வருகின்ற 27ஆம் தேதி தமிழ்நாடு வெற்றி கழகம் திரு தளபதி விஜய் அவர்கள் முதல் கட்சி மாநாட்டை நடத்த இருக்கிறார்.
விஜயின் முதல் படம் குழந்தை நட்சத்திரமாக வெற்றி என்ற படத்தில் அறிமுகமானார் அதன் பிறகு நாளைய தீர்ப்பு என்ற படத்தில் முதல் கதாநாயகனாக அறிமுகமானார் இன்று தமிழ்நாடு வெற்றி கழகம் என்று பெயர் சூட்டியதும் வெற்றிக்கு அறிகுறியான வாகை மலரை கொடியில் தாங்கி இருப்பதும் இவரின் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த அமைப்பு நாளைய தீர்ப்பை (நாளைய தீர்ப்பு இரண்டாவது படம்) எழுதக் கூடியவராக வருவார் என்று அடித்து சொல்லலாம்.
இந்தப் பதிவில் முக்கிய நோக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயிர் இழப்பு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லது தமிழகம் கண்டிராத மாபெரும் சிக்கலையோ தடைகளையோ விஜய் இந்த மாநாட்டின் மூலம் சந்திப்பார் என்பதை அது கூற்று.
லக்னாதிபதி புதன் பகவான் பத்தில் சூரியன் திக்பலத்தோடு சேர்ந்து இருக்கிறார்.பத்தில் சூரியன் திக்பலம் பெறுவது மிகச் சிறந்த ஆளுமை பண்பையும் தலைமை பண்பையும் எடுத்துக் கூறுவதாக இருக்கும் அதுவும் புதன் ஆட்சி பெற்று இருப்பதால் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதில் மிகவும் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள் அதே சமயத்தில் பொது ஜனங்களுக்கு அதிபதியான சனிபகவான் 5க்கும் 6க்கும் உடையவராகி சூரியன் புதனோடு சேர்ந்து பத்தில் இவரும் அமர்ந்திருக்கின்றார் பத்தில் அமர்ந்து பன்னிரெண்டாம் இடத்தையும் நான்காம் இடத்தையும் ஏழாம் இடத்தையும் பார்க்கின்றார். குறிப்பாக தேசிய கட்சியின் உறுதுணையோடு இவர் கட்சியை நடத்தினால் ஆட்சிக்கு வருவது மிகவும் சிறப்பாக அமையும்.
மூணுக்கும் எட்டுக்கும் முடிய செவ்வாய் 11 இல் நீசம் மூன்று என்பது மீடியா துறைகள் அவர் எட்டுக்குடிவராகி 11ஆம் இடத்தில் நீசம் அடைந்திருப்பதால் மீடியாக்களை நேரடியாக கலந்துரையாடுவதை தவிர்ப்பது மிகச் சிறப்பு புத்திசாலித்தனமும் கூட.
நான்குக்கும் ஏழுக்கும் உடைய குரு பகவான் பாதகாதிபதியாகி ஆறில் மறைந்திருந்து நன்மை செய்தாலும் தற்போது உள்ள கோச்சார் அமைப்பு படி இந்த மாநாட்டின் போது அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை காட்டுகிறது.
அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் துரிதமாக செயல்பட வேண்டும்.
இவருக்கு எதுவுமே முதல் முயற்சி வெற்றியை கொடுப்பதாக இருக்காது இரண்டாவது மூன்றாவது முயற்சியே வெற்றியை கொடுக்கும் ஆனால் மிகப்பெரிய வெற்றியாக அமையும் இந்த மாநாட்டை சிறப்பாக அமைப்பது சிறிது கடினம் என்றாலும் மிகப்பெரிய உச்சத்திற்கு செல்வார் என்பது முற்றிலும் உண்மை.
அதிலும் பாகியாதிபதி சுக்கிர பகவான் ஒன்பதாம் இடத்தில் சிறப்பாக இருப்பதும் அதன் தசா புத்தி நடப்பதும் மிகச் சிறப்பான காலகட்டம் மேலும் சுக்கிரன் கேதுவோடு சேர்ந்து இருப்பதால் குடும்பங்களை பிரிந்தோ அல்லது பெண்களால் சில அவப்பெயர்களை சந்தித்தோ முன்னேற்றத்திற்கு செல்வார் என்பதே உறுதி.
2031-32 இவருக்கு மிகச்சிறந்த காலமாக அமையும் மிக உயர்ந்த அந்தஸ்துகளையும் பதவிகளையும் புகழையும் நிச்சயம் அடைவார்.
இந்த மாநாட்டை பொருத்தவரை திரு விஜய் அவர்கள் ஆக்கப்பூர்வமாகவும் எந்த ஒரு அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணமும் நடத்திக் காட்டுவது மிகச் சிறப்பு.
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த ஜோதிடர்களை இவர் ஆலோசித்து இருப்பார் என்பதை நம்புகிறேன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன் திரு விஜய் அவர்கள் அரசியல் களத்தில் ஜெயிக்க எனது மனமார்ந்த பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்
நன்றி
வாழ்க வளமுடன்
தக்ஷா ஜோதிடம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்
www.dakshaastrology.com
Ph: 9787969698
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக