சனி, 10 பிப்ரவரி, 2024

திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி

 


நம் முன்னோர்கள் திருமணத்திற்கு 60க்கும் மேற்பட்ட பொருத்தங்கள் பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 12 பொருத்தங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.
திருமணத்திற்கு தேவையான முக்கிய பொருத்தங்கள்

 • தினப் பொருத்தம்

 • கணப் பொருத்தம்

 • ராசி பொருத்தம்

 • யோனி பொருத்தம்

 • ரஜ்ஜு பொருத்தம்

மேற்கண்ட ஐந்து பொருத்தம் இல்லை என்றால் ஜாதகம் பொருத்தம் இல்லை எனக் கூறி அந்த திருமணம் தவிர்க்கப்படுகிறது.

இந்த ஐந்து பொருத்தத்தில் கட்டாயமாக இரண்டு பொருத்தமாவது அவசியம் இருக்க வேண்டும். இந்த இரண்டு பொருத்தத்தை தவிர்க்கவே கூடாது.

 • யோனி பொருத்தம்

 • ரஜ்ஜு பொருத்தம்

மேற்கண்ட இரண்டு பொருத்தத்தில் ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால் திருமணம் செய்யக்கூடாது.

தினப் பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 2,4,6,8,9,11,13,15,18, 20,24,26 நட்சத்திரங்கள் வந்தால் தினப் பொருத்தம் உண்டு.

கணப் பொருத்தம்

ஜோதிட சாஸ்திரத்தின் படி நட்சத்திரங்களை மூன்று கணங்களாக பிரித்திருக்கிறார்கள். அவை தேவ கணம், மனித கணம் மற்றும் ராட்சச கணம்.

ஆண் பெண் நட்சத்திரங்கள் ஒரே கணமாக இருந்தால் பொருத்தம் உண்டு.

ஒருவருடைய நட்சத்திரம் தேவ கணமாக இருந்து மற்றவருடைய நட்சத்திரம் மனித கணமாக இருந்தால் அவர்களுக்கு மத்தியமான பொருத்தம் உண்டு.

ஒருவருடைய நட்சத்திரம் ராட்சச கணமாக இருந்து மற்றவருடைய நட்சத்திரம் மனித கணமாக இருந்தால் பொருத்தம் இல்லை.

ஆண் நட்சத்திரம் ராட்சச கணமாக இருந்து பெண் நட்சத்திரம் தேவ கணமாக இருந்தால் அவர்களுக்கு மத்தியமான பொருத்தம் உண்டு.

மணமக்களின் வாழ்வில் மங்களம் பெருக இந்த கணப் பொருத்தம் மிகவும் அவசியமாகும்.

கணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

கணப் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா: ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரே கணமாக இருந்தால் அதனை மிக சிறந்த பொருத்தமாக எண்ண வேண்டும்.

ஆண் தேவ கண பொருத்தமும் பெண் மனித கணமுமாக இருந்தால் இதுவும் மிக நல்ல கணப் பொருத்தம் தான்.

பெண் தேவ கணமாகவும், ஆண் மனித கணமாகவும் இருந்தால் ஓரளவு பொருந்துகிறது எனலாம்.

பெண் மனித கணமும் ஆண் இராட்சத கணமுமாக இருந்தால் அது பொருந்தாது.

பெண் ராட்சஸ கணமாகவும் ஆண் தேவ கணமுமாக இருந்தால் அது பொருந்தாது.

தேவ கணம்

அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுசம், திருஓணம், ரேவதி

மனுஷ கணம் 

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி

ராட்சஸ கணம்

கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்

மகேந்திர பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் எண்ணி வரும்போது ஆண் நட்சத்திரம் 1,4,7,10, 13,16,19,22,25 ஆக வந்தால் மகேந்திர பொருத்தம் உண்டு.

இந்த மகேந்திர பொருத்தத்தின் பலன் புத்திர விருத்தி.

ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்

பெண் நட்சத்திரம் தொடங்கி எண்ணி வரும்போது ஆண் நட்சத்திரம் 13க்கு மேலாக இருந்தால் பொருத்தம் உண்டு. அதே 7க்கு மேலானால் மத்தியமான பொருத்தம் உண்டு.

இந்த ஸ்திரீ தீர்க்கப் பொருத்தத்தின் பலன் மணப்பெண் ஆயுள் விருத்தி மற்றும் தம்பதிகள் வாழ்க்கையில் இன்பம் பெற இந்தப் பொருத்தம் அவசியம்.

யோனி பொருத்தம்

நமது ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மிருகம் உள்ளது. இதை அடிப்படையாக வைத்து யோனி பொருத்தம் பார்க்கப்படுகிறது.

இந்த ஆண் பெண் நட்சத்திர மிருகங்களுக்கு இடையே பகை இருந்தால் பொருத்தம் இல்லை என்பது பொருள். அதாவது பகை என்பது குடும்பத்திற்கு ஆகாது. இனிய இல்லறம் நடக்க தம்பதிகளுக்கு இடையே அன்னியோன்ய ஒற்றுமை தேவை. அதனால்தான் இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

ஆண் பெண் இருவருக்கும் ஒரே யோனியில் அமைந்தால் பொருத்தம் உண்டு. அதே வேறு யோனியில் அமைந்தால் மத்தியமான பொருத்தம் உண்டு.

அதே பகையாக ஆண் பெண் யோனி இருப்பின் பொருத்தம் இல்லை என்பது பொருள்.

இந்த யோனி பொருத்தத்தின் பலன் அன்யோன்ய அன்பை குறிக்கிறது.

ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறை இது. நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆண் & பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது. உத்திராடட்ம நட்சத்திரம் மட்டும் கீரி எனவும் சில சாஸ்திர நூல்கள் மலட்டு பசு எனவும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு. ஆண் & பெண் பகை மிருகமெனில் மட்டுமே பொருத்தமில்லை எனலாம். ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் எனினும் உத்தமே! பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகம்' என்றாலும் உத்தமமே. பகை மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது. மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும் இது முக்கியம். 

நட்சத்திரம்                                                                                           மிருகம்

அஸ்வினி, சதயம்                                                                               குதிரை

பரணி, ரேவதி                                                                                       யானை

கார்த்திகை, பூசம்                                                                              ஆடு

ரோகிணி, மிருகசீரிஷம்                                                                 பாம்பு

திருவாதிரை, மூலம்                                                                          நாய்

புனர்பூசம், ஆயில்யம்                                                                      பூனை

மகம், பூரம்                                                                                             எலி

உத்திரம், உத்திரட்டாதி                                                                   பசு

அஸ்தம், சுவாதி                                                                                  எருமை

சித்திரை, விசாகம்                                                                             புலி

அனுஷம், கேட்டை                                                                             மான்

பூராடம், திருவோணம்                                                                    குரங்கு

அவிட்டம், பூரட்டாதி                                                                         சிங்கம்

உத்திராடம்                                                                                           கீரி

பகை மிருகம்

குதிரை X எருமை

யானை X சிங்கம்

ஆடு X குரங்கு

பாம்பு X எலி

பசு X புலி

எலி X பூனை

கீரி X பாம்பு

மான் X நாய்

உதாரணம் : பெண் நட்சத்திரம் கார்த்திகை, அதன் மிருகம் பெண் ஆடு. ஆண் நட்சத்திரம் சதயம், அதன் மிருகம் பெண் குதிரை. இவை இரண்டும் பகை பெறாததால் யோனிப் பொருத்தம் உண்டு.

ராசி பொருத்தம்

பெண் ராசி முதல் ஆண் ராசி வரை எண்ணினால் 9 ராசிக்கு மேலாக இருப்பின் பொருத்தம் உண்டு. 8 ஆம் ராசி கூடாது.

இதன் பலன் வம்சாவளி ஆண் விருத்தி மற்றும் வம்ச விருத்தி மற்றும் மன ஒற்றுமையை குறிப்பிடுகிறது.

ராசி அதிபதி பொருத்தம்

பெண் ராசி அதிபதியும் மற்றும் ஆண் ராசி அதிபதியும் நட்பாக இருந்தால் பொருத்தம் உண்டு. அதே பகையாக இருந்தால் பொருத்தம் இல்லை என்பது பொருள்.

மணமக்கள் இருவரும் மனம் ஒத்த தம்பதியராக வாழ்நாள் முழுவதும் இனிமையாக இருக்க இரு வீட்டாரின் நல்லுறவும் அவசியம். இந்த ராசி அதிபதி பொருத்தமானது சம்பந்திகளின் நட்பு மற்றும் ஒற்றுமையைக் குறிக்கிறது. அதற்குத்தான் இந்த ராசி அதிபதி பொருத்தம் பார்க்கிறோம்.

வசிய பொருத்தம்

மணமக்களுக்கு ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு வாழ்நாள் முழுவதும் இருக்கவும், அது திசை திரும்பி வேறொருவர் மீது செல்லாமல் இருக்கவும் வசிய பொருத்தம் அவசியமாகும். அப்பொழுதுதான் ஒருவர் கருத்துக்கு மற்றொருவர் உடன்பட்டு இருப்பர்.

ரஜ்ஜு பொருத்தம்

பத்து பொருத்தத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது இந்த ரஜ்ஜு பொருத்தம்

பத்து பொருத்தத்தில் ஒன்பது பொருத்தங்கள் இருந்தால் கூட ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த ரஜ்ஜு பொருத்தத்தை நம் முன்னோர்கள் முக்கியமாக வைத்துள்ளனர்.

இந்தப் பொருத்தத்தின் பலன் தீர்க்க சுமங்கலியாக மனைவி இருக்க இந்த ரஜ்ஜு பொருத்தம் பார்க்கப்படுகிறது.

ரஜ்ஜு பொருத்தம் சிரசு ரஜ்ஜு (தலை), கண்ட ரஜ்ஜு (கழுத்து), உதர ரஜ்ஜு (வயிறு), ஊரு ரஜ்ஜு (தொடை), பாத ரஜ்ஜு (கால்) என ஐந்து வகைகள் உள்ளன. மணமக்களாகப் போகும் ஜோடிக்கு ரஜ்ஜு தட்டுகிறது என்றால் அது மணமக்களுக்கு ஆபத்தானதாக இருக்கும் என்பதால் இதை தவிர்ப்பதற்காக ரஜ்ஜு பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியம்.

ரஜ்ஜு பொருத்தம் சிரசு ரஜ்ஜு (தலை), கண்ட ரஜ்ஜு (கழுத்து), உதர ரஜ்ஜு (வயிறு), ஊரு ரஜ்ஜு (தொடை), பாத ரஜ்ஜு (கால்) என ஐந்து வகைகள் உள்ளன. 

மணமக்களாகப் போகும் ஜோடிக்கு ரஜ்ஜு தட்டுகிறது என்றால் அது மணமக்களுக்கு ஆபத்தானதாக இருக்கும் என்பதால் இதை தவிர்ப்பதற்காக ரஜ்ஜு பொருத்தம் பார்க்க வேண்டியது அவசியம்.

சிரசு ரஜ்ஜு என்றால் என்ன?

இந்த ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் ஆணுக்கு தீங்கு தருவதாக இருக்கும். சிரசு ரஜ்ஜு இருந்தால் தலைக்கு பாதிப்பு அதாவது தலைவனுக்கு பாதிப்பாகும்.

சிரசு ரஜ்ஜு உடைய நட்சத்திரங்கள் :

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் சிரசு (தலை) ரஜ்ஜு கொண்டவை.

கண்ட ரஜ்ஜு என்றால் என்ன?

மாங்கல்யம் அணியக்கூடிய கழுத்து கொண்ட பெண்களுக்கு தீமை உண்டாக்க வல்லது. அதாவது கண்டக ரஜ்ஜுவினால் மனைவிக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.

கண்ட ரஜ்ஜு (கழுத்து) கொண்ட நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் ஆரோஹனம் கொண்டவை

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் அவரோஹனம் கொண்டவை

உதர ரஜ்ஜு (வயிறு) என்றால் என்ன?

வயிறு ரஜ்ஜு இருப்பின் அவர்களுக்கு பிறக்கும் வாரிசுகளுக்கு ஆபத்து ஏற்படும். அல்லது தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு வாழ்க்கை முடிவு உண்டாகலாம். குழந்தை பாக்கியம் கிடைக்காது.

உதர ரஜ்ஜு (கழுத்து) கொண்ட நட்சத்திரங்கள்

கார்த்திகை, உத்தரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் ஆரோஹனம் கொண்டவை.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் அவரோஹனம் கொண்டவை.

ஊரு ரஜ்ஜு (தொடை) என்றால் என்ன?

ஊரு ரஜ்ஜு என்பது இல்லாவிட்டால் அந்த வீட்டில் செல்வங்கள் மட்டுமில்லாமல் சேமித்த சொத்துக்களும் இழக்க நேரிடும்

ஊரு ரஜ்ஜு (தொடை) கொண்ட நட்சத்திரங்கள்:

பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் ஆரோஹனம் கொண்டவை

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் கொண்டவை அவரோஹனம் கொண்டவை

பாத ரஜ்ஜு (பாதம்) என்றால் என்ன?

பாத ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் ஒருவர் இருக்கும் இடத்திற்கே ஆபத்தாக்கும். பிரிவு ஏற்படுதல் அல்லது சன்னியாசம் செல்லுதல்.

பாத ரஜ்ஜு (கால் பாதம்) கொண்ட நட்சத்திரங்கள்:

அசுவினி, மகம், மூலம் ஆகியவை – ஆரோஹனம் கொண்டவை

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை – அவரோஹனம் கொண்டவை.

ரஜ்ஜு பொருத்தத்தில் சில விதிவிலக்குகள் :

ஒரே ரஜ்ஜுவில் ஆரோஹனம், அவரோஹனம் என இரு பிரிவுகள் உள்ளன. அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும், அதில் ஆரோஹனம், அவரோஹனம் வெவ்வேறாக இருந்தால் திருமணம் செய்யலாம். அதாவது திருமணம் செய்பவர்களில் ஒருவருக்கு ஏறு முகமும், மற்றவருக்கு இறங்குமுகமாகவும் இருப்பது அவசியம்.

அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் இருவருக்கும் சிரசு ரஜ்ஜு (தலை) இல்லாமல் இருப்பது அவசியம்.

ஒரே ரஜ்ஜுவில் ஆரோஹனம், அவரோஹனம் என இரு பிரிவுகள் உள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால் பெண் மற்றும் ஆண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தாலும், ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம். அதாவது ஒருவருக்கு ஏறு முகம் மற்றவருக்கு இறங்குமுகமாக இருக்க வேண்டும்.

அதற்காக தான் திருமண பொருத்தத்தைப் பார்க்கும் போது ஜோதிடத்தில் அனுபவம் உள்ளவரிடம் ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது அவசியம்.

வேதைப் பொருத்தம்

வேதை என்றால் ஒன்றுக்கொன்று தாக்குதல் என்று பொருளாகும். வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாது. வேதைப் பொருத்தம் என்பது மாங்கல்ய பலத்தை குறிப்பிடுவது.

ஆண் மற்றும் பெண்ணின் நட்சத்திரம் ஒன்றுக்கொன்று வேதை இல்லாமல் இருந்தால் அதை வேதைப் பொருத்தம் உண்டு என்கிறோம்.

பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம் வேதை நட்சத்திரமாக இருந்தால் திருமணமான பிறகு அவர்களது வாழ்க்கையில் சண்டை சச்சரவு ஏற்படக்கூடும்.

மணமக்களுக்கு வேதை பொருத்தம் சரியாக அமைந்து விட்டால் அந்த தம்பதிகளின் வாழ்க்கையில் எந்த காலத்திற்கும் துன்பம் வராமல் மகிழ்ச்சி நிலைத்து நிற்கும்.

கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வராமல் இருப்பதற்காக இந்த வேதை பொருத்தம் பார்க்கப்படுகிறது.

குறிப்பு:

இன்றைய காலத்தில் ஆன்லைனில் நிறைய சாஃப்ட்வேர்கள் கிடைக்கின்றன ஆனாலும் தேர்ந்த ஜோதிடரை பார்த்து மற்ற முக்கியமான விஷயங்களைப் பார்த்தும் அறிந்து கொள்ள வேண்டும்

உதாரணமாக லக்னத்திற்கு லக்னம்  மறைவு உள்ளதா சூரியனுக்கு சூரியன் மறைவு உள்ளதா குருவிற்கு குரு மறைவு உள்ளதா என்பதைப் போன்ற பாவகப் பலன்களையும் பொருத்திப் பார்த்து சொல்ல வேண்டும் எனவே ஜோதிடரின் உதவி தேவை.ேலும் காதல் திருமணம் செய்பவர்கள் மனப் பொருத்தத்தை தான் பார்க்க வேண்டும் ஜாதக பொருத்தத்தை அல்ல ஒருவேளை பார்த்தால் ஏதேனும் தீய தசா புத்திகள் ஓடுகின்றனவா என்று பார்த்துக் கொள்ளுக சுக்கிர தசை or  ராகு தசை இது போன்ற தசாக்கள் திடீர் திருமணத்தையும் தரும்.

நன்றி 

வாழ்க வளமுடன்

தமிழரசன் க

தக்‌ஷா ஜோதிட நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்

https://www.dakshaastrology.com

whatsapp: +919787969698

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குளிகை காலத்தில் சுப நிகழ்ச்சிகளை செய்யலாமா அல்லது அசுப நிகழ்ச்சிகளை நடத்தலாமா என்பதில் நிறைய பேருக்கு குழப்பம் இருக்கும்.

குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி, ஜேஸ்ட்ட...