குளிகை எப்போது உருவானது என்பதை பார்ப்போம். சனீஸ்வரருக்கும் ஜேஷ்டா தேவிக்கும் பிறந்தவர் குளிகன் அதாவது மந்தனுக்கு(சனி) பிறந்த மாந்தி,
ஜேஸ்ட்டா என்றால் மூத்தது அதாவது மூத்த தேவி என்று அர்த்தம் அதுவே பிற்காலத்தில் மூதேவி என்று புணையப்பட்டது.
ராவணனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்தவர் மேகநாதன், மாண்டோதரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பொழுது அசுர குருவான சுக்ராச்சாரியாரை ராவணன் அழைத்து தனது மகன் பிறக்கும் பொழுது கிரகங்கள் வலிமையாக இருக்க வேண்டும் அதற்கு ஆலோசனை கேட்டார் சுக்ராச்சாரியார் அனைத்து கிரகங்களையும் ஒரே கட்டத்தில் இருக்குமாறு ஆலோசனை வழங்கினார். இதனால் அனைத்து கிரக அதிபதிகளும் சுக்ராட்சியார் மீது வருத்தமும் கோபம்பட்டனர்
ஏனெனில் அனைத்து கிரகமும் ஒரு கட்டத்துக்குள் இருந்தாலும் கிரக யுத்தம் ஏற்படும் மேலும் சுக்ராச்சாரியார் இதை தவிர்க்க சனியின் அருளை வேண்டினார் சனி பகவான் அவர் ஜேஸ்ட்டா தேவியை வணங்கி குளிகன் என்ற ஒருவரை தோற்றுவித்தார் மண்டோதரிக்கு குழந்தை பிறந்த பொழுது குளிகனும் தோன்றினார்.
குளிகன் பிறக்கும்பொழுது நல்ல காரியத்தை செய்து பிறந்ததால் நல்ல காரியத்துக்கு உரியவன் என்று அழைக்கப்பட்டனர் பகல் இரவு வேலைகளில் குளிகனுக்கு என்று ஒரு நாழிகையை ஒதுக்கினர்.
சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் குளிகை நேரத்தில் தாராளமாக செய்யலாம் மறுபடியும் நடக்கக்கூடிய விஷயங்கள், சொத்து வாங்குவது திருமணம் செய்வது, இடம் வாங்குவது, புது விஷயங்களை ஆரம்பிப்பது, அனைத்தையும் குளிகை நேரத்தில் தாராளமாக செய்யலாம்.
அசுப நிகழ்ச்சிகளான மரணம் அடைந்தோரை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வது ,கடன் அடைப்பது, கடன் வாங்குவது, தங்கம் அடகு வைப்பது, இடங்களை விற்பது இதுபோன்ற நெகட்டிவ்வான விஷயங்களை தவிர்க்க வேண்டும் இல்லையேல் அது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும்.
இந்த காலத்தில் பிரசவ காலத்தில் நல்ல நேரம் பார்த்து கொடுக்கச் சொல்லி ஜோதிடர்களை பார்க்கின்றனர் ஆனால் பழைய காலத்திலேயே ராவணன் தன் மகனுக்காக கிரகங்களையே மாற்றி அமைத்த நமது தமிழ் மன்னன் ராவணன்.
ஆனாலும் காலக்கணக்கு கர்ப்பிணியாக கர்ம கணக்கு வித்தியாசமானது
மேகநாதன் ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் ஒரே கட்டத்தில் இருந்ததால் யுத்தத்திற்கு பேர் போனவன் அனைத்து யுத்தங்களையும் வெற்றி பெற்றவன் ஒரு யுத்தத்தில் கூட தோல்வியே அடையாளத்தவன் மேகநாதன் ஆனாலும் அதே யுத்தத்தில் பலிகொண்டான் இறந்தும் போனான் இதிலிருந்து என்ன தெரிகிறது என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் கால கணக்கிலிருந்து யாராலும் தப்ப இயலாது எப்பேர்ப்பட்ட ஜோதிடர் பிரசவத்திற்கு டைம் கொடுத்தாலும். அனைத்து கிரகங்களும் ஆட்சி செய்த ராவணனாளையே முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ராமனையும் லட்சுமணியும் முதல் போரிலேயே வீழ்த்தியவன் மேகநாதன் என்ற இந்திரஜித் பிறகு இரண்டாவது சந்திப்பின் போதே லட்சுமணன் மேகநாதனே வீழ்த்தினன் .மேகநாதனுக்கு இந்திரஜித் என்ற பெயரும் உண்டு இந்திரனை வென்று சிறையில் தள்ளியதால் பிரம்மா இவருக்கு இந்திரஜித் என்ற பெயரையும் வழங்கினார்.
மேகநாதன் பிறக்கும்பொழுது இடியும் மின்னலும் உருவானது அவரது அழுகை குரல் கேட்டு எனவே மேகநாதன் என்று அழைக்கப்பட்டது.
தக்ஷா ஜோதிடம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்
www.dakshaastrology.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக