எட்டாம் பாவகம்
எட்டாம் வீடு ஆயுள். அவமானம். கண்டம். மரணம். இயற்கையான மரணம். கெட்ட பயம். வளர்ப்பு பிராணிகளால் தொந்தரவு. வட்டி கட்டுதல். உதவிப் பணம். திடீர் அதிஷ்டம். தடை உயில். கெட்ட செயல். தானாக தொலைந்து போதல். வரதட்சணை. சீர். மாங்கல்யம். ஆப்ரேஷன். கசாப்பு கடைகள். மலக் கழிவிடம். கர்பப் பை, வெளி பிறப்பு உறுப்புக்கள் (ஆண்குறி, பெண்குறி), குதம் External Sexual Organs, Large Intestine, Anus
ஆயுள் ஸ்தானம் மற்றும் மாரகம்
ஒரு ஜாதகத்தில் 8 ஆம் இடத்தை கொண்டு ஆயுளை பற்றியும் 2 , 7 ஆம் இடத்தை கொண்டு மாரகத்தை பற்றியும் கூறமுடியும் .மாரக தசை அல்லது புத்தி வரும் காலங்களில் மிக கவனமுடன் இருப்பது அவசியம் .
எட்டாம் வீட்டு அதிபதி கஷ்டமான பலன்களையே கொடுப்பார். மரணம், விபத்தில் அடிபடுதல், கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை, வறுமையான சூழல், அவமானங்கள், சிறுமை, மன அமைதியின்மை ஆகியவற்றை ஏற்படுத்துபவர் அவரே! அவர் (அதாவது எட்டாம் அதிபதி - 8th lord) வலிமையோடு, எந்த சுபக்கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வை இன்றி இருந்தால், மேற்கூறியவைகள் அதிகமாகும். இல்லையென்றால் குறைந்துவிடும்.
(மிருத்யு sthana) இறப்பு, உருவாக்கத்திறன் உறுப்புகளுக்கு, ஒரு தனிநபரின் உண்மைகள், மறைபொருள் ஆய்வும், மரபு, ஈட்டப்பெறாத வருமானம், இரகசிய இடம், இறப்பு சுற்றியுள்ள வாழ்க்கை. பங்காளி குடும்பம் அமைப்பின் செல்வாக்கை காட்டுகிறது. வாழ்க்கை குடும்பம் பிழைக்கும் தாக்கங்கள், நீண்ட ஆயுள், மரபு, பாரம்பரியம், கிருபையால், காப்பீடு, ஓய்வூதியம், பணிக்கொடை, பரம்பரை, மர்மம் , சூழ்ச்சியை, விபத்துகள், தீ அல்லது தற்கொலை, துன்பம், கொடுமை, கலவரத்தை, கவலைகள், அவமானம், தாமதம், மனவருத்தம், ஏமாற்றம், இழப்பு, இடையூறு, திருட்டு மற்றும் கொள்ளை, மக்கள் பணத்தை அல்லது சொத்துக்களை பயன்படுத்துவது அல்லது தவறாக கையாள்கிறது. வரி, அபராதம், மருந்துகள், தண்டனை நடவடிக்கைகளை இங்கு காணப்படுகின்றன. மனைவி வரதட்சணை, மாமியார் வழி இலாபம், இடுப்பு, விந்து, வெளிப்புற பிறப்புறுப்பு, அந்நிய நாடுகளில் நிதி உறவுகள், மேயர்.
எட்டில் சூரியன் இருந்தால்
தந்தை மகன் உறவில் விரிசல் வரும், அல்லது தந்தைக்கு உடல்நிலை குறைவு வரும். தந்தையும் மகனும் பிரிந்து இருப்பது நல்லது. அரசு வகையில் தண்டத்தொகை இருக்கும். அரசு வகையில் பகைத்துக் கொள்ளக்கூடாது. இயற்கை பாதிப்பு உண்டு. இடி, மின்னல். எட்டில் சூரியன் இருந்து செவ்வாய் அல்லது நான்காம் அதிபதி தொடர்பு இருந்தால், இவர்கள் நிலத்தை அரசு ஆக்கிரமிப்பு பண்ணும். கண் நோய், வெப்ப நோய் உண்டு
எட்டில் சந்திரன் இருந்தால்
நீரில் கண்டம், நீர் உடம்பு, உடம்பில் நீர் சத்து குறைவு. புதிய தண்ணீர் சேராது. மழையில் நனைந்தால் நோய் வரும். குளிர்ச்சியான உணவு ஒத்துக்கொள்ளாது. இதை நாலாம் அதிபதி பார்க்கக்கூடாது. எட்டில் சந்திரன் நான்கில் ராகு இருப்பது எட்டில் சந்திரன் நாலாம் அதிபதி பாதிக்கப்படுவது. தாய்க்கு குறைந்த ஆயுள். எட்டில் சந்திரன் சளி வீசிங், கண்நோய், உறவினர் பிரிவு எட்டு வயதில் இடமாற்றம் உண்டு. விரையம் உண்டு.
எட்டில் செவ்வாய் இருந்தால்
ஜாதகருக்கு ஒரு விபத்து உண்டு. எட்டு வயதில் ஒரு விபத்து காயம் ஏற்பட்டிருக்கும். எட்டு வயதில் இடம், வீடு கிடைக்கும். ஆனால் சகோதரன் ஆகாது. சகோதரனுக்கு ஒரு ரகசியமும் இருக்கும். கண், பல் தொடர்பான சிகிச்சை வந்திருக்கும். இடம் தொடர்பான வழக்கு உண்டு. வாகனம், மோட்டார், மின்சாரம் இவற்றால் தொல்லை இருக்கும். மின்சார மீட்டரில் கவனமாக இருக்க வேண்டும். மின்வாரிய தொடர்பான அபராதம் உண்டு. ஹெல்மெட் தொடர்பான அபராதம் உண்டு. ரத்தம் தொடர்பான நோய் உண்டு. மலத்தில் ரத்தம் கலந்து வரும்.பெண் ஜாதகம் எனில் கணவனுக்கு விபத்து உண்டு.
எட்டில் புதன் இருந்தால்
மாமன் உறவில் விரிசல் இருக்கும். தோல் நோய். கல்விக்காக இடமாற்றம். பத்திர பதிவிற்கு தடை. சீட்டு நடத்த, ஜாமீன் போடக்கூடாது. ஆராய்ச்சி கல்வி ஜோதிட கல்வி நல்லது.
எட்டில் குரு இருந்தால்
குழந்தை தாமதம் அல்லது குழந்தைக்கு மருத்துவச் செலவு உண்டு. நிம்மதியான சாவு உண்டு. குழந்தைகளைப் பற்றி கவலை இருக்கும். சட்டம் பயிலுவது. மஞ்சகாமாலை. வயிற்றுப்போக்கு வரும். திருட்டு நகை வாங்கி இவர்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது. நகை இரவல் கொடுக்கவும் கூடாது வாங்கவும் கூடாது. குரு சந்திரன் சேர்க்கை இருந்தால் இரவல் நகை வாங்கவும் கூடாது இரவல் கொடுக்கவும் கூடாது.எட்டில் குரு நகை அடகு வைத்தால் அதை மீட்பதற்கு அக்கறை இருக்காது. குழந்தையை இவர்கள் கையில் தூக்கக்கூடாது. அடுத்தவர்கள் குழந்தையை வெளியில் அழைத்துச் செல்லக் கூடாது. குழந்தைக்கு சாப்பிட எதுவும் கொடுக்கக் கூடாது. மீறி கொடுத்தால் கெட்ட பெயர் உருவாக்கி கொடுத்துவிடும்.
எட்டில் சுக்கிரன் இருந்தால்
சுகபோக தடை உண்டு. தலைமை தாங்குதல். நல்ல பொருளாதாரம் உண்டு. அத்தை உறவில் விரிசல் உண்டு. அத்தை மகளை மணக்கலாம். கண் நோய் உண்டு.மனைவி பெயரில் இன்சூரன்ஸ் பண்ணுவது நல்லது. யூரியன் பிரச்சனைசுன்னத் செய்வது நல்லது. மனைவிக்கு மறைவிடத்தில் நோய் இருக்கும். கல்லடைப்பு, சர்க்கரை நோய் உண்டு. எட்டில் குரு, சுக்கிரன், புதன் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் ஒருவகையில் யோகம்தான். எட்டாம் அதிபதியாக குரு, சுக்கிரன், புதன் வருவது ஒரு வகையில் இதுவும் யோகம்தான். எட்டில் புதன் திதி சூன்யம் ஆனால் மாறுகண் இருக்கும் அல்லது பூனைக்கண் இருக்கும்.
எட்டில் சனி இருந்தால்
மலச்சிக்கல் உண்டு. ஆயுள் பலம் உண்டு. விபத்து உண்டு. தீராத நோய் உண்டு. நல்ல பொருளாதாரம் அமையும். குடும்பத்தில் பிரிவினை கொடுக்கும். தாமதம் திருமணம் இருக்கும். விரைவில் திருமணம் முடித்தால் அது காதல் திருமணமாக முடிப்பார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் உண்டு. மூட்டு வலி. எலும்பு உடைதல். வீட்டில் உள்ள காரக உறவு இவர்களுக்கு பிடிக்காது.
எட்டில் ராகு இருந்தால்
விபத்து உண்டு. விஷத்தால் தொல்லை உண்டு. drainage தொல்லை இருக்கும். அரிப்பு, பில்லி, சூனியம் ஈடுபாடு இருக்கும். லக்னாதிபதி வலுத்தால் இவர் செய்வினை செய்வார். லக்னாதிபதி வலு குறைந்தால் செய்வினை பாதிப்பு உண்டு. இவருக்கு வெளியூர், வெளிநாடு போகலாம். சாமியாடுதல், சட்டத்துக்குப் புறம்பான செயல், லஞ்சம், வருவாய், அமானுஷ்யம், இருக்கும். சர்வீஸ், ரிப்பேர் தொழில் நன்று. சட்ட சிக்கல் உண்டு. சொத்து என்று பழைய பொருள்கள் வாங்குவது வாங்கி விற்பது நல்லது.
எட்டில் கேது இருந்தால்
ரகசிய நோய் உண்டு. ரகசிய குடும்பம் உண்டு. தாமத திருமணமாக இருக்கும். விரைவில் நடந்தால் அது காதல் திருமணமாக இருக்கும். பெண்ணுக்கு 25 வயதுக்கு பின்பும் ஆணுக்கு 27 வயதுக்கு பின்பும் திருமணம் செய்வது நல்லது. சட்டம், ஜோதிடம், மருத்துவம், உளவுத்துறை வேலை பார்க்கலாம் நன்று. லேத் டிசைனிங், நுணுக்கமான வேலை நன்று. எட்டாமிடம் நுணுக்கம்.
எட்டாம் அதிபதி ஆறாம் அதிபதியை தொடுவது ஆறாம் அதிபதி எட்டாம் அதிபதியை தொடுவது இருந்தாலும் பாவ கிரகங்களை தொட்டாலும் ஜாதகருக்கு கெட்ட குணம் இருக்கும்.எட்டாம் அதிபதி சுபர்களை தொட்டால் ஜாதகர் நல்லவர். பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:
எட்டாம் அதிபதி லக்கினத்தில் இருந்தால்:
கடன், பணக்கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை அமையும். அதுவும் இங்கே வந்தமரும் கிரகத்துடன் லக்கினாதிபதியும் சேர்ந்திருந்தால், வியாதிகள், கடன் தொல்லை, வறுமை எல்லா நிலைகளிலும் துரதிர்ஷ்டம் தொடர்ந்து வரும். எட்டாம் அதிபதி பலமின்றி இருந்தால் இந்த நிலை மாறும். உதாரணமாக எட்டாம் அதிபதி நவாம்ச லக்கினத்தில் 6, 8, 12ஆம் வீடுகளில் அமர்ந்திருப்பது போன்ற பலமில்லாத நிலைமை. நீசமாக இருக்கும் நிலைமை! உடல் உபாதைகள் இருக்கும். வீட்டிலும், வெளியிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் மற்றவர்களின் மதிப்பை, உரிய மரியாதையைப் பெற முடியாது. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், தீர்க்கமான ஆயுள் உண்டு. சிரமங்களும், கவலைகளும் கணிசமாகக் குறைந்துவிடும். இதற்கு நேர் மாறாக இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி தீயகிரகத்தின் பார்வையைப் பெற்றால், வறுமையில் உழல நேரிடும். வியாதிகள் கூடிக் கொல்லும். அடிக்கடி விழுந்து எழுந்திரிக்ககூடும். விபத்துக்கள் நேரிடும்
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு இரண்டில்:
கண் மற்றும் பல் உபாதைகள் இருக்கும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி இரண்டாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், எல்லாவிதமான உபத்திரவங்களும் இருக்கும். சாப்பிடும் உணவுகளிலும் சுவை இருக்காது. கிடைத்ததை உண்ணும் வாழ்க்கை அமையும். வாக்கில் நாணயம் இருக்காது. பேசுவது எல்லாம் பொய்யாகிப் போகும். எல்லோருடனும்/எதற்கெடுத்தாலும் தர்க்கம், வாதம் செய்பவனாக இருப்பான் அவனுடைய குடும்ப வாழ்க்கை ஏற்றமுடையதாக, சந்தோஷமுடையதாக இருக்காது. அவனைப் புரிந்து கொள்ளாத மனைவி அமைவாள். அவளுடன் தினமும் சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக வாழ்க்கை அமையும் சிலருக்கு, மனைவியை பிரிந்து வாழும் வாழ்க்கை அமைந்துவிடும். சிலருக்கு ஆயுள் பூரணமாக இருந்தாலும், நோயும் பூரணமாகவே இருக்கும். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும், தான்தோன்றித் தனமாக அத்தனை செல்வத்தையும் செலவு செய்து அழித்துவிடுவான். உடல் நலம் இருக்காது. மொத்தத்தில் பைத்தியக்காரனைப்போல வாழ்க்கையை நடத்துவான். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு மூன்றில்:
உடன்பிறப்புக்களுடன் ஒற்றுமை இருக்காது. மன தைரியம் இருக்காது. மனதில் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு கேட்கும் சக்தி குறைந்துவிடும்.காது கேட்காத சூழ்நிலைகூட உண்டாகும் முன்னோர்கள் கொடுத்துவிட்டுப்போன சொத்துக்கள் பலவழிகளில் நாசமாகும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி மூன்றாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தாலும், அல்லது தீய கிரகத்தின் பார்வையைப்பெற்ரிருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள துயரங்கள், தாங்க முடியாத அளவிற்கு இருக்கும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
எட்டாம்
அதிபதி லக்கினத்திற்கு நான்கில்:
தாயுடனான உறவு சுமூகமாக இருக்காது. சிலருக்குத் தாய்ப்பாசம் கிடைக்காது. தாய்வழி உறவுகளின் மகிழ்ச்சியும் இருக்காது. குடும்ப வாழ்வில் சுகம் இருக்காது. தொல்லைகளே மிகுந்திருக்கும் சொத்துக்கள் கையை விட்டுப்போகும். சம்பாத்தியத்திலும் ஒன்றும் மிஞ்சி, சுகத்தைத் தராது. வாகனங்கள் விபத்தில் சிக்கி செலவையே அதிகமாகக் கொடுக்கும். நஷ்டங்களையே கொடுக்கும் மொத்தத்தில் சுகக்குறைவு. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி நான்காம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், பல சுகங்கள் சொல்லிக்கொள்ளாமல் போய்விடும். தாயின் உடல் சுகவீனமடைந்து, ஜாதகனின் மன அமைதியைக் கெடுக்கும். ஜாதகனின் வீடு, மற்றும் வாகனங்களினால் ஏற்படும் சுமைகள், தொல்லைகள் அதிகரிக்கும். சிலர் தங்கள் சொத்து, சுகங்களை, வீடு, வாகனங்களைப் பறி கொடுக்க நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஐந்தில்:
பெற்ற பிள்ளைகளால் மன அமைதி போய்விடும். மனதில் சஞ்சலங்கள் மிகுந்திருக்கும். சொந்தங்களுடன் விரோதப்போக்கு நிலவும். அலைச்சல் மிகுந்திருக்கும். மனதில் கலவரமும் அடிக்கடி தோன்றி மறையும் எண்ணப்படி எக்காரியத்தையும் நிறைவுடன் செய்து முடிக்க முடியாது. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஐந்தாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனால், ஜாதகனின் பிள்ளைகளுக்குக் கேடு உண்டாகும். அதே போல ஜாதகனின் குழந்தைகளும் தகாத செயல்களில் ஈடுபட்டு, ஜாதகனின் மதிப்பு, மரியாதைக்கு வேட்டு வைத்துவிடுவார்கள். அதாவது குண்டு வைத்துவிடுவார்கள். சிலருக்கு, தங்கள் தந்தையுடன், ஒற்றுமை இருக்காது. புரியாத சர்ச்சைகள் நிலவும். இந்த சேர்க்கை, தீய கிரகத்தின் அதீத பார்வையைப் பெற்றிருந்தால், சிலர் தங்கள் குழந்தைகளை, அது பிறந்த இரண்டொரு வருடங்களிலேயே பறி கொடுத்து விட்டுத் தவிக்க நேரிடும். இது மனதிற்கும் தொடர்புடைய இடமாதலால், சிலர் மனஅமைதியை இழந்து மன நோயாளியைப் போல திரிய நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஆறில்:
அற்ப ஆயுள் (** இது பொது விதி) உடல் ஸ்திரமாக இருக்காது. ஜாதகன் மெலிந்து இருப்பான். பலவிதமான நோய்கள் வந்து குடி கொள்ளூம் தீய எண்ணங்கள் மிகுந்திருக்கும் ஒரே ஒரு ஆறுதல், ஜாதகன் பகைவர்களை வெல்லக்கூடியவனாக இருப்பான். சிலருக்குப் புத்திர பாக்கியம் அவுட்டாகி விடும். அதாவது இல்லாமல் போய்விடும். சிலர் தத்துப்புத்திரனுடன் வாழ நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஆறாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ராஜ யோகம் ஏற்படும். ஜாதகனுக்கு செல்வம் சேரும். புகழ் உண்டாகும். நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். அவன் ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும்.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஏழில:
பூரண ஆயுள் உண்டு. மனைவியின் மேல் பிரியம் இருக்காது. பெண்ணாக இருந்தால் கணவனின் மேல் பிரியமாக இருக்க மாட்டாள். இருவரின் உறவிலும் ஒரு ஈர்ப்பு இருக்காது. நெருக்கம் இருக்காது. சிலர் பெண் சகவாசத்தால் பொன், பொருளை இழக்க நேரிடும் சிலர் தகாத பெண்களின் சிநேகத்தால், அவமானப்பட நேரிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி ஏழாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்கு ஆயுள் குறையும். ஜாதகனின் மனைவி நோய்களால் பாதிக்கப்பெற்று ஜாதகனைப் படுத்தி எடுப்பாள். மேலும் இந்த அமைப்பு தீய கிரகத்தின் பார்வை பெற்றால், ஜாதகனும் நோய் நொடிகளால் பாதிக்கப்படுவான். ஜாதகனுக்கு வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனாலும், அதன் மூலம் அவன் பல பிரச்சினைகளை அங்கே சந்திக்க நேரிடும். இந்த அமைப்பு (8th & 7th lords association) ஒரு வலுவான சுபக்கிரகத்திப் பார்வையைப் பெற்றால், ஜாதகனுக்கு வெளி நாடுகளுக்குத் தூதரக அதிகாரியாகச் சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும்,. மதிப்பும், மரியாதையும் மிக்கவனாகத் திகழ்வான்.
எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு எட்டில்:
ஜாதகனுக்கு தீர்க்கமான ஆயுள் உண்டு! வலுவாக இருந்தால், ஜாதகனுக்குத் தீர்க்கமான ஆயுள். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இடம், வீடு, வாகனம் சொத்துக்கள் என்று எல்லாவகையான செல்வமும் சேரும். அதிகாரம், பட்டம், பதவிகள் என்று வாழ்க்கை அசத்தலாக இருக்கும் எட்டாம் அதிபதி எட்டில் இருக்கும்போது உள்ள நிலையில் உள்ளது.
எட்டாம் அதிபதி ஒன்பதில் இருந்தால்
ஜாதகருக்கு ஆயுள் விருத்தி உண்டு. வழக்கு வெற்றி உண்டு. வழக்கில் சமாதானம் ஆவார்கள். அதனால் வெற்றி கிடைக்கும். அமானுஷ்ய சக்தி அதிகமாக இருக்கும். செய்வினை, பில்லி, சூனியம் ஈடுபாடு இருக்கும். ஒன்பதாம் அதிபதியும் அங்கேயே இருந்தால் நல்லது. பாக்கியத்தை அனுபவிக்க தடையாக இருக்கும். உயில் சொத்து உண்டு. தந்தை சொத்தில் உள்ள வழக்கு வெற்றி கிடைக்கும், அல்லது மாமனார் சொத்தில் வழக்கு தொடர்வார்கள். அசையாத சொத்து இவர்களுக்கு இருக்கும். அசையாத சொத்து இருந்தால் விலை ஏறும். தந்தைக்கு கிராஜுவிட்டி Pension உண்டு. தந்தை வழியில் சாமியார், சாமி ஆடுபவர்கள் இருப்பார்கள். எதிர்பாராத வளர்ச்சி இருக்கும். பிற்காலம் நன்மை இருக்கும். ஆராய்ச்சி, படிப்பு பிற்பகுதியில் படிப்பது நல்லது. கல்வியில் தடை இருக்கும்.இவர்கள் ஆவணத்தை வைத்து வழக்கு தொடர்வது போன்ற பிரச்சனைகள் இருக்கும்.
பிற்கால யோகம் என்றால் குருவும் சனியும் ராசிகளில் தனுசு மீனம் கும்பம் மகரம் இந்த ராசிகள் ஜென்ம லக்னமாகவோ சந்திர லக்னம் ஆகவோ அமைவது ஒரு ஜாதகருக்கு பிற்கால யோகம் கொடுக்கும்.
நன்றி
வாழ்க வளமுடன்
தமிழரசன் க
தக்ஷா ஜோதிட நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்
https://www.dakshaastrology.com
whatsapp: +919787969698
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக