ஞாயிறு, 7 ஜனவரி, 2024

ஆறாம் பாவகம்

 ஆறாம் பாவகம்

ஆறாம் பாவகம் மருத்துவ ஜோதிடம் ஜாதகருக்கு 6, 8, 12 இடங்கள் காற்று ராசியாக இருந்தால் ஆயுள் குறைவு உண்டு.

6 ல் சூரியன்:

கண்நோய்,தந்தையோடு கருத்து வேறுபாடு இருக்கும்.தந்தையின் உறவு சரி இருக்காது. தந்தையால் கடன் உண்டு. வயிறு தொடர்பான நோய் இருக்கும். காய்ச்சல், தலைவலி இருக்கும். அரசு வேலை உண்டு. அதிகாரம் செய்யும் வேலை அமையும். மருத்துவம். அரசாங்க ஆவணங்களை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். தலைமை தாங்குவார்கள். சூரிய சக்தி, சூரியன் சார்ந்த தொழில் செய்யலாம். தைரியம் மிக்கவர். குழந்தைகளை பிரிந்து வாழ்வார்கள். VRS  எண்ணம் இருக்கும். விரைவில் தலை வழுக்கை விழும்.

6-ல் சந்திரன்:

கண் நோய் இருக்கும். தாயாரால் அல்லது தாயாருக்கு கடன் இருக்கும். தாயுடன் கருத்து வேறுபாடு இருக்கும். சொந்த தொழில் செய்யக்கூடாது. மார்க்கெட்டிங் செய்யலாம். அடிக்கடி இடமாற்றம் உண்டு. சளித் தொந்தரவு இருக்கும்.

ஏழில் சந்திரன் இருந்தால் கடன் வாங்கக்கூடாது சுவாசக்கோளாறு உண்டு, பெண்கள் இவர்களுக்கு எதிரியாக இருப்பார்கள், 3, 6 ,10 ,11 இல் சந்திரன் இருந்தால் அடிக்கடி இடமாற்றம் செய்வார்கள்

ஆறில் செவ்வாய்:

நிர்வாகத் திறமை உண்டு. ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்துக்கள் உண்டு. மருத்துவம், காவல்துறை, வண்டி தொழில் செய்யலாம். அடிக்கடி விபத்து இருக்கும். ரத்தம் சம்பந்தமான தொழில் இருக்கும். இறைச்சி அல்லது கோழி கடை வைக்கலாம்.

இவர்கள் அதிகமாக கோபப்படக்கூடாது. ரத்த அழுத்தம் உண்டு.

இவர்கள் ரத்ததானம் செய்யலாம். பிளட் பேங்க் டொனேஷன் செய்யலாம். இவர்கள் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி சிவப்பு குங்குமம் தடவி அதை பிழிந்து விடுவது நல்லது.

ஆறில் புதன்:

ஆவணங்களை சரியாக வைத்துக்கொள்ளவேண்டும். வெளிநாட்டு வருமானம் உண்டு. சீட்டு, கமிஷன், வட்டி, தரகு, ஜோதிடம் இந்த வேலைகளைச் செய்யலாம். ஜோதிடம் அருமை. 8 12 தொடர்பு இல்லாமல் ஜோதிடம் கிடையாது. இன்சென்டடிங் வேலை செய்யலாம். பத்திரம், காலிமனையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வழக்கு வரும்.

ஆறில் புதன் திதி சூன்யம் ஆனால் ஐ பி கொடுப்பார்கள். கடனுக்காக தலைமறைவு ஆவார்கள். பல வித்தைகள் செய்வார்கள். வித்தை காரர்களாக இருப்பார்கள். நரம்பு தோல் நோய் வரும். வயது குறைவான பெண்கள் தான் இவர்களுக்கு எதிராக இருப்பார்கள். இவர்கள் ஜாமீன் போடக்கூடாது. ஜாமீன் பெறவும் கூடாது. இரண்டுமே ஆகாது. இவர்களுக்கு தந்திரம் அதிகமாக இருக்கும். ஏமாளி, நரித்தந்திரம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

ஆறில் குரு :

குழந்தை தாமதம். குரு ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருந்தால் சுபகாரியம் தடை. பொருளாதார தடை கொடுக்கும். பொருளாதாரம் வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருக்கும். எதிரி வசதியானவராக இருப்பார். எதிரி கௌரவமான நபராக இருப்பார். எதிரி ஆச்சார மாணவராக இருப்பார். எதிரி பதவியில் உள்ளவராக இருப்பார். அந்தனர், பூஜாரி, ஜோதிடர் இவர்கள் எதிரியாக இருப்பார்கள். இதே தொழிலை ஜாதகர் செய்வார். உறவுகள் முறியும். கடன் பெருகும். இவரே இவருக்கு எதிரி. வயிறு பிரச்சனை, மஞ்சக்காமாலை நோய் இருக்கும்.

ஆறில் சுக்கிரன் :

வாகன தொழில். அழகு தொழில் செய்யலாம். கலைத்துறையில் வேலை செய்யலாம். திருமணத்தடை இருக்கும். பொருளாதார தடை இருக்கும். இரண்டு மணம் இருக்கும் அல்லது மணம் தடை. வீடு கட்ட தடை. வீடு கட்ட கடன் கிடையாது. கண் நோய், யூரியன் பிரச்சனை இருக்கும். சுகர் இருக்கும். ஆறில் சுக்கிரன் இருந்து அது நீர் ராசி ஆனால் குடிப்பழக்கம் இருக்கும். இவர் இருக்கும் வரை அனுபவிக்க வேண்டும் என்ற சிந்தனை இருக்கும். கலைகளில் வெற்றி உண்டு. சாஸ்திரம் குணம் இருக்கும். அரசனுக்கு கூட ஜோதிடம் பார்க்க இவர்களுக்கு திறமை இருக்கும். மந்திர தந்திரங்களில் ஈடுபாடு அதிகமாக இருக்கும்.

ஆறில் சனி:

வேலை ஆளே எதிரியாக இருப்பார். வேலையாட்கள் மூலம் தொல்லை அதிகமாக இருக்கும். வேலையாட்கள் இவர்களுக்கு ஆகாது. கீழ்மட்ட மனிதர்களால் அதிக தொல்லை இருக்கும். வேலைக்கு போவது இவர்களுக்கு நல்லது. கடின வேலை செய்வது நல்லது. மூட்டு வலி இருக்கும். ஒன்பதில் பரல்கள் அதிகமாகி பத்தில் பரல்கள் குறைந்தால் நோகாமல் வருமானம் வரும். ஒன்பதில் பரல்கள் குறைந்து பத்தில் பரல்கள் அதிகமானால் வேலை அதிகமாக இருக்கும். சனியும் கேதுவும் ஆறில் இருக்கக்கூடாது. இவர்களுக்கு நேர்மை இருக்கும். இரும்பு ஏற்றுமதி இறக்குமதி செய்வார்கள். தார் ரோடு போடுவது, கழிவுநீர் தொட்டி கிளீன் செய்வது, 6 ல் சனி, சந்திரன் இருந்தால் சாக்கடை, கக்கூஸ் அருகே உணவு தொழில் அமையும். பக்கவாதம் அதிகமாக வரும்.

ஆறில் ராகு:

வெளிநாட்டு வேலை அல்லது வெளிநாட்டு மூலம் வருமானம் இருக்கும். மருந்து, மருத்துவ தொடர்பான தொழில் இருக்கும். விஷ மருத்துவ தேர்ச்சி இருக்கும். தற்கொலை எண்ணம் அதிகமாக இருக்கும். வட்டி தொழில், அடகு, மாந்திரீகம், போதைப் பழக்கம் இருக்கும். ஏதாவது ஒரு எதிரி இருந்துகொண்டே இருப்பார்கள். எக்ஸ்ரே ஸ்கேன் தொழில் செய்யலாம். வெளிநாடு செல்லலாம். பணம் மாற்றம் தொழிலும் செய்யலாம்.

6 ,9 இல் ராகு இருப்பது லக்ஷ்மியோகம்.

இதற்கு ஜீவசமாதி வழிபாடு நல்லது. அம்மன் வழிபாடு, ஈடுபாடு இருப்பது நல்லது. அம்மன் கோவில்களுக்கு பயணம் செய்வது நல்லது. இவையெல்லாம் செய்தால் லஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.

ஆறில் கேது:

மருத்துவம், சட்டம், ஜோதிடம் செய்யலாம். சட்டத்தின் உள்ளே ஒரு நாளாவது சென்று வருவார்கள். யூனிஃபார்ம் போடாத போலீசாக இருப்பார். செவ்வாய் கேது 3-ஆம் இட கேது உணவு தொழில் செய்யலாம். லக்ன கேது யூனிஃபார்ம் போடாமல் வண்டி ஓட்டுவார்கள். சுக்கிரன், கேது ஒன்றுவிட்ட மச்சினி அல்லது ஒன்றுவிட்ட சகோதரன் என்று எடுக்கலாம். நேரத்திற்கு சாப்பிடாமல் வயிற்றுப் பிரச்சனை இருக்கும். இவர்கள் இடத்தில் சுவர் வேலி போட்டால் பிரச்சனை வரும். வழக்கு இருக்கும். உறவில் விரிசல் உண்டு. உத்தியோகம் நல்லா இருக்கும்.

டிப்ஸ்

சுக்கிரன் நீசம் ஆனால் நாய்கடி உண்டு. நவாம்சத்தில் சுக்கிரன் நீசம் ஆனால், மனைவிக்கு நாய்க்கடி உண்டு. ஆறாம் அதிபதி எங்கு இருந்தாலும் அந்த வீட்டு அதிபதி அங்கு இருந்தால் பெரும் பாதிப்பு இருக்கும். ஆறாம் அதிபதி எங்கு இருந்தாலும் 8, 12- க்கு உடையவரோடு சேரக்கூடாது.

ஒரு உப ஜெய ஸ்தானாதிபதி மற்றொரு உப ஜெய ஸ்தானாதிபதியும் மாறி மாறி இருப்பது உயர்வான பொருளாதார வாழ்வு கொடுக்கும்.

குரு, சுக்கிரன், புதன் உப ஜெயத்தில் இருந்தால் அது வசுமதி யோகம். சொத்து மதிப்பு உண்டு.

பாவிகளுக்கு உபஜெய ஸ்தானம் நல்லது 3, 6, 10, 11 இதில் இருந்து திசை நடத்தினால் யோகம் இருக்கும்.

ஆறாம் அதிபதி மீது கோசார கேது வரும்போது கடன், வழக்கு, நோய் வரும்.

ஆறாம் அதிபதிக்கு அடுத்து பதினொன்றாம் அதிபதி இருந்தால் கடன், நோய், வழக்கு தீரும்.

தனுசு மிதுனம் லக்னகாரர்களுக்கு 6, 11 க்கு ஒரே கிரகம் வருவதால் கடன் அடைபடும்.

ரிஷபம், விருச்சிகம் வழக்கு வெல்லும் ராசி.

கும்பம் ராசி, ஆறாம் அதிபதி, ஆறாம் பாவம் திதி சூனியத்தில் இருந்தால் கடனால் அவமானம் இருக்கும்.

லக்ன பாகையும் ஆறாம் அதிபதி பாகையும் நெருக்கம் ஆனால் கடன் இருக்கும். ஆனால் நல்ல வேலை கிடைக்கும்.

ஆறாம் அதிபதி ஐந்தில் இருந்தால் வெல்வார்கள்.

ஆறு ஐந்து 6, 9 வழக்கில் சாட்சி சொல்வார்கள். வழக்குக்கு ஆதாரம் கிடைக்காமல் ஓய் வெற்றி கிடைக்கும்.

ஜாதகருக்கு 6 ஆம் அதிபதியும் 11 ஆம் அதிபதியும் வலுகுன்றி இருந்து யாராவது ஒருவர் புதன் நட்சத்திரத்தில் இருந்தால் I P கொடுப்பார்கள்.

ஆறாம் அதிபதிக்கு செவ்வாய், ராகு தொடர்பு அல்லது ராகு சாரம் பெற்ற கிரகத்தை ஆறாம் அதிபதியும், செவ்வாயும் பார்த்தால் நாய் கடி நிச்சயம்.

திதி சூன்யம் பாதகாதிபதி தொடர்பு நாய்க்கடி நிச்சயம்.

நாலாம் இடமாக வந்தால் வீட்டு நாய் கடிக்கும்.

ஏழாம் இடமாக வந்தால் எதிர் வீட்டு நாய் கடிக்கும்.

நாய்க்கடி நட்சத்திரம் திருவாதிரை இதிலுள்ள கிரகத்திற்கும் நாய்க்கடி உண்டு.

ஆறாம் அதிபதி வக்கிரம், பத்தாம் அதிபதி வக்ரம் என்றாலும் 6, 10 க்கு வக்ரகிரக தொடர்பு என்றாலும் பல இடங்களில் பணியாற்றுவார்கள். பதவி உயர்வுக்கு தடை இருக்கும்.

ஒரு பாவத்திற்கு ஒரு கிரகத்திற்கு 3, 6, 10, 11 இல் உள்ள கிரகம் அந்த பாவத்திற்கு அந்த கிரகத்திற்கு வலுவை கூட்டுகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் 3, 6, 10, 11 இல் இருப்பது ஜாதகருக்கு எதிர்பாராத வளர்ச்சி இருக்கும்.

விபரீத ராஜயோகம் செயல்படும்.

இதை 40, 45 வயது உள்ளவர்களுக்கு சொல்ல வேண்டும் என் வாழ்வு நன்றாக இருக்கும் ஒரு இழப்பை சந்தித்து மீண்டும் ஒரு நல்ல நிலைக்கு வருவார்கள்.

உப ஜெயத்தில் இயற்கை பாவர்கள் இருப்பது மிக மிக நன்மை.

ஆறாம் பாவத்திற்கு ஆறாம் அதிபதிக்கு கேது தொடர்பு இருந்தால் கட்டாயம் வழக்கு இருக்கும்.

ஆறாம் அதிபதி நின்ற பாகையில் முன்பின் மூன்று பாகையில் கேது நின்றால் வழக்கு இருக்கும். ஆறாம் பாவத்திற்கு கேது தொடர்பு அகால போஜனம்.

ஆறாம் அதிபதிக்கு அடுத்து ராகு, கேது, சந்திரன், செவ்வாய், சனி தொடர்பு எனில் இவர்களில் இருவர் அல்லது மூவர் இருந்தால் தேவையற்ற கடன் வரும். தன் தேவைக்கு தொடர்பில்லாத கடன் வரும் ஆறாம் அதிபதி பன்னிரெண்டாம் இடத்தை பார்த்தால் இவர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யலாம். இரவு தொழில் செய்யலாம்.

லக்னம் லக்னாதிபதிக்கு ஆறாம் அதிபதி தொடர்பு இருந்தால், தொடர்ந்து கடன் இருந்து கொண்டே இருக்கும். கோபம் அதிகமாக இருக்கும்.

ஆறாம் பாவத்திற்கு செவ்வாய், சுக்கிரன் தொடர்பு இருந்தால் விபத்து இருக்கும் செவ்வாய்க்கு அடுத்து அல்லது ஆறாம் அதிபதி க்கு அடுத்து எந்த கிரகம் இருக்கிறதோ அந்த காரக உறவுக்கு விபத்து இருக்கும்.

கிருத்திகை நட்சத்திர சாரத்தில் ஒரு கிரகம் இருந்து அதற்கு ஒரு விபத்து நடந்தால் அவர் பிழைத்துக் கொள்வார்.

திருவாதிரையில் நின்றால் அது இறந்துவிடும்.

ஆறாம் அதிபதி 5, 9 இல் இருந்தால் உத்தியோகம் தேடி வரும்.

ஆறாம் அதிபதி 5, 9, 11, 12 இல் இருந்தால் கடன் ஜாதகர் பெறுவார்.

ஆறாம் பாவகம் நிர்வாகத் திறனை குறிக்கும்.

சூரியன் ராசி அம்சத்தில் பலம் பெற்றால் மருந்து மாத்திரை இல்லாமல் நோய் குணமாகும். பெரும் மருத்துவம் தேவை இருக்காது.

ஆறாம் அதிபதி பார்வை பெற்ற கிரகத்திற்கு சூரியன் செவ்வாய் பார்வை பெற அந்த உறவு பெரிய பதவியில் இருக்கும்.

ஆறாம் அதிபதி நெருப்பு ராசிகள் இருந்தால் வெப்பநோய் இருக்கும்.

ஆறாம் அதிபதி நீர் ராசியில் இருந்தால் வலிப்பு, நீர் நோய், நரம்பு நோய் இருக்கும்.

ஆறாம் அதிபதி நில ராசியில் இருந்தால் தோல் நோய் இருக்கும்.

ஆறாம் அதிபதி காற்று ராசியில் இருந்தால் மாரடைப்பு, சுவாசநோய், விக்கல், ஏப்பம், கேஸ் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும்.

ஆறாம் அதிபதி சர ராசியில் இருந்தால் நோய் வரும், ஆனால் நோய் போய் விடும்.

ஆறாம் அதிபதி ஸ்திர ராசியில் இருந்தால் நோய் வருவதற்கு லேட் ஆகும் நோய் போவதற்கும் லேட் ஆகும்.

ஆறாம் அதிபதி உபய ராசியில் இருந்தால் ஒருமுறை வந்த நோய் இரண்டு முறை வரும் இரண்டு ஊசி போட வேண்டும்.

நவாம்ச விருச்சிகத்தில் கிரக சேர்க்கை பலன் குரு கேது நவாம்ச விருச்சிகத்தில் இருந்தால் உடம்பில் கட்டி அதிகமாக இருக்கும்.

சந்திரன் சுக்கிரன் நவாம்ச விருச்சிகத்தில் இருந்தால் வெண்குஷ்டம் வரும்.

சந்திரன் புதன் நவாம்ச விருச்சிகத்தில் இருந்தால் வெண்குஷ்டம், மறதி, மனநிலை பாதிப்பு இருக்கும்.

புதன் சனி நவாம்ச விருச்சகத்தில் இருந்தால் வலிப்பு, வெரிகோஸ் ப்ராப்ளம் இருக்கும்.

சூரியன் + கேது, சந்திரன்+கேது நவாம்ச விருச்சிகத்தில் இருந்தால் ஆஞ்சியோ பிளஸ் பண்ணுவார்கள்.

ராசி கட்டத்தில் கடகத்துக்கு கேது தொடர்பான ஆஞ்சியோ பிளஸ் பண்ணுவார்கள்.

நீச சனி இரண்டை பார்த்தால் பேச்சு அசிங்கமாக இருக்கும்.

சனி செவ்வாயுடன் ஒரு கிரகம் இருந்தால் இருந்த கிரக உறுப்பு வெட்டி எடுக்கப்படும். விருச்சிக நவாம்சத்தில் கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது.

பத்தாமிட புதனும் கர்ம ஸ்தானாதிபதியும் லக்னாதிபதி யுமான புதன் நாலாம் இட சுகஸ்தானத்தில் குரு புதன் இருவரும் தோஷத்தில் உள்ளார்கள்

மூன்று எட்டுக்குடைய செவ்வாய் மூன்றாம் இடத்தில் ஆட்சி பெற்று திதி சூன்ய ராசி கிரகமும் செவ்வாய் அதனால் ரத்தக் குறைபாடு வீரியத்தன்மை மற்றும் ரத்த அணுக்கள் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது அந்த செவ்வாயும் சனி சாரத்தில் சனி 5 6-க்குடையவர் அதிபதி வக்கிரம்

லக்னாதிபதி நீசம் அட்டமாதிபதி குடும்பஸ்தானத்தில் குடும்ப ஸ்தானாதிபதி நாளில் அமர்ந்து கேது மாந்தியுடன் இணைவு திருமணம் தாமதப்படும்

ஆறாம் அதிபதி லக்னத்தில்:

மூச்சுத்திணறல் கட்டாயம் இருக்கும். கோபம் அதிகமாக இருக்கும். கோபத்தை இவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் அதுதான் நல்லது. தலைமை தாங்கும் பண்பு இருக்கும். இதை செவ்வாய் அல்லது சூரியன் பார்த்தால் அரசு அதிகாரியாக இருப்பார் அல்லது மருத்துவராக இருப்பார். உடம்பில் வெட்டுக் காயம், தழும்பு இருக்கும். இவர்கள் எதிரிகளை வெல்பவர்கள். முன்னேற்றத் தடை இருக்கும். தடையை மீறி தான் முன்னேறவேண்டும். வெற்றி நிச்சயம். தாமத திருமணம் இருக்கும்

ஆறாம் அதிபதி இரண்டில் :

வெளிநாட்டு வருமானம் உண்டு. குடும்பத்தில் சண்டை சச்சரவு பிரிவினை இருக்கும். கண் பல் தொடர்பான மருத்துவ செலவு இருக்கும். பொருளாதாரரீதியாக ஒரு அவச்சொல் இருக்கும். கெமிக்கல் தொழில் நன்று. உணவுத் தொழில் மூலம் வருமானம் உண்டு. பேச்சால் வருமானம் நல்லது. கட்டப்பஞ்சாயத்து இருக்கும். இளமையில் வறுமை இருக்கும். வாக்குறுதி இவர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடாது. துவக்க கல்வி தடை இருக்கும். படிக்கும்போதே வேலை இருக்கும். நேரத்திற்கு சாப்பிடுவார்கள். ஆறுமுகம் என்ற பெயர் கொண்டவர் வீட்டருகில் அல்லது நண்பராக இருப்பார். குடும்பத்தில் சில சலசலப்பு இருக்கும். குடும்பத்தை விட்டு ஒரு நாளாவது பிரிந்து வாழ்வார்கள். உணவுத் தொழில் நன்று. வக்கீல் தொழில், வட்டி வருவாய், சீட்டு கம்பெனி, வேலை நன்றாக இருக்கும். இரவு வேலை நன்று. ஆறாம் அதிபதி இரண்டில் இருந்து ஏழாம் இடம் கெட்டால் அவர்களுக்கு தாரம் இரண்டு.செவ்வாய் சனி எந்த மாதிரி பெயர்கள் அமையும் சுப்பிரமணி சரவணன் செந்தில் இப்படி சாமியில் முடியும் பெயர் அமையும். செவ்வாய் சுயசாரத்தில் இருந்தால் பிரபு பிரபாகர். மதுரைக்காரன், பாண்டிச்சேரிகாரன் இவர்கள் அருகில் இருப்பார்கள். குரு இருந்தால் குமாரராஜா, சேகர் என் பெயர் கொண்டவர்கள் பக்கத்தில் இருப்பார்கள்.

ஆறாம் அதிபதி 3 ல்:

3, 6 செவ்வாய் தொடர்பு இருந்தால் காவல்துறை இராணுவம் இருக்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு அதிகமாக இருக்கும். சகோதரனால் கடன் படுவார். பிறரை அடக்கி ஆளும் எண்ணம் இருக்கும். Ent பிரச்சனை இருக்கும். கைவிரலில் காயம் இருக்கும். பக்கத்து வீட்டாருடன் சண்டை சச்சரவு இருக்கும். போகத்தில் தடை இருக்கும். சிலருக்கு வீரிய குறை இருக்கும். மூன்றாம் இடம் கெட்டால் கண்டிப்பாக இதை உறுதி செய்யலாம். ஆறாம் அதிபதி மூன்றில் இருந்து ஒன்பதை பார்த்தால் கம்யூனிகேஷன் மார்க்கெட்டிங் செய்யலாம்

ஆறாம் அதிபதி நான்கில்:

கல்வித்தடை இருக்கும். வேலை செய்துகொண்டே படிப்பார்கள். தாயாருக்கு உடல்நிலை சிறிது பாதிப்பு இருக்கும்.தாயாருடன் கருத்து வேறுபாடு இருக்கும். வீட்டிலேயே உணவு தொழில் செய்வார்கள். வீட்டின் மீது கடன் இருக்கும். அடிக்கடி இடமாற்றம் இருக்கும். பிறந்த இடத்தை விட்டு வெளியே போவார்கள். வாடகை வீட்டில் வசிப்பார்கள். நீர் தொடர்பான தொல்லை இருக்கும். தாயார் வர்க்கத்தில் தண்ணீரில் விழுந்தவர்கள் யாராவது இருப்பார்கள். இவர்கள் இரவில் வீட்டுக்கு வந்துவிடும் எண்ணம் இருக்கும். வீட்டின் மீது வழக்கு இருக்கும்.

வீடு கட்ட தாமதம் இருக்கும். ஆறாம் அதிபதி 4ல் இருந்தாலோ எட்டாம் அதிபதி நான்கில் இருந்தாலோ அது நீர் ராசியாக இருக்கும் பட்சத்தில் வீட்டிற்குள் தண்ணீர் வரும்.

எந்த பாவம் என்றாலும் செவ்வாய் சந்திரன் அல்லது சந்திரன் சுக்கிரன் மழை பெய்தால் வீட்டைப் பற்றிய நினைவு வரும்.

மழை பெய்தால் நேரத்தில் வீட்டிற்கு எப்போ போவோம் என்று வீடு நனைந்து விடுமோ என்ற எண்ணம் இருக்கும்.

தாயார் உறவு பாதிக்கும். உறவுகளில் பகை இருக்கும். இவர்கள் போர் போட்டால் தண்ணீர் கிடைப்பது கஷ்டம் போருக்காக அதிக செலவு செய்வார்கள்.

ஆறாம் அதிபதி நாலில் இருந்தால் பள்ளியில் வேலை.பள்ளிக்கூடத்தில் சமையல் வீட்டருகே வேலை. வீட்டின் அருகே எதிரி இருப்பார்கள். படிப்புக்காக கடன் வாங்குவார்கள். படித்த இடத்திலேயே உள்ளூரிலேயே வேலை கிடைக்கும். தாயார் கால்நடை தொழிலில் இருப்பார்.

ஆறாம் அதிபதி ஐந்தில்:

குழந்தையோடு கருத்து வேறுபாடு இருக்கும்.பூர்வீகத்தில் வழக்கு இருக்கும். குலதெய்வ வழிபாடு தடையாக இருக்கும். குழந்தை தாமதம், குழந்தைக்கு புத்திர தாமதம். குழந்தைக்கு மருத்துவ செலவு இருக்கும். குழந்தைக்கு விரைவில் வேலை கிடைக்கும்.மேல்படிப்புக்காக கடன் வாங்குவார்கள். குழந்தை வெளிநாட்டில் இருக்கும். கடன் வழக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வழக்கு இவர்களை தேடி வரும் அதே வேகத்தில் வழக்கு போய்விடும். கோவிலில் வேலை கிடைக்கும்.

ஜோதிட பணி செய்யலாம். மத ஈடுபாடு அதிகமாக இருக்கும். சூரியன் செவ்வாய் தொடர்பு நல்லது. சூரியன் செவ்வாய் இராசியை பார்தால் அரசுவேலை அரசியல் ஈடுபாடு இருக்கும். பதினொன்றாம் அதிபதி தொடர்பு கிடைத்தால் சொகுசான வேலை கிடைக்கும். மறதி இருக்கும் மகப்பேறு மருத்துவமனையில் வேலை செய்யலாம். மனநல மருத்துவமனையில் வேலை செய்யலாம். குழந்தையை பிரிந்து இருப்பது நல்லது. குழந்தை என்ற பெயர் உள்ளவர்கள் வீட்டில் இருப்பார்கள், இல்லையென்றால் நண்பர்கள் இருப்பார்கள்

ஆறாம் அதிபதி ஆறில்:

இது ஹர்சி யோகம்.அழகான உடல்வாகு இருக்கும்.

செல்வந்தராக இருப்பார்கள். நீண்ட ஆயுள் இருக்கும் எதிலும் வெற்றி இருக்கும். எப்போதும் எதிரி உண்டு. சண்டையிடுதல், வாக்குவாதம் இருக்கும். போலீஸ் ராணுவ வேலை நல்லது.

ஆறாம் அதிபதி ஏழில்:

கூட்டுத்தொழில் ஆகாது. திருமண வாழ்க்கையில் தடை இருக்கும். திருமணத்தால் கடன் இருக்கும். திருமணத்தன்று ஒரு சண்டை இருக்கும். மனைவிக்கு நோய் உண்டு. வேலைக்கு செல்லும் மனைவி அமைவார் அதிலும் சண்டை போடும் மனைவியாக அமைவார். ஜாதகருக்கு முதலில் வேலை அதன் பின்பு தான் திருமணம் நடக்கும்.வேலை செய்யும் இடத்தில் பெண் கிடைக்கும். ஆறாம் அதிபதியை தாண்டி ஏழாம் அதிபதி இருந்தால் முதலில் வேலை பின்பு திருமணம நடக்கும்.

ஏழாம் அதிபதியை தாண்டி ஆறாம் அதிபதி இருந்தால் முதலில் திருமணம் பின்பு தான் வேலை அமையும்.

ஏழில் சனி இருந்தால் மணமான பின் ஒரு கர்மம் இருக்கும்.

ஏழில் சனி இருந்து பத்தாம் அதிபதி பன்னிரண்டாம் அதிபதி இருந்தால் தொடர்புகள் திருமணம் பேசியவுடன் ஒரு கர்மம் இருக்கும்.

மணநாளன்று ஒரு கர்மம் மண மேடை அருகே நடக்கும் அல்லது அந்தத் தெருவில் ஒரு பிணமாவது போகும்.

வெளிநாடு சென்றால் ஆவணங்களை சரியாக இருக்க வேண்டும். நண்பருடன் பகை இருக்கும். மனைவியோடு சண்டை சச்சரவு இருக்கும். தாம்பத்திய சுகத்தில் தடை இருக்கும். இரவு வேலை நன்று. வேலைக்காக வெளியூர் வெளிநாடு செல்வார்கள்.கூட்டுறவுத் துறை, பொதுப்பணித் துறையில் வேலை கிடைக்கும். தன் அறிவு தொண்டு நிறுவன வேலையில் இருக்கலாம்.திருமண வேலை இவர்களுக்கு நல்லது, ஆனால் திருமண நிலையம் நடத்தக் கூடாது.

ஆறாம் அதிபதி எட்டில்:

வேலை தடை இருக்கும். பார்த்த வேலையை விட்டுவிட்டு நிரந்தர வேலை என்று சொல்ல முடியாத நிலையில் இருப்பார். எல்ஐசி, இன்ஷூரன்ஸ் வேலை நல்லது. தூக்கம் கெடும் நேரத்திற்கு சாப்பிடாததால் வாயுத் தொல்லை இருக்கும். விபத்து வழக்கு உண்டு. குறுக்கு வழியில் வருவாய் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் இருக்கும் 6, 8, 12 பரிவர்த்தனை அல்லது அங்கேயே இருப்பது விபரீத ராஜயோகம். இவருடன் யார் இருக்கிறாரோ அவருக்கு யோகம்.ரகசிய தொழில், ஜோதிட தொழில் நல்லது. பின்னாடி இருந்து இயக்குவது. சுரங்கம், குவாரி வேலை, லாட்டரி, ரேஸ், உணவு தொழில் இவை எல்லாம் ஆகாது. டிடெக்ட்டிவ் ஏஜென்ட் சிறப்பு.

ஆறாம் அதிபதி ஒன்பதில்:

வேலை தேடி வரும். தந்தைக்கு சிறு விபத்து உண்டு. தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். கடன் வாங்கினால் பெருகிவிடும். பயணம் சார்ந்த வேலை இருக்கும். டிராவல் ஏஜென்ட். சாஸ்திர தொடர்பான வேலை இருக்கும். கோவில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. தந்தை வகையில் கோவிலை பராமரித்தவர்கள் இருப்பார்கள். தந்தையின் வேலை இருக்கும். ஆசிரியருடன் பகை இருக்கும். தந்தையை பிரிக்கும், தந்தைக்கு கண்டம். இவர்கள் பாக்கியத்தை அனுபவிக்க தடை இருக்கும்.தந்தையின் சொத்தை அனுபவிக்க முடியாது. சொத்தில் வழக்கு இருக்கும். ஜாமீன் யாருக்கும் போடக்கூடாது. தந்தைக்கு வாயுத் தொல்லை இருக்கும். தந்தைக்கே மடத்தில் வேலை பார்க்கும் வேலை அல்லது பரம்பரை வேலை இருக்கும்.

ஆறாம் அதிபதி பத்தில்:

சிறுதொழில் நன்று. சூரியன் அல்லது செவ்வாய் தொடர்பு இருந்தால் மருத்துவம் வரும். இருவருடன் தொடர்பு இருந்தால் மத்திய அரசு டாக்டர் வரும். சொந்தத் தொழில் செய்யக்கூடாது. மாமியாருடன் கருத்து வேறுபாடு இருக்கும். வெளி நாட்டு வருமானம் உண்டு. உணவு தொழில் வேலை நல்லது. இவர்களுக்கு வேலை கிடைத்தவுடன் ஒரு கர்மம் உண்டு. பல கிளைகள் உள்ள இடத்தில் வேலை அமையும். இரவு உணவகம் நல்லது. அயன சயனத்தை அனுபவிக்க தடை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் தங்குவார்கள். வயிறு தொடர்பான நோய் இருக்கும். தூக்கத்தில் பேசிக்கொண்டு இருப்பார். உயரமான இடத்தில் வேலை இருக்கும் உயரமான இடத்தில் வேலை இருக்கக்கூடாது. பனிரெண்டாமிடம் உயரமான இடம். பயணம் செய்து வேலைக்கு போவது நல்லது. வெளியூரில் வழக்கு வெளியூரிலிருந்து வழக்குக்காக உள்ளுருக்குவருவது. வழக்குக்காக பயணம். கடின வேலை கடன் கட்ட வேலைக்கு போவது. கால் பாதத்தில் இவர்களுக்கு நோய் வரும். இவர்கள் உணவு தொழில் ஏற்றுமதி செய்யலாம். நடைபயணம், நடைபயிற்சி ஆர்வம் அதிகமாக இருக்கும். காண்ட்ராக்ட் வேலை சீசன் வேலை நல்லது. கிரகம் வக்கிரம் ஆனால் அடிக்கடி இடமாற்றம் உண்டு. புரமோஷன் தாமதமாக கிடைக்கும்.

வேலை செய்யும் இடத்தில் எதிரி போட்டி இருக்கும்.வேலை அதிகமாக இருக்கும். தாம்பத்திய சுகம் குறைவு, மணவாழ்வு பாதிக்கும்.ஆறாம் பாவகம் தொழில் எல்லாம் செய்யலாம். வீட்டில் தொழில் செய்வது, வீடு கட்டி வாடகைக்கு விடுவது. கருமம் செய்வதற்கு இவர்களுக்கு தடை இருக்கும்.

ஆறாம் அதிபதி பதினொன்றில்:

இவர்களுக்கு நண்பனே எதிரியாக இருப்பார். பணிபுரியும் இடத்தில் எதிரி இருப்பார். வழக்கு வெற்றி இருக்கும். கடன் இருக்கும். உத்தியோகம் நல்லது. இவர்களுக்கு எந்த நோய் வந்தாலும் சீக்கிரம் குணமாகும்.மூத்த சகோதரத்துடன் கருத்து வேறுபாடு இருக்கும்.மூத்த சகோதரனால் கடன் இருக்கும். மூத்த சகோதரனுக்காக கடன் வாங்கக்கூடாது. மாமனுக்கு மணவாழ்க்கை சரியில்லை. மாமனுக்கு இரண்டு மனைவி உண்டு. சித்தப்பாவுடன் கருத்து வேறுபாடு உண்டு. ஒரு உபஜெய ஸ்தானாதிபதி இன்னொரு உபஜெய த்தில் இருந்தால் நல்லது தந்தைக்கு வளர்ச்சி உண்டு.

ஆறாம் அதிபதி பன்னிரெண்டில்:

வெளிநாட்டு வேலை கிடைக்கும். இரவு வேலை நல்லது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் நன்று. ஜோதிடம் பார்க்கலாம். மருத்துவத்துறையில் இருக்கலாம். சாப்பிட்டவுடன் தூக்கம் வரும். சாப்பிட்டவுடன் டாய்லெட் போவார்கள். தூக்கம் கெடும். கடன் நோய் வழக்குக்காக இவர்கள் பணம் விரையம் செய்வார்கள். வெளிநாட்டு செல்லும்போது ஆவணங்களை சரியாக உள்ளதா என்று பார்த்து போகவேண்டும்.

உயர்பதவி கிடைக்கும் துணை தொழில் செய்யலாம். வேலை பார்த்துக்கொண்டே சைடு பிசினஸ் செய்யலாம்.

மருத்துவத்துறை

ஆறாம் பாவகம் மருத்துவர் ஆகும் யோகம். ஆக்சிஜன் தருபவர் சூரியன்,

ஒளிக்கதிர்களால் சக்தியை தருபவர் சூரியன், மருத்துவத்துறையில் வெற்றியை கொடுப்பவர் சூரியன். மருந்து கிரகம் என்றால் சூரியன். செவ்வாய் என்றால் தைரியம். தசைநார்கள், காயங்கள், விபத்து, அறுவை சிகிச்சை இதற்கு காரணகர்த்தா.கதிர்வீச்சு, ஹீமோதெரபி,

ராகு கேது குரு நோயை குணப்படுத்தும் கைராசி டாக்டர் என்ற பெயருக்கு காரணகர்த்தா. மக்கள் சக்தி மருத்துவமனை அமைக்க பணியாற்ற.

தீராத வலி வேதனை இதெல்லாம் சனியை குறிக்கும். சனி பார்வை பட்ட கிரக நோய், கிரகத்தினால் உண்டாகும் நோய் குணமாக நீண்ட நாள் ஆகும்.

ராகு கேது தொற்று நோய், கிருமி, ஸ்கேன், எக்ஸ்ரே. இவையெல்லாம்.

மருத்துவ நட்சத்திரம் அஸ்வினி, மகம், மூலம், மிருகசீரிடம், திருவாதிரை, சித்திரை, சுவாதி, உத்திராடம், அனுஷம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி.

இதில் அஸ்வினி மகம் மூலம் மிருகசீரிடம் அனுஷம் சதயம் ரேவதி இவர்கள் பேமஸ் டாக்டர் ஆக இருப்பார்கள்.

துல்லியமாக பார்த்தால், சதயம் நட்சத்திரம் கொண்டவர்கள் டாக்டராக ரொம்ப பிரபலமானவராக இருப்பார்.

மருத்துவர்கள் சிம்மம், விருச்சிகம். சிம்ம ராசியாக வருவது நல்லது.

சிம்ம லக்கினமாக வருவது நல்லது.

பத்தாம் இடமாக வருவது விருச்சிக ராசி அல்லது லக்னமாக வருவது அல்லது பத்தாம் இடமாக வருவது.

ஆறாம் பாவம் நோயை குறிக்கும். இதன் காரகர் சனி.

செவ்வாய் மருத்துவராக பணியாற்றுவதை குறிக்கும்.

எட்டாம் பாவம் மருத்துவமனை மருந்து, தாய்சேய் நலவிடுதி, இறப்பு, இறப்பின் தன்மை, தீராத வியாதியை குறைக்கும்.

பனிரெண்டாம் இடம் மருத்துவத்தில் நீண்ட காலம் பணியாற்றுவது பெயர் பெறுவது

லக்னம் அல்லது லக்னாதிபதி 6, 8, 12 தொடர்பு மருத்துவத்துறை 8, 12 சூரியன் செவ்வாய் தொடர்பு இருந்தால், ஆறு எட்டு பாபங்களும் அல்லது சூரியன் செவ்வாய் குரு இவர்கள் பலம் பெற்றால் மருத்துவத்துறையில் பெயர் வாங்க முடியும்.

புதனுக்கு அடுத்து ராகு அல்லது சூரியன் இருக்க மருத்துவ படிப்பு.

இரண்டாம் அதிபதிக்கு அடுத்து சூரியன் செவ்வாய் கேது மருத்துவத்துறையில் வருமானம் இருக்கும்.

இரண்டாம் அதிபதி ஆறு, எட்டு, பன்னிரெண்டில் இருப்பது தொழில்.

சூரியன் கிரக நோய்கள்

இருதய நோய், எலும்பு முறிவு, ஒற்றைதலைவலி, மஞ்சள் காமாலை, ஜுரம், நெருப்பினால் ஏற்படும் புண், வெட்டுக்காயம், தோலில் ஏற்படும் குஷ்டம், பித்த உடல், கண்பார்வை குறைவு, மனநோய், மாறுதல், செரிமான கெடுதல், வயிற்றுப்போக்கு, தலைவலி, இமேஜ் எல்லாம் சூரியனுடைய நோய்கள்

சூரியன் சூரியன் சாரத்தில் இருந்தால் கட்டாயம் காய்ச்சல் வரும், தாங்கமுடியாத எரிச்சல் உடம்பில் இருக்கும் ,ஆறாத புண் இருக்கும், எப்பவும் சொறிந்து கொண்டே இருப்பார்கள்.

சூரியன் சந்திரன் சாரத்தில் இருந்தால் தன்னம்பிக்கை இருக்காது. ஜாதகர் உணர்ச்சி வசப்படுவார்.

சூரியன் செவ்வாய் சாரத்தில் இருந்தால் ரத்தசோகை இருக்கும் ரத்த அழுத்தம் இருக்கும் அல்லது low bp, high bp இருக்கும், தலைசுற்றல் வரும், இவர்கள் ராட்டினம் ஏறக்கூடாது, உயரமான மாடியில் இருந்து எட்டி பார்க்க கூடாது.

சூரியன் புதன் சாரத்தில் இருந்தால் ஒற்றை தலைவலி வரும்.

சூரியன் சுக்கிரன் சாரத்தில் இருந்தால் நீர்த்தாரையில் பிரச்சனை இருக்கும்.

சூரியன் சனி சாரத்தில் இருந்தாள் ஓ பி பி வரும்.

சூரியன் ராகு சாரத்தில் இருந்தால் மனநோய் இருக்கும். சோம்பல் இருக்கும். தன்னை மறந்து இருப்பார்.

சூரியன் கேது சாரத்தில் இருந்தால் ரத்தக் குறைவு, இருக்கும்.

குருவும் சூரியனும் பலம் குறைந்தால் பாதிப்பு இருக்கும் high bp வரும்.

சனி சூரியன் பாதிப்படைந்தால் லோ பிபி வரும்.

செவ்வாய் சூரியன் பாதிப்படைந்தால் ஒற்றைத் தலைவலி, இருதய நோய், வயிற்று பிரச்சனை இருக்கும்.

சூரியன் கும்பத்தில் இருந்தால் இருதய நோய் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

சூரியன் ராகு இணைவு உயர் ரத்த அழுத்தம், கண் நோய் இருக்கும்.

சூரியன் செவ்வாய் இணைவு பெண்கள் ஜாதகத்தில் இருந்தால், லக்னத்தில் இருந்தாலும், கருக்கலைப்பு கண்டிப்பாக இருக்கும்.

லக்னத்தில் சூரியன் செவ்வாய் இருக்க செவ்வாய் திசையில் பன்றி காய்ச்சல் வரும்.

நீர் ராசியில் சூரியன் சுக்கிரன் சேர்க்கை இருந்தால் ஜாதகர் குடிகாரனாக இருப்பான்.

சூரியனுக்கு சுக்கிரன் மூன்று டிகிரிக்குள் இருந்தால் உடலுறவில் அதிக நாட்டம் இருக்கும்.

சூரியன் சனி இணைவு காசநோய் வரும்.

சந்திரன் நோய்கள்

இருதயம், நுரையீரல், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, காசநோய், சர்க்கரை வியாதி, மஞ்சள் காமாலை, குடல் வால்வு நோய், மாதவிடாய் கோளாறு, நரம்பு தளர்ச்சி, ரத்தம் கெட்டுப் போவது, தோல் நோய், இரத்தசோகை, செரிமான கோளாறு, இருமல், கண்புரை, கண் குறைபாடு, கண் பார்வை குறைவு, தலைசுற்றல், உடலுறவு நோய், கருவுறுதல், இவையெல்லாம் வரும்.

சந்திரன் சூரியன் சாரத்தில் இருந்தால் ஜாதகர் உணர்ச்சிவசப்பட்டு கொண்டே இருப்பார்.

சந்திரன் சந்திரன் சாரத்தில் இருந்தால் நல்ல கற்பனை வளம் இருக்கும். கவலையற்ற வாழ்க்கை வாழ்வார்.

சந்திரன் செவ்வாய் சாரத்தில் இருந்தால் தோல் நோய், யூரியனில் ரத்தம் வரும்.

சந்திரன் புதன் சாரத்தில் இருந்தால் கற்பனைவாதி, எப்போதும் மன கவலை இருந்து கொண்டே இருக்கும்.

சந்திரன் குரு சாரத்தில் இருந்தால் உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

சந்திரன் சுக்கிரன் சாரத்தில் இருந்தால் நோய் எதிர்ப்பு ஜாதகருக்கு குறைவாக இருக்கும். பாலியல் நோய் வரும். மோசமான உடல் நலம் இருக்கும்.

சந்திரன் சனி சாரத்தில் இருந்தால் மனநோய் இருக்கும். தன்னம்பிக்கை இல்லாதவராக இருப்பார்.

சந்திரன் ராகு சாரத்தில் இருந்தாள் கற்பனை வளம் அதிகமாக இருக்கும். மன குழப்பம் இருக்கும்.

சந்திரன் கேது சாரத்தில் இருந்தால் ஜாதகர் எரிச்சலான பேச்சு பேசிக்கொண்டே இருப்பார். முடிந்தவரை மற்றவர்களை எதிர்த்து பேசுவார்கள், முடியாத நிலையில் காலில் விழுந்து விடுவார்கள்.

அமாவாசையில் பிறந்தால் உடல்நிலை குறைவு உண்டு 3 இல் சந்திரன் பலம் குறைந்தால் மனச்சிதைவு ஏற்படும் ஆறில் சந்திரன் இருந்தால் உடல் நலம் கெடும், சக்தி குறைவு.

எட்டில் சந்திரன் இருந்தால், சிறுநீரக கோளாறு கணவன் மற்றும் தாயின் ஆயுள்காலம் கெடும்.

மேஷத்தில் சந்திரன் இருந்தால் சகிப்புத்தன்மை இருக்காது.

விருச்சிகத்தில் சந்திரன் இருந்தால அகண்ட மார்பகம் இருக்கும். பால் இருக்காது. மிகுந்த உணர்ச்சி வசப்படுவார்கள்.

மீனத்தில் சந்திரன் இருந்தால் மன நோய் தாக்கும், குடிப்பழக்கத்திற்கு கொண்டுசெல்லும், போதைக்கு அடிமையாவார்கள், இவர்களுக்கு கற்பனை வளம் அதிகமாக இருக்கும், எந்த விஷயத்திற்கும் இவர்கள் ஒத்துப்போக மாட்டார்கள்.

சுக்கிரனுக்கு திரிகோணத்தில் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு கண் நோய் வரும், தாய்ப்பாசம் இல்லாதவராக இருப்பார், மாற்று தாய் உடையவராக இருப்பார்.

6, 8, 12 ல் சந்திரன் இருந்தால் அல்லது சம்பந்தம் இருந்தால் மனசு பலவீனமாக இருக்கும். பயந்த சுபாவம் ஆக இருப்பார்.

செவ்வாய் சனிக்கு நடுவில் சந்திரன் இருந்தால் மூச்சு திணறல் கண்டிப்பாக இருக்கும்.

பாதிக்கப்பட்ட பலமிழந்த சந்திரன் இருந்தால் ஜாதகரின் தாய் படுத்த படுக்கையாக இருப்பார்.

சந்திரன் செவ்வாய் சம்பந்தப்பட்டால் உடல்நிலை பலமற்றதாக இருக்கும் ரத்த சம்பந்தமான நோய், புற்றுநோய் இருக்கும்,

பலமற்ற சந்திரன் எட்டில் இருக்க அந்த நபர் நீரில் மூழ்கி இறக்க வாய்ப்புண்டு.

எட்டாம் பாவத்தில் சந்திரன் கேது இருக்க பைல்ஸ் வரும்.

எட்டில் பலமற்ற சந்திரன் இருக்க சிறுவயதில் உடல்நிலை மோசமாக இருக்கும்.

லக்னத்தில் சந்திரன் செவ்வாய் இருக்க தன்னை கட்டுப்படுத்த முடியாதவராக இருப்பார். முன் கோபியாக இருப்பார். திடகாத்திரமான மனசு உள்ளவராக இருப்பார்.

சந்திரன் புதன் பாதிக்கப்பட்டால் அதிகமாக பேசிக்கொண்டே இருப்பார்கள். தாழ்வுமனப்பான்மை இருக்கும்.

சந்திரன் சுக்கிரன் சேர்ந்து 7, 11 ல் இருந்தால் எப்போதும் பெண்கள் சூழ்ந்து இருப்பார்கள்.

சனி சந்திரன் தாழ்வு மனப்பான்மை, கவலை இருக்கும்.

செவ்வாய் நோய்கள்

வெட்டுக் காயங்கள், கொப்பளம், காயங்கள், எலும்பு முறிவு, சுட்ட புண், எரிச்சல், மஞ்சள் காமாலை, ரத்தம் வடிதல், ரத்த கொதிப்பு, காக்கா வலிப்பு, கட்டிகள், ஆசனவாய் நோய், பல்நோய் ஆகும்.

செவ்வாய் சூரியன் சாரத்தில் இருந்தால் ரத்தசோகை இருக்கும்.

செவ்வாய் சந்திரன் சாரத்தில் இருந்தால் தோல் வியாதி வரும்.

செவ்வாய் செவ்வாய் சாரத்தில் இருந்தால் உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

செவ்வாய் புதன் சாரத்தில் இருந்தால் மன சிதறல் இருக்கும்.

செவ்வாய் சுக்கிரன் சாரத்தில் இருந்தால் பாலியல் நோய் வரும்.

செவ்வாய் சனி சாரத்தில் இருந்தால் தற்கொலை எண்ணம் தரும்.

செவ்வாய் ராகு சாரத்தில் இருந்தால் தற்கொலை எண்ணம் தரும்.

செவ்வாய் கேது சாரத்தில் இருந்தால் HIGH பி பி பொறுமை இல்லாதவர்கள்.

செவ்வாய் குரு சாரத்தில் இருந்தால் உடல்நலம் சிறப்பு. லக்னத்தில் சூரியன், செவ்வாய் இருந்தால் ஜாதகருக்கு அடிக்கடி காய்ச்சல் வரும்.

லக்னத்தில் செவ்வாய் சந்திரன் இருந்தால் கொப்பளம் வீக்கம், ரத்தப்போக்கு இருக்கும்.

லக்னத்தில் செவ்வாய் புதன் இருந்தால் வயிற்றுப்போக்கு, நரம்புத்தளர்ச்சி இருக்கும்.

லக்னத்தில் செவ்வாய், குரு இருந்தால் ஜாதகருக்கு எலும்பு உடையும்.

லக்னத்தில் செவ்வாய் சுக்கிரன் இருந்தால் பாலியல் வியாதி வரும்.

லக்னத்தில் செவ்வாய் சனி இருந்தால் மனைவி ஓடிவிடுவார், சூதாட்டத்தில் விரயம் இருக்கும், பொய் பேசுவார்கள், இவர்களுக்கு sex ஆர்வம் அதிகமாக இருக்கும்.

3 இல் செவ்வாய் இருந்து கெட்டுப்போனால் சிறு விபத்து இருக்கும். தொண்டை நோய், காது சம்பந்தமான நோய் இருக்கும்.

ஆறில் செவ்வாய் இருந்து கெட்டுப்போனால் வண்டியில் விபத்து ஏற்படும். தீக்காயம் இருக்கும்.

சூரியன் செவ்வாய் சேர்ந்து பாவிகளின் பார்வையில் இருந்தால் விபத்து அல்லது வெட்டுக்காயம் ஏற்படும்.

சந்திரன் செவ்வாய் எங்கிருந்தாலும் பாவிகளின் சம்பந்தம் இருந்தால் ரத்தப் போக்கு, விபத்து இருக்கும்.

குரு செவ்வாய் கெட்டு ஏழாம் பாவத்திற்கு தொடர்பு இருந்தால் விரை வீக்கம், குடல் வால் நோய் இருக்கும்.

ஒன்பதில் செவ்வாய் இருந்து கெட்டுப்போனால் வெளிநாட்டில் அல்லது வெளி மாநிலத்தில் விபத்து இருக்கும்.

12 ல் செவ்வாய் இருந்து கெட்டுப்போனால் அறுவை சிகிச்சை உண்டு.

செவ்வாய் விருச்சிகத்தில் கெட்டால் ஆசனவாயில் கொப்பளங்கள் கட்டாயம் இருக்கும்.

கெட்டுப் போவது என்பது திதி சூன்யம், பாதகம் இவையெல்லாம் பார்த்து ஆறு, எட்டு தொடர்பு பார்த்து பின்புதான் பலன் எடுக்க வேண்டும்.

செவ்வாய் குரு சேர்க்கை குறைந்த ரத்த அழுத்தம் ரத்தசோகை இருக்கும்.

செவ்வாய் எட்டாம் அதிபதியாகி ஐந்தில் இருந்தால் சந்திரனுடன் தொடர்பும் இருந்தாள் மனநோய் உண்டு.

செவ்வாய், சனி லக்னத்தில் இருந்தால் பொய் பேசுவது, அவனுக்கு அவனே எதிரி. நட்பு பாவம் கெடும். உடலில் ஏற்படும் தோல் நோய் இருக்கும்.

புதன் நோய்கள்

மூளையில் ஏற்படும் மாறுதல்கள், மனநோய், பேச்சு குழறுதல், நரம்பு தளர்ச்சி, ஆண்மை தன்மை இழப்பு, சொறி, சிரங்கு, எலும்பு முறிவு, டைபாய்டு, அதிகமான வியர்வை வருதல், அதிர்ச்சி, கண், காது, மூக்கு நோய், வெண்குஷ்டம், செரியாமை, கல்லீரல், வயிறு, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கும்.

புதன், சூரியன் சாரத்தில் இருந்தால் நரம்பு சம்பந்தமான வியாதி. அதிக வியர்வை வருதல்.

புதன் சந்திரன் சாரத்தில் இருந்தால் மிகுந்த கற்பனை வியாதி இருக்கும்.

செவ்வாய் சாரத்தில் இருந்தால் தலைவலி, மன சிதறல் இருக்கும்.

புதன், புதன் சாரத்தில் இருந்தால் ஜாதகர் தன்னம்பிக்கை மிகுந்தவர், மனக்கட்டுப்பாடு இருக்கும்.

புதன், குரு சாரத்தில் இருந்தால் மிகுந்த சக்தி உடையவர்.

புதன், சுக்கிரன் சாரத்தில் இருந்தால் தோலில் ஏற்படும் வியாதிகள்.

புதன், சனி சாரத்தில் இருந்தால் மனநோய் இருக்கும். புதன், ராகு சாரத்தில் இருந்தால் தாழ்வு மனப்பான்மை இருக்கும்.

புதன், கேது சாரத்தில் இருந்தால் மனநோய் இருக்கும்.

புதன், ஆறாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டு லக்னத்தில் இருந்தால் ஜாதகர் அலியாவார்.

மூன்று 11 இல் சந்திரனுடன் புதன் சேர்ந்தால் காது நோய் வரும்.

புதன் ஏழாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் நரம்புத் தளர்ச்சி வரும்.

புதன் 6 ல் இருந்தால் சோம்பேறி பலவித நோய் வரும், மோசமான நடத்தை உடையவர், இவர்கள் உடல் நிலையில் அதிக கவனம் தேவை.

புதன் 6, 8, 12 ல் இருந்தால் அக்கி கட்டி வரும்.

புதன் 6, 8, 12 ஆம் இடத்தை பார்த்தாலும் அக்கி கட்டி வரும்.

மேஷத்தில் புதன் இருந்தால் வாதாடுபவர் ஆக இருப்பார்கள். தேவையில்லாமல் வாக்குவாதம் செய்வார்கள். சூதாடுவார்கள், மனநோய் மனஅழுத்தம் உடையவராக இருப்பார்கள், ஆசனவாய் நோய் இருக்கும்.

புதன் ஆறாம் அதிபதியுடன் சேர்ந்தால் இருதயம் பாதிக்கப்படும்.

புதன் 6, 8, 12 க்கு சம்பந்தப்பட்டால் நரம்புத் தளர்ச்சி வியாதி கட்டாயம் இருக்கும்.

புதன் சனி சேர்ந்திருந்தால் அடுத்தவர்களை ஏமாற்றுவார்கள், சொன்ன சொல் கேட்க மாட்டார்கள். தாழ்வு மனப்பான்மை இருக்கும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.

குரு நோய்கள்

கல்லீரல், கணையம், நுரையீரல், தொடைகள், கொழுப்பு, மூளை, நாக்கு, காது, சர்க்கரை வியாதி, மஞ்சள் காமாலை, ரத்தசோகை, உடல் வலிகள், மனக்குழப்பம், வயிறு, வயிற்றுக் கோளாறு, காது, நுரையீரல், மர்ம உறுப்புகளில் நோய், தலைச்சுற்றல், காய்ச்சல், மயக்கம், விரை வீக்கம், மூளை நோய், கண்புரை, உடல் உறுப்புக்கள்.

குரு சூரியன் சாரத்தில் இருந்தால் தொற்றுநோய், காய்ச்சல், செரிமானமின்மை, உணவு குறைத்து சாப்பிடுவது.

குரு சந்திரன் சாரத்தில் இருந்தால் நல்ல உடல் நிலை இருக்கும்.

குரு செவ்வாய் சாரத்தில் இருந்தால் நீர்த்தாரையில் கல் இருக்கும், குடலில் நோய் வலி இருக்கும்.

குரு புதன் சாரத்தில் இருந்தால் விரைவீக்கம், ஆசனவாய் நோய் இருக்கும்.

குரு குரு சாரத்தில் இருந்தால் நல்ல உடல் நிலை இருக்கும்.

குரு சுக்கிரன் சாரத்தில் இருந்தால் தலைசுற்றல், வாந்தி, மஞ்சகாமாலை, உடல் உறவில் நாட்டமில்லாமல் இருப்பார்.

குரு சனி சாரத்தில் இருந்தால் நோய் குணமாக நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும்.

குரு ராகு சாரத்தில் இருந்தால் வயிற்றுப் போக்கு இருக்கும்.

குரு கேது சாரத்தில் இருந்தால் கல்லீரல் வீங்குதல், தொற்று நோய்கள் வரும்.

குரு கெட்டுப்போய் ஆறாம் இடத்தை பலமற்று பார்த்தால் சர்க்கரை நோய் வரும்.

குரு கெட்டுப்போய் எட்டாம் பாவத்தை பார்த்தால் ஆசனவாய் நோய் இருக்கும்.

மூன்று, எட்டாம் அதிபதிகள் சேர்ந்து பலமற்று, குரு சம்பந்தம் பெற்றால், பேசுவதில் பிரச்சனை இருக்கும்.

நாலாமிடம் ஒருவருக்கு கடக ராசியாக இருந்து அதில் குரு பலமற்று அமர இருமல் இருக்கும்.

எட்டில் குரு நல்ல சாவு.

6 ல் குரு சில நோய்களில் உடல்நிலை கோளாறு ஏற்படும்.

மகரத்தில் பலமற்ற குரு இருந்தால் புத்திர சோகத்தை கொடுக்கும்.

சுக்கிரன் நோய்கள்

பாலியல் நோய், சர்க்கரை வியாதி, மூத்திரப்பைகள், கண்புரை, மயக்கம், வலிப்பு ,பிறப்புறுப்பு நோய், வெண்குஷ்டம், அதிகமான பாலியல் நாட்டம், அதிக வெள்ளைப்படுதல், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு.

சுக்கிரன் சூரியன் சாரத்தில் இருந்தால் கண் குறைபாடு நோய்.

சுக்கிரன் சந்திரன் சாரத்தில் இருந்தால் பிறப்புறுப்பில் குறைகள் இருக்கும்.

சுக்கிரன் செவ்வாய் சாரத்தில் இருந்தால் பாலியல் வெறி உணர்வு இருக்கும்.

சுக்கிரன் புதன் சாரத்தில் இருந்தால் தோளில் புள்ளிகள் இருக்கும், தோல் வியாதி இருக்கும், எரிச்சல் இருக்கும்.

சுக்கிரன் சுக்கிரன் சாரத்தில் இருந்தால் நல்ல உடல் நிலை இருக்கும்.

சுக்கிரன் சனி சாரத்தில் இருந்தால் பாலியல் நோய் இருக்கும்.

சுக்கிரன் ராகு சாரத்தில் இருந்தால் நரம்புத் தளர்ச்சி இருக்கும், பாலியல் சம்பந்தமான நோய் இருக்கும்.

சுக்கிரன் கேது சாரத்தில் இருந்தால் பாலியல் நோய், கண்நோய், விந்து கோளாறு, ரத்தத்தில் அணுக்கள் குறைவு,

சுக்கிரன், செவ்வாய், சனி, ஆறாம் அதிபதி சம்பந்தம் பெற்றால் பித்தம் சம்பந்தமான நோய் ஏற்படும். சுக்கிரன் சனியால் பாதிக்கப்பட்டால் முகம் அழகு கெடும், முகத்தில் கொப்பளம் தரும்.

சுக்கிரன் மூத்திரத்தை குறிக்கும் மேலும் விந்து, கண்பார்வை இவைகளையும் குறிக்கும்.

சுக்கிரன் லக்னத்தில் இருந்தால் மூத்திர பையை மட்டும் குறிக்கும்.

சுக்கிரன் பலம் பெற்று புதன் சனியால் சம்பந்தப்பட்டால் உடலுறவு ஈடுபாட்டில் குறைவு ஏற்படும்.

ஆறில் சுக்கிரன் இருந்தால் ஆண்மையற்றவர், உடலுறவில் திருப்தி படுத்த முடியாதவராக இருப்பார்கள்.

சுக்கிரன் சனி ராகுவிற்கு நடுவில் இருந்தால் தாம்பத்தியம் இல்லை.

ஆறாமிடம் நீர் ராசியாகி சுக்கிரன் இருந்தால் மதுவிற்கு அடிமையாக இருப்பார்கள்.

சுக்கிரன் கடகத்தில் இருந்து எட்டாவது பாவமாக இருந்து செவ்வாய் அல்லது ராகு பார்க்க மூத்திர பையில் நோய் வரும்.

சுக்கிரன் பாபர் ஆனால் போதை சர்க்கரை வியாதி வரும்.

8 ல் சனி சுக்கிரன் இருந்தால் லோ பிபி, காம வாழ்க்கையில் பிரச்சனை இருக்கும்,

சனி நோய்கள்

சுற்றுச்சூழல் மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள், மனச்சிதைவுகள், வயிறு, உணவு செரியாமை, குடலில் ஏற்படும் மாறுபாடுகள், வெட்டுக்காயம், சிராய்ப்பு, கைகால்களை கிழித்தல், மனநோய், கண்நோய், கட்டிகள், சுரப்பிகளில் ஏற்படும் நோய், புற்று நோய், பக்கவாதம், மூட்டு தளர்வு, காது கேட்காமல் இருப்பது. மிக நீண்டகாலமாக குணமாகாத வியாதிகள். சனி காலம் கடத்துதல், தடைகள், தடங்கல், துன்பம், கஞ்சத்தனம், இவையெல்லாம் சனி நோய்கள்.

சனி சூரியன் சாரத்தில் இருந்தால் கண் நோய், காசநோய்.

சனி சந்திரன் சாரத்தில் இருந்தால் மாதவிடாய் பிரச்சனை, எதிர்காலத்தை பற்றி பயம், கடின உழைப்பாளி.

சனி செவ்வாய் சாரத்தில் இருந்தால் அடிக்கடி ஏற்படுகின்ற காய்ச்சல் கொப்புளங்கள், கட்டிகள், ரத்தம் சம்பந்தமான நோய்கள், வயிற்றுவலி.

சனி புதன் சாரத்தில் இருந்தால் ஞாபக சக்தி குறைவு, தன்னம்பிக்கை குறைவு, நரம்புத்தளர்ச்சி, வரும்.

சனி குரு சாரத்தில் இருந்தால் சோம்பேறி, எப்போதும் தூங்கிக்கொண்டு இருப்பார்கள், உயர் ரத்த அழுத்தம் இருக்கும், மஞ்சக்காமாலை, அதிக அளவு உணவு உன் கொள்பவர்களாக இருப்பார்கள்,

சனி சுக்கிரன் சாரத்தில் பாலியல், கண், உணவுப்பை

இதில் நோய்.

சனி சனி சாரத்தில் இருந்தால் மிக சிறப்பான உடல்நலம்.

சனி ராகு சாரத்தில் இருந்தால் கண்டுபிடிக்க முடியாத நோய், அவ நம்பிக்கை உடையவர், ஆண்மை யில்லாதவன்.

சனி கேது சாரத்தில் இருந்தால் நீர்வற்றி போகுதல், வெற்றுப்பு, சுரப்பிகள் மாற்றம் இருக்கும்.

சனி புதன் கெட்டால் பய உணர்வு நிரந்தரமாக இருக்கும்.

சனியால் குரு கெட்டால் ஆண்தன்மை ஆண் தன்மையை பாதிக்கும்.

சனி சூரியன் இருவரும் பாவிகளின் பார்வை இருந்தால் பாலியல் நோய், பீதிநோய், நீண்ட நோய்களுக்கு காரணம்

சனி சனியால் புதன் கெட்டு மிதுனம் கன்னியில் இருந்தால் நரம்பு தளர்ச்சி வரும்.

லக்னத்தில் சனி இருந்து ஏழில் குரு பாவி இருக்க ஜாதகன் ஆண்மை அற்றவர், உடலுறவில் மகிழ்ச்சி இருக்காது.

சந்திரனுக்கு கேந்திரத்தில் சனி நிற்க மனத் தளர்ச்சி, சோர்வு இருக்கும்.

சுக்கிரனுக்கு இரண்டில் சனி இருக்க மிகவும் வேகமானவர்.

கோச்சாரசனி வக்கிரம் பெற்று ஆறில் இருக்கும் கிரகத்தின் மீது வரும் போது நோய் வரும்.

சனி, ராகு, கேது பலம் பெற்று லக்னாதிபதியை பார்த்தால் சர்க்கரை வியாதி வரும்.

சனி, செவ்வாய், ராகு, கேது, ஆறு, எட்டு பன்னிரெண்டில் இருக்க அந்த ராசிகள் நீர் ராசியானால் சர்க்கரை நோய் உண்டு.

ராகு நோய்கள்

ராகு கேது என்றால் நிழல் கிரகங்கள் சாயா கிரகங்கள்.

ராகு சந்திரன் சேர்க்கை சுபர் பார்வை இல்லாமல் இருந்தால் ஹிஸ்டீரியா என்ற நோய் வரும், மனநோய் இருக்கும், பைத்தியம் பிடித்தல், மதவெறி வரும், இதுவே விருச்சிக லக்னத்திற்கு பொருந்தி வராது.

புதனுக்கு ராகு கேது சேர்க்கை இருந்தால் என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாது.

ராகு கேதுவுடன் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் விபரீத காமம் இருக்கும், ஒழுக்கத்தை கடைபிடிக்க மாட்டார்கள்.

ராகு கேதுவுடன் சனி சம்பந்தம் இருந்தால் இதை குரு பார்த்தால் யோகம் இல்லை என்றால் தற்கொலை முயற்சி இருக்கும், கொடூரமானவராக இருப்பார், மரியாதை தெரியாதவர்களாக இருப்பார்கள், ஆண்மையற்றவர்,விபத்து இருக்கும்.

ராகு கேதுவுடன் செவ்வாய் சேர விரைவீக்கம், மூத்திரம் கோளாறு இருக்கும். பெண்கள் ஜாதகத்தில் லக்னம் நவாம்ச லக்னம் ராகு அல்லது கேது இருப்பின் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுப்பார்கள்.

ராகு கேதுவுடன் செவ்வாய் இருந்தால் அடிக்கடி விபத்து இருக்கும்.

லக்னத்தில் ராகு உடல் நலம் கெடும்.

ஐந்தில் ராகு இருந்து பாவிகளின் பார்வை இருப்பின் மறதி, புத்தி பேதலிப்பு.

ஆறில் ராகு கைகால் மூட்டுவலி, நரம்புகள் இயங்காமல் இருக்கும்.

12ல் ராகு தொழுநோய், என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாத நோயாக இருக்கும்.

ராகு குரு இனைவு எட்டில் இருக்க வயிற்றில் பிரச்சனை,செவ்வாய் சம்பந்தம் பெற்றால் வயிற்றில் அறுவை சிகிச்சை உண்டு.

சந்திரனுக்கு ஐந்தில் ராகு இருக்க அடிக்கடி விபத்து நீரினால், அபாயம் இருக்கும்.

ஜாதகத்தில் ராகு கேது 6, 12 ஆக இருந்தால் நிச்சயமாக அந்தக் கிரகத்தின் திசா புத்தியில் நரம்பு சம்பந்தமான வியாதி இருக்கும்.

சனி லக்னாதிபதியாகி செவ்வாய் அல்லது கேது சம்பந்தம் பெறுவது எப்போது காமத்தைப் பற்றியே சிந்தனை இருக்கும்.

சனி அல்லது ராகு லக்னத்தில் இருப்பது காமம்அதிகமாக இருக்கும்.

சனி ராகு சந்திரன் சேர்ந்திருப்பது எட்டாம் அதிபதி சனி ராகு நடுவில் இருப்பது காமம் அதிகம்.

ராகு சந்திரன் இருப்பது மனக்கோளாறு இருக்கும், பேச்சை மாற்றி பேசிக்கொண்டு இருப்பார்கள்.

ராகு லக்னாதிபதியோ அல்லது சந்திரனோ தொடர்பு இருந்தால் உடல் முழுவதும் அரிப்பு இருக்கும்.

ராகுவின் நோய் இதன் ஆளுகை கால்பாதம், சுவாசம் ஸ்பீரியஸ், அர்டினி சுரப்பிகள், குடல் நோய், அறிவு குறைபாடு, குடல்புண், கொப்பளங்கள், குஷ்டம், தோல் நோய், எரிச்சல் தன்மை, கண்டுபிடிக்க முடியாத நோய், மேலே இருந்து கீழே விழுவது இவையெல்லாம் வரும். பண்பு, வைராக்கியம் உள்ளவர்கள், குணமாக எடுப்பவர்கள் வெளிநாடு செல்வார்கள்.

கேது நோய்கள்

மண்ணீரல் வீங்குதல், கண் புரை, விரை வீக்கம், நுரையீரல் பாதிப்பு, காய்ச்சல், வயிற்றுவலி, உடலில் வலி, எந்த காரணத்தால் வியாதி என்று புரியாமல் இருக்கும், வாந்திபேதி இருக்கும், அடிக்கடி காய்ச்சல் வரும், வெட்டுக்காயம், அரிப்பு, படை, கொப்பளங்கள், கால் பாதம் எரிவது, குஷ்டம், தற்கொலை எண்ணம், இவையெல்லாம் கொடுக்கும்.

கேது சனி 7 இல் இருக்க கொப்புளங்கள் வரும்.

லக்னத்தில் கேது உடல் நலம் இல்லாமல் இருக்கும், தொடர்ந்து மருந்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

11-ல் கேது இருந்தால் நோய் தரும்.

கேது புதன் மிதுனம் கன்னியில் இருந்தால் முதுகுத்தண்டு, பற்களில் பிரச்சனை வரும்,

ஆறில் கேது இருந்து சனி பார்த்தால் சனி கேது புக்தியில் நோயிருக்கும்.

லக்னத்தில் கேது உடல்நல கோளாறு, வாயுக் கோளாறு, இருக்கும் ஆசனவாய் நோய் இருக்கும், மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருக்கும்.

மூன்றில் கேது கை, தோள்பட்டையில் பிரச்சனை, இருக்கும்.

ஐந்தில் கேது வயிற்றில் பிரச்சனை, வாயுகோளாறு, மனப்போராட்டம் அதிகமாக இருக்கும்.

ஏழில் கேது கீழ்ஜாதி பெண்களுடன் சேர்க்கை இருக்கும் சிறுநீர் தாரையில் நோய் இருக்கும், மீறினால் ஆபத்து, பயம் இருக்கும்.

எட்டில் கேது மோசமான உடல்நிலை, மர்ம இடத்தில் நோய் இருக்கும்.

பத்தில் கேது வாயுத் தொல்லை இருக்கும், கேது மிதுனத்தில் இருந்தாலும் வாயுத் தொல்லை இருக்கும்.

கேது துலாத்தில் இருந்தால் தோல் நோய் இருக்கும்.

கேது கன்னியில் இருந்தால் உணவு செரிமான கோளாறு இருக்கும். இதில் கிரகம் ஆதிபத்தியம், பார்க்கும் கிரகங்கள் அனைத்தும் பார்த்துதான் பலன் எடுக்க வேண்டும்.

ஜனன ஜாதகத்தில் லக்னம் முதல் திரிகோணம் ஆனால் பித்தம் தொடர்பான நோய் வரும்.

இரண்டாவது திரிகோணம் ஆனால் கபம் சம்பந்தமான நோய் இருக்கும்.

மூன்றாவது திரிகோணம் ஆனால் காற்று சம்பந்தப்பட்ட நோய் வரும்

ஆறாம் பாவகம்

ஆறாம் இடத்தை சுபர்கள் பார்த்தால் அது உபஜெய ஸ்தானம் ஆக வேலை செய்யவில்லை என்றால் அது துர் ஸ்தானமாக தான் வேலை செய்யும்.

பாப கிரகங்கள் 6 ல் இருந்தால் ஆயுள் காலம் அதிகமாக இருக்கும். உடல்நலம் கெடும்.

ஆறாம் பாவத்தில் செவ்வாய் ராகுவும் இருக்க குடல்வால் நோய் இருக்கும்.

லக்னாதிபதி 6ல் இருக்க ஆறாம் அதிபதி லக்னத்தை பார்க்க உடல் நலம் கெடும்.

சந்திரனிலிருந்து ஆறாம் வீட்டில் ராகு இருக்க மூட்டு வலி வரும்.

ஆறாம் அதிபதி லக்னத்தில் இருக்கும் ராகு ஆறில் இருக்க உடல் நலம் கெடும்.

சனி இராகு ஆறிலிருந்து ஒரு பார்வை இல்லையென்றால் நோய்வரும்.

பலமற்ற சுபர் ஆறில் இருந்தால் நோய் வரும்.

ஆறாம் வீடு ஆறாம் வீடு நெருப்பு ராசியாகி சூரியன் செவ்வாய் அதில் இருந்தால் தீ மின்சாரம் வெடிமருந்து இவைகளால் விபத்து ஏற்படும்.

சூரியன் செவ்வாய் ஆறில் இருந்து அது காற்று ராசி ஆனால் முதல் விமானம் போன்ற விபத்து இருக்கும்.

ஆறாம் இடத்தை சுக்கிரனுடன் சேர்ந்து ஒன்று அல்லது எட்டில் இருந்தால் கண் பார்வை கெடும். கேதுவுடன் சேர்ந்தால் முகத்தில் பரு தோன்றும்.

சந்திரன் 6-ல் இருக்க சனி, செவ்வாய் சம்பந்தம் பெற கணக்கில்லாமல் நோய் வரும், ரத்த அழுத்தம் வரும்.

சந்திரன் சனியுடன் செவ்வாய் சம்பந்தம் பெற ஆசனவாயில் அறுவை சிகிச்சை வரும்.

புதன் ஆறில் இருக்க சனி சம்பந்தம் பெறுவது காது கேளாமை பிரச்சனை இருக்கும்.

6 ல் கேது இருக்க ஆறாம் அதிபதி கேது பார்க்க அல்லது 6 ல் கேது, செவ்வாய், சனி சம்பந்தம் பெறுவது அல்லது 1, 3, 7 வீடுகளுக்கு இரண்டாம் வீட்டோடு செவ்வாய், சூரியன் சம்பந்தம் பெறுவது செவ்வாய் லக்னத்தில் பாவ கிரகத்தோடு சம்பந்தம் பெறுவது அல்லது செவ்வாய் 1 ஏழு எட்டில் இருக்க சூரியன் பார்க்க நெருப்பு ராசி எனில் நீரினால் அபாயம் இருக்கும்.

சந்திரனை ஒரு லக்னத்திலிருந்து பார்க்க பலமற்ற செவ்வாய் அல்லது நீசம் பெற்ற செவ்வாய் எட்டில் இருக்க அந்த ராசி நீர் ராசி எனில் ஜாதகருக்கு நீரினால் அபாயம் ஏற்படும்.

கிரகங்கள் பாதிக்கப்பட்டு ஆறாம் பாவத்தோடு தொடர்பு ஏற்பட்டால்

சூரியன் பாதிக்கப்பட்டு ஆறாம் வீட்டோடு அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் கொப்பளங்கள், தலைவலி, காச நோய், ரத்த அழுத்தம், கால் கட்டைவிரலில் அசுத்தம் பெரும்.

சந்திரன் பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அது அதிபதிக்கு தொடர்பு கொண்டால் உணவு செரியாமை, வயிற்று பிரச்சனை, ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி ,சர்க்கரை வியாதி, ரத்தக்குழாயில் நோய், இருக்கும்.

செவ்வாய் பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு ஏற்பட்டால் காய்ச்சல், எரிச்சல், தசைகளில் பிரச்சனை, தோல்நோய், விரைவீக்கம், குடலிறக்கம், ஆசன நோய் இருக்கும்.

புதன் ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் நரம்பு சம்பந்தமான நோய், மனநோய், மனச்சோர்வு, கவலை, மூச்சுத் திணறல், தலைவலி, சளி, மூட்டு வலி, கை கால் வலி இருக்கும்.

குரு பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்புகொண்டால் கல்லீரல், வயிறு, கை கால் வலி இருக்கும்.

சுக்கிரன் பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, கருப்பை பாதிப்பு இருக்கும்.

சனி பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அதன் அதிபதிக்கோ தொடர்பு கொண்டால் நரம்பு சம்பந்தமான நோய் இருக்கும், கை கால்கள் வலி, மூட்டுவலி, காக்காவலிப்பு இருக்கும்.

ராகு பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் காக்கா வலிப்பு, சின்னம்மை, குஷ்டம் வரும்.

கேது பாதிக்கப்பட்டு ஆறாம் பாவம் அல்லது அதன் அதிபதிக்கு தொடர்பு கொண்டால் காக்காவலிப்பு, அம்மை, குடல் நோய், செரிமான கோளாறு இருக்கும் இவை அனைத்தும் ஆறாமிட தசா புத்தியில்தான் நடக்கும்.

கிரக இணைவுகளால் வரும் நோய்கள்

செவ்வாய் ராகு ஆறில் இருந்தால் விரைவீக்கம்.

செவ்வாய், ராகு, சனி நினைவு குடலிறக்கம்.

குரு, ராகு லக்னத்தில் இருந்தால் குடலிறக்கம். செவ்வாய், ராகு ஏழில் இருந்தால் மாதவிடாய் கோளாறு.

கேது 6 அல்லது ஏழாம் அதிபதியோடு சேர்ந்து இருந்தால் நெஞ்சில் கோளாறு, நுரையீரல் பிரச்சனை இருக்கும்.

ஆறாம் அதிபதி ஏழில் இருந்தால் கைகால் கிழிப்பு வரும்.

சுக்கிரன், சந்திரன் 6 ல் இருந்தால் மாலைக்கண் நோய் வரும்.

லக்னாதிபதி சூரியன் சுக்கிரன் 6 ல் இருந்தால் பார்வை இழப்பு.

ஆறாம் அதிபதி ஏழில் இருந்து செவ்வாய் தொடர்பு இருந்தால் சின்னம்மை நோய் வரும்.

எட்டாம் அதிபதி 6 ம் அதிபதியோடு சேர்ந்திருந்தால் ஆயுள் குறைபாடு இருக்கும்.

எட்டாம் அதிபதி லக்னாதிபதி யோடு ஆறில் இருந்தால் ஆயுள் குறைவு.

லக்னாதிபதி சூரியன் 6 ல் இருந்தால் கொப்புளம் காய்ச்சல் வரும்.

லக்னாதிபதி சந்திரன் 6 ல் இருந்தால் தண்ணீர் கொப்பளம்.

லக்னாதிபதி செவ்வாய் 6 ல் இருந்தால் சுரப்பிகள் பிரச்சனை, காயம் ஏற்படும்.

லக்னாதிபதி புதன் 6 ல் இருந்தால் ஆசன நோய் இருக்கும்.

லக்னாதிபதி குரு ஆறில் இருந்தால் வயிற்றுப்போக்கு இருக்கும்.

லக்னாதிபதி சுக்கிரன் 6 ல் இருந்தால் வெள்ளைப்படுதல், சுக்கிலம் கெடுதல்.

செவ்வாய் சனி ராகு அல்லது செவ்வாய் சூரியன் சனி 6 ல் இருந்தால் நோய் அதிகமாக இருக்கும்.

சனி ராகு 6 ல் இருந்தால் கழுத்து வீங்குதல், குடல்புண் இருக்கும்.

பாவ கிரகம் ஆறில் அல்லது கன்னியில் இருந்தால் வயிற்றில் பிரச்சினை இருக்கும்.

ஆறாம் அதிபதி சூரியன் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் தலைக்காயம் வரும்.

ஆறாம் அதிபதி சந்திரன் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் வாய், குதம் இதில் நோய் வரும்.

ஆறாம் அதிபதி செவ்வாய் லக்னத்தில் இருந்தால் கழுத்தில் நோய் வரும்.

ஆறாம் அதிபதி புதன் லக்னத்தில் இருந்தால் இருதய நோய் வரும்.

ஆறாம் அதிபதி குரு சேர்ந்து லக்னத்தில் இருந்தால் அடிவயிறு பிரச்சனை நோய் இருக்கும்.

ஆறாம் அதிபதி சுக்கிரன் சேர்ந்து லக்னத்தில் இருந்தால் கண் பார்வை, கோளாறு வரும்.

ஆறாம் அதிபதி சனி சேர்ந்து லக்னத்தில் இருந்தால் கால் பாதங்களில் நோய் வரும்.

ஆறாம் அதிபதி ராகு அல்லது கேது சேர்ந்து லக்னத்தில் இருந்தால் உதட்டுப்பிளவு வரும்.

ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால் அஜீரண கோளாறு இருக்கும், கவலையற்ற தன்மை இருக்கும்.

நவாம்சத்தில் விருச்சிகத்தில் உள்ள கிரகம் வியாதியை சொல்லும்.

நவாம்ச விருச்சிக ராசியில் ராகுவுடன் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகம் இருந்தால் மாற்று உறுப்பு பொருத்துவார்கள்.

உடலில் ஒரு உறுப்பு எடுத்துவிட்டு வேறு உறுப்பு பொருத்துவார்கள்

நன்றி 

வாழ்க வளமுடன்

தமிழரசன் க

தக்‌ஷா ஜோதிட நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்

https://www.dakshaastrology.com

whatsapp: +919787969698

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...