எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சமயத்தில் காகம் தலையில் கொட்டி விட்டு செல்வதை நாம் அனுபவித்திருப்போம். காகம் தலையில் கொட்டியவுடன் அபசகுணமாக கருதி உடனே நம் எண்ண ஓட்டங்கள் ஜாதகத்தில் ஏதோ நிகழ இருப்பதாக கருதி விடுகிறது. காகம் தலையில் கொட்டுவதை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அதில் முக்கியமாக சனி பகவானின் வாகனமாக காகம் இருப்பதால் நமக்கு கிரக தோஷங்கள் ஏற்படப் போவதாக அல்லது கிரக தோஷங்கள் நீங்குவதாக நாம் கருதி விடுவதும் உண்டு. காகம் தலையில் கொட்டுவதற்கும் கிரக தோஷத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே சாஸ்திர ரீதியாக உண்மை.
வழிவழியாக நம் முன்னோர்கள் நம்முடைய சாஸ்திரத்தில் காகத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். காகத்தைப் பற்றிய பல தகவல்களை நாம் அறிந்திருந்தாலும், இன்னும் சிலருக்கு, காகம் தலையில் தட்டி விட்டு சென்றால், என்ன நடக்கும் அப்படி நம் தலையில் காகம் தட்டி விட்டு சென்றபின்பு, என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றிய குழப்பம் ஆழ் மனதுக்குள் இருந்து தான் வருகிறது. இந்த குழப்பத்திற்கு தெளிவான தீர்வு காண்பதற்காகவே இந்த பதிவு.
காகத்திற்கு மட்டுமல்ல பொதுவாகவே எந்த ஒரு பறவைக்கும் எதிர்காலத்தில் நடக்கக்கூடிய, எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் தன்மை இருக்கின்றது. இயற்கை சீற்றங்கள், மனிதர்களுக்கு எதிர்காலத்தில் வரும் ஆபத்து இவைகளை பறவைகள் தங்களுடைய பாஷையில், சத்தம் போட்டு வெளிப்படுத்தும்.
அந்த வரிசையில் காகத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னோர்கள் வழிபாட்டிற்கும் காகத்திற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இது நாம் எல்லோரும் அறிந்ததே. இப்படிப்பட்ட காகம் சனீஸ்வரனின் வாகனமாகவும் உள்ளது. எம லோகத்தின் வாயிலில், இரு பக்கங்களிலும் காகம் இருப்பதாகவும் சாஸ்திரம் சொல்கின்றது. இதனால் தலையில் காகம் தட்டியவுடன் பேராபத்து நமக்கு வந்து விடுமோ, என்று நிறைய பேர் மனதில் சஞ்சலம் வந்துவிடும்.
காகமானது நம்முடைய தலையில் தட்டினால், நமக்கு வரக்கூடிய இன்னல்களை முன்கூட்டியே நமக்குத் தெரியப்படுத்துகிறது என்பதை குறிக்கின்றது. சிலர் சொல்லுவார்கள், காகம் தலையில் தட்டினால் உடனே மரணம் ஏற்பட்டு விடும் என்று! அப்படியெல்லாம் நினைத்து பயப்பட வேண்டாம். காகம் தலையில் தட்டும் பட்சத்தில் உங்களுக்கு ஏதோ பிரச்சினை காத்துக் கொண்டிருக்கின்றது. உங்களை நீங்களே உஷார் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, முன்னோர்கள் ரூபத்தில் இருக்கும் காகம் நமக்கு வலியுறுத்துகிறது என்பது அர்த்தமாகும்.
காகம் தலையில் தட்டி விட்டால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? வரப்போகின்ற ஆபத்தில் இருந்து எப்படித் தப்பிக்கப் போகின்றோம். உங்கள் வீட்டு குல வழக்கப்படி, குலதெய்வத்தை எப்படி வழிபாடு செய்வீர்களோ, அதன்படி உங்கள் வீட்டிலேயே குடும்பத்தோடு சேர்ந்து, வழிபாடு செய்து விடவேண்டும்.
உங்களுடைய முன்னோர்களுக்கு திதி கொடுப்பதில் ஏதேனும் குறை இருந்தால் கூட, அந்தக் குறையை காகம் ரூபத்தில் வந்து முன்னோர்கள் நமக்கு நினைவு படுத்துவார்கள். அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு வாழை இலை போட்டு, நிறைவான படைகளை போட்டு, மனதார, ஏதாவது குற்றம் இருந்தால் அதை மன்னிக்கும்படி வேண்டிக் கொள்வது மிகவும் நல்லது.
வீட்டில் குலதெய்வ படத்திற்கு முன்பாக மண் அகல் தீபம், நல்லெண்ணெய் விட்டு, பஞ்சுத் திரி போட்டுத் தீபம் ஏற்றி வையுங்கள். தீபம் ஏற்றுவதை இத்தனை நாட்கள் என்றுதான் கணக்கு கிடையாது. தொடர்ந்து ஏற்றுவது குடும்பத்திற்கு மிகவும் நல்லது. நம் குடும்பத்திற்கும், நம் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. குடும்பம் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும். கோவிலுக்கு சென்று நவகிரஹ சன்னிதானத்தில் எள் தீபம் ஏற்றுவது சிறந்த பலனை கொடுக்கும்.
இனி காகம் தலையில் தட்டி விட்டால், அதனால் ஏதாவது பேர் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற மன குழப்பத்தில், மன அழுத்தத்தில் நீங்களே உங்களுக்காண பிரச்சினைகளை உண்டாக்கி கொள்ளாதீர்கள். நம்முடைய மறைந்த முன்னோர்கள் ரூபத்தில் இருக்கும் காகம் என்றைக்குமே நமக்கு தீங்கு விளைவிக்காது. வரப்போகின்ற கஷ்டங்களைத் தான், முன்கூட்டியே வலியுறுத்தும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
உண்மையில் காகம் தலையில் கொத்தி விட்டு போவது, அதன் இறக்கை பட்டுவிட்டு போவது போன்றவை எதார்த்தமாக நிகழக் கூடியவையும் அல்ல. அனைத்தையுமே அவ்வாறு சாதாரணமாக எடுத்து கொண்டு விட முடியாது அல்லவா? கடவுள் நமக்கு எதையோ உணர்த்த தான் இவ்வாறு செயல்பட வைக்கிறார். ஒருவரது வாழ்க்கையில் அவர் செய்த புண்ணியம் அவரை காப்பாற்றும் என்று கூறப்படுகிறது. சில சமயங்களில் நமக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படவிருப்பதை முன்கூட்டியே நமக்கு சில அறிகுறிகள் மூலம் தெரிந்து விடும். அது போன்ற ஒரு அறிகுறி தான் காகம் தலையில் கொட்டி விட்டு செல்வதும்.
இதேபோல நம் முன்னோர்கள் காகம் ரூபத்தில் வருவதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. நம்முடைய பித்ருக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளை சரிவர நிறைவேற்றாமல் இருப்பதால் அவர்கள் மன வேதனையில் இருக்கலாம். அதனை உணர்த்துவதற்கு காகம் தலையில் கொட்டிவிட்டு செல்லலாம். அவர்களை முறையாக வழிபடுவதால் நம்முடைய இக்கட்டான எல்லா சூழ்நிலையிலும் நல்லதே நடக்கச் செய்வார்கள். காலம் காலமாக தொடர்ந்து இதை பற்றி வலியுறுத்தி வந்தாலும் சிலருக்கு நம்பிக்கை இருப்பதில்லை. எது நடந்தாலும் நன்மையாக நடக்க கூடியதை கூடுமானவரை செய்து விட வேண்டியது அவசியம். இவை நம்மை மட்டுமல்ல நம் வம்சத்திற்கே சிறந்த பலன்களை தேடித் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்வில் எந்த கடனை தீர்ப்பீர்களோ இல்லையோ, பித்ரு கடன்களை தீர்த்து விட வேண்டியது அவசியமான ஒன்று. இவை நமக்கு பல நன்மைகளை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை
தக்ஷா ஜோதிடம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழரசன் க
9787969698
WWW.DAKSHAASTROLOGY.COM
WhatsApp:
https://chat.whatsapp.com/E0YGmifgOB82SAq0Sb8W8N
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக