டுமஸ்தான உடல் இருக்கும். கவிதை, கட்டுரை, தையல் இந்தமாதிரியான தொழில் களத்திரத்திற்கு ஈடுபாடு அதிகமாக இருக்கும். மூன்றாமிடம் திதி சூன்யம் பாதகம் எனில் பதிவு திருமணம் உறுதி. களத்திரத்தின் வீடு, டிவி ஸ்டேஷன், ரேடியோ ஸ்டேஷன், போஸ்ட் ஆபீஸ், போலீஸ் பயிற்சி மையம் இந்த மாதிரி இடங்களுக்கு அருகில் வீடு இருக்கும். பெயரும் இப்படி அமையும்.
ஏழாம் அதிபதி 3 ல் இருந்து அது பெண் வீடாக இருந்தால் அங்கு பெண் கிரகம் இருந்தால் குரல் மாறுபாடான களத்திரம் அமையும். ஆண் எனில் பெண் குரல் பெண் எனில் ஆண் குரல்.
வக்ர கிரகம் தொடர்பு இருந்தால் களத்திர த்திற்கு இடது கை பழக்கம் இருக்கும்.
ஏழாம் அதிபதி 3 ல் இருந்து புதன், ராகுவுடன் சேர்ந்து திதி சூன்யம், பாதகம், தொடர்பு, ஆனால் நண்பர்கள் உறவில், களத்திரம் அமையும்.
ஏழாம் அதிபதி நான்கில்:
களத்திரம் வீட்டில் கால்நடை பண்ணை இருக்கும். வரும் களத்திரம் சொத்து எதிர்பார்ப்பார். படிக்கும்போது திருமண பேச்சு வரும். பிறந்த ஊரில் தாய்வழியில் பக்கத்து ஊரில் 4 கிலோ மீட்டர் முதல் 40 கிலோமீட்டர் தூரத்திற்க்குள் களத்திரம் அமையும். களத்திரம் ஊரில் குளம், ஏரி, ஆறு இருக்கும். ஊர் பெயரில் நீர்நிலை பெயர் வரும். அந்த ஊரில் கல்லூரி இருக்கும்.
ஏழாம் அதிபதி நான்கிலிருந்து இதற்கு பன்னிரெண்டில் கேது இருந்தால் தொடர்பு கல்லறை அருகே களத்திரம் வீடு இருக்கும்.
களத்திரம் உறவில் கல்லறை இருக்கும். கல்லறை தெரு என்று கூட தெருப் பெயர் இருக்கலாம். களத்திரம் அழகாக இருப்பார். பாவ கிரக தொடர்பு இருந்தால் களத்திரத்திற்க்கு நீரில் கண்டம் வரும். படித்து முடித்தவுடன் திருமணம் நடக்கும் மணமான பின்வீடு சொத்து அமையும். ஏழாம் அதிபதி நான்கில் இருந்து குரு பார்த்தால் படிப்பு இடையில் நின்று மணமான பின்பு அந்தப் படிப்பு தொடரும். தாயாருக்காக இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். வரும் களத்திரம் தாயாரை மாமியார் ஜாதகரின் தாயாரை குளிர்வித்தால் நல்ல படி பார்த்துக் கொண்டால் நல்லது. வீடு, சுற்றுப்புறம், துணி இதெல்லாம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்.
ஏழாம் அதிபதி நான்கில் இருந்து திதி சூன்யம் பாதகம் கேது தொடர்பு வந்தால் ஜவுளி எடுக்கும்போது சாப்பாட்டு விஷயத்தில் சண்டை வரும்.
பால் காய்ச்சும் வீட்டிற்கு இவர்கள் போய் வந்தால் இந்த தோஷத்தில் இருந்து தப்பிக்கலாம்.
நாலாம் இடம் சரம், உபயம் என்று இருந்தால் வெளியூரில் போய் ஜவுளி எடுக்க வேண்டும்.
நாலாம் இடம் ஸ்திர ராசியாக இருந்தால் உள்ளூரில் ஜவுளி எடுக்க வேண்டும். இதில் திதி சூன்யம் ஆனால் ஜவுளி எடுப்பதில் ஜாதகர் தலையிடக்கூடாது.
பாதகம் ஆனால் ஏழு நான்கு திருமண துணி 10 + 4 கோடித்துணி, கர்ம துணி.
திருமணத்திற்கு முன் கூட்டாளிக்கு நீரில் கண்டவரும்.
ஏழாம் அதிபதி நான்கிலிருந்து இதற்கு பன்னிரெண்டில் கேது தொடர்பு நெருங்கிய நண்பன் கூட்டாளிக்கு நீரில் கண்டவரும்.
ஏழாம் அதிபதி ஐந்தில்:
களத்திரம் தேடி வரும் ஜாதகமே பொருந்தும். வாத்தியார் வீட்டுப் பெண் களத்திரமே ஆசிரியராக இருக்கலாம். களத்திரம் ஜோதிடர் குடும்பமாக இருக்கலாம். குலதெய்வ கோவில் அருகில் இவர்களுக்கு களத்திரம் அமையும். களத்திரம் ஊரில் கல்லூரி இருக்கும். ஆசிரியர் பயிற்சி கல்வியும் இருக்கும். ஏழாம் அதிபதி ஐந்தில் ராகு சாரம் பெற்று செவ்வாய் சனி சேர்ந்து பார்த்தால் ஊர் பெயரில் விலங்கு என்று பெயர் வரும். மாமன் வீட்டில் பெண் அமையும் மணமான பின்பு படிப்பார்கள். மணமான பின்பும் காதல் வரும். சூரியன், சுக்கிரன், செவ்வாய், சந்திரன் இந்த நாலு கிரகங்களில் இரண்டு கிரகங்கள் திதி சூனியம் எனில் விந்து உடலில் இருக்காது. பாதகாதிபதி தொடர்பு எனில் டெஸ்ட் டியூப் பேபி அமையும் உறவை மாற்றி குழந்தை கொடுக்கும். ஏழு ஐந்தில் களத்திரம் அதிகமாக படித்திருப்பர். ஜாதகரை விட ஐந்து ஒன்பதாம் அதிபதிகள் குரு வீட்டில் இருந்தால் குட்டி கதை சொல்வார்கள். ஏழாம் அதிபதி ஐந்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கூட்டுத் தொழில் செய்யும் களத்திரம் அமையும். சீமந்த வீடு, குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா, மொட்டை அடிக்கும் வீடு, குலதெய்வ கோவில் இந்த மாதிரியான இடத்திற்கு போனால் நல்ல களத்திரம் அமையும். அதே போல் ஒரு கர்ப்பிணி பெண்ணை நேருக்குநேர் பார்த்தாலும களத்திரம் கிடைக்கும், குழந்தைகள் மீது பாசம் இல்லாதவர்களாக இருந்தால் குட்டியை சுமக்கும் குரங்கை பார்க்கலாம், கங்காரு பார்க்கலாம். இப்படி செய்தால் குழந்தை மீது பாசம் வரும். பணம் சேர்வதற்கு எறும்புகள் தீனி கொண்டு செல்வதை அடிக்கடி பார்த்தால் பணம் சேரும். விசேஷமான வேலையாட்கள் கிடைப்பதற்கு வேலையாட்கள் தங்குமிடத்தில் அனுமார் படம் தமிழ் படம் வைப்பது நல்லது
ஏழாம் அதிபதி ஆறில்:
தாமத திருமணம் நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் போய் களத்திரம் பார்ப்பது நல்லது. களத்திரத்துடைய வேலையைப் பற்றி பேசுவது நல்லது. வெளிநாட்டு வருவாய், கூட்டுத் தொழில், சொந்த தொழில் ஆகாது. நண்பர்களால் வழக்கு உண்டு.
நண்பர்களால் கடன் உண்டு. இரவு வேலைக்கு போகும் களத்திரம் அமையும். வேலைக்கு போனால் உடனே திருமணம் நடக்கும். இவர்களுக்கு சின்னம்மா, சித்தி, களத்திரம் பார்க்கவேண்டும் தேடவேண்டும். வெளிநாடு போனால் பாஸ்போர்ட் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். புதன் திதி சூன்யம் ஆனாலும் புதன் கேது சேர்ந்தாலும் blank cheque கையெழுத்து போட்டு கொடுக்கக்கூடாது. ஜாமீன் போடக்கூடாது. ஒரு வழக்கு உண்டு. இழந்ததை மீட்டு கொடுப்பது. கேது உடைய நட்சத்திரம் பத்தாம் அதிபதியுடன் கேது இருந்தால் தாமத திருமணம். ஏழாம் அதிபதி ஆறில்இருந்தால், உணவு தொழில் வேலைக்கு செல்லும் களத்திரம் அமையும். திருமணம் முடியும் வரை ஜாதகருக்கு ஒரு பயம் இருக்கும்.
ஏழாம் அதிபதி ஏழில்:
நல்ல தாம்பத்திய சுகம். உரிய காலத்தில் திருமணம் அமையும். விரும்பியது போல களத்திரம் அமையும். மணமான பின்பு வளர்ச்சி இருக்கும். களத்திரத்தால் வருவாய் உண்டு. வாடிக்கையாளர்களால் லாபம் உண்டு. நல்ல நண்பர்கள் அமைவார்கள். ஏழில் கேந்திராதிபத்திய சுபராக இருந்தால், பணம், பதவி எல்லாம் போய்விடும். திருமண வீட்டிலும் இவர்களுக்கு களத்திரம் கிடைக்கும். ஆறு வீட்டுக்குள் சுக்கிரன் இருந்தால் மதியத்திற்குள் களத்திரம் பார்க்க செல்வது நல்லது.
ஆறு வீட்டை தாண்டி விட்டால் சுக்கிரன் பிற்பகலுக்கு மேல் களத்திரம் பார்க்க போவது நல்லது.
ஏழாம் அதிபதி எட்டில்:
திருமணத்தில் ஒரு ரகசியம் இருக்கும். திருமணத்தில் ஒரு பயம், இருக்கும் களத்திரத்தால்வருமானம் வரவு உண்டு. எட்டாம் இடம் சுபர் வீடாக இருந்தால் நல்லது. திருமணம் முடிந்த பின் ஒரு வழக்கு, விபத்து உண்டு. கஷ்டத்தை அனுபவிப்பார் களத்திரத்திற்க்கு ஆயுள் பலம் உண்டு. கூட்டுத் தொழில்ஆகாது. இறப்புக்கு சென்ற இடத்தில் இவர்களுக்கு களத்திரம் அமையும்,
கூட்டாளியால் வழக்கு உண்டு. களத்திரத்தின் பெயரில் இன்சூரன்ஸ், சேர், ஏஜென்சி போடலாம், நடத்தலாம். திருமணம் தாமதமாக செய்வது நல்லது. மணமான பின்பு ஒரு அவமானம் உண்டு.
ஏழாம் அதிபதி ஒன்பதில்:
மனைவி தேடி வரும். பலவகையில் ஆசிரியர்கள் இருப்பார்கள். மணமான பின்பு வெளிமாநிலம், வெளிநாடு செல்வார்கள். கௌரவமான ஆடம்பரமான களத்திரம் அமையும். ஆச்சாரமான களத்திரம் அமையும், மடம், சத்திரம் அருகே களத்திரம் அமையும்.வீடு இருக்கும். பூஜை, கும்பாபிஷேகம் செய்யும் இடத்திற்கு சென்றால் களத்திரம் அமையும். இவர்கள் ஆசிரியர்களிடம் ஆசி பெற்றால் நல்லது. மனைவிக்கு தங்கை உண்டு] தங்கைக்கு ஆபத்து உண்டு.
ஏழாம் அதிபதி பத்தில்:
கூட்டுத்தொழில் நன்று. மணமான பின்பு ஒரு கர்மம் உண்டு.
இரண்டாவது குழந்தை பிறந்த பின்பு தொழில் அமையும். அப்போதும் ஒரு கர்மம் உண்டு. வெளிநாடு தொழில் அமையும். களத்திரம் பெயரில் தொழில் செய்யலாம்.7 + 10, 10 + 7 தொடர்பு இல்லாமல் களத்திரத்தைதொழிலில் சேர்க்க முடியாது.
இங்கு சூரியன், செவ்வாய் தொடர்பு இருந்தால் அரசு, அரசியல் தொடர்பான வெற்றி கிடைக்கும்.
கிப்ட், பொக்கை, நெய் தொழில் செய்வது இதெல்லாம் செய்யலாம்.
மணமான பின்பு களத்திரம் வகையில் அல்லது நண்பர் வகையில் ஒரு கர்மம் உண்டு.
லக்னாதிபதி ஏழாம் அதிபதியும் நான்கில் இருந்தால் தன்னோடு படித்தவர்கள் தன் வீட்டிற்கு அருகில் உள்ள பெண்ணே மனைவியாக அமையும்.
லக்கினாதிபதியும் ஏழாம் அதிபதியும் 10 ல் இருந்தால் தொழில் செய்யும் இடத்தில் களத்திரம் அமையும்.
ஏழாம் அதிபதி பத்தில் மணமான பின்பு தொழில்,
பத்தாம் அதிபதி ஏழில் தொழில் அமைந்த பின்பு திருமணம்.
ஏழாம் அதிபதி பதினொன்றில்:
கூட்டுத்தொழில் நல்லது. காதல் மணம் களத்திர வழியில் ஆதரவு உண்டு. நண்பர்களால் ஆதாயம் உண்டு. மணம் பேசும் போது அளவாக பேச வேண்டும். களத்திரம் மூத்தவராக இருப்பார். மணமான பின் வளர்ச்சி இருக்கும். களத்திரம் பேராசை உள்ளவராக இருப்பார். ஒரு வழக்கில் வெற்றி உண்டு. தாய்மாமன் வீட்டில் களத்திரம் அமையும். சொந்தத்தில் களத்திரம் அமைய 11 ஆம் வீடு தொடர்பு இருக்க வேண்டும். அண்ணன், நண்பர்கள், இவர்களுக்குள் களத்திரம் தேடவேண்டும்.
ஏழாம் அதிபதி பன்னிரெண்டில்:
நண்பர்கள் கூட்டாளியால் வீண்பழி, வீண் அவமானம் ஏற்படும்.
4+ 12, 7+ 12, 9 +12 இந்த தொடர்பு எல்லா சுகபோகங்களும் இவர்களுக்கு கிடைக்கும். பனிரெண்டில் உள்ள கிரகத்தை சனி பார்க்க ஊனம். சனியோட சேர்ந்த கிரகத்தை பன்னிரெண்டாம் அதிபதி பார்க்கக்கூடாது.
லக்னத்திற்கு ஆறு கட்டத்திற்குள் ஏழாம் அதிபதி இருந்தால் பகலில் செக்ஸ், திருப்தி அடைவார்கள். லக்னத்திற்கு 6 கட்டம் தாண்டி ஏழாம் அதிபதி இருந்தால் இரவில் செக்ஸ் திருப்தி கிடைக்கும்.
ஐந்து + ஏழு, ஏழு + பதினொன்று இவர்கள் சேர்ந்து, இல்லை சாரம் வாங்கி இருந்தாலும், மணமான பின்பு வேறு தொடர்பு உண்டாகும்.
5 + 7 ,7 + 11 இந்த தொடர்பு சேர்ந்தோ அல்லது சுக்கிரன், செவ்வாய், ஏழாம் அதிபதி 9-ம் வீடு தாண்டி இருந்தாள் 40 வயதுக்கு மேல் வேறு தொடர்பு ஏற்படும்.
களத்திரத்தால் விரையம் இருக்கும். மணமான பின்பு ஒரு கருமம் உண்டு. பயணத்தை விரும்பும் களத்திரம் ஆக அமையும். களத்திரத்தை பயணம் செய்ய வைத்து சந்தோஷப்படுத்தலாம். ஏழாம் அதிபதி 8, 12 ஐ தொட்டால் கவனமாக இருக்க வேண்டும், 7, 12 தொடர்பு திருமணத்தில் ஒரு ஏமாற்றத்தை கொடுத்துவிடும். பெண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி பன்னிரெண்டில் இருந்தால் தன் சிரமத்தை கஷ்டத்தை மற்றவர்களிடம் சொல்லி அழக்கூடாது. ஆறுதல் சொல்லும் ஆண் வசப்படுத்தி விடுவான். இதற்கு காரணம் பூரட்டாதி நட்சத்திர பெண் சிரமங்களை மற்றவர்களிடம் சொல்லக்கூடாது. சொல்லவும் கூடாது.
அனுஷம் நட்சத்திரத்திற்கு இட்லி கடைமெஸ் வைத்து நடத்தும் பெண் ஆகாது.
ஆணுக்கு 7, 12 தொடர்பு தன் சிரமத்தை அடுத்த பெண்ணிடம் சொன்னால் அவர்கள் வசப்படுத்தி விடுவார்கள். வெளிமாநிலம், வெளிநாடு, களத்திரம் அமையும். வயது வேறுபாடான களத்திரம் அமையும். மணமான பின்பு ஒருகருமம் இருக்கும் .களத்திரத்தால் பயணமும் விரையமும் இருக்கும்.
இரண்டாம் அதிபதி வாக்கு ஸ்தானாதிபதி ஏழாமிடத்தில் இருந்தால்
மனைவியிடம் பணத்தை கொடுப்பார். திருமணம் சம்பந்தமான வருமானம். பொதுப்பணித்துறை, தாய் வழிபாட்டின் மூலம் வருமானம். 4 க்கு 4, 7 மிடம் தாய்வழி பாட்டி வசதியானவர். திருமணத்திற்குப் பின் வருமானம், பொருளாதாரம் வரும். இரண்டாவது குழந்தை பிறந்த பின் மறுபடியும் வளர்ச்சி எடுக்கும். கூட்டுதொழில் கூட்டாளிகளுக்கு பணம் கொடுப்பது. தொழிலில் நண்பர், கூட்டாளியிடம் இவர்கள் பணம் இருக்கும். திரிகோணத்தில் கேது இருந்தால் பார்ட்னர், கூட்டாளியிடம் பணம் மாட்டிக்கொள்ளும். ஏழாம் பாவம் வாடிக்கையாளர்கள். டோர் டெலிவரி செய்வது. திருட்டு குற்றம் உண்டு. கன்னியாஸ்திரிகளுக்கு தானம் தருவது. திருமணம் நடத்தி வைத்தல், திருமண சீர்வரிசை கொடுப்பார், மனைவியால் வருமானம். மனைவிக்கு வாக்கால் தொழில் அமையும்.
ஏழாம் இடம் நிவர்த்தி ஸ்தானம் ஏழாம் அதிபதி லக்னத்தை பார்ப்பது,
ஏழில் ஒரு கிரகம் இருந்து லக்னத்தை பார்ப்பது, எந்த
பிரச்சினையாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
3, 7, 9, 12 இல் உள்ள கிரகம் சந்திரனையும் வைத்து ராகுவையும் வைத்து வெளிநாடு பற்றி சொல்ல வேண்டும். கல்லீரல், விந்து, அன்பளிப்பு, சிறுநீரகம், கருவறை, சிறுநீர், நுரையீரல், தொழில் பற்றி அறியலாம். பத்துக்கு பத்து தொழில் நறுமண பொருள்கள். வெற்றி பெறுதல். நீச்சபங்க ராஜயோகம். மலர்கள். ஆடைகள். இசை. வேறு இடத்தில் வளர்தல். தாய்வழி பாட்டி. நெய்யினால் செய்யப்பட்ட உணவு பண்டங்கள். சன்யாசி இந்த பாவம் பலம் ஆனால் தான் ஜாதகன் குடும்பஸ்தன் இந்த பாவம் கெட்டால் ஜாதகம் சன்னியாசி
ரிஷபம், கும்பம் நவாம்ச லக்னமாக வரக்கூடாது. அப்படி வந்தால் திருமண முறிவு ஏற்படும்.
நவாம்ச லக்னம் ஜென்ம லக்னத்திற்கு 6, 8 ,12 வரக்கூடாது 6 ஆக வந்தால் சண்டை கிறுகிறுப்பு வேலைக்காக பிரிவது சுமார் தான்.
8 ஆக வந்தால், திருமணம் தோல்வி, மனம் தோல்வி, ரொம்ப மோசமாக இருக்கும்.
12 ஆக வந்தால் தொழிலுக்காக பிரிவு அல்லது தாமத திருமணம் அல்லது இரண்டு திருமணம் உண்டு பண்ணும்.
நவாம்ச லக்னத்திற்கு இரண்டாம் இடம் ஜாதகருடைய ரகசிய உறவை சொல்லும்.
நவாம்ச லக்கினத்தில் சுக்கிரன் இருந்தால் காரகோ பாவ நாஸ்தி திருமணம் ஆகாது. மணமுறிவு வரும்.
நவாம்ச லக்கினத்தில் கேது இருந்தால் திருமணத்தில் பிடிப்பு இருக்காது, நவாம்ச லக்னத்திற்கு நான்கில் சனியும், ராகுவோ இருந்தால் மனைவி மீது வெறுப்பு இருக்கும்.
லக்னமே வர்கோத்தமம் ஆனால் ஜாதகருக்கு இரண்டு திருமணம். ஏழாம் இட அதிபதி வர்க்கோத்தமம் ஆனாலும் இரண்டு திருமணம்.
திசாபுத்தி நடத்தும் கிரகம் நவாம்சத்தில் சம சப்தம் எனில் திருமணம் விரைவில் நடக்கும்.
நவாம்சத்தில் இரண்டில் திசா நாதனோ, புத்தி நாதனோ சேர்க்கை இருந்தால் திருமணம் விரைவில் நடக்கும்.
நவாம்சத்தில் திசாநாதன் புத்தி நாதன் எங்கு சேர்க்கைப் பெற்றாலும் விரைவில் திருமணம் நடக்கும்.
திசாநாதன், புத்திநாதன் இருவரில் ஒருவர் நவாம்ச லக்னத்திற்கு இரண்டில் இருந்தால் திருமணம் உண்டு.
திசா புத்தி நடத்தும் கிரகம் நவாம்சத்தில் 3 லோ எட்டிலோ இருந்தால் விவாகரத்து நடக்கும்.
அம்சத்தில் மூன்றாம் இடத்தில் புத்திநாதன் எனில் புத்தி முடியும் வரை பொறுத்திருந்து திருமணம் செய்வது நல்லது.
திசாநாதன் மூன்றில் எனில் விவாகரத்தில் முடியும் நவாம்ச லக்ன ஏழாம் அதிபதி 8 ல் இருந்தால் விவாகரத்து நடந்து பின்பு சேர்ந்து வாழ்வார்கள். இந்த இடத்தில் ஏழாம் அதிபதி பார்த்துக் கொண்டாலும் சேர்ந்தாலும் விவாகரத்து நடந்து சேர்ந்து வாழ்வார்கள்.
நவாம்ச ராசியின் ஏழாம் அதிபதி பலமானால் ஜாதகரை விட வாழ்க்கை துணைவி வசதியாக இருப்பார்.
நவாம்சத்தில் சுக்கிரன், ராகு இணைவு சனி, சுக்கிரன் இணைவு எங்கு சேர்ந்தாலும் காதல் திருமணம்தான்.
நவாம்சத்தில் சுக்கிரனுக்கு கோணத்தில் ராகு இருந்தால் காதல் திருமணம் நடக்கும்.
அஸ்தங்கம் பெற்ற கிரகம் இருந்த வீடு நவாம்ச லக்னமாக வரக்கூடாது. எத்தனை மணம் ஆனாலும் ஒரு திருமணமும் நிலைக்காது
சூரியனோடு சந்திரன் 3 பாகை முன்பின் இருந்தால் சந்திரன் அஸ்தங்கம் என்று எடுத்து பலன் கூறவேண்டும். நீசம் உள்ள வீடு, வக்கிரம் உள்ள வீடு, நவாம்ச லக்னம் ஆக வந்தால் திருமணத்தில் தடை, தாமதம் இருக்கும் சிலருக்கு திருமணமே இல்லாமல் இருக்கும்.
3, 7, 10, 12 திருமணத்தை சுட்டிக்காட்டும் பாவம் 3 வீரியம், 7 தாம்பத்தியம். ஏழுக்கு நாலாமிடம் பத்தாமிடம் ஆகும். பனிரெண்டாம் இடம் அயன சயன போகம். நீடித்த உறவை சொல்லும்.
சந்நியாசத்திற்கு பலம் தருவது பத்தாம் பாவகம் வலிமையானது ராகு மட்டுமோ, சனி மட்டுமோ, கேது மட்டுமோ எந்த பாவத்தை பார்க்கிறதோ அந்த பாவம் அனுபவிக்க தடை.
ஆனால் மற்ற கிரகங்கள் பார்க்காத போது இந்தப் பலன் உண்டு 3, 7, 10, 12 இல் இதை பொருத்தினால் சரியாக இருக்கும் இந்த விதி சரியாக இருக்கும் லக்னாதிபதி பார்த்த வீட்டை ஒரு சுபகிரகம் பார்க்கணும் அல்லது பார்த்த வீட்டில் ஒரு சுப கிரகம் இருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த வீட்டை ஒரு அசுப கிரகம் பார்க்கவேண்டும், அப்படி இல்லையென்றால் அந்த பாவத்திற்காக ஜாதகர் இயங்குவார்.
கிரக அமைப்பு இதில் வரிசைக்கிரமமாக இருக்க வேண்டும் பரிமாறக்கூடாது சனி, செவ்வாய், கேது, சந்திரன் இந்த அமைப்பு இருந்தால் வாழ்க்கை போராட்டமாக இருக்கும் 1, 5, 7, 9 ,12 ல் கேது இருந்தால் ஜாதகர் சாமியார்.
விரைவில் மணமுடிக்கும் ஜாதகம்
உரிய காலத்தில் எப்படி என்றால் ஏழாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் விரைவில் மணம்.
ஏழாம் அதிபதிக்கு அடுத்து சந்திரன், குரு, சந்திரன், சுக்கிரன் இருப்பது விரைவில் மணம். ராகு இருந்தால் விரைவில் திருமணம். கேது இருந்தால் திருமணம் கிடையாது.
சுக்கிரனுக்கு அடுத்து சந்திரன் இருப்பது சுக்கிரன் சந்திரன் பார்வை விரைவில் திருமணம் நடக்கும்
ஏழாம் அதிபதி க்கு திரிகோணத்தில் சுப கிரகம் இருப்பது, ஏழாம் அதிபதியும், களத்திர காரகனும், சேர்ந்திருப்பது, இரண்டாம் அதிபதி, ஏழாம் அதிபதி பலம் பெறுவது, 2, 7 அதிபதி சேர்க்கை, பார்வை விரைவில் திருமணம்.
ஏழாம் அதிபதிக்கும், இரண்டாம் அதிபதி, குரு பார்வை சேர்க்கை இருந்தால் விரைவில் திருமணம்.
ஏழாம் அதிபதிக்கு மூன்றாம் அதிபதி சேர்க்கை பார்வை பெற்றால் தன் முயற்சியில் திருமணம் முடிப்பார்கள்.
ஒரே திருமணம் 2, 7-க்குடையவர் பலம் பெறுவது 2, 7-க்குடையவர் ஆட்சி, உச்சம் இருப்பது, இருவரில் ஒருவர் இருந்தாலும் நல்லது, 2, 7 சேர்க்கை பார்வை குரு பார்வை பெற்றாலும் ஒரே திருமணம் தான்.
இரண்டு திருமணம் இரண்டாமிடம், ஏழாமிடம் பாதிப்பு அடைவது,
இரண்டாமிடம், ஏழாமிடம் ஒன்று பாதிப்படைவது,
ஏழாம் அதிபதி ஒன்பதில் இருப்பது, அல்லது ஒன்பதை பார்ப்பது, சனி + சனி, செவ்வாய் + கேது அல்லது சந்திரன் + செவ்வாய் கேது இவர்கள் 2, 7-க்கு தொடர்பு ஆனால் ஆணுக்கு இரண்டு திருமணம். பெண்ணுக்கு இரண்டு திருமணம், அல்லது இரண்டாம் தாரமாக இளைய மனைவியாக போவது.
மூன்று திருமணம் 7, 5 தொடர்பு 5, 11 தொடர்பு 5, 7, 11 தொடர்பு இவை அனைத்தும் மூன்று திருமணம்.
நாகதோஷம் 1 7. 2 8 இதில் ராகு, கேது இருப்பது இது பல பெண்கள் தொடர்பு வரும் ஆயக்கலைகள் 64 அனுபவிப்பார்கள்.
தாமத திருமணம் இரண்டாம் இடம் ஏழாம் இடம் திதி சூன்யம் ஆனால் தாமத திருமணம் ஆகும்.
சுபர்கள் குரு, சுக்கிரன், புதன் 4, 7 ,10 க்கு ஆதி பத்தியமாக இருந்து இவர்கள் யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒரு கேந்திரத்தில் இருந்தால் தாமத திருமணம். இந்த தோஷத்தை அவர்கள் தசா காலத்தில் தான் செய்வார்கள்.
கேந்திராதிபத்திய தோஷம் தருவதில் மிக மிகக் கொடியவர் குரு சுபர்கள் 7 பத்தில் இருப்பது கட்டாயம் மணவாழ்வில் பிரச்சனை உண்டு பண்ணாமல் போகாது.
ஏழாம் அதிபதிக்கு அடுத்து சந்திரன், செவ்வாய், கேது, ராகு, சனி இதன் தொடர்பு ஆகவே ஆகாது. சந்திரன், செவ்வாய், சனி, ராகு, கேது இவர்களில் இருவரோ மூவரோ தொடர்ந்து இருந்தால் கட்டாயம் வாழ்க்கை சரி இருக்காது.
வாழ்க்கைத் துணைவரில் இருவரில் ஒருவருக்கு இந்த அமைப்பு இருந்தால் மற்றவருக்கு ஏழாம் அதிபதிக்கு அடுத்து சுபர் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம். ஜாதகத்தில் ஒரு சுபர் அடுத்து பாபர் இப்படி மாறி மாறி இருந்தாலும் அதை திருமணத்துக்காக சேர்க்கலாம்.
கேந்திரம் நாலாம் இடத்தில் ஒரு கேந்திராதிபதி இருந்தால், மிதுன லக்னம்,புதன் நான்கில் தாயை பிரிந்து இருக்கணும். சொத்து இவர் பெயரில் இருக்கக்கூடாது.
கேந்திரியம் 7 ஆனால் மனைவியை பிரிந்து வாழ வேண்டும்.
தொழில் காரணமாகவோ வெளிநாடு செல்வதால் பிரிந்து இருக்க வேண்டும்
கேந்திரம் 10 ஆனால் பெரும் பதவி இருக்கக்கூடாது அதிகப்படியான ஆசைகள் இருக்கக்கூடாது
டிப்ஸ்
நான்கு, பனிரெண்டில் சனி இருந்தால் எளிமையான படுக்கை, எளிமையான தூக்கம் இந்த விஷயங்கள் செய்தால், சனியின் கெடுதல்கள் நீங்கும்.
விதி, மதி, கதி இவற்றுக்கு சனியின் தொடர்பு இருந்தால் 35 முதல் 40 வயதுக்கு மேல் தான் திருமணம் நன்றாக இருக்கும் தாமத திருமணம் நல்லது.
திருமண முறிவு ஏழாம் அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருப்பது இது பொது விதி.
ஏழாம் அதிபதி ஆறில் இருந்து அதனுடன் ஆறாம் அதிபதி இருப்பது கட்டாயம் திருமண முறிவு ஏற்படும்.
ஏழாம் அதிபதி எட்டிலிருந்து அதனுடன் எட்டாம் அதிபதி இருப்பது திருமண முறிவு ஏற்படும்.
ஏழாமதிபதி பனிரெண்டில் இருந்து அதனுடன் பன்னிரண்டாம் அதிபதி இருப்பது திருமண முறிவு ஏற்படும்.
ஏழாம் அதிபதி ஆறில், எட்டாம் அதிபதியுடன் இருந்தாலோ, இதை பன்னிரண்டாம் அதிபதி பார்த்தால் கட்டாயம் திருமண முறிவு ஏற்படும்.
ஏழாமதிபதி பன்னிரண்டில், எட்டாம் அதிபதியுடன் இருந்தாலோ இதை ஆறாம் அதிபதி பார்த்தாலும் திருமண முறிவு உண்டு.
ஏழாம் அதிபதி எட்டில் பனிரெண்டாம் அதிபதியுடன் இருந்தாலோ சேர்க்கை பெற்றிருந்தாலும் வாழ்க்கை துணைவிக்கு கண்டம் ஏற்படும்.
ஏழாம் அதிபதி 12 ல் இருந்து எட்டாம் அதிபதியுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், பார்த்தாலோ வாழ்க்கை துணைக்குகண்டம் உண்டு.
ஏழாம் அதிபதி சனி, சந்திரன், செவ்வாய், ராகு, கேதுவை தொடுவது கட்டாயம் திருமண முறிவு வரும்.
ஆறு, எட்டு அமைப்பு பலம் ஆனாலோ 6 8 12 ம் அதிபதிகள், கிழமை, இப்படி முகூர்த்த நாள் வந்தால் அப்போது முகூர்த்தம் வைக்கக்கூடாது.
பாதக லக்ன நட்சத்திர நாளில் முகூர்த்த நாள் வைக்கக்கூடாது.
6 8 12 ம் அதிபதிகள் அமர்ந்த ராசியின் நட்சத்திர நாளும் திருமணம் செய்யக்கூடாது.
ஆறாம் அதிபதி அமர்ந்த ராசி கன்னி ராசி என்றால் உத்திரம் நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை, அஸ்த நட்சத்திரம் திங்கள் கிழமை, சித்திரை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை இந்த கிழமையில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.
திருமணமே இல்லை. 2 7 இடம் பலம் குறைவது,
இரண்டாம் இட அதிபதி நீசம் ஆகி, ஏழாம் அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருப்பது,
ஏழாம் அதிபதி நீசமாகி இரண்டாம் அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருப்பது அந்த அதிபதியோடு சேர்ந்து இருப்பது நான்காம் அதிபதி பாதிப்படைவது,
நாலாம் இடம், சுகம், ஆறு, எட்டு, பன்னிரெண்டில் பாதிப்படைய கூடாது.
5, 7, 9, 10, 12 இவர்களில் 3 க்கு மேற்பட்டவர்கள் லக்னம் அல்லது லக்னாதிபதிக்கு தொடர்பு இருந்தால், சன்னியாசம் போவார்கள்.
பத்தாம் பாவகம் இது மிகவும் மோசமான சன்யாசம் ஆகும்.
லக்னாதிபதி 5, 7, 9, 10, 12 இதிலிருந்து இதனுடன் கேது தொடர்பு சேர்க்கை பெற்றால் திருமணம் இல்லை.
இரண்டாம் அதிபதியை ஏழாம் அதிபதியோ சேர்ந்து ஆறு, எட்டு, பனிரெண்டில் மாட்டிக்கொண்டால், திருமணம் இல்லை.
கணவன் மனைவி ஜாதகத்தில் கணவனின் இரண்டாம் வீடு, ஏழாம் வீடு மனைவியின் ஜாதகத்தில் 2, 7 வீடுகளாக வந்தால் அந்த வீடு வெறு வீடாக இருக்கக்கூடாது.
பத்தில் மூன்று கிரகங்கள் இருந்தால் ஜாதகர் தவசி பத்தில் நான்கு கிரகங்கள் அதற்குமேல் இருந்தால் ஜாதகர் சன்னியாசி
டிப்ஸ்
குருவுக்கு அடுத்து சுக்கிரன் 8 கட்டத்துக்கு மேல் இருந்தால் முதலில் வருமானம், பின்பு வருமானம் குறையும்.
லக்னத்துக்கு ஐந்தில் சுக்கிரன் இருந்து குரு எட்டில் இருந்தால் பிற்கால வருமானம் லக்னத்திற்கு 5 கட்டத்திற்குள் சுக்கிரன் இருந்து அதற்கு மேல் குரு இருந்தால் பின் வரவு உண்டு.
கேதுவோடு சேர்ந்து எந்த கிரகமும் கும்பத்தில் இருந்தால் ஜோதிடம் குறி சொல்லுதல், ராகு இருந்தாலும் வரும்.
நான்காம் இடம் பெண்ணின் கற்பு ஸ்தானம் 6, 8, 12 ம் அதிபதிகள் நான்கில் நின்றாலும் நாலாம் அதிபதி 6, 8, 12,ல் இருந்தாலும் இதற்கு செவ்வாய் தொடர்பு இருந்து அது சுபகிரக வீடு எனில் சந்தர்ப்ப சூழ்நிலையில் கற்பு இழப்பார். ஆனால் வெளியில் தெரியாது.
இந்த அமைப்பு பாதக தொடர்பு திதி சூனியம் பாவ கிரக வீடு இருந்தால் இது வெளியில் தெரியும்.
நான்கில் அதிக கிரகம் இருந்தால் அடுத்து வீடான ஐந்தாம் வீடு பாதிக்கும். சுபகிரக வீட்டிற்கு அடுத்து இரண்டு வீடு காலியாக இருந்தால் நன்மை தான்.
பாவம் கிரகத்துக்கு அடுத்து இரண்டு வீடு காலியாக இருப்பது அது தீமை தான்.
களத்திரஸ்தானாதிபதி 10 பனிரெண்டில் தொடர்பு பெற்று அது திதி சூன்யம் ஆனால் கணவனுக்கு கண்டம்.
மேச சனியின் பார்வை எட்டாமிடத்திற்கு ஆகாது.
2, 7, 8-க்கு சனி தொடர்பு ஆணுக்கு 30 வயதுக்கு மேல் பெண்ணுக்கு 27 வயதுக்கு மேல் மணம் முடிப்பது நல்லது.
ஜென்ம லக்னத்திற்கு அம்ச லக்னம் எட்டாக வந்தால் முதல் திருமணம் சரி இல்லை
நன்றி
வாழ்க
வளமுடன்
தமிழரசன்
க
தக்ஷா
ஜோதிட நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்
https://www.dakshaastrology.com
whatsapp: +919787969698
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக