ஞாயிறு, 7 ஜனவரி, 2024

பதினோன்றாம் வீடு

 

லாப ஸ்தானம் எனும் 11 ம் வீடு குறித்த விளக்கம் !

மூத்த உடன்பிறப்புக்களை பற்றியும், சேவை செய்யும் நிலை, இளைய மனைவி (இரண்டாம் திருமணத்தை குறிக்கும்), செய் தொழில், தொழிலில் கிடைக்கும் லாபம், பயிர் தொழில், குதிரை, யானை இவைகளை வளர்த்தல், பராமரித்தல், கால்நடை வளர்ப்பு, அறிவாற்றல், மன அமைதி பெறுதல், நண்பர்கள் அமையும் நிலை,அவர்களால் பெறும் நன்மைகள், மாப்பிள்ளை மருமகள் இவர்களால் பெறும் நன்மைகள், லாபங்கள், உதவிகள், வாகன யோகம் இவற்றை குறிக்கும் பாவமாகும்.

துன்பங்கள், துயர்கள் தீர்ந்திடும் நிலை ஆடை இவைகளையும் குறிக்கும்.

பதினோன்றாம் வீடு மூத்த சகோதரம். லாபம். எதிர்பார்த்தது நண்மையில் முடிதல். நண்பர்கள். ஆசைகள் முழுமையாக எதிர்பார்ப்பின்றி தரும் இடம். ஆலோசகம். உதவி கிடைக்குமிடம். எல்லாவற்றிற்கும் வெற்றி. மருமகன். மருமகள். நீர்ப் பாசன வசதியுள்ள விவசாய நிலங்கள். அரசு வகை கூட்டுக் குழுக்கள் (சட்ட சபை. ஊராட்சி. நகராட்சி. நிரந்தர நட்பு. திட்டங்கள்,

11 இலாபங்கள், வருவாய், நட்பு, சமூக வாழ்க்கை மற்றும் அனுமதியளிக்கும் பாலியல் உறவு, அண்ணன், நமது நம்பிக்கை, ஆசைகளை, அபிலாஷைகளை, மனித சேவை அண்ணா கீப்பர்.நண்பர்கள், சமூகம், பிடித்தவை, குறிக்கோள், பூர்த்தி, செல்வத்தை பெற, பணிகள் வெற்றி, உள்வரும் செல்வம், செழிப்பு, மூத்த சகோதரர்கள், நோய் இருந்து மீட்பு, அதிர்ஷ்டம் விடியல், கணுக்கால். ஆன்மீக இலட்சியம், குழுக்கள், கிளப், மற்றும் அமைப்புக்களும் மற்றும் தொழில் சம்பாதித்த பணம், கால்கள், இடது காது, பற்கள்.. பொதுவாக வாழ்க்கையில் என்ன மிச்சம் என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் கூற வேண்டும்.

11-ம் வீட்டிற்குடைய கிரகம் 5-ம் வீட்டில் இருந்தால் புத்திரத்தால் லாபம் எனக் கொள்ளலாம். அதே 11-ம் வீட்டிற்குடைய கிரகம் 10-ல் இருந்தால் நல்ல ஜீவனம் எனக் கொள்ளலாம்.அதே போல் 11-க்குடைய கிரகம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டிற்கு நல்லது எனக் கொள்ள வேண்டும்.

3 6 10 11-ம் வீடுகள் உப ஜய வீடுகள் ஆகும். வெற்றிக்கு உறு துணையாக உள்ள வீடுகள் ஆகும்.

செல்வத்தை (பணத்தை) விரும்பாத மனிதனே கிடையாது. செல்வத்தைத் தருவது பத்தாம்வீடும், பதினொன்றாம் வீடும், அவை இரண்டைவிட முக்கியமாக இரண்டாம் வீடுமே ஆகும். அப்படி அந்த வீட்டு நாயகர்கள் நமக்கு அள்ளித்தரும் பணத்தை நம் கைகளில் இருந்து கரைப்பவர்கள், 6, 8, மற்றும் 12ஆம் வீட்டு நாயகர்களே. முதலில் கூறிய மூவரும் (அதாவது 10th, 11th & 2nd Lords) நம்முடைய ஹீரோக்கள் பின்னால் கூறிய மூவரும் (6, 8, மற்றும் 12ஆம் அதிபதிகள்) நம்முடைய வில்லன்கள்

2. ஹீரோக்களின் வீடுகளைப் பாருங்கள். அங்கே அஷ்டகவர்கத்தில் 30, அதற்கு மேலும் பரல்கள் இருந்தால் நல்லது. கவலையே படவேண்டாம். வில்லன்கள் எவ்வளவு வேகமாகக் கரைத்தாலும், அதற்கு மேலேயே உங்களுக்குப் பணம் வரும்

இதற்கு மாறாக வில்லன்களின் வீட்டில் பரல்கள் அதிகமாக இருந்தால், எவ்வளவு பணம் வந்தாலும், அல்லது நீங்கள் எவ்வளவு பணம் சம்பாத்தித்தாலும், அல்லது உங்கள் தந்தைவழிச் சொத்து எவ்வளவு இருந்தாலும், அவ்வளவும் கரைந்து விடும் கையில் ஒன்றும் தங்காது. பூட்டுப்போட்டுப் பூட்டிவைத்தாலும் தங்காது!

அப்படிக் கரையும் பணம்கூட, வில்லன்களின் வீட்டில் பரல்கள் அதிகம் இருந்தாலும் அந்த வீடுகளைச் சுபக்கிரகங்கள் பார்க்கும் என்றால், நல்ல வழியில் கரையும். உங்கள் குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளும் வழியில் கரையும். உங்களுக்குப் பெருமை சேர்க்கும் வழியில் கரையும்.

இதற்கு மாறாக வில்லன்களின் வீட்டில் பரல்கள் அதிகம் இருந்தாலும்,அந்த வீடுகள் பாவக்கிரகங்கள் அல்லது தீய கிரகங்களின் பார்வையில் இருந்தால் உங்கள் பணம் தீய வழியில் கரையும். சீட்டு, சூதாட்டம், குதிரைப் பந்தயம், , பெண்பித்து, என்று தீய வழியிலேயே கரையும். உங்களுக்குப் பெருமை சேர்க்காத வழியில் கரையும், நீங்கள் மற்றவர்களுக்குப் பதில் சொல்ல முடியாத வழியில், ஏன் வெளியில் சொல்ல முடியாத வழியில் கரையும். பாவகங்களில் கிரகங்கள் இருப்பின் பலன்கள்.

பதினோராம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்

பெரும் பொருள் ஈட்டுதல், வலிமை, பிறரை மதியாமை, அடிமை பணி, நன்றியுடையவர், அடிமைகளை வெறுப்பவர், விருப்பமில்லாமை கொடுத்த பணிகளை செய்து முடித்தல்.

பதினோராம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வம், மிகுதியான மக்கட் செல்வம், தீர்க்க ஆயுள், தனக்கு நன்மை தரும் பணியாட்கள், கபடமற்ற மனதை உடையவர், வீரம், புகழ் உடையவர்.

பதினோராம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பெருஞ்செல்வம், லாபம் உடையவர், நண்பர்கள் மற்றும் இனபம் உள்ளவர், வீரம், மக்கட்பேறு, தைரியம் போன்ற இவைகள் எப்போதும் உடையவர், துக்கமில்லாதவர்.

பதினோராம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வந்தர், தனக்கு கீழ்படிந்துள்ள பணியாட்களை உடையவர், அறிவுடையவர், மிகுதியான இன்ப போகமுடையவர், முழு ஆயுள், புகழ் பெற்றவர்.

பதினோராம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பற்பல பொருட்கள் (செல்வங்கள்) வரவிற்கு காரணமானவர், வாகனங்கள், பணியாட்கள், வெகுமானங்கள் உடையவர், மிகுதியான கல்வி, மக்கட்பேறு குறைந்தவர், சிறந்த பண்பாளர்.

பதினோராம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அழகுள்ள மனைவி, பணியாட்கள், கூடுதல் பொருட்கள் வரவு மற்றம் அனைத்து வசதிகளையும் இன்பங்களையும் அனுபவித்தல்.

பதினோராம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

முழு ஆயுள் உள்ளவர், கலக்கம், குழப்பம் இல்லாதவர், சுபவைபவங்களுடன் இருப்பவர், வீரம், சிறந்த தொழில் செய்தல் நோயின்மை, செல்வம், மக்கள் உடையவர்.

பதினோராம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அதிக குழந்தைகள் இராது. நல்ல வளமான வாழ்க்கை உடையவர். நீண்ட ஆயுளும், காதில் நோயும் உள்ளவர். எத்தகைய குறையும் இல்லை. நல்லதே நடந்து வரும்

பதினோராம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வம் சேர்ப்பவர், நற்குணங்கள் பல உடையவர். நன்றாக வாழ்வை அனுபவிப்பவர். தனக்கு தேவையான அனைத்தும் பெறுபவர்.

பணப்புழக்கம் உள்ளவர். பணச்சேமிப்பு இருக்கும். சாகசக் காரியங்களில் ஈடுபடுவர் பதினோராம் வீடு

பதினோராம் வீடு லாப ஸ்தானம் எனப்படும். ஒருவருடைய லாபம் மூத்த சகோதர சகோதரிகள் ஆகியவற்றைப் பற்றி கூறுவது பதினோராம் வீடு.

பதினோராம் வீட்டு அதிபதி ஒவ்வொரு வீட்டிலும் இருந்தால் என்ன பலன் என்று இப்பொழுது பார்க்கலாம்.

1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல லாபம் வரும் நல்ல படிப்பு வரும் எந்த தொழிலில் ஈடுபட்டாலும் நல்ல லாபங்களை பெறுவார்கள். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்

2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். நல்ல வருமானம், செல்வாக்கு, அதிகாரம் கிடைக்கும்.

3 ஆம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதர சகோதரிகளில் நல்ல நிலையில் இருப்பார்கள் . சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.

4 ஆம் வீட்டில் இருந்தால் தெய்வீக வழியில் செல்பவராக இருப்பார்கள் நல்ல பணி ஆட்கள் கிடைப்பார்கள். வீடு வாகனத்துடன் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கை அனுபவிப்பார்கள்.

5 ஆம் வீட்டில் இருந்தால் இவர்களின் புத்திரர்களால் நல்ல வருமானம் கிடைக்கும். இவர்கள் செய்யும் தொழில்களை இவர்களின் பிள்ளைகளும் செய்வார்கள். அரசாங்க ஆதரவு கிடைக்கும்.

6 ஆம் வீட்டில் இருந்தால் செய்கின்ற தொழிலில் எதிரிகள் இருப்பார்கள் வரும் லாபம் எல்லாம் கடன் கட்டவே போய்விடும்.

7 ஆம் வீட்டில் இருந்தால் மனைவியின் மூலம் லாபங்கள் வரும். திருமணத்திற்க்கு முன்பு ஏழையாக இருந்தவர்கள் திருமணத்திற்க்கு பின்பு நல்ல நிலையில் இருப்பார்கள். நல்ல யோகங்கள் அமையும். வண்டி வாகனம் அமையும்.

8 ஆம் வீட்டில் இருந்தால் பல தொழில்கள் செய்ய மணம் ஈடுபடும். பல வழியில் பணம் செலவு செய்ய நேரிடும். கஷ்டத்துடனே வாழ்க்கை ஓடும்.

9 ஆம் வீட்டில் இருந்தால் வண்டி வாகனம் வரும். அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தந்தை செய்யும் தொழிலே இவர்களுக்கு கிடைக்கும் . பெரிய தொழில்கள் செய்து நல்ல லாபங்களை பெறுவார்.

10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல வேலையில் இருப்பார்கள். அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும். தெய்வீக அருள் நிறைந்து காணப்படுவார்கள்.

11 ஆம் வீட்டில் இருந்தால் மூத்த சகோதர சகோதரிகளின் மூலம் லாபங்கள் வரும். மூத்த சகோதர்கள் நல்ல அந்தஸ்தோடு இருப்பார்கள்.

12 ஆம் வீட்டில் இருந்தால் கடன் தொல்லைகள் வியாதிகள் ஏற்படும். செய்யும் தொழிலில் லாபங்கள் குறைந்து காணப்படும்.

இனி காரகர்களும் 11ம் பாவாதிபதியும் நெருக்கம் பெறுவதால் ஏற்படும் பலன் :

1. சூரியனுக்கும் , 11ம் பாவாதிபதிக்கும் நெருக்கம் (சம்மந்தம் ) ஏற்பட்டால் தந்தை ,அரசியல் ,அரசாங்கம் ,மருத்துவம் ,சிவபூஜை இவற்றால் காரிய சித்தி அடைவர்.,

2. சந்திரன் , 11ம் பாவாதிபதிக்கும் நெருக்கம் (சம்மந்தம் ) ஏற்பட்டால் ,தாய் மனோபலம் ,கற்பனையாற்றல் ,நீர் சம்மந்தப்பட்டவை ,கடல் பயணம் ,உணவு பொருட்கள் ,இவற்றால் லாபம் உண்டாகுதல் .

3. செவ்வாய் -11ம் பாவாதிபதிக்கும் நெருக்கம் (சம்மந்தம் ) ஏற்பட்டால் சகோதரர் ,வீடு ,நிலம் ,நெருப்பு சம்மந்தப்பட்ட தொழில்கள் ,ரத்தம் ,பாதுகாப்பு படை ,போலீஸ் ,ராணுவம் ,இவற்றால் காரிய சித்தி பெறுவார் .

4. புதன் -11ம் பாவாதிபதிக்கும் நெருக்கம் (சம்மந்தம் ) ஏற்பட்டால் பேச்சு ,புத்தி சாதுர்யம் ,கனிதம்,ஜோதிடம் ,எழுத்தாற்றல் ,ஏஜன்ட்,மக்கள் தொடர்பு வியாபாரம் ,கல்வி ,கலை ,இலக்கியம் ,தாய்மாமன் ,ஆகியவற்றால் ஆதாயம் பெறுவார் .

5. குரு -11ம் பாவாதிபதிக்கும் நெருக்கம் (சம்மந்தம் ) ஏற்பட்டால் புத்திரர்கள்,பணம் ,தெய்வவழிபாடு ,அந்தணர்கள் ,வேதம் ,சாஸ்திரம் ,மதகுரு சட்டம் ,நீதி ,சமூகவியல் தொடர்பு ,இவற்றால் ஆதாயம் பெறுவார் .

6. சுக்கிரன் -11ம் பாவாதிபதிக்கும் நெருக்கம் (சம்மந்தம் ) ஏற்பட்டால் மனைவி காதல் ,கலை ,அழகு ,இசை ,நடனம் ,சினிமா,முதலிய கலைத்துறை விலையுர்ந்த பொருட்கள் ,வாசனாதி திரவியம் ,மதுபானம் ,பென்நட்பு ஆடம்பர அலங்காரம் பொருட்கள் ,இவற்றால் ஆதாயமும் இவர்ரிம் மூலம் காரிய சித்தியும் ஏற்படும் .

7. சனி -11ம் பாவாதிபதிக்கும் நெருக்கம் (சம்மந்தம் ) ஏற்பட்டால் கடும் உழைப்பால் முன்னேறுதல்,விவசாயம் ,தானியம் ,இரும்பு ,பெட்ரோல் நிலக்கரி சுரங்கம் ,காய்கறிகள் ,பிறருக்கு தண்டனை விதித்தல் ,எல்.ஐ.சி மருத்துவம் இவற்றால் ஆதாயம் இருக்கும் .

8. ராகு -11ம் பாவாதிபதிக்கும் நெருக்கம் (சம்மந்தம் ) ஏற்பட்டால் அதிர்ஷ்டம், ஸ்பெகுலேஷன் ,குதிரை பந்தயம் ,சீட்டாட்டம் ,குறுக்கு வழிகள் பொய்,சூது ,பித்தலாட்டம் ,திருடுதல் ,கொள்ளையடித்தல் ,அரட்டல் மிரட்டலால் பிறரை பணிய வைத்தல் ,தாதா வேளைகளில் ஈடுபடுதல்,போதை பொருள் கடத்தல் தொழில் ,விஞ்ஞான சாதனங்கள் ,துப்பறிதல் இவற்றின் மூலம் ஆதாயம் அடைதல் .

9. கேது -11ம் பாவாதிபதிக்கும் நெருக்கம் (சம்மந்தம் ) ஏற்பட்டால் ஆன்மிகம் வைராக்கியம் கொள்கை ,பிடிவாதம் ,சித்த மருத்துவம் ,மாந்திரீகம் ,மனதை ஒரு நிலை படுத்தி தியானத்தில் ஈடுபடுதல் ,இவற்றால் காரிய சித்தி அடையலாம் .,இது போல ஆராய்ந்து பார்த்து 11ம் பாவம் – 11 ம் பாவாதிபதி ஆகிய அமைப்பின் மூலம் எந்தெந்த வழிகளில் நாம் ஈடுபட்டால் நினைத்ததை சாதிக்கலாம்

நன்றி 

வாழ்க வளமுடன்

தமிழரசன் க

தக்‌ஷா ஜோதிட நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்

https://www.dakshaastrology.com

whatsapp: +919787969698 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...