ஒருவரின் ஜென்ம ஜாதகத்தில் லக்னம், 2, 7 , 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது கிரகம் இருக்குமேயானால் அந்த ஜாதகருக்கு ராகு – கேது தோஷம் ஏற்படுகிறது. ஜாதகத்தில் மேற்கூறிய 1, 2, 7, 8 ஆம் வீடுகளில் ராகு – கேது கிரகங்கள் இருந்தாலும், அந்த வீடுகள் ராகு – கேது கிரகங்களுக்கு உச்ச வீடாகவோ, அல்லது நட்பு வீடாக இருக்கும் பட்சத்தில் ராகு – கேது தோஷம் இல்லை என்பது தெளிவு. ஆனால் மேற்கூறிய வீடுகள் ராகு – கேது கிரகங்களுக்கு நீச்ச வீடுகளாக இருக்கும் பட்சத்தில் ராகு – கேது தோஷத்தினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் லக்கினம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு – கேது கிரகங்கள் இருந்து, ராகு – கேது தோஷம் ஏற்பட்டிருக்குமானால் இதே போன்று ஜாதக அமைப்பை கொண்ட ஆண் அல்லது பெண் வரனை ராகு – கேது தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் செய்வதால் ராகு – கேது தோஷ நிவர்த்தி உண்டாகிறது
ஜாதகத்தில் ராகுவால் மட்டுமே தோஷம் ஏற்பட்டு பாதிப்பிற்குள்ளாகும் நபர்கள் வெள்ளிக் கிழமைகள் மற்றும் ராகு திசை, ராகு புக்தி நடைபெறும் காலங்களில், ராகு காலத்தில் விரதம் அனுஷ்டித்து, ராகு பகவானுக்கு மந்தாரை பூக்களால் அர்ச்சனை செய்து, உளுந்து கொண்டு செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியம் செய்து ராகு காயத்ரி மந்திரங்களை 108 முறை ஜெபித்து வழிபடுவது, ராகு கிரக தோஷ பாதிப்புகளை குறைக்க செய்யும் சிறந்த பரிகாரம் ஆகும்.
ராகு- கேது பரிகார ஸ்தலங்கள்
1.கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும்
2.நவதிருப்பதிகளில் தொலைவில்லிமங்கலம் பரிகார ஸ்தலமாகும் ,
3.சிவ ஸ்தலமான காளஹஸ்தியில் ராகுவுக்கு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன
4.கும்பகோணம் அருகே கீழப் பெரும்பள்ளம் கேது ஸ்தலமாகும்
ராகு- கேதுக்கு எப்போது பரிகாரம் செய்ய வேண்டும் ?
• செவ்வாய் திசையில் ராகு புத்தி ,கேது அந்தரம், நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்
• ராகு திசையில் ராகு புத்தி ,கேது புத்தி நடக்கும் போது பரிகாரம் செய்யலாம்.
• சந்திர திசையில் ராகு புத்தி, அந்தரம் கேது புத்தி, கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்
• குரு திசையில் கேது புக்தி, ராகு புக்தி நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்.
• சூரிய திசையில் எந்த புத்தி நடந்து கொண்டிருந்தாலும் அதில் ராகு அல்லது கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்,
• சனி திசையில் ராகு -கேது புத்தி, சூரிய புத்தியில் ராகு -கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்,
• கேது திசையில் சந்திர புத்தி, சூரிய புத்தி, புதன் புத்தியில், ராகு- கேது அந்தரம் நடக்கும்போது செய்யலாம்,
• புதன் திசையில் சந்திர புத்தி, ராகு -கேது அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்,
• சுக்கிர திசையில் குரு புத்தி, கேது- ராகு அந்தரம் நடக்கும்போது பரிகாரம் செய்யலாம்,
ராகு- கேது பரிகாரங்கள்
கேதுவின் அருள் பெற விநாயகர் சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களை வழிபடலாம்.ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய தெய்வங்களை வழிபடலாம்,காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனி ஆலயம் உள்ளது அங்கு கேது பரிகார பூஜை செய்யலாம்.
புற்று இருக்கும் அனைத்து அம்மன் காளி கோயில்களிலும் ராகு பரிகார பூஜைகள் செய்யலாம்.நவகிரகத்தில் உள்ள ராகு- கேது விற்கும் விளக்கேற்றலாம்.சிவன் கோயிலில் உள்ள விஷ்ணு துர்க்கையை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபடவேண்டும்.
பெருமாள் கோவிலில் உள்ள விஷ்ணு புதன்கிழமை ராகு காலத்திலும் வணங்குவது நல்லது.
சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள், அர்ச்சனை செய்து வழிபடவும்.
தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு வடைமாலை சாற்றி வழிபாடு செய்யலாம்,
அஞ்சநெயர் வடை மாலை சாற்றி வழிபட ஞாயிற்று கிழமை ராகு காலத்தில்வழிபடவும்.விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடவும்,
பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வழிபடவும்,
பாம்பு புற்றுள்ள கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தலாம்,
ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை காலை ஒருபொழுது மட்டும் விரதம் இருக்கலாம்,
வாரந்தோறும் துர்க்கை அல்லது காளிக்கு எலுமிச்சம் பழ மாலை சாற்றி வழிபடவும்,
எலுமிச்சம்பழ மாலையில் 27 அல்லது 45 என்ற எண்ணிக்கையில் பழம் இருக்க வேண்டும்,
அரசு வேம்பு மரம் உள்ள விநாயகரை சனிக்கிழமை காலை ராகு காலத்தில் சுற்றி வந்து வழிபடவும்.
நன்றி
வாழ்க வளமுடன்
தமிழரசன் க
தக்ஷா ஜோதிட நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்
https://www.dakshaastrology.com
whatsapp: +919787969698
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக