*திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பதிவு:*
வருகிற 25 3 2024 பங்குனி உத்திரம் வருகிறது. திருமணத்திற்காக முயற்சி செய்பவர்கள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து மிக முக்கியமாக தன்னை அலங்காரப் படுத்திக் கொண்டு அருகிலுள்ள சிவன் விஷ்ணு அல்லது முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர மிகச் சிறப்பு. மேலும் அன்றைய நாளில் அன்னதானம் சாப்பிடுவதும் மிகச் சிறப்பு , கிராமப்புறங்களில் சிலர் இல்லங்களில் தோட்டங்களில் அன்னதானம் விடுவோர் உண்டு. கோவில்களில் அன்னதானம் விடுபவரும் உண்டு. இந்த வேலையில் திருமணமாகாத ஆண்களோ பெண்களோ தரிசனம் முடித்து அன்னதானம் சாப்பிட்டு வர நிச்சயமாக கரம் பிடிப்பார்கள்.
*ஏன் பங்குனி உத்திரம் விசேஷம்*
1) ராமாயணத்தில் சீதா தேவியை திருமணம் செய்தது இந்த நாளில் தான்.
2) முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்ததும் இதே பங்குனி உத்திரத்தில் தான்.
3) சிவபெருமான் பார்வதியை மணம் முடித்ததும் இந்த நாளில் தான். சிவபெருமான் கைலாயத்திலிருந்து சாம்பலுடன் மண்டை ஓட்டுடனும் கரம் பிடிக்க வந்தார். இதை அறிந்த பார்வதி இன்று திருமண நாளில் அலங்காரத்துடனே கரம் பிடிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார் . பார்வதி தேவி தன் கைகளாலேயே கலர் வண்ணங்களை பூசி சிவபெருமானை அலங்காரப்படுத்தினார். இதையே வடநாட்டில் ஹோலி பண்டிகையாக இன்றளவும் கொண்டாடுகிறார்கள்.
4) சிவ விஷ்ணு தாண்டவத்தில் கந்தர்வ திருமணம் மூலம் சாஸ்தா பிறந்ததும் இன்றைய நாள். எனவேதான் அனைத்து ஐயப்பன் கோவில்களிலும் சிறப்பு விசேஷம் இந்த பங்குனி உத்திரம்.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளை திருமணமாகாத ஆண்கள் பெண்கள் பயன்படுத்திக் கொண்டு பலன் பெற தக்ஷா ஜோதிட மையத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்!!!
இந்த நாள்களில் பெண் பார்க்கும் படலம் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை வைத்துக் கொள்வதும் மிகச் சிறப்பு தான்.
இது
தக்ஷா ஜோதிடம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழரசன் க
9787969698
WWW.DAKSHAASTROLOGY.COM
WhatsApp:
https://chat.whatsapp.com/E0YGmifgOB82SAq0Sb8W8N
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக